by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.
ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.
இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.
அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.
உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.
இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.
பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.
1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.
2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.
3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.
ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.
இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.
இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
'திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம் இது' - மு.க.ஸ்டாலின் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, 20 மாத திமுக திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார். இதையொட்டி திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள், மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகக்கூடிய மாபெரும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டேன். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரத்தில் 4 ஆம் தர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி.
20 மாத திமுக - திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், வெற்றிக்காக உழைத்த அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.
நாடாளுமன்றத் தேர்தலில் இதைவிட மாபெரும் வெற்றி பெறுவோம்' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், 'நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் இருக்கிறேன். அதுகுறித்துதான் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறேன்.
யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் இப்போதைய எங்கள் கொள்கை' என்றார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுவரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார்.
இதையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக எம்.பி. டி.ஆர். பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு பொன்முடி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது வெற்றியை கொண்டாடும் நிலையில் நான் இல்லை என அவர் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்த அவர் மேலும் கூறிய போது ’முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் ஈரோட்டில் நிறைவேற்ற வேண்டிய பணிகளை எனது மகன் விட்டுச் சென்ற நிலையில் அந்த பணிகளை நிறைவேற்ற எனக்கு ஈரோடு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளதால் ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்று பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறும் என்றும் இந்த தேர்தலை முடிவு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட கனிமொழி உதயநிதி கமல்ஹாசன் உள்ளிட்டவருக்கு எனது நன்றி என்றும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்றும் இந்த வெற்றி மிகப்பெரிய என்றாலும் இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கில் பணநாயகத்திற்கு வெற்றி, ஜனநாயகத்திற்கு தோல்வி: தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிக அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். சற்று முன் வெளியான தகவலின் படி ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 53 ஆயிரத்து 548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 19360 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பதும் ஈபிஎஸ் இளங்கோவன் சுமார் 30000 பாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து சற்றுமுன் விரக்தியுடன் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரே ஒரு பதில் தான் நான் கூற விரும்புகிறேன் அது ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
7 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு.. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை: ஈரோடு தேர்தல் வினோதம்..!
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏழு சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது என்றும் ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல் ஐந்தாவது சுற்றில் முடிவில் ஏழு வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே உள்ளார்கள் என்றும் 73 வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ராஜேந்திரன் என்பவர் தனது ஓட்டை கூட அவருக்கு போடவில்லை என்பதும் அவரது குடும்பத்தினர் கூட அவருக்கு ஓட்டு போடவில்லை என்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 73 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்கள் அனைவருமே தோல்வி அடைந்துள்ளனர் என்பது மட்டுமின்றி டெபாசிட் இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் மற்றும் தேமுதிக வேட்பாளரும் தங்களுடைய டெபாசிட் இழந்துள்ளனர். விளம்பரத்துக்கு மட்டும் போட்டியிடும் வேட்பாளர்களை தவிர்க்க வேண்டும் என்றும் இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர் எதற்காக போட்டியிட்டார் என்பதே தெரியவில்லை என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு: ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்..!
ஈரோடு இடைத்தேர்தலில் நான்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் 73 சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இந்த நிலையில் போட்டியிட்ட இளங்கோவன் தவிர இந்த தேர்தலில் போட்டியிட்ட 76 பேர்களில் அதிமுக வேட்பாளர் தென்னரசு மட்டுமே டெபாசிட் பெறுவார் என்றும் மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் கிடைக்கும் என்ற நிலையில் அவர் 40 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அதிமுக வேட்பாளர் மட்டுமே டெபாசிட் வருவார் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து மீதமுள்ள 75 வேட்பாளர்களும் டெபாசிட் தொகை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சுயேட்சை விட குறைவான வாக்குகள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முன்பு திருமங்கலம் இடைதேர்தலில் அதைவிட சாகசங்கள் நடந்தன அய்யா கருணாநிதி அவர்களே தன் மகன் மு.க அழகிரியினை பார்த்து "இவரிடம் கற்றுகொள்ள நிரம்ப உண்டு" என சொன்ன தருணமும் உண்டு
இடைதேர்தல் முடிவுகள் அப்படித்தான் இருக்கும் அவற்றை கொண்டு வருங்கால தேர்தலை கணிப்பது சரியல்ல
ஏதோ இருவார காலம் தொகுதி மக்கள் சந்தோஷமாக இருந்தார்களா , வயிறும் பையும் நிரம்பிற்றா என்பதை தவிர ஏதும் சொல்வதற்கில்லை
வெற்றி என்றால் வடகிழக்கு மாகாண தேர்தலில் பாஜக தன்னை தக்க வைத்து நிற்கின்றதல்லவா அது வெற்றி
முன்பு நேபாள மாவோஸ்டுகளின் அடுத்த குறி இவையாக இருக்கலாம் , பர்மா சீனா போன்ற நாடுகளில் இருந்துவரும் மிரட்டல் இந்த மகாணங்கள் மூலம் தேசத்தின் தலைவலியாகலாம் எனும் அச்சம் இருந்தது
அது அடியோடு களையபட்டிருக்கின்றது, பாஜக அந்த அதிசயத்தைச் செய்திருக்கின்றது, பாஜக தேசத்தின் காவல் அரண் எனும் நம்பிக்கை தேசாபிமானிகளுக்கு உற்சாகத்தை கொடுக்கின்றது
ஆக அடுத்த பிரதமர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் மோடி என்பது தெரிகின்றது அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கமுடியும்
#பிரம்ம_ரிஷியார்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்.,அபார வெற்றி!
ஈரோடு :ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் இளங்கோவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளரை விட, 66 ஆயிரத்து, 233 ஓட்டுகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., 'டிபாசிட்'டை தக்க வைத்த நிலையில், நாம் தமிழர் என்ற கட்சியின் வேட்பாளர் மற்றும் தே.மு.தி.க., உட்பட தொகுதியில் போட்டியிட்ட மற்ற 75 பேரும் டிபாசிட் இழந்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் மறைவை தொடர்ந்து, தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் திருமகன் தந்தை இளங்கோவன், அ.தி.மு.க.,வில் தென்னரசு, தே.மு.தி.க.,வில் ஆனந்த், நாம் தமிழர் என்ற கட்சியில் மேனகா உட்பட, 77 பேர் போட்டியிட்டனர்.
தி.மு.க.,வில், அமைச்சர்களே தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு, 3,000 ரூபாய், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி பொருட்களை பரிசாக அள்ளி வீசினர்.
'அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லும்' என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் உற்சாகமான பழனிசாமி தரப்பினரும் பிரசாரத்தை தீவிரப்படுத்தினர்.
தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, அ.தி.மு.க.,வினரும், வாக்காளர்களை கவரும் வகையில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய், வெள்ளி விளக்கு, கிண்ணம் என கொடுத்து அசத்தினர்.
மற்ற எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வகையில், வாக்காளர்களை ஒரே இடத்தில், 'பட்டி'யில் அடைத்து வைத்து, மற்ற கட்சியினர் அவர்களை சந்திக்க விடாமல், தி.மு.க., கூட்டணி, புதிய 'பார்முலா'வையே இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தியது.
இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் பிரசாரம் செய்தார். தென்னரசை ஆதரித்து, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி நான்கு நாட்கள் தீவிர பிரசாரம் செய்தார்.
வாக்காளர்களை பணம் மற்றும் பரிசு மழை என, கடைசி கட்டம் வரை பட்டுவாடா கனஜோராக நடந்தது. கடந்த மாதம் 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
தொகுதியில், 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ள நிலையில், 81 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என, 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்; இது, 74.79 சதவீதம்.
இந்த ஓட்டுகள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டன. காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளையும், 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் எண்ணும் பணி துவங்கியது.
தபால் ஓட்டு துவங்கி, கடைசி சுற்று ஓட்டு எண்ணிக்கை வரை காங்., வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இறுதியாக அவர், 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 ஓட்டுகள் பெற்றார்.
எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு, 43 ஆயிரத்து 923 ஓட்டுகள் பெற்று, டிபாசிட்டை தக்க வைத்துக் கொண்டார்.
இறுதியில், இளங்கோவன், 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாம் தமிழர் என்ற கட்சியின் வேட்பாளர் மேனகா, 10 ஆயிரத்து 827 ஓட்டுகளும், தே.மு.தி.க., வேட்பாளர் ஆனந்த், 1,432 ஓட்டுகளும் பெற்றனர்.
தொகுதியில் மொத்தம் போட்டியிட்ட, 77 வேட்பாளர்களில், இவர்கள் இருவர் உட்பட, 75 பேர் டிபாசிட் இழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி
மொத்த ஓட்டுகள் - 2,27,547
பதிவான ஓட்டுகள் - 1,70,192
இளங்கோவன் - காங்., - 1,10,156
தென்னரசு - அ.தி.மு.க., - 43,923
மேனகா - நா.த.கட்சி - 10,827
ஆனந்த் - தே.மு.தி.க., - 1,432
ஓட்டு எண்ணும் மையத்தில் 'கெடுபிடி'
தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காலை 11:00 மணி வரை முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையை முறையாக அறிவிக்கவில்லை.ஆனால், சென்னையில் இருந்து மூன்று சுற்று எண்ணியதாகவும், அதற்கான விபரமும் தொடர்ந்து, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் உலா வந்தன. ஓட்டு எண்ணும் அறையில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் வெளியாகின. இதனால், செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள், ஓட்டு எண்ணும் அறையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், ''எல்லாம் தேர்தல் ஆணைய விதிப்படிதான் நடக்கிறது,'' என்றார்.'எவ்வாறு வீடியோக்கள் வெளி வருகின்றன? அனுமதி பெறாத பலர் உள்ளே இருக்கின்றனரே?' என, செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் பதில் கூறவில்லை.சிறிது நேரத்தில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்து கூறியதாவது:தேர்தல் ஆணைய விதிப்படி, செய்தியாளர்கள், போட்டோகிராபர்களை குறிப்பிட்ட நேரம் அனுமதித்தோம். ஓட்டுப்பதிவு ரகசியங்கள் வெளியாகும் என்பதால், முழுமையாக அனுமதிக்க இயலாது. தேவையானால், சிலரை அனுமதிக்கிறோம். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், தேர்தல் ஆணைய அனுமதி பெற்று, 'மைக்'கில் அறிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்
.ஆனால், அவர் கூறிய நடைமுறை, இறுதி வரை கடைபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்த, பல மணி நேரத்துக்கு பின்னரும் முறையாக அறிவிக்கப்படவில்லை. அதே நேரம், தி.மு.க., தொடர்பான பல, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், ஒவ்வொரு சுற்று விபரமும் முழுமையாக வெளி வந்தது.
நான்கு தேர்தல்களில் இது தான் அதிகம்!
ஈரோடு கிழக்கு தொகுதி மறுசீரமைப்பில் 2008ல் உதயமானது.
கடந்த 2011ல் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வின் சந்திரகுமார், 69 ஆயிரத்து 166 ஓட்டும், எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.,வின் முத்துசாமி 58 ஆயிரத்து 522 ஓட்டும் பெற்றனர். சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்
அடுத்து நடந்த, 2016 தேர்தலில், அ.தி.மு.க.,வின் தென்னரசு 64 ஆயிரத்து 879 ஓட்டும், எதிர்த்து நின்ற தி.மு.க.,வின் சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 ஓட்டும் பெற்றனர். தென்னரசு 7,794 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்
கடந்த, 2021 தேர்தலில், காங்., திருமகன் 67 ஆயிரத்து 300 ஓட்டும், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., யுவராஜா 58 ஆயிரத்து 396 ஓட்டும் பெற்றனர். திருமகன் 8,907 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்
தற்போது காங்., இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 ஓட்டு, அ.தி.மு.க., தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டு பெற்றுள்ளனர். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தொகுதி உதயமாகி சந்தித்த நான்காவது தேர்தலில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றுள்ளார்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்