புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
29 Posts - 63%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
8 Posts - 17%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
194 Posts - 74%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
35 Posts - 13%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
8 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 56 of 60 Previous  1 ... 29 ... 55, 56, 57, 58, 59, 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 29, 2023 9:13 pm

29.08.2023

     விஷால் பிறந்த நாள்      [1975] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 0CAvyRX   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 D3V3P3f

நடிக்க வர்றதுக்கு முன்னால ஆக் ஷன் ஹீரோ அர்ஜூன்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா  இருந்தார். விஷால் ஃபில்ம் ஃபேக்டரி சொந்தமா வச்சு படங்களை தயாரிக்கிறார். விநியோகமும் செய்றார். சினிமா தயாரிப்பாளர் GK ரெட்டி விஷாலின் அப்பா. தாய் மொழி தெலுங்கா இருந்தாலும் தமிழ் படங்கள்ல ப்ரபலமானார். 

காலேஜ் படிப்பு முடிஞ்சவுடனே விஷாலின் அம்மா அப்பா அவரை நடிக்க போக சொன்னாங்க. விஷாலின் காலேஜ் ப்ரோஃபஸர் ஒருத்தரும் அதையே சொன்னார். விஷால் நடிக்க போய்ட்டார். ஹீரோவா நடிச்ச முதல் படம் செல்லமே 2004. இந்த படத்தில நடிக்க செலெக்ட் ஆன பிறகு நடிப்பை பற்றி நல்லா கத்துக்கிடறதுக்கு விஷால் கூத்து பட்டறைல சேந்தார். அதுக்கப்புறம் இவர் நடிச்ச சண்டை படங்களை பார்த்த சினிமாக்காரங்க, சீக்கிரமா முன்னேறும் ஆக் ஷன் ஹீரோ விஷால்னு சொன்னாங்க. 

விஷால் தயாரிச்ச முதல் படம் பாண்டிய நாடு 2013. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவரா இருக்கார். TV நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டார். ஒரு படத்தில ஒரு பாட்டு பின்னணி பாடியிருக்கார். 

விஜய் படத்தில வில்லனா நடிக்க விஷாலை கூப்ட்டாங்க. விஷால் வேற படங்கள்ல நடிச்சிட்டு இருக்கிறதால டைம் இல்லேன்னு சொல்லிட்டார். அந்த சமயத்தில இல்லேன்னாலும் அப்புறமா விஜய் படத்தில நடிப்பார்னும், தன்னோட டைரக் ஷன்ல விஜய்யை நடிக்க வைக்க போவதாவும் விஷால் சொல்லியிருக்கார். இப்போ துப்பறிவாளன் 2 படத்தோட டைரக்ட்டராவும்  உருவெடுத்திருக்கிறார். 

விருதுகள்
கலைமாமணி, நார்வே தமிழ் சினிமா விழா விருது 
3வது தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - பாண்டிய நாடு - சிறந்த நடிகர் & சிறந்த அறிமுக தயாரிப்பாளர் 

நன்றி  : விக்கி, maalaimalar, tamil.filmibeat, 


என்னம்மோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே என்னம்மோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே 

சண்டக்கோழி   ௨௦௦௫
 
சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் 

சிவப்பதிகாரம்    2006  

மஞ்சசேல மண்டகினி மாமன் தின்ன மாங்கா கனி மாம்பழத்த மாம்பழத்த கடிக்க வந்த மமுதன் நீ 

தோரணை     2009 
    

பேபி  குதூகலம்  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 30, 2023 8:34 pm

30.08.2023 

29.08.2023   விஜயகுமார் அவர்கள் பிறந்த நாள்    [1943] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 COmsTXK                       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 AZUMmO9

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 ZY3eoxf

பஞ்சாட்சரம். சினிமால விஜயகுமார். தமிழ் பட நடிகர். சில ஹிந்தி, தெலுங்கு படங்கள்லயும், ஒண்ரெண்டு மலையாளம், கன்னட படங்களையும், TV சீரியல்கள்லயும் நடிச்சார்.  நடிக்க வர்றதுக்கு முன்னாலேயே முதல் கல்யாணம் முடிஞ்சிருச்சு. நடிகை மஞ்சுளா இவருக்கு ரெண்டாவது மனைவி. இவங்களோட பிள்ளைங்க வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி எல்லாருமே சினிமால நடிக்கிறாங்க. முதல் மனைவியின் மகன் நடிகர் அருண் விஜய். ஆக விஜயகுமாரின் குடும்பமே சினிமா ப்ரபலங்கள். 

விஜயகுமார் 1961ல ஸ்ரீவள்ளி படத்தில முருகனாக முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். 1967ல கந்தன் கருணை படத்தில நடிச்சிட்டு 6 வருஷ ப்ரேக்குக்கு அப்புறம் 1973ல பொண்ணுக்கு தங்க மனசு படத்தில நடிச்சு ப்ரபலமானார். 1974ல அவள் ஒரு தொடர்கதை படம் அவருக்கு நல்ல திருப்புமுனையாக இருந்துச்சு. அதுக்கப்புறம் முக்கியமான கேரக்டர்கள் கிடைக்க ஆரம்பிச்சுது. வில்லனாவும் நடிச்சார். 

சிவாஜி, MGR, கமல், ஜெமினி கணேசன், சிவகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிச்ச படங்கள்ல துணை நடிகராக நடிச்சார். விஜயகுமார் அப்பாவா, தாத்தாவா  நடிக்க ஆரம்பிச்ச பிறகும் ஜனங்கள் அவர் நடிப்பை ரசிச்சாங்க. விஜயகுமாரும், அருண் விஜயும் சில படங்கள்ல சேந்து நடிச்சிருக்காங்க. அப்பாவும், புள்ளயாகூட நடிச்சாங்க. பாசமலர் படத்தில தங்கச்சி மேல பாசம் காட்டிய அண்ணன் சிவாஜிக்கு அடுத்தபடியா, கிழக்கு சீமையிலே படத்தின் அண்ணன் விஜயகுமார் நடிச்சார்னு சொல்லலாம்.  

விஜயகுமார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவராக இருந்தார். 

விருதுகள்
தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள் 1993 & 1996 - சிறப்பு விருது - கிழக்கு சீமையிலே & அந்திமந்தாரை 

நன்றி  : விக்கி, hindutamil

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை 

நீயா    1979

ஏறு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவண்டா நான் 

மாங்குடி மைனர்     1978

திருமுருகன் அருகினிலே வள்ளி குறத்தி நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா 

மேயர் மீனாட்சி     1976 
 

பேபி  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 3838410834

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 31, 2023 7:44 pm

31.08.2023 

யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்      [1979] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 TTrjKTJ                                 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Me33LcU

ம்யூஸிக் டைரக்ட்டர், பாடலாசிரியர், பின்னணி பாடகர். வெஸ்டன் ம்யூசிக் ரொம்ப யூஸ் செய்றார். தமிழ் படங்கள்ல ஹிப்ஹாப், ஜாஸ் உள்பட ரீமிக்ஸ் ம்யூஸிக்கை அறிமுகப்படுத்தியவர். இவரோட ரசிகர்கள் இவருக்கு யூத் ஐகான்னு பட்டபேர் வச்சிருக்காங்க. ஸ்கூல் படிப்பு முடிச்ச பிறகு ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். ப்யானோ க்ளாஸுக்கு போனார். அவர் கனவு என்னவோ பைலட் ஆகணும், உலகம் முழுசும்  சுத்தணும்ங்கிறதுதான். ஆனா குடும்பமே இசை குடும்பமாச்சே. அவரை சுத்தி ம்யூஸிக்ல  வல்லவங்கல்ல  இருக்காங்க.  அம்மா சொன்னதால வேற வழியில்லாம அவரும் ம்யூஸிக் லைனுக்கு வந்துட்டார். 

இசைஞானி இளையராஜாவின் மூணாவது மகன். யுவனின் அண்ணன் கார்த்திக்ராஜா  தன்னைவிட திறமையானவர்னு யுவன் ஒத்துக்கிட்டார். யுவன் ம்யூஸிக்ல அப்பா இசைஞானி, அண்ணன் கார்த்திக்ராஜா, தங்கச்சீ பவதாரிணி எல்லோரும் கூட பல பாட்டு பாடியிருக்காங்க. சித்தப்பா கங்கை அமரன், அவரோட பிள்ளைங்க வெங்கட்ப்ரபு, பிரேம்ஜி அமரன் எல்லாருமே  சினிமா ம்யூஸிக் சம்பந்தப்பட்டவங்கதான். பெரீய இசை குடும்பம். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்றார். யுவன் ம்யூஸிக் போட்ட முதல் படம் 1997ல அரவிந்தன் படத்துக்கு. யுவன் ஒரு ஆல்பத்துக்கு போட்ட ம்யூஸிக்கை கேட்ட அந்த படத்தின் தயாரிப்பாளர் கேட்டு ரசிச்சார். அதனால அரவிந்தன் படத்துக்கு ம்யூஸிக் போட சான்ஸ் கொடுத்தார். இந்த படத்துக்கு பேர் வச்சதுல ஒரு சமாச்சாரம் இருக்கு. இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி ஓஹோன்னு ஓடின ராசி யுவனுக்கும் வரணும்னு நெனச்சுதான் அந்த தயாரிப்பாளர் அந்த படத்தின் பேர் 'அ' ல தொடங்கணும்னு 'அ'ரவிந்தன்னு பேர் வச்சார்.  

ப்ரபலமானது 1999ல  பூவெல்லாம் கேட்டுப்பார்  படத்துக்கு ம்யூஸிக் போட்டு. தமிழ்நாட்டுல எல்லாருக்கும் பிடிச்ச ம்யூஸிக் டைரக்ட்டர்கள்ல  ஒருத்தராயிட்டார். இவரோட சொந்த ம்யூஸிக் லேபில் U1 ரெக்காட்ஸ் 2015ல  உருவாக்கினார். YSR பிலிம்ஸ் என்ற சொந்த சினிமா தயாரிப்பு ஸ்டூடியோ 2017ல ஆரம்பிச்சார். 

இளைய தளபதி விஜய்யின் மகன், யுவன் ம்யூஸிக்கின் பயங்கர ரசிகன்னு விஜய் யுவன்கிட்ட  சொன்னார். யுவன் கூட வேல செஞ்ச டைரக்ட்டர்கள், தயாரிப்பாளர்கள், நடிச்சவங்க எல்லாருக்கும் நன்றி  சொல்லியிருக்கார். நடிக்க வரும் எண்ணம் இருக்கான்னு கேட்டிருக்காங்க. ம்யூஸிக் ஆல்பத்துல  நடிக்கிறதோடு சரீன்னுட்டார். அமீர், ராம், லிங்குசாமி, விஷ்ணுவர்தன், வெங்கட்ப்ரபு, செல்வராகவன் போல பல டைரக்ட்டர்கள் படத்துக்கெல்லாம் அநேகமா இவங்களோட செல்ல பிள்ளை யுவனோட ம்யூஸிக்தான்  இருக்கும். யுவன் ம்யூஸிக் இல்லாம தங்களால் படத்தை டைரக்ட் செய்யவே முடியாதுன்னு அவங்கல்லாம் பல மேடைகள்ல  சொல்லியிருக்காங்க. 

யுவனின் மாபெரும் வெற்றிக்கு காரணமான பாட்டு எது தெரியுமோ? 2018ல மாரி 2 பட பாட்டு 'ஹே என் கோலி சோடாவே". உலக தர வரிசை பட்டியல்ல இந்த பாட்டு நாலாவது இடத்தில இருக்கு. யூட்யூப் எடுத்த தரவரிசை பட்டியல்ல இந்தியால இந்த பாட்டுக்கு முதல் இடம். பாடலாசியர் நா முத்துக்குமார் மேல யுவனுக்கு தனி பாசம். தன் ஆபீஸ்ல அவருக்கென்று தனி ரூம் கொடுத்திருந்தார். 

தமிழ் மியூஸிக்ல இவரோட பட்டபேர்கள் : யூத் ஐகான், BGM கிங், சின்ன மேஸ்ட்ரோ

விருதுகள்
கலைமாமணி, கௌரவ டாக்ட்டர் பட்டம், இசை இளவரசன், 
சைப்ரஸ் சர்வதேச சினிமா விழா விருது - சிறந்த ம்யூஸிக்  - ராம் 2006 

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் :  
சிறந்த ம்யூசிக் டைரக்ட்டர் - 7G ரெயின்போ காலனி 2004 
சிறப்பு ஜூரி விருது 2009 - தெலுங்கு படம் 

தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள் : சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் - பட்டியல் 2006 & பையா 2010

விஜய் விருதுகள் :
பையா 2010 - யுவன் பாடிய என் காதல் சொல்ல நேரமில்லை பாட்டு - விருப்ப பாட்டு 
ஆரண்ய காண்டம் 2011 - சிறந்த பின்னணி இசை 
மரியான் 2013 - சிறந்த பின்னணி பாடகர் - கடல் ராசா நான் கடல் ராசா நான் பாட்டு 

விகடன் விருதுகள்
சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் - கற்றது தமிழ் & பருத்திவீரன் 2007 / பேரன்பு 2018 & Super Deluxe ௨௦௧௯
சிறந்த பின்னணி பாடகர் - நீதானே நீதானே - சர்வம் 2009 

இன்னும் ஏகப்பட்ட விருதுகள்.

நன்றி  : விக்கி, hindutamil, kamadenu.hindutamil, tamil.news18, bbc, 

ஏ பொன்னம்மா ஓலவ்வர் யார் சொல்லம்மா ஏ பொன்னம்மா அட நீயும் நானும் ஒண்ணம்மா 

அரவிந்தன்     1997

ஏ என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ

மாரி 2    2018 

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா

பூவெல்லாம் கேட்டுப்பார்      1999

பேபி   மீண்டும் சந்திப்போம்  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 02, 2023 11:03 pm

02.09.2023 

சுதீப் பிறந்த நாள்      [1972] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 XYS4iJF                                          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 7Km8XGQ

கிச்சா சுதீப். கன்னட நடிகர், பின்னணி பாடகர், கதை எழுத்தர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலயும் நடிச்சிருக்கார். கன்னட நடிகர்கள்ல அதிக சம்பளம் வாங்குறவங்கள்ல இவரும் ஒருத்தர். சொந்தமா கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வச்சு படங்களை தயாரிக்கிறார். தமிழ்ல நடிச்ச முதல் படம் நான் ஈ 2012, வில்லன் ரோல். ஆனாலும் ப்ரபலமானார்.  

கன்னட படங்கள்ல இவருக்கு பட்ட பேர் 'அபிநய சக்கரவர்த்தி'. கன்னடம், ஹிந்தி TV ரியாலிட்டி ஷோக்கள நடிச்சினார். சீரியல்ல, கன்னட விளம்பரங்கள்ல நடிச்சார். கிச்சா சுதீபா  அறக்கட்டளை தொண்டு நிறுவனம் வச்சு ஜனங்களுக்கு நல்லது செய்றார். ஏழை மாணவர்களுக்கு யூனிஃபார்ம், உதவித்தொகை கொடுத்து சேவை செய்றார். கோவிட் சமயத்தில சீனியர் சினிமா கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் செஞ்சார். 

சுதீப் ஆரம்பத்தில நடிகனாகணும்னு நெனச்சார். நடிக்க ஆரம்பிச்ச பிறகு டைரக் ஷன், தயாரிப்பு, எழுத்துனு இறங்கிட்டார். 

இப்போ சேரன் டைரக் ஷன்ல பேர் வைக்காத ஒரு கன்னட படத்தில நடிச்சிட்டிருக்கார். 

விருதுகள்
கன்னட படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள், கர்நாடக மாநில சினிமா விருது, நந்தி விருது, SIIMA விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார். 

நன்றி  : விக்கி, ஹிந்துதமிழ்

போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே 

முடிஞ்சா இவன புடி    2016  

பேபி  குதூகலம்  


சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 03, 2023 6:41 pm

03.09.2023 

02.09.2 023    அனுபமா பிறந்த நாள்      [1968] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 E8RBvNC                                   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Unlr5Mn

சந்த்ரலேகா அனுபமா. பின்னணி பாடகி. எல்லாவித எலக்ட்ரானிக்ஸ் பாட்டு பாடக்கூடிய வித்தியாசமான ஒரு குரல். 4 வயசில கர்நாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சார். ஸ்கூல்ல பாட்டு போட்டிகள்ல கலந்துக்கிட்டார், அதுவும் 8 வயசில. ஸ்கூல், காலேஜ் படிப்பு எல்லாமே  டெல்லிலதான். காலேஜ் படிச்சபோதும் பாட்டு போட்டிகள்ல கலந்துக்கிட்டார். மாஸ் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிச்சிட்டு இருக்கும்போது, பாடகி ஆகணுங்கிற ஆசைல பாதீல விட்டுட்டார்.  

விளம்பர ஜிங்கிள்ஸ்க்கு ம்யூஸிக் போட்றவராவும். பாட்றவராவும் இருந்தார். AR ரஹ்மான் விளம்பர ஜிங்கிள்ஸ்க்கு ம்யூஸிக் போடும்போது அவர்கூட சேந்துக்கிட்டார். பாண்ட்ஸ் பௌடர், மெடிமிக்ஸ் சோப்பு, ஆவின் ஐஸ்க்ரீம், தேங்காய் எண்ணெய் இது போன்ற விளம்பரங்களுக்கு அனுபமா பாடினார். ரேடியோ விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ஹிந்தி, இங்கிலீஷ் படங்கள்லயும் பாடினார். அப்புறமா ப்யானோ வாசிக்க கத்துக்கிட்டார். 

AR ரஹ்மான் மியூஸிக்ல 1993ல புதிய முகம் படத்தில "ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு" பாட்டு ப்ரபலமானார். ஆனா அதே வருஷம் திருடா திருடா படத்தில பாடினாரே ஒரு பாட்டு, அதாங்க, "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு, சந்த்ரலேகா" பாட்டு, அப்பப்பா என்னமா பாடியிருப்பார், இல்ல? அதுவும் AR ரஹ்மான் ம்யூஸிக்தான். அப்போலாயிருந்துதான்  சந்த்ரலேகா அனுபமானு பட்டபேர் ஒட்டிக்கிச்சு. சான்ஸ் கெடச்சாலும் வித்தியாசமான பாட்டுக்களை  செலெக்ட் செஞ்சுதான் பாடினார். நடிப்பு கத்துக்கிட்டு மேடை நாடகங்கள்ல  நடிச்சிருக்கார். 

2015ல சர்வதேச பெண்கள் தினத்திலே வசதியில்லாத பெண்களுக்காக மெடிக்கல் கேம்ப் நடத்தினார்.   
2013ல சீனால நடந்த சீனா தெற்கு ஆசியா எக்ஸ்போல பாட்டு பாடி 177 பேர் கலந்துகிட்டதுல அனுபமா முதல் பரிசு வாங்கினார். 

ப்ரபல  ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே & நம்ம KS சித்ரா இவங்க பாடுற ஸ்டைல் அனுபமாவுக்கு ரொம்ப பிடிக்கும். 

விருதுகள் : ஸ்டார் ஸ்க்ரீன் விருது 2002 - ஹிந்தி பாட்டு 

நன்றி   விக்கி, nettv4u, veethi,

காள காள வீரக்காள சும்மா வாடி சும்மா வாடி 

ஆணை    2005 

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்

திருடா திருடா       1993  

ரஹத்துல்லா ரஹத்துல்லா ரசிக்கிற வல்லா நீ அசப்புற அசப்புற 

கஜினி    2005  
 

பேபி  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 3838410834  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 04, 2023 2:01 am

04.09.2023 

02.09.2 023   திவ்யா உன்னி பிறந்த நாள்      [1981] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 319hRTh                           பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 I0MWrLp

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 ZoRS197

கேரளால பிறந்த பாரம்பரிய நடன கலைஞர். நடிகை ராமயா நம்பீசன் இவரோட சொந்தக்காரர். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் நடனங்களை சொல்லி கொடுக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 1987ல மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். ரெண்டாப்பு படிச்சிட்டுருந்தார். தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது  2000ல கண்ணன் வருவான் படத்தில. ஒரு மலையாள சீரியல்ல நடிச்சார். 

3 வயசில பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம்  கத்துக்க ஆரம்பிச்சார். கேரளால படிக்கும்போது, மாநிலம் தழுவிய போட்டீகள்ல கலந்துக்கிட்டு 'கலாதிலகம்'னு  முடி சூட்டப்பட்டார். தூர்தர்ஷன் TVல கத்துகிட்ட எல்லா டான்ஸ், இந்திய நாட்டுப்புற டான்ஸ் எல்லாத்தையும் கொடுத்தார். இந்தியால பல இந்திய நடன விழாக்கள்லயும், அமேரிக்கா, ஐரோப்பா, பாரசீக வளைகுடா போன்ற இடங்கள்ல சர்வதேச அளவுலயும் டான்ஸ் ஆடுறார். 

இப்போ அமெரிக்கால வசிக்கிறார். அங்கேயும் சும்மா இல்லாம, அங்க உள்ள சின்ன பிள்ளைங்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கிறார். இது கணவருக்கு பிடிக்காம, பிரச்னைகள் வந்து டைவோர்ஸ் ஆயிருச்சு. கொச்சிக்கு வந்துட்டார். ரெண்டாவது கல்யாணம்  செஞ்சுகிட்டு அமெரிக்காவுக்கு போய்ட்டார். அங்க சிரீபாதம்  கலைப்பள்ளியில டைரக்ட்டரா இருக்கார். சில பொறுப்புகள் இருக்கிறதால இப்போதைக்கு நடிப்பை பெண்டிங்ல போட்டிருப்பதாவும், சரியான நேரம் வரும்போது மறுபடியும் நடிப்பார்னும் திவ்யாவே சொல்லியிருக்கார்.  அங்க சிரீபாதம் கலைப்பள்ளியில டைரக்ட்டரா இருக்கார். 

விருதுகள்
அபிநய திலக புரஸ்காரம், அரவிந்தாக்ஷா நினைவு விருது - சிறந்த மாநில நடன நிகழ்ச்சிக்காக 

இன்னும் பல விருதுகள் 

நன்றி   விக்கி,  tamil.oneindia, tamil.filmibeat


பால கீல குடிக்காம பழத்த எடுத்து கடிக்காம பாக்குறியே கண்ணுக்குள்ள வேர்க்குறியே

சபாஷ்     2000 

முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு முதல் தேன் எதுவோ அந்த பூவோடு

வேதம்       2001


பேபி  குதூகலம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 06, 2023 4:13 pm

06.09.2023 

04.09.2023   வெற்றிமாறன் பிறந்த நாள்      [1975] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 OD5K2EL                          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 QFT5Wbx

டைரக்ட்டர், தயாரிப்பாளர் & கதாசிரியர். அம்மா நாவலாசிரியர். அப்பா கால்நடை டாக்ட்டர். காலேஜ் படிக்கும்போது நடிப்பு மேல ஆச வந்துச்சு. சன் TVல பாலு மகேந்திரா நடித்தின கதை நேரம் வெப் சீரீஸ்ல  வேல செய்ய காலேஜ் படிப்பை நிறுத்திட்டார். ஒரு பேராசிரியர்தான் அவரை பாலு மகேந்திராட்ட உதவி டைரக்ட்டரா சேத்துவிட்டார். அந்த நிகழ்ச்சியில கலந்துக்க ஒரு நாளைக்கு 50, 60 கதைகளை படிச்சு, அதைல்லாம் ஒரு கதையாக்கி, திரைக்கதை சம்பந்தமான நுணுக்கங்களை கத்து தெரிஞ்சுக்கிட்டார். வேற டைரக்ட்டர்கள்கிட்டயும் உதவி டைரக்ட்டராயிருந்தார். 

வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதி டைரக்ட்டின முதல் படம் 2007ல பொல்லாதவன். நெறைய பாராட்டு கெடச்ச படம். வரூசயா இதே மாதிரி வெற்றி படங்களை டைரக்ட்டினார். முன்னணி டைரக்ட்டரானார். தயாரிப்பாளராவும் வெற்றி பெற்றார். எல்லாமே கல்லாவை நிரப்பிய படங்கள். இப்ப ரிலீஸ் ஆன வெற்றிமாறனின் விடுதலை படத்தில காமெடி நடிகர் சூரி ஹீரோ. விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருக்கார். இதுல ரெண்டாம் பாகம் ரெடியாகுது. 

காதல் வைரஸ், ஜிகிர்தண்டா ரெண்டு படங்கள்ல குட்டியோண்டு ரோல்ல நடிச்சார். தமிழ் சினிமால வெற்றிகரமான டைரக்ட்டரானதுக்கு டைரக்ட்டர் மணிரத்னம்ன்னு வெற்றிமாறன் சொல்லியிருக்கார். ஏன்னா அவரோட நாயகன் படத்த 47 தடவ பாத்தார். டைரக்ட்டராகணும்னு  அப்பதான் ஆச வந்துச்சு. நாயகன் மாதிரியோ அதைவிட சிறப்பாவோ படம் எடுக்கணும்னு  அப்பவே  நெனைச்சார். 

2016ல ரிலீஸ் ஆனா விசாரணை படம் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுச்சு. விஜய்யை பாத்து ஒரு கதை சொன்னார். இப்ப எடுத்துட்டு இருக்கிற படங்களை எல்லாம் முடிச்சுட்டு வரசொல்லிட்டார் விஜய். வெற்றிமாறன் கமலை வச்சு படம் எடுக்கப்போவதாக தெரியுது.   

சினிமால வேல செய்றத தவிர்த்து, சொந்த வீடு கனவுல இருக்கிற அவர்கிட்ட வேல செய்ற அசிஸ்டன்ட் டைரக்ட்டர்கள் உள்பட 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்துல ஆளுக்கு ஒரு க்ரவுண்டு நிலம் சத்தமில்லாம வாங்கி கொடுத்திருக்கார். ஆனா நிலம் வாங்கினவங்க நிலம் கொடுப்பதை ஒரு நிகழ்ச்சியா  நடத்தணும்னு ஆசைபட்டாங்க. அதனால பாரதிராஜா சிறப்பு விருந்தினரா வச்சு நிகழ்ச்சி நடத்தி, அவங்களுக்கு நிலம் கொடுத்தார் வெற்றிமாறன். அந்த நிலத்தில வீடு கட்டிக்கலாம், விவசாயம் செஞ்சுக்கலாம். ஆனா விக்கக்கூடாதுனு சொல்லியிருக்கார். இதையும் தவிர, சினிமா துறைல வசதி குறைவான குடும்பங்கள்ல  இருக்கிற திறமை உள்ளவங்களுக்காக  பயிற்சி பட்டறை நடத்துறார். பைக், கார்னு வாங்கி கொடுக்கிற சினிமா உலகத்தில வெற்றிமாறன் இப்டி செஞ்சதை பாராட்டினாங்க.  

விருதுகள்
தேசிய விருதுகள் :
சிறந்த டைரக்ட்டர் & சிறந்த திரைக்கதை - ஆடுகளம் ௨௦௧௧
சிறந்த குழந்தைகள் படம் - காக்கா முட்டை ௨௦௧௫
சிறந்த படம் - விசாரணை 2016 & அசுரன் ௨௦௧௯

தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறப்பு விருது - காக்கா முட்டை ௨௦௧௫

விஜய் விருது : சிறந்த டைரக்ட்டர் - பொல்லாதவன் 2007  & ஆடுகளம் ௨௦௧௧

ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறந்த டைரக்ட்டர் - ஆடுகளம் ௨௦௧௧
சிறந்த படம் - காக்கா முட்டை 2015 

SIIMA விருது - சிறந்த டைரக்ட்டர் - ஆடுகளம் 2011

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் : 
சிறந்த படம் - காக்கா முட்டை 2015, விசாரணை 2016
சிறந்த டைரக்ட்டர் & சிறந்த திரைக்கதை  - விசாரணை 2016
சிறந்த திரைக்கதை - வட சென்னை 2018
சிறந்த டைரக்ட்டர் - அசுரன் 2019

நார்வே தமிழ் சினிமா விழா விருது - சிறந்த படம் - காக்கா முட்டை 2015

எடிசன் விருது - சிறந்த தயாரிப்பாளர் - காக்கா முட்டை 2015

இன்னும் சில விருதுகள். 

நன்றி   விக்கி, tamil.filmibeat, tamil.indianexpress, tamil.abplive, minnambalam, indiaglitz

படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல

பொல்லாதவன்       2007

ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதக்குறா 

உதயம் NH4       2013

பேபி  ஜாலி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 06, 2023 4:23 pm

06.09.2023

05.09.2023      மு மேத்தா அவர்கள் பிறந்த நாள்      [1945] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 RqbhsoM                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 BPdLPnk

ரிட்டயர்ட் ப்ரொஃபசர். காலேஜ் படிக்கும்போதே இலக்கியம் மேல ஆர்வம் இருந்துச்சு. புதுக்கவிதைக்கு ஊக்கம் தந்த கவிஞர்கள்ல இவரும் ஒருத்தர். எளிய நடை, வளமான கற்பனையால ஜனங்கள் மனசுல இடம் பிடிச்சவர். இவரோட முதல் கவிதை தொகுப்பு கண்ணீர் பூக்கள். ப்ரபலமான நூல். பல பதிப்புகளை கண்டது. இந்த புத்தகம் பிறந்த கதையை மேத்தா இப்டி சொன்னார், 

கண்ணகி சிலம்பை கழற்றினாள், சிலப்பதிகாரம் கிடைத்தது 
என் மனைவி வளையலை கழற்றினாள் கண்ணீர் பூக்கள் கிடைத்தது 

எப்படி நாசூக்கா சொல்லியிருக்கார் பாருங்க. 

1996ல பூமணின்னு ஒரு படம். இந்த படத்தில 'ஏம்பாட்டு ஏம்பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து"னு ஒரு பாட்டு எழுதினார். கேஸட்ல  இந்த பாட்டுக்கு ம்யூஸிக் போட்டு பாடிய இளையராஜா பேர் இருந்துச்சு. பாட்டு எழுதிய மேத்தா பேர் இல்ல. அப்போ ஒரு மேடைல பேசும்போது, "ம்யூஸிக் போட்டவங்க, பாடினவங்க பேர போட்டவங்க, பாட்டை எழுதினவங்க பேர் போட்றதுல என்ன தயக்கம். அது "ஏம்பாட்டு ஏம்பாட்டு" னு மேடைல உரிமையை சொல்லி பேசினார். 

மேத்தானா புதுக்கவிதை, புதுக்கவிதைனா மேத்தா. மரபு கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதை, நாவல், கட்டுரைகள் எழுதுறதுல வல்லவர். வானம்பாடி கவிதை இயக்கம் உருவாக்கிய கவிஞர். சினிமா பாடலாசிரியர். 

இவர் எழுதிய சினிமா பாடல்களை பற்றி புத்தகம் எழுதினார். அதுல அவர் ஆரம்பத்தில எழுதின சினிமா பாட்டு உருவான கதை பற்றி வெலாவாரியா எழுதினார். சினிமால எழுதிய முதல் பாட்டு 1981ல அனிச்ச மலர் படத்துக்கு. 
 
1990ல சிறையில் சில ராகங்கள் படத்தில "தென்றல் வரும் தெரு எது அது நீதானே"னு பாட்டு எழுதினார். சித்ரா & ஜேசுதாஸ். இளையராஜா ம்யூஸிக். 1994ல தென்றல் வரும் தெரு படத்துக்கு மேத்தா கதை, திரைக்கதை, வசனம் & பாட்டு எழுதினார். இந்த படத்துலயும் "தென்றல் வரும் தெரு அது நீதானே"ன்னு தொடங்கும் ஒரு பாட்டு எழுதினார். ஜென்ஸி & மனோ. இதுக்கும் இளையராஜா. ஆனா ரெண்டு பாட்டுக்கும் ட்யூன், வரிகள் வேற வேற. 

தஞ்சைல எட்டாவது உலக தமிழ் மாநாடு நடந்துச்சு. அங்க மு மேத்தா பாடிய கவிதை : 

உஷாவாய் பிறந்திருந்தால் ஓடி பிழைத்திருப்பேன் 
உஷா உதுப்பாய் பிறந்திருந்தால் பாடி பிழைத்திருப்பேன் 
யாரையும் நாடி பிழைக்க தெரியாததால் வாடி பிழித்துக்கொண்டிருக்கிறேன் 

புதுக்கவிதையில புதிய விடியலை படைத்தவர். 

விருதுகள்
இவர் எழுதிய ரெண்டு கவிதை நூல்களுக்கும், ஒரு நாவலுக்கும் தமிழ்நாடு அரசின் முதல் பரிசும், சாகித்ய அகாடமி விருதும் வாங்கினார்.  

நன்றி  : விக்கி, vanakkamlondon 


மயில் போல பொண்ணு ஒண்ணு குயில் போல பேச்சு ஒண்ணு 

பாரதி     2000 

யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே 

யாரோ எழுதிய கவிதை    1986

தலைவா நீ இங்கு வரவேண்டும் உன் தலையணையில் இடம் தரவேண்டும்  

மூக்கணாங் கயிறு    1985   


பேபி   மீண்டும் சந்திப்போம்  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 07, 2023 12:45 pm

07.09.2023 

06.09.2023      அனுயா பிறந்த  நாள்      [1989] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 JnMY4bp                                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 V8Rpuiw

துபாய்ல பிறந்த வளந்தார். தமிழ், ஹிந்தி வங்க  சினிமா, ஹிந்தி TV சீரியல் நடிகை. மாடலிங் செஞ்சார். பூனேல TV ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சார். ஒரு ஆவண படத்தில டீச்சரா நடிச்சார். 

முன்னணி நடிகர்கள் கூட நடிக்கும் சான்ஸ் இல்லாததால, சான்ஸ்  கெடச்ச ஒரு சில படங்கள்ல நடிச்சார். நெனச்சபடி சான்ஸ் கிடைக்காததால் குணசித்திர நடிகையானார். ஹிந்தி வெப் சீரியல்ல நடிச்சார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் 2009ல சிவா மனசுல சக்தி. அதே வருஷத்துல மதுரை சம்பவம் படத்தில போலீஸ் அதிகாரியா நடிச்சு நல்ல பேர் வாங்கினார். முதல்ல ரெண்டு படங்களுக்கு நல்ல வசூல் கெடச்சதால  அடுத்தடுத்து சான்ஸ் வந்துச்சு. தனக்குனு ஒரு இடம் பிடிச்சுட்டார். ஆனா அதுக்கப்புறம் உடம்பு வெய்ட்  போட்டதால வேற சான்ஸ் வரல. 2012ல விஜய் நடிச்ச நண்பன் படத்தில ஹீரோயின் இலியானாவுக்கு அக்காவா நடிச்சார். நல்ல ரோல். அதுக்கப்புறம் தமிழ்ல அவ்ளோதான், காணாம போயிட்டாரு. நடிக்கல. வேற மொழி படங்கள்ல நடிக்க போய்ட்டார். சமூக வலைதளத்தில பிஸி. 

நன்றி   விக்கி, vikatan, cinemapettai, tamil360newz


ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் 

சிவா மனசுல சக்தி      2009  

ஒரு இலவம் பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே

மதுரை சம்பவம்       2009   
 
பேபி   சூப்பருங்க  

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6054
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 07, 2023 5:03 pm

07.09.2023  

ராதிகா ஆப்தே பிறந்த  நாள்     [1985]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 84zVLGH                            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 FTUHPm8

தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, மராத்தி, ஹிந்தி, இங்கிலிஷ் படங்கள், வெப் சீரீஸ், குறும்படங்கள்ல  நடிச்சிருக்கார். சினிமால நடிக்க ஆரம்பிச்சது ஹிந்தி படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழில நடிச்ச முதல் படம் 2012ல தோணி. 2016ல ரஜினி கூட கபாலி படத்தில நடிச்சு ப்ரபலமானார். பல்வேறு துணிச்சலான கேரக்ட்டர்ல நடிக்கிறார். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படங்கள்ல விரும்பி நடிக்கிறார். அப்புறமா வெய்ட் போட்டு குண்டாயிட்டதால நடிக்கும் சான்ஸ் ரொம்பவே கொறஞ்சுபோச்சு. ஹிந்தி படங்கள்ல பிஸி.

சினிமால நடிக்க ஆரம்பிச்சப்போ, உடல் சர்ஜரி செஞ்சு, முடிக்கு கலர்  போட்டு இன்னும் அழகா மாத்த சொன்னாங்க. ராதிகாவுக்கு அந்த சமயத்தில கோவம் வந்தாலும் அவங்க சொன்னபடி செஞ்சு பாக்கலாமேன்னு செஞ்சார். அதுக்கப்புறம் அவரே தன்னை ரசிக்க, நேசிக்க தொடங்கினார். பல டைரக்ட்டர்களின் ஃபேவரிட் ஹீரோயின்.

தமிழ்நாடு  வேலூர்ல பிறந்த இவரோட கணவர் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர். விசா வாங்குறதுக்காக அவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டதா அவரே சொல்லியிருக்கார்.

விருதுகள் :
ஹிந்தி, இங்கிலிஷ் படங்களுக்கு சிறந்த நடிகை, ரொம்ப ஸ்டைலான நடிகைக்கா விருதுகள் வாங்கினார்.

நன்றி  விக்கி, tamil.filmibeat

ஒன்ன பாத்த நேரம் மனசு ஆடும் மைலாட்டம்

அழகுராஜா      2013

மேகத்திலே மேலாடை காலை நிலா காலாடை ஊலாலா உள்ளம்தான்

வெற்றிச்செல்வன்        2014

பேபி  அருமையிருக்கு  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 56 of 60 Previous  1 ... 29 ... 55, 56, 57, 58, 59, 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக