ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 10:37 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Today at 9:03 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Today at 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Today at 7:28 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
by kandansamy Today at 7:18 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:10 pm

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (70 - 72 )
by Dr.S.Soundarapandian Today at 12:50 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Today at 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:30 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

+3
சாந்தன்
T.N.Balasubramanian
சிவா
7 posters

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by சிவா Tue Nov 16, 2010 5:00 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Astrology_ani
குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை GuruHead2011

கணித்தவர்:- `ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Aries குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Taurus குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Gemini குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Cancer குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Leo குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Virgo
குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Libra குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Scorpio குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Sagittarius குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Capricorn குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Aquarius குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Pisces


Last edited by சிவா on Tue Nov 16, 2010 5:27 am; edited 2 times in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty மேஷம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:03 am

மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை


(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

கூடுதல் விழிப்புணர்ச்சி! கொடுக்கும் பெரும் வளர்ச்சி!
தங்களை மற்றவர்கள் தூக்கிப் பேசினாலும், தாக்கிப்பேசினாலும் ஒரே மனநிலையைப் பெற்ற மேஷ ராசி நேயர்களே!

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த குருப்பெயர்ச்சி வந்து விட்டது. இதுவரை கும்பத்தில் கொஞ்ச நாட்கள் குரு வாசம் செய்து, பிறகு மீனத்திற்கு அதிசாரமாகச் சென்று, முறையான பலன்களைக் கொடுக்காமல் மீண்டும் கும்பத்திற்கு வந்து, ஒரு சில நாட்கள் மட்டும் இருந்த குரு இப்பொழுது முறையாக உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடமான மீன ராசியில் 21.11.2010 இரவு முதல் சஞ்சரிக்கப்போகிறார்.

நிலவு நிறைந்த நாளாம் பவுர்ணமி நாளில் நிலையான பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்க, தனது சொந்த வீட்டில் அடியெடுத்து வைத்த குருவை, அன்று முதல் வழிபாடு செய்ய தொடங்குங்கள்!

யாரிடமாவது ஒருகாரியம் நிறைவேற வேண்டுமென்று சொன்னால், நாம் அவர்களை நேரில் சென்று பார்த்து பேச வேண்டும் அல்லவா?. அதைப் போல, உங்களுக்கு இருக்கும் மனக்குமுறல்களை எல்லாம் சொல்லி, இனி வரும் காலமெல்லாம் இனிய காலமாக அமைய வேண்டுமென்று குருவிடம் தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், `குரு பார்த்தால் தான் கோடி நன்மை' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன் பார்வைக்கு உள்ள பலத்தை குருப்பெயர்ச்சிக்கு பிறகு தான் நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.

அது உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குரு ஒரே நேரத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் பார்க்க இயலாது. ஆனால், அதன் புனிதமான பார்வை 5-ம் இடத்திலும், 7-ம் இடத்திலும், 9-ம் இடத்திலும் பதியும் பொழுது, அவை நமது ராசிக்கு எந்த இடமாக அமைகிறதோ, அந்த இடங் கள் எல்லாம் புனிதமடைகின்றன.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த அதிசய குரு, போராட்டமான உங்கள் வாழ்க்கையை இனி பூந்தோட்டமாக மாற்றப் போகிறது. தேரோட்டம் காணும் திருவிழா நாள் போல், இனி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அமையப் போகிறது.

சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்பட சிறப்பு தலங் களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டு, உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

மதி ïகத்தால் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்பவர்கள். உயர்ந்த சிந்தனையை உடையவர்கள் நீங்கள். உதவும் மனப்பான்மை உங்களுக்கு இயல்பாகவே இருக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு, ஒவ்வொரு படியாக முன்னேற்றம் காண்பவர்கள் நீங்கள் தான். உள்ளத்தில் அன்பு இருந்தாலும், உரத்த குரலில் பேசி, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பீர்கள். கனிவாகப் பேச வேண்டிய நேரத்தில் கனிவாகப் பேசுவீர்கள்.

நல்ல உழைப்பாளியாக இருக்கும் உங்களை உபயோகப்படுத்திக் கொள்பவர்கள் கெட்டிக்காரர்கள். பிறருடைய உதவியின்றி தனித்தே செய்து முடிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. எறும்பின் சுறுசுறுப்பும், எருதின் உழைப்பும் உங்களிடம் இருப்பதால் தான், கரும்பின் சுவையாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு பெயர்ச்சியாகி வந்த குரு கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப் போகிறாரா? இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு வித்திடப் போகிறாரா? என்பதை பற்றி பார்ப்போம்.

இடமது பன்னி ரெண்டில்
இயல்பாகக் குருவும் வந்தால்
கடமையில் கவனம் தேவை!
காசுகள் விரயம் ஆகும்!
உடமையால் சொத்து சேரும்!
உடல்நலம் அச்சுறுத்தும்!
தடம்புர ளாமல் வாழத்
தைரியம் கை கொடுக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு விரயத்தை ஏற்படுத்தி விடுவாரோ? என்று நீங்கள் பயப்படலாம். விரயம் சுப விரயமாகவும் இருக்கலாம், வீண் விரயமாகவும் இருக்கலாம்.

குரு உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியாவார். இந்த ஆதிபத்தியத்திற்கேற்ப 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்த்து பலன் கொடுக்கப்போகிறார். குரு இருக்குமிடத்தைக் காட்டிலும், பார்க்குமிடத்திற்கு பலன் அதிகம். அது சொந்த வீட்டில் இருந்தபடியே பார்க்கப் போகிறது என்பதால், பலன் இருமடங்காக நமக்கு கிடைக்கும். எனவே, எதற்கும் கவலைப்பட தேவையில்லை. பலன்களை தெரிந்து கொண்டு பயணத்தை தொடருங்கள்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!


`குருவே! நீ பார்த்தால் போதும்! கோடியாய் நன்மை சேரும்!' என்ற சான்றோர்களின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு, குருவின் பார்வை பலத்தால் 4, 6, 8 ஆகிய இடங்கள் புனிதமடைந்து, அந்தந்த இடங்களுக்குரிய செயல்பாடுகளை தீவிரப் படுத்துவதோடு, தித்திப்பான பலனையும் உங்களுக்கு வழங்கப்போகிறது.

குருவின் பார்வை பலத்தால் வீடு, தொழில், சொந்தம், சுற்றம், சுகம், கொடுக்கல், வாங்கல், உத்யோகம், தாய் வழி ஒத்துழைப்பு, வாகன யோகம், ஆகிய அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகின்றன. உடும்பு போல உங்களைப் பற்றிக் கொண்டிருந்த உறவினர்கள் உங்களை விட்டு விலகி விட்டார்களே என்ற கவலை இனி அகலும். உங்கள் பெயரை ஒவ்வொரு நாளும் உச்சரிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

தாய்பாசம் கூடும். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்புகள் உங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு கூட உறுதுணையாக இருக்கும். சாமி துணையோடு சகல காரியங்களிலும் வெற்றி பெறப் போகும் உங்களுக்கு பூமியோகமும் இப்பொழுது வந்து சேரப்போகிறது.

வீடு கட்டும் யோகம்

வீடு கட்டும் யோகமா? வாங்கும் யோகமா? என்பதை குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் வாய்ப்பு கிட்டும். புதிய வாகனங்களை வாங்க வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். கால்நடை வளர்ப்பில் கூட ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகன்று தாம்பத்ய சுகமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வதோடு உங்கள் குரலுக்கும் செவிசாய்ப்பார்கள். எனவே, எதிர்பார்த்த சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் மாற்றம், ஊர்மாற்றம் செய்ய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். உத்யோகத்தில் விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கி சங்கிலித் தொடர் போல, கடன்சுமை கூடிக் கொண்டு வந்து விட்டதே என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும். வங்கிச் சேமிப்பு உயரும். சேர்க்கையில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று அறிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

வேலை கிடைக்கும்

கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கும், அரசு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு சலித்துப் போனவர்களுக்கும் நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. குடும்பத்திலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வியக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பாயில் படுத்தவர்கள் இனி பம்பரமாய் சுழன்று பணிபுரிவர். வாயில் தேடி வந்த நோய்கள் கூட, வந்த வழியே திரும்பி விடும். முல்லைப் பூ சூட்டி, முகமலர்ச்சியோடு நீங்கள் குருவை வணங்கினால் எல்லையில்லாத நற்பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

மீன குரு மேலான பலன் தரவும், தேனான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும், சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி வைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மன் வழிபாட்டோடு, அங்குள்ள இசைபாடும் கற்றூண்களுக்கு நடுவில் இருந்து அருள்தரும் தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்! வாழ்க்கையை வளப்படுத்துவது வழிபாடுகள்தான்!.

மேஷ ராசிப் பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும்!

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவதன் மூலம் பக்கத்து வீட்டாரின் பகையிலிருந்து விடுபடலாம். விண்ணை முட்டும் அளவிற்கு ஆபரணங்களின் விலை ஏறினாலும் உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய, கணவர் வேண்டியதை வாங்கிக் கொடுப்பார். தாய்வழி ஆதரவு பெருகும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உங்கள் பெயரில் கூட்டுத்தொழில் தொடங்க முன்வருவர். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படாதிருக்க அடிக்கடி கண்காணித்துக் கொள்வது நல்லது. ராகு கேது வழிபாடும், முறையான சர்ப்ப சாந்தியும் மன அமைதிக்கு வித்திடும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty ரிஷபம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:05 am

ரிஷபம்


கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீர்ஷம்1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ, உள்ளவர்களுக்கும்)

வந்து சேரும் தன லாபம்! வசந்த காலம் உருவாகும்!
கூட்டங்களுக்கு மத்தியில் நிற்கும் பொழுது, உங்களைப் பார்த்து கும்பிடத் தோன்றும் விதத்தில் காட்சி தரும் ரிஷப ராசி நேயர்களே!

மாற்றங்களை அதிகம் விரும்புபவர்கள் நீங்கள்தான். உங்களது வாட்டத்தைப் போக்க வந்துவிட்டது குருப்பெயர்ச்சி. தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறப் போகின்றன. ஈட்டிய லாபத்தால் இதயம் மகிழப்போகிறீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டால் கூட இனி வெற்றி உங்கள் பக்கம்தான்.

குரு பார்க்க கோடி நன்மையா?

இதுவரை கும்பத்தில் சஞ்சரித்து பிறகு மீனத்திற்கு அதிசாரமாக வந்து முறையான பலன்களை ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்தார் குரு பகவான். இப்போது, மீண்டும் கும்பத்திற்கு வந்து பின்னர், மீனத்தில் சஞ்சரித்து ``பந்து'' அடித்து விளையாடுவது போல, குரு முன்னும் பின்னும் வந்து உன்னத பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. 21.11.2010 முதல் உங்கள் ராசிக்கு பதினோராமிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எல்லோரும் குருவைப் பற்றிச் சொல்லும்போது, `குரு பார்க்க கோடி நன்மை!' என்றே சொல்வார்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு வியாழன் பகைவன் அல்லவா? எனவே, ஒரு பகை கிரகம் பார்ப்பது எப்படி நன்மையைத் தரும் என்று நீங்கள் நினைக்கலாம்.

எனவே, ``நல்லவன்'' என்றும், நவகிரகத்தில் ``சுப கிரகம்'' என்றும் வர்ணிக்கப்படும் குருவை நீங்கள் நேரில் சென்று வழிபட்டு வந்தால், மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்கள். ஆனால், உங்களைப் பொறுத்த வரை குரு பார்க்குமிடத்தைக் காட்டிலும், இருக்குமிடத்திற்கு அதிக பலன்களை வழங்குவார்.

குரு தன் சொந்த வீட்டில் பலத்தோடு சஞ்சரிப்பதால், உங்கள் சொந்த வீட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்போகிறீர்கள். உறவினர் பகை மாறி உள்ளன்போடு உங்களிடம் பேசப்போகிறார்கள். உதாசீனப்படுத்தியவர்கள் கூட உங்களை வந்து சரணடையப் போகிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை பணம் தானே, அந்த பண பலத்தை இந்த குரு பகவான், குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு கொடுக்கப்போகிறார்.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்கள் ராசியின் 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கப்போகிறார். குரு ஒரே நேரத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் பார்க்க இயலாது அல்லவா? ஆனால், அதன் புனிதமான பார்வை 5, 7, 9-ம் இடங்களில் பதியும்பொழுது, அவை நமது ராசிக்கு எந்த இடமாக அமைகிறதோ? அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன.

எனவே, அதற்கு அஸ்திவாரமாக நீங்கள் குரு சந்நிதிக்குச் சென்று, குரு கவசம் பாடி, மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ மாலை சூட்டி வழிபட்டு வந்தால், எல்லையில்லாத நற்பலன்களைக் காணலாம். அதோடு, சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்து வாருங்கள்.

யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டு, செயல்பட்டால், உள்ளம் மகிழும் விதத்தில் நல்ல சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும்.

வசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்கள்!

வசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். வாழ்க்கை வசப்படுகிறதோ, இல்லையோ, வந்தவர்கள் எல்லாம் உங்கள் பேச்சுக்கு வசப்படுவார்கள். எனவே, முக்கியமான நபர்களை சந்தித்து முடிவெடுக்க நினைப்பவர்கள் உங்களைப் போன்றவர்களைத்தான் பக்கத்தில் வைத்திருப்பர். ஆடை, ஆபரணங்களின் மீது அதிக ஆசைப்படுவதோடு, உல்லாச பயணங்களிலும் உற்சாகம் கொள்வீர்கள்.

பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிப்பவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்களும் நீங்கள்தான். உங்களிடம் ஒரு பொறுப்பை கொடுத்து விட்டால், எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். எனவேதான், உங்களைத் தேடி ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைக் கொடுக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தான் மட்டும் சந்தோஷமாக வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று நினைப்பவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிநாதன் சுக்ரனை ``களத்திர காரகன்'' என்று வர்ணிப்பதால், வாழ்க்கைத்துணை அமையும்பொழுது, முக்கிய பொருத்தங்கள் இருக்கிறதா? என்று பார்த்து முடிவெடுத்தால் முன்னேற்றங்கள் கிட்டும்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு பெயர்ச்சியாகி வந்த குரு, பெருமைகளைச் சேர்க்கப்போகிறாரா? பிரபல்ய யோகத்தைக் கொடுக்கப்போகிறாரா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

``பதினோராம் இடத்தில் வந்து
பார்த்திடும் குருதான் நின்றால்,
மதிப்பான வாழ்க்கை சேரும்!
மகிழ்ச்சியும் நிலைத் திருக்கும்
துதிக்கின்ற தெய்வம் தன்னை,
துணையாக்கி பார்த் திருந்தால்,
விதிகூட மாறிப் போகும்!
வெற்றிகள் நாளும் சேரும்!''

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அது பார்க்கும் இடங்களான 3, 5, 7 ஆகிய இடங்களுக்கு, அஷ்டம லாபாதிபதிக்குரிய ஆதிபத்ய பலன்களை அள்ளி வழங்கப்போகிறார். வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுக்கும் குரு உங்களுக்கு வளர்ச்சியையே கொடுப்பார்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்போது, பதினோராமிடத்தில் சஞ்சரித்து அதன் பார்வையை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிக்கிறார். எனவே, சகோதரம், சகாயம், சாமர்த்தியம், நட்பு, உடல்நிலை, மேலதிகாரி, பிரயாணம், சொத்து சேர்க்கை, ஆடை, அணிகலன்கள், பிள்ளைகள், சுப நிகழ்ச்சிகள், புண்ணிய காரியங்கள், தூர தேசத்து யோகம், வாழ்க்கைத் துணை, வங்கிச் சேமிப்பு, வர்த்தகம், தொழில் கூட்டாளி போன்ற செயல்களில் புதிய திருப்பங்களை குரு உண்டாக்கப்போகிறார். குரு இருக்குமிடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகமல்லவா? எனவே, அதன் பார்வை பதியும் இடமெல்லாம் எந்தெந்த ஆதிபத்தியத்தை வழங்குமோ, அந்தந்த ஆதிபத்யங்களில் நல்ல திருப்பத்தை உருவாக்கப் போகிறது.

தற்சமயம் பெயர்ச்சியான குரு சகோதர ஸ்தானத்தைப் பார்ப்பதால், ஒத்துவராத சகோதரர்கள் இனி ஒத்துவருவர். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் இணைந்திருந்த சகோதரர்கள் விலக்கிக்கொள்ள, நீங்கள் தனி முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். நீண்ட நாட்களாகப் பேசிவிட்டுப்போன பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும்.

புத்திர ஸ்தானம் புனிதமடைவதால், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குழந்தைகள் தொலைக் காட்சி பார்ப்பதிலும், தொடர்ந்து கிரிக்கெட் பார்ப்பதிலும் கவனத்தைச் செலுத்துகிறார்களே! படிப்பில் அக்கறை காட்டவில்லையே! என்று சொல்லிய நீங்கள், இப்பொழுது என் மகள் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறாள். என் மகன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறான் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லப் போகிறீர்கள்.

குழந்தைகளின் கல்வி முயற்சிக்கும், கல்யாண முயற்சிக்கும், கடல் தாண்டிச் செல்லும் முயற்சிக்கும் கை கொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர்.

குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண கனவுகள் நனவாகும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். பூவணிந்து மாலையிடும் தம்பதியர்களாக நீங்கள் மாறப்போகிறீர்கள். புத்திரப்பேறு முதல் பூப்பூனித நீராட்டு விழா வரை கண்டு மகிழும் நேரமிது.

வியாபார நெருக்கடிகள் அகலும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி நீங்கள் எடுத்த புது முயற்சிக்கு முன்பின் தெரியாத நபர் ஒருவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்றம், வாகன மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் பொழுது சுய ஜாதகத்திற்கு ஏற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்ணின் ஆதிக்கத்தில் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், தொகை எதிர்பார்த்தபடி வந்து கொண்டே இருக்கும்.

ஐந்தாம் பார்வையால் நகை வந்து சேரும்! ஏழாம் பார்வையால் தொகை வந்து சேரும். மூன்றாம் பார்வையால் பகை வந்து விலகும். பம்பரமாய் சுழன்று பணிபுரியும் உங்களுக்கு வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நேரமிது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

லாபஸ்தான குருவால், லாபம் பெருகவும், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், பட்டமங்கலத்திலுள்ள திசை மாறிய தென்முக கடவுளை வழிபட்டு வாருங்கள். அன்று தினமே, இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். தாக்குதல்களும், கூக்குரல்களும் மாறி வாழ்க்கை வளமாகும்.

ரிஷப ராசிப் பெண்களுக்கு அசையா சொத்துக்கள் சேரும்!

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப் பெயர்ச்சி ஒரு இனிய பெயர்ச்சியாக மாறப்போகிறது. உறவினர் வருகை அதிகரிக்கும். உற்சாகத்தோடு உங்களுக்கு பெற்றோர்கள் மணம் முடித்து வைப்பர். தடைபட்ட படிப்பை பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உங்கள் பெயரில் கட்டிடம் வாங்குவது பற்றி பரிசீலிப்பீர்கள். இரண்டில் கேதுவும், அஷ்டமத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால், சர்ப்ப சாந்திகளை முறையாக குடும்பத்தினர்களுடன் செய்து கொள்வது நல்லது. அம்பிகை வழிபாட்டையும் யோக பலம் தரும் நாளில் மேற்கொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty மிதுனம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:06 am

மிதுனம்

மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

தொழில் மாற்றம் தேடிவரும்! துணை யாவும் மாறிவிடும்!
எவரிடமும் எளிதாக நெருங்கிப் பழகும், இனிய சுபாவத்தைப் பெற்ற மிதுன ராசி நேயர்களே!

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லிவிடும் உங்களுக்கு வாயில் தேடி வந்து விட்டது குருப்பெயர்ச்சி! பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்று பயப்பட வேண்டாம். முத்தான உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அத்தனையும் குருவின் பார்வை பலத்தால் கிடைக்கப்போகிறது.

21.11.2010 இரவு முதல் சுமார் ஐந்தரை மாத காலங்கள் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதியப்போகிறது. அப்புறம் என்ன? பண மழையில் நனையப் போகிறீர்கள். பாச மழையில் உலா வரப்போகிறீர்கள். தினம் ஒரு நல்ல தகவல் உங்களைத் தேடி வரப் போகிறது.

இதுவரை ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்த குரு பொன், பொருள்களை சேர்த்து கொடுத்ததா? பொருளாதாரத்தை விருத்தி செய்து கொடுத்ததா? எதுவும் ஒரு நிலையான பலனைத் தரவில்லையே என்று நினைத்த உங்களுக்கு, உருட்டி விட்ட பந்து போல, அங்கும் இங்குமாய் ஓடிவந்த குரு, இப்பொழுதுதான் உங்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கப்போகிறார்.

சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து அது தரும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயர்களையும் அமைத்துக் கொண்டு பணியைத் தொடருங்கள். மணியான வாழ்க்கை மலரும்.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லையே என்றாலும் கூட, உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி, அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு ஆச்சரியமான வாழ்க்கையை உங்களுக்கு தன் பார்வை பலத்தால் அமைத்துக் கொடுக்கப் போகிறது. குறிப்பாக, ராசிக்கட்டம் பன்னிரெண்டிலும், தன ஸ்தானத்தையோ, லாப ஸ்தானத்தையோ, சுக ஸ்தானத்தையோ அல்லது ராசியையோ குரு பார்க்கும் பொழுது தான் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. கூட்டுத் தொழிலில் மாற்றத்தைச் செய்து, ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு, வாட்டங்களைப் போக்கி வழிகாட்டப் போகிறது.

எதிலும், எப்பொழுதும் புதுமையை விரும்புபவர்கள்!

எல்லோரிடத்திலும் எளிதாகப் பழகும் சுபாவம் உங்களுக்கு உண்டு. நண்பர்களை ஆயிரக்கணக்கில் பெற்றிருந்தாலும், ஒருசில நிமிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவீர்கள். புகழ் பெற்ற மனிதர்களாக விளங்க வேண்டுமென்ற எண்ணம் இளமையிலேயே உங்கள் மனதில் பதிந்திருக்கும். மதி நுட்பம் நிறைந்த நீங்கள் மனதில் தோன்றும் புதுப்புது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பீர்கள். புதுமையை எப்பொழுதும் விரும்புவீர்கள்.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களின் நட்பு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. பிறரை கவர்வதில் கைதேர்ந்தவர்கள் நீங்கள். காரணம், உங்களுடைய ஆலோசனைகள் மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தான். எந்தவொரு தகவலையும் கேட்டவுடன் முடிவெடுக்காமல், மனதில் கிரகித்துக் கொண்டு, எப்படி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதால் தான் நீங்கள்வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்க முடிகிறது.

அமைதியும், அடக்கமுமே உங்களுக்கு பலமாக அமைகிறது. ஆர்ப்பரிப்பு உங்களுக்கு பிடிப்பதில்லை. இப்படிப்பட்ட குணங்களை பெற்ற உங்களுக்கு, பெயர்ச்சியாகி வந்த குரு எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்கள் சிந்தனையை வெற்றியடைய வைக்கப்போகிறார் என்பதைப் பற்றி பார்ப்போம்.

`பத்திலே குருவும் வந்தால்,
பதவியில் மாற்றம் சேரும்!
முத்தான வாழ்வில் வந்த
முட்டுக்கட்டைகள் அகலும்!
கொத்தோடு விலகும் துன்பம்!
கூடுதல் கவனம் வைத்தால்!
தத்தளிக்கின்ற வாழ்வில்
தனத்தோடு புகழும் கூடும்!''

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, தொழில் ஸ்தானம் எனப் படும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு, சுய ஜாதகத்தில் தெசா புத்தி பலமிழந்தவர்களுக்கு, தொழில் மாற்றம், இடமாற்றம், உத்யோக மாற்றங்களை உடனடியாக வழங்கலாம். மற்றவர்கள் பயப்பட தேவையில்லை. அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளையும், பதவிகளையும் பெற இந்த குருவழி வகுப்பார். குருவின் பார்வை பலத்தால் பண பலம் கூடுகிறது என்பதால், பயணத்தை தொடங்குங்கள். பக்தியில் மனதை செலுத்துங்கள்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குருவின் பார்வை பதியும் இடங்களான 2, 4, 6 ஆகிய இடங்கள் சுமார் ஐந்தரை மாதங்கள் புனிதமடைந்து பொன்னான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கப் போகிறது. பார்வை பலத்தால் வாக்கு, தனம், குடும்பம், தாய், சுகம், வாகனம், எதிர்ப்பு, வியாதி, கடன், உத்யோகம், தொழில் ஆகிய அனைத்து வழிகளிலும் நீங்கள் எதை எதையெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ, அவற்றையெல்லாம் வழங்கி ஆச்சரியப்பட வைக்கப்போகிறது.

குறிப்பாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இதுவரை வாக்கு கொடுத்ததை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை மேலோங்கி இருக்கலாம். இனி அந்த கவலை தீரும். தாராளமாகச் செலவிட ஏராளமாக தொகையும் வந்து கொண்டிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகவில்லையே என்ற கவலை மாறும். ஒரு காரியத்தைச் செய்ய பணத்தை வைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்று இனி நினைக்க வேண்டாம். காரியத்தை தொடங்கி விட்டால், காசு பணம் தானே வந்து சேரும். அதுதான் குரு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும்.

குடும்ப பொறுப்புகளை அதிகமாக ஏற்றிருக்கும் நீங்கள், கடுமையாக பிரயாசை எடுத்தும் இதுவரை முடிக்க முடியாத காரியங்களை எல்லாம் இப்பொழுது, எளிதில் முடித்துவிடுவீர்கள். பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கூட வந்து சேரும். பணப்பற்றாக்குறை அகலும் இந்த நேரத்தில் இனத்தார் மற்றும் உறவினர்களின் பகை கூட மாறலாம். குணத்தோடு பழகும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.

பங்காளிகள் பக்கபலமாக இருக்க, பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். தாயின் உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் தகுந்த பலன் கிடைக்கும். கல்வி வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். படிப்பில் இருந்த தடை அகல தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுப்பதோடு, கலைமகளையும் கைகூப்பி வணங்குங்கள். பட்டப்

படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட மீதியும் தொடர்ந்து மேலான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி பிறக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். கரையான் மருந்து அடித்து, தரையைச் சீராக்கி, கவனம் முழுவதையும் வீட்டின் மீது செலுத்துவீர்கள். கட்டிய வீடாக வாங்க நினைப்பவர்களுக்கும் எதிர்பார்த்த தொகைக்கே இல்லம் கிடைக்கும். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகன்று பாதியில் நின்ற பத்திர பதிவை முடித்துக் கொள்வீர்கள்.

ஆறாமிடத்தில் குருவின் பார்வை பதிவதால், எதிரிகள் உதிரிகளாவர். இதுவரை தொல்லை கொடுத்து வந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் இதயம் மகிழும் விதத்தில் வந்து சேரும். உயரதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். எனவே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சலுகைகள் இப்பொழுது வந்து சேரும். சங்கிலித் தொடர் போல, வந்த கடன் சுமை இனி குறையும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து ஆதரவு கரம் நீட்டுவர்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

பத்தாமிடத்து குருவால் முத்தான வாழ்க்கை அமையவும், முன்னேற்றங்கள் வந்து சேரவும், சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகிலுள்ள இளையாற்றங்குடி கல்யாணி, கைலாசநாதர் கோவிலில் உள்ள குருவை வழிபட்டு வாருங்கள்.

மிதுன ராசிப் பெண்களுக்கு பண வரவு திருப்தி தரும்

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மனதிற்கு பிடித்தவர்களின் ஒத்துழைப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாய்வழி ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கணவர் உங்கள் பெயரிலேயே வீடு மற்றும் இடங்கள் வாங்க முன்வருவர். தொழிலில் கூட பங்குதாரர்களாக உங்களையும் சேர்த்து கொள்ளலாமா? என்று யோசிப்பர். மாமியார், மாமனார், நாத்தனார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் உங்கள் ராசியிலேயே பிறந்திருந்தால் அதற்குஉரிய வழிபாடு, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty கடகம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:08 am

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

தந்தை வழி ஒத்துழைப்பு! தன் சொத்து விஸ்தரிப்பு!
கவர்ச்சியான பேச்சையும், காரசாரமான பேச்சையும் கலந்து பேசும் கடக ராசி நேயர்களே!

மற்றவர்களுக்கு யோசனைகள் சொல்வதில் வல்லவர்களாகி, மலைபோல அவர்களை உயரவைக்கும் உங்களுக்கு இப்போது வந்திருக்கும் குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் வசந்த காலத்தை வரவழைத்துக் கொடுக்கப்போகிறது.

மற்றவர்களுக்கோ வாழ்க்கையில்தான் பிரச்சினை வரும். ஆனால், உங்களுக்கோ வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும். அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைத்த பொழுது, அளவற்ற பிரச்சினைகளை சந்தித்து வந்த நீங்கள், துன்பத்தை துரத்துவது எப்பொழுது என்று சிந்தித்து கொண்டிருந்த உங்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி இன்பங்களை எல்லாம் வரவழைத்துக் கொடுக்கும் விதத்தில் அமையப்போகிறது.

உங்கள் ராசிநாதன் சந்திரன் பலம் பெறும் பவுர்ணமி நாளில் அல்லவா குருப்பெயர்ச்சியாகிறது. அதுமட்டுமல்ல, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கிறது. எனவே, ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக விருச்சிக ராசியையும், தற்சமயம் பெயர்ச்சியாகப்போகும் குரு பார்க்கப்போவதால் அளவுக்கு அதிகமான நற்பலன்களைப் பெறும் அந்த இரண்டு ராசிகளில் ஒன்றாக உங்கள் ராசியும் அமைவதால், இனி நீங்கள் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றிகாணப்போகிறீர்கள்.

நவம்பர் 21-ம் தேதி முதல் நல்ல நேரம் தொடங்கப்போகிறது. குழம்பிய குழப்பங்கள் அகலும். கூட இருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். வளம் பெற நீங்கள் மேலும் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், நிலங் களில் வசிக்கும் மாந்தர்களின் நெஞ்சங்களில் எல்லாம் உங்கள் நினைவுதான் இருக்கும்.

சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயர்களையும் அமைத்துக் கொண்டு பணியைத் தொடருங்கள்.

குரு உங்கள் ராசியைப் பார்க்கிறது. எனவே உங்கள் ராசி முழுமையாக புனிதமடைந்து விடுகிறது. ஆரோக்கி யம் சீராகி ஆர்வத்தோடு பணிபுரியப்போகிறீர்கள். சீரும், சிறப்பும், செல்வாக்கும் வீடு தேடி வந்து சேரப்போகிறது. நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றப்போகின்றன.

ஜென்ம ராசியோடு, மூன்று, ஐந்து (1, 3, 5) ஆகிய இடங்களையும் குரு பார்க்கப் போகிறார். குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பதியும் இடங்களாக அவை அமைவதால் அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்கள் எல்லாம் அற்புதமாக நடைபெறப்போகிறது.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு வெற்றிகள் ஸ்தானத்தையும், பஞ்சம பாக்ய ஸ்தானத்தையும் பார்ப்பதால், திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லாமல், திட்டமிட்டபடியே நடைபெறப் போகிறது.

பிடிவாத குணத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள்!

வீட்டை மட்டும் கவனிப்பவர்களுக்கு மத்தியில் நாட்டையும் கவனிப்பவர்கள் நீங்கள் தான். பொதுநல பிரியராகவும், அதன் மூலம் புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்பவர்களாகவும் விளங்குவீர்கள். உங்களின் அதிமதுர பேச்சால் அரை நொடியில் மனம் மாறி விடும். ஆன்மிகம் முதல் அரசியல் வரை அத்துபடியாக வைத்திருக்கும் நீங்கள் உங்களுக்கு பிரச்சினைகள் வந்தால் மட்டுமே வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் தான் வசதிகளை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு வராத யோசனைகள் உங்களுக்கு வந்து சேரும். எப்படியெல்லாம் எதிரிகளை உதிரியாக்கலாம் என்று சிந்திப்பீர்கள். பேசும் கலையை பெரிதும் கற்று வைத்திருப்பவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்களும் நீங்கள்தான்.

கடிவாளமில்லாத குதிரையைப் போல, துள்ளி திரியும் உங்களுக்கு பிடிவாத குணம் மட்டும் இல்லாவிட்டால், பிறரை அனுசரித்து செல்கின்ற ஆற்றலையும் வரவழைத்துக் கொண்டால், முன்னேற்றங்கள் வாழ்வின் முதல் பகுதியிலேயே உங்களுக்கு வந்து சேரும். திருத்தம் நிறைந்த பெண்ணாக இருந்தாலும், பொருத்தம் பார்த்து செய்தால் தான் வாழ்க்கையில் வருத்தமில்லாத நிலை ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் வரும் பலன்களைப் பற்றி பார்ப்போம்:

ஒன்பதில் குருவும் வந்தால்
ஒப்பற்ற வாழ்க்கை சேரும்!
பொன்பொருள் அதிகரிக்கும்!
பூமியால் லாபம் கிட்டும்!
நண்பர்கள் ஒத்துழைப்பால்
நலம்யாவும் வந்து கூடும்!
இன்பத்தின் எல்லை காண
`இறையருள்' கைகொடுக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு, ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் உத்யோகம், தொழிலில் நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். விருப்ப ஓய்வில் வந்து கூட விரும்பிய தொழிலை தொடங்க ஒரு சிலர் முன்வருவர். நண்பர்கள் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கப்போகிறது. எனவே வாழ்க்கைப் பயணம் தொடரும்போது வழியெல்லாம் நல்ல தகவல் வந்து கொண்டே இருக்கும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

இதுவரை எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இப்பொழுது, ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கப்போவதால், பிறர் மதிக்கும் படியான வாழ்க்கையை அவர் அமைத்துக் கொடுப்பார். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். எதை தொட்டாலும், தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டிருக்கின்றனவே என்று நினைத்த நீங்கள் இனி தொட்டதெல்லாம் வெற்றி பெறப்போகிறது. ரண சிகிச்சை மூலம் குணமாக வேண்டிய நோய்கள் கூட இனி சாதாரண சிகிச்சை மூலமே குணமாகி விடும். கடன்சுமை குறைந்து கவலைகள் ஓயும்.

குருவின் பார்வை சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் பதிவதால், உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு, வந்திணைந்து உதவிக்கரம் நீட்டுவர். சகோதர பகை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். `அண்ணன் என்னடா... தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று சொல்லிய நீங்கள், இனி அவசரத்திற்கு கைகொடுத்து உதவு பவர்கள் அண்ணன், தம்பிகள் தான் என்று சொல்லப் போகிறீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

சகோதர ஸ்தானம் புனிதமடைவதால், முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினையில் நீண்ட நாட்களாக, ஒரு சகோதரம் ஒத்து வந்தால், மற்றொரு சகோதரம் ஒத்து வரவில்லையே? எப்படி பிரித்துக் கொள்வது என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும். உடன்பிறப்புகள் ஒத்து வருவர். உங்கள் வீட்டிற்கு வந்து சொத்துக்களை சுமூகமாக பிரித்துக் கொள்வோம், சுபகாரியங்கள் எங்கள் வீட்டில் நடைபெற வேண்டுமென்று சொல்லப்போகிறார்கள். நீங்களும் அவர்களின் இல்ல திருமண விழாக்களை சீரும், சிறப்புமாக நடத்தி வைக்கப்போகிறீர்கள்.

பொதுவாக தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிபெற வைக்கும் குருவின் முழுப்பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால், வங்கிச் சேமிப்பு வளரும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழிலில் இடைïறு செய்த கூட்டாளிகளுக்குப்பதிலாக புதிய பங்குதாரர்களை சேர்க்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.

பால்ய நண்பர்கள் கூட உங்களுக்கு பங்குதாரர்களாக முன்வருவர். மாமன், மைத்துனர் வழியிலும் உங்களுக்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பையும், செல்வாக்கையும் உயர்த்த நினைக்கும் குரு உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு காண வைக்கும்.அப்படிப்பட்ட குருவை நீங்கள் கொண்டாடி மகிழ வேண்டுமல்லவா? எனவே, நட்சத்திரம் அனுகூலம் தரும் நாளில் திருச்செந்தூருக்குச் சென்று தித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வழிபட்டு வாருங்கள். ``குரு பீடம்'' என்று கருதப்படும் செந்தூருக்குச் சென்று வழிபட்டு வந்தால், குருவருளோடு, திரு வருளும் உங்களுக்கு கிடைக்கும்.

குருவின் பார்வை பலத்தால் `புத்திர ஸ்தானம்' புனிதமடைவதால், பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்திகள் வந்து சேரும். அவர்களால் உதிரி வருமானங்களும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணம், கல்வி, கடல்தாண்டும் முயற்சி, பூப்புனித நீராட்டு விழா ஆகியவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

ஒன்பதாமிடத்து குருவால், ஒளிமயமான வாழ்க்கை அமைய, புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் சென்று வியாக்ரபுரீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, யோக தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு, மறுதினம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்மனையும் வழிபட்டு சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கடக ராசிப் பெண்களுக்கு கடன்சுமை குறையும்!

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால், உடல் நலம் சீராகும். உறவினர் பகை அகலும். தாய்வழி தனலாபம் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பெண்வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகள் வழியில் இருந்த கோபம் மாறி பாசம் கூடும். அவர்கள் வேலையில் சேர கண்ட கனவு பலித்து, வருமானத்தை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பர். வியாழன் தோறும் விரதமிருப்பது நல்லது. ராகு வழிபாடு யோகம் சேர்க்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty சிம்மம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:09 am

சிம்மம்

மகம், பூரம், உத்தரம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

ஆரோக்கியம் அச்சுறுத்தும்! ஆதரவுக் கரம் கூடும்!
எதற்கும் கலங்காத மனமும், எதிர்ப்பை கண்டு அஞ்சாத குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

ஏழரைச்சனியின் பிடியில் சிக்கியிருக்கும் உங்களுக்கு இப்பொழுது வருகிற குருப்பெயர்ச்சி வாழ்வில் நல்ல வசந்தத்தை வரவழைத்துக் கொடுக்கப்போகிறது. எட்டாமிடத்து குரு எப்படி நன்மை செய்யும்? என்று நீங்கள் கேட்கலாம்.

விபரீத ராஜயோகத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, அஷ்டமாதிபதி குரு, தன ஸ்தானத்தை பார்க்க போவதால், அள்ளிக் கொடுக்கும் குருவாகவும், அதே நேரத்தில் சுய ஜாதகத்தில் குரு பலம் இழந்திருப்பதால் கிள்ளிக் கொடுக்கும் குருவாகவும் மாறலாம்.

ஆனால், ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சலை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் காரியங்களை ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்யுங்கள். அப்படியிருந்தால், நவம்பர் 21- முதல் நல்ல வாய்ப்புகளையே நீங்கள் நாளும் சந்திக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியான குரு `ஆயுள்' ஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்தில், சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக் கிறார், எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஓரளவே பலன் கிடைக்கும். அஷ்டமாதிபதி வலுப்பெறும் பொழுது, அன்னதான வைபவங்களில் கலந்து கொள்வதோடு, குரு வழிபாட்டிலும் முறையாக கவனம் செலுத்தினால், பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

குறிப்பாக 6, 8, 12 ஆகிய இடங் களில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டுமென்று சொல்வார்கள். திடீர் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வாகனத்தில் தொல்லைகளும், வளர்ச்சிப் பாதையில் சில இடைïறுகளும் வந்து சேரலாம்.

எனவே சுயஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து அது கொடுக்கும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம், அமைந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களை பார்க்கப் போகிறார். அல்லவா? குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு உங்கள் பணத்தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யப்போகிறது. குறிப்பாக, ராசிக்கட்டம் பன்னிரெண்டிலும், தன ஸ்தானத்தையோ, லாப ஸ்தானத்தையோ, சுக ஸ்தானத்தையோ அல்லது ராசியையோ குரு பார்க்கும் பொழுது தான் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை தரும் விதத்தில் இருக்கிறது. காரணம், தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும், அயன, சயன ஸ்தானத்தையும் அல்லவா? குரு பார்க்கப்போகிறார். எனவே, மன நிம்மதி குறைந்தாலும் கூட, பணப்புழக்கம் கூடுதலாகவே இருக்கும்.

கொள்கை பிடிப்போடு செயல்படுபவர்கள் நீங்கள்!

உங்கள் கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். யாருடைய கட்டுப்கோப்பிலும் இருப்பது உங்களுக்கு பிடிக்காது. சுதந்திர பறவையாக சுற்றித்திரிய பிரியப்படுவீர்கள். தெய்வ நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் செயல்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெறும் என்பதை நீங்கள் அனுபவத்தில் அறிந்து கொள்வீர்கள்.

உங்களுக்கு களத்திர ஸ்தானாதி பதியாக சனி அமைவதால், தாரத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது, மட்டும் தக்கவிதத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். மறுத்துப் பேசாத வாழ்க்கைத்துணை அமைய வேண்டுமானால், மகேந்திர பொருத்தம் முதல் முக்கிய ஐந்து பொருத்தங்கள் பொருத்தியிருக்க வேண்டும். பகைவர்களைக் கூட நீங்கள் பக்கபலமாக்கி கொள்வீர்கள்.

அடுத்தவர் நலனுக்காக எடுத்த காரியங்களை நீங்கள் உடனுக்குடன் முடித்துக் கொடுப்பதனால்தான், பதவி வாய்ப்புகளை நீங்கள் இயல்பாகவே வரவழைத்து கொள்ள இயலுகிறது. முன்கோபத்தையும், முடிவுகளை திடீர் திடீரென எடுப்பதையும் மாற்றிக் கொண்டால், முன்னேற்றத்தின் முதல்படியில் நீங்கள் நிற்கலாம்.

``எட்டினில் குருவும் வந்தால்,
இடமாற்றம் வந்து சேரும்!
பெட்டியில் தொகை வைத்தாலும்,
பிறருக்கே பயனாய் மாறும்!
திட்டங்கள் மாறிப் போகும்!
திருப்பங்கள் பலவும் சேரும்!
வெற்றியைக் காண வேண்டின்,
விரதத்தை கடைப்பிடிப்பீர்!''

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, எட்டாமிடத்தில் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றாலும், அதை நாம் கையெடுத்து வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், செய்யும் காரியங்களில் சில காரியங் களாவது வெற்றியடையும். வலது கை, இடது கை நீங்கலாக `நம்பிக்கை' என்ற ஒரு `கை' சேருமானால், வாழ்க்கை என்ற கை மிகச் சிறப்பாக இருக்கும்.

அந்த நம்பிக்கையை குருவின் மீதும், சான்றோர்களின் மீதும், பெரியவர்களின் மீதும், ஆலய வழிபாட்டின் மீதும் நீங்கள் முழுமையாக வைக்க வேண்டிய நேரமிது. அப்பொழுதுதான், குரு பார்வை உங்களுக்கு கோடி நன்மைகளை வழங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குருவின் பார்வை பதியும் இடங்களான 2, 4, 12 ஆகிய இடங்கள் புனிதமடைந்து பொருளாதாரத்தில் நிறைவைக் கொடுக்கப்போகின்றது. பொன், பொருள் வாங்கிக் குவிக்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள போகிறீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல்- வாங்கல்களில் இதுவரை இருந்த பாக்கிகள் வசூலாகும். கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும். சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! என்ற வைர வரிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகீர்கள். உத்யோகத் தில் மாற்றப்பட்டவர்கள் மீண்டும் மறுமாற்றத்தைக் காண்பர்.

புதுமனை புகுவிழாக்கள், பூப்புனித நீராட்டு விழாக்களை, மதிப்பும், மரியாதையும் மிக்கவர்களுக்கு மத்தியில் நடத்தி மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்வீர்கள். கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே என்ற கவலை மாறும். அரைகுறையாக நின்ற பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். அடுத்த வீட்டால் வந்த பிரச்சினை அகலும்.

குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு முக்கியப் புள்ளிகள் கைகொடுத்து உதவுவர். குருவின் பார்வை 4-ம் இடத்தைச் சேர்வதால் தாயின் உடல்நலம் சீராகும். பங்காளிப் பகை மாறும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுக் கடுக்காக ஆலோசனை கேட்டு வெற்றி பெற்றவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

காசு பணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளின் கல்விக் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். மருத்துவத்துறை, என்ஜினியரிங் துறை போன்ற படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்ட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற முன்வருவீர்கள். கல்வி பயில்வதற்கு கடல்தாண்டிச் செல்ல வேண்டும் என்று ஒரு சிலர் விரும்புவர். அந்த ஆசைகளை நிறைவேற்றப் போதுமான தொகை இல்லையே என்று நினைத்த நீங்கள், இனி போதுமான பொருளாதாரம் பெறப்போவதால், எண்ணங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்வீர்கள். வங்கிச் சேமிப்பு உயரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பணம் தண்ணீராகச் செலவாகிறது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஒரு தொகை செலவழிந்தவுடன் அடுத்த தொகை தானாக வரும் அளவிற்கு சகட யோகம் உங்களுக்கு இருக்கிறது. எனவே கவலைப்படாமல் காரியத்தைத் தொடங்கினால் கடைசி நேரத்தில் காசு, பணப் புழக்கம் கைக்கு வந்து சேரும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தை மட்டுமல்லாமல் அயன, சயன ஸ்தானத்தையும் பார்ப்பதால் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நிறைவடையும். வீடுமாற்றம், நாடு மாற்றம், இடமாற்றம், உத்யோக மாற்றம் என்று இந்த நேரத்தில் ஏதாவது ஒரு மாற்றம் வந்து சேரும். வந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.

செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடு

எட்டாமிடத்து குருவால் இனிய பலன்களைக் காணவும், தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக வெற்றி பெறவும் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு வந்து கற்பக விநாயகரை வழிபட்டு வாருங்கள். அங்குள்ள குருவையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

சிம்ம ராசிப் பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் குடும்ப சுமை கூடும். கூடுதல் செலவுகள் வந்து சேரும். கடுமையாக முயற்சித்த காரியங்களுக்கு கடைசியில் வெற்றி கிடைக்கும். சுக ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். திடீர் இடமாற்றங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் பதவிகளும் புதிய பொறுப்புகளும் வந்து சேரும். பொதுவாக ராகு - கேது ப்ரீதியும், சர்ப்ப சாந்தியும் செய்தால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty கன்னி

Post by சிவா Tue Nov 16, 2010 5:10 am

கன்னி

உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பூ, ஷ, ண, ட,பே, போ உள்ளவர்களுக்கும்)

வரன்கள் தேடி வரும்! வரும் தடைகள் அகன்றோடும்!
பதுமையாக வாழாமல், புதுமையாக வாழ வேண்டுமென்று விரும்பும் கன்னி ராசி நேயர்களே!

குதூகலத்தை தரும் குருப்பெயர்ச்சி எப்பொழுது வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு அதிர்ஷ்டகாற்று நவம்பர் 21-ந் தேதி முதல் வந்து சேரப்போகிறது. அன்றுதான் குரு மீனத்தில் சஞ்சரித்து தனது மேலான பார்வையை உங்கள் ராசியின் மீது நேராகப் பதிக்கப்போகிறார்.மனக்கவலை மாறி மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டுமானால், குருவின் பார்வை ராசியில் பதிய வேண்டும். இதுவரை ஆறாமிடத்தில் சஞ்சரித்து, காரிய தடைகளையும், கவலைகளையும் அளவுக்கு மேல் கொடுத்திருக்கலாம். அதோடு, ஏழரைச்சனியும் சேர்ந்து எதிர்பாராத விதத்தில் மனக்

கசப்பு தரும் செய்திகளையும் வழங்கிஇருக்கலாம். இனி அவற்றிலிருந்து விடுபட்டு, உடல்நலத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியப்போகிறீர்கள்.கடன்சுமை குறையும். கடகடவென காரியங்கள் முடிவடையும். இடமாற்றம், ஊர்மாற்றங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் மாறும். தடம் மாறிச் சென்ற உறவினர்கள் தானாக உங்களை வந்து சேருவர்.

நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4, 7 க்கு அதி பதியான குரு பகவான் ஜென்ம ராசியை மட்டும் பார்க்காமல் 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். எந்தப்பார்வை பார்த்தாலும், அது தமது சொந்த வீட்டில் இருந்து சப்தம பார்வையாக பார்க்கும் பார்வைக்கு ஈடாகாது.

குறிப்பாக, ஆரோக்கிய தொல்லையும், இனம்புரியாத கவலையும், ஈடுசெய்ய முடியாத இழப்புகளும் இதுவரை வந்திருக்கலாம். தண்ணீரில் தத்தளிக்கும் மரக்கலம் போல, இருந்த உங்களுக்கு இனி பன்னீர் தெளித்து வரவேற்கும் விதத்தில் வாழ்க்கைப் பாதை அமையப்போகிறது. குரு பார்வை குழப்பத்தை தவிர்க்கும். குதூகலத்தைக் கொடுக்கும்.

சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடு செய்து வாருங்கள்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், முழுமையாக உங்கள் ராசி புனிதமடைந்து விடுகிறது. எனவே, ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பாயில் படுத்தவர்கள் கூட இனி பம்பரமாய் பணிபுரியப்போகிறார்கள். இதுவரை எந்த மருந்திற்கும் குணமாகாத நோய்கள் கூட கிரக நிலைகளின் மாற்றத்தால், மாற்று வைத்தியத்தின் மூலம் மறுவாரமே குணமாவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

ஜென்ம ராசியோடு, மூன்று, பதினொன்று (1, 3, 11) ஆகிய இடங்களையும் பார்க்கப்போகிறார். குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பதியும் இடங்களாக அவை அமைவதால், அந்த இடத்திற்குள்ள ஆதிபத்ய பலன்கள் எல்லாம் அற்புதமாக நடைபெறப்போகிறது.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கப்போகும் குரு, வெற்றிகள் ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கப் போவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வளர்ச்சிக்கு உறுதுணையாக நண்பர்களும், உறவினர்களும் இருப்பர்.

வரவுக்கு ஏற்ப செலவு செய்வதில் வல்லவர்கள்!

`பணம் பத்தும் செய்யும்' என்பது பழமொழி. அந்தப்பத்தும் செய்யும் பணத்தை மற்றவர்கள் `தாம் தூம்' என்று செலவழிப்பர். ஆனால் நீங்களோ வரவறிந்து செலவு செய்வீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், வளர்ச்சிக்கு வித்திட்டவர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும், பழைய சடங்கு, சம்பிரதாயங் களில் நம்பிக்கை வைக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுபவர்கள் நீங்கள். உங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலே கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். யாருக்கும் எந்தவொரு விதத்திலும் இடைïறுகளை ஏற்படுத்த மாட்டீர்கள். மற்றவர்கள் மனம் புண்புடும் படியும் பேச மாட்டீர்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ``கன்னியால் கவலை'' என்பது ஒரு பழமொழி. எனவே தாயாலோ, தாரத்தாலோ, தங்கையாலோ, தன்னோடு பணிபுரியும் தோழியாலோ பிரச்சினைகள் உருவாவது இயற்கைதான். வரும் பிரச்சினைகளை வழிபாட்டின் மூலம் நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக திருமண காலத்தில் பொருத்தம் திருப்தியாக இருந்து செய்தால்தான் வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்கும்.

பட்டம் பெற்றவர்கள் சொல்லும் யோசனைகளைக் காட்டிலும் உங்கள் யோசனைகள் சிறப்பாக இருக்கும் என்பதால், படித்த அறிஞர் பெருமக்கள் கூட உங்களிடம் பல விதமான சந்தேகங்களை கேட்டுத் தெளிவு செய்து கொள்வர். ``கற்ற கல்வியைக் காட்டிலும் பெற்ற அனுபவம் ஏராளமாக இருப்பதால் தான்'' உற்றார், உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஏழினில் குருதான் வந்தால்
எதிர்காலம் சிறப்பாய் மாறும்!
வாழ்விலே வசந்தம் சேரும்!
வருமானம் திருப்தி யாகும்!
சூழ்ந்திடும் பகை விலகும்!
தொடுத்திடும் மாலை சேரும்!
கோள்களில் குருவை நீங்கள்
கும்பிட்டால் நலம் கிடைக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு எண்ணற்ற மாற்றங்களை வாரி வழங்கப்போகிறது. எதிர்காலம் சிறப்படையத் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். மணமாலை சூடுவதற்கான வாய்ப்பும் வந்து சேரும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குருவின் பார்வை பதியும் இடங்களான 1, 3, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் எல்லாம் நடைபெற வேண்டுமோ, அந்தக் காரியங்கள் எல்லாம் அடுக்கடுக்காக நடைபெறப்போகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட கவலைகள் இனி மாறும். உடன்பிறப்புகள் முதல் உடன் இருப்பவர் வரை உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வருவர். தொட்டதைத் துலங்க வைப்பவர் குரு தானே.

எனவே மூடிக்கிடந்த தொழிலுக்கு இனித் திறப்பு விழாச் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். வேலையை விடலாமா, வி.ஆர்.எஸ். வாங்கிக் கொள்ளலாமா என்று சிந்தித்தவர்கள், இனி நவம்பர் 21 முதல் நல்ல வாய்ப்புகளை வர

வழைத்துக் கொள்ளப் போகிறீர்கள். உண்மைக்குப் புறம்பாக உங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள் தங்கள் தவறை உணர்ந்து தானே விலகிக் கொள்வர்.

பக்கத்து வீட்டாரின் பகை மாறும். நகைகள் வாங்கிச் சேர்க்க வில்லையே என்ற எண்ணம் நிறைவேறும் நேரமிது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் அணிந்து பார்க்க ஆபரணங்களும், தங்கியிருக்க வீடுகளும் தக்க விதத்தில் வந்து சேரும். இன்னும் யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, மதுரை அருகில் உள்ள குருவித்துறை, திட்டை தெட்சிணாமூர்த்தி போன்றவற்றையெல்லாம் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வந்தால் வரன்களும் வாயிற்கதவைத் தட்டும். வருமானமும் திருப்தி தரும்.

குருவின் பார்வை சகோதர ஸ்தானத்தில் பதிவதால் ஒத்துவராத உடன்பிறப்புகள் ஒத்து வருவர். மூத்த சகோதரத்தின் மூலம் முன்னேற்றங்களும், இளைய சகோதரத்தின் மூலமும் இயல்பாக சுபகாரியங்களும் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பூர்வீக சொத்துத் தகராறுகளுக்கு பலமுறை பஞ்சாயத்து வைத்தும், ஒருவரும் ஒத்துவரவில்லையே என்று நினைத்த நீங்கள், இனிக் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பஞ்சாயத்துக்கள் வைக்கலாம். உங்கள் சொல்லை உடன்பிறப்புகள் ஏற்றுக் கொள்வர்.

குருவின் பார்வை 11-ஆம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே வருமானம் பெருக வழிபிறக்கும். வாழ்க்கைத்துணையின் சம்பாத்தியமும் கூடும். வாரிசுகளின் சம்பாத்தியமும் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும். எனவே இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று ஏராளமான சிந்தனைகள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்.

அந்நிய தேசத்தில் இருந்து அனு கூலச் செய்திகள் வந்து சேரும். வண்ண மயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அபுதாபி செல்லலாமா? இல்லை அமெரிக்கா செல்லலாமா? ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் செல்லலாமா? என்ற மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். எந்த முடிவும் சுய ஜாதகத்தை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கீர்த்தியும், புகழும் கூடும். வாட்டங்கள் அனைத்தையும் விலக வழிவகுப்பது இந்த குருப்பெயர்ச்சிதான்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

ஏழாமிடத்து குருவால் இனிய பலன்கள் வந்துசேர புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கு வாருங்கள். அங்குள்ள நெய் நந்தீஸ்வரரையும், குரு தெட்சிணாமூர்தியையும் வழிபட்டு வாருங்கள். நந்தி வழிபாடு உங்களுக்கு நலம் சேர்க்கும்.

கன்னி ராசிப் பெண்களுக்கு கருத்து வேறுபாடுகள் அகலும்

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். இருப்பினும் ஏழரைச்சனியின் ஆதிக்கமும் இருப்பதால் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். அடுத்தவரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். சேமிப்பில் சிறிது கரையலாம். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி நகைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குரு உத்திரட்டாதி நட்சத்திரக் காலில் சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தக்க விதத்தில் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு சர்ப்ப சாந்தியும் செய்து கொண்டால் மக்கள் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty துலாம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:12 am

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

எதிரிகளின் பலம் கூடும்! இறையருளே காப்பாற்றும்!
துவளாத உள்ளமும், துடிப்போடு செயலாற்றும் தன்மையும் கொண்ட துலாம் ராசி நேயர்களே!

குருப்பெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கும் யோகம் அதிகமாக இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உங்கள் சுய ஜாதகத்தைப் பொறுத்து தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம், உங்கள் ராசிநாதன் சுக்ரன் குருவிற்கு பகைவராக விளங்குபவர். இருப்பினும் குரு பார்வைக்கு கோடி நன்மை என்பதற்கேற்ப, அது பார்க்கும் இடங்களெல்லாம் பலன்கள் அதிகம் கிடைக்கும்.

பொதுவாக, ஏழரைச்சனியின் ஆதிக்கம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. விரயச்சனி என்பதால் கடந்த சில மாதங்களாகவே வரவைக் காட்டிலும் செலவு கூடியிருக்கலாம். எண்ணங்கள் எளிதில் நிறைவேறாமல் இப்படி இழுத்தடித்துக் கொண்டிருக் கிறதே என்று சிந்தித்த உங்களுக்கு, இப்பொழுது குருவின் பார்வை அந்த சனியின் மீது பதிவதால் நல்ல மாற்றங்கள் வந்து சேரப்போகின்றன.

என்ன இருந்தாலும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு, அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தை வழங்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் சென்றால் தான் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டுமானால், யாரையும் விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் மூலம் உபத்திரவங்களை நீங்கள் சந்திக்காதிருக்கவும், கடன் சுமைகளை குறைத்துக் கொள்ளவும், கடவுள் வழிபாடுதான் உங்களுக்கு கை கொடுக்கும்.

குரு `புத்திரகாரகன்' என்று வர்ணிக்கப்படுபவர். அந்த குரு ஆறில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் தொல்லைகள் வந்து கொண்டிருக்கலாம். உங்களை கேட்காமலேயே உங்கள் பிள்ளைகள் சில முடிவெடுத்து விட்டு, உங்களுக்கு மனக்கவலை தரும் விதத்தில் நடந்து கொள்ளலாம். ``ஆணை அடக்கி வளர்!, பெண்ணைப் போற்றி வளர்!'' என்று குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒரு பழமொழி சொல்வர். அந்த அடிப்படையில், உங்கள் குழந்தைகளை கூடுதல் கவனத்துடன் பார்த்து கொள்வது நல்லது.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா? எனவே, குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடங்கள் எல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து பார்க்கிறதோ அதற்குரிய பலன்களையும் சேர்த்து வழங்கும்.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு, இதுவரை கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும், காசு, பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். வளர்ச்சிக்கு ஒத்துழைப்புச் செய்ய வள்ளல்கள் கை கொடுத்து உதவுவர். தொழில் ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் ஆகியவற்றையும் குரு பார்ப்பதால், தொழில் வளர்ச்சி கூடினாலும், அதில் வரும் ஆதாயம் கைக்கு கிடைக்காது.

உடனுக்குடன் விரயமாகும் சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளை நம்பிச் செய்யும் செயல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உண்மை எது? பொய் எது? என்பதை அறிந்து செயல்படாவிட்டால், எதிர் பாராத மாற்றங்களை சந்திக்க நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக காலச் சக்கரத்தைச் சுழற்றும் கடவுளை நீங்கள் கை கூப்பி தொழுதால் ஞாலத்தில் வரும் இடர்கள் தானாகவே அகலும்.

நன்றி மறக்காத குணத்தைப் பெற்றவர்கள்!

ஒருமுறை ஒருவர் செய்த உதவியை எத்தனை ஆண்டுகளானாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். நன்றி மறக்காத குணம் உங்களுக்கு உண்டு. நீதிக்கும், நேர்மைக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் உங்களுக்கென்று ஒரு தனி கூட்டம் இருக்கும். அழகை ரசிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் உங்களுக்கு அதிகரிக்கும் பொழுது தான், வாழ்க்கையில் வளர்ச்சி பாதை தென்படுகிறது என்பதை நீங்கள் அனுபவத்தில் காணலாம்.

அள்ளி கொடுப்பதில் வல்லவரான சுக்ரன், உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கலாமே தவிர, சேர்ந்த வாழ்க்கைத்துணையால் நிம்மதியை கொடுக்குமா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தை பொறுத்தே முடிவெடுத்துக் கொள்ள இயலும். திருமணப் பொருத்தங்கள் தித்திக்கும் விதத்தில் இருந்தால் தான் அருமை மனைவியின் ஆதரவும், அன்பு மிகுந்த தாம்பத்யமும் உங்களுக்கு அமையும்.

இரக்க குணத்தைப் பெற்றிருந்தாலும், அரக்க குணமும் சிலசமயங்களில் தலை தூக்கும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி இனிய பலன் களைக் கொடுக்குமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆறினில் குருதான் வந்தால்
அனைத்திலும் கவனம் தேவை
போரிடும் குணத்தை நீக்கி
பொன்னான குணத்தை ஏற்றால்
சீரான வாழ்க்கை சேரும்!
செல்வங்கள் வந்து கூடும்!
ஏராளம் பலன் கிடைக்க
இறையருள் தானே வேண்டும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆறில் வந்த குரு அனைத்து வழிகளிலும் மாற்றங்கள் வழங்க வேண்டுமானால் போரிடும் குணத்தை நீக்கி பொன்னான குணத்தை மேற்கொள்ள வேண்டும். எந்தச் செயலையும் யோசித்துச் செய்வதன் மூலம் யோகங்களை வரவழைத்துக் கொள்ளலாம். உடலில் தோன்றும் வியாதிகளை உடனுக்குடன் பார்த்துக் கொள்வது நல்லது.

விருப்பங்கள் நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குரு பார்த்தால் இடைïறுகள் அனைத்தும் விலகிவிடும் என்பது முன்னோர் வாக்கு. அந்த குருவின் பார்வை பதியும் இடமாக இருக்கும் வாக்கு, தனம், குடும்பம் என்னும் இடம் வலுவடைவதால் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். கொள்கைப் பிடிப்பு இருந்தும், அதைச் செயல்படுத்த முடியவில்லையே என்ற கவலை அகலும், திணறடித்துக் கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் விதத்தில் கைக்குப் பணம் வந்து கொண்டேயிருக்கும்.

குடும்பத்திற்குத் தேவையான அத்யாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் என்றாலும், அவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்களா என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. உயர்ந்த மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.

குருவின் பார்வை பலன் 10-ஆம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் பலன் பெறுகிறது. செய்யும் செயல் களில் இருந்த சிக்கல்கள் அகலும். சிறு, சிறு பிரச்சினைகள் குடும்பத்தில் தலை தூக்கினாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். விலையுர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடக்குமா என்பது சந்தேகம் தான்.

71/2 சனி ஒருபக்கம், ஒன்பதாமிடத்து கேது மற்றொரு பக்கம். உங்கள் வளர்ச்சியால் தளர்ச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருக்கும். திடீரென தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். பிறகு இதே தொழிலில் நீடிக்கலாமா என்று நினைப்பீர்கள். வேலையில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொள்ளும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வர். பிறகு அதுவேண்டாம் தொடர்ந்து வேலையில் நீடிக்கலாம் என்று

சொல்வீர்கள்.சலனங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பெற்றோர்களிடம் பாசமாக நடந்து கொள்வது நல்லது. பொது நலத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

குருவின் பார்வை அயன சயன ஸ்தானம் எனப்படும் 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் அதிபர்களாக இருப்பவர்கள் இன்று இத்தாலி, நாளை நார்வே, மறுநாள் மாஸ்கோ என்று சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். அலைச்சல் கூடும் இந்த நேரத்தில் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட தூரப்பயணங்களை ஒரு சிலர் மேற்கொள்வர். சுற்றத்தாரின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் கொடுத்து உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களின் உதவியால் புது முயற்சி ஒன்று கை கூடும்.

மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள் மாறும். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வந்து சேரும். அஞ்சல் வழியில் வரும் செய்தி ஆச்சரியப்பட வைக்கும். எடுத்த முடிவை உடனுக்குடன் மாற்றும் சூழ்நிலைகூட ஒருசில சமயங்களில் உருவாகலாம். நடக்கும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை நாடிச் செல்வீர்கள். வீடு மாற்றங்கள் தானாகவே வந்து சேரலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

ஆறாமிடத்துக் குருவால் அற்புத பலன்கள் வந்து சேர திருவெண்காட்டிற்கு செல்லுங்கள். அங்குள்ள புதன் மற்றும் மேதா தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு, வரும் வழியில் இருக்கும் தென்குடிதிட்டையிலுள்ள குருவையும் புனர்பூசம் நட்சத்திரத்தன்று வழிபட்டு வந்தால் புதிய வாழ்க்கை மலரும்.

துலாம் ராசிப் பெண்களுக்கு வரவும் - செலவும் சமமாகும்!

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு உறவும், பகையும் மாறி மாறி வரும். உங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். குருவின் பார்வை தன ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும் பதிவதால், ஒரு பங்கு வரவு வந்தாலும், இருமடங்கு செலவாகலாம். அரசியல் மற்றும் பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. விருந்தினர் வருகை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வதே நல்லது. முறையான சர்ப்ப சாந்தி முன்னேற்றத்திற்கு வித்திடும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty விருச்சிகம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:14 am

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந. நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

செல்வாக்கு மேலோங்கும்! செல்வ நிலை உயர்வடையும்!

"வெற்றி'' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, வியக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!

விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான். விரைவில் வி.ஐ.பி. யாக மாறும் ராசிகளில் முதலாவது இடத்தை பிடிப்பது உங்கள் ராசி தான். உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி குதூகலத்தையும், கொண்டாட்டத்தையும் அதிகரித்துக்கொடுக்கும். மதிப்பையும், மரியாதையையும் மகத்தாக வழங்கும். செல்வத்தையும், செல்வாக்கையும் பெருக்கி கொடுக்கும். தேசத்தில் புகழ் பரவ வழி வகுக்கும்.

நவம்பர் 21-ம் தேதி முதல் நல்ல காரியங்கள் பலவும் உங்கள் இல்லத்தில் நடைபெறப் போகின்றன. வெல்லம் போல் பேசும் உங்களுக்கு வி.ஐ. பி.க்கள் வீடு தேடி வந்து உதவுவர். சொல்லை செயலாக்கிக் காட்ட குருவின் நேரடிப்பார்வை வழி வகுக்கும்.

உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து கொண்டு, அதன் பார்வையை மூன்று இடங்களில் செலுத்துகிறார். மூன்று இடங்களும் முத்தான இடங்களாகும். ஒன்று, ஒன்பது, பதினொன்று (1, 9, 11) ஆகிய இடங்கள் குரு பார்வையால் புனிதமடைகின்றன. எனவே, தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொகை வந்து கொண்டேயிருக்கும். வெற்றி தேவதை வீட்டில் குடியேறுவாள். சுற்றத்தார்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

வங்கிச் சேமிப்பு வரலாறு காணாத அளவு உயரும். வளர்ச்சிப்பாதை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியமும் சீராகி, ஆனந்தப்படுத்தும். பஞ்சம ஸ்தானத்தில் குரு பலம் பெறுவதால், அது குருவிற்கு சொந்த வீடாகவும் இருப்பதால், பூர்வ புண்ணியத்தால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் அள்ளி வழங்கப் போகிறார். பொதுவாக `அஞ்சும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பதால், ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குரு ஒளி மயமான எதிர் காலத்திற்கு உத்ரவாதம் கொடுக்க போகிறார். எனவே, அந்த குரு பெயர்ச்சியாவதற்கு முன்னதாகவே கும்பிட்டு கொண்டாடி வழிபட்டு வாருங்கள்.

சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்கும் இடம் ஆகியவற்றை ஆராய்ந்து அது தரும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந் தெடுத்து, அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் அமைத்து செயல்பட்டால் பண மழையில் நனையும் வாய்ப்பு கிட்டும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் ராசி புனிதமடைகிறது. மற்ற ராசிகளைக் குரு பார்ப்பதை விட உங்கள் ராசியை குரு பார்க்கும் போது தான் அதிக முக்கியத்துவம் கிடைக் கிறது. காரணம், தனாதிபதியாகவும், புத்திர ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் அல்லவா விளங்குகிறார்!

எனவே, ஆரோக்கியம் சீராகும். அடுக்கடுக்காய் நல்ல தகவல்கள்வந்து சேரும். சீராக தொழில்கள் அமைந்து செல்வநிலையை உயர்த்திக்கொடுக் கும். கார், வாகனங்கள் வந்து சேரும். கரும்பு போல் பேசும் வாழ்க்கைத்துணை வந்தமையும். போராட்டமான மணவாழ்க்கை மாறி இனி பூந்தோட்டமாக காட்சி அளிக்கப்போகிறது.

இந்த நேரத்தில் தேரேறி பவனி வரும் தெய்வங்களை நீங்கள் வழிபடுவதோடு, கூரான மதி வளத்தால் குமரனையும், குல தெய்வத்தையும் கும்பிட்டு வருவது நல்லது. ஆனை முகப்பெருமான் அருளோடு அருகில் இருக்கும் குரு தெட்சிணாமூர்த்தியையும், பிள்ளையார்பட்டிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். எல்லையில்லாத நற்பலன்கள் இல்லம் வந்து சேரும். பாவ ஸ்தானத்திலும், குரு பார்வை பதிவதால் கிளைத்தொழில் களும் தொடங்கி கீர்த்தியடைவீர்கள். வளைக்காப்பு வைபவங்களும் இல்லத்தில் நடைபெறும்.

மூளை பலமே மூல பலமாகக் கொண்டவர்கள்!

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சாதனை நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கும் விதத்தில் அமையும். காரணம், உங்கள் யோசனைகள் தான். ஆலோசனைகள் சொல்வதில் `அசகாய சூரர்கள்' என்று கூட உங்களைச் சொல்லலாம். விருச்சிக ராசி விருத்தி அம்சம் உங்கள் ராசி என்பதால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் தழைத்தோங்கும். உங்கள் கால்பட்ட இடமெல்லாம் கற்பக விருட்சமாய் வளரும்.

உங்கள் கண்பட்ட இடங்களும், கரம்பட்ட இடங்களும் பொன்னாய் குவியும். எனவே, வி.ஐ.பி.க்கள் பலரும் உங்களை தங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி வலியுறுத்துவர். சிபாரிசு இல்லாமலேயே பெரிய மனிதர்களைப் பார்த்து காரியத்தை முடித்துக்காட்டுவீர்கள். பேச்சாற்றலால் பிறரை ஆச்சரியப்பட வைப்பீர்கள். பெரும் ரசிகர் கூட்டம் உங்கள் பின்னால் இருக்கும்.

வாக்கு பலிதமும், கனவு பலிதமும் மிக்க உங்களுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது, கணப்பொருத்தம் முதல் கச்சிதமான பொருத்தங்கள் ஆறும் இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். எல்லோரும் நன்றாக வாழவேண்டுமென்று எண்ணும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எந்தெந்த வழிகளில் எல்லாம் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஐந்தினில் குருதான் வந்தால்
அனைத்திலும் வெற்றி கிட்டும்!
பைதனில் பணமும் சேரும்!
பாராளும் யோகம் வாய்க்கும்!
வையகம் போற்றும் வண்ணம்
வாழ்க்கையும் அமையும் உண்மை!
செய்தொழில் வளர்ச்சியாகும்!
செல்வாக்கும் அதிகரிக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு அனைத்து வழிகளிலும் வெற்றியைக் கொடுக்கப் போகிறார். அடிப்படை வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். கொற்றவர்களும், மற்றவர் களும் போற்றும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குருவின் பார்வை பதியும் இடங்களான 1, 9, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டுமோ அந்தந்த காரியங்கள் எல்லாம் வெகுசிறப்பாக நடைபெறும். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நிகழ்காலத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

குடும்பச் சுமை கூடும். தாய், தந்தை, பிள்ளை, மாமியார், மாமனார், மைத்துனர், கொழுந்தன், மைத்துனி போன்ற அத்தனை உறவுகளிலும் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். பகை விலகி, பாசம் கூடும். நகை என்றும், தொகை என்றும், கார் என்றும், நச்சரித்து வந்த உங்கள் மனைவிக்கும், மக்களுக்கும் உள்ளம் மகிழும் விதத்தில் இனி அவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள்.

குருவின் அருட்பார்வையால், தேடி வந்த சிக்கல்கள் எல்லாம் விலகும். கோடி கோடியாய் பணம் குவிக்க வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உற்சாகத்தோடு உல்லாச பயணங்களை மேற்கொள்வதைப் போல தினந்தோறும் பயணங்களை மேற்கொள்வீர்கள். இனி தினம் தினம் திருவிழா! என்று சொல்லும் அளவிற்கு நிகழ்ச்சிகள் அலைமோதப் போகின்றன.

குருவின் பார்வை பலம் ஒன்பதாமிடத்தில் பதிவதால், மண்ணைத்தொட்டாலும் பொன்னாகும் நேரமிது. என்ன நினைத்தாலும், அதைச் செய்ய இனி நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். கூட்டு முயற்சிகளை விட்டு இனி தனி முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓடி, ஓடி பணிபுரிந்தும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே, உட்கார்ந்து பேசிக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கெல்லாம் உயர்ந்த சம்பளம் கிடைக்கிறதே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இனி உங்களுக்கும் உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வழிச்சலுகைகள் அனைத்தும் கிடைக்கப் போகிறது.

குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம் தான். எதிர்பார்த்தைக் காட்டிலும், லாபம் தொழிலில் இரு மடங்காக வந்து சேரும். புதிய பங்குதாரர்கள் வந்துஇணைந்து பழைய தொழிலை தொடர்ந்து நடத்த ஒத்துழைப்பு கொடுப்பர்.

பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆர்வத்தோடு கட்டிடப்பணியைத் தொடர்வீர்கள். பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதன் மூலமும், பிரதோஷ நாளில் நந்தி வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதன் மூலமும், அபூர்வ பலன்களை அதிகம் பெறமுடியும், நல்லவர்களின் சிநேகத்தால் பல சுப காரியங்கள் நடைபெறும். அந்நியச் தேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் அதிகரிக்க இந்த குருவின் பார்வை பலம் உங்களுக்கு கைகொடுக்கப் போகிறது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

ஐந்தாமிடத்துக் குருவால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், வைரவன்பட்டி வைரவர், வளரொளி நாதர், வடிவுடையம்மன், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர், பெரியநாயகி அம்மன், மாப்பிள்ளை நந்தியையும் ஒரே நாளில் வழிபட்டு வாருங்கள். உன்னத வாழ்க்கை உங்களுக்கு வந்து சேரும்.

விருச்சிக ராசிப் பெண்களுக்கு வியக்கும் செய்திகள் வந்து சேரும்!

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி வாழ்வில் இனிமையை சேர்க்கும் விதத்தில் அமையப்போகிறது. மீன குருவின் பார்வை பலத்தால் வருமானம் பெருகும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கனிவு கூடும். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்கள் அணிய வாய்ப்பு கிட்டும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்க இல்லத்தார் முன்வருவர். ``முகராசி மிக்க மகராசி'' என்று ஊர் மக்கள் உங்களை பாராட்டுவர். ராகு-கேதுக்களுக்கு உரிய சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, நந்தி வழிபாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள். நல்லதே நடக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty தனுசு

Post by சிவா Tue Nov 16, 2010 5:15 am

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே உள்ளவர்களுக்கும்)

சுகங்களெல்லாம் தேடிவரும்! தொழில் தொடங்க வாய்ப்பு வரும்!

சந்திக்கும் மனிதர்களின் மூலம் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதனான குரு இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து, பிறகு நான்காமிடத்தில் சஞ்சரித்து, மீண்டும் மூன்றாமிடத்திற்கு வந்து சில நாட்கள் தங்கி இருந்து, இப்பொழுது நான்காமிடத்தில் முழு பலத்தோடு, நவம்பர் 21-ந் தேதி முதல் நல்ல விதமாக சஞ்சரிக்கப்போகிறார்.

இடம், பூமி, வாகனம், தாய், சுகம் என்று கருதப்படும் நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம குருவாக அமரப்போவதால், என்ன செய்வாரோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். கனமழை பொழியும் கார்த்திகை மாதத்தில் பெயர்ச்சியாகும் குரு, உங்களை பண மழையிலும் நனைய வைக்கலாம், பாச மழையிலும் நனைய வைக்கலாம். வந்திருக்கும் குருப்பெயர்ச்சியை நீங்கள் அவசியம் கொண்டாடி மகிழ வேண்டும்.

காரணம், உங்கள் ராசிநாதனாக குரு விளங்குகிறார். ராசிநாதனை திருப்திபடுத்தினால், நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கலாம். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வைப்பது குருவின் ஆதிக்கம்தான். அந்த குரு பலமிழந்திருக்கும் நேரத்தில் எந்தக்காரியத்தைச் செய்தாலும், அதில் இடைïறுகளே வந்து சேரும். நட்பு பகையாகும். நல்ல காரியங்கள் தள்ளிப்போகலாம். அந்தநிலை இனி மாறும்.

நவம்பரில் பலம் பெறும் குருவால் குழம்பிய உள்ளங்கள் எல்லாம் குதூகலமடையும். இளம் பருவத்தினருக்கு மணம் முடியும். இயல்பாக தொழில் செய்வோருக்கு வளம் பெருகும். அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு அதிக பொறுப்புகள் வந்து சேரும். ஆயினும், குரு வழிபாட்டை முறையாக நீங்கள் மேற்கொண்டு, அனுகூலம் தரும் ஆலயத்தையும் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லத்தில் அரங்கேறும்.

அத்தகைய குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. ஒன்று, நான்கிற்கு அதிபதியின் பார்வை, அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரய ஸ்தானத்தையும் பார்க்கும் பொழுது, ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர்கள் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கப்போகிறார் அல்லவா? குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு, பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இதுவரை நடைபெறாத சில காரியங்களை நடத்தி வைக்கப்போகிறது. ஆரோக் கியத்திற்காக இதுவரை செலவிட்ட அதிக தொகைகள் இனி குறையும். நிலையாக வருமானம் வர நிழலாக ஒரு தொழிலை கூட அமைத்துக் கொடுக்கலாம்.

சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இந்த குருவின் பார்வைக்கு உண்டு. விரய ஸ்தானத்தையும் இந்த குரு பார்ப்பதால், சுகங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும் சில விரயங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். குறிப்பாக, வாகனங்களை வாங்கி பயணம் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கும். விரதங்களையும், வழிபாடுகளையும் நீங்கள் முறையாக மேற்கொண்டால் வெற்றிப்படிக்கட்டின் விளிம்பில் ஏறலாம்.

லட்சியம் நிறைவேறும்வரை ஓய்வெடுக்காதவர்கள்!

குருவின் ஆதிக்கம் பெற்ற உங்கள் சொல்லுக்கு எப்பொழுதும் ஒரு தனி மதிப்பிருக்கும். நீதியை நிலைநாட்ட பாடுபடுவீர்கள். நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எளிய தோற்றத்துடன் காணப்படும் உங்களுக்குள் ஏதேனும் ஒரு லட்சியம் குடிகொண்டிருக்கும். அந்த லட்சியம் நிறைவேறும் வரை நீங்கள் ஓய்வெடுக்க மாட்டீர்கள்.

பிறரை நம்பி ஏமாறுபவர்களின் பட்டியலிலும் இடம் பிடிப்பீர்கள். உறவுக்கு கைகொடுக்கும் உங்களோடு பழகியவர்கள் கடைசி வரை உங்களை மறக்க மாட்டார்கள். இரவு, பகல் பாராது உழைப்பீர்கள். எதிர்காலத்தை வளப்படுத்த என்ன செய்யலாம் என்ற திட்டத்தை எப்பொழுதும் இதயத்தில் நினைத்துக் கொண்டேயிருப்பீர்கள். பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் ஒரு சில சமயங்களில் பேசி விடுவீர்கள். பிறகு ஏன் பேசினோம் என்று வருத்தப்படுவீர்கள்.

பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் உங்களுக்கு வாழ்க்கைத் துணை நல்ல விதமாக அமைய வேண்டுமானால், கூடுதல் பொருத்தம் தேவை. தக்க பொருத்தம் இருந்தால் தாரத்தால் யோகம் உண்டு. அரசியலிலும் மற்றும் அனைத்து துறைகளிலும் தலைமைப் பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள். உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

"நான்கினில் குருதான் வந்தால்
நடந்திடும் தொழில்கள் மாறும்!
வீண்பழி சிலருக்குச் சேரும்!
வியாதிகள் அகன்று ஓடும்!
தூணென தோள் கொடுத்தோர்,
தொடர்பிலே மாற்றம் காண்பார்,
வானவர்க்கு அரசை நீங்கள்
வழிபட்டால் நன்மை கூடும்!''

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் குரு அர்த்தாஷ்டமக் குருவாக அமைவதால், விழிப்புணர்ச்சியோடு செயல்படுவதன் மூலம் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். என்ன இருந்தாலும், உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களிலும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குரு பார்வைக்கு குழப்பங்களை அகற்றும் ஆற்றல் உண்டு. எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகி உள்ள குரு உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும். மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் இதுவரை குணமாகாத நோய்கள் இப்பொழுது குணமாகும். என்றாலும், சனியின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால், புதிய நோய்களும் உருவாகலாம். எனவே, நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் பொழுது நல்ல மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.

சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவு ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் கூட்டாளிகளால் ஏற்பட்ட கவலை அகல முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் ஊதிய உயர்வு, உத்யோக உயர்வு போன்றவைகள் தாமதப்படலாம். யோக பலம் பெற்ற நாளில் வழிபாடுகளைச் செய்தால் அதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாகி எதிர்ëëபார்ப்புகள் நிறைவேறும்.

குறிப்பாக, தொழில் ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், தொழில் வளர்ச்சி மேலோங்கும் என்றாலும், முழுமையாக மற்றவர்களை நம்பிச் செயல்படக் கூடாது. யாரைக் கூட்டு சேர்த்துக் கொண்டாலும், அவர்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்து அதில் தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? அந்த ஸ்தானாதிபதி, உங்கள் தொழில் ஸ்தானாதிபதிக்கு ஏற்றவராக இருக்கிறாரா? என்பதை பார்த்த பிறகே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான பதவிகளும் கிடைக்கும். தெய்வ பலம் உங்களுக்கு பின்னணியாக இருப்பதால், திடீரென வரும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். தந்தை வழியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் வழி உடல்நலத்திற்காக சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு. மண்ணை வாங்கலாமா? மனையை வாங்கலாமா? பொருளை வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். என்ன வாங்கினாலும் எதிர்காலத்தில் நலம் கிடைக்கும் என்பதால், விரய ஸ்தானத்தை குரு பார்க்கும் இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் கொடுக்கும். நிலையாக வங்கியில் வைத்த வைப்பு நிதியை எடுத்து வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள்.

பழுதடைந்த வாகனங்களை புதுப்பிப்பதும், வீட்டின் விஸ்தரிப்புக்கு செலவிடுவதும் இக்காலத்தில் உகந்ததாக அமையும். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பிள்ளைகளின் கடல் தாண்டும் முயற்சிகளுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஆன்மிக பயணங்களில் ஆர்வம் கூடும். தெசா புத்தி பலம் இழந்தவர்களுக்கு திடீரென இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

நான்காமிடத்துக் குருவால் நன்மைகள் வந்துசேர, மதுரை சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறைக்குச் செல்லுங்கள். அங்குள்ள திசைமாறிய தென்முக கடவுளை வழிபட்டு, எதிர்காலத்தை இனிமையாக்கி கொள்ளுங்கள்.

தனுசு ராசிப் பெண்களுக்கு தன்னம்பிக்கை தேவை!

தனுசு ராசியில் பிறந்ëத பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சியால் வரவும்- செலவும் சமமாகும். வசதிகளைப் பெருக்கிக் கொண்டாலும், நிம்மதி குறையலாம். அடிக்கடி ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். பக்கத்து வீட்டாருடன் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் சென்றால் மனநிம்மதியை வரவழைத்துக் கொள்ளலாம். தாய் வழி ஆதரவு கிடைக்கும். புகுந்த வீட்டில் உங்கள் கருத்துக்களை அதிகம் வலியுறுத்துவதன் மூலம் புதிய பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, சுய ஜாதகத்தில் தெசா புத்தி பலமறிந்து தெய்வ தரிசனங்களை மேற்கொள்ளுங்கள். தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty மகரம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:17 am

மகரம்

உத்ராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜீ, ஜி, ஜே, ஜோ, கா, க, கி உள்ளவர்களுக்கும்)

உடன்பிறப்பின் உதவி வரும்! உழைப்பிற்கு பலன் கிடைக்கும்!

சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற மகர ராசி நேயர்களே!

இது வரை கும்பத்திற்கும், மீனத்திற்குமாக உருட்டி விளையாடும் பந்து போல, சஞ்சரித்து வந்த குரு இப்பொழுது, முறையாக நவம்பர் 21-ம் தேதி மீன ராசிக்குச் செல்கிறது. வந்த குருவால் வளர்ச்சி எப்படியிருக்கும்? என்ற சிந்தனை, பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்கள் மனதில் இடம்பிடிக்கும். வாழ்க்கை சக்கரத்தை நாம் ஓட்டுவதற்கு வழிகாட்டும் நவக்கிரகங்களில் குரு ஒன்று தான் சுபகிரகமாகும்.

நல்லாரை காண்பதுவும் நன்றே! நல்லாரோடு இருப்பதுவும் நன்றே! என்று சான்றோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை நமக்கு அறி முகம் செய்து வைத்து, நல்ல வாய்ப்புகளை இல்லம் தேடி வரவழைத்துக் கொடுப்பது குருவின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது.

அந்த குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திற்கும், பன்னிரெண்டாமிடத்திற்கும் அதிபதியாவார். விரயாதிபதியின் ஆதிபத்தியத்தைப் பெற்ற குரு உங்கள் ராசியைப் பொறுத்த வரை- பலம் பெறும் பொழுது விரயத்தை அல்லவா? செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதே நேரத்தில் அந்த குரு உங்கள் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். எனவே, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதும் இந்த குருவின் கையில் தான் இருக்கிறது.

மொத்தத்தில் சொல்லப்போனால், இந்த குரு பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும். அதே நேரத்தில், அதைப்போல ஒருமடங்கு கூடுதலாக செலவையும் ஏற்படுத்தலாம். எனவே, தேவையான காரியங்களை தேவையான நேரத்தில் செய்து முடிக்க கற்றுக் கொள்ளுங்கள்.குறிப்பாக, வாகனம் பழுதாகி விட்டால், அதை சரிசெய்ய செலவு வருமே என்று நினைத்து, அப்படியே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்றிருக்க கூடாது. அதற்காக நீங்கள் செலவிட வேண்டிய தொகை, வேறு ஓரு ரூபத்தில் செலவாகி விடலாம். அதுவும் வாராத கடனாகவோ, வீண் விரயமாகவோ மாறலாம். எனவே, பொருளாதார நிலை உயரும் பொழுது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். வேண்டிய ஆடை, ஆபரணங்களை வாங்கி சேர்த்து கொள்ளுங்கள்.

குரு பார்க்கும் இடங்களாக கருதப்படும் 7, 9, 11, ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. களத்திர ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றில் குருவின் பார்வை பதிவதால், அந்தந்த இடங்களுக்குரிய முயற்சிகள் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

குரு உங்கள் ராசியை பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா? குருவின் 5, 7, 9, ஆகிய பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களையும் தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஜந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு- உங்களுடைய சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால், மூத்த சகோதரத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். அவர்கள் வழியே ஏற்படும் சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் உதவிக்கரம் நீட்டுவீர்கள். மூன்றில் இருக்கும் குரு சப்தம ஸ்தானத்தைப் பார்ப்பதால். உடன் பிறப்புகளின் திருமண முயற்சி வெற்றி பெறும்.

இல்லத்தில் சுபகாரிய பேச்சுக்கள் வந்து கொண்டேயிருக்கும். தொழில் கூட்டாளிகளாக கூடப்பிறந்தவர்களே மாறலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதன் மூலம் வியக்கும் அளவு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

தளராத மனதிற்கு சொந்தக்காரர்கள்!

மக்கள் உங்களை தளராத மனமும், தாராளக் குணமும் கொண்டவர்கள் என்று வர்ணிப்பர். ஆனால், சிக்கனத்தின் சிகரமாகவும் சில சமயங்களில் விளங்குவீர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை கேட்டுச் செய்வது உங்கள் பழக்கம். தோற்றத்தை வைத்து உங்களை எடைபோட முடியாது. நிதானத்தைக் கடைபிடிப்பதன் மூலமே நிம்மதியைக் காணலாம் என்றுரைப்பீர்கள்.

ராசிநாதனாக சனி விளங்குகிறார். எனவே, தாமத விவாகமே உங்கள் தாரதோஷ நிவர்த்திக்கு வழி வகுக் கிறது. தகுந்த வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்கிறது. பிடிவாத குணம் உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தான். மற்றவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து கேட்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள் உங்களைப் பற்றிய பிரச்சினைகளை ஒருவரிடமும் சொல்லமாட்டீர்கள். இப்படிபட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை வழங்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மூன்றினில் குருதான் வந்தால்,
முன்னேற்றம் அதிகரிக்கும்!
தூண்டிலில் கிடைத்த மீன்போல்,
தொகைவந்து சேரும் உண்மை!
வேண்டிய காரியங்கள்
விருப்பம் போல் நடப்பதற்கே,
வான்வெளி குருவை நீங்கள்
வணங்குவீர்! வியாழன் தோறும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, வழிபாடு உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும். எழிலான வாழ்க்கை அமைய இல்லத்தில் வியாழன்தோறும் விரதமிருப்பது நல்லது. அயல் நாட்டு அனுகூலம் கிட்டும். நீங்கள் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பர். தொழிலில் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குருவின் பார்வைதான் குழப்பங்களை அகற்றும். குதூகலத்தை வழங்கும். இழப்புகளை ஈடுசெய்யும். இனிய வாழ்க்கையை மலரச் செய்யும். அந்த பார்வை சகோதர ஸ்தானத்தில்இருந்து உங்களுக்கு கிடைக்கிறது. எனவே, சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பிறப்புகள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர்.

பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் பஞ்சாயத்துக்கள் பலமுறை வைத்தும், பங்கெடுத்துக் கொள்ளாத சகோதரர்கள் இப்பொழுது, முன்நின்று முறையாக பிரித்துக் கொடுப்பர். சென்ற சில வருடங்களாக சகோதர கூட்டில் இருந்த தொழில், சமரச பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இப்பொழுது தனித்தொழிலாக அமையும்.

குருவின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் வரன்கள் வாயில் தேடி வந்து கொண்டேயிருக்கும். வாழ்க்கைத்துணை வழியே வரவும் வந்து சேரும். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பெண்வழி ஒத்துழைப்புகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் திருப்திகரமாக அமையும்.

குருவின் பார்வை ஒன்பதில் பதிவதால், பெற்றோர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை வழியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிந்தை மயங்காமல் இனி சிரித்து மகிழ வாய்ப்பு கிட்டும். பங்காளிப் பகை மாறும்.அருளாலர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பொருள் வளத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.

மக்களிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வரும் நேரமிது. புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். பழைய சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அரை குறையாக இருந்த பணிகள் மீண்டும் தொடரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால், பணவரவு திருப்தி தரும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். பலஆண்டுகளாக வசூலாகாத பாக்கிகள் இப்பொழுது வசூலாகலாம். தேக நலன் சீராக அமையும். தெய்வ வழிபாடு உங்களுக்கு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

தொழில் தொடங்க போதுமான வசதியில்லையே என்று நினைத்தவர்களுக்கு அரசு வழி ஒத்துழைப்பும், அருகில் இருக்கும் வங்கியின் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். பங்குதாரர்கள் தானாக வந்திணைவர். ஆனால், விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால், ஜாதக பொருத்தம் பார்த்தே தொழில் பங்குதாரர்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது. ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொண்டால் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே அமையும். இந்த குருப்பெயர்ச்சியைப் பொருத்த வரை அது பார்வை பலத்தால் பலன் கொடுக்கும் பெயர்ச்சியாகவே அமைகிறது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

மூன்றாமிடத்து குருவால் முன்னேற்றங்கள் அதிகரிக்க காரைக்குடி அருகிலுள்ள கோவிலூருக்கு வாருங்கள். அங்குள்ள கொற்றவாளீஸ்வரர், திருநெல்லை அம்மன் மற்றும் குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

மகர ராசிப் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மனக்குழப்பங்களை அகற்றும் பெயர்ச்சியாக அமையப்போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, சிக்கனத்தைக் கடைப்பிடித்த நீங்கள் இனி தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். கல்யாண கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். கூடப்பிறந்தவர்களின் கோபம் நீங்கும். குரு உத்ரட்டாதி நட்சத்திர காலில் சஞ்சரிக்கும் பொழுது, ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது. கணவன் மனைவியரிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வெற்றியை வரவழைத்துக் கொள்ளலாம். கேது- ராகு ப்ரீதி செய்வதன் மூலம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty கும்பம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:18 am

கும்பம்


அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

தனவரவு திருப்தி தரும்! தன்னம்பிக்கை கூடி வரும்!

இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாக பாவிக்கும் கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு, இடையில் மீனத்திற்கு சென்று, மீண்டும் சில நாட்கள் உங்கள் ராசியில் சஞ்சரித்து, பிறகு இப்பொழுது தன ஸ்தானத்தில் தனது சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக்கிறது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், அதை சொந்த வீட்டில் இருந்து குரு பார்த்து பலன் கொடுக்க போவதால், இந்த குருப்பெயர்ச்சி துயரங்கள் அனைத்Ûயும் துள்ளியோட வைக்கப்போகிறது.

அயராது உழைத்த உழைப்பிற்கு அற்புத பலன் கிடைக்கப் போகிறது. ஆதாயமில்லாத அலைச்சல்களையும், ஆரோக்கிய பாதிப்புகளையும் இதுவரை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால், இனி அந்த நிலை மாறும். நல்ல சம்பவங்களை நாளும் சந்திக்க இந்த குரு வழிவகுக்கப் போகிறார்.``குழந்தையும், தெய்வமும் கொண்டாட, கொண்டாடத்தான்'' என்று சொல்வார்கள். நலம் தரும் விதத்தில் குருவை கொண்டாட வேண்டும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு வருவதால், குடும்பத்தினர்கள் அனைவரும் குருப்பெயர்ëச்சிக்கு முன்னதாகவே கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. அப்பொழுது தான் அது பார்க்கும் இடத்தால் பல மடங்கு பலன் கிடைக்கும்.

குறிப்பாக, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங் களில் பதிகிறது. எனவே, ருண ரோக ஸ்தானம், இழப்பு ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவை புனிதமடைகின்றன. எனவே, அந்தந்த இடங்களுக்குஉரிய காரியங்கள் அனைத்தும் இனிதாக நடைபெறத் தொடங்கும். சென்ற சில மாதங்களாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி அன்றாடப் பணிகளை உற்சாகத்தோடு செயல்பட தொடங்குவீர்கள்.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா? குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களையும் தன் பார்வை பலம் மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இனிய பலன்களை உங்களுக்குள் வழங்குவார் என்றாலும், இடையிடையே பார்க்கும் சனியால் எதிர்பார்த்த காரியங்களில் சில தடைகளும் ஏற்படலாம். எனவே சனீஸ்வர வழிபாடும் உங்களுக்குத் தேவை, குரு தெட்சிணாமூர்த்தி வழிபாடும் உங்களுக்குத் தேவை. குரு, பணவரவைக் கொடுக்கும் தன்மையுடையது. சனி அதைச் சந்தோஷமாக செலவிடும் விதத்தில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உருவாகலாம். எனவே நோய்க்கான அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

உதவும் மனப்பான்மையை உள்ளத்தில் பதித்தவர்கள்!

எல்லோரும் பதவிக்கு ஆசைப்படுவார்கள்! நீங்களோ `உதவி' செய்ய ஆசைப்படுவீர்கள்! உதவும் மனப்பான்மை உங்களிடம் இருப்பதால்தான் ஒவ்வொருவர் மனதிலும் இடம் பிடிக் கிறீர்கள். நாட்டுப்பற்று உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். நல்லவர்களோடு மட்டுமே சினேகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்கள்.

எந்தக் காரியத்தை எப்பொழுது செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள். வேடிக்கையாகப் பேசும் சுபாவம் உங்களுக்கு உண்டு. சொந்தக்காரியங்களை விட்டு விட்டு மற்றவர்களின் காரியங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள், தர்மசிந்தனை அதிகம் பெற்றவர். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாகச் சூரியன் அமைவதால் திருமணம் நடைபெறும் சமயத்தில் நல்ல பொருத்தம் பார்த்துத் தாரத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமே இல்லறத்தை இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

`உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வோம்' என்று சொல்வீர்கள். மற்றவர்களின் பார்வைக்கு ஆடம்பரமாகக் காட்சியளிப்பது உங்களுக்குப் பிடிக்காது. ராசிநாதன் சனியை `மந்தன்' என்று அழைப்பது வழக்கம். எனவே எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து நிம்மதியைத் தேடிக்கொள்வீர்கள். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்துக் கொடுக்காமல் ஓய்வெடுக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இரண்டினில் குருதான் வந்தால்
எதிர்பார்ப்பு வெற்றி யாகும்!
திரண்டதோர் செல்வம் சேரும்!
தித்திக்கும் தொழில்கள் வாய்க்கும்!
வறண்டதோர் வாழ்க்கை மாறும்!
வசதிகள் பெருகி நிற்கும்!
அருள்தரும் குருவின் ஆற்றல்
அகிலத்தில் புகழைச் சேர்க்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். எனவே, நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குரு பார்வை குழப்பத்தைப்போக்கி, குதூகலத்தை வழங்கும். எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகி உள்ள குரு, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். எனவே, கடன்சுமை குறைவது முதல், காரியங்களில் வெற்றி கிடைப்பது வரை குருவின் அருட் பார்வையால் கிடைக்கப்போகிறது. மூடிக் கிடந்த தொழிலில் கூட திறப்பு விழா காண்பீர்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் ஒவ்வொன்றாகத் தோன்றும்.

குறிப்பாக, எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, விரயம், தொழில் போன்ற ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அந்த இடங்களில் எல்லாம் இனி நல்ல பலன்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ளலாம். எனவே, எதிர்ப்புகள் விலகும். லாப நோக்கத்தோடு பழகியவர்கள் விலகுவர். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று கருத்துடையோர் மனம் மாற வழி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரலாம்.

சுய ஜாதகத்தில் தெசா புத்தி பலம் பெற்றவர்கள் வரும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் அஷ்டமத்துச் சனி விலகும் வரை பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இதுவரை ரண சிகிச்சை தான் செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் இனி சாதாரண மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலே, குணமாகும் என்று கூறுவர்.

இழப்புகள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டும் வாய்ப்பு கிட்டும். நீண்டதூரப் பயணங்களுக்காக எடுத்த முடிவை மாற்றிக் கொள்வீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். இடம், பூமிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்களை சரியாக பராமரிக்க முடியவில்லையே என்று அதை மற்றவர்களிடம் ஒப்படைத்தும், அவர் களும் சரியாக கவனிக்கவில்லையே என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும்.

அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். புதிதாக பழக்கமானவர்கள் மூலமாக, நீங்கள் யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்திருந்தால் அது வரவில்லையே என்று இதுவரை கவலைப்பட்டிருப்பீர்கள். பலமுறை நடையாய் நடந்தும் பாக்கியை வசூலிக்க முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். பாசம் காட்டாத நண்பர்கள் இனி பாசம் காட்டுவர்.

தொழில் வளர்ச்சி கூடும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொன்னான, எதிர்காலம் அமைய அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கிளைத்தொழில்கள் தொடங்க புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்யோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு, விரும்பியபடியே வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வர்.

தெசா புத்தி பலம் பெற்றவர்கள் உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை காண்பர். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பிரச்சினைக்குரிய இடத்தை பங்கிட்டுக் கொண்டு, வீடு கட்டும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

இரண்டாமிடத்து குருவால் இனிய பலன்கள் வந்து சேரவும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறவும், ஆலங்குடி குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். அருகிலுள்ள திருக்கருகாவூர், முல்லை வனநாதர், கர்ப்பரட்சகாம்பிகை மற்றும் குரு பகவானையும் வழிபட்டு மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கும்ப ராசிப் பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும்!

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி குடும்ப பிரச்சினைகளைக்கு தீர்வு காணும் விதத்தில் அமையப்போகிறது. வருமானம் திருப்தி தரும். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்ப ஸ்தானத்தில் குரு பலம் பெறுவதால், வாழ்க்கைத் துணை அமையாதவர்களுக்கு வாழ்க்கைத்துணை அமையும். வாரிசுகள் இல்லாதவர்களுக்கு வாரிசுகள் உருவாகும். உங்கள் பெயரிலேயே உங்கள் கணவர், இடம், வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்க முன்வருவார். அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுய ஜாதகத்தில் தெசா புத்தியின் பலம் அறிந்து பரிகாரங்களை செய்து பலன்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty மீனம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:19 am

மீனம்


பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

சிந்தித்தால் வெற்றி வரும்! சீக்கிரத்தில் மாற்றம் வரும்!

எல்லோரிடத்திலும் நல்லவர் என்று பெயர் எடுத்துக் கொள்ளும் மீன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதனான குரு இப்பொழுது உங்கள் ராசியிலேயே பலம் பெறப்போகிறார். நவம்பர் 21 முதல் குரு சஞ்சரிக்கப்போவதால், `நடுக்கமோ, கலக்கமோ' கொள்ள வேண்டாம். நாம் நமது வீட்டில் இருக்கும் பொழுது, சவுகரியமாக இருப்பதைப் போல, கிரகங்களும் அதனதன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, அந்தந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளி வழங்கும்.

அதிலும் குருவை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள், பூர்வ புண்ணியம் செய்தவர்கள். சொந்த வீட்டில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சுகங்களையும், சந்தோஷங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும். அதிலும் அவர் பத்தாமிடத்திற்கு அதிபதியாக அல்லவா? விளங்குகிறார். எனவே, முத்தான வாழ்க்கையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அகற்றும். முகமலர்ச்சியோடு செயல்படுவீர்கள்.

புத்தாடை, அணிகலன்கள் ஏராளமாக வந்து சேரும். புயல் வீசிய வாழ்க்கையில் இனி தென்றல் வீசும். மத்தளம், நாதஸ்வரம், முழங்கும் மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும். எத்தகைய நிலையில் இருந்தாலும், இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்துத் தராமல் போகாது.

நமது ஊருக்கு சான்றோர்கள், அமைச்சர்கள் வரும் பொழுது, வால்போஸ்டர் அடித்து வரவேற்புக் கொடுப்போம். நமது இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்தால், வாயிலில் நின்று வரவேற்பு கொடுப்போம். அதேபோல, உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கு வரும் பொழுதும் வரவேற்பு கொடுக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.54 மணிக்கு உங்கள் ராசிக்குள் குரு அடியெடுத்து வைக்க போவதால், அன்று மாலையே நீங்கள் ஆலயத்திற்குச் சென்று சுண்டல் நைவேத்யம் செய்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து முல்லைப் பூ மாலை சூட்டி, அபிஷேக ஆராதனைகள் செய்து, சந்நிதியில் குரு கவசம் பாடி, கொண்டாடி மகிழுங்கள். குரு பார்வை உங்கள் மீது பதிந்தால் குருவருளோடு, திருவருளும் கிடைக்கும். சிறப்பான வாழ்க்கையும்

அமையும்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை. ஆனால், குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறது. அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அதன் பார்வை பதியும் இடங் களெல்லாம் புனிதமடையும் அல்லவா. அது ஜென்ம ராசியில் இருந்து கொண்டு பார்ப்பதால் உங்கள் ராசிக்கே முழுப் பலனும் கிடைக்கப் போகிறது.

சுமார் 51/2 மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு திடீர் வீடு மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றங்களை ஒரு சிலருக்குக் கொடுக்கலாம். வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்வது நன்மைதான். என்றாலும், மீண்டும் மறு மாற்றங்கள் மேஷத்திற்கு வரும் பொழுது ஏற்படலாம்.

எனவே தெசாபுத்தியின் பலமறிந்து வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும் விரய வியாழன் மாறியதால் விரயங்கள் குறையும். வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும். அரை, குறையாக நின்ற பணிகளைத் தொடர்வீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உல்லாசப்பயணங்கள் அதிகரிக்கும். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கையும் கூடும். நல்லவர்களின் தொடர்பால் தொழில் வளர்ச்சி காண்பீர்கள்.

போய்ச் சேர்ந்த இடத்திற்கு நன்மை!

எந்தக் காரியத்தையும் நீங்கள் யோசித்துச் செய்வதால் தான் யோகங்கள் வந்து சேர்கின்றன. உங்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளப் பலரும் முன்வருவர். பார்ப்ப

தற்கு சாதுவாக இருக்கும் நீங்கள் சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. என்றாலும், உறவினர்களை நம்பி ஒரு சில சமயங்களில் ஏமாந்து விட்டு, `மாட்டிக் கொண்டு விட்டோமே' என்று பிறகு கவலைப்படுவீர்கள். தேக நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தெய்வத் திருப்பணிகளுக்கு நன்றாகச் செலவிடுவீர்கள்.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஒரு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களிடம் உங்கள் ரகசியங்கள் அனைத்தையும் சொல்லி விடுவீர்கள். வாழ்வின் ஒவ்வொரு அங்குலம் முன்னேறும் பொழுதும், அனைத்தும் இறையருளால்தான் என்பதை மற்றவர்

களுக்கு எடுத்துரைப்பீர்கள். உங்கள் ராசிநாதனுக்குச் சுக்ரன் பகைவன் என்பதால், குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாகவே இருக்கும். திருமணப்பொருத்தம் தித்திப்பாத இருந்தால் தான் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். மற்ற ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு நல்ல பலன்களை வழங்காது. ஆனால் உங்கள் ராசிக்கும், விருச்சிக ராசிக்கும் மட்டும் ஜென்ம குரு சிறப்புகளை வழங்கும்.

ஜென்மத்தில் குருதான் வந்தால்
சிறப்பான வாழ்க்கை சேரும்!
பொன் பொருள் வந்து கூடும்!
புகழும் தான் அதிகரிக்கும்!
இன்பத்தைக் குடும்பத்தார்கள்
இயல்பாகப் பகிர்ந்து கொள்வார்!
அன்போடு குருவைப் பார்க்க
ஆலயம் நோக்கிச் செல்வீர்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஜென்ம குரு உங்களைப் பொறுத்தவரை சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். செல்வ நிலையும் உயர்த்திக்காட்டும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

`குரு பார்க்க கோடி நன்மை' என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப் படையில் குரு உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். குறிப்பாக பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவை எல்லாம் இந்த 51/2 மாதத்தில் கிடைக்கப்போகிறது.

மக்கள் போற்றும் அளவிற்கு செல்வாக்கும், மகத்தான பதவி வாய்ப்புகளும் கூட ஒருசிலருக்கு கிடைக்கலாம். குறிப்பாக முன்னோர் சொத்துக்களில் முறையான பலன்கள் கிடைக்கும். பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகும். பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கை

கூடும். அவர்களுக்கு தகுந்த வேலைகிடைத்து வரும் வருமானத்தை உங்களுக்கு உதிரி வருமானமாகக் கொண்டு வந்து கொடுப்பர்.

உங்கள் குணமறிந்து குழந்தைகள் நடக்கவில்லையே என்ற கவலை இனி மாறும். அவைகள் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு உங்கள் நோக்கத்திற்காக தங்கள் கீழ்படிந்து நடப்பதாக ஒப்புக் கொள்வர். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாகும். சப்தம பார்வையாக குரு பார்ப்பதால் சுபகாரியங்கள் இக்காலத்தில் ஏராளமாக நடைபெறும். கல்யாணங்கள் மட்டுமில்லாமல் பவள விழா, முத்து விழா, மணி விழா போன்ற மகத்தான விழாக்களையும், பெண்களின் பூப்புனித நீராட்டு விழாக்களையும் கண்டு மகிழ்வீர்கள்.

இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குண்டுமணி அளவு கூடத் தங்கம் இல்லையே, குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் தொகைகள் வந்து ஆபரணங்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

எதிரிகள் விலகி உதிரிகளாவர். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பொது நலத்தில் ஈடுபட்டு இருப்பவர் களுக்குப் புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும். அருளாளர்களின் ஆலோசனைகளை அடிக்கடி கேட்டு நடந்து கொண்டால் பொருள்வளம் பெருக வழி பிறக்கும். பொன்னான எதிர்காலமும் உருவாகும். மண், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உடன்பிறப்புகள் முதல் உறவினர் வரை பகையாக இருந்தவர்கள் இனிப் பாசம் காட்டுவர்.

ஒன்பதாம் இடத்தைக் குரு பார்ப்பதால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். ஆன்மிகத்திற்காக அதிகத் தொகையைச் செலவிடுவீர்கள். தந்தை வழி ஆதரவு பெருகும். பங்காளிகளின் பகை மாறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஈர மனம் கொண்ட பலர் உங்களுக்கு உதவக் காத்திருப்பர். அயல்நாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.

புதிய வாகன யோகமும், பயணங்களால் பலனும் கிடைக்கும் நேரமிது. ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன்கருதிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். வளர்ச்சி அதிகரிக்க சிறப்பு வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்வது நல்லது. சிவகங்கை மாவட்டம் இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவி சந்நிதிக்கு உத்திரட்டாதி அன்று சென்று வந்தால் உன்னதமான வாழ்க்கை அமையும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

சிறப்பான வாழ்க்கை அமைய திருச்செந்தூருக்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானையும், மேதா தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்.

மீன ராசிப் பெண்களுக்கு மிகப்பெரிய மாற்றம் வரும்!

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரப்போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் சீராக்கிக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியரிடையே கனிவு கூடும். வாரிசுகள் உருவாகும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்குவர். சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால் சந்தோஷம் வந்து சேரும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87178
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by T.N.Balasubramanian Tue Nov 16, 2010 7:37 am

கடைத் தேடி பெற நினைத்த புத்தகம்,
எமைத் தேடி வந்ததே!

நன்றி,சிவா! அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29976
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10684

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by சாந்தன் Tue Nov 16, 2010 8:27 am

மேஷமும் , ரிஷபமும் அருமையாக உள்ளது ....
பாலா ஐயா சொன்னது போல கடைக்கு போய் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா .....

உண்மையிலேயே இதிலே சொன்ன மாதிரி நடக்குமா ????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை