by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.
ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.
இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.
அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.
உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.
இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.
பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.
1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.
2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.
3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.
ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.
இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.
இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வாக்காளர் பட்டியலில் முறைகேடு? தேர்தல் ஆணையம் அதிரடி
ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 வாக்காளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கவில்லை என்றும் சுமார் 8,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருமுறை இடம்பெற்றிருப்பதாகவும் அதிமுக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சத்யபிரதா சாகுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாக்காளர்களின் விவரங்கள் கசிந்தது தொடர்பாகவும் தேர்தல் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுங்கள்: தேமுதிக மனு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுங்கள் என தேமுதிக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு பகுதியில் பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவடா நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா சார்பில் தேமுதிகவின் பிரமுகர்கள் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவலா நடைபெறுவதாகவும் பரிசு பொருள்களை வழங்கப்படுவதாகவும் எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறந்து வந்த கற்கள்.. போர்க்களமான ஈரோடு கிழக்கு தொகுதி.. பரப்புரையை விட்டு மருத்துவமனை ஓடிய சீமான்
சீமான் பிரசாரம்
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அருந்ததியர் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சீமான் புதன்கிழமை இரவு ஈரோட்டில் மீண்டும் பிரசாரம் மேற்கொண்டார்.
திமுக-நாம் தமிழர் மோதல்
அதன்படி சீமான் உள்ளிட்ட கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தனர். அங்கு திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் சீமான் பரப்புரை செய்ய தயாரானார். இந்த வேளையில் திடீரென்று நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் என்பது கடுமையாக நடந்தது.
பறந்து வந்த கற்கள்
இருகட்சியினரும் கற்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்ட கம்புகளை எடுத்து மாற்றி மாற்றி ஆக்ரோஷமாக வீசினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினரின் மண்டைகள் உடைந்தன. நாம் தமிழர் கட்சியில் 7 பேர் காயமடைந்த நிலையில் திமுகவில் ஒருவர் காயமடைந்துள்ளதா கூறப்படுகிறது. அதோடு போலீசாரும் காயமடைந்தனர்.
மருத்துவமனை சென்ற சீமான்
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சீமான் தனது பரப்புரையை பாதியில் கைவிட்டு காயமடைந்த கட்சியினர் மற்றும் போலீசாரை சந்தித்து நலம் விசாரித்து ஆதரவு கொடுத்தார். மேலும் தொடர்ந்து வீரப்பன்சத்திரம் பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஈரோடு இடைத்தோ்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் நிலையில் தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை (பிப்ரவரி 25) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் இத்தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்பட 77 போ் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அத்துடன் புகார் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
ஈரோடு இடைத்தேர்தல்: நாளைமுதல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மாலைமுதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27.02.2023 (திங்கள்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 25.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-
(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
(3) பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
(4) தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 25.02.2023 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
(5) கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.
(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 25.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
(7) ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு :-
(i) அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்
(ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும்
(iii) கூடுதலாக, அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
(10) 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (பி) ஆம் பிரிவின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் (எ.கா) 25.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது. 16.02.2023 அன்று காலை 7.00 மணி முதல் 27.02.2023 அன்று மாலை 7.00 மணிவரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை, பட்டியலின வாக்காளர்களைக் குறிவைத்து, தீவிரம் காட்டும் கட்சிகள்!
தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்திருக்கிற நிலையில் இறுதிக்கட்டமாக இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.
தமிழகமே உற்றுநோக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி தொகுதி முழுவதும் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், பிரேமலதா, ஜி.கே.வாசன், அண்ணாமலை எனத் தொகுதி முழுவதும் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுச் சென்றுவிட்டனர். இரண்டாம் கட்டமாக எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் 24, 25 ஆம் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சிறுபான்மையினரின் வாக்குகளும், பட்டியலினத்தவர்களின் வாக்குகளும் வெற்றியை நிர்ணயிப்பதாக இருக்கின்றன. குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் சுமார் 40,000 இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா, தனக்கு அடுத்த நிலையில் வந்த த.மா.கா-வின் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா-வுக்கு இஸ்லாமிய பகுதிகளிலும், பட்டியலின மக்கள் அதிக அளவில் வசிக்கும் பி.பெ.அக்ரஹாரம், வைராபாளையம், கனிராவுத்தர் குளம், கோட்டை, மஜீத் வீதி, கருங்கல்பாளையம், மரப்பாலம், முனிசிபல் சத்திரம், புதுமை காலனி, ராஜாஜிபுரம் போன்ற பகுதிகளின் வாக்குச்சாவடிகளில்தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகளை மீண்டும் பெறும் வகையில் அந்தப் பகுதியில் முகாமிட்டு தீவிர வாக்குச் சேகரிப்பில் அமைச்சர்கள் சா.மு.நாசர், செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு, தவ்ஹீத் ஜமாத், எஸ்.டி.பி.ஐ கட்சி, முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். அவ்வப்போது அந்த வார்டு மக்களைச் சந்திக்கும்போது டீ போட்டுக் கொடுப்பது, புரோட்டா சுடுவது, இளநீர் வெட்டிக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வாக்காளர்களைக் கவரும் வித்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேபோல 36-வது வார்டுக்குட்பட்ட பகுதியி்லுள்ள மஜீத் வீதி, கனி மார்க்கெட், வ.உ.சி.பூங்கா, காவேரி ரோடு, நேதாஜி ரோடு பகுதிகளில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாரும், முன்னாள் அரசு கொறடாவுமான பா.மு.முபாரக் தலைமையில் நீலகிரியைச் சேர்ந்த தி.மு.க-வினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இஸ்லாம் மதத்தின் முத்தவல்லியாக உள்ள முபாரக், வீடு, வீடாகச் சென்று பெண்களிடத்தில் வாக்குகளைச் சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருந்ததால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழக்க வேண்டிய நிலை அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட த.மா.கா-வுக்கு ஏற்பட்டது. இம்முறை அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு களம் இறங்கியிருப்பதால், அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இவரும், வீடாகச் சென்று அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகிகளின் உதவியோடு வாக்குகளைக் கவர முயற்சி செய்கிறார்.
அதேசமயம் மரப்பாலம், ராஜாஜிபுரம், முனிசிபல்சத்திரம், புதுமைக் காலனி போன்ற பகுதியில் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகளைக் கவருவதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முகாமிட்டுத் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அவருக்குத் துணையாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் பணியாற்றிவருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சியினரும் இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சேகரிக்க பகீரதப்பிரயத்தனம் செய்துவரும் நிலையில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை வளைக்க நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு விவகாரத்தில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படவில்லை எனக் கருதியதன் விளைவாக கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் அதிருப்தியடைந்து, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். அண்மையில் கிறிஸ்தவ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பிரசாரத்துக்காக வந்த சீமானைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது நாம் தமிழர் கட்சிக்கு தெம்பூட்டியிருக்கிறது.
அதேசமயம், அருந்ததியர்களை சீமான் இழிவாகப் பேசியதாகக் கூறி, பல இடங்களில் அந்த சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளைச் சேகரிப்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் சென்றபோது அவர்களைத் திருப்பி அனுப்பியது அந்தக் கட்சியினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம், தே.மு.தி.க-வினரும் இந்த வாக்குகளைப் பெறும் முயற்சியில் களம் இறங்கியிருக்கின்றனர். இருப்பினும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது இவர்களின் பிரசாரத்தில் சுறுசுறுப்பு இல்லை. தொடர்ந்து தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்திருக்கிற நிலையில், இறுதிக்கட்டமாக இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.
மக்களைக் கொட்டகையில் அடைத்துவைப்பதுதான் ஜனநாயகமா?" - ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி
``ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். தி.மு.க-வினர் எங்களுக்கு எதிராக சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறித்தான் இந்த மக்கள் கூட்டம் கூடியிருக்கிறது." - எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். வில்லரசம்பட்டி தனியார் ரிசார்ட்டிலுள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பிரசாரப் பயணத்தைத் தொடங்கிய அவர், முதலில் வீரப்பம்பாளையத்தில் பிரசாரம் செய்தார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியினர் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். அதையடுத்து வெட்டுக்காட்டுவலசு, நாராயணவலசு, சம்பத் நகர், பெரியவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த அவர், இறுதியில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பிரசாரத்தை நிறைவுசெய்தார்.
பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``தென்னரசு ஏற்கெனவே இந்தத் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணிபுரிவார். இந்தத் தொகுதியில் தேர்தல் தேதி அறிவித்தது முதல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க-வினர் வாக்குச் சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க-வினர் வாக்குச் சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் மக்களை ஆடு, மாடுகளைப்போல கொட்டகையில் அடைத்து வைத்திருப்பதுதான் ஜனநாயகமா?
மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலின், ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வேண்டிய மக்களின் ஏழ்மை நிலையைக் கருதி ரூ.2,000 வீதம் பணம் கொடுத்து கொட்டகையில் அடைத்துவைத்திருக்கிறார். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல். ஒரு முதல்வராக இருப்பவரே தேர்தல் விதிமுறைகளை மீறலாமா, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பணத்தை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள், அது உங்கள் பணம். நான் இன்று பிரசாரம் செய்ய வருவதை அறிந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக ஏழை மக்களை அடைத்துவைத்து அவர்களுக்கு ரூ.2,000 பணம் கொடுக்கிறார்கள். என்னால் மக்களுக்குப் பணம் கிடைப்பது எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். தி.மு.க-வினர் எங்களுக்கு எதிராக சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறித்தான் இந்த மக்கள் கூட்டம் கூடியிருக்கிறது. இந்தத் தொகுதியில் வெற்றியும் பெற வைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஸ்டாலினால் அ.தி.மு.க-வின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது. உண்மையான, நேர்மையான ஜனநாயக முறைப்படி மக்களைச் சந்திக்க வேண்டும். இங்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 25 அமைச்சர்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்துவருகின்றனர். உங்களுக்கு எங்களைக் கண்டு பயம், தோல்வி பயம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்களே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி சொன்னார். ஈரோட்டில் வந்து பாருங்கள். எங்களுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்கள் வழியெங்கும் காத்திருக்கின்றனர். உங்களைப்போல வாக்காளர்களை கொட்டகையில் அடைத்துவைக்கவில்லை. முன்பு நான் முதல்வராக இருந்தபோது இடைத்தேர்தல் நடந்தது. நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் எங்கும் மக்களை அடைத்துவைக்கவில்லை. அப்போதெல்லாம் நாங்கள் ஜனநாயக முறைப்படிதான் மக்களை வாக்களிக்க அனுமதித்து, அ.தி.மு.க மாபெரும் வெற்றியைப் பெற்றது. உங்களுக்குத் தைரியம் இருந்தால், எங்கள் வேட்பாளர்களை எதிர்க்கும் சக்தி இருந்தால் நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தியுங்கள். உங்களுக்கு தேர்தல் பயமும், ஜுரமும் வந்துவிட்டது.
தனக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். உங்களுக்குச் செல்வாக்கு அதிகமாக இருந்தால் எதற்காக மக்களை அடைத்துவைக்கிறீர்கள், தேர்தல் யுத்தத்தில் நேருக்கு நேராகச் சந்தித்தால் அது ஆண்மை. இதற்கு முன் நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் இது போன்ற நிலையை தமிழகம் சந்தித்ததில்லை. இந்தத் தொகுதியில்தான் கொள்ளையடித்தப் பணத்தை அள்ளி வீசி செலவு செய்கிறார்கள். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா, அதிகாரிகள் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள். காவல்துறை ஏவல்துறையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் முறையாகச் செயல்படவில்லை. 120 இடங்களில் கொட்டகை அமைத்து மக்களை அடைத்துவைத்திருக்கிறார்கள். அதை ஆதாரத்துடன் படம் பிடித்திருக்கிறோம். அதைத் தேர்தல் ஆணையத்திடம் புகாராகக் கொடுத்திருக்கிறோம்.
இந்த 21 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்கள். அதைத் தாராளமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஓர் அமைச்சர் மக்கள்மீது கல்லெடுத்து எறிகிறார். முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு கையை வெட்டுவேன் என்கிறார். எம்.பி-யே கையை வெட்டுவேன் என்று கூறியதும், தமிழகத்தில் தலையை வெட்டும் ரௌடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. 13-ம் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 9 கொலைகள் நடந்தன. இந்த அரசில் கொலை, கொள்ளை, ரௌடிஸம் எனச் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக இருப்பதால் மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறது. பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடக்கிறது. அதைப்பற்றி முதல்வருக்குக் கவலையில்லை.
எங்கள் ஆட்சியின்போதுதான் ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது. மேம்பாலம், ரூ.81 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.1,084 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது, ரூ.70 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கப்பணிகள், எங்கள் ஆட்சியில் எந்த சூழலிலும் மின்வெட்டு கிடையாது. ஈரோடு-பள்ளிபாளையம் பாலம் எனப் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறோம். ஆனால் இப்போதோ மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி, கடை வரி பல மடங்கு உயர்ந்துவிட்டது. எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதாகவும், நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 வீதம் மானியம் தருவதாகச் சொன்னார்களே... தந்தார்களா என்பதை அவர்களிடமே கேளுங்கள். மக்களை ஏமாற்றிய தி.மு.க-வுக்குப் பாடம் கற்பியுங்கள்" என்றார்.
முன்னதாக வெட்டுக்காட்டு வலசு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``தி.மு.க-வினர் கமிஷன், கரப்ஷன், கமிஷனில்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கோட்டையில் இருக்கவேண்டிய அமைச்சர்கள் நாட்டு மக்களின் பிரச்னையைத் தீர்க்காமல் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இங்கே ஓர் அமைச்சர் புரோட்டா சுடுகிறார். இதுதான் அமைச்சரின் வேலையா, நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் அமைச்சராக்கியிருக்கிறார்கள். அதைவிட்டு ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள்" என்றார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க-வினர்!
தி.மு.க-வினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக எடப்பாடி பழனிசாமி வழிநெடுகிலும் குற்றம்சாட்டினாலும், அ.தி.மு.க-வினரும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதில் தி.மு.க-வினருக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை பல இடங்களில் காணமுடிந்தது.
வீரப்பம்பாளையத்தில் ஏராளமான கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டிருந்ததுடன், மாவிலைத் தோரணங்கள், வாழை, கரும்புத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. இவற்றுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட பெண்களிடம் சிறிய குடங்களும், தேங்காயும் கொடுத்து எடப்பாடி பழனிசாமியையும், தென்னரசுவையும் வரவேற்பதற்காக பூரண கும்ப மரியாதையுடன் காத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பூரண கும்ப மரியாதை செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருப்பதாகவும், வீட்டுக்குப் போகும்போது திருப்பிக் கொடுத்தால் ரூ.500 வீதம் வழங்கப்படும் என்றும், இது தவிர நபர் ஒருவருக்கு ரூ.500 கொடுத்து தங்களை வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.
நாம் தமிழர், திமுக-வினரிடையே வலுக்கும் மோதல்... என்னதான் நடக்கிறது ஈரோடு கிழக்கில்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில், நாம் தமிழர், திமுக-வினரிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்துவருகிறது. என்னதான் பிரச்னை நடக்கிறது அங்கே?!
தொண்டர்கள் வாக்குச் சேகரிப்பு, நிர்வாகிகளின் பேரணி, தலைவர்கள் பொதுக்கூட்டம் என இறுதிக்கட்டத்தை நோக்கி பயணிக்கிறது ஈரோடு இடைத்தேர்தல். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதோடு, நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். புதன்கிழமையன்று சீமான் வாகனப் பேரணியில் ஈடுபட்டபோது, தி.மு.க-வினர் கற்களைக் கொண்டு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பான மோதலில் இரு கட்சித் தொண்டர்கள், போலீஸார் காயமடைந்தனர். வார்த்தைப் போர் முற்றி, தேர்தல் களத்தில் அடிதடி சம்பவங்களும் அரங்கேறியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் உத்தரவின்படி, நடக்கவிருந்த நா.த.க-வின் பொதுக்கூட்டமும் சில நிமிடங்களிலேயே முடித்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த மோதல் சம்பவம் குறித்து நம்முடன் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள், “மாலை பேரணி, பின்னர் பொதுக்கூட்டம் என எப்போதும் போல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றிருந்தார். இதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரசாரம் நடந்துகொண்டிருக்கும்போது, மாடியிலிருந்தவாறு கற்களையும் தடிகளையும் வீசி, சீமான் அவர்களைத் தாக்க முயன்றனர் தி.மு.க-வினர். ஏற்கெனவே பேனா நினைவுச்சின்னம் விவகாரத்தில் தி.மு.க-வினர், `தாக்குவோம், வெட்டுவோம்' எனப் பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தனர், அதன் நீட்சியாகவே இந்தச் சம்பவத்தை நாங்கள் பார்க்கிறோம்.
தி.மு.க-வினர் கற்களையும், தடிகளையும் உடன் வைத்துக்கொண்டு பிரசாரம் செய்கின்றனரா... அவர்கள் பிரசாரம் செய்ய வரவில்லை. நா.த.க பிரசாரம் செய்தால், தங்கள் வேட்பாளர் வெல்ல முடியாது என்ற அச்சத்தில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு மட்டுமே தி.மு.க-வினர் அந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். சீமான் பேசினால் மக்கள் விழிப்படைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், நாம் தமிழர் வென்றுவிடும் என்ற பயம் தி.மு.க, காங்கிரஸுக்கு வந்துவிட்டதால்தான் இப்படித் தாக்குதலில் இறங்கியிருக்கின்றனர்.
நா.த.க வேட்பாளர் மேனகா நவநீதன் அனுமதி பெறாத தெருக்களில் பிரசாரம் மேற்கொண்டாரென அவர்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க-வினரின் அனுமதி பெறாத பணிமனைகள் மூடப்பட்ட நிலையிலும், அவர்கள்மீது வழக்கு பதிவாகவில்லை. குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இந்தத் தேர்தலில் கடைப்பிடிக்கப்படவில்லை. பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் தருகிறார்கள், மக்களைச் சந்திக்கவிடுவதில்லை, இவ்வளவு அராஜகங்களைச் செய்த பிறகும் ரௌடிசம் செய்வதை எப்படி ஏற்க முடியும்... நா.த.க நிர்வாகிகள் யாருக்கும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் பிரசார களத்திலிருக்கும் தி.மு.க நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும்தான் பொறுப்பு" என்றார்.
திருமங்கலத்தை மிஞ்சும் ஈரோடு பார்முலா!
இந்த விவகாரம் தொடர்பாக நம்முடன் பேசிய தி.மு.க மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, “சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் களம் என்பது யுத்தம் என நினைத்துக்கொண்டு அநாகரிகமாகப் பேசுவது, தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதெல்லாம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உழைக்கும் மக்களான அருந்ததியினர் சமூக மக்களை `வந்தேறிகள்' எனப் பேசியதால் அவர்கள் பிரசாரம் செய்யவிடாமல் மக்கள் எதிர்க்கின்றனர்.
மேடைகளில் வீர வசனம் பேசுவதால் யதார்த்த களத்தில் மக்கள் கோபப்படுகிறார்கள். சீமானின் நோக்கம் தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. நாம் தமிழர் கட்சியினர் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருவதால் காயப்பட்ட மக்கள் தாக்க முற்படுகிறார்கள். சமீபத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் யார் முதலில் அடித்தார்கள் என்பது விசாரணையில் தெரியும்” என்றார்.
ஈரோடு கிழக்கு; திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்; இருவர் கைது - என்ன நடந்தது?
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மூன்றாமிடத்தில் இருக்கிறார். கடந்த முறை கிட்டத்தட்ட 11,000 வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்த முறை அதற்கும் அதிகமான வாக்குகளை வாங்க வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. அதே சமயம் அருந்ததியர் சமூகம் குறித்து சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதையும், நா.த.க-வினர் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எதிர்ப்புகள் கிளம்புவதையும் பார்க்கிறோம். ஆகவே நாம் தமிழர் கட்சி பிரசாரம் செய்யும் இடங்களில் பாதுகாப்புகளைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்.
அதோடு கடுமையாக விமர்சித்துக்கொள்கிற தி.மு.க-வும் நா.த.க-வும் நேரடியாகச் சந்திக்கும் பகுதிகளில் சில கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் பிரசாரம் செய்ய நாம் தமிழர் கட்சியினர் முறையாக அனுமதி பெற்றிருந்த நிலையில், அந்த இடத்தில் எதிர்தரப்பினர் வந்து வாக்குவாதம் செய்து மோதல் ஏற்பட்டால் நாம் தமிழர் கட்சியினை எப்படிக் குறை சொல்ல முடியும்... பாதுகாப்பைப் பலப்படுத்தி மோதல் வராமல் பார்த்துக்கொள்வது போலீஸாரின் கடமை. மேலும் ஆளும் தரப்பு, போலீஸார் அவர்கள் பக்கம்தான் நிற்பார்கள் என்ற விமர்சனங்கள் எழுப்பப்படும் என்பதால் இந்த மாதிரியான விவகாரங்களில் தி.மு.க-வினர் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்" என்கிறார்.
``பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சியினர், மக்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருக்கும் ஆளுங்கட்சியினர் என விதிமீறல்களும், அவலங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டுமெனத் தேர்தல் ஆணையம் நினைத்தால் தேர்தலை ரத்து செய்வதுதான் ஒரே வழி" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.
``பிரசாரக் களத்தில் அரசியல் கட்சிகள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மேலும் பதற்ற சூழல்களில் கட்சி பேதமின்றி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியது காவல்துறையின் தலையாய பொறுப்பு" என சமூகச் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
‘கதவைத் திறங்கள்... காத்திருக்கிறது பரிசு’ - ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் ‘கவனிக்கப்படுவது’ எப்படி?
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, திமுக மற்றும் அதிமுகவினர் ‘பரிசு மழை’ பொழிந்து வருவதால், தொகுதி முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதேவேளையில், இந்தப் போக்கு சமூக ஆர்வலர்களையும், அரசியல் நோக்கர்களையும் கவலையடைச் செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நாளை (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர், பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை பாகம் வாரியாக பிரித்து, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பது குறித்த விபரம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சி நிர்வாகிகள் கையிலும் உள்ளது.
பணப் பட்டுவாடா தீவிரம்: கடந்த இரு நாட்களாக பணம் மற்றும் பரிசுப் பொருள் பட்டுவாடா தீவிரமடைந்துள்ளது. திமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 3000, அதிமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ.2000 என தொகுதி முழுவதும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் பேசியபோது, அவர்கள் அளித்த தகவல்: “கடந்த 10 நாட்களாகவே, திமுகவினர் தொடர்ந்து வீட்டுக்கு வந்து வாக்குகளை சரிபார்த்து, எங்களுடன் நட்பாக உள்ளனர். மாலை நேரங்களில் அவர்களது கூடாரத்திற்கு சென்று மூன்று மணி நேரம் அமர்ந்திருந்தால் ரூ.500 மற்றும் உணவு கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில், பெரும்பாலான வீடுகளுக்கு ஆடு, கோழி, மீன் இறைச்சி வழங்கப்பட்டது. காதணி விழா என்ற பெயரில் வெவ்வேறு இடங்களில் பிரியாணி விருந்தும் கொடுக்கப்பட்டது. இதற்கென வாகன வசதியும் செய்து தரப்பட்டது.
டோக்கனால் கூடும் எதிர்பார்ப்பு: சில பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, மேட்டூர் அணை, ஏற்காடு, சென்னிமலை, கொடிவேரி அணை என பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இது தவிர குக்கர், வெள்ளிக் கொலுசு, வேட்டி, சேலை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக வெள்ளி டம்ளர், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகப் பொருட்களான, பால் குக்கர், தயிர் கடையும் ஜார், காய்கறி வெட்டும் இயந்திரம், லேப்டாப் பேக் உள்ளிட்டவையும் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட வாக்குகள் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு, வாஷிங் மிஷின் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதோடு, வீடுகள் தோறும் ஒரு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நாளில், உங்களுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது என்று டோக்கனை வழங்கிய திமுகவினர் தெரிவித்துள்ளனர். என்ன பரிசு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவினரைப் பொறுத்தவரை, அதிக அளவில் வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வாக்குகள் உள்ள வீடுகளுக்கு வெள்ளிக் கொலுசு, சிறிய அகல் விளக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளியிலான சிறு டம்ளர் வழங்கப்பட்டது. யார் கதவைத் தட்டினாலும், என்ன பரிசு கிடைக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்புடன் அனைவரும் இருக்கும் நிலை உள்ளது” என்று அவர்கள் கூறினர்.
வைரலாகும் வீடியோ: திமுக சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி டம்ளர் அளவில் பெரியதாக உள்ள நிலையில், அதிமுகவினர் வழங்கிய வெள்ளி டம்ளர் மிகச் சிறியதாக உள்ளது. அதிமுகவினர் வழங்கிய பரிசு, எதற்கும் பயன்படாது என்பது போல், திமுகவினர் தயாரித்துள்ள கலகலப்பான வீடியோவும் தொகுதியில் வைரலாகி வருகிறது.
பரிசுப்பொருள் விநியோகம் குறித்து ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறும்போது, “குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, உடனுக்குடன் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். இங்கு யாரும் பரிசுப்பொருள் கொடுக்கவில்லை என்று வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்