புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
32 Posts - 51%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
74 Posts - 57%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 14 of 60 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 37 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 27, 2022 4:29 pm

27.02.02022

25.02.2022 - டைரக்ட்டர் கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்த நாள் [1973]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், பின்னணி பாடகர், டப்பிங் பேசுபவர் & நடிகர். கேரளால பிறந்தார். வளந்தது, படிச்சது தமிழ்நாட்ல. படிக்கும்போதே கதைகள் எழுதினார். படிப்பை முடிச்ச பிறகு டைரக்ட்டராகணும்னு தன் ஆசைய பெற்றோர்கிட்ட  சொன்னார். டைரக்ட்டர் ராஜீவ் மேனன்கிட்ட அம்மா சேர சொன்னாங்க. மின்சார கனவு [1997] படத்ல கௌதம் உதவி டைரக்ட்டரா இருந்து, நடிக்கவும் செஞ்சார். 

படிக்கும்போது தன்னோடு படிச்ச மாணவர்களை அடிப்படையா வச்சுதான், மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை நோக்கி வரும் தோட்டா படங்களின் ஹீரோக்களுக்கு கதை எழுதினார். 

தன்னோட சில தமிழ் படங்கள தெலுங்கு, ஹிந்தில கொஞ்சம்  மாத்தி டப் செஞ்சார். இவரோட விளம்பர தயாரிப்பு நிறுவனம் ஃபோட்டான் கதாஸ். இதை வச்சு அப்புறமா சினிமா எடுக்க ஆரம்பிச்சார். 2000ல ஓ லாலா னு ஒரு படத்த ஆரம்பிச்சார். அப்புறம் மின்னலேனு பேர் மாத்தி 2001ல ரிலீஸ் ஆச்சு. 

2003ல காக்க காக்க படத்தை எடுக்கும்போது, அதுல நடிச்ச சூர்யாவை கமாண்டோ ட்ரைனிங் ஸ்கூல்ல சேத்து பயிற்சி எடுக்க வைத்தார். படம் பயங்கர வெற்றி. மணிரத்னம், ராம்கோபால் வர்மா போன்ற ப்ரபல  டைரக்ட்டர்கள் லிஸ்ட்ல கௌதமையும் சேத்துட்டாங்க. காக்க காக்க படத்தை ஹிந்தியிலயும் ரீமேக் செஞ்சு ரிலீஸ் செஞ்சார். தன்னோட 70% சுய கதையை சினிமாவா எடுத்தது வாரணம் ஆயிரம் [2008]. 

இவர் படங்கள்ல டெக்னிக்கல் ஒர்க் நல்லா இருக்கும். வெப் சீரீஸ் எடுத்தார். செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்டு டைரக்ட்டர் கௌதம்தான். 

விருதுகள்
*** விஜய் விருது - சிறந்த டைரக்ட்டர் - வாரணம் ஆயிரம் 2008
*** விஜய் விருது & ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த படம் - தங்க மீன்கள் 2013
*** தேசிய விருது - சிறந்த தமிழ் படம் - வாரணம் ஆயிரம் 2008 & தங்க மீன்கள் 2013
*** கலைமாமணி விருது 2021
*** நந்தி விருது 2010 - சிறந்த திரைக்கதாசிரியர் - தெலுங்கு படம் 
*** நந்தி சிறப்பு ஜூரி விருது 2010 - தெலுங்கு படம் 

ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமையா - சங்கர் மகாதேவன் & திப்பு 

மின்னலே 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / வாலி 

கௌதம் மேனன் நடிச்ச கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் [2020] படத்ல 


உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா - பாம்பே ஜெயஸ்ரீ 

பச்சைக்கிளி முத்துச்சரம் 2007 / ஹாரிஸ் ஜெயராஜ் / ரோகிணி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 27, 2022 4:38 pm

27.02.2022

25.02.2022 - சிரிப்பு நடிகர் ப்ரேம் ஜி அமரன் பிறந்த நாள் [1979]

ப்ரேம் கங்கை அமரன். நடிகர், பின்னணி பாடகர். கங்கை அமரன் அப்பா, வெங்கட் பிரபு அண்ணன். ப்ரேம்ஜீக்கு ம்யூஸிக் மேல ஆர்வம் உண்டு. யுவன் சங்கர் ராஜா ம்யூஸிக் போட்ட பாட்டுக்கள்ல ராப் ம்யூஸிக் பகுதியை ப்ரேம்ஜி பாடினார். வல்லவன் படத்தில லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே பாட்டு மாதிரி, வேற சில படங்கள்ல சில பாட்டுக்களை ரீமிக்ஸ் செஞ்சு பாடினார். 

சின்ன ரோல்ல நடிச்ச முதல் படம் புன்னகை பூவே [2003]. 
ம்யூஸிக் போட்ட முதல் படம் ஞாபகம் வருதே [2005]. 
பாடிய முதல் பாட்டு வேலை [1998] படத்ல "காலத்துக்கு ஏத்த கானா"

சினிமாவுக்கு ம்யூஸிக் போட்றத தவிர 'Mediacorp Vasantham' என்ற சிங்கப்பூர் சேனல்ல ப்ளானட் கலாட்டா II - அட்றா சக்க என்ற எப்பிசோடுக்கு ம்யூஸிக் போட்டார். பாடகர் சுரேஷ் பீட்டர்கூட சேந்து "The One Anthem" னு ஒரு பாட்டை எழுதினார். 

விருது :
சர்வதேச தமிழ் சினிமா விருது - சிறந்த துணை நடிகர் - மங்காத்தா [2011]

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம் - KS சித்ரா, இளையராஜா & SPB

கோவா 2010 / யுவன் சங்கர் ராஜா / கங்கை அமரன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 27, 2022 5:07 pm

27.02.2022

25.02.2022 - நடிகை திவ்யா பார்தி பிறந்த நாள் [1974 - 1993]

பாலிவுட் நடிகை. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால மாடலிங் செஞ்சார். நிலாப்பெண்ணே தமிழ் படத்தின் மூலம் 1990ல சினிமாவுக்கு வந்தார். படம் சரியா ஓடல. அப்புறம் தெலுங்கு. 1992ல ஹிந்தி படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.

படிக்கும்போது நடிக்கிறது இன்ட்ரெஸ்ட் இல்ல. நல்லா படிச்சார். ஆனாலும் ஸ்கூல்லயும், கணபதி திருவிழாலயும் ஃபேஷன் ஷோல கலந்துக்கிட்டார். இதுக்காக ஸ்கூல்ல பல பரிசுகள் வாங்கினார். நல்ல கார் ஓட்டினார். 14 வயசிலேயே கார் ஓட்ட கத்துக்கிட்டார். நீச்சல் வீரர். 

நடிக்க சான்ஸ் கெடைச்சபோது அவர் ஒம்போதாப்பு படிச்சிட்டு இருந்தார். அவர் முகம் அப்போ நடிகை ஸ்ரீதேவியின் சாயல் இருந்ததால, பல டைரக்ட்டர்கள், தயாரிப்பாளர்கள் கவனம் திவ்யாவின் பக்கம்தான். திவ்யாவுக்கு, அவரோட பெற்றோர்களும் இதை கண்டுக்கல. ஆனா ஹிந்தி படங்கள்ல சான்ஸ் கெடைச்சதால, அம்மாவின் தூண்டுதலால, படிப்பை நிறுத்திட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டார். பாலிவுட் நட்சத்திரமானார். 

19 வயசில இறந்து போனபோது, இவர் நடிச்சிட்டு இருந்த பல படங்கள் முடிக்க முடியாம இருந்துச்சு. அந்த படங்கள வேற ஹீரோயின்கள வச்சு எடுத்து ரிலீஸ் செஞ்சாங்க. 

தமிழ்ல நடிச்ச ஒரே படம் நிலாப்பெண்ணே [1990]. ஒரு ஹிந்தி படத்துக்கு ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.

மனசுக்கு வயசென்ன இளங்கிளியே பாடு நீ ஆடு - KS சித்ரா

நிலா பெண்ணே 1990 / வித்யாசாகர் / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 27, 2022 9:15 pm

27.02.2022

26.02.2022 - நடிகர் மா கா பா ஆனந்த் பிறந்த நாள் [1986]

சினிமா நடிகர், ரேடியோ FM, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். கோவை FM ரேடியோ, ரேடியோ மிர்ச்சில காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விஜய் TVல அது இது எது, சூப்பர் சிங்கர், சினிமா காரம் காஃபி, கலக்க போவது யாரு, Kings Of Dance, Mrs சின்னத்திரை போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளை  ஆங்கரிங் செஞ்சார். விஜய் TV யின் ப்ரபல ஆங்கர்கள் வரிசைல, தனக்கென தனி இடம் பிடிச்சு ஏராளமான ரசிகர் மனசில  இருக்கிறவர் மா கா பா ஆனந்த். இவர் மனைவி ஒரு ஆங்கிலோ இந்தியன். லவ் மேரேஜ். 

நடிச்ச முதல் படம் 2014ல வானவராயன் வல்லவராயன். 

இப்ப உள்ள சூழ்நிலைல, அதிகமா ஜனங்கள் வெளிய போகாம வீட்டலியே  இருக்காங்க. வீட்ல உள்ள நேரத்ல மா கா பா ஆனந்த் தன்னோட கெட்டப்பை மாத்தி பலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கார். அதுல ஒண்ணு பழம்பெரும் சிரிப்பு நடிகர் சந்திரபாபு கெட்டப். முக பாவங்களை சந்திரபாபுபோல மாத்தி போட்டோ எடுத்து போட்டிருக்கார். பென்சில் மீசையை கூட போட்டார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்கள்ல ட்ரெண்டாகி வருது. 

அய்யய்யோ வசமா மாட்டிக்கிட்டா இவ நெஞ்சில் வெசமா ஏறிக்கிட்டா - சுனிதா சாரதி & கார்த்திக் 

நவரச திலகம் 2016 / சித்தார்த் விபின் 

கண்ணுக்குள்ள வந்து சிக்குறியே பெண்ணே கனவுக்குள்ள வந்து நிக்குறியே கண்ணே 

கடலை 2016 / சாம்ஸ் CS 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 27, 2022 9:30 pm

27.02.2022

நடிகர் தம்பி ராமையா பிறந்த நாள் [1956]

நடிகர், டைரக்ட்டர், அப்பப்ப பாடலாசிரியர், பின்னணி பாடகர்.
திரைக்கதை எழுதணும் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்ல டைரக்ட்டர்கள் T ராஜேந்தர், P வாசுகிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். திரைக்கதை எழுதுறதுல P வாசுவை தன் குருவா நெனைச்சார்.

முதல்ல டைரக்ட்டின படம் மனு நீதி [2000]. நடிச்ச முதல் படம் மலபார் போலீஸ் [1999], P வாசுவின் படம். ப்ரபலமடஞ்சுது மைனா [2010] படத்ல நடிச்சு. டைரக்ட்டின மூணு படங்கள்ல வடிவேலு நடிச்ச இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஒண்ணு. துணை நடிகரா நடிச்சுட்டே காமெடி ட்ராக் எழுதினார். தனக்கு தானே மேக்கப் போட்டுக்குவார். தன் ட்ரெஸ்ஸையும் அவரே செலெக்ட் செஞ்சார்.

விருதுகள் :
*** தேசிய விருது & விஜய் விருது - சிறந்த துணை நடிகருக்காக - மைனா [2010]
*** தமிழ்நாடு மாநில விருது - சிறந்த சிரிப்பு நடிகருக்காக - மைனா [2010]
*** நார்வே தமிழ் திரைப்பட விழா விருது - சிறந்த வில்லனுக்காக - சாட்டை [2012]
*** SIIMA விருது - சிறந்த சிரிப்பு நடிகர் - கும்கி [2012]
*** ஃபிலிம்ஃபேர் விருது தமிழ் - சிறந்த துணை நடிகர் - கும்கி [2012]
*** விஜய் விருது - சிறந்த சிரிப்பு நடிகர் - கதை, திரைக்கதை வசனம் இயக்கம் [2014]
*** ஆனந்த விகடன் சினிமா விருது - சிறந்த சிரிப்பு நடிகர் - கதை, திரைக்கதை வசனம் இயக்கம் [2014]
*** SIIMA விருது - சிறந்த சிரிப்பு நடிகர் - தனி ஒருவன் [2015]

மனுநீதி 2001 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்
ஏலே கருத்தம்மா எனக்கு பொருத்தமா தானா சிரிக்கிறியே நானும் வரட்டுமா

மனுநீதி 2001 / தேவா

பம்பரக்கண்ணாலே 2005ல தம்பி ராமையா & வடிவேலு சிரிப்பு ஸீன்



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 28, 2022 5:44 pm

28.02.2022

நடிகை பத்மப்ரியா ஜானகிராமன் பிறந்த நாள் [1980]

மலையாள நடிகை, மாடல். பரதநாட்டிய கலைஞர். டெல்லீல பிறந்து பஞ்சாப்ல வளந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காள படங்கள்ல 50க்கும் மேலான படங்கள்ல நடிச்சிருக்கார். மொதல்ல நடிக்க ஆரம்பிச்சது தெலுங்குல. 2005ல முதல்ல நடிச்ச தமிழ் படம் தவமாய் தவமிருந்து.

இவர் 2001ல Miss Andhra Pradesh. ஆந்திர பிரதேசத்தில படிப்பு முடிச்சார். 12வது படிக்கும்போது, ஒரு ம்யூஸிக் ஆல்பம் செஞ்சார்.

விருதுகள் :
*** தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த அறிமுக நடிகை - தவமாய் தவமிருந்து 2005
*** தமிழ்நாடு மாநில சிறப்பு விருது - மிருகம் 2007
*** ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த நடிகை - மலையாள படம்
*** ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது - சிறந்த துணை நடிகை - மலையாள படம்

ஹோ நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா நினைவு அதனால் இனிக்குதடா

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2010 GV ப்ரகாஷ்குமார் / வைரமுத்து

வாடா வாடா வாடா வாடா நண்பா ஒரு வானம்பாடி
பிரம்மன் 2014 / தேவிஸ்ரீ ப்ரசாத் / விவேகா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 28, 2022 5:49 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Padmapriya-4

பத்மபிரியா நடித்த திரைப்படங்கள்


2004 சீனு வசந்தி இலட்சுமிi
2004 அமிர்தம்
2005 தவமாய் தவமிருந்து
2006 பட்டியல் (திரைப்படம்)
2006 யேஸ் யுவர் ஹானர்
2007 அஞ்சில் ஒரல் அர்ஜூனன்
2007 சத்தம் போடாதே
2007 பரதேசி
2007 நாளு பெண்ணுங்கள்l
2007 டைம் (2007 திரைப்படம்)
2007 மிருகம் (திரைப்படம்)
2008 லேப்டாப் (2008 திரைப்படம்)
2009 பொக்கிசம்
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்[1]
2010 தமாசு (திரைப்படம்)
2011 சீனியர்ஸ்
2011 சீனேகவீடு
2011 நாய்கா
2012 அப்பரஞ்சித துமி
2012 கோப்ரா
2012 பேச்சுலர் பார்டி
2012 நம்பர் 66 மதுர பஸ்
2012 இவன் மகாரூபன்
2012 பாப்பின்ஸ்
2013 மேட் டேட்
2013 லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்)
2013 தங்க மீன்கள்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 28, 2022 5:52 pm

28.02.2022

நடிகர் ஸ்ரீகாந்த் பிறந்த நாள் [1980]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 1999ல ஜன்னல் மரபு கவிதைகள் என்ற K பாலசந்தரின் TV சீரியல்ல நடிச்சார். ஆரம்பத்ல மாடலிங் செஞ்சார். அப்போ உதவி டைரக்ட்டர்களா இருந்த வெற்றிமாறன், மிஸ்கின் இவங்ககிட்ட 2000கள்ல நடிப்பு ட்ரைனிங் எடுத்துகிட்டார்.

காதல் வைரஸ், 12B படங்கள்ல இவர் நடிக்கிறமாதிரி இருந்துச்சு. ஏதோ காரணங்களால விட்டுப்போச்சு. இதே மாதிரி பாரதிராஜா, K பாலசந்தர் சில படங்கள்கூட. தமிழ்ல நடிச்ச முதல் படம் 2002ல ரோஜாக்கூட்டம். முதல் படமே ஓஹோ. பெண் ரசிகர்கள் சாக்லேட் பாய்னு பட்டபேர் வச்ச நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். இந்த பட்ட பேரை மாத்த வித்தியாசமான கதைகள்ல நடிச்சார். அந்த படங்கள் சரியா ஓடல. அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சான்ஸ் கெடச்சு நடிச்சார்.

தெலுங்கு படங்கள்ல இவர் பேர் ஸ்ரீராம்.

விருதுகள் :
*** சர்வதேச தமிழ் திரைப்பட விருது - சிறந்த அறிமுக நடிகர் - ரோஜாக்கூட்டம் [2002]
*** தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது - பார்த்திபன் கனவு 2003
*** கலைமாமணி விருது 2018

மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே

ரோஜாக் கூட்டம் 2002 / பரத்வாஜ் / வைரமுத்து

நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும்

வர்ணஜாலம் 2004 / வித்யாசாகர் / தாமரை

சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமல் காதலும் இல்லை

மெர்குரி பூக்கள் 2006 / கார்த்திக் ராஜா / நா முத்துக்குமார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 28, 2022 6:34 pm

28.02.2022

நடிகை ராது என்கிற ரோகினி பிறந்த நாள் [1965]

ராதிகா ரங்கநாத். மும்பைல பிறந்தார். தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். நடிச்சது ரெண்டு தமிழ், ரெண்டு மலையாள படங்கள் மட்டுமே. தமிழ்ல நடிச்ச படங்கள் நிழல்கள் [1980] & ஒருவர் வாழும் ஆலயம் [1988]. 

படங்கள் சான்ஸ் இல்லாததால கல்யாணம் செஞ்சுக்கிட்டார். மென்பொருள் கம்பெனில வேல செஞ்சார். ரெண்டு பிள்ளைங்கள சமாளிக்கிறது கஷ்ட்டம்னு வேலைய விட்டுட்டார். ஏற்கனவே பரதநாட்டியம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் செஞ்சிருந்ததால, அஞ்சலி நாட்டிய ஸ்கூல்னு தொடங்கி நடத்தினார். 

தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

நிழல்கள் 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்

பல்லவியை சரணம் உன் கீதம் தந்தடி சலனம்

ஒருவர் வாழும் ஆலயம் 1988 / இளையராஜா / பொன்னடியான்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 02, 2022 12:55 pm

02.03.2022

01.03.2022 - பழம்பெரும் நடிகர் MK தியாகராஜ பாகவதர் அவர்கள் பிறந்த நாள்
[1910 - 1959]

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர், சுருக்கமாக MKT. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். எவர்க்ரீன் நட்சத்திர நாயகன் & சிறந்த கர்னாடக சங்கீத தமிழ் பாடகர். ஏழிசை மன்னர்னு சொன்னாங்க. தயாள குணம் நெறயவே இருந்தவர். ஆரம்பத்ல நாடகங்கள்ல ஸ்திரீபார்ட் போட்டு நடிச்சார்.

1934ல முதல் முதலா பவளக்கொடி படத்ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். சுமார் 15 படங்கள்ல நடிச்சார். 6 படங்கள் வெற்றி படங்கள். 1944ல ரிலீஸ் ஆன இவரோட படம் ஹரிதாஸ் சென்னைல ஒரே தியேட்டர்ல 3 வருஷம் ஓடுச்சு. 3 தீபாவளிக்கு ஓடிய ஒரே இந்திய திரைப்படம்.

சினிமா உலகத்தல இவருக்கு நெருங்கிய நண்பர் கலைவாணர் NS கிருஷ்ணன். சூழ்நிலை காரணமாக இவங்க ரெண்டு பேரும் 4 வருஷம் நடிக்க முடியாம போச்சு. அப்புறமா நடிச்ச படங்கள் முந்திய மாதிரி ஓடல. ஆனா பாட்டுக்கள் எல்லாம் மக்கள் விரும்பி கேட்டாங்க.

பாகவதரின் பாட்டுக்களை அநேகமா எழுதியவர் பாபநாசம் சிவன். பாகவதர் நடிக்காம இருந்தபோது, தன்னையே நம்பி இருந்த பாபநாசம் சிவனோட கஷ்ட்டத்தை பார்த்து, பாகவதர் தான் உபயோகிச்ச தங்க தட்டுகளை கொடுத்து உதவினார். பாகவதரை போல வாழ்ந்தவரும் இல்ல, வீழ்ந்தவரும் இல்லேன்னு அப்போ பேசிக்கிட்டாங்களாம்.

பாட்டு கச்சேரி எங்க நடந்தாலும் அங்க பாகவதர் இருந்தார். கச்சேரி முடிஞ்ச பிறகு, கேட்ட பாட்டையெல்லாம் அப்டியே பாடி காட்டினார். நாடகங்கள்ல நடிச்ச பாகவதரின் குரல் வளத்தையும், இசை ஆர்வத்தையும் பார்த்த வயலின் வித்வான் மதுரை பொன்னு அய்யங்கார், பாகவதருக்கு கர்னாடக சங்கீதத்தை சொல்லி கொடுத்தார். அதே நேரத்தில நாடக துறை நடராஜ வாத்தியார்கிட்ட நடிப்பையும் கத்துக்கிட்டார் தியாகராஜர்.

ஆறு வருஷம் சங்கீதம் கத்துக்கிட்ட பிறகு, கச்சேரி அரங்கேற்றம் நடந்துச்சு. அந்த கச்சேரியில தமிழ்நாட்டுல தலை சிறந்த வித்வான்கள் மிருதங்கம், வயலின், கஞ்சீரா வாசிச்சாங்க. கச்சேரி களை கட்டுச்சு. கச்சேரி முடிஞ்ச பிறகு, கஞ்சீரா வாசிச்ச புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து தியாகராஜருக்கு பாகவதர்னு பட்டம் கொடுத்தார்.

1926ல பவளக்கொடி நாடகத்தில அர்ஜுனனாக நடிச்சார். இந்த நாடகந்தான் 1934ல சினிமாவா ரிலீஸ் ஆச்சு. இந்த படத்ல அடேங்கப்பா, 55 பாட்டு. இதுல 22 பாட்டு பாடினது தியாகராஜர். படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல எல்லாம் செம கூட்டம். தொடர்ந்து 9 மாசம் ஓடின படம்.

அந்த காலக்கட்டத்தில, கச்சேரிகள்ல தெலுங்கு கீர்த்தனைகள் பாட்றது வழக்கம். பாகவதர் தமிழிசை பாட்டுதான் பாடுவேன்னு பாடினார். இவரோட கச்சேரிகளை கேட்க ஜனங்கள் எலக்ட்ரிக் போஸ்ட் மேல கூட ஏறி உக்காந்து கேட்டாங்க. இதுல ஒரு அசம்பாவிதமும் நடந்துச்சு. கம்பத்துலே இருந்து ஷாக் அடிச்சு ஒரு பையன் கீழே விழுந்து அவுட். பாகவதர் அந்த குடும்பத்துக்கு 5000 ரூபாய் நிவாரணம் கொடுத்தார். அந்த காலத்தில எவ்ளோ பெரிய தொகைல?

சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் பாகவதரின் நண்பரும், தீவிர ரசிகரும். இவர் பாகவதருக்கு அப்போ விலையுயர்ந்த பான்டாக் கார் பரிசாக கொடுத்தார்.

பாகவதரை பற்றிய புத்தகங்கள் :
எம்.கே.ட்டி. பாகவதர் கதை - விந்தன் எழுதியது
பாகவதர் வரலாறு - மாலா பாலன்

ஆரணங்கே நிஜம் நீ அறியாய் ஆருயிர் தந்தையின் நெஞ்சமதே

சியாமளா 1952

வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ வதனமே சந்த்ர பிம்பமோ

சிவகவி 1943 / ம்யூஸிக் & வரிகள் : பாபநாசம் சிவன்

கொஞ்சி பேசும் கிளியே எந்தன் ஜீவித மோகினியே இந்த லோகம் மறந்தேன்
அமரகவி 1952 / G ராமநாதன் / சுரதா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 14 of 60 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 37 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக