ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/07/2022
by mohamed nizamudeen Today at 7:15 am

» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
by ayyasamy ram Today at 5:44 am

» தமிழ் புக்
by kadhaikalam Today at 5:43 am

» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm

» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm

» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm

» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm

» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm

» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm

» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm

» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am

» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am

» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am

» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am

» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am

» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am

» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am

» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am

» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am

» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm

» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm

» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm

» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm

» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm

» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm

» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm

» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm

» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm

» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm

» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am

» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

2 posters

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed May 18, 2022 5:29 pm

18.05.2022

17.05.2022 - பின்னணி பாடகி ஜமுனாராணி அவர்கள் பிறந்த நாள் [1938]

ஆந்த்ரால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள படங்கள்ல பாடியிருக்கார். 7 வயசில தெலுங்கு படத்ல பாட ஆரம்பிச்சார். தமிழ்ல முதல் படம் கல்யாணி [1952]. 

ஆரம்பத்ல பரதநாட்டியம் கத்துக்கிட்டார். இவங்க அம்மா பெண்கள் வாத்திய குழூல வீணை வாசிச்சுட்டு இருந்தார். அப்போ ஒரு தடவ ஜமுனாராணியின் குரல் கேட்டு, அவரை பாட வக்கலாமேன்னு யோசிச்சு பாட வச்சார். ஜமுனாராணி பாடகி ஆயிட்டார். 

ஜமுனாராணி ஜாலியான பாட்டு பாடிட்டு இருந்த சமயம். மகாதேவி படத்ல  சாவித்ரி ஒரு சோக  பாட்டு பாட்ற மாதிரி ஒரு ஸீன். கவிஞர் கண்ணதாசன் பாட்டு. அந்த பாட்டை ஜமுனாராணியை பாட வைக்கலாம் நல்லா இருக்கும்னு கவிஞர் சொன்னார். மெல்லிசை மன்னர்கள் ஊஹும்ன்னுட்டாங்க. கவிஞர் என்ன சொன்னார் தெரியுமோ? சேலஞ் செஞ்சார். 

"இந்த பாட்டை ஜமுனாராணி பாடி ரெக்காட் செஞ்சு கேட்டு பாப்போம். நல்லா இருந்துச்சுன்னா அவருக்கு டபுள் சம்பளம் கொடுங்க. நல்லா வரலேன்னா  இன்னிக்கி செலவு எல்லாத்தையும் என்னோடது".

இப்டி சொல்லிப்புட்டார் கவிஞர். பாட்டு சூப்பர். கவிஞர் ஜெய்ச்சுட்டார். ஜமுனாராணிக்கு டர்னிங் பாய்ண்ட். 1974 வரை பாடிட்டு ஒரு Gap. அதுக்கப்புறம் 1987ல நாயகன் படத்ல "நான் சிரித்தால் தீபாவளி" பாட்டு பாடி பாட்டு ப்ரமாதம். 

ஜமுனாராணி கலந்துக்கிட்ட ம்யூஸிக் ப்ரோக்ராம்லல்லாம் ஜிக்கி பாட்டுக்களை  எப்பவுமே கண்டிப்பா பாடினார். 

ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இதுதான் - பலே பாண்டியா


என்னை பாரு பாரு பார்த்துக்கொண்டே இருக்க தோணும் - காட்டு ரோஜா


நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி - நாயகன்


மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு - அன்பு எங்கே


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed May 18, 2022 5:39 pm

18.05.2022

17.05.2022 - நடிகை சார்மி பிறந்த நாள் [1987]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். முதல் தமிழ்த் படம் காதல் அழிவதில்லை [2002]. தயாரிப்பாளரும்கூட. இணை தயாரிப்பும் செஞ்சார். 

என் மனசிலே நீயேதானா உன் மனசில் நானேதானா - காதல் அழிவதில்லை


கபடி கபடி - காதல் கிசு கிசு


நிலாவிலே  நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்தது - ஆஹா எத்தனை அழகு


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed May 18, 2022 9:22 pm

18.05.2022

நடிகர் பசுபதி பிறந்த நாள் [1969]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். கூத்துப்பட்டறை மேடை நாடக குழுல சேந்து  வேலை செஞ்சாரு. அங்க நடிகர் நாசர், கமல் நண்பர்களானாங்க. பின்னால நாசர் டைரக்ட்டின மாயன் [2001] படத்தில பசுபதிக்கு முக்கிய ரோல் கொடுத்து நடிக்க வச்சார். அதே மாதிரி கமல்ஹாசனின் சொந்த படம் விருமாண்டி [2004]  படத்ல பசுபதியை கமல் வில்லனா நடிக்க வச்சார். 

வில்லன், குணச்சித்திரம், டாக்ட்டர், ரௌடி போன்ற ரோல்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் ஹவுஸ் ஃபுல் [1999]. சின்ன ரோல்ல நடிச்சார். சவாலான, வித்தியாசமான ரோல்ல நடிச்சார். 2021ல இவர் ரங்கன் வாத்தியாராக  நடிச்ச  சார்பட்டா பரம்பரை படம் அமோக வெற்றி. குறும்படத்திலயும் நடிச்சிருக்கார். 

2006ல இவர் நடிச்ச ஈ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், தமிழ்நாடு மாநில விருதும்  வாங்கினார். 2008ல குசேலன் படத்தில  நடிச்சதுக்காக சர்வதேச தமிழ் சினிமா விருது வாங்கினார். 

சாரலே சாரலே சாயவா தோளிலே தோளிலே - வெடிகுண்டு முருகேசன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed May 18, 2022 9:32 pm

18.05.2022

நடிகை ரேகா பிறந்த நாள் [1970]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ் & மலையாள படங்கள்ல. சீரியல்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் 1986ல கடலோர கவிதைகள்.

தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று - காலையும் நீயே மாலையும் நீயே


ராசாத்தி மனசுல ஏராசா ஓநெனப்புத்தான் - ராசாவே உன்னை நம்பி


அழகான பூந்தோட்டம் நம் வீடு ஒரு போதும் அழியாத தேன்கூடு - இதுதாண்டா சட்டம்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Wed May 18, 2022 10:22 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Capture-32-16435253313x2
-
ரேகாவுக்கு இவ்வளவு பெரிய மகளாக என்று ஆச்சரியப்படும்
அளவுக்கு அவருடைய மகள் அழகாக, பெரிய பெண்ணாக
வளர்ந்துள்ளார்.

நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகளுடன்
எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு ரேகாவை
போல முக ஜாடை இருக்கிறது. இவருடைய மகள் வெளிநாட்டில்
படித்து வருகிறார்
மற்றும் திரைப்படங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும்
கூறப்படுகிறது.

-நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 21, 2022 5:10 pm

21.05.2022

19.05.2022 - இதய நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் [1964 - 2010]

அதிகமா தமிழ் படங்கள்லயும், அப்பப்ப கன்னட படங்கள்லயும் நடிச்சார் அநேகமா காலேஜ் மாணவனா நடிச்சார். முரளியின் அப்பா கன்னட டைரக்ட்டர். எட்டாங்கிளாஸ்ல fail ஆன பிறகு அப்பாவுக்கு உதவி டைரக்ட்டரா வேல செய்ய ஆரம்பிச்சார் முரளி. 

முரளிக்கு டைரக்ட்டராகணும்னுதான் ஆச. அப்பா டைரக்ட்டின படங்கள்ல  சின்ன சின்ன கேரக்ட்டர்ல நடிச்சவங்களுக்கு முரளி டயலாக் சொல்லி கொடுத்தார். அந்த டயலாக்கை ராத்திரி வீட்ல பேசி பார்ப்பார். அதை பாத்த அவர் அப்பா, முரளியை நடிகராக்கிட்டார். ஆர்ப்பாட்டம் இல்லாம நடிச்சு ரசிகர்களின் இதயத்தில இடம் பிடிச்சார். எமோஷன் கோட்டையின் ராஜா. வெள்ளி விழா நாயகன். சம்பளம் பற்றிய கெடுபிடி செஞ்சதில்ல. 

முரளிக்கு க்ரிக்கெட் ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் போனா கூட க்ரிக்கெட் பேட் எடுத்துட்டு போனார். வீட்ல இருக்கும்போது தன் புள்ளைங்களோட க்ரிக்கெட் விளையாடினார். தெருவுல நண்பர்கள் கூடவும் விளையாடினார். 

நடிக்கிறதுக்கு கலர் முக்கியமில்லன்னு நிரூபிச்சவங்கள்ல இவரும் ஒருத்தர். 2010ல இவர் மகன் அதர்வா நடிச்ச முதல் படம் பாணா காத்தாடி படத்ல நடிச்சார். அதுலயும் final இயர் மெடிக்கல் ஸ்டூடண்ட்டா. அதுல அவர் பேரு இதயம் ராஜா. தியேட்டர்ல ஒரே விசில் சத்தத்தோடு குபீர் சிரிப்பு வேற. 

கடல் பூக்கள் படத்ல நடிச்சதுக்கு தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். டான்ஸ் நல்லா தெரியாட்டாலும் முக பாவனை காட்டியே சமாளிச்சார். முரளிக்கு பிடிச்ச பாட்டு அவர் நடிச்ச இதயம் படத்ல 

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா" பாட்டு. எமோஷன் மட்டுமில்ல, காமெடியும் நடிக்க வரும்னு சுந்தரா டிராவல்ஸ் படத்ல லூட்டியடிச்சு நடிச்சார். 

ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது - கீதாஞ்சலி


தெக்குத்தெரு மச்சானே பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி - இங்கேயும் ஒரு கங்கை


இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் - மண்ணுக்குள் வைரம்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 21, 2022 5:23 pm

21.05.2022

19.05.2022 - பின்னணி பாடகி P லீலா அவர்கள் பிறந்த நாள் [1934 - 2005]

கேரளால பிறந்தார். முறையாக ம்யூஸிக் கத்துக்கிட்டார். பல மேதைகள்கிட்ட ம்யூஸிக் கத்துகிட்டு, தன் இசைத் திறமையை  வளத்துகிட்டார். 12 வயசில ஆந்திர மகளிர் சபைல இசை கச்சேரில பாடி, சுதந்திர போராட்ட வீரர் துர்காபாய் தேஷ்முக் அவரை பாராட்டி பரிசும் கொடுத்தார். அதுக்கப்புறமா தென்னிந்தியா  முழுசும்  கச்சேரிகள்ல  பாடினார். 

1946ல பல போட்டி கச்சேரிகள்ல பாடி பரிசு வாங்கினார். கொலம்பியா ரெக்கார்டிங் கம்பெனி நல்ல பெண் பாடகியை தேடிட்டு இருந்த சமயத்தில, லீலாவை கம்பெனியின் பாடகியாக்குச்சு. இதுதான் அவர் சினிமால பாட வழி குடுத்துச்சு. கல்யாண வாழ்க்கை சரியில்லாததால சகோதரி குடும்பம்கூட  வாழ்ந்தார்.  

லீலா சென்னைக்கு வந்தபோது தமிழ், தெலுங்கு தெரியாது. பாட்டை மலையாளத்துல எழுதி வச்சு ப்ராக்டீஸ் செஞ்சார். சினிமால பாட ஆரம்பிச்ச  பிறகு ட்யூட்டர் வச்சு பல மொழிகளை கத்துக்கிட்டார். ஆரம்பத்ல லீலா சினிமால பாட்றது அவரோட அப்பாவுக்கு பிடிக்கல. அப்புறமா  சமாதானமாயிட்டார். 

1948ல சினிமால தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, சிங்களம் போன்ற  மொழி படங்கள்ல பாடினார். பழம்பெரும் பாடகிகள் MS சுப்புலட்சுமி, ML வசந்தகுமாரி, DK பட்டம்மாள் காலத்துல பாடின பெருமை லீலாவுக்கு. ஒரு தெலுங்கு படத்துக்கு ம்யூஸிக் போட்டார். 

கர்னாடக சங்கீதம், மெல்லிசை, சினிமா பாட்டு எல்லாமே இவரோட சிறப்பு. ம்யூஸிக்ல முன்னேற்றம், புகழ், செல்வம் எல்லாத்துக்கும் காரணம் அவர் அப்பா மட்டுமே காரணம்னு அடிக்கடி சொன்னார். 

பத்மபூஷன், கலைமாமணி விருதுகள், கேரளா மாநில விருது, தியாகராஜ பாகவதர் சிறப்பு விருது, ஸ்வராலய கைரளி ஜேசுதாஸ் சிறப்பு ஜூரி விருது இன்னும் பல விருதுகளும் வாங்கினார். 

கெடச்ச பட்டங்கள்
ஞானமணி, கானகோகிலா, கலாரத்னம், கானவர்ஷினி, கானமதி, சங்கீத ஹம்சனி, சங்கீத சரஸ்வதி, நாதசுதா, பக்தி கானதிலகம், இறை இசைமாமணி, சங்கீத நாராயணி. 

வெட்கமாய் இருக்குதடி தோழி - பார் மகளே பார்


இதய ஊஞ்சல் ஆட வா இனிய ராகம் பாட வா - பேசும் தெய்வம்


தோழிகள் எனும் மான்கள் நடுவிலே தூய மானென - எங்கிருந்தோ வந்தாள்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 21, 2022 5:29 pm

21.05.2022

19.05.2022 - நடிகை லட்சுமி மேனன் பிறந்த நாள் [1996]

கேரளால பிறந்தார். தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமா வாழ்க்கை ஆரம்பிச்சது மலையாளத்துல. 2011ல TVல லட்சுமியின் பரதநாட்டியத்தை பார்த்த மலையாள டைரக்ட்டர் மலையாள சினிமால சான்ஸ் கொடுத்தார். 2012ல சுந்தரபாண்டியன் தமிழ் படத்ல இன்ட்ரோ ஆனார். பிரபலமானது கும்கி படத்ல. ஒரு சில படங்கள்ல பின்னணியும் பாடியிருக்கார். 

விருதுகள்
சுந்தரபாண்டியன் 2012 - விகடன் விருது, SIIMA  விருது, சென்னை டைம்ஸ் சினிமா விருது,  ஃபிலிம்ஃபேர் விருது, 
கும்கி 2012 - தமிழ்நாடு மாநில விருது, நார்வே தமிழ் சினிமா விருது

அய்யய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே - கும்கி 


சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம - புலிக்குத்தி பாண்டி 


கண்ணை காட்டு போதும் நிழலாக கூட வாரேன் - ரெக்க 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 21, 2022 5:44 pm

21.05.2022

19.05.2022 - பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பிறந்த நாள் [1992]

இசை உருவாக்குவார். பாடலாசிரியர். சான்ஃப்ரான்சிஸ்க்கோல வளந்தவர். ஸ்ரீராமின் அம்மா அங்க கர்னாடக  ம்யூஸிக் டீச்சர். அதனால மகனின் இசைத்திறமைக்கு அம்மாதான் காரணமாயிருந்தார். ரிதம் அண்ட் ப்ளூஸ் குழுல ஸ்ரீராம் சேந்து வேல  செஞ்சார். அங்கேயே ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு, பெர்க்லி ம்யூஸிக் காலேஜ்ல சேந்து இசை தயாரிப்பு, இசை பொறியியல் பட்டம் வாங்கினார். ஒவ்வொரு வருஷமும் இந்தியாவுக்கு வந்து மார்கழி மாத உற்சவங்கள்ல கர்னாடக  இசைக்கச்சேரிகள் கலந்துக்கிட்டார். 

பாடிய முதல் தமிழ் பாட்டு கடல் படத்ல "அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற" பாட்டு. மணிரத்னம் 2020ல தான் தயாரிச்ச வானம் கொட்டட்டும் படத்துக்கு ஸ்ரீராமை ம்யூஸிக் டைரக்ட்டராக்கினார். இன்னொரு விஷயம் உலாவிட்டு வருது. மணிரத்தினத்தின் அடுத்த படத்ல ஸ்ரீராம் நடிக்க போறாராம். 

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல பாடியிருக்கார். டைரக்ட்டர் மிஷ்கின் இவரை பற்றி "ஸ்ரீராம் நமக்கு கெடச்ச பரிசு" னு சொல்லியிருக்கார். 

மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இண்ட்டு ட்டூ ஆச்சோ - மெர்சல்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 21, 2022 6:19 pm

21.05.2022

19.05.2022 - நடிகை கஜாலா பிறந்த நாள் [1985]

தெலுங்கு நடிகை. அப்பப்ப தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார். 2002ல ஏழுமலை படத்தில அர்ஜுனுக்கு ஜோடியாக அறிமுகமானார். 2011வரை நடிச்சிட்டு, விட்ட படிப்பை தொடர போனார். பட்டப்படிப்பை முடிச்சிட்டு நடிக்கிற ஐடியால இருக்கார். நடிகைகள் நதியா, ரேவதி, ஷாலினி இவங்க மூணு பேரும் ரோல் மாடல்கள். நடிக்கிறது கஜாலாவுக்கு பிடிச்சு போனதால வேற எந்த வேலைக்கும் போக பிடிக்கலியாம். 

உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் - ஏழுமலை


பூம்பூம் வாலிசேனி கோமானி கேஷான் பூம்பூம் வாலி பூம்பூம் - ராம்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 21, 2022 6:48 pm

21.05.2022

20.05.2022 - டைரக்ட்டர் பாலு மகேந்திரா அவர்கள் பிறந்த நாள் [1939 - 2014] 

இலங்கைல பிறந்தார். லண்டன்ல பட்டப்படிப்பை முடிச்சார். பூனே திரைப்பட கல்லூரியில ஒளிப்பதிவு படிச்சு தங்க மெடல் வாங்கினார். இலங்கை ரேடியோ நாடகங்கள்ல நடிச்சார். ஸ்கூல் படிக்கும்போது சத்யஜித்ரேயின் படத்தை பாத்தார். ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்கன் சினிமாவின் ஒரு பகுதியை இலங்கைல தயாரிக்கும்போது மகேந்திரன் பார்த்தார். இதெல்லாம்தான் அவரை சினிமாவுக்குள் வர இன்ட்ரெஸ்ட்டை உண்டாக்குச்சு. 

பாலு திரைக்கதை, வசன எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர். தமிழ்,  தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். தமிழ் சினிமாவின் சிற்பிகளில் ஒருத்தர். கவிதையை ஸ்க்ரீன்லயும், சிற்பத்தை கேமராலயும் வடிவமைத்த கேமரா கவிஞர். 

TVல ஒரு சீரியலை டைரக்ட் செஞ்சார். டைரக்ட்டர் பாலா இவர்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். டைரக்ட்டர் வெற்றிமாறன் உதவியாளராக இருந்தார்.  


சினிமா ஒலகத்துக்கு முதல்ல வந்தது மலையாள படங்களை ஒளிப்பதிவு செஞ்சு. ப்ரபல தெலுங்கு படம் சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செஞ்சது இவர்தான். இயற்கை ஒளியை அதிகமா யூஸ் செய்றது இவரோட ஸ்பெஷாலிட்டி. முதல் முதல்ல ஒளிப்பதிவு செஞ்ச தமிழ் படம் முள்ளும் மலரும். ஒளிப்பதிவிலிருந்து முதல் முதலா டைரக்ட்டரானது கன்னட படத்ல. டைரக்ட்டின முதல் தமிழ் படம் அழியாத கோலங்கள். 

மணிரத்னம் போன்ற பெரிய டைரக்ட்டர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சார். சினிமால நடிக்க செவப்பா இருக்கணும்னு மத்தவங்க நினைக்கும்போது, பாலு அர்ச்சனா, ஷோபா, மௌனிகா போன்றவங்கள நடிக்க வச்சு வெற்றி கண்டார்.  

முதல் முதலாக இளையராஜாகூட சேந்தது 1980ல மூடுபனி படத்ல. பாலுவுக்கு கேமராவை தவிர ரொம்ப பிடிச்சவர் நடிகர் சொக்கலிங்க பாகவதர். பாலுவின் ரெண்டாவது மனைவி நடிகை ஷோபா. மூணாவது மனைவி நடிகை மௌனிகா. 

விருதுகள் : [தமிழ் படங்கள்]
சிறந்த டைரக்ட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த திரைப்படம், சிறந்த கதாசிரியர் 
தேசிய விருது - மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள், தலைமுறைகள் 
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - மூன்றாம் பிறை, வீடு
தமிழ்நாடு மாநில விருது - தலைமுறைகள் 
இதை தவிர வாழ்நாள் சாதனையாளர் விருது, விஜய் விருது வாங்கினார். 

பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா - எச்சில் இரவுகள் [ஒளிப்பதிவு]


என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே
மூடுபனி 1980 [திரைக்கதை, வசனம், டைரக் ஷன் & ஒளிப்பதிவு]


மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை
உறங்காத நினைவுகள் 1983 [ஒளிப்பதிவு]


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 28, 2022 5:02 am

28.05.2022

21.05.2022 - மலையாள நடிகர் மோகன்லால் பிறந்த நாள் [1960]

நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர். ஸ்கூல் படிக்கும்போது நாடகங்கள்ல நடிச்சார். ஆறாப்பு படிக்கும்போதே சிறந்த நடிகன்னு பேரும் வாங்கினார். காலேஜ் படிக்கும்போதும் நாடகங்கள்ல நடிச்சு பரிசுகள் வாங்கினார். ஒரு நாடகத்தில 8 வயசிலேயே 90 வயசுக்காரரா நடிச்சார். இப்டி நடிக்கும்போதுதான் நாடகம், சினிமா மேல ஆர்வம் கொண்ட சக மாணவர்களின் நட்பு கெடச்சுது. அந்த மாணவர்கள் பின்னால சினிமால புகழ் பெற்ற டைரக்ட்டர் ப்ரியதர்ஷன், பின்னணி பாடகர் MG ஸ்ரீகுமார் போலவங்க. 

டெல்லில இருக்கும்போது முதல் முதலா ஒரு நாடக சபால நடந்த மஹாபாரதம்  நாடகத்தில கர்ணனாக நடிச்சார். நண்பர்கூட சேந்து காளிதாசா விஷுவல் மேஜிக் நாடக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சு  நாடகங்களை  நடித்தினாங்க. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தனியாவும், கூட்டாவும் படங்களை தயாரிச்சிருக்கார். மலையாள படங்கள்ல  சூப்பர் ஹீரோ. 1978ல மலையாளத்துல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா அது ரிலீஸ் ஆக ரொம்ப வருஷங்கள் ஆனதால் 1980ல வந்த மலையாள படம் முதல் படமாயிருச்சு. மலையாள படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். 

நடிச்ச முதல் மலையாள படமே அமோக வெற்றி. வித்தியாசமான கேரக்ட்டர். நடிச்ச முதல் தமிழ் படம் கோபுர வாசலிலே. என்ன கேரக்ட்டர்ன்னு  நினைக்கிறீங்க? "கேளடி என் பாவையே" பாட்டுல மட்டும் அக்கார்டியன் வாசிப்பவரா நடிச்சிருப்பார். 

விஷ்வாசாந்தி ஃபௌண்டேஷன் னு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சார். 1977 & 1978ல கேரள மாநில மல்யுத்த வீரர். 2014ல இசைக்குழு ஆரம்பிச்சார். TV விளம்பரங்கள்ல நடிச்சார். 

விருதுகள்
பத்மஸ்ரீ, பத்மபூஷன், இன்னும் சில கௌரவ பட்டங்களும்.
மலையாள படங்களுக்கு தேசிய விருதுகள், கேரள மாநில சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார். 
உன்னைப்போல் ஒருவன் தமிழ் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது 2009ல வாங்கினார். 

நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் - இருவர்


காக்கால கண்ணம்மா கண் விழிச்சி பாரம்மா - ஒரு யாத்ரா மொழி


ஆலோலங்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே - சிறைச்சாலை


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 28, 2022 5:13 am

28.05.2022

21.05.2022 - நடிகர் அப்பாஸ் பிறந்த நாள் [1975]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் சினிமால இருந்த சாக்லேட் பாய்ஸ்ல இவரும் ஒருத்தர். பெண்களின் கனவு கண்ணன்கள்ல ஒருத்தர். சின்ன வயசிலிருந்தே ஹிந்தி, பெங்காலி படங்களை பாத்து வளந்தார். ஏன்னா இவரோட தாத்தா அந்த படங்கள்ல நடிச்சார். அப்பவே அப்பாஸ் மாடலிங் செஞ்சார்.  

நடிச்ச முதல் தமிழ் படம் 1996ல காதல் தேசம். ஹீரோவா நடிச்சார். நடிக்கும்போது தமிழ் தெரியாது. நடிக்கும்போதே கத்துக்கிட்டார். முதல் படமே சூப்பர் ஹிட். 2015க்கு அப்புறம் நடிக்க சான்ஸ் இல்லாம விளம்பரங்கள்ல நடிச்சார். TV சீரியல், ஷோல நடிச்சார். 

இப்போ அப்பாஸ் நியூசிலாந்தில் செட்டில் ஆயிட்டார். 

காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் - பூச்சூடவா


கண்களிலே சாரல் மழை கண்டேன் கண்டேன் நானே - இனி எல்லாம் சுகமே


மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா - வி.ஐ.பி.


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 28, 2022 5:26 am

28.05.2022

22.05.2022 - மலையாள நடிகை சீமா பிறந்த நாள் [1957]

மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 14 வயசுல ஒரு டான்ஸரா தமிழ் படத்ல  அறிமுகமானார். 19வது வயசுல மலையாள படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபல மலையாள டைரக்ட்டர் IV சசியை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். சசி தன்னோட படங்கள்ல சீமாவை ஹீரோயினா நடிக்க வச்சார். கல்யாணத்துக்கப்புறமும் சீமா சினிமால நடிக்க பர்மிஷன் கொடுத்தார். 

மலையாளத்துல அதிகமா நடிச்சது நடிகர் ஜெயன்கூட. சீரியல்கள்லயும்  நடிச்சார். கமல் சீமாவின் சின்ன வயசு ஃப்ரெண்ட். ஆரம்பத்ல அவர்கிட்டதான் சீமா டான்ஸ் கத்துக்கிட்டார். 

ஒரிஜினல் பேர் சாந்தகுமாரி. நடிகர் விஜயன் சீமானு மாத்திட்டார். 1984, 1985ல கேரள மாநில விருது வாங்கினார். இவரோட வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுச்சு. வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 

தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் தாளம் - பகலில் ஒரு இரவு


சொர்க்கத்திலே நாம் அடியெடுத்தோம் வெகு சுகமோ சுகமாக - ஒரே வானம் ஒரே பூமி


நான் உன்னை திரும்ப திரும்ப அழைக்க வேண்டுமா - எல்லாம் உன் கைராசி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 28, 2022 5:34 am

28.05.2022

23.05.2022 - நடிகர் ரகுமான் பிறந்த நாள் [1967]

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். அபுதாபில பிறந்தார். தமிழ், தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். மலையாள நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா குடுத்து கௌரவிச்சவங்கள்ல ரகுமானும் ஒருத்தர். இவருக்கு தமிழ்நாடு, கேரளால ரசிகர் மன்றங்கள் உண்டு. 

தமிழ்ல நடிச்ச முதல் படம் நிலவே மலரே. தமிழ்ல டப்பிங் குரல்ல நடிச்சிட்ருந்தவர் 2004ல எதிரி படத்ல சொந்த குரல்ல பேசி நடிச்சார். 

கேரள மாநில விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, MGR- சிவாஜி அகடமி விருது, மெட்றாஸ் டெலிவிஷன் விருது, ஏசியாநெட் சினிமா விருது இன்னும் சில விருதும் வாங்கினார். 

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் - நிலவே மலரே


ஓர் இரவில் காற்று வந்தது நான் கவிஞன் பாட்டு வந்தது - புரியாத புதிர்


பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் - ஒருவர் வாழும் ஆலயம்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 21 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை