புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
96 Posts - 49%
heezulia
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_m10கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 4:33 pm

கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Vikatan%2F2023-05%2F69a5f05c-73ce-4358-a70c-0aac03120c00%2FUntitled_5a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

“ரெய்டு வரப்போகும் தகவலை ஏற்கெனவே மோப்பம் பிடித்திருப்பார்கள்போல... நாங்கள் ‘டார்கெட்’ செய்த பலரும் ஊரில் இல்லை. அசோக்குமார் டெல்லியில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் சொன்னார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சுற்றும் சர்ச்சைகள் இப்போதைக்கு ஓயாதுபோல. ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்கிற கடும் விமர்சனத்தையே இன்னும் அவர் எதிர்கொண்டு முடிக்கவில்லை. அதற்குள் தடதடக்கும் வருமான வரித்துறை ரெய்டுகள், அவரை மேலும் கலக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஐந்து புள்ளிகள் மீது தீவிரமாகக் கைவைத்திருக்கும் வருமான வரித்துறை, அவர்கள் தொடர்புடைய இடங்களையெல்லாம் சோதனையால் சல்லடையாக்கியிருக்கிறது. “இரண்டொரு நாளில் முடிந்திருக்கவேண்டிய இந்த ரெய்டு மேளாவை, அனுமார் வால்போல நீளச் செய்தது தி.மு.க-வினர்தான். வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் ஈகோவை ‘டச்’ செய்தது தி.மு.க-வினருக்கே பூமராங்காகிவிட்டது. சிக்கியிருக்கும் ஆவணங்களெல்லாம் அதிகாரிகளையே தலைச்சுற்றவைக்கின்றன” என்கின்றன ஆயக்கர் பவன் வட்டாரங்கள். தி.மு.க-வின் ‘கொங்கு’ கோட்டையைக் குறிவைத்து நகர்ந்திருக்கும் இந்தச் ‘சூறாவளி’ ரெய்டு குறித்து விசாரித்தோம். அடைமழையாகக் கொட்டின தகவல்கள்!

“யார் நீ... ஐ.டி கார்டைக் காட்டு...” - தகராறு செய்த தி.மு.க-வினர், டென்ஷனான வருமான வரித்துறை!

மே 26-ம் தேதி காலை 6 மணிக்கு, 15-க்கும் மேற்பட்ட கார்களில் கரூருக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அமைச்சரின் வலதுகரமான எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் உள்ளிட்ட சில தலைகளை மட்டும் தொடக்கத்தில் ‘டார்கெட்’ செய்திருக்கிறார்கள். அதேநேரத்தில், கோவையிலுள்ள தி.மு.க பிரமுகர் செந்தில் கார்த்திகேயன், தொழிலதிபர் அரவிந்தன் ஆகியோர் இடங்களிலும் ரெய்டு ஆரம்பித்தது. ஈரோட்டைச் சேர்ந்த டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டிலும் நுழைந்தது வருமான வரித்துறை.

ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அசோக்குமார் வீட்டுக்கு, வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட ‘டீம்’ சோதனையிடச் சென்றது. வீடு உள்பக்கமாகத் தாழிட்டிருந்ததால், கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு மேல் வாசலிலேயே காத்திருந்திருக்கிறது இந்த டீம். ‘டோர் பெல்’ அடித்தும் கதவைத் திறக்காததால், ‘டீமில்’ இருந்த சில அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து, மெயின் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அதற்குள் அங்கு திரண்ட கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர், ‘ஏய், யார் நீ... ஐ.டி கார்டைக் காட்டு...’ எனத் தகராறு செய்ய, ஏரியாவே அமளி துமளி ஆகியிருக்கிறது.

காயத்ரியின் கையிலிருந்த செல்போன், கைப்பை, ஆவணக் கோப்புகள் இருந்த பை உள்ளிட்டவற்றை அங்கிருந்த சிலர் பறித்திருக்கிறார்கள். அதிகாரிகள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. சைடு மிரரை தி.மு.க தொண்டர் ஒருவர் திருகி உடைத்தார். பழைய தமிழ்த் திரைப்படங்களில் வருவதுபோல, எல்லாம் நடந்து முடிந்த பிறகு சாவகாசமாகச் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறது கரூர் காவல்துறை. அதற்குள், ‘பெண் அதிகாரி என்னைத் தாக்கிவிட்டார்’ என தி.மு.க தொண்டர் குமார் என்பவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட, தங்களை தி.மு.க-வினர் தாக்கியதாக காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பரபரப்புப் புகாரளித்தனர். அதிகாரிகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த வருமான வரித்துறை வட்டாரமும் கொதிநிலைக்குப்போனது. அசோக்குமார் வீட்டில் ரெய்டை அதிகாரிகள் ஆரம்பித்தபோது, செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ‘கொங்கு மெஸ்’ சுப்பிரமணி என்பவர், செல்வராஜ் என்பவரிடம் அதிகாரிகளை கேரோ செய்யும்படி போனில் உத்தரவிட்டதாகவும், அதனடிப்படையில் தான் இந்தப் பிரச்னை எழுந்ததாகவும் காவல்துறைக்குத் தகவல் சொன்னது வருமான வரித்துறை.

ராயனூர் பகுதியிலிருக்கும் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு அதிகாரிகள் சோதனையிடச் சென்றபோது, குறுக்கே மாட்டுவண்டிகளைப் போட்டு தி.மு.க-வினர் தடுத்திருக்கிறார்கள். தடைகளைத் தாண்டிச் சென்ற அதிகாரிகள் வீட்டினுள்ளே இருந்த தாரணியின் உறவினர்கள் கதவைத் திறக்காததால், வாசலில் நோட்டீஸை ஒட்டி சீல் வைத்தனர். தி.மு.க-வினர் அதிகாரிகளை கேரோ செய்ததால், ஒட்டிய நோட்டீஸைப் பிரித்து எடுத்து, வீட்டுக்குள் சென்று அதைச் சரவணன் உறவினர்களிடம் வழங்கினர். கரூரில் பதற்றம் அதிகமானதால், மே 26-ம் தேதி திட்டமிட்டபடி அங்கு மட்டும் ரெய்டு நடத்தப்படவில்லை. பாதுகாப்புக்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து சி.ஆர்.பி.எஃப் போலீஸார் அவசரமாகக் கொண்டுவரப்பட்ட பிறகுதான் வருமான வரித்துறை அதிகாரிகள் இறங்கி அடிக்க ஆரம்பித்தார்கள்.

கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் -  தலைசுற்றவைக்கும் ஆவணங்கள் Vikatan%2F2023-05%2F4cf9c162-437a-4516-a9de-d575f7051eb1%2F6475b570eaac7.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தப்பிய ‘நான்கு’ ரோஸ் மில்க் மூட்டைகள்... பைபாஸ் சொத்தில் முறைகேடு? - சிக்கிய ஆனந்த் பிரதர்ஸ்!

முதல் அடி, ‘கொங்கு மெஸ்’ சுப்பிரமணிக்குத்தான் விழுந்தது. கரூர் - கோவை சாலையிலுள்ள கொங்கு மெஸ்ஸில் சோதனை நடத்திய அதிகாரிகள், மெஸ்ஸை இழுத்து மூடி சீல்வைத்தனர். க.பரமத்தி அருகேயுள்ள பாலவிநாயகா புளூமெட்டல் கல்குவாரியிலும், தங்கவேல் நகரிலுள்ள அந்த குவாரியின் உரிமையாளர் தங்கராஜ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. செந்தில் பாலாஜியின் குடும்ப நண்பர்களான சகோதரர்கள் சங்கர் ஆனந்த், சசி ஆனந்த் ஆகியோரின் இடங்களிலும் ரெய்டு நடந்ததைத்தான் நம்ப முடியாமல் பார்க்கிறார்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்.

நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “தென்மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஆனந்த் பிரதர்ஸ் குடும்பம், மாயனூருக்கு வரும்போது வெறுங்கையோடுதான் வந்தது. பால் வியாபாரம் பார்த்த இவர்களின் தந்தை சுந்தரம், அ.தி.மு.க கிளைச் செயலாளர், லோக்கலில் கான்ட்ராக்டர் எனப் படிப்படியாக வளர்ந்தார்.

சசி ஆனந்த் செந்தில் பாலாஜியுடனும், சங்கர் ஆனந்த் அசோக் குமாருடனும் ஒன்றாகப் படித்தவர்கள். 2011-ல் அ.தி.மு.க ஆட்சியமைத்தவுடன், அசோக்குமார் மூலமாக அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் நெருக்கமானார் சங்கர் ஆனந்த். அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம்தான். இன்றுவரை அது இறங்கவில்லை. இவருடைய அண்ணன் சசி ஆனந்த் சைலன்ட்டாகச் செயல்படுபவர். பொதுப்பணித்துறையில் பல ஒப்பந்தங்களை எடுத்துவருகிறார். இந்த ஆனந்த் பிரதர்ஸ்தான், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ‘ஆல் இன் ஆல்.’ இதனால்தான், ஆனந்த் சகோதரர்கள் மீது ரெய்டு என்றவுடன் பதறுகிறது பாலாஜி வட்டாரம்” என்றனர்.

காந்திகிராமம் பகுதியில் வசித்துவரும் பிரேம்குமார் என்பவரின் மனைவி ஷோபனா, சங்கர் ஆனந்த் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிவருகிறார். அவர் மூலமாகச் சில ஆவணங்கள் மறைக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, பிரேம்குமார் வீட்டிலும் சோதனையிட்டது வருமான வரித்துறை. பவித்திரம் பகுதியிலுள்ள மாஸ் ரெடிமிக்ஸ், கணேஷ் முருகன் டிரான்ஸ்போர்ட், எழில் நகரிலுள்ள ஏகாம்பரம் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு தடதடத்தது. அண்ணாநகரில் ஆசி டெக்ஸ் உரிமையாளர் செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், சில ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர், “ரெய்டு வரப்போகும் தகவலை ஏற்கெனவே மோப்பம் பிடித்திருப்பார்கள்போல... நாங்கள் ‘டார்கெட்’ செய்த பலரும் ஊரில் இல்லை. அசோக்குமார் டெல்லியில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் சொன்னார்கள். சில இடங்களில் நாங்கள் சோதனையிட்டபோது, ‘நான்கு பெரிய ரோஸ் மில்க் மூட்டைகளும் மூன்று பென்டிரைவ்களும்’ ஓர் இடத்திலிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு நாங்கள் செல்வதற்குள் சிலர் மூட்டைகளை அப்புறப்படுத்திவிட்டனர். ஆனால், பென்டிரைவ்களைக் கைப்பற்றிவிட்டோம். அதில், அதிரச்செய்யும் பல ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில், கரூர் பைபாஸ் சாலையில் பிரமாண்ட வீடு ஒன்று கட்டப்பட்டுவருகிறது. நிர்மலா பெயரில், தான செட்டில்மென்ட்டாக வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சொத்தில், சில முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். 3.75 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த நிலத்துக்கு ஒரிஜினல் உரிமையாளராக இருந்தவர், 20 கோடி ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றிருக்கிறார். பல ஆண்டுகளாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். ஆனால், மே 2022-க்குப் பிறகு திடீரென அத்தனை கோடி ரூபாய் கடனையும் அடைத்துவிட்டு, நிர்மலாவின் தாயாரிடம் சொத்தை விற்றிருக்கிறார். அந்தச் சொத்துதான் தான செட்டில்மென்ட்டாக நிர்மலாவின் கைக்கு வந்திருக்கிறது. இந்தப் பரிமாற்றங்களில் எழுந்திருக்கும் முறைகேடுகளைத் தனி டீம் விசாரிக்கிறது” என்றனர்.

வளையத்தில் ‘செந்தில் கார்த்திகேயன்’ - அரண்டுபோன ‘அரவிந்தன்’ - மீட்கப்பட்ட ‘பிளாக்’ ஆவணங்கள்!

சமீபத்தில், அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த செந்தில் கார்த்திகேயன், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர். தி.மு.க-வில் இணைந்த பிறகு மேலிடத்துக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குப் பல இடங்களை வாங்கிக்கொடுத்திருக்கிறார். கோவையில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, சுமார் 80 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்கம், டி.வி., ஃப்ரிட்ஜ், கிரைண்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பிரமாண்ட சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

இதற்கான மொத்தச் செலவுகளையும் செந்தில் கார்த்திகேயன்தான் செய்தாராம். செந்தில் பாலாஜியின் ஆதரவில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கோவை தொகுதி வேட்பாளராக ஆவதற்கும் காய்நகர்த்திவந்தார். இந்தச் சூழலில்தான் அவரை ரெய்டு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது வருமான வரித்துறை. ரெய்டுக்காகக் கோவைக்கு வந்த வருமான வரித்துறை டீமில் பெருமளவு கேரளா அதிகாரிகள்தான் இடம்பெற்றிருக்கிறார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே ஒரு ஃபார்ச்சூனர் கார் மட்டுமே செந்தில் கார்த்திகேயனிடம் இருந்திருக்கிறது. இப்போது, வகை வகையாக சொகுசு கார்கள் அவரிடம் இருக்கின்றன. இரண்டு வருட காலத்துக்குள் அவர் அடைந்த வளர்ச்சி என்பது கணக்கில் வராதது. அது குறித்தெல்லாம் விசாரித்தோம். கிணத்துக்கடவு பனப்பட்டி அருகே சங்கர் ஆனந்துக்குச் சொந்தமான சாய் புளூ மெட்டல் என்ற கல்குவாரியிலும் ரெய்டு நடத்தப்பட்டது. கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் மோகன்ராஜுக்குச் சொந்தமாக, சேத்துமடையில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பண்ணை வீடு இருக்கிறது. அந்தப் பண்ணை வீட்டையும் சோதனையிட்டோம். அரண்டுபோன அரவிந்த் தரப்பினர், நாங்கள் சோதனையிடுவதற்குள் லேப்டாப்பிலிருந்த முக்கியத் தரவுகளை அழித்துவிட்டனர். ஆனால், எங்களுடன் இருந்த ஐடி டீம் உடனடியாக அதை ரெகவர் செய்துவிட்டது. மீட்டெடுக்கப்பட்ட அந்தத் தரவுகளில், பல பேரின் தூக்கத்தைக் கெடுக்கும் ‘பிளாக்’ ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன” என்றனர்.

உளறிக் கொட்டிய சச்சிதானந்தம்... டாப் கியரில் ‘கொங்கு’ ரெய்டு!

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ‘ஜாக்பாட்’ அடித்ததுபோலச் சிக்கியவர், டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களைக் கொண்டுசெல்லும் லாரி ஒப்பந்ததாரரான ஈரோட்டைச் சேர்ந்த சச்சிதானந்தம்தான். ஈரோட்டிலுள்ள அவர் வீடு, அலுவலகத்தில் சோதனையிட்ட அதிகாரிகள், கணக்கில் வராத 2.1 கோடி ரூபாயைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளிடம், செந்தில் பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டே சில விஷயங்களை சச்சிதானந்தம் உளறிவிட்டதாகச் சொல்கிறார்கள் வருமான வரித்துறை வட்டாரத்தில்.

ஈரோட்டைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் நம்மிடம் பேசியபோது, “தொடக்கத்தில் மஞ்சள் விவசாயம் செய்துவந்த சச்சிதானந்தம், 2006-ல் தி.மு.க ஆட்சியின்போதுதான் டாஸ்மாக்கில் லாரி ஒப்பந்தப் பணியை எடுத்தார். அதன் பின்னர், அ.தி.மு.க ஆட்சியிலும் கோலோச்சினார். யார் ஆட்சிக்கு வந்தாலும், சரியாகப் பட்டுவாடா செய்துவிடுவதால் சச்சிதானந்தத்தின் தொழிலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிமுகம் கிடைத்தவுடன், 16 மாவட்டங்களாக இருந்த சச்சிதானந்தத்தின் சரக்கு சப்ளை சாம்ராஜ்ஜியம், 27 மாவட்டங்களாக விரிவடைந்தது. டாஸ்மாக் கடைகளுக்கு மது இறக்கும் தொழிலாளிக்கு, ஒரு பெட்டிக்கு 5 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது, இறக்கு கூலி 11 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்கான கூலியை ‘பிரித்துக் கொடுப்பதற்கான’ வேலைகளை ஒருங்கிணைப்பது, சச்சிதானந்தமும் அவரின் மகன் மயில் முருகனும்தான்.

இதற்காகவே சென்னை அடையாறில் மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார் சச்சிதானந்தம். ஆனந்த் பிரதர்ஸ், அசோக்குமார், சச்சிதானந்தம், செந்தில் கார்த்திகேயன், அரவிந்த் மோகன்ராஜ் என ஐந்து புள்ளிகள் ரெய்டில் சிக்கியிருப்பது செந்தில் பாலாஜிக்குப் பெரும் சிக்கல்தான்” என்றனர்.

இந்த ரெய்டுகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதுபோலப் பேட்டி கொடுத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனால், ‘அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்குவதற்காக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது’ எனப் பேட்டியளித்து, ரெய்டுக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பிருப்பதாக அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியே சொன்னதுதான் உச்சபட்ச காமெடி.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சேர்ந்துகொண்டு அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதாகச் சொல்கிறார்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள். அரசியல்ரீதியான பழிவாங்கல் நடவடிக்கையாக இருந்தாலும், முன்வைக்கப்படும் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், பதிலும் விளக்கமும் சொல்லித்தான் ஆக வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்க, பலமுறை தொடர்புகொண்டும் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

தி.மு.க-வுக்குள்ளும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான வலைகள் மிக வலுவாகப் பின்னப்படுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் விவரப்புள்ளிகள். இந்த நிலையில், ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்மீது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது, டெல்லி நிதித்துறை வரை உஷ்ணத்தை உருவாக்கிவிட்டது. அந்த வகையில், பாலாஜிக்கு எதிரான வானிலை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. விரைவிலேயே இடி, புயல், மழை, வெள்ளமென சுழற்றியடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

சிக்கிய கரூர் புள்ளிகள்!

மே 28-ம் தேதி இரவு மூலனூர் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான சக்தி மெஸ்ஸில் சோதனையைத் தொடங்கி, கரூர் புள்ளிகளையும் ரேடாரில் கொண்டுவந்தது வருமான வரித்துறை. தி.மு.க விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவில் மாநிலத் துணைச் செயலாளராக இருக்கும் மூலனூர் கார்த்திதான், கரூர் புள்ளிகளின் நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தப் புள்ளி களின் விருகம்பாக்கம் அலுவலகமும் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. அடுத்தடுத்து ரெய்டு இறுகுவதால், இந்தப் புள்ளிகளில் ஒருவரான கோவை ஈஸ்வரமூர்த்தியும் வெளிறிப்போயிருக்கிறாராம். கோவை அழகேசன் சாலையில், ஒரு பிரியாணிக் கடை அருகே இருக்கும் லைன் வீடுகளிலிருந்து ‘பார்சல் பெட்டி’கள் வேக வேகமாக அப்புறப்படுத்தப்பட்டன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

விகடன்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 31, 2023 8:54 pm

இந்த கட்சியிலும் மந்திரியாக இருப்பார்

அந்த கட்சியிலும் மந்திரியாக இருப்பார்

ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்

அதிலும் இருப்பார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 8:55 pm

T.N.Balasubramanian wrote:இந்த கட்சியிலும் மந்திரியாக இருப்பார்

அந்த கட்சியிலும் மந்திரியாக இருப்பார்

ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்

அதிலும் இருப்பார்.
 
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக