புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 2%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
26 Posts - 3%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 16, 2018 6:23 pm

16.01.2018
 
22. பக்த ஸ்ரீ தியாகராஜா 1937
 
தயாரிப்பு : சாகர் மூவிடோன், பாம்பே
டைரக்டர் : வீரேந்திர தேசாய்
உதவி டைரக்டர் : TP கல்யாணராம சாஸ்த்திரி

வித்வான் மாதிரிமங்கலம் நடேச ஐயர் – தியாகராஜா
கமலா – தியாகராஜரின் மனைவி  
சீதா – தியாகராஜாவின் கொழுந்தியாள் 
TPK சாஸ்த்திரி – தஞ்சாவூர் மன்னன் & இசைக்கலைஞர் [ரெட்டை வேஷம்] 

CPS மணி ஐயர், SK சுந்தரம், ‘கவை’ கல்யாணம், A தனபால் செட்டியார்,
VB ஸ்ரீனிவாசன், பேபி கோகிலா, மாஸ்டர் பிரணதர்திகரன், பத்மனாபச்சர், 
ராஜகோபால ஐயர்.

இந்தப் படத்துக்கு இன்னொரு பேரும் உண்டாம், ஸ்ரீ தியாகராஜ சத்திரம்.
1936 – 1937 கள்ல பக்தி படங்கள் நிறைய வந்துச்சு. மகாத்மா கபீர்தாஸ் 1936, பட்டினத்தார் 1936, மீராபாய் 1936, அருணகிரிநாதர் 1937, சுந்தரமூர்த்தி நாயனார் 1937. பக்த அருணகிரி 1937, பக்த துளசிதாஸ் 1937, பக்த புரந்தரதாஸா 1937, பக்த ஜெயதேவா 1937 அப்புறமா இந்தப் படம். இதுல அநேக படங்கள் பிரமாதமாய் ஓடுச்சாம்.
 
டைரக்டர் தேசாய்க்கு தமிழ் அவ்வளவா தெரியாததால, இணை இயக்குனர் கல்யாணராம சாஸ்த்திரி அவருக்கு உதவியாக இருந்தாராம்., இந்தப் படத்துக்கு கதை யார் எழுதினாங்கன்னு தெரியுமா? சென்னையில் ஒரு பிரபல வக்கீல். MP சுந்தரராஜன்னு பேர். இவர் குதிரை பந்தயத்துக்கும் போவார், இவர் கூட சேர்ந்து, SS வாசனும் குதிரைப் பந்தயத்துக்கு போனாராம். அப்புறமாத்தான் சினிமாவுக்கு வந்தாராம், வாசன்.

இந்தப் படத்ல பிரணதர்திகரன்னு ஒருத்தர் நடிச்சிருந்தார்ல, அவர் MP சுந்தரராஜனின் மகனாம். சின்ன பையனாய் நடிச்சாராம். இவர் பெரியவனான பின்னால, ஜெமினி ஸ்டூடியோவில எடிட்டராக இருந்தாராம்.
கர்னாடக இசைக் கலைஞர் தியாகராஜாவின் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்வுகளை இந்த படத்தில, திறமையான முறையில் படம் பிடிச்சிருப்பாங்களாம்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதில, இசைக்கலைஞர்களை பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை பூனாவில வெளியிட்டாங்களாம். அதில தியாகராஜாவின் பேர் ‘தியாகையா, இசைக்கலைஞர், திருவாரூர்’னு போட்டிருந்துச்சாம். சுவாமிகள்னோ, சாதுன்னோ, துறவின்னோ போடலியாம்.

கிட்டத்தட்ட 32 பாட்டுக்கள். எல்லா பாட்டும் தியாகராஜாவோடது. அத்தனை பாட்டுக்களும் ஹீரோவால் தெலுங்கில பாடப்பட்டதாம். ஹீரோ மற்ற படங்களில் பாடி, நடிச்சதை விட, இந்தப் படத்தல ரொம்ப நல்ல பாடி, நடிச்சிருப்பாராம்.  

ரெண்டே ரெண்டு தமிழ் பாட்டாம். ஒண்ணு கோரஸ் பாடியதாம். திருடங்க ஹீரோ வீட்ல திருட போவாங்களாம். அப்போ அவங்க பாட்ற மாதிரியாம். ஜா................லியான திருடங்க போல. இன்னொரு பாட்டு தமிழ்ல மொழி பெயர்க்கப்பட்டதாம்.

திருப்பதி கோவில் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டதாம். இசைக்காகவே நல்..................லா ஓடின படமாம்.

1946ல, நாகையா நடிச்ச ‘தியாகையா’ன்னு ஒரு படம் வந்துச்சாம்.  அதுவும் பிரமா...................தமாய் ஓடுச்சாம். 1981ல வந்த படத்தில சங்கராபரணம் சோமையாஜுலு & KR நடிச்சாங்களாம். ஓடல.
- ஹிந்து 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 17, 2018 1:33 am

16.01.2018
 
22. பக்த ஸ்ரீ தியாகராஜா 1937
 
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 OpEwr0cTweraeLztkKDU+Bhaktha_sri_thyagaraja_1937_tamil_film_poster

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 17, 2018 2:51 pm

இவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி வைக்க விருக்கிறேன். நன்றி.  அது சரி இந்த அற்புத புதையல்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்? நல்ல தகவல்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 17, 2018 3:09 pm

பக்த ஸ்ரீ தியாகராஜா

சூப்பருங்க சூப்பருங்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 17, 2018 4:55 pm

17.01.2018

8. ரத்தக்கண்ணீர் 1954

தயாரிப்பு : பெருமாள் முதலியாரின் நேஷனல் பிக்ச்சர்ஸ் 
டைரக் ஷன் : K தங்கராஜ் 
இசை : சிதம்பரம் S ஜெயராமன் 
பாட்டூஸ் : மருதகாசி, ஆத்மநாதன் 
நடிச்சவங்க : ஸ்ரீரஞ்சனி, MN ராஜம், SR ஜானகி, அங்கமுத்து, MR ராதா, SSR, சந்திரபாபு, துரைசாமி. 

ஒருத்தன்  வெளிநாட்டில போய் படிச்சிட்டு வர்றான். படிச்சிட்டு வர்றவன், படிச்சிட்டு மட்டும் வர வேண்டியதுதானே. அங்க உள்ள நாகரீகத்தை follow பண்ணினது மட்டுமில்லாம, அதுக்கு அடிமையாவே.............. ஆயிட்டான். இது மட்டுமில்லாம,  தமிழ்நாட்டு கலாச்சாரம், இந்துமதம் இதையெல்லாம் கிண்டலடிச்சு பேசிட்டு இருந்தான். 

இவனுக்கு கல்யாணம் ஆயிருச்சு. மனைவி இருந்தும் வேற ஒரு பெண்ணை தேடி போறான். அவளே.............. கதின்னு அவ வீட்டிலேயே.............. கிடக்கிறான். கொஞ்ச நாள்ல, அவன் குஷ்டரோகி ஆகுறான். 

இந்த காலத்தில எயிட்ஸ் போன்ற கெட்ட நோயெல்லாம் இருக்கு. வேற பொம்பளைங்க கூட கனெக் ஷன் வச்சிருந்தா, ஆம்பளைங்க வாழ்க்கையே நாசமா போகும்னு அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிற படம். 

இந்தப்  படத்தில  என்ன  நடந்துச்சு, எப்படி நடந்துச்சுன்னு எல்லாருக்கும் தெரியும் இருந்தாலும், நானும் சொல்லிர்றேனே, என்ன.

மோகன்  இந்தப் படத்தில வில்லனிக் ஹீரோ. உள்ளூர் படிப்பு புடிக்கலியாம். அதனால வெளிநா ........................... ட்டுக்கு போனான், படிக்க. அந்தக் காலத்திலேயே வெளிநாட்டுக்குப் போய் படிக்கிற அளவுக்கு அவ்ளோ............... பெரிய பணக்காரன்.  படிச்சுட்டு வரும்போது, வெளிநாட்டுக்காரிய கண்ணாலம் கட்டிக்கிட்டு வராம, வெளிநாட்டு கலாச்சாரத்தை கட்டிக்கினு, புடிசிச்சுகினு  வந்துட்டான். அதோடு விட்டானா? அவன்  வீட்ல உள்ளவங்களும், வேலக்காரங்க உட்பட, எல்லா....................ரும், ஊர் ஜனங்களும் அவன்  மாதிரியே  இருக்குணும்னு விரும்புறான். நம்ம ஊருக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமோ? இல்லேல்ல. 

அதோடு விட்டானா, தன் சந்தோஷத்துக்காக காந்தான்னு ஒரு  பொண்ண வேற தேடித் போறான்.  அவ ஒரு நாட்டியக்காரி.  அவ வீட்லேயே.............. விழுந்து  கிடக்கிறான். பெத்தவங்க அவர  நெனச்சு கவலைப்பட ஆரம்பிச்சாங்க. 

"சரி..................., இந்தப் பயலுக்கு ஒரு கண்ணாலத்த  கட்டி வச்சாக்கா, உருப்படியா வீட்டோட கெடப்பான். அந்த பொம்பளய தேடி போகமாட்டான் "ன்னு  அவங்க நெனச்சாங்க. முடிவும் பண்ணிட்டாங்க. மகனை நம்.................பி, கல்யாணத்த   செஞ்சு வச்சுர்றாங்க. ஆனா என்..............ன பிரயோஜனம்?  ருசி கண்ட பூனையாச்சே.  தொடர்ந்..........து  அந்த பொம்பளயையே  தே..............டி போகத்தான் செஞ்சான். அவனுக்கு மேல்நாட்டு நாகரீம்தான் புடிச்சிருக்கு. சந்திரா அடக்க ஒடுக்கமா குடும்ப பொண்ணா இருக்கிறது அவருக்கு புடிக்................கலியே. நண்பன் பாலு சொல்றதையும் கேட்டுகல. இப்படிப்பட்டவங்களுக்கு பட்டாதானே புத்தி வரும். காந்தாவுக்காக சொத்து வேற கரஞ்சுட்டு, கொறஞ்சுட்டு போச்சு. 

இப்டியே..................காலம் போச்சு. அப்புறமா என்னான்னா, மோகனுக்கு  குஷ்டம் வந்துர்ரது. உடம்பெல்லா.................ம் குஷ்டம் பரவி, மூஞ்சி கோரமோ கோரமாயிருச்சு. அப்புறம் என்ன, எப்படி  அந்த பொம்பள இவன  ஏத்துக்குவா, காந்தாவும் அதையேதான் செஞ்சா.   

"இங்கயிருந்து ஓடிப்போயிரு.  இனிமே இந்தப் பக்கமே தல வச்சு படுக்காத, வராத"ன்னு வெரட்டி விட்டுர்றா. வேற வழியில்லாம, அவளை விட்டுட்டு போயிர்றான். கொஞ்ச நாள் கழிச்சு, அவனுக்கு பார்வையும் போயிருது. அவன் என்ன செய்வான்? இந்த கோலத்தில் வீட்டுக்கும் போக மனசில்ல. பிச்சை எடுத்து சாப்பிடுறான். பிச்சையாவது சரியா கிடைக்குதா? அவனுடைய அவலட்சணமான மூஞ்சியையும், அருவருப்பான உருவத்தையும் பார்த்து, மூஞ்சி சுழிச்சுட்டு போனவங்கதான் அதிகம். 

பிச்சை எடுத்துட்டு போயிட்டு இருக்கும்போது, அந்த பக்கமாய் வந்த பாலுட்டயும் மோகன்  பிச்சை கேட்கிறான். பாலுவும்  இவனை பார்க்கிறான். அடையாளம் தெரியல. யார்னு கண்டுபுடிக்க முடியாத  அளவுக்குதான் குஷ்டம் அவனை புரட்டி போட்டுருச்சுல்ல. சாப்பாட்டுக்கு வழியில்லாம,  மோகன்  அவஸ்த் ...................தை  பட்றான். கண்ணு வேற தெரியலியா. என்ன செய்வான் பாவம். அவன் செஞ்ச பாவம்தான் அவனை இப்படி வாட்டி வதைத்தது. 

இப்படி மோகன் லோ லோ..................ன்னு அலையும்போது, அவன் நல்லா இருக்கும்போது,  அவனுடைய ஆணவத்தால, அகங்காரத்தால் செஞ்ச அநியாயங்கள் எல்லாத்தையும் நெனச்சு பார்க்கிறான். 

தன் மனைவி சந்திராவையும், நண்பன் பாலுவையும் சேர்த்து வச்சு தப்பா பேசினது, அவங்க மேல பழி போட்டது, எல்லா.....................த்தையும்  நெனச்சு கண்ணீர் விட்றான், வருத்தப்படறான். ஒவ்வொண்ணா அவன் ஞாபகத்துக்கு வந்து, அதையெல்லாம் சொல்லி சொல்லி வேதனைப்படுறான், நொந்.......................து  போறான். 

மனைவி சந்திரா, நண்பன் பாலு, மோகன் இந்த  மூணு பேரும்  எப்படியோ ஒருத்தருக்கொருத்தர் அடையாளம் கண்டுக்கிறாங்க. மோகன் நிலைய பார்த்து ரெண்டு பேரும் துடிச்சு போறாங்க. அவனை பார்த்து கதர்றாங்க. மோகன் ஒரு தீர்மானத்ததுக்கு வர்றான். மோகன், சந்திராவை  மறுமணம் செய்ய  சொல்லி, அவளை பாலுவின் கையில் ஒப்படைக்கிறான். இதுதான் இந்தப் படத்தின் கதைங்கோ.

ரத்தக்கண்ணீர் நாடகம் பலமுறை நடத்தப்பட்டதாம்.  சினிமாவாக வந்தாலும். அதுவும் வெற்றிகரமா ஓடியிருக்கு. Anti ஹீரோன்னு ஒரு சப்ஜெக்ட்டை வச்சு அட்டகாசமாய் எடுத்த  படம். படம் அமோகமா ஓடினத்துக்கு ரொம்ப முக்கிய காரணம், ராதாவின் கிண்டலாக பேசின வசனங்கள்தான். தொழிலாளர் கூட்டத்தில பேசும்போதும், அம்மா இறந்த போதும், பிச்சை எடுக்கும் போதும் அவர் பேசின நகைச்சுவையாக, கேலியாக பேசுவார். இப்படிப்பட்ட எகத்தாளமான  வசனங்கள்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம். 

மொத்தத்தில இந்தப் படத்தின் முக்கியமான பஞ்ச் வசனம் 

"அடியே காந்தா..........".

- ஹிந்து 

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 18, 2018 12:08 pm

sk wrote:
"அடியே காந்தா..........".

சூப்பருங்க சூப்பருங்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 22, 2018 12:06 am

21.01.2018 
by மூர்த்தி Today at 12:18 pm wrote:"நன்றாக இருந்தது. நன்றி. 
தொடக்கத்தில் இருந்து தரலாமே. முதல்  படம் கீசக வதம் 1918 ல் சலனப் பட ம்
ராஜ முதலியார் ஜீவரத்தினம் நடித்தது.1931 இல் காளிதாஸ் நடிகர்கள் பி.ஜி.வெங்கடேசன் - டி. பி. ராஜலட்சுமி. இப்படி வரிசையாக……..தொடரலாமே."

மேற்கோள் செய்த பதிவு: 1257496 

இது 'தெரிந்ததும் தெரியாததும்' பகுதியில் இருந்துச்சு. இப்போ சரியான இடத்துக்கு வந்திருக்கேன். 
"தவறாக நினைக்க வேண்டாம், சும்மா ஒரு ஆலோசனை தான்."

என்ன சார் நீங்க. இதுல தப்பா நெனச்சுக்கிறது என்ன சா..................ர் இருக்கு. உங்க கருத்தை சொல்றீங்க, அம்புட்டுதானே. 

ஆனா ஒண்ணு சார், நீங்க சொன்ன படங்களை பற்றி  எழுத நான் ரெடி. wikiயில கிடைக்கிற  சில தகவல்கள்  தப்பானதுன்னு சொல்றாங்க. அதனாலதான், இப்படிப்பட்ட தகவல்களை அதுலே இருந்து எழுதுறதில்ல. 

பழைய படங்களை பற்றி எழுதுறேனே, அதெல்..............லாமே ஹிந்து பேப்பர்ல வந்தது. ஆனா இங்கிலிஷ்ல இருக்கு. நான் அதை மொழிபெயர்த்து எழுதுறேன். 343 படங்கள் இருக்கு. அதில 1934 ல இருந்துதானே இருக்கு. 

நீங்க படத்தின் பேரை சொல்வீங்களா.................ம். அதை நான் தே.............டி, கெடச்............சா, எழுதுவேனாம். சரியா? 

23. இப்போ கீசக வதம் 1918 

தமிழ்ல மொத மொதலா...................... வந்த படம். இதிகாசங்களை படிச்சவங்களுக்கு 'கீசக  வதம்' பற்றி தெரியுமாம். இப்ப சொல்லுங்க, எத்தனை பேருக்கு தெரியும்? தெரியும்னாலும் பரவாயில்ல, நான் சொல்லாம விடமாட்டேன்.

பாண்டவர்களுடைய கதை. இவங்க பாஞ்சாலியோடு 13 வருஷம் வனவாசம் போறாங்க. வனவாசத்தின் அது பதிமூணாவது வருஷம். அஞ்ஞாத வாசம். இந்த வருஷத்ல, அடையாளம் தெரியாம வாழணும். 

விராட நாட்டில்  ஒரு அரண்மனைக்கு வர்றாங்க. அங்க சுதர்சனைன்னு ஒரு மகாராணியும், ராஜாவும் இருக்கிறாங்க.  இந்த அரண்மனைலதான் பாண்டவர்களும், பாஞ்சாலியும் தங்கி வேலை செய்றாங்க. அதுவும் மாறுவேஷத்தில.  தங்களை கூத்தாடிங்கன்னு சொல்லி, வேலைக்கு சேர்றாங்க. ஆளுக்கொரு வேலை செய்றாங்க. 

பாஞ்சாலி, சைரேந்திரி என்கிற பேர்ல, மகாராணி சுதர்சனைக்கு  வேலை செய்றாள். பீமன், வல்லன்னு பேர மாத்தி வச்சுட்டு சமையல்காரனா வேல செய்றான். தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.  

ஒரு படம்னா வில்லன் இல்லாமலா? வில்லன் இருந்தாதானே படம் நகரும்.  இருக்............கானே, சுதர்சனையின்  சகோதரன் கீசகன். இவனுக்கு சைரேந்திரி மேல ஒரு இது.  அவள் சகோதரியின் வேலைக்காரிதானே, ஈ............ஸியா அவளை அடஞ்சிறலாம்  என்ற எண்ணத்தில், அவளை தன் ரூமுக்கு வரச்சொல்லி, கூப்ட்டு அனுப்புறான். அவளும் வர்றா. இவனுடைய தப்பான எண்ணத்தை  தெரிஞ்சுகுறா, சைரேந்திரி. அவன்கிட்டே இருந்து தப்பிக்கிறா. 

வல்லன்கிட்ட நடந்ததை சொல்லி, அவனை கொல்ல சொல்றா. வல்லனும், கீசகனை தந்............திரமாக நடன மாளிகைக்கு வரவைக்கிறான். கீசகனின் வருகைக்காக  காத்துட்டு இருக்கான். எப்படி? ஒரு துணியை சுத்திகிட்டு, சைரேந்திரி மாதிரி. 

கீசகன் வர்றான். சைரேந்திரியை நெருங்குறான். அடச்சே,  இல்ல இல்ல வல்லனை நெருங்குறான். பக்கத்தில வர்றான். 

கும்மாங்குத்து, கும்மாங்குத்து, சதக் சதக். அவ்ளோதான். கீசகன் ஔட். கொன்னுட்டான். இல்ல இல்ல வதம் செய்றான். இது தா..........ன்  கீசக வதம் படத்தின் கதை..................

நாடக நடிகர் ராஜு முதலியார் - கீசகன்  
நாடக நடிகை ஜீவரத்தினம் - பாஞ்சாலி 
தயாரிப்பு - ரங்கசாமி நடராஜ முதலியார் 

நடராஜ முதலியார் பேசாத படங்களை பாத்துட்டு இருந்தார். பேசும் படம் எடுக்கணும்னு  ஆசைப்பட்டாராம். ஸ்ட்டூவர்ட் ஸ்மித்னு ஒருத்தர். இவரை friend புடிச்சு வச்சுகிட்டார். இவர்கூட  நடராஜ முதலியார் பூனாவுக்கு போயி, சினிமா எடுக்கிறதைப் பற்றி கொஞ்சம் கத்துட்டு சென்னைக்கு வந்தார்.  'இந்தியா ஃபிலிம் கம்பெனி' னு சினிமா தொழில் பார்க்க ஆரம்பிச்சார். மூப்பனார்ட்ட 35 mm பேசாத பட வில்லியம்ஸன் கேமரா வாங்கினார். குடுத்து வச்.............ச கேமரா. கீசக வதம் இந்த கேமராதானே எடுத்துச்சு. 

சிவாஜி நடிச்ச 'பாபு' படத்தில கீசக வதம் தெருக்கூத்து நாடகமாக நடிச்சிருக்காங்க. இதுல சிவாஜி - பீமன் ; நாகேஷ் - கீசகன் ; விஜயஸ்ரீ - சைரந்திரி ; VKR இவங்கல்லாம் நடிச்சிருந்தாங்க.

கீசக வதம் படம் எடுக்கிறதுக்கு நடராஜ முதலியார் 35,௦௦௦/- ரூபாய் செலவளிச்சாராம், அப்..........பவே, 1917லேயே. 35 நாள்ல எடுத்த படம். ஓஹோஹோ படம். 

அந்த காலத்திலெல்லாம், ஜனங்களுக்கு தெரிஞ்ச கதையை எடுத்தாத்தான் ஓடும். அதனாலதான் இப்படிப்பட்ட கதைங்களயா............. படமா எடுத்திட்டு இருந்தாங்க. இந்த ஆலோசனையை நடராஜ முதலியாருக்கு கொடுத்தது, அவருடைய நண்பர் பம்மலார். 

என்ன மூர்த்தி சார், சந்தோஷமா? 

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 22, 2018 12:52 am

மகிழ்ச்சி.நன்றி. ஹரிதாஸ் மூன்று ஆண்டுகள் ஓடியாதாமே,எங்கோ படித்தது. அதைத் தொடர்ந்து தியாகராசரும் என்.எஸ்.கே யும் கொலைக்கு குற்றம் சாடடப்பட்டு சிறைக்கு 2 வருடங்கள் சென்றதாகப் படித்திருந்தேன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 22, 2018 11:03 am

22.01.2018 

நானும் நிறைய இதை பற்றி படிச்சிருக்கேன். லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரின் கொலை வழக்கில்தான் பாகவதரும், NSK யும் ஜெயிலுக்கு போனாங்களாம். 

ஹரிதாஸை பற்றியும் எழுதுறேன். கொஞ்சம் டைம் கொடுங்க. தேடணும்ல. கொஞ்சம் வேற வேலையும் இருக்கு. 

இன்னொண்ணு நான் சொல்லணும். கீசக வதம் படத்தை பற்றி எழுதும்போது ஒரு விஷயத்தை சரியா கவனிக்காம  தப்பா எழுதிட்டேன். 
by heezulia on Mon Jan 22, 2018
தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.
இதுலதான் ஒரு தப்பு நடந்துருச்சு. Friends சொன்னாங்க. அர்ஜுனன்தான் ப்ரஹன்னளையாக இருந்தானாம். ரெண்டு மூணு தளங்களில் உள்ளதை மாத்தி................... மாத்தி பாத்து எழுதிட்டு இருந்தேனா, அர்ஜுனன் தர்மனாகிட்டான்.  

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4774
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 27, 2018 8:02 pm

27.01.2018

24. பத்ம ஜோதி 1937

பத்மா - ஹீரோயின்  
TM சங்கரன் - ஹீரோ , 

MS முத்துகிருஷ்ணன்,  TP மனோஜ்ராவ், அம்புஜம் 

மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரம் தயாரிச்ச ரெண்டாவது படம். முதல் படம்? இதே வருஷத்தில ரிலீஸ் ஆன சதி அகல்யா.  

பத்ம ஜோதி  படத்ல, தமிழ் சினிமாவில முதல் முதலா,  ஒரு புது அம்சத்தை கொண்டு வந்திருக்கார் சுந்தரம். இந்தியாவிலேயே முதல் முதலாககூட இருக்கலாமாம்.  அது என்னான்னா, அனிமேஷன். அனிமேஷன்னா அனிமேஷன் மா................திரி.  அந்த காலத்தில அனிமேஷனா? நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.  

படத்தின் டைட்டில்ல ஹீரோயின் பேர  போடறாங்க. போட்றாங்களா, அந்த பேர் பக்கத்தில ஒரு பொண்ணோட கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம்.  அந்த மூஞ்சி நவரசத்தையும் காட்டுச்சாம். தென்னிந்திய  சினிமாவில அனிமேஷன் இல்லா........த காலத்தில, இப்படி ஒரு கார்ட்டூன் மூஞ்சிய காட்டியது புதுமையா இருந்திருக்கும்ல. 

அனிமேஷன் கேமராவே... இல்ல. அப்ப எப்டீ இப்டீல்லாம் சுந்தரம் காட்டினார்? அதுக்குத்தான் இருந்துச்சாமே, 'Single frame exposure' னு ஒரு முறை. இந்த முறையை வச்சுதான், இந்தப் படத்தில நடிச்சவங்க  பேருக்கு பக்கத்தில, அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி, கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம். 

பத்ம ஜோதி படத்துல ஹீரோயின் பத்மா, பானை செய்ற ஒரு ஏழையின் மகள். பானை செய்யும் போது பத்மா பாடுவாளாம். ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுல்ல. ஆனா அவ அப்பாவுக்கு இந்த பாட்டு தெரியாது போல. திட்றான். செஞ்ச பானைகளை எடுத்துட்டு பக்கத்து ஊரு  மார்க்கெட்ல போயி வித்துட்டு வரச்சொல்லி அவளை அனுப்புறான். 

போற வழியில ஒரு பழத்தோட்டம். அங்க ஒரு இளைஞன். அவன் சும்மாவா நிக்கிறான். கல்லெடுத்து  பழத்துல எறியிறான். சின்ன வயசுதானே, மரத்துல ஏர்றதுதானே. ஓஹோ, தோட்டத்துக்கு சொந்தக்காரன் இருப்பானே. கல்லெறிஞ்சா, தோட்டக்காரன் வரும்போது ஓடிறலாம்ல. மரத்து மேல ஏறினா, குதிச்சு ஓடுறது கஷ்டமாச்சே. அதனாலதான். 

அப்டீ அவன் எறிஞ்ச ஒரு கல்லு, பத்மா கொண்டு போன பானைகள்ல பட்டு, பானைங்க  ஒடஞ்சுபோச்சு. அந்த இளைஞன், அவன் ஒடச்ச பானைங்களின் விலைய  கொடுத்துர்றதா சொல்றான். ஆனா பத்மா பணத்தை வாங்கமாட்டேங்கிறா. அதுக்கு ஒரு காரணமும் சொல்றா. அவன் வேணும்னுக்கு செய்யலியாம். தெரியாத்தனமா நடந்துருச்சாம். 

ஆட்டோ.....மே........ட்டிக்கா, என்ன நடக்கும்? அவளோட இந்த குணம் அவனுக்கு புடிச்சு போச்சு. அவன் இதயத்துக்குள்ள அவள் போயி உக்காந்துட்டா. வழக்கம் போல ஒரு வில்லன் இருக்கான்.  அந்த ஊர்ல ஒரு பணக்காரன். அவன் பத்மா மேல ஆசப்பட்டுட்டான்.  ஆசைப்பட்டான்ல, சைட் அடிச்சுட்டு இருக்க வேண்டியதுதானே. அவளை kidnap செஞ்சுட்டான். எப்படியோ பத்மா அவங்கிட்ட இருந்து தப்பிச்சுட்டா. நே..................ர லவ்வர்ட்ட வந்து சேந்துட்டா. 

ரெண்டு பேரும் தப்பிச்சு வர்ற வழியில ஒரு குடிசை இருக்கு. அதுக்குள்ள போய் ஒழிஞ்சுக்கிறாங்க. இதை அந்த பணக்காரனோட அடியாளுங்க பார்த்துர்றாங்க. சும்மாவிட்டங்களா? இல்லியே. குடிசையை கொளுத்திட்டாங்க. இதை கொஞ்ச பேர் பார்க்கிறாங்க. யாரு..................? ரோட்ல வித்தை காட்றவங்க. அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திட்டாங்க. 

காப்பாத்தினது மட்டுமில்லாம, அவங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காப்பாத்த சொல்லி  விட்டுட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல என்ன செஞ்சாங்கன்னாக்கா, அவங்க ரெண்டு பேருக்கும் டும் டும் டும் கொட்டிட்டாங்க. அப்ப, அந்த காலத்திலேயே .................... ஆரம்பிச்சு வச்ச போலீஸ் ஸ்டேஷன் கல்யாணம்தான், இப்...............ப  வரைக்கும் கண்ட்டின்யூ  ஆயிட்டு இருக்கா.............? 

இந்தப் படத்தில 25 பாட்டாம். அதுல ஒரு பாட்டு, பாரதமாதாவை போற்றி பாடுற பாட்டாம். இந்தப் படத்தை விளம்பரம் செய்யும்போது "இந்தியாவின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் படம்" னு சுந்தரம் விளம்பரப்படுத்தினாராம்.  சுமாராத்தான் ஓடுச்சாம், பத்மஜோதி படம். 

பத்மஜோதி  கதை தேசப்பற்றை பற்றிய கதையாம். இசை நல்ல இருந்துச்சாம். அதுவும் தென்னிந்தியாவில் அனிமேஷன் டெக்க்குனிடன் வந்த படமா..........., அதனால ஓடுச்சாம். 

அந்த காலத்தில படத்தின் நீளம் குறைவா இருந்துச்சுன்னா, அதை சரி செய்றதுக்கு, இடைவேளைக்கு அப்புறம்,  ஏதா................வது ஒரு குட்...........டி  காமெடி படத்தை தயாரிப்பாளர்கள் சேத்துப்பாங்கன்னு  இந்தப் பகுதியிலேயே ஏற்கனவே சொல்லியிருக்கேன். மதுரம், NSK நடிச்சது, இந்த மாதிரி. 

'சினிமா கதம்பம்'னு ஒரு கார்ட்டூன் படம். ஒரு பத்து நிமிஷம்  ஓடின படமாம். 1947ல மிஸ் மாலினீன்னு ஒரு படம் வந்துச்சு. இந்தப் படத்ல, இந்தக் கார்ட்டூன் படத்தை காட்டினங்களாம். தென்னிந்திய தமிழ் சினிமாவில இப்படி முதல் முதலா  கார்ட்டூன் படம் போட்டது. ஜெமினி ஸ்டூடியோஸின் SS வாசன். இதுதான் இந்தப் படத்தின் புதுமை. இதை செஞ்சது கார்டூனிஸ்ட் தாணு.  இந்த பத்து நிமிஷ படத்தில நடிச்சவங்க யா................ரு...............?  ஜெமினியின் மங்கம்மா சபதம் படத்தின் ஹீரோயின், ஹீரோதான். அதாங்க வசுந்தராவும், ரஞ்சனும். 

அப்புறமா 1960கள்ல, இதே..................மாதிரி முக்தா சீனிவாசன், கார்ட்டூன் படங்கள டைட்டில்  பாட்ல போட்டு ஒரு படம் எடுத்தாரே, யோசிச்சு பாருங்க. நமக்கு இருக்கிற வேலையில, அதையெல்லாமா யோசிக்க டைம் இருக்கு! நானே சொல்லிர்றேன். சொன்ன பொறவு பாருங்க, அட  இந்....................... த படம்தானான்னு  நெனப்பீங்க. தேன்மழை. நான் நெனச்சது சரியா போச்சா? இந்தப் படம் எல்லாருக்கும் புடிச்ச படம்.

- ஹிந்து

Heezulia

Sponsored content

PostSponsored content

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக