by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.
ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.
இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.
அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.
உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.
இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.
பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.
1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.
2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.
3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.
ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.
இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.
இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை தவிர மற்ற வேட்பாளர்கள் யாரும் டெபாசிட் பெறவில்லை.
77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.
2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.
3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.
4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.
5. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69.
6. ஆ.அருள்ராம் (தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி) -58.
7. ரா.கபா காந்தி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) -31.
8. மு.கருணாகரன் (சமாஜ்வாடி கட்சி) -42.
9. வீரா.கிருஷ்ணமூர்த்தி (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) -20.
10. பொ.குப்புசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) -23.
11. குமாரசாமி (ஜனதா தளம் -மதசார்பற்றது) -26. 12. பு.சசிக்குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) -19. 13. அ.சுந்தரராஜன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்) -25. 14. கா.தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்) -104. 15. வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) -324. 16. மூ.பன்னீர்செல்வம் (இந்திய குடியரசு கட்சி -அத்வாலே) -144. 17. சி.பிரேம்நாத் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -59. 18. ஏ.மணி (இந்திய குடியரசு கட்சி - சிவராஜ்) -138. 19. மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) -62. 20. எம்.முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி) -15. 21. கே.முனியப்பன் (அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி) -18. 22. ஆர்.ஜி.அண்ணாதுரை (இந்து திராவிட மக்கள் கட்சி) -183 23. வீ.ராம்குமார் (இந்திய சுயராஜ்ய கட்சி) -19. 24. கே.பி.எம்.ராஜா (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி) -25.
25. ப.விஜயகுமாரி (தேசிய மக்கள் சக்தி கட்சி) -18. 26. ரா.விஜயகுமார் (விடுதலைக் களம் கட்சி) -8. 27. மோ.வேலுமணி (விஸ்வ பாரத் மக்கள் கட்சி) -43. 28. கே.ஜார்ஜ் பெர்னான்டஸ் (மண்ணின் மைந்தர்கள் கழகம்) -17. சுயேச்சைகள் 29. அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (சுயே.) -13. 30. த.அன்பு மாணிக்கம் (சுயே.) -33. 31. எம்.எஸ்.ஆறுமுகம் (சுயே.) -103. 32. பெ.ஆறுமுகம் (சுயே.) -60. 33. பா.இசக்கிமுத்து (சுயே.) -25. 34. தி.ரமேஷ் (சுயே.) -44. 35. மா.கண்ணன் (சுயே.) -48. 36. மு.கீர்த்தனா (சுயே.) -100. 37. பா.குணசேகரன் (சுயே.) -6. 38. ர.குமார் (சுயே.) -3. 39. கே.கோபாலகிருஷ்ணன் (சுயே.) -12.
40. ர.சசிகுமார் (சுயே) -7. 41. ரா.சதீஷ்குமார் (சுயே.) -11. 42. சு.சித்ரா (சுயே.) -10. 43. ச.சிவக்குமார் (சுயே.) -18. 44. செ.சீனிவாசன் (சுயே.) -11. 45. ப.சுதாகர் (சுயே.) -13. 46. க.சுந்தரமூர்த்தி (சுயே.) -19. 47. மா.செந்தில்குமார் (சுயே.) -27. 48. ரா.தங்கவேல் (சுயே.) -27. Also Read - ரூ.34¼ லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி 49. மா.தரணி குமார் (சுயே.) -39. 50. என்.தனஞ்ஜெயன் (சுயே.) -93.
51. ஆர்.திருமலை (சுயே.) -28. 52. தீபன் சக்கரவர்த்தி (சுயே.) -349. 53. மா.நரேந்திரநாத் (சுயே.) -13. 54. நூர் முகமது (சுயே.) -6. 55. டாக்டர் கே.பத்மராஜன் (சுயே.) -9. 56. சி.அ.பழனிசாமி (சுயே.) -21. 57. எஸ்.பால்ராஜ் (சுயே.) -5. 58. பொ.பிரதாப் குமார் (சுயே.) -18. 59. த.பிரபாகரன் (சுயே.) -12. 60. மு.பிரபாகரன் (சுயே.) -3
61. கு.புருசோத்தமன் (சுயே.) -8. 62. க.மணி கண்ணன் (சுயே.) -23. 63. க.மணிவண்ணன் (சுயே.) -26. 64. த.மயில்வாகனன் (சுயே.) -26. 65. கே.ஏ.மனோகரன் (சுயே.) -47. 66. மு.முகமது அலி ஜின்னா (சுயே.) -107 67. ஜா.முத்து பாவா (சுயே.) -364 68. மு.முகமது ஹபீழ் (சுயே.) -43 69. அ.ரவி (சுயே.) -5 70. செ.மா.ராகவன் (சுயே.) -7 71. எஸ்.பி.ராம்குமார் (சுயே.) -8 72. சு.ராஜா (சுயே) -10 73. ரா.ராஜேந்திரன் (சுயே.) -5 74. சே.லோகேஷ் (சுயே.) -12 75. எஸ்.வீரகுமார் (சுயே.) -10 76. பி.ஜெய்சங்கர் (சுயே.) -18 77. ஹ.ஷம்சுதீன் (சுயே.) -32 78. நோட்டா -798.
தோல்விகரமான வெற்றி - ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் குறித்து ஜெயக்குமார் கருத்து
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்விகரமான வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். "தொண்டர்கள், தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்துதான் செயல்படுகிறோம். காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல தான் அவர்களுக்குத் தெரிகிறது. எங்களின் கட்சி வேகமாக உள்ளது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியை பெறும் நிலையில் தான் கட்சி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் பார்த்து ஆளும் திமுக அரசு மிகப்பெரிய பயத்தில் இருந்தது. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இது போன்று அவர்கள் பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. 22 மாதங்களில் திமுக கொள்ளையடித்த பணத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செலவு செய்தனர். ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது.
அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். எங்களை பார்க்காமல் இருப்பதற்கு பணம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களை பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம். இது திமுகவிற்கு வெற்றி கிடையாது.
இனி திருமங்கலம் பார்முலா கிடையாது. ஈரோடு கிழக்கு பார்முலா தான். எந்த கட்சியும் இது போன்று சிந்திக்கவில்லை. மக்களை அடைத்து வைக்கும் கட்சி திமுக தான். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றே இடைத்தேர்தல் வெற்றி: கே.எஸ்.அழகிரி
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். முதல்வரின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றே இந்த இடைத்தேர்தல் வெற்றி. பெண்கள், உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆட்சியின் செயல்பாடு திருப்தி அளித்துள்ளது என்ற நற்சான்று கிடைத்துள்ளது. குடிநீர், மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கிறது. பெண்கள் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இவைதான் இந்த வெற்றிக்கு காரணம்.
இது போன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணமும் தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈவிகேஎஸ் குடும்பம் அரசியல் சார்ந்த கும்படும். 100 ஆண்டு காலம் தமிழகத்திற்கு அரும்பணி ஆற்றிய குடும்பம். முதல்வரின் அயராத பணி, தேர்தலில் அவர் காட்டிய ஆர்வம் மற்றும் ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனத்து இந்த வெற்றியை எங்களுக்கு ஈட்டி கொடுத்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு தெளிவு இருந்தது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த தெளிவும் இல்லை. சலனத்தோடு இருந்தார்கள். சில இடங்களில் மோடி படத்தை பயன்படுத்தினார்கள். சில இடங்களில் பாஜக கொடியை கூட அதிமுக பயன்படுத்தவில்லை. இவை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு காரணம்." இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்: டிடிவி தினகரன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,
'இரட்டை இலை இருந்தும் அதிமுகவுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைத்துள்ளது. இரட்டை இலை இல்லையென்றால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். அதிமுக, பழனிசாமியின் பிடியில் இருக்கும் வரை கட்சி மேலும் பலவீனம் அடையும், இன்னும் மோசமான நிலைமைக்குத்தான் செல்லும். மத்திய அரசின் ஆதரவு இருந்ததாலும் தொண்டர்களை தன்வசப்படுத்தியும் தலைமைப் பதவியை அடைந்துள்ளார். இது உண்மையான தலைவர் பதவி அல்ல. துரோகத்தின் மூலமே தலைமைப் பதவியை அடைந்திருக்கிறார். காலம் தக்க தண்டனை கொடுக்கும்.
திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.
மேலும் திமுக வெற்றி குறித்து பேசிய டிடிவி தினகரன், 'ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல..வாங்கப்பட்டது. விடியல் ஆட்சி என்று கூறி விடியாத ஆட்சியாகத்தான் இருக்கிறது. அனைத்திலும் ஊழல் இருக்கிறது. ஈரோடு கிழக்கில் ஒருவருக்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இது தவறான முன்மாதிரி தேர்தல். ஆட்சி. அதிகாரத்தின் மூலமாக வெற்றியை வாங்கிவிட்டார்கள்' என்று கூறினார்.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்