புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
32 Posts - 82%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
5 Posts - 13%
viyasan
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
209 Posts - 41%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:22

சிவகங்கை மாவட்டச் செய்திகள் -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)



சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:22


இலவச கண் பரிசோதனை முகாம்

காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் காரைக்குடி வாசன் கண் மருத்துவமனை, இந்திரா பல் மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் ஆகியோரது சார்பில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமை கொரட்டி ஊராட்சித் தலைவர் சாந்தகுமாரி துவக்கிவைத்தார். அரிமா சங்கத் தலைவர் சிடி. ராயப்பன் தலைமை வகித்தார். வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் பல் மருத்துவர் டாக்டர் கே. கிருஷ்ணகுமார் ஆகியோர் முகாமில் பரிசோதனை செய்தனர். கொரட்டி கிராம மக்கள் பலரும் முகாமில் கலந்து கொண்டனர்.

முகாமில் வாசன் கண் மருத்துவமனை மேலாளர் பாஸ்கர், அரிமா சங்கத்தைச் சேர்ந்த முத்தையா, சேவுகன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் மற்றும் அரிமா சங்க மாவட்டத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முடிவில் வாசன் கண் மருத்துவமனை அதிகாரி ஸ்ரீநிவாசன் நன்றி கூறினார்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:22


இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி சாவு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். இளையான்குடி அருகே உள்ள உதயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து மனைவி வீரி (70). இவர் தனது கிராமத்திலுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் தாக்கியதில் வீரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலைக்கிராமம் போலீஸார் இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:23


சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 ல் பிறந்தவர் கவியரசர் எனப் பெயர் பெற்ற கண்ணதாசன். சிறுகூடல்பட்டி மலையரசி கோயிலில் கவிதைகளை வடித்து கண்ணதாசன் ஆனவர். இவரது 33 வது நினைவுநாள் விழா வெள்ளிக்கிழமை சிறுகூடல்பட்டியில் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன், தலைமை வகித்து கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் வட்டாரத் தலைவர் செல்வமணி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எம்.மாணிக்கம், லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின், கீழச்சிவல்பட்டி ஊராட்சித் தலைவர் அழகுமணிகண்டன், இலக்கியப் பேரவை நிர்வாகி சுப.விஸ்வநாதன், சுப.சீனிவாசன், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் கவிதைக்கு ராஜா என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட கண்ணதாசன் இலக்கிய பேரவை உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:23

பராமரிக்கப்படாத அரசு பஸ்கள்: நடுரோட்டில் நிற்பதால் அவதி

திருப்புவனம்:அரசு பஸ்கள் சரிவர பராமரிக்கப்படாமல் நடுவழியில் பழுதாகி நிற்பது அன்றாட காட்சியாகி வருகிறது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

மதுரையில் இருந்து ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, ஆர்.எஸ்.,மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாயின்ட் டூ பாயின்ட், பிபி, ஒன்டூத்ரீ, ஒன் டூ ஒன் என பல்வேறு பெயர்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் திருப்புவனம் கிளை பணிமனையில் இருந்து 42 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம்,கமுதி,சிவகங்கை , முதுகுளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் பஸ்களை பழுது பார்ப்பதற்காக பணிமனைகள் உள்ளன. ஆனால் பஸ்களின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை செல்லும் பஸ்களை பகல் நேரங்களில் மதுரை - பரமக்குடி இடையே லோக்கல் பஸ்களாக இயக்குகின்றனர். இதனால் பஸ்களை பராமரிக்க முடிவதில்லை என்கின்றனர் பணிமனை ஊழியர்கள் .

மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் குறைந்தபட்சம் இரண்டு பஸ்களாவது பழுதாகி பயணிகளை பரிதவிக்க விடுவது வாடிக்கையாகி வருகிறது.

பஸ்கள் அடிக்கடி பழுதாவது குறித்து போக்குவரத்து கழக ஊழியரிடம் கேட்டபோது: பணிமனைகளில் போதுமான உதிரி பாகங்கள் இல்லை. பஸ்கள் குறிப்பிட்ட தூரம் ஓடியதும் அவற்றை பணிமனையில் சரி பார்க்க வேண்டும். அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் .ஆனால் பணிமனைகளில் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை.

பழுதுபார்க்க ஊழியர்கள் இருந்தாலும் உதிரி பாகங்கள் இல்லாததால் இருப்பதை வைத்து ஓட்டுமாறு ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.


டீசல் சிக்கனம் வேண்டும் என்று கூறி தொலைதூர பஸ்களை கூட ஒரே சீராக ஓட்டுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களாக இருந்தாலும் பயண நேரம் கூடுதலாக இருப்பதால் பயணிகள் தனியார் பஸ்களையே நாடுகின்றனர் என்றார்.

மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் ஒரு பணிமனையை சேர்ந்த நான்கு பஸ்கள் வரிசையாக சென்றால் அவற்றில் ஏதாவது ஒரு பஸ்சில் மட்டுமே டயரை மாற்ற ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி வைத்துள்ளனர். அந்த குறிப்பிட்ட பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அரசுப்போக்குவரத்து கழகங்கள் அனைத்த பஸ்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:24

பெண் போலீசை தாக்கி தாலி செயின் பறிப்பு

காளையார்கோவில்:காளையார்கோவில்-மறவமங்கலம் ரோட்டில் பாஸ்டீன் நகர் அருகே நேற்று மாலை 5.30 மணிக்கு டூவீலரில் சென்ற ஒரு பெண்ணை வழிமறித்து தாக்கிய இருவர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்து தப்பினர். போலீஸ் விசாரணையில், செயினை பறி கொடுத்த பெண் ஆண்டூரணியை சேர்ந்தவர் என்றும், தேவகோட்டையில் போலீசாக பணிபுரிவதாக தெரியவந்தது. பிரசவத்திற்காக 6 மாத விடுமுறையில் உள்ளார். நேற்று மாலை வீட்டுக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு டூவீலரில் திரும்பியபோது, அவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. அவரது டூவீலரில் போலீஸ் என, "ஸ்டிக்கர்' ஒட்டியிருந்தும், திருடர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டியது போலீசாருக்கே சவால் விடும் அளவில் உள்ளது. நேற்றிரவு 7 மணி வரை அந்த பெண் போலீசில் புகார் தரவில்லை.* காரைக்குடி கழனிவாசல் பாண்டியன் நகர் 4வதுவீதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி,35. இவர் நேற்று முன்தினம் மாலை தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளார். அதே தெருவில் செல்லும் போது, டூவீலரில் வந்த இருவர், அவரை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் விசாரித்து வருகிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:29

தென்னீர்வயலில் கோயிலில் உண்டியலை உடைத்து பல லட்சம் கொள்ளை.

தென்னீர்வயலில் கண்மாய் கரையோரம் காஞ்சரங்காளி அம்மன் கோயில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுமார் நான்கு அடி உயரம், மூன்றடுக்கு பூட்டு உள்ள பெரிய பெட்டக உண்டியல் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்,வெள்ளி திறக்கப்பட்டு பூஜை நடக்கும்.

வழக்கம்போல் நேற்று வெள்ளி அதிகாலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் பெட்டக கதவு அறுக்கப்பட்டு .சில நூறு ரூபாய் நோட்டுக்கள், சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர்.

இதிலிருந்து பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கிராமத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிராமத்தினர் கூறுகையில், உண்டியல் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருப்பதால், பக்தர்கள் செலுத்திய பணம், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கொள்ளை போயிருக்கலாம் என தெரிவித்தனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:30

ரேஷனில் உளுந்து இல்லையா? பெண் விற்பனையாளருக்கு "பளார்'

சிவகங்கை:சிவகங்கையில் ரேஷன் கடையில் உளுந்து இருப்பு இல்லை எனக்,கூறிய பெண் ஊழியரை கன்னத்தில் "பளார்' விட்ட பெண் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகிலுள்ளது வண்டவாசி. இங்குள்ள ரேஷன் கடையில் சிவகங்கையைச் சேர்ந்த அனிதா, 28 "சேல்ஸ்' மேனாக பணிபுரிகிறார். 2 மாதத்திற்கு முன்பு தான் இவர் பணியில் சேர்ந்துள்ளார். வல்லன்னியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

அவர் உளுந்து கேட்டுள்ளார். அப்போது, இருப்பு இல்லை என,"சேல்ஸ்மேன்' கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த அப்பெண் கடைக்குள் புகுந்து அனிதாவின் கன்னத்தில் "பளார்' என, அறைந்து விட்டு தப்பினார்.

இது குறித்து, அனிதா சிவகங்கை டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அனிதா, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவரின் உறவினராகும். போலீசார் கூறுகையில், ""அனிதாவை கன்னத்தில் அறைந்த பெண், கடந்த வாரம் மகனை ரேஷன் கடைக்கு அனுப்பிய போதும், உளுந்து "ஸ்டாக்' இல்லை என, அனுப்பியதாகவும், தீபாவளி நேரத்திலும் கார்டுக்குரிய உளுந்து, இருப்பு இல்லை என, கூறியதாலும் ஆத்திரத்தில் அனிதாவை தாக்கியதாக தெரிகிறது. ஆனாலும், உண்மை சம்பவம் குறித்து விசாரிக்கிறோம்,'' என்றனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:32

முதல்–அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உருவப்படத்தை வைக்க வேண்டும் காரைக்குடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.கவுன்சிலர் வலியுறுத்தல்

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் முதல்– அமைச்சர் பன்னீர் செல்வம் படத்தை வைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வலி யுறுத்தினார்.

நகராட்சி கூட்டம்

காரைக்குடி நகராட்சி கூட் டம் அதன் தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு:–

தலைவர்:– ஏழை–எளிய மக் களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதா விரைவில் தமிழ கம் திரும்பி மீண்டும் மக்கள் நலத்திட்டங்களை தொடரு வார். மெய்யர் (காங்):– சபையில் உள்ள முன்னாள் முதல்– அமைச்சர் படத்தினை அகற்றி விட்டு கூட்டத்தினை நடத்துங் கள்.

அன்பழகன்(தி.மு.க.):– முன்னாள் முதல்–அமைச்சர் படத்தை அகற்றுங்கள் இல்லையேல் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய முன்னாள் முதல்– அமைச்சர்களின் படத் தினையும் கூட்ட அரங்கில் வையுங்கள். இந்நாள் முதல்– அமைச்சர் ஓ.பி.பன்னீர் செல் வம் படத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

தலைவர்:–அரசிடமிருந்து முறையான உத்தரவும், வழி காட்டுதலும் வந்தபின் தேவை யான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

சுகாதார சீர்கேடு

ஆறுமுகம்(சுயே):– பாதாள சாக்கடைத் திட்டம் என்ன ஆனது. அடுக்குமாடி குடியி ருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்ல போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. இத னால் சுகாதார சீர்கேடு ஏற்ப டுகிறது. தடை செய்யப் பட்ட பாலிதீன் பொருட்கள் மீண் டும் பெருமளவில் உப யோகத் திற்கு வந்து விட்டன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் முறைகேடாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப் படுகின் றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:– பாதாள சாக் கடைத் திட்டம் டெண்டர் விடும் அளவிற்கு வந்து விட் டது. அரசு உத்தரவிற்காக காத்துள்ளோம். விரைவில் பணி தொடங்கும். சுகாதாரச் சீர்கேட்டிற்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சம்பந்தப்பட்ட வர் களுக்கு நோட்டீசு அனுப்பப் பட்டுள்ளது. பேருந்து நிலை யத்தில் சைக்கிள் நிறுத்து வதற் கான கட்டணம் வசூலிப் பது குறித்து கண்காணித்துதக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

ஆக்கிரமிப்பு

அங்குராஜ் (அ.தி.மு.க.):– தீபாவளி நேரத்தில் சாலை யோர சிறுவியாபாரிகளுக்கு கடை நடத்திக்கொள்ள அனு மதிக்க வேண்டும். அவைகளை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அப்புறப்படுத்தக்கூடாது.

தலைவர்:– சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ளப் படும்.

பா.காளிதாசன் (அ.தி. மு.க.):– பலகோடி ரூபாய் மதிப் பிலான நகராட்சியின் இடங்களை பலர் ஆக்கிர மித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக் களை மீட்க வேண்டும்.

தலைவர்:– ஆதாரங்களோடு கூறினால் உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும். பருவ மழை தொடங்கி விட்டது. எனவே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை உறுப்பினர் கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்து. பின்னர் கொண் டுவரப்பட்ட 143 தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Oct 2014 - 2:32

திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராஜாராமன் பேச்சு

கிராமசபை கூட்டம்

சிவகங்கையை அடுத்த கூத்தாண்டன் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி கலெக்டர் ராஜாராமன் பேசியதாவது:-

காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கூட்டம் சரஸ்வதிபூஜைகாரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. தற்போது, மழைக்காலம் தொடங்க உள் ளதால் கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவுவதை தவிர்க்க பொதுமக்கள் வீடுகளில் பாத்திரங்களில் சேமிக்கும் தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்.

சுற்றுப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதவிர அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். இதனால் நிலத்தடி நீர்ஆதாரம் பெருகுவதுடன் தண்ணீரின் உப்புத்தன்மையும் மாறும் வாய்ப்புள்ளது.

சுயதொழில்

மேலும் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த பிளாஸ்டிக் உப யோகத்தை தவிர்த்திட வேண் டும்.அத்துடன் திறந்தவெளி களில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சுயதொழில் தொடங்கி வாழ் வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக