புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_lcapபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_voting_barபாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 13, 2023 2:08 pm

First topic message reminder :

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 Coq37Nv

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (1)
                                                                     - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

    #பாலி (Pali) – என்றதும்  ‘நமக்குத் தொடர்பில்லாதது’ என்றே தமிழர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள்! இந்த நினைப்பை முதலில் மாற்றவேண்டும்! இதற்கான ஒரு முயற்சியே இப் பதிவு!

   பாலி மொழிக்கு என்று தனி #எழுத்துமுறை (script) இல்லை . பாலி நூற்களிற் காணலாகும் மிகத் தொன்மையான எழுத்துமுறை யாதென்றால், #தமிழர்தம் #பிராமிதான்!

     கீழ்வரும் பாலிச் சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவாருங்கள்:-

1 .  அக்கி  (பாலி)
அக்கினி என்பது பொருள்.
‘அக்கினிச் சட்டி எடுத்து ஆடுதல்’ நாம் அறிந்ததுதானே?

2 . அங்குசகா  (பாலி)
நம்மூர் யானைப் பாகன் கையில் கொண்டிருக்கும் அங்குசம்தான் இது!

3. அங்காரகன்    (பாலி)
நம் தமிழ்ச் சோதிடர்கள் கூறும் அதே ‘அங்காரகன்’தான்! செவ்வாய்க் கிரகத்தைக் குறிக்கும்.

4. அங்குட்டா  (பாலி)
‘அங்குஷ்டம்’ எனப் பழைய தமிழ் நூற்களில் வருவதுதான்; ‘கட்டை விரல்’ என்பது பொருள் .
மற்ற விரல்களைவிடப்  பார்வைக்குக்  குட்டையாக இருப்பது கட்டை விரல். ஆகவே இதன் அடிப்படையில்,  ‘குட்டை’ என்பது, ‘குட்டா’ எனப் பாலியிற் பயின்றுள்ளது; அவ்வளவுதான்! முன்னே உள்ள ‘அம்’ , முன்னொட்டு.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது #முன்னொட்டு, #பின்னொட்டுகள் (prefix and suffixes) சேர்வது ஒரு  #மொழியியல் (Linguistics ) இயல்பு.
இப் பாலி ஆய்வால் நாம் அறிவது யாதென்றால், ‘அங்குஷ்டம்’ என்ற சொல்லுக்கு முன்னே தோன்றியது, ‘அங்குட்டம்’ எனும் தமிழ்ச் சொல்; ‘அங்குட்டம்’ என்பதனை வேறுவிதமாக உச்சரிக்க விழைந்த தமிழர்கள் ‘ஷ்’ சேர்த்து, ‘அங்குஷ்டம்’ எனலாயினர்!

5. அங்குலா (பாலி)
‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது!’ – சொல்கிறார்கள் அல்லவா? அதே ‘அங்குலம்’தான் , பாலியில் ’அங்குலா’!
நல்லவேளை , நம்மவர்கள் ‘அங்குஷ்லா’ என்றொரு சொல்லை உருவாக்கவில்லை!
இப்போதைக்கு , #ஈறுகளின் #மாற்றத்தை மட்டும் கவனியுங்கள்! தமிழின் #‘அம்’ #ஈறு, பாலியில் #‘ஆ’ #ஈறாகத் திரிந்துள்ளது! அவ்வளவுதான்!

6 . அஞ்னானா (பாலி)
‘அஞ்ஞானம்’ என்று நாமறிந்த சொல்தான் இது!
#‘அ’ #முன்னொட்டால் #எதிர்மறைப் #பொருள் #தமிழில் #ஏற்படும்!
சட்டைசெய் – உடன்பாட்டுச் சொல்
அசட்டைசெய் – எதிர்மறைச் சொல்
ஆகவே , ‘அ’ எனும் தமிழ் வேர்ச்சொல் தமிழுக்கும் பாலிக்கும் ஒன்றுதான்!

7 . அஞ்ஞானின் (பாலி)
ஞானி – உடன்பாட்டுச் சொல்
அஞ்ஞானி – எதிர்மறைச் சொல்
ஞானமற்றவன் , அஞ்ஞானி.
சற்றுமுன் சொன்னதுபோல, இங்கும் ‘அ’ முன்னொட்டு எதிமறைப் பொருளைத் தமிழில்  தந்துள்ளதைக் கவனிக்க!

8. அடவி  (பாலி)
காடு எனும் பொருள் தரும் அருமையான தமிழ்ச்சொல் ‘அடவி’!
தமிழ்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
இங்கு நான் ஒன்றை உங்களுக்குக் கூறவேண்டும்!
பாலிச் சொற்களை ஆய்ந்தவர்கள், ‘இப் பாலிச்சொல்லுக்கு மூலம் சமஸ்கிருதமா ? இலத்தீனா? கிரேக்கமா?’ என்றெல்லாம் , பல சொற்களுக்கு , ஆய்வை ஓட்டியுள்ளார்களே தவிர ஒரு இடத்திற்கூட  ’தமிழிலிருந்து வந்திருக்குமா?’ என்று பார்க்கவே இல்லை! பாலி ஆய்வாளர்களுக்குத் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதமாதிரித்தான் உள்ளது! தமிழை உலகளாவிய நிலையில்  நாம் எடுத்துச் செல்லவில்லை என்பதை இது தெரிவிக்கிறது!  ‘அவர் ஜெர்மனியில் வேலை செய்தவர்; இவர் கனடாவில் வேலை செய்தவர்’ என்று சில தமிழர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்! ஆனால் , அவர்கள் வெகு கமுக்கமாக இருந்து, எங்கே, தமிழ் தொடர்பாக என்ன வேலை செய்கிறோம் என இங்கு மூச்சு விடமாட்டார்கள்! தமிழை உலகளாவிய நிலைக்கு நாம் எடுத்துச்சென்ற இலட்சணம் இதுதான்!

9 . அட்டா  (பாலி)
பரண் என்பது பொருள்.
‘தலையணை பாயை அட்டாலையில் போட்டியா?’ – சிற்றூர்களிற் பாட்டி இரைவாள்!
‘அட்டாலைப் பலகை’ என்பதும் இதுவே.
சதுர அல்லது செவ்வக வடிவில் , சட்டங்களால் அமைக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிற்றால் கட்டி உயரமாகத் தூக்கிக் கட்டியிருப்பர்; இதுவே  #‘அட்டாலை’. பாலி மொழி தமிழகத்தில் அறியப்பட்ட  காலத்தில் , தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

10 . அன்னா (பாலி)
அன்னம் – சோறு
தமிழ் ’அன்னம்’தான் , பாலி ‘அன்னா’! ‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே’ – தமிழ்ப் பழமொழி.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் மாறும் வகையைப் பார்த்துக்கொண்டே வாருங்கள்.

(கருவி நூல் :  Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:02 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (16)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
-
151 . சக்கா (பாலி)
சக்கா - சக்கரம்
நேராகச் செல்லாமல் , சறுக்கலாகச் (வட்டமாக) செல்வதால், ‘ச’ எனும் வேர் அடியாகச் ‘சக்கரம்’ என்ற தமிழ்ச் சொல் தமிழில் வந்தது.
சக்கரம் + ஆயுதம் = சக்கராயுதம்
ஆம்! ‘சக்கராயுதம்’ தமிழகத்தே பயன்பாட்டில் இருந்துள்ளது. குறுக்கு ஆரம் இல்லாமல் கல்லாலான வட்டைத்தான் ‘சக்கராயுதம்’ எனத் தமிழர்கள் அழைத்தனர். தமிழகத் தொல்லியல் துறையின் தொகுப்பில் இதுவும் ஒன்று. ஆனால் யாரும் அதுதான் சக்கராயுதம் என அப்போது அறியவில்லை. இன்றுதான் முதன் முதலாக என்னால் குறிப்பிடப்படுகிறது.
நான் செய்துள்ள பல்வேறு புராண ஆய்வுகளைச் ‘சரி’ எனச் சொல்வது இந்த ஆய்வு.

152. சபு (பாலி)
சபு – சப்பு (sucking)
’ சிறுவன் லாலிப்பாப்பைச் சப்பிக்கொண்டிருக்கிறான்’- வழக்கு.
ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் போகும்போது , அடிப்படைச் சுவைகள் பற்றிய சொற்களைப் போலவே , சுவைக்கும் செயற்பாடுகள் பற்றிய சொற்களும் மாறுவதில்லை என்பது ஓர் மொழியியல் உண்மை.

153 . சாமரா (பாலி)
சாமரா – சாமரம் (chowri)
‘சாமரம்’ என்ற தமிழ்ச் சொல்லைச் #சூடாமணி நிகண்டு குறிக்கிறது.
சாமரம் , ‘கவரிமான்’ உடல் மயிரால் செய்யப்படுவது என்பர். ஆனால் , ஆங்கில உரையில், ‘யாக்’ எருமை மயிரால் செய்ததாகவே உள்ளது; எது சரி?
எந்த மானுக்கும் வளர்ந்து தொங்கும் மயிர் இல்லை.
எங்கே பிழை நடந்துள்ளது?
‘மா’வை ‘மான்’ என்று படித்த #‘சுவடிப்பிழை’ ! அவ்வளவுதான். இது பற்றிய ஆய்வுகள் இதே ஈகரையில் முன்பும் வெளிவந்துள்ளன.

154. சம்மா (பாலி)
சம்மா – சர்மம் (தோல்)
‘சருமம்’ எனும் சொல் பரிபாடலில் தோலைக் குறிக்கிறது; ‘தைப்பு அமை சருமத்தின்’(21-3).
‘சருமம்’ என்பதற்கு முந்தைய தமிழ் வடிவம் ‘சர்மம்’ என்பதாகலாம்.
தோல் தைக்கும் பழந்தமிழ்ச் சாதியே ‘செம்மான்’ ஆகும். ‘கருமான்’ என்பது தமிழ் இரும்புக் கொல்லர்களைக் குறிப்பதுபோலச் செம்மான் என்பதும் தமிழ் தோல்தைக்கும் (செருப்பு முதலியன) இனத்தாரே எனலாம்.

155. சித்தா (பாலி)
சித்தா – சித்தம் (அறிவு)
தமிழில் ‘சித்தர்’ என்றால் ‘அறிவார்ந்தவர்’ என்பதே பொருள். படிப்பாலும் அனுபவத்தாலும் சிறந்தவரே சித்தர்; வானுலகிலிருந்து கீழே விழுந்தவரல்லர் சித்தர்!
‘சித்தம்’ நிரம்பியவர் சித்தர்!
மருத்துவக் கல்வி நிரம்பியவரே சித்த மருத்துவர்!
சித்த மருத்துவம் தமிழர் மருத்துவம் என்பது உலகறிந்தது!
சி – வேர்ச்சொல்; நுட்பம் என்பது பொருள்; நுட்ப அறிவுடையோரே சித்தர்.

156. சித்ரா (பாலி)
சித்ரா – சித்திரை (மாதம்)
தமிழ்ச் சொல்லான ‘சித்திரை’ யிலிருந்து , ‘சித்ரா’ பிரிந்த வேளையில், இன்னொரு பக்கம் ‘சைத்ரா’ கிளைத்துள்ளது. #மூலம் எது என்பது இப்போது விளங்குகிறதா?
தமிழ்ப் பிங்கல நிகண்டில் , 14ஆவது நட்சத்திரமாகக் குறிக்கப்பட்டுள்ளது சித்திரை.
தமிழாண்டின் தொடக்கமும் சித்திரை மாதமே.

157. சிந்தகா (பாலி)
சிந்தகா – சிந்தன்; சிந்தனையாளன்
சிந்தன் என்றே மக்கட்பெயர் ஒன்றும் தமிழரிடையே உள்ளது.
சி – வேர்ச்சொல்; சித்தம் , சிந்தனை முதலியவற்றை இவ் வேரே தந்துள்ளது.

158 . சிந்தனா (பாலி)
சிந்தனா – சிந்தனை
முன் பார்த்த அதே ‘சி’தான் வேர்ச்சொல்.
‘சிந்தனாவாதி’ – தமிழ் எழுத்துகளில் வருவதே.
சிந்தனாவாதி – சிந்தனைவாதி

159 .சேதனா (பாலி)
சேதனா – சேதித்தல் (வெட்டுதல்)
சிதைப்பதால் , அது ‘சேதித்தல்’.
#தமிழ்க் #கட்டட #ஆகம #நூற்களிற் பயிலும் தமிழ்ச் சொல் இது.
’‘இவனை இழுத்துச் சென்று ‘சிரச் சேதம்’ செய்யுங்கள்!’’ தமிழ் அரச நாடகங்களில் வரும்!

160. சேதனகா (பாலி)
சேதனகா – சேதனக்காரர்(வெட்டுபவர்)
‘காரர்’ எனும் #தமிழ் #உருபன் (#morpheme), பாலியில் ‘கா’ என்று சுருங்கி வருவதை நோக்குவீர்.
‘வீட்டுக்காரர்’ என்பதை வழக்கில் ‘வீட்டுக்கார்’ என்று கூறுவதை ஒப்பிடுக.
‘காரர்’ , ‘கார்’ ஆகிப் பாலியில் ‘கா’ ஆகியுள்ளது!
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:11 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (17)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
161. சேடகா (பாலி)
சேடகா – சேவகன்
சேவகம் செய்பவன், சேவகன்.
‘சேவகன்’ என்பதன் பெண்பாற் பெயர் ‘சேவகி’; ‘சமூக சேவகி’ என்று வருவதைக் காணலாம்.
‘சேடி’ என்ற சொல்லும் ’சேவக’னின் பெண்பாற் பெயர்தான். ‘சேடிப் பெண்’ என வரல் காணலாம்.
சே – வேர்ச்சொல் ; சேட்படுத்துதல் எனும் பொருளது. ஏவல் செய்து வேலை பெறுதல் எனும் பொருளில் வருவது.

162 . ஜீரகா (பாலி)
ஜீரகா – சீரகம் (cumin seeds)
ஒரே சீராக , நீளவாக்கில், இருப்பதால் , அது சீரகம்!
ஒரே அளவு காரணமாகவே சீரகம் எடையளவுக்கும் பயன்படலாயிற்று.
#நாட்டுக்கோட்டைச் #செட்டியார்களின் குலமாலை சீரகப் பூ மாலை. #குபேரனின் #மாலையும் சீரகப்பூ மாலைதான். #சீரகச் #சம்பா என்றே தமிழகத்தில் ஒரு நெல்வகை உள்ளது. இதனால் தமிழ் மண்ணுக்கும் சீரகத்திற்கும் உள்ள நெருக்கம் புலனாகும்.
‘சீரகம்’ என்றுதான் எழுதவேண்டும்; உச்சரிக்கவேண்டும். ‘ஜீரகம்’ என எழுதுவதும பிழை; உச்சரிப்பதும் பிழை.

163. ஜீவா (பாலி)
ஜீவா – சீவன் (உயிர்)
’பசங்களோட கத்திக் கத்தி சீவன் போகுது’ அம்மாக்காரி இரைவாள்.
‘சீ’ என்ற தமிழ் வேர் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் இது. ’நுணுக்கமானது’ என்பது பொருள்.
‘ஜீவன்’ என எழுதக் கூடாது.

164. ஜீவனகா (பாலி)
ஜீவனகா – சீவனம் (பிழைப்பு)
’மகன் கட்டட வேலைக்குப் போகிறான்; இதுலதான் எங்க சீவனம் ஓடுது’ – கிழவி புலம்புவாள்.
‘சீவனம்’ , ‘ஜீவனம்’ ஆகிப் பின், பாலியில் ‘ஜீவனகா’ ஆகிவிட்டது.

165 . ஞானா (பாலி)
ஞானா – ஞானம் (அறிவு)
‘ஞா’ – தமிழ் வேர்ச்சொல்; இந்த வேர்ச்சொல் ‘பரக்கப் பெறுதல்’, ‘ஊறப் பெறுதல்’, ‘குறித்த துறையில் ஆழம்’ முதலிய துறைகளில் பொருண்மைகளை உருவாக்கியுள்ளது.
பரக்க விரிவான தாகையால், அது ‘ஞாலம்’.
கல்வி , கேள்வி, அனுபவம் ஆகியவற்றால் விரிந்த அறிவுடையோன் ஆகையால் அவன் ‘ஞானி’.

166 . ஞாயா (பாலி)
ஞாயா – நியாயம்
‘நியாயம்’ என்பதே மருவலாக ‘ஞாயா’ ஆனது.
‘ஞாயமென்ன கண்ணாத்தா’ – ஒரு திரைப்படப் பாடலில் வரும். அதே ஞாயம்தான் பாலியில் ‘ஞாயா’ !

167. தாபனா (பாலி)
தாபனா – தாபனம் (establishing)
‘த’ – வேர்ச்சொல் ; ‘தடுத்தல்’ , ‘தடுத்து நிலை நிறுத்துதல்’, ‘நிற்க வைத்தல்’ முதலிய பொருண்மைகளை இவ்வேர் தந்துள்ளது.
வின்சுலோ அகராதி ‘தாபனம்’ என்ற சொல்லையே காட்டுகிறது.
‘ஸ்’ முன்னே சேர்க்கப்பட்டு ‘ஸ்தாபனம்’ ஆனது பிற்கால வளர்ச்சி. ‘ஸ்’ சேர்ப்பதற்கு முந்தைய தமிழ் வடிவம் ‘தாபனம்’ என்பதற்குப் பாலியின் ’தாபனா’வே சான்று.

168. தானா (பாலி)
தானா – தானம் (இடம்)
தமிழ்த் ‘தானம்’ ஏற்பட்டுப் பின்னர் ‘ஸ்’ முன்னே சேர்க்கப்பட்டு ‘ஸ்தானம்’ஆகியுள்ளது.
‘சுரத்தானம்’ என்றுதான் எழுதவேண்டும்; ‘சுரஸ்தானம்’ என எழுதக் கூடாது.
தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே தமிழ்ச் சொற்களின் நிலைபற்றி அறிய நமக்குச் சான்றாக நிற்பவை பாலிச் சொற்கள்!

169 . திடா (பாலி)
திடா – திடம்
‘ஆள் நல்ல திடமான ஆள்தான்’ – தமிழ் வழக்கு.
தி – தமிழ் வேர்ச்சொல் ; ‘திட்டு’ , ‘திட்டம்’ , ‘உறுதி’ முதலிய பல சொற்களை இவ் வேர் உருவாக்கியுள்ளது.
‘திடம்படக் கேட்டு’ – தேவாரம். திடம் – உறுதி.
தி + ட் + அம் = திடம்

170. டக்கா (பாலி)
டக்கா – தர்க்கம் (logic)
த – தமிழ் வேர் ; ‘தருதல் என்பது பொருள் அடிப்படை; ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும்பாடியாகக் கருத்தை வைப்பதே ‘தர்க்கம்’; இதுவே ‘தருக்கம்’. தமிழ் நாடகங்களில் தர்க்க அடிப்படையில் சில வசனங்களை எழுதியிருப்பார்கள்; இந்தத் தர்க்கக் காட்சிகளைக் காண்பதற்காகவே பலர் கூடுவார்கள் ; இதனை நானே நேரில் கண்டுள்ளேன். தமிழ் மக்களின் இரத்தத்தில் ஊறிப்போனது தர்க்கம்; இத் தர்க்கத்தைத்தான் வடமொழியில் ’வைசேஷிகம்’ என்று குறிப்பிட்டனர்.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 31, 2023 11:36 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (18)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


171. தண்டுலா (பாலி)
தண்டுலா – தண்டுலம் (அரிசி)
‘தண்டுலம்’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்துதான் வடசொல்லான ‘தண்டுலா’ வந்தது என விளக்குகிறது செ.சொ.பேரகரமுதலி (2004).

இருக்கு வேதத்தில் ‘தண்டுலம்’ எனும் தமிழ்ச் சொல்லே ’தண்டுலா’ என வந்தது.

இருக்கு வேதத்தின் முதல் இருக்கு ‘அக்னிமிளே’ என்றுதான் தொடங்குகிறது; இதன் பொருள் – ‘அக்னியிலே’ என்பதாம்.
வேதம் என்பது எங்கிருந்தோ வந்தது என்பார் கவனிக்க.

172 . தட்டகா (பாலி)
தட்டகா – தட்டம் ; தட்டு
நாகர்கோயில் வட்டாரத்தில் ‘அந்தச் சாப்பாட்டுத் தட்டத்தை எடுத்து வை’ என்பார்கள்.
‘சின்னப்புள்ளையா அவன்? ஒரு தட்டுச்சோறு சாப்பிடுகிறான்’- வழக்கில்.

த – வேர்ச்சொல் ; தட்டையாக இருப்பதால் அது தட்டு, தட்டம்.

173. தம்பூலா (பாலி)
தம்பூலா – தாம்பூலம்
தம்பலம் – வெற்றிலை
‘தம்பலம் தின்றிலையோ?’ எனச் சங்க இலக்கியமான கலித்தொலையில் வருகிறது.
பொதுவாகத் ‘தாம்பூலம்’ என்பது வெற்றிலையும் பாக்கையும் குறிக்கிறது இப்போது.

174 . தரங்கா (பாலி)
தரங்கா – தரங்கம் (அலை)
துளங்கு – தளங்கு – தரங்கு – தரங்கம் என விளக்குவது செ.சொ. பேரகரமுதலி(2004).
துளங்குதல் – அசைதல்
அலைபாயும் கரையில் உள்ளதால் அவ்வூர் தரங்கம் பாடி(நாகை மா.)!

175 . தரு (பாலி)
தரு – மரம்
‘கற்பகத் தருவே’ – பாடலில் வரும்.
செடிகளைப் பார்க்கினும் மிக உயரமாத் தருக்கித்து நிற்பதால் , அது தரு.
மாற்றம் எதுவும் கொள்ளாமல் தமிழ்சொல்லான ‘தரு’ பாலியில் நிற்பதைக் காண்க.

176 . தலா (பாலி)
தலா – ‘இவர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’ என்பதில் வரும் ‘தலா’ அல்ல இது; தலா - தலம் ; இடம்
#‘தில்லை என்றொரு தலமுண்டு’ – #நந்தனார் #சரித்திரக் #கீர்த்தனை.
‘கைத்தலம் நான் பற்றக் கனாக்கண்டேன் தோழி’ – கேட்டுள்ளோம்.
த- வேர்ச்சொல் ; ‘பரப்பு’ப் பொருண்மை கொண்டது.‘தடவுதல்’ முதலிய சொற்களை இவ்வேரே உருவாக்கியது.

177. தலாகா (பாலி)
தலாகா – தடாகம் (குளம்)
தமிழ்ப் பிங்கல நிகண்டில் ‘தடாகம்’ எனும் சொல்லுக்குக் ‘குளம்’ என்றே பொருள் தரப்பட்டுள்ளது.
நீரைத் தடுத்துநிற்பதால் அது ‘தடு’ அடியாகத் ‘தடாகம்’ ஆனது.

தடாகம் – தடாகா – தலாகா என ஆகியுள்ளது.

178. தாரா (பாலி)
தாரா – நட்சத்திரம்
தமிழ்த் #திவாகர #நிகண்டில் , ‘தாரா’வுக்கு ‘விண்மீன்’ என்றே பொருள் தரப்பட்டுள்ளது.
மின்னி, ஒளித்தாரகைகளை (கதிர்களை) வெளிவிடுவதால் உடுவுக்குத் ‘தாரா’
என்று பேரானது.

179 . தாளா (பாலி)
தாளா – தாளிப்பனை; கூந்தற்பனை

அருவியானது நீரைத் தள்ளுவதுபோல மரத்தின் குருத்து காணப்படுவதால் , ‘தள்’ , ‘தாள்’ ஆகியுள்ளது.பனை ஓலையைவிடச் சற்று அகலமாக இருக்கும்; ஒருபக்கத்தில் அதிக வரிகளை எழுதலாம்; ஆனால், பனை ஓலையைப் போல உறுதியானதல்ல. ’ஸ்ரீதாளம்’ என்பது இத் தாளிப்பனையே.

180 . தாளா (பாலி)
தாளா – தாளம்

சற்றுமுன் பார்த்த சொல்லினும் வேறானது.
த – வேர்ச்சொல் ; ‘தட்டுதல்’ முதலிய பொருண்மைகளைத் தரவல்லது. தட்டுவதால் ‘தாளம்’ ஆயிற்று. நல்லவேளை ‘ஸ்தாளம்’ என்றொரு சொல் வரவில்லை!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 01, 2023 11:53 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


181 . டிகிச்சா (பாலி)

டிகிச்சா – சிகிச்சை
சிகல் – குறைவு ; குறைத்தல்
நோயின் தாக்கத்தைக் குறைப்பதால் , ‘சிக’ அடிப்படையில் வந்த தமிழ்ச் சொல் ‘சிகிச்சை’. ‘சிகித்சா’ எனச் சிலர் எழுத விழைவர்; அது தவறு.

‘சிகிச்சை’யின் மரூஉவே ‘டிகிச்சா’

182 . திமி (பாலி)

திமி – திமிங்கிலம்
திமி – பெருமீன் (திவாகர நிகண்டு)
‘திமி’ எனும் சொல்தான் பழைய தமிழ்ச் சொல் என்பதற்குத் திவாகரமும் பாலி மொழியும் சான்று.

183 . தீரா (பாலி)

தீரா – தீரம் (கரை)
நதி தீரம் – நதிக்கரை

நீர்ப் பரப்பாகிய எல்லை அந்த இடத்தில் தீர்வதால், அது ‘நதி தீரம்’ ஆனது.

தீர்வதால் ‘தீரம்’ எல்லைப் பொருளில் வந்தது.

184 . துச்சா (பாலி)

துச்சா – துச்சம்
துச்சம் – நெற்பதர் ; இழிவு ; வெறுமை
‘மக்களைத் துச்சமாக நினைத்து ஆள்வோர் சர்வாதிகாரம் செய்கின்றனர்’ – எதிக்கட்சிக் குரல்.
‘துச்சம்’ , மருவிப், பாலி வழக்கப்படி ‘துச்சா’ஆனது.

185 . துலா (பாலி)
துலா – துலா (துலாக்கோல்); தராசு
‘துலாபாரம்’ என்பதில், ‘துலா’ மட்டும் தராசைக் குறித்தல் காண்க.

186. தூளிகா (பாலி)
தூளிகா - மெத்தை
நுண்மையான பஞ்சு , இறகு முதலியவற்றை உள்ளே வைத்துத் தைக்கும் படுக்கையே மெத்தை. ‘தூளிகா மஞ்சம்’ எனவும் படும்.

‘ஹம்ச தூளிகா மஞ்சம்’ – அன்னப்பறவையின் இறகுகளைத் திணித்துச் செய்யும் மெத்தை.
அஞ்சம் – அன்னம் (திவாகர நிகண்டு); இதுவே ‘ஹம்சம்’ எனப்பட்டது. ‘அன்னம்’ என்பது வேறொன்றுமில்லை , வாத்துதான்!

187 . தண்டிலா (பாலி)
தண்டிலா – தண்டிலம் (ஓமம் செய்வதற்கான இடம்)
‘தண்டிலம்’ எனும் தமிழே ‘ஸ்தண்டிலம்’ ஆனது.
சிலர் இருந்து கிரியைகள் செய்யும் அளவு விரிந்த இடமாதலால், ‘தண்டி’ அடியாகத் ந்’தண்டிலம்’ ஆனது. ‘படை இங்குதான் தண்டு இறங்கியது’ – வரலாற்று வழக்கு.

188. தனகா (பாலி)
தனகா – தனம் (கொங்கை)
த – வேர்ச்சொல் ; ‘தடி’ முதலிய பொருட்களை இவ் வேரே ஈன்றது.
‘தடித்தது’ என்ற பொருளில்தான் ‘த’ எனும் வேர் ‘தனம்’ என்ற சொல்லால் கொங்கையைக் குறிக்க முடிந்தது. ‘தனபாரம்’ என்ற வழக்கு, கொங்கையின் தடித்த தன்மையைப் பேசக் காணலாம்.
தமிழ்த் ‘தனம்’ , பின்னர் ‘ஸ்தனம்’ ஆனது.

189. தபதி (பாலி)
#தபதி – தபதி (#சிற்பக்கலை வல்ல #விசுவகர்மர்)
‘தபதி’தான் பழைய தமிழ்ச் சொல். இதற்குச் சான்றாக நிற்பது பாலி மொழி! பின்னாளில் உருவாக்கப்பட்ட சொல்லே ‘ஸ்தபதி’.
தமிழ்ப் #பிங்கல #நிகண்டில், ‘தபதி’ என்பதற்குச் ’சிற்பி’ என்றே பொருள் நல்கப்பட்டுள்ளது.

‘த’ – வேர்சொல்; ‘தச்சு’ , ‘தையல்’ , ‘தபதி’ ஆகியவற்றை உருவாக்கியது இத் தமிழ் வேரே.

190 .தம்பா (பாலி)
தம்பா – தம்பம் (தூண்)
’கம்பம்’ என்பது ‘தம்பம்’ ஆனது #திரிபு.
‘தம்பம் ’ என்பதே பிற்றை நாளில் ‘ஸ்தம்பம்’ ஆக்கப்பட்டது.
கோயி கொடிக்’கம்ப’த்தை நாம் அறிவோம்.
சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் நாட்டுக்கொடியைக் கொடிக்கம்பத்தில் ஏற்றுவர். ‘ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்!’ – பாடியுள்ளோமே!

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 02, 2023 11:03 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (20)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

191.திரா (பாலி)
திரா – உறுதி ; திடம்
‘ஸ்திரம்’ என்றால்தான் இப்போது விளங்கும். ‘ஸ்திரம் என்பதற்கு முன்பிருந்த தமிழ்ச் சொல் ‘திரம்’’ . ‘திரா’ என்ற பாலிச்சொல்லால் இஃது இப்போது அறியப்படுகிறது.
‘உலகைத் திரமென உட்கொண்டு’ எனத் தாயுமானவர் பாடியுள்ளார்.

192 . தூலா (பாலி)
தூலா – தூலம்
‘தூல உடம்பு’ – சைவச் சித்தாந்தத்தில் எழுதுவர்.
தூலம் – பருப்பொருள்
‘தூல உடம்பு’ என்பதைத் தெரிந்துகொண்டவர்கள் நாளடைவில் , ‘ஸ்தூல உடம்பு’ என எழுதலாயினர்! தொலைந்தது ‘தூலம்’!

193. தக்கிணா (பாலி)
தக்கிணா – தக்கிணை
இப்போது ‘தட்சிணை’ என்றால்தான் நமக்கு விளங்குகிறது.
‘தக்கிணை’ எனும் தமிழ்ச் சொல் கம்பராமாயணத்தில் வருவதை எடுத்துக்காட்டுகிறது சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன்.
‘தக்கணை’ என்பதே ‘தக்கிணை’ என்பதற்கு முந்தைய வடிவம்.
தக்க பொருளை ஆசான் முதலானோர்க்குக் கொடுப்பதால் ‘தக்க’ அடிச்சொல்லாயிற்று.

194.தந்தா (பாலி)
தந்தா – தந்தம்
யானையின் துதிக்கைக்கு முன்னே நீட்டிக்கொண்டு ,வளைந்து நிற்பதால் அது ‘தந்தம்’.
‘த’ – வேர்ச்சொல்; ‘தாள்’ , ‘தாழ்’ முதலியவற்றுக்கு இவ்வேரே அடிப்படை.
நல்ல வேளை ‘ஸ்தந்தம்’ என்றொரு சொல் ஆக்கப்படவில்லை நம்மனோரால்!

195 . தப்பா (பாலி)
தப்பா – தர்ப்பை ; தருப்பை
‘தர்ப்பை’ என்பதன் மரூஉவே பாலியின் ‘தப்பா’. மேலோட்டமாகப் பார்த்தாலே இது விளங்கும்.
த – இதுவே வேர்ச்சொல் ; ‘தரு’வுக்கும் இதே வேர்தான். தரையோடு வளரும் புல்லினும் வேறாகச் சற்று உயர்ந்து வளர்ந்து நிற்பது ‘தர்ப்பை’. தரையோடு படர்ந்துநிற்கும் புல்லில் மண் ஒட்டியிருக்கும்; அதனால் சடங்குகளுக்குத் தமிழர்கள் அவற்றைப் பயன்படுத்தாது உயர்ந்து நிற்கும் தர்ப்பைப் புல்லையே பயன்படுத்தினர்.

196 .தயா (பாலி)
தயா – தயை ; அன்பு
‘தயாவுடைய’ – #மாணிக்கவாசகர்.
‘தயா’ எனும் அதே வடிவைத் #திருவாசகத்தில் இவ்வாறு காண்கிறோம்.
த – வேர்ச்சொல் ; அன்பு வடிவான ‘தாய்’ முதலிய சொற்களை இவ் வேர் உருவாக்கியதை ஒப்பு நோக்குக

197 . தறீ (பாலி)
தறீ – தறி ; வெட்டு
‘கட்டுத்தறி’ என்பதில் வரும் ‘தறி’க்கு ‘வெட்டுதல்’ என்பதே பொருள்.
நெசவுத் தறிக்குப் போட்ட வரி ‘தறிக்கடமை’!

198. தகனா (பாலி)
தகனா – தகனம்
தமிழ்ச் சூடாமணி நிகண்டில், ‘தகனன்’ என்பது நெருப்புக் கடவுளைக் குறிக்கக் காண்கிறோம்.

த- வேர்ச்சொல் ; தழல், தகதக முதலிய சொற்களை ‘வெப்பம்’ அடிப்படையில் இவ் வேர் உருவாக்கியுள்ளது.
‘தகிக்கும் வெயில்’ – வழக்கு

‘உடல் தகனம் ஆகும்வரை சுடுகாட்டில் இருந்தார்’ – உலக வழக்கு.
நல்லவேளை ‘ஸ்தகனம்’ என்றொரு சொல்லை நம்மனோர் உருவாக்கவில்லை!

199.தாரா (பாலி)
தாரா – தாரம் (மனைவி)
’சாதகனுக்குத் தாரம் இரண்டு’ – சோதிடர் அளப்பார்.
‘தரு’ அடியாகத் ‘தாரம்’ எனும் தமிழ்ச் சொல் பிறந்தது எனவும் , ‘தரப்பட்டவள்’ என்பது பொருள் என்றும் விளக்குவது செ.சொ. பேரகராதி (2004).

200. தாசி (பாலி)
தாசி – விலைமகள்
த- வேர்ச்சொல் ; உரிமை எனும் பொருள் தரும் ‘தாயம்’ ஆகிய சொற்களை உருவாக்கியுள்ளது இவ்வேர். ’உரிமை உள்ளவள்‘ அல்லது ‘உரிமை கோரப்பட்டவள்‘ என்ற அடிப்படையில் ‘தாசி’ எனும் சொல் ஆகியுள்ளது.
‘தாசி’க்கு ஆண்பாற் சொல் ‘தாசன்’.
தாசி, தாசன் – இரண்டும் தமிழ்ச் சொற்களே.

(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 04, 2023 1:50 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (21)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
201 . துட்டா (பாலி)
துட்டா – துட்டன்
‘துட்டன்’ எனும் தமிழ்ச்சொல் தேவாரத்தில் வருகிறது.
துட்டனுக்கு எதிர்ச்சொல் ‘துட்டி’; ‘துட்டி’, திருப்புகழில் உள்ளது.
‘துட்டன்’ என்பதிலிருந்து ’ஆக்கப்பட்ட தமிழ்ச் சொல்’லே ‘துஷ்டன்’

202 . நகா (பாலி)
நகா – நகம் (nail)
‘நகம்’ , தமிழ்ப் பிங்கல நிகண்டில் வருகிறது.இதே பிங்கல நிகண்டு, ‘நகம்’ என்பதற்கு ‘மலை’ என்றொரு பொருள் இருப்பதையும் காட்டுகிறது.தரையிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருப்பதால் ‘மலை’ பொருந்துகிறது. இதே அடிப்படையில்தான் கை கால்களில் நீட்டிக்கொண்டிருப்பதால் ‘ந’ எனும் வேர் அடிப்படையில் ‘நகம்’ (nail) சுட்டப்படுவதாயிற்று.

203 . நகரா (பாலி)
நகரா – நகரம் (town)
‘நெடுநகர்’ எனப் புறநானூற்றில் வருகிறது.
ந – வேர்ச்சொல்; நகரும் தொழிலுக்கு இவ் வேரே அடிப்படை.
கிராமங்களிலிருந்து பக்கத்து ஊர் ஒன்றுக்குச் சென்று தம் விளைபொருட்களை விற்கத் தொடங்கினர்; அந்த ஊரை நோக்கி நகர்ந்ததால் , அது ‘நகரம்’ ஆயிற்று.

204 . நக்கா (பாலி)
நக்கா – நக்கன் (அம்மணன்)
‘சிவன் நக்கன் காண்’ எனத் தேவாரத்தில் வருகிறது.
நக்கன் – ஆடை அணியாதவன்.
தமிழ்க் கல்வெட்டுகள் பலவற்றில் ‘நக்கன்’ எனும் சொல் இயற்பெயராக வருகிறது.
‘நக்கன்’ என்பது பின்னாளில் ‘நக்னன்’ எனவும் எழுதப்பட்டது.

205. நாசா (பாலி)
நாசா – நாசம்
‘எதிரி ஊரை அழித்து நாசம் செய்வது அந்தக் கால அரசர் சிலர் செய்தனர்’ – வரலாறு.
ந – வேர்ச்சொல் ; ‘நசிவு’ , ‘நலிவு’ முதலிய சொற்கள் சான்று.
ந, நாவாக ஆனது #ஆதி நீழல்.

206 . நாவா (பாலி)
நாவா – நாவாய் (கப்பல்)
தமிழில் ‘நாவாய் சாத்திரம்’ என்றொரு ஓலைச்சுவடி உள்ளது; இதனைப் பதிப்பித்தவன் யானே. வெளியிட்டது #சென்னை #அரசினர் #கீழ்த்திசைச் #சுவடிகள் #நூலகம் #மற்றும் #ஆய்வு #மையம்.
கப்பலைக் குறிக்குக் ‘நாவாய்’ புறநானூற்றில் வருகிறது.
ந – ‘உள்ளீடற்ற’ என்பது பொருள்; ‘துடைத் தெடுக்கப்பட்டது’ முதலிய பொருண்மைகள் இவ் வேருக்கு உண்டு.
முதலில் உள்ளீடற்ற வகையில் குழைவாகச் செய்யப்பட்ட பெரிய மரக்கட்டைகளில் கடலிற் சென்றவர்கள் பிறகு பெரிதாகக் கட்டிய பின்னும் அதே ‘நாவாய்’ என்ற பெயராலே அழைத்தனர்.

207. நிக்கா (பாலி)
நிக்கா – நிக்கம்
‘நிஸ்கம்’ என்றால்தான் இப்போது புரிகிறது.
ஓர் எடை அளவைக் குறிப்பது ‘நிக்கம்’ எனும் தமிழ்ச் சொல்; இதனைக் காட்டிக்கொடுத்தது பாலி மொழிதான்!பாலியில் ‘நிக்கா’ , எடையளவையே சுட்டுகிறது.

208 . நிகதி (பாலி)
நிகதி – நியதி (ஒழுக்கமுறை)
‘சைவ நியதிப்படியான பூசனைகள் செய்து’ – சைவச் சித்தாந்த நூற்களில் வரும்.
நி – வேர்ச்சொல் ; ‘நியமம்’ முதலிய சொல்லை உருவாக்கிய அதே அடிப்படையில்தான் ‘நியதி’யையும் உண்டாக்கியது.

209. நிச்சயா (பாலி)
நிச்சயா – நிச்சயம்
‘பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு…’ – வழக்கமாகத் தமிழர்கள் எழுதுவதுதானே?
‘அறிஞர் நிச்சயித்தனர்’ எனும் கந்தபுராண அடியை மேற்கோள் காட்டுகிறது செ.சொ.பேரகரமுதலி (2005).
நி – வேர்ச்சொல்; ‘நில்’ , ‘நிலை’ முதலிய சொற்கள் உருவான அதே அடிப்படையில்தான் ‘நிச்சயம்’ என்பதும் தமிழில் உருவாகியுள்ளது.
‘நிச்சயம்’ எனும் அழகிய தமிழ்ச் சொல்லை, ‘நிஸ்சயம்’ என எழுத விழைந்த நம்மனோர் உளர்!

210 . நிதி (பாலி)
நிதி – நிதி (wealth; fund)
‘மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா?...’ – திரைப்படப் பாடலில் வருமே?
‘நிதிநூல்’ என்று ஒரு தமிழ் நூலின் தலைப்பைத் தெரிவிப்பது சாம்பசிவம்பிள்ளை மருத்துவ அகராதி.
நிதிப்பொதி - பொற்கிழி
நி- வேர்ச்சொல்; ‘நிறை’; ‘நிரப்பு’ முதலிய சொற்களைக் காணலாம். இதே அடிப்படையில்தான் ‘நிதி’யும் உண்டாகியுள்ளது.
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 06, 2023 2:50 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (22)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


211. நிந்தா  (பாலி)
நிந்தா – நிந்தனை  (ஏசல்; வசைபாடல்)
‘நிந்தனை அரக்கி’ – கம்பராமாயணம்
நி – வேர்ச்சொல்; ‘தாழ்வு’ எனும் பொருண்மை இவ் வேருக்கு உண்டு. இதனால் ‘நீசம்’ முதலிய சொற்களை இது தந்தது.

212 . நிப்பயா   (பாலி)
நிப்பயா -  நிர்பயா( பயமற்றது)

’நிர்ணயம்’ , ‘நீதிநிர்வாகம்’ , முதலிய தமிழ்ச் சொற்களால், ‘நிர்’ சொல்லின் தொடக்கத்தில்  வருவது தமிழ் முறையே என அறிகிறோம்.
‘நிர்’ முன்னொற்றால் எதிர்ப் பொருள் வருவதும் தமிழ் மரபே.
213. நிமித்தா   (பாலி)
நிமித்தா – நிமித்தம்  (சகுனம்)
‘நிமித்த சூடாமணி’ என்றே ஒரு தமிழ் நூலை அறிகிறோம்.
‘நிமித்தம் பார்ப்போன்’- தமிழ்ப் பிங்கல நிகண்டு.
பல்லி தலையில்  விழுதல், நல்லோர் வாய்ச்சொல் முதலிய பல வகைகளில் நிமித்தம் பார்த்தவர்கள்  தமிழர்கள்.
பழந்தமிழ் மறவர்கள் புள் நிமித்தம் பார்த்ததற்குப் புறநானூறு சாட்சி.

214 .நிம்மலா (பாலி)
நிம்மலா – நிர்மலம் (மல மற்றது; குறையற்றது)
‘நிர்’ முன்னொற்றால் எதிர்ப்பொருண்மை வரும் என்று சற்று முன் பார்த்தோம்; இந்த அடிப்படையில்தான் ‘மலம்’ என்பதற்கு எதிராக ‘நிர்மலம்’ தமிழில் வந்துள்ளது.

215.  நிம்மானா  (பாலி)
நிம்மானா – நிர்மாணம்
‘நிர்மாண விதி’ என்பது தமிழ் ஆகமத்தில் ஓர் அத்தியாயம்; கோயில் கட்டுதல் முதலிய விதிகளைக் கூறுவது.
‘உ’ சாரியை கொடுத்து  , ‘நிருமானம்’ என்றும் இது எழுதப்படும்.

216 . நிம்மூலா (பாலி)
நிம்மூலா – நிர்மூலம் (அழித்தல்)
‘பாண்டியன், சோழ நாட்டையே நிர்மூலமாக்கிவிட்டான்’ – வரலாற்றில் எழுதுவரே.
முன்பார்த்த அதே எதிர்மறைப் பொருள் ‘நிர்’ என்பதற்கு இங்கும் வந்துள்ளதைக் காண்க.

217 . நியமா  (பாலி)
நியமா – நியமம் (ஒழுங்கு)
‘நியமம்’ என்று ஓர் இனிய தமிழ் ஊரே உள்ளது தமிழகத்தில்.
‘நியமம்’ என்பது ‘நேமம்’ எனவும் அறியப்படும்.
‘நியமம் செய்து’ – தமிழ்த் தேவாரம்.
நி – தமிழ் வேர் . ‘நியதி’க்கும் இவ்வேரே காரணம்.

218. நியமனா  (பாலி)
நியமனா – நியமனம்
‘கணக்கு வேலைக்கு நியமனம் ஆனான்’.
நி- வேர்; ‘நிச்சயித்தல்’ , ‘நிறுமித்தல்’ முதலிய சொற்களுக்கு இதுவே வேர்.

219 . நிரந்தரா   (பாலி)
நிரந்தரா – நிரந்தரம்
மு சொன்ன ‘நி’தான் இதற்கும் வேர்.
நி – நிர்- நிர்மாணம் – நிரந்தரம் , என்றெல்லாம் வரல் காணலாம்.
‘அவருக்கு இன்றுதான் பணி நிரந்தர ஆணை வந்தது.’ – அலுவலகப் பேச்சு.
‘நிரந்தரமாய் அருள்வாய்’ – திருவாசகம்.

220. நிலயா  (பாலி)
     நிலயா – நிலையம்  (தங்குமிடம்)
 ‘சாந்தி நிலையம்’ என்று பல மாளிகைகளில் எழுதியிருப்பார்கள்.
’நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்’ – கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டுகிறது தமிழ் லெக்சிகன். ‘நிலயம்’ , இப்போது பெரும்பாலும் ‘நிலையம்’ என்றே எழுதப்படிகிறது.
முன் சொன்ன அதே ‘நி’ என்பதே இங்கும் வேர்.

(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 09, 2023 12:33 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (23)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

221 . நீதி (பாலி)
நீதி – நீதி
’நீதிமான்’. ‘நீதிபதி’,முதலிய தமிழ்ச் சொற்கள், தமிழ் மண்ணிற் புழங்குவனவே.
‘நீதிநெறிவிளக்கம்’ என்றே தமிழில் ஒரு நூலுண்டே!
‘நாட்டுதும்’ என இளங்கோ சொன்னது நீதியைத்தானே! நீதுயைக் காக்கத்தானே பாண்டியன் நெடுஞ்செழியன் ‘யானோ அரசன்?’ எனத் துடித்து உயிர்விட்டான்!
நி – வேர்ச்சொல்; அதுவே நீண்டு ‘நீ’ எனும் இன்னொரு வேரை ஈன்றது.
நீ +த் + இ = நீதி
மாறுதல் ஏதுமிலாது ‘நீதி’ , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் காணலாம்.

222. நீலா (பாலி)
நீலா – நீலம் (blue)
முன் பார்த்த அதே ‘நீ’தான் வேர்; கறுப்பு கொஞ்சம் நீர்த்தாற் போல இருப்பதால் ‘நீ’ வேராயிற்று.
ஆகாய நீல வண்ணத்தைப் பாடாத தமிழ்ப் புலவர் உண்டா?
‘நீலமொடு’ – ஐங்குறுநூறு.
வழக்கம் போல ‘ஆ’ ஈற்றில் முடியும் #பாலிப் #பெயர்ச்சொற்கள் போல ‘நீலா’வும் வந்துள்ளது.

223. நூபுரா (பாலி)
நூபுரா – நூபுரம் (காற்சிலம்பு)
சிலப்பதிகாரத்தில் இச் சொல் இடம்பெறுகிறது.
இரு முனைகளும் சேரும் வலயமாகலின் ‘நூ’ வேராயிற்று. ’நு’ வேர், ‘நுடக்கம்’ முதலிய சொற்களை உருவாக்கியமையை இங்கு ஒப்பிடுக.

224. பக்கா (பாலி)
பக்கா – பக்கம் (side)
இன்றும் கன்னடத்தில் ‘அக்கம்பக்கம்’ என்ற தமிழ், ‘அக்கா பக்கா’ என்றுதான் கூறப்படுகிறது. கன்னடம், தமிழிலிருந்து பிரிந்த மொழி என்பதை மறவாதீர்.
தமிழின் ‘அம்’மீறு ‘ஆவீறா’கப் பாலியில் வருவதை முன்பும் கண்டோம்.
தமிழ்ச் சொற்களின் முன்னே ‘ப’ சேர்த்துப் பல பாலிச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘கூடம்’ எனும் தமிழ்ச் சொல்லானது ‘ப’ சேர்த்துப் ‘பகூடா’ ஆகியுள்ளது.

225. பக்கின் (பாலி)
பக்கின் – பக்கி (பறவை)
‘பக்ஷி’என்றால் நமக்குப் புரிகிறது; ஆனால் அதன் முந்தைய வடிவமான ‘பக்கி’ என்றால் புரிவதில்லை.
குறவஞ்சி இலக்கியங்களில் ‘பக்கி’ என்ற தமிழ்ச் சொல் காப்பாற்றப்படுகிறது.
பக்கவாட்டுச் சிறகுகளை உடையதாகையால் அது ‘பக்கி’.
திருப்புகழில் ‘பக்கி’, பறவையைக் குறிப்பதை எடுத்துக்காட்டுகிறது லெக்சிகன்.
பாலிச் சொல்லில் ஒரு ‘ன்’ வந்து ஒட்டியுள்ளதைக் கவனிக்க.

226. பங்கு (பாலி)

பங்கு – பங்கு (முடவன்)
உடலுறுப்புப் பங்கப்பட்டதால், அவன் ‘பங்கு’’
‘பங்கு’ என்றால் ‘முடவன்’ என்றொரு பொருள் உள்ளதற்கு த் தேவையுலாவை மேற்கோள் காட்டுகிறது செ.சொ.பேரகரமுதலி (2005).

227. பக்கா (பாலி)
பக்கா – பக்குவம்
வேறொரு பொருளில் ‘பக்கா’ எனும் பாலிச் சொல்லை முன்பே பார்த்துள்ளோம்.
ப – வேர்ச்சொல் ; ‘பணிவு’, ‘பண்பு’ முதலிய தமிழ்ச் சொற்களை இவ்வேர் தந்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ‘பக்குவம்’ என்ற பொருளையும் தந்துள்ளது.
‘பக்குவம்’ என்ற தமிழ்ச் சொல்லே ‘பக்கா’ எனும் பாலிச் சொல்லை ஈன்றுள்ளது.
‘பக்கான்னம்’ – பக்குவம் செய்யப்பட்ட சோறு (யாழ்ப்பாண அகராதி)
இங்கு, ‘பக்கா’ என்பது, ‘பக்குவம்’ எனும் பொருளில் வந்துள்ளதை நோக்குக.
இப்படி ஆயும்போது, இலங்கை சென்ற புத்தத் துறவிகள், அங்கு இருந்த தமிழ்ச் சொற்களின் அடிப்படையிலும் பல தமிழ்ச் சொற்களை உருவாக்கியிருக்கலாம் என்று கருத இடமேற்படுகிறது.

228. பஞ்சா (பாலி)
பஞ்சா – பஞ்ச (ஐந்து)
ஐந்து விரல்களையும் அகல விரித்தால் வரும் மொத்த எண்ணிக்கை ஐந்து. விரித்தல் – பகுத்தல்; ‘ப’ – வேர் ; ‘பகுத்தல்’ , ‘பகுப்பு’ முதலிய சொற்களை இவ்வேர் உருவாக்கியுள்ளது.
பஞ்ச + உலோகம் = பஞ்லோகம்
பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்
தமிழ் இலக்கணப்படி , ‘பஞ்சவுலோகம்’ , ‘பஞ்சவங்கம்’ என்று உடம்படுமெய் பெற்றே புணரவேண்டும்; ஆனால் வேறு புதுவழியில் புணர்ச்சி நடந்துள்ளது; இப் புதுவழியே ‘வடமொழி’ வழி எனப்பட்டது; இதனை ஆக்கியோர் தமிழரே!

229 . படலா (பாலி)
படலா – படலம்
நூலின் உட்பிரிவைப் ‘படலம்’ என்பது தமிழ் மரபு. தொல்காப்பியம் இதனைக் குறிக்கிறது (செய்யுளியல் 163). ‘நகர் நீங்கு படலம்’ , ‘உண்டாட்டுப் படலம்’ என்றெல்லாம் படித்துள்ளோம் தமிழ்க் காப்பியங்களில்.
ப- வேர்ச்சொல்; ‘படர்’ , ‘படல்’ முதலிய சொற்களில் ‘விரிவு’ எனும் பொருளை இவ்வேர் தந்திருக்கக் காணலாம்.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது சிறுசிறு மாற்றங்கள் அடைவது இயல்பாக உள்ளது.
‘கடந்த ஆறு திங்கள்’ – தமிழ்
’களெத ஆறு திங்களு’ - கன்னடம்

- இப்படித்தான் சிறு மாற்றங்கள் கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலும் சற்றுத் தொலைவிலிருந்து பேசப்படும் சொற்களே கேட்போன் காதில் விழுவதால் , சிறுமாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. எழுத்து வடிவிலான சொற்களின் பரவல் ஏற்படும் வாய்ப்பு அன்று மிகக் குறைவு என்பது இன்னொரு வலுவான காரணம்.

230 . படிகாரா (பாலி)
படிகாரா – பரிகாரம்
பரிமாற்று – பண்டமாற்று (செ.சொ.பேரகரமுதலி)
‘ஒன்றுக்கு நிகராக இன்னொன்று’ எனும் பொருளை இங்கு காண்கிறோம்.
ப – தமிழ் வேர் ; ‘பதில்’ , ‘பதிலாக’ முதலிய சொற்களைக் காண்க.
’பரிகாரம்’ செய்யாத இறை நம்பிக்கையுள்ள தமிழரைக் காண்டல் அரிது; தொன்றுதொட்டு வரும் தமிழ்ச் சொல் ‘பரிகாரம்’.
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com) பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (22)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 12, 2023 12:33 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (24)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

231. பதாகை (பாலி)
பதாகை – பதாகை (கொடி)
‘பதாகை’ எனும் தமிழ்ச் சொல் , மதுரைக்காஞ்சியில் வருகிறது. சூடாமணி நிகண்டிலும் காண்கிறோம்.
ப – வேர்ச்சொல்; ‘படர்’ முதலிய தமிழ்ச் சொற்களை ஈன்ற தமிழ் வேர் இது. படர்ந்துநிற்கும் கொடியைக் குறித்ததில் வியப்பே இல்லை.

232 . பதி (பாலி)
பதி – பதி (கணவன்)
‘பதி’ எனும் சொல் , கணவனைக் குறிப்பதற்கு அரிச்சந்திர புராணத்தை மேற்கோள் காட்டுகிறது தமிழ் லெக்சிகன்.
’பதி பத்தினி’ – வழங்கும் தமிழ்த் தொடர்.
மனைவி , கணவனுக்குச் செய்யும் தொண்டைப் ‘பதிசேவை’ எனக் குறித்தனர் தமிழர்.
’பதியம் போடுதல்’ , ‘தங்கத்தில் கல் பதித்தல்’ போன்ற பணிகள் நடைபெற்றது தமிழ் பேசிய தமிழகத்தில் அல்லவா? இங்கெல்லாம் ‘பதி’ எனும் சொல்லடியைக் (stem) காணலாம்.

233 . பதோடா (பாலி)
பதோடா - தோட்டி (அங்குசம்)
‘யானைமேல் இருந்தோன் தோட்டி’ என மணிமேகலையில் வருகிறது.

தோடு – காதின் பகுதி.
யானைப் பாகன் யானையைத் தன் விருப்பப்படிச் செலுத்தக் காதில் துறட்டியைப் போட்டு இழுப்பான்; அத் துறட்டியே ‘தோட்டி’.

தமிழ்ச் சொல்லோடு ‘ப’ சேர்த்துப் பல பாலிச் சொற்கள் உருவாக்கப் பட்டுள்ளமையை முன்பே கண்டோம். இங்கு ‘தோட்டி’ , ‘தோடா’ ஆகிப் பின் ‘ப’வை முன்னே சேர்த்துப் ‘பதோடா’ எனும் பாலிச்சொல் உருவாகியுள்ளது.

234. பரிசாரா (பாலி)
பரிசாரா – பரிசாரர்
பரிசாரர் – கோயிற் பணியாள் ; சமையல்காரர்
ப – வேர்ச்சொல்; ‘பகுப்பு’ முதலிய சொற்களைத் தந்துள்ளது இவ்வேர். ‘பிரித்தல்’ எனும் பொருள் அடியாகப், பணிகளைப் பிரித்து, ஒரே இடத்தில் நில்லாது, அங்குமிங்கும் சென்று , பணி சொல்வோனே ‘பரிசாரகன்’.
‘பரிபாகம்’ எனும் சொல்லுக்குச் ’சமைத்தல்’ என்றொரு பொருள் இருப்பதை இங்கு ஒப்பிடுக.

235 .பரிநாமா (பாலி)
பரிநாமா – பரிணாமம் (evolution)
ப- வேர்ச்சொல் ; ‘பரி’ , ‘பரிதல்’ முதலிய சொற்களில் , ‘செல்லுதல்’ , ‘போதல்’ , ‘மிகுதல்’ ஆகிய பொருண்மைகள் இருப்பதை அறியலாம். இந்த அடிப்படையில்தான் ‘வளர்ந்து செல்லல்’ எனும் கருத்தில் எழுந்ததே ‘பரிணாமம்’.

‘பரிபாகம்’ எனும் சொல்லுக்கு ‘முதிர்ச்சி’ என்ற பொருளைச் சுட்டுவது செ.சொ.பேரகரமுதலி. ‘பரிணாமம்’ எனும் சொல்லுக்கு வந்த ‘பரி’ எனும் அடி இங்கும் பயன்பட்டுள்ளதைக் காணலாம்.

236 . பரிதோ (பாலி)
பரிதோ – பரிதி (சுற்றுவட்டம்)
ப – வேர்ச்சொல்
‘பரிதி ஞாலம்’ (புறநானூறு); பரிதி ஞாலம் – வட்ட உலகம்.
வட்டமாக இருக்கும் தேர்ச்சக்கரம் ‘பரிதி ’ எனப்பட்டது.
வட்டமாக இருப்பதால் , ‘சக்கராயுதம்’ , ‘பரிதி’ எனப்பட்டது.
தமிழ்த் ‘தி’ , பாலியில் ‘தோ’ வாக மாறியுள்ளதைக் கவனிக்க.

237. பரிநிப்பானா (பாலி)
பரிநிப்பானா – பரிநிர்வாணம் (முழுத் துறவு)
‘பரி’ , ‘நிர்’ ஆகிய உருபன்கள் தமிழ் உருபன்களே.
சொல்லுக்கு ஏற்றவாறு பொருள் நல்குபவை.

’பரிகாசம்’ , ‘பரிபாடல்’ , ‘நிர்மாணம்’, ‘நிர்வாணம்’ , ‘நிர்மூலி’(பூண்டு வகை) , – என்றெல்லாம் வரல் காணலாம்.
’நிர’ அடிப்படையிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. ‘நிர்’ ஏற்கப்படும்போதுதான் ‘நிர’வும் ஏற்கப்படும். நிரக்க – நிறைய. நிரப்பு – பூர்த்தி செய்.
தமிழ்ச் சைவ சமயத் தீக்கைகளில் ஒன்றுதான் ‘நிர்வாண தீக்கை’.
‘நிர்வாணம்’ , ‘நிருவாணம்’ எனவும் எழுதப்படுகிறது தமிழில். உகரச் சாரியையைத் தமிழ் அடியான் ‘நிர்’ ஏற்பதைக் கவனிக்க.
‘நிர்’ என்பது தமிழில் எதிர்மறையைத் தரும் என்பதற்கு ‘நிர்க்குணன்’ (= குணமற்றவன்) சான்று.
சிவனைக் ‘குணமற்றவன்’ என்பது ‘நிர்க்குண சைவம்’; இங்கும் ‘நிர்’ என்பதற்கு எதிர்மறைப் பொருள் உள்ளதை நோக்கலாம்.

238 . பரிபக்கா (பாலி)
பரிபக்கா – பரிபக்குவம் (முழுப்பக்குவம்)
‘பரி’ எனும் தமிழ் உருபனுக்கு ’முழு’ என்பதே பொருள்.
சுற்றிலும் முழுதான அடைப்பை (fencing) ‘பரிக்கிரியை’ என்கிறது யாழ்ப்பாண அகராதி.
குருமார்கள் உண்ட கலம் , ‘முழுமை அடைந்தது’ எனும் பொருளில் ‘பரிகலம்’ எனப்படும் தமிழில்.

239 . பரிபூரா (பாலி)
பரிபூரா – பரிபூரணம்
‘பரி’ என்பது பற்றி முன்னும் பார்த்தோம்.
பூரணம் – நிறைவு; பரிபூரணம் – முழுநிறைவு.
பரி – மிகுதி; ‘பரிபுலம்பினர்’ (சிலப்பதிகாரம்).

பூ – வேர்ச்சொல் ; ‘மலர்ச்சி’, ’நிறைவு’ , ’பெருகுதல்’
முதலியன இவ் வேர் அடிப்படையில் தோன்றியவையே.
’பூமி’ இப்படி உருவான தமிழ்ச் சொல்லே.
கொழுக்கட்டை சமைத்தவர்களும் தமிழர்களே , அதனுள் இனிப்புப் பொருட்களை நிறைத்துப் ‘பூரணக்கொழுக்கட்டை’ செய்தவர்களும் தமிழரே.

240. பரிவட்டா (பாலி)
பரிவட்டம் – தலையைச் சுற்றி வட்டமாகக் கட்டும் சிற்றாடை
பரித்தல் – சூழ்தல்; குருதி பரிப்ப (அகநானூறு) (செ.சொ.பேரகரமுதலி).
’தஞ்சைக் கோயில் பெருந்தச்சனுக்குப் பரிவட்டம் கட்டினர்’ .
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 2:50 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 3 Coq37Nv


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக