புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 2:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கருத்துப்படம் 12/04/2024
by mohamed nizamudeen Today at 10:56 am

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by ayyasamy ram Today at 10:32 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Today at 8:33 am

» இணைய தள கலாட்டா
by ayyasamy ram Today at 8:32 am

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by ayyasamy ram Today at 7:19 am

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by ayyasamy ram Today at 7:17 am

» கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..!
by ayyasamy ram Today at 7:10 am

» ’கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by ayyasamy ram Today at 7:06 am

» மும்பை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
by ayyasamy ram Today at 7:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» இதுதான் சின்னச்சின்ன ஆசையா?
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:06 pm

» கட்டில் ரொம்ப சிம்பிளா இருக்கணும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:11 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:10 am

» புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா...
by ayyasamy ram Wed Apr 10, 2024 6:38 pm

» வீழ்ந்த இடத்தில் தேடிப்பார்! – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:14 pm

» சுய சமாதானம்!- வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:13 pm

» புருஷன் பொண்டாட்டி ஜோடியா செக் அப்- 20% தள்ளுபடி – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:12 pm

» பதில்கள் இருவகை! – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:11 pm

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:09 pm

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

» சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:06 pm

» மாலை நடைப் பயிற்சியின் 6 அற்புத நன்மைகள்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:05 pm

» எலுமிச்சை சாறு – சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:03 pm

» கேரட் சாறு…(சின்னச் சின்ன கை வைத்தியம்)
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:02 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Tue Apr 09, 2024 9:41 pm

» என்ன இப்புடிபொசுக்குனு கேட்டுட்டீங்க?
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:38 pm

» வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
by tamilan_prabha Tue Apr 09, 2024 8:34 pm

» அவ்வளவு வெயிலா அடிக்குது..?
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:32 pm

» வெயிலும் கடந்து போகும்..!!
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:14 pm

» மக்களவைத் தேர்தல் 2024- -தொடர் பதிவு
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Apr 09, 2024 7:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Apr 09, 2024 5:09 pm

» முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:55 pm

» எதிர்மறை விமர்சனங்களால் டல்லடிக்கும் விஜய் தேவரகொண்டாவின் பேமிலி ஸ்டார்!
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:54 pm

» ராமாயணம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:53 pm

» நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் "வானரன்"
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:52 pm

» மூத்த அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:50 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by ayyasamy ram Tue Apr 09, 2024 2:47 pm

» வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Apr 09, 2024 2:43 pm

» தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை
by Dr.S.Soundarapandian Tue Apr 09, 2024 1:15 pm

» என் மனைவியை விட எனக்குத்தான் பவர் அதிகம்..!!
by Dr.S.Soundarapandian Tue Apr 09, 2024 1:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
50 Posts - 42%
heezulia
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
44 Posts - 37%
Dr.S.Soundarapandian
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
15 Posts - 13%
mohamed nizamudeen
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
4 Posts - 3%
sugumaran
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
3 Posts - 3%
Shivanya
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
1 Post - 1%
Kavithas
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
1 Post - 1%
prajai
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
1 Post - 1%
tamilan_prabha
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
163 Posts - 45%
heezulia
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
111 Posts - 31%
Dr.S.Soundarapandian
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
52 Posts - 14%
sugumaran
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Kavithas
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
cordiac
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
King rafi
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
1 Post - 0%
tamilan_prabha
[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 12 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[இலக்கியம்] நற்றிணை


   
   

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 9:53 am

First topic message reminder :

முகவுரை    தமிழிலுள்ள நூல்களுள் காலத்தால் மிக முந்தியவை சங்க இலக்கியங்கள். கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை. பாவகையாலும், பொருள் பட்டு, எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன. இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும், குறிப்பிட்டுள்ளனர்.

    [You must be registered and logged in to see this link.] நூல்களாவன; [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] என்பனவாம். இவ் வரிசை,

    நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
    ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
    கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம், என்று
    இத் திறத்த எட்டுத் தொகை.என்ற பாடலில் காணும் அடைவுமுறையாகும். இம் முறையில் நூல்கள் தொகுக்கப்படவில்லை என்றும், தொகை நூல்களுள் குறுந்தொகை முதலாவதாகவும், ஏனைய நூல்கள் அதன் பின்னராகவும், தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    ஒட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டது போலும்.

    'நற்றிணை நானூறு' என்றும் இது வழங்கப்பெறும். 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.

    நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே. அகப் பொருட் பாடல்களின் பொருள் விளக்கத்திற்கு இத் திணை விளக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தாலும், அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றில் திணைப் பாகுபாடு பழமையாகவே உள்ளமையாலும், இந் நூலுக்கும் திணைப் பாகுபாடு பாடல்களின் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.


கடவுள் வாழ்த்து'மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன்' - என்ப-
'தீது அற விளங்கிய திகிரியோனே.'பாரதம் பாடிய பெருந்தேவனார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:06 am

123. நெய்தல்உரையாய்- வாழி, தோழி!- இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
கானல் ஆயமொடு காலைக் குற்ற 5
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் 10
சிறு விளையாடலும் அழுங்கி,
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.தோழீ வாழி!; கரிய கழியின் கணுள்ள மீனாகிய இரைகளைத் தின்ற குருகுகளின் நிரையாகிய பறவைக் கூட்டம்; வளைந்த பனை மடலின் கண்ணே கட்டிய குடம்பைகளில் நிறைந்த இருட்பொழுது நெருங்கியுறையாநிற்கும்; பனை மரங்கள் உயர்ந்த வெளிய மணற்கொல்லையைச் சூழ்ந்த; கானலிடத்து நின் ஆயத்தாரோடு காலையிலே சென்று கொய்து கொணர்ந்த தேன்மணம் வீசும் மலரையுடைய ஈரிய நறிய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை அழகு பொருந்த உடுத்து; கோல மிடுதலையுற்ற சிற்றில் புனைந்து சிறப்ப விரைந்தோடி விளையாடி; புலவு நாற்றத்தையுடைய அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழாகச் செல்லுகின்ற சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக்கின்ற ஞெண்டுகளை நோக்கி மகிழாநிற்குஞ் சிறிய விளையாட்டும்; இல்லையாம்படி வருத்தம் எய்துமாறு நினக்குத் தானுற்ற பெரிய துயரமாகிய நோயை நீ கூறாய்!

தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - காஞ்சிப் புலவனார்Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:06 am

124. நெய்தல்ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று-
நீங்கல்; வாழியர்; ஐய!- ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், 5
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; மான்களின் வலிய குளம்பினால் மிதிபட் டழுந்துகையினாலே; வெள்ளியை மூசை (குகை)யிலிட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பமுறும்படி அவற்றினின்று தௌ¤ந்த நீர்க் குமிழியாக வடியும்; தண்ணீரைப் பெற்றுநின்ற கூதிர்ப்பருவமாகிய; அதுதானும் வந்திறுத்துவிட்டது; ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக!

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது. - மோசி கண்ணத்தனார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:07 am

125.குறிஞ்சி'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, 5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்- தோழி!- மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, 10
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.தோழீ! தனக்கு வேண்டும் இரையை நாடுகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடி வளைந்த வரிகளையுடைய புற்றுக் கிடைத்தலும்; அதனைப் பெயர்த்து அதன்கண்ணே உறைகின்ற நல்லபாம்பு நடுங்குமாறு முழங்கி இரும்புசெய் கொல்லன் ஊதுகின்ற உலை மூக்கே போல உள்ளே பெருமூச்செறிந்து பறிக்காநிற்கும்; இரவு நடுயாமத்தில் நீயிர் வருதலையறிந்து யாம் அஞ்சுகின்றோமென்று கூறி இனி வரைந்து எய்தும்படி இரந்து கேட்போமாயின்; நமது மலையின்கண்ணே நாள்நீட்டியாது நல்ல நாளில் நம்மை மணம் புரிந்துகொண்டு; வேங்கை மலர் மாலை சூடுகின்ற குறவர் எருதையோட்டிக் கதிர்ப் போரடிக்கும் மருதநில மாந்தர் களம் செப்பஞ் செய்தாற் போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய கற்பாறையிலே; மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும் பொருட்டு; வைகறையிலெழுமாறு துஞ்சுகின்ற களிறு முழங்கி எழுப்பாநிற்கும்; தமது பெரிய மலை நாட்டகத்தே நம்மொடு மெல்லச் செல்வார்காண்!;

வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:08 am

126. பாலைபைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் 5
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால், 10
நில்லாப் பொருட் பிணிச் சேறி;
வல்லே- நெஞ்சம்!- வாய்க்க நின் வினையே!நெஞ்சே! நல்ல மேலிடமெல்லாம் பசுங்காய் நிறமாறிச் செங்காயாகிப் பின்னர்க் கருங்களியாய் உதிர்கின்ற கனியையுடைய ஈத்த மரங்கள் மிக்க; வெளிய புறத்தினையுடைய களர்நிலத்திலே பட்ட புழுதிபடிந்த கடிய நடையையுடைய களிற்றியானை; நெறியிலே செல்லுபவரைக் கண்டு கொல்லுவதற்கு விரும்பி விடியற்காலத்தில் சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்று ஆங்கு விரைவில் வரும் அயலார் யாரையும் காணாது; தான் கொண்டிருந்த அச் சினத்தைப் பனைமரத்தின் மோதி அப்பால் அடங்குகின்ற பாழ்த்த நாட்டினையுடைய பாலை நிலத்திலே; சென்று ஈட்டப்படும் பொருளும் ஓரின்பத்தைத் தருமெனில், இளமையின் சிறந்த வளமையும் இல்லை அதுதானும் இளமையில் நுகரும் காமவின்பத்தினுங்காட்டிற் சிறந்த இன்பமாமோ? இல்லையே! அங்ஙனமாக அத்தகைய வின்பத்தைத் தரும் வளமை சிறந்ததாகுமோ? இல்லையன்றோ! இளமை கழிந்தபின்றை வளமை காமந்தருதலும் இன்றே அத்தகைய காமவின்பந்தான் இளமையிலேயே துய்க்கலாவதன்றி முதுமையின் கண்ணே துய்க்கப்படுவ தொன்றாகுமோ? இல்லையே! இளமைப் பருவத்தைப் பொருளீட்டுதலிலே கழித்துவிட்டாலோ அப் பொருள்வளம் முதுமையின்கண்ணே காமவின்பத்தைத் தருதற்கும் இயையுமோ? இல்லையே; ஆதலின் இவற்றை ஒருசேர ஆராய்ந்து நிலைநில்லாப் பொருளாசை நின்னைப் பிணித்தலாலே இக் காமவின்பத்தினைக் கைவிட்டு விரையச் செல்கின்றனை ஆயிற்சென்றுகாண்! நின் செயல் நினக்கு வாய்ப்புடைத்தாவதாக!;

பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:08 am

127. நெய்தல்இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ?- பாண!- பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், 5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
'மெல்லம் புலம்பன் அன்றியும்,
செல்வாம்' என்னும், 'கானலானே'.பாணனே! எம் பேதையானவள் கொழுவிய மீனை யுண்ணுதலையுடைய செழுமையுற்ற மாளிகையில் நிறைந்த தன் ஐயன்மார் தமது தொழிலன்றி ஏனைய ஒன்றுங் கல்லாத சினமுடையராயிருப்பவும்; பண்டு தோழியரோடு தான் வண்டல் விளையாட்டு அயர்தற்குத் தான் ஈனாது வைத்த பாவை தலைக்கீடாகக் கொண்டு; அந்த மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனை அல்லாமலும் கழிக்கரைச் சோலையின்கண் விளையாடச் செல்வோமாக என்று கூறாநிற்பாள்; அதனால் கரிய கழியிலே இரை தேடித் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரை தன் சிறகை உதறுகின்ற திவலையாலே குளிர்ந்து நடுங்குகின்ற நமது பாக்கத்தில்; அந்த மெல்லம்புலம்பன் வருதலால் யாது பயனோ? ஆதலின் அவன் இனி வரற்பாலன் அல்லன்காண்!

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - சீத்தலைச் சாத்தனார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:09 am

128. குறிஞ்சி'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே' என்று, நனி 5
அழுதல் ஆன்றிசின்- ஆயிழை!- ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு 10
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து கொள்ளப்பட்ட திங்களின் ஒளி கெடுதல் போல நெற்றியின் ஒளி மறைபடவும் அக்காரணத்தை நீ எனக்கு உரைத்தாயல்லை; நினக்கு யான் ஓருயிரை இரண்டுடம்பின் கண்ணே பகுத்துவைத்தாற் போன்ற நின்னோடு தொடர்ச்சியுற்ற மாட்சிமையுடையேனாதலால் நீ இப்பொழுது மறைத்தொழுகு மதனை யான் அறிந்துளேன் என்று நீ கருதி; யான் நினக்கு அதனை உரையாததன் காரணமாக மிக அழுது வருந்தாநின்றனை; இனி இங்ஙனம் அழாதேகொள்!; தலை சாய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தே காவல் செய்யுமிடத்துக் கண்ணி சூடிக் கழல் அணிந்து மாலை வேய்ந்துளனாகி ஒருவன் வந்துற்று உள்ளங் குளிர்பூறும்படி என் முதுகை அணைத்துப் புல்லினனாக; அது முதற்கொண்டு அதனையே கருதிய உள்ளத்துடனே இப்பொழுது யான் உற்ற நோய் இத்தன்மையதாய் இராநின்றது;

குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம். - நற்சேந்தனார்சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:10 am

129. குறிஞ்சிபெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை 5
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.தோழீ! காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுற்ற கூந்தலையுடையாய் ! பெரு நகை கேளாய் யாவரும் பெரிதும் நகைக்க வல்ல ஒரு செய்கையைக் கேட்பாயாக!; நம்மை அவர் இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தமியராய் வினைவயிற் செல்லக் கருதியுள்ளார் என்று உழையர் கூறாநிற்பர்; அவர் தனியே சென்று தமது வினை முடித்து வருமளவும்; நிறம் விளங்கிய படப்பொறியையுடைய அரவினது தலை நடுங்கும்படி பெய்கின்ற மழையிடையிட்ட இடியினது முழங்குகின்ற முழக்கத்தை; இரவு நடுயாமத்துந் தமியமாய் இருந்து கேட்டு நாம் நமது மனையின்கண்ணே அதன் மேலும் உயிர் வாழந்திருக்ககடவே மென்றுங் கூறாநிற்பர்; இஃதென்ன கொடுமை காண்!

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது. - அவ்வையார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:11 am

130. நெய்தல்வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? 5
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் 10
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.தோழீ ! தௌ¤ந்த ஓசையையுடைய இடமகன்ற தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமை இடையில் ஒலிப்ப; குற்றமின்றி எல்லா இலக்கணமும் நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோலாலெறிந்து செலுத்தி; விடியற்காலையிலே புறத்தே தோன்றிச் சென்ற செம்மையாகிய நீர்மையையும் பொதுவாகிய செயலையும் உடைய நம் காதலர்; பழைமையாகிய இவ்வூரின்கண்ணே தமதாகச் செய்யப்படுகின்ற இல்வாழ்க்கையினுங்காட்டில் இனியதொரு பொருளும் உண்டோ? அதனை அறியாராய் வேறொரு பொருளுண்டென அகன்று விட்டனர்; எவ்வளவு விருப்புடையவராயினும்; இப்பொழுது எம்மை நினையாதவராயினர்; அன்றியும் அவருக்கு உடன்பட்ட என்னெஞ்சும் நெகிழ்ச்சியுற்ற தோளும் வாடிய எனது நிறமும் பார்த்து; பாணித்தலின்றி இப் பெரிய துன்பம் உற்றவள் என்ன காரியம் செய்து கொண்டனளோ? என்று ஒரு நாளேனும் கூறினாரிலர்; யானடைந்த துன்ப நோயோ விரிந்த கடல் நீர் சூழ்ந்த நிலத்தின் எல்லையளவையும் கடந்தன; இனி உசாவுந் துணை வேறியாதுமில்லை; இனி எவ்வண்ணம் உய்வேன்?

பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது. - நெய்தல்தத்தனார்சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:11 am

131. நெய்தல்ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ- உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, 5
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள்ளின் மணங் கமழும் 'பொறையாறு' என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர் மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ?;

மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:12 am

132. நெய்தல்பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் 5
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்; 10
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன் மேலும் 'காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ!' என்று கூறாநின்ற; யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ?

காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.


Sponsored content

PostSponsored contentPage 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக