புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
107 Posts - 49%
heezulia
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
9 Posts - 4%
prajai
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 1%
sanji
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
234 Posts - 52%
heezulia
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
18 Posts - 4%
prajai
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
5 Posts - 1%
Barushree
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:48 pm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:49 pm

மேஷம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


லட்சியக் கனவுகளுடன் வாழ்பவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை ஜன்ம குருவாக அமர்கிறார். ஜன்ம குருவாயிற்றே என்று பதற்றம் தேவையில்லை. குரு உங்களுக்குப் யோகாதிபதி என்பதால், கெட்டதிலும் நல்லதையே செய்வார். அவரின் பார்வை பலன்களால் நன்மைகள் நிகழும். அதேநேரம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யோகா - தியானப் பயிற்சிகளும், உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும். காரியங்களை முடிப்பதில் அலட்சியம் உண்டாகலாம். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வாருங்கள்; கஷ்டங்கள் தீரும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். குழந்தை இல்லாத தம்பதியருக்குப் பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். மகளுக்குத் திருமணம் கூடிவரும். சொத்து விஷயங்கள் சாதகமாகும். திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். பாகப் பிரிவினை விஷயத்தில் விட்டுக்கொடுத்துப் போகவும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணைவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அவர் வழிச் சொந்தங் களால் ஆதாயம் உண்டு. சுபநிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறும். சித்தர்கள், மகான்களின் ஆசியும் அருளும் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டு.

உங்களின் பாக்கிய வீடான 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால், வெகு நாள்களாக வராமலிருந்த பணம் தக்க தருணத்தில் வந்து சேரும். தந்தையின் உடல்நிலை சரியாகும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை மற்றும் 23.11.23 முதல் 6.2.24 வரை குரு பகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், அசுவினி நட்சத்திரக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தர வேண்டாம். பண இழப்பு, ஏமாற்றம், வி.ஐ.பிகளுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை குருபகவான் பரணியில் செல்வதால், இந்த நட்சத்திரக் காரார்களுக்குச் சிறு சிறு விபத்துகள், பொருள் இழப்பு வரக்கூடும்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்கிறார். ஆகவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்குச் சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்துபோகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ரகதியில் செல்கிறார். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

வியாபாரிகளே! சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப புதிய திட்டங்களைச் செயல்படுத்துங்கள். அதிக முதலீடுகள் வேண்டாம். தவறான வழிகாட்டலால் நஷ்டம் ஏற்படலாம்; தொழில் ரகசியங்களை எவரி டமும் பகிர வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கெடுபிடி காட்டாதீர்கள். ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், உணவுக் கூடம், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரியளவில் பாதிப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியின் ஒத்தாசையால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். பிரச்னைகளைச் சமாளிக்கப் புது வழி பிறக்கும். அவசரப்படாதீர்கள். கௌரவப் பொறுப்புகளால் வேலை அதிகரிக்கும். பதவி உயர்வுக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். ஜூன், பிப்ரவரி மாதங்களில் சம்பளத்துடன், சலுகைகளும் கூடும். கணினித் துறையினருக்குப் புதிய நிறுவனங் களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி ஒருவித பதற்றத்தை அளித்தாலும், வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள தலம் திருலோக்கி. அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலம் குருபலம் அருள வல்லது. குடும்பத்துடன் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் நடக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:52 pm

ரிஷபம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


கடும் உழைப்பாளி நீங்கள். குரு பகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை உங்களின் விரய வீடான 12-ல் அமர் கிறார். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். அதேநேரம் அஷ்டமாதிபதியான குரு 12-ல் மறைவதால், எதிர் பாராத வகையில் முன்னேற்றம் உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

குடும்பத்தில் சிறிய பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். உள்விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். வாழ்க்கைத்துணைவர் உங்களின் தவறு களைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ளுங்கள். சில காரியங்கள் இழுபறியாகி முடியும். எந்தக் காரி யத்திலும் உங்களின் நேரடி கவனம் தேவை. உறவினர்கள் உங்களைப் பற்றி அவதூறு பேசலாம்;

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயா ருடன் கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். வீடு வாங்கும் திட்டம் பலித மாகும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

உங்களது 6-ம் வீட்டைக் குருபகவான் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். சில தருணங்களில் எதிரிகளாலும் ஆதாயம் உண்டாகும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியான வழக்குகள் இனி சாதகமாக முடியும்.

குரு உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடை யாளம் காண்பீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோ சனை தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வாருங்கள். என்றாலும் மறைமுக விமர்சனங்கள் எழலாம்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 23.4.23 முதல் 23.6.23 வரை; 23.11.23 முதல் 6.2.24 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பணவரவு உண்டு. மருத்துவச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் வந்து போகும்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை உங்கள் ராசி நாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. செல்வம், செல்வாக்கு உயரும். பழுதான வாகனத்தை மாற்று வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அரசால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைப்பீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரத்தில் வக்ரகதியில் செல்வதால், நீண்ட நாளாகத் தடைப்பட்டிருந்த காரியங்கள் முடிவடையும். கணவன்-மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனம் தெரியாத கவலைகள் வந்துசெல்லும்.

வியாபாரிகளே! விளம்பர யுக்தியால் இரட்டிப்பு லாபம் அடைவீர்கள். வங்கிக் கடன் பெற்று புது முதலீடு செய்வீர்கள். கடனைச் சாமர்த்தியமாக வசூலியப் பாருங்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபம் உண்டு. இடைத்தரகர்களை நம்பிப் புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். ஜூன் மத்தியப்பகுதி முதல் ஆகஸ்டு மத்தியப்பகுதி வரை லாபம் அதிகரிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தாலும் அவப் பெயரே மிஞ்சும். மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம்; பகையும் வேண்டாம்.

சக ஊழியர்களுடன் வீண் விவாதங்கள் எழலாம். செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடும்போது, கவனம் தேவை. கணினித் துறையினருக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, பண வரவையும் செலவுகளையும் கலந்து தருவதுடன், உங்களின் நிர்வாகத் திறனை அதிகரிப்பதாக அமையும்.

பரிகாரம்: மதுரையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள குருவித்துறை தலத்துக்குச் சென்று குருபகவானையும் சித்திரதவல்லப பெருமாளையும் வழிபட்டு வாருங்கள்; சகல தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:55 pm

மிதுனம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


உழைப்பால் உயர்பவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை லாப வீட்டில் வந்து அமர்கிறார். எதிலும் வெற்றி பெறுவீர்கள். தொட்டது துலங்கும். சோர்வு நீங்கும். பழைய கடனை அடைக்கும் அளவுக்குப் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

வீட்டில் சச்சரவுகள் நீங்கி அமைதி பிறக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். கலகம் ஏற்படுத்தியவர்களை ஓரம் கட்டுவீர்கள். சகோதரிக்குத் திருமணம் கூடிவரும். இதுவரையிலும் உங்களை அலட்சியப் படுத்திய உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், இளைய சகோதரருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சகோ தரியின் திருமணத்தை நல்லபடியாக முடிப்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப் பற்றாக் குறையினால் பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் தடைகள் நீங்கி, பிள்ளைகளின் திருமணம் நல்லபடியே முடியும். பிள்ளை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்பு உண்டு.

குரு உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத்துணை வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாய்மாமன், வழியிலிருந்து வந்த பிணக்குகள் நீங்கும். சிலருக்கு, அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் பின்னடைவுகள் விலகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை; 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் உண்டாகும்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துச் சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் வாகன விபத்து, மின் சாதனங்கள் பழுதடைவது போன்ற பிரச்னைகள் வந்து நீங்கும். அதேநேரம் செல்வாக்குக் கூடும்; பணவரவு மகிழ்ச்சி தரும்.

வியாபாரிகளே! பெருந்தொகை போட்டு மாட்டிக்கொண்டீர்களே... அந்த அவல நிலை மாறும். புதிய முதலீடுகளைப் போட்டு கடையை விரிவு படுத்துவீர்கள். ஏப்ரல், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கை யாளர்களைக் கவரப் புதுச் சலுகைகளை அறிவிப் பீர்கள். கெமிக்கல், ஹோட்டல், கமிஷன், இரும்பு வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். பதவி- சம்பள உயர்வு உடனே கிட்டும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். உங்களை குறைக் கூறிக்கொண்டிருந்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். ஜூன், மார்ச், ஏப்ரல் மாதங்களில் உயர்வுகள் உண்டு. மூத்த அதிகாரியின் ஆதரவு பெருகும்.

மொத்தத்தில் இந்தக் குருபெயர்ச்சி, அதிரடி யோகங்களை அள்ளித் தருவதாக அமையும்; உங்களைச் சாதனையாளராக மாற்றும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்குக் குடும்பத்துடன் சென்று, ஶ்ரீஆபத்சகாயேஸ்வரரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும் வழிபடுவது விசேஷம். மட்டுமன்றி, ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; சந்தோஷம் பெருகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:56 pm

கடகம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


தயாள குணம் மிகுந்தவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை, உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் அமர் கிறார். வீண் விவாதங்கள், இழுபறி நிலை உண்டாகலாம். ஆனாலும் குரு வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால், சாமர்த்தியமான பேச்சால் பெரிய காரியங்களையும் எளிதில் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் மேம்படும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். பணவரவு உண்டு என்றாலும் சிக்கனம் தேவை. அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கோதுமை, கீரை மற்றும் நார்சத்து உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்பதால் தாய் வழிச் சொந்தங்களால் ஆதாயம் உண்டு. நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். வசதியான வீட்டுக்குக் குடிபெயர வாய்ப்புண்டு. சிலருக்கு, வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

உங்களின் 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சிலருக்குச் சேமிப்புகள் கரையக்கூடும். பிள்ளை களை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். அவர்களின் உயர்கல்விக்காகப் போராட வேண்டியிருக்கும்.

உடன்பிறந்தவர்கள் சில நேரங்களில் உதவியாக இருந்தாலும், பல தருணங்களில் தொந்தரவு தருவார்கள். பூர்வீகச் சொத்தை விற்று, வேறிடத்தில் சொத்து வாங்குவீர்கள். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். உணவு வகைகளில் கவனம் தேவை.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.06.23 வரை மற்றும் 23.11.23 முதல் 6.2.24 வரை குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவும் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபம், வீண் சந்தேகங்களைத் தவிர்ப்பது நல்லது.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், மூத்த சகோதர வகையில் உதவி உண்டு. திடீர் பணவரவு உண்டு. என்றாலும் சுக்கிரன் உங்களுக்கு பாதகாதிபதியாக இருப்பதால், புது நண்பர்களிடம் கவனம் தேவை. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

17.4.24 முதல் 1.5.24 வரை குரு கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். போட்டியில் வெற்றி உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால், வீண் அலைச்சல், தர்மசங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படலாம்.

வியாபாரிகளே! போட்டியாளர்களைச் சமாளிக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். சந்தை நிலவரங்களில் கவனம் செலுத்துங்கள். எவருக்கும் கடன் தரவேண்டாம். கமிஷன், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். அரசாங்க வரிகளை உடனே செலுத்திவிடுவது நல்லது. பங்குதாரர்களுடன் இருந்து வந்த கோபதாபங்கள் நீங்கும். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயரும். பணியி டத்தில் சிறு அவமானங்கள், இடமாற்றங்கள் உண்டு. வேலைச்சுமை வாட்டியெடுக்கும். அலு வலகத்தில் உங்களுக்கு எதிரான செயல்பாடுகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். புது வாய்ப்புகள் வந்தால், யோசித்து முடிவெடுக்கவும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சில வகைகளில் ஏமாற்றங்களையும் இழப்புகளையும் தந்தாலும், செயற்கரிய செயல்களில் ஈடுபடுத்தி உங்களை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: ஏதேனும் ஒரு வியாழக் கிழமை அன்று, மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் கங்கா அனுக்கிரக மேதா தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; குருவருள் பெருகும்; காரிய வெற்றிகள் கைகூடும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:57 pm

சிம்மம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


மனிதநேயம் மிகுந்தவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை, உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ல் அமர்கிறார். புதிய வியூகங்களால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்; உங்களின் கை ஓங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். `ஓயாது உழைத்தும் பயன் இல்லையே’ என்று புலம்பிய நீங்கள், இனி உழைப்புக்கான பலனை அனுபவிப்பீர்கள். கையில் நாலு காசு தங்கும். வருங் குடும்பம் மற்றும் வெளி வட்டார நிகழ்வுகளில் முதல் மரியாதை கிடைக்கும். பணப் புழக்கம் அதிகமாகும் என்பதால், அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், புது உற்சாகம் பிறக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்த மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வட்டிக் கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். தடைகள் யாவும் நீங்கும்; முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும்.

3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால், இளைய சகோதர, சகோதரிகளுடன் கோபதாபங்கள் விலகும்; பாசமழை பொழிவீர்கள். அடிப்படை வசதிகள் சேரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வசதியான வீட்டில் குடிபுகுவீர்கள்.

குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். அவர்களால் பெருமை அடைவீர்கள். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் பயன் அடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 23.4.23 முதல் 23.6.23 வரை; 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினியில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். பணவரவு உண்டு. செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரத்திரக் காரர்களுக்குத் திடீர் பண வரவு, எதிலும் வெற்றியுண்டு. எதிரிகளை வீழ்த்துவீர்கள். கடன் பிரச்னை ஓயும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், தடைகளும் வந்து நீங்கும்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனானச் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், நிர்வாகத் திறன் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால், பிரபலங்களின் உதவியுடன் காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும்.

வியாபாரிகளே! தொழில் ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் புதுத் திட்டம் தீட்டுவீர்கள். பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை அழகுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை ஓங்கி வளரவைப்பதுடன் எங்கும் எதிலும் வெற்றியைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: நாகை மாவட்டம், கீவளூர் வட்டத்தில் உள்ள தேவூரில் குடிகொண்டிருக்கிறார் ஶ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஶ்ரீதேவபுரீஸ்வரர். தேவ குரு பிரகஸ்பதி அருள்பெற்ற இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; சகல நன்மைகளும் உண்டாகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:58 pm

கன்னி 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


பகைவருக்கும் உதவி செய்யும் பண்பாளர் நீங்கள். குருபகவான் இப்போது 22.4.23 முதல் 1.5.24 வரை, உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் சென்று மறைகிறார். எனினும் வீண் கலக்கம் தேவை யில்லை. உபய ராசியில் பிறந்த உங்களுக்குக் குருபகவான் பாதகாதிபதி. அவர் 8-ல் போய் மறைவதால், கெடுபலன்கள் குறைந்து நல்லதே நடக்கும்.

கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் குறையும். அதேநேரம் உங்களுக்குள் வீண் குழப்பங்களும் தயக்கமும் எழ வாய்ப்பு உண்டு. திட்டமிட்ட வேலைகள் தாமதமாகும். சில விஷயங்களை அதிகம் செலவு செய்து முடிக்க வேண்டியிருக்கும். முக்கியப் பொறுப்புகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. செலவு களும் துரத்தும். பழைய கசப்பான சம்பவங் களை நினைத்து வருந்தாதீர்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பங்களெல்லாம் முடிவுக்கு வரும். மகிழ்ச்சி தங்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு கட்டும் பணி முழுமை பெறும். ஆடை, ஆபரணங்கள் சேரும். நிம்மதியாக உறங்குவீர்கள்.

குருபகவான் உங்களது சுக ஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் உடல் சோர்வு, அசதி, வீண் அலைச்சல், டென்ஷன் நீங்கும். தாயாருடன் பிணக்குகள் நீங்கி, பாசம் அதிகரிக்கும். அரை குறையாக நின்றுபோன வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள்.

குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அரசாங்க விஷயங்களில் பின்னடைவு விலகும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்கள், வலிய வந்து உறவாடுவார்கள். அக்கம் பக்கத்தாருடன் குடும்ப விஷயங்களைப் பகிர வேண்டாம்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை; 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். பதவிகள் தேடி வரும்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை உங்களின் தன பாக்கியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் வெற்றி, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வீடு வாங்குவது, கட்டுவது யாவும் உண்டாகும்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் உங்களின் விரயாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு விஷயங்களில் கவனம் தேவை. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால், கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவ்வப்போது ஒரு வெறுமையை உணர்வீர்கள். ஒருவித படபடப்பு, ஹார்மோன் பிரச்னை, தம்பதிக்கு இடையே ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.

வியாபாரிகளே! பண உதவி கிடைக்கும்; தொழிலில் ஆர்வம் பிறக்கும். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பது நல்லது. விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்; பங்குதாரர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! உழைப்புக்கேற்ற பலன் உண்டு. மேலதிகாரி உங்களின் திறமையை அங்கீ கரிப்பார். பதவிஉயர்வு தேடி வரும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது வாய்ப்புகள் அமையும். கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக் கும். புது வேலைக்கு மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி செலவு களை அதிகரிக்கச் செய்தாலும், ஓரளவு சொத்துச் சேர்க்கையை அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது புளியறை. சதாசிவமூர்த்தி என்ற திருப்பெயருடன் இறைவன் அருளும் தலம். இங்கே, சிவனாருக்கும் நந்திக்கும் இடையே தென்முகமாக அருளும் யோக தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்; யோகம் உண்டாகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:00 pm

துலாம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


கள்ளம் கபடம் இல்லாதவர் நீங்கள். குரு பகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நிற்கிறார். ஆகவே, உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். நினைத்தது நிறைவேறும். குரு உங்கள் ராசியை நேருக்குநேர் பார்ப்பதால், குடும்பத்தார் உங்களின் ஆலோசனை யின்றி எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள். குடும்பத்தில் வீண் குழப்பங்கள் நீங்கும்.

கணவன் மனைவிக்குள ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் ஆசையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு பண வரவு அதிகரிக்கும். அவர்களால் உறவினர்கள் மத்தியில் பெருமை அடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த திருமணம் இனிதே கூடிவரும். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குருபகவான், 7-ம் வீட்டில் நுழைவதால் வாழ்க்கைத் துணை உடல் நிலையில் சிறு அக்கறை தேவை.

குருபகவானின் பார்வைப் பலன்கள்: ராசிக்கு 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால், பதவி பட்டம் பெறுவீர்கள். இளைய சகோதர, சகோதரி வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளில் இழுபறி நிலை மாறும். புதிய சொத்து வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில், உங்களை எதிர்த்தவர்களும் புகழ்ந்து பேசுவார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.

குரு லாப வீட்டைப் பார்ப்பதால் எதிலும் நிம்மதி பிறக்கும். மூத்த சகோதரர் பாசமாக இருப்பார். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பேச்சில் நிதானம் பிறக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை மற்றும் 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.

பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் கூடி வரும்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ரகதியில் செல்வதால், உங்கள் ரசனை மாறும். தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன்-மனைவிக்குள் மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். தலை சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும்.

வியாபாரிகளே! தவறான வழிகாட்டல்களால் நஷ்டத்தைச் சந்தித்த நிலை மாறும். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். அனுபவசாலிகள் வேலைக்கு வருவார்கள். கடையைக் கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.

வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தப் புதுச் சலுகைகளை அறிமுகப் படுத்துவீர்கள். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். பங்கு தாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! அவல நிலை மாறும். மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள். சக ஊழியர்கள் நட்புக் கரம் நீட்டுவார்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவ னங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினித் துறையினர், இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வெற்றிபெற வைப்பதுடன், வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: தஞ்சை அருகே உள்ள தலம் தென்குடிதிட்டை. வியாழக் கிழமைகளில் இந்தத் தலத்துக்குச் சென்று, வசிஷ்டேஸ்வரரை வழிபடுவதுடன் குருபகவானுக்குத் தயிரன்னம் சமர்ப்பித்து வணங்கி வாருங்கள்; சகல யோக வாய்ப்புகளும் கைகூடும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:00 pm

விருச்சிகம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


கொடுத்துச் சிவந்த கைகளை உடையவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தரவுள்ளார். எதிலும் சின்னச் சின்னத் தடைகள் இருக்கவே செய்யும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகம் போராட வேண்டி வரும்.

சகட குருவாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவு, டென்ஷன், எதிர்ப்பு, உடல் நலக்குறைவுகள் என வரக்கூடும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.

ஒரு கடனை அடைக்க மற்றோர் கடன் வாங்க வேண்டியது வரும். பூர்வீகச் சொத்தைத் தக்க வைக்க அதிகம் செலவு செய்ய நேரிடும். யாருக்கும் விலையுயர்ந்த பொருள்களை, ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் தடுமாற்றம் நீங்கி நிதானம் பிறக்கும். வெகுநாள்களாகியும் வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி தங்கும்.

குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்ப தால், நல்ல நிறுவ னத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

குருபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச்செலவுகளால் கையிருப்பு கரையும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை; 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரக் காரர் களுக்குப் பணப் புழக்கம் அதிகரிக்கும். பயணங் களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.

23.6.23 முதல் 22.11.23 வரை; 6.2.24 முதல் 17.4.24 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், தள்ளிப்போன திருமணம் முடியும். கைமாற்றூக் கடனைஅடைப்பீர்கள். வாழ்க்கைத் துணைவருக்குச் சிறு அறுவை சிகிச்சை வந்து நீங்கும்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவருக்குப் புது வேலை கிடைக்கும். அவரின் ஆதரவு பெருகும். புது டிசைனில் நகை வாங்கு வீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும்.

வியாபாரிகளே! போட்டியாளர்களைச் சமாளிக்க அதிகம் போராட வேண்டியது வரும். எனவே அதிரடி மாற்றங்கள் வேண்டாம். பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.

அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, பெட்ரோ-கெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போகவேண்டியது இருக்கும்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களைக் கையா ளும்போது நிதானம் தேவை. சிலர், அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங் களில் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். கணினித் துறையினருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேறு நல்ல வாய்ப்புகள் அமையும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, அன்றாட வாழ்வில் சில படிப்பினை களையும் சவால்களைச் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: அரக்கோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ளது தக்கோலம். இந்தத் தலத்துக்குச் சென்று ஶ்ரீஜலநாதீஸ்வரரையும், ஶ்ரீகிரிராஜ கன்னிகாம்பாளையும், உத்குடி ஆசனத்தில் அருளும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்; சுபிட்சங்கள் கூடும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:01 pm

தனுசு 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்


சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ளவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து, உங்க ளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார். கஷ்டங்கள் யாவும் விலகப் போகின்றன. இனி எதிலும் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்; பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.

தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருக்குச் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசுவார்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனதில் நிம்மதி பிறக்கும். சோர்ந்திருந்த முகம் மலரும். கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வாழ்க்கைத்துணைவருக்கு விலையுயர்ந்த ஆடை - ஆபரணம் வாங்கித் தருவீர்கள். சிலர் சொந்த வீட்டுக்குக் குடிபுக வாய்ப்பு வரும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். தாய் மாமன், அத்தை வழியில் கருத்து மோதல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

குரு பகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.

உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடனான பனிப்போர் நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தர்ம காரியங்களில் ஆர்வம் பிறக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை மற்றும் 23.11.23 முதல் 6.2.24 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்குக் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால் காரியங்கள் தடையின்றி முடியும். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

23.6.23 முதல் 22.11.23 வரை மற்றும் 6.2.24 முதல் 17.4.24 வரை பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பூராடம் நட்சத்திரக்காரர்கள், புதியவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிரவேண்டாம். புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் இருமல், வாகனப்பழுது, பணப்பற்றாக்குறை கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், வந்து செல்லும்.

வியாபாரிகளே! நஷ்டங்கள் விலகும். போட்டிகளைச் சமாளிக்கும் விதம் உங்களின் அணுகுமுறை மாறும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், எண்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடு செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இனி மதிப்பார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி விரக்தி நிலையிலிருந்து உங்களை மீட்டெடுப்பதுடன், பண வரவையும் புதுப் பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோவில். மும்மூர்த்தியரும் அருளும் தலம் இது. இங்கு சென்று ஏழு குருபகவான்களை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வியாபார விருத்தியுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக