புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
429 Posts - 48%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
29 Posts - 3%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 02, 2018 3:20 pm

02.01.2018

19. உஷா கல்யாணம் 


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 ICI90t0fQQWPyoThldyk+UshaKalyanam
சீதா, ராதா, ருக்மிணி இவங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. இப்ப இந்த உஷா யாருப்பா? ஹ்ம், பாப்போம். 

1931ல மதுரை சோம்பே ...................... றி ஊரா இருந்துச்சாம். எப்ப வரைக்கும் அப்படி இருந்துச்சு தெரியுமா? பேசும் படம் வர்ற வரைக்கும். 1931ல தான் பேசும் படம் வச்சுருச்சே. அதுக்கப்புறமாத்தான் சுறுசுறுப்பா மாற ஆரம்பிச்சுதாம். அதுல பாருங்க எல்லாரும் இல்லியாம். ஒரு குறிப்பிட்டவங்க மட்டும். 
அவங்க யார்னா, பட்டு நூல் தயாரிச்சு, அதுக்கு கலர் போடறாங்கல்ல, அவங்கள்ல வசதியா.............னவங்க. 


சௌராஷ்ட்ரா இனத்தவங்களோ ? 

இவங்க மட்டும் எப்படி சுறுசுறுப்பானாங்கன்னு நெனக்கிறீங்களா? இவங்கல்லாம் சினிமா எடுக்க கெளம்பிட்டாங்களாம். சினிமா விநியோகஸ்தர்களாவும், தயாரிப்பாளர்களாவும் மாறிட்டாங்களாம். 

மதுரைல ராயல் டாக்கி விநியோகஸ்தர்கள், முருகன் டாக்கி ஃபிலிம்ஸ்னு ரெண்டு கம்பெனீங்களாம். இந்த ரெண்டும் முந்திகிட்டு சினிமா எடுக்கிற வேலைல இறங்கிட்டாங்களாம். 

உஷா கல்யாணம் படத்தை கல்கத்தாவிலிருந்த முருகன் டாக்கி, கிழக்கிந்திய ஃபிலிம் ஸ்டூடியோவில தயாரிச்சுதாம். 


டைரக்டர் : K சுப்பிரமணியம் 
பாட்டு எழுதினவங்க : மதுரை பாஸ்கரதாஸ், சதாசிவதாஸ் 

SD சுப்புலட்சுமி – பனாசுரனின் மகள் உஷா  
CVV பந்துலு – அரக்கன் பனாசுரன்
MV கிருஷ்ணப்பா – கிருஷ்ணனின் பேரன்  அனிருத்தன் 

G பட்டு அய்யர், V கோவிந்தசாமி, MS பட்டம்மாள், 

JM சுந்தரம், SS பத்மாவதி, SS ராஜாமணி, KE மாதவ அய்யர், S கோமதிபாய் 

கிருஷ்ணன், கிருஷ்ணனின் அழகா ....................... ன பேரன் அனிருத்தன், அனிருத்தனின் லவ்வர் உஷா இவங்கள பற்றிய புராணக்கதை, இந்தப் படம். 

பனாசுரனுக்கு சிவனைத்தான் பிடிக்குமாம். விஷ்ணுவை பிடிக்காதாம். வெறுக்கிறான். பனாசுரனுக்கு சிவன் நிறை...........ய வரங்களை கொடுத்திருக்கிறார். 

உஷாவுக்கு சித்ரலேகான்னு ஒரு நண்பி. இந்த நண்பி அனிருத்தனின் படத்தை உஷாட்ட காட்றா. பின்னே என்ன, உஷா சரெண்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இத தெரிஞ்சுகிட்ட சித்ரலேகா என்ன செஞ்சா, என்.............................ன செஞ்சா! 

கிருஷ்ணனின் அரண்மனைல பயங் ........................ கரமான காவல், கட்டுப்பாடு. இதையும் மீறி, எப்டீல்லாமோ, என்னவெல்லாமோ செஞ்சு, சித்ரலேகா அந்த அரண்மனைக்குள்ள நுழைறா. அநிருத்தனை தேடறா. கண்டுபுடிச்சிட்டா. எப்டீ? 

அவன் நல் ........................... லா தூங்கிட்டு இருந்தான். சித்ரலேகா சும்மாவா இருந்தா? அவன் தூங்கிட்டு இருக்கும்போதே, அவனை அலே ......................... க்கா தூக்கிட்டு வந்து, உஷாவின் படுக்கைக்கு பக்கத்திலே கொண்டு வந்துட்டா. எப்டீங்க? 

அவள் அரக்கியா, மந்திரம் தெரிஞ்சவளா, இல்ல ஆள வச்சு தூக்கிட்டு வந்தாளா? யா ................ ருக்கு தெரியும்? சரி சரி, மேல படிங்க. 

அனிருத்தன் தூக்கத்திலே இருந்து முழிச்சான், உஷாவை பார்க்கிறான். கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு. இப்படித்தான் ஆச்சு. ரெண்டு பேரும் கண்ணாலமே செஞ்சுகிட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆமாங்க, மோதிரம் மாத்தி, ரெண்டு பேருக்கும், நிஜம் .......................... மா கல்யாணம் ஆயிருச்சு. நம்புங்க. 

உஷாவின் அப்பா பனாசுரன், அநிருத்தனை அரெஸ்ட் செஞ்சுட்டான். பின்ன என்ன, தன் மகளின் ரூம்குள்ள வேற ஒரு ஆம்பள இருக்கிறத பாத்தா, எந்த அப்பாவாலதான் சும்மா இருக்க முடியும், சொல்லுங்க பார்ப்போம். 

இதுக்கு நடுவில நாரதர் கிருஷ்ணனை தேடி வர்றார். அனிருத்தன் அரெஸ்ட் ஆனதை சொல்றார். கிருஷ்ணனுக்கு வந்துச்சே........... கோவம். பேரனை கைது செஞ்சுட்டானே அரக்கன். 

கிருஷ்ணனுக்கும், பனாசுரனுக்கும் போர் நடக்குது. கடசீல என்ன ஆச்சுன்னா, சிவன் பனாசுரன் முன்னால காட்சி கொடுக்கிறார்.

“சிவனும், விஷ்ணுவும் வேற வேற ஆளில்ல, சங்கர நாராயணன் என்கிற பேர்ல, ரெண்டுபேருமே ஒருத்தர்தான்” ன்னு சிவன் சொல்றார். கிருஷ்ணனும், பனாசுரனும் சமாதானமாகி, ஒண்ணா சேர்ந்துர்றாங்க. 

அப்புறம் என்னான்னா, பெரியவங்க கூடி பேசி, பனாசுரன் மகள் உஷாவுக்கும், கிருஷ்ணனின் பேரன் அனிருத்தனுக்கும் டும் டும் டும். 

அதான் ஏற்கனவே அவங்க தனியா கல்யாணம் செஞ்சுகிட்டாங்களேன்னு கேக்குறது எனக்கு கேக்குது. அது சும்மா ளுளுளுலாய்க்கிதானே, மோதிரம் மட்டும்தானே மாத்திகிட்டாங்க, அது ட்யூப்ளிகேட் கல்யாணம், தனியா செஞ்சுகிட்டது. இப்போதான் பெரியவங்க முன்னால நடந்த ஒரிஜினல் கல்யாணம். 

கிருஷ்ணன், சிவன் இவங்க ஆசீர்வாதத்துடனும், மற்ற எல்லா கடவுள்களின் ஆசீர்வாதத்துடனும் உஷாவும், அனிருத்தனும் சந்தோ ....................................... ஷமா வாழ்ந்தாங்க.

அந்த கால பாரம்பரியத்தின் படி, இந்தப் படத்தின் ஆரம்பத்தில, நடிக்கிறவங்க எல்லாருமே சேர்ந்து, ஒரு கோரஸ் பாட்டு, கடவுள் வாழ்த்து பாடுறாங்களாம். இந்தப் பாட்டில முருகன் டாக்கி, கிழக்கிந்திய ஃபிலிம்ஸ், டைரக்டர், பாடலாசிரியர்கள், இன்னும் இந்தப் படத்தில சம்பந்தப் பட்டவங்க எல்லாரையும் ஆசீர்வாதம் செய்றதுக்கு கடவுள்களை வேண்டுறாங்களாம். இப்பவும், நாடங்களில நடிக்கிறவங்க ஸ்க்ரீனுக்கு பின்னால நின்னு கடவுள் வாழ்த்து பாடுறாங்களாமே.

உஷா கல்யாணம் படத்தில கிட்டத்தட்ட முப்பத்து மூ......................ணு பாட்டு. அதுல ஒண்ணு நாடோடி பாட்டு. இந்த நாடோடி பாட்டுல ‘ஜோக்கு’ ன்னு வார்த்தை இருந்துச்சாம்.

இன்னொரு சுவாரசியம் என்னான்னா, இந்தப் படத்தின் பாட்டு புத்தகத்தில், படத்தில நடிச்சவங்க ஒவ்வொருத்தர் பேரும் இருந்துச்சாம். சுப்புலட்சுமி பேர்ல, ‘சினிமா அழகி ஸ்ரீவை மிஸ்’ ன்னு போட்டிருந்துச்சாம். சுப்புலட்சுமியின் சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டமாமே. 

அந்த காலத்தில, சினிமாவோடு, ஒரு குறும்படம் போட்றது வழக்கமா இருந்துச்சுல்ல. அதே மாதிரி இந்தப் படத்ல  கூட TA மதுரம், NS கிருஷ்ணன் நடிச்ச 'கிழட்டு மாப்பிள்ளை' என்ற பேர்ல ஒரு குறும்படம் போட்டாங்களாம். நல்ல சிரிப்பு படமாம். 

இந்தப் படத்தை டைரக்ட் செய்றதுல, சுப்பிரமணியத்தின் மாமா CSV அய்யர் உதவி செஞ்சாராம். அதனால படத்ல உதவி டைரக்டர்ங்கற இடத்தில CSV அய்யர்னு  பேர் போட்டிருந்துச்சாம். 

ஆக மொத்தத்தில சுவாரசியமான கதை, சுப்புலட்சுமி, பந்துலு இவங்க அட்டகாசமான நடிப்பு, 

K சுப்புரமணித்தின் சூப்பரான டைரக் ஷன். இதுதான் உஷா கல்யாணம். 

இன்னும் யார் யாருக்கெல்லாம் கல்யாணம் செஞ்சு வைக்க போறாங்கன்னு பார்ப்போம்.

 
Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 02, 2018 3:41 pm

அது சரி அடுத்தது குண்டு கல்யாணம் பத்தி எழுதுங்க



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 03, 2018 12:32 pm

நல்ல தொடக்கம், நன்றி, எல்லாவற்றையும் முழுமையாக படித்து முடித்த பின் எனது கருத்தை பதிவிடுகிறேன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 4:30 pm

04.01.2018
 
20. விஸ்வாமித்ரா 1936 


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 JtBmqxJTjuPa5oFGa1yQ+Viswamithra

 
ஒரு ராஜா, இவர் இங்க இருக்கட்டும். அப்புறமா 
 
வசிஷ்டர்னு ஒரு ரிஷிங்க, அதாங்க முனிவர்.
 
இந்த ரிஷி சும்மா இருக்க முடியாம, இந்த ராஜாட்ட போயி, 
 
"நீ பிராமணன் இல்ல. க்ஷத்திரியன். அதனால கடவுள்களின் ஆசீர்வாதம் கெடச்ச பிரம்மரிஷியாய் எல்லாம்  உன்னால ஆக முடியாது"ன்னு உசுப்பேத்தி விட்டுட்டாரு.
 
அவ்ளோதாங்க, அந்த ராஜா இதை ஒரு சவாலாவே எடுத்துட்டார். 
 
ராஜா இன்னா பண்றார்னாக்கா, 
 
"எனக்கு இந்த சிம்மாசனமும் வேணாம் ஒண்ணும் வேணாம்" ன்னு 
 
சொல்லிபுட்டு சந்நியாசியா போயிர்றார். இது ............ தாங்க இந்தப் படத்தின் கா..........................விய கதை. 
 
இந்தக் கதை நாடகங்களாவும், தெருக்கூத்தாவும் பலப்பல வருஷங்களாக நடத்தப்பட்டு வந்துச்சாம். இந்தியாவில மட்டுமில்லாம, இந்தோனிஷியா, பர்மா போன்ற இடங்களிலும் இந்தக் கதை பிரபலமாச்சு. 
 
இவ்வளவு பிரபலமான கதையை சினிமாவாவும் எடுக்க ஆரம்பிச்சதுல ஆச்சரியமே இல்ல. 1921ல முதல் பேசாத படமாக எடுத்தாங்களாம். இந்தப் படத்துக்கு பேர் 'விசுவாமித்ரா மேனகா'. அப்போ பிரபலமான டைரடக்கர் காந்திலால் ரதோட். இவர்தான் இந்த பேசாத படத்தை டைரக்ட் செஞ்சுக்கினார். 
 
நம்ம படத்துக்கு வருவோம். இந்த விஸ்வாமித்ரா படம் 1936ல முதல்ல பேசும்படமாக வந்துச்சாம். அனந்தநாராயணன் நாராயணன்னு ஒருத்தர்.  இவர் இந்த படத்தை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சார். 
 
ப்ரம்மரிஷி விஸ்வாமித்ரர் கடும்................. தவத்தில் இருக்கும்போது, முனிவரின் தவத்தை கலைக்க, திலோத்தமை, மேனகை, இந்த ரெண்டு இந்திரலோகத்து சுந்தரிகளையும், இந்திரன் அனுப்புறார்.
 
திலோத்தமை என்னவெல்லாமோ செஞ்சு பார்க்கிறா. ஊஹும்......, முனிவர் அசையவே இல்ல. 
 
இவளைவிட திறமைசாலி போல, மேனகை. அவள் வந்த காரியத்தை முடிக்கிறா. இந்திரன் எதுக்கு அவளை அனுப்பினாரோ, அது நிறைவேறுது. முனிவர் தவம் மட்டுமா கலையுது,  போச்சு போச்சு, எல்.................லாம் போச்சு, மேனகை கூட குடும்..............பமே நடத்துறார். 
 
இதன் காரணமாக, மேனகா அம்மாவாயிட்டா, முனிவர், ஹும், முனிவர், அப்பாவாயிட்டார். எப்படி, அவங்களுக்கு மகளா சகுந்தலா பிறக்கிறாளே. இந்த சகுந்தலா ஒரு ஹீரோயினாக்கும், தெரியுமோ? மகாகவி காளிதாஸ் எழுதினாரே, 'அபிஞா.............ன சாகுந்தலம்', இந்த காவியத்துக்கு இவள்தானே ஹீரோயின்.  
 
MK கோபால அய்யங்கார், விஸ்வாமித்ரர், இந்தப் படத்தில. இவர் அப்போ பிரபல நாடக நடிகர். 
 
ராஜசுந்தரிபாய்ன்னு ஒருத்தர், அப்போ வந்த சினிமாவில காட்டேரியாய் நடிப்பவராம்.  இவர்தான் இந்தப் படத்தில மேனகை. J சுசீலா - திலோத்தமை.  
 
இதுல ஒரு முக்கியமா...............ன சம்சாரம், ச்சே, நான் ஒண்ணு, தப்பு தப்பா............., அது சம்சாரம் இல்லீங்க, சமாச்சாரம். 
 
ஆமாங்க இதுல முக்கியமான சமாச்சாரம் இருக்கு. மேனகையா நடிச்சாங்கல்ல, ராஜசுந்தரிபாய், இவங்க ஒரு பிரபல பின்னணி பாடகியின் அம்மாவாம். 
 
"குவா குவா பாப்பா", ஆமாங்க இந்த பாப்பா பாட்டு பாடிய MS ராஜேஸ்வரி, அந்த டூப்ளிகேட் மேனகையின் மகளாம். 
 
படம் என்னவோ சுமாராத்தான் ஓடுச்சாம். மேனகை, திலோத்தமை என்கிற அழகான பெண்கள், அவங்க ஆடின அறுபுதமா.............ன டான்ஸ், நாராயணின் அட்.............டகாசமான டைரக் ஷன் இதெல்லாம் ஜனங்களுக்கு பிடிச்சிருந்துச்சாம். 
 
Phani Barma என்றவர்  முதல் முதலா 1952ல பெங்காலி மொழில இந்தக் கதையை படமாக எடுத்தாராம். இதே வருஷத்திலே Baburao Pendharkar என்ற மராத்தி டைரக்டர், ஹிந்தியில் எடுத்திருக்கார். 
 
இந்தக் கதை ஆந்திராவிலும் பிரபலமாச்சாம். பல பிரபல குழுக்கள் நாடகமாவும், பல தடவை சினிமாவாவும் எடுக்கப்பட்டது இந்தக் கதை. ஆந்திர சூப்பர் ஸ்டார், 
NT ராமராவ்,  அவருடைய ஆரம்ப காலத்தில, நாடகங்களில் விஸ்வாமித்ரரா நடிச்சாராம். K சங்கர் டைரக்ட் செஞ்சு, N சகுந்தலா தயாரிச்சு, கலைஞானம் வெளியிட்ட  'ராஜரிஷி [1985] ' படத்தில் சிவாஜி கணேசன்  விஸ்வாமித்ரரா நடிச்சார். 
- ஹிந்து 
 
விஸ்வாமித்ரா படத்தின் டைரடக்கர் நாராயணன் இருக்காஹளே, இவர் சாதாரணப்பட்ட ஆளில்ல. அந்............த காலத்தில தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறதுக்கு, நடிகர் குழுவோ.................டு, பம்பாய்க்கும், கல்கத்தாவுக்கு, பூனாவுக்கும், கோலாலம்பூருக்கும் லோலோலோ......................ன்னு அலைஞ்சுட்டு இருந்தாங்களாம். 
 
"வடக்கால போயிதான் படமெல்லாம் எடுக்க முடியுமோ, அங்க மட்டும்தான் பேசும்பட ஸ்டூடியோ இருக்கணுமோ, இங்க, சென்னையில, என்னால அதே மாதிரி செய்ய முடியாதோ" னு சொல்லி, 'சௌண்ட் சிட்டி' @ 'ஸ்ரீனிவாச சினிடோன்' என்கிற பேர்ல பேசும்பட ஸ்டூடியோவை உண்டாக்கிட்டார்ல. இந்த ஸ்டூடியோவில் முதல் முதலா என்ன படம் உருவாச்சு தெரீமா? ஸ்ரீனிவாச கல்யாணம், 1934. 
 
நம்ம நாராயணன் அதோடு விட்டாரா? அட, வேற என்ன புதுசா செஞ்சுட்டார்? ஆமாங்க ஆமா,  மேல படிச்சா, அவர் என்ன செஞ்சார்னு தெரிஞ்சுட்டு போவுது. 
 
மீனாட்சி நாராயணன். இவர் நாராயணனின் wife. அவராலதான்  சும்மா இருக்க முடியல. தன் மனைவியையாவது சும்மா இருக்க விட்டாரா? அவரையும் சினிமா துறைல இழுத்து போட்டிக்கினாரு. சௌண்ட் சிட்டி ஒண்ணை உருவாக்கிட்டு, ஒலிப்பதிவு செய்ய தெரிய வேணாமா? அந்த ட்ரைனிங்கைத்தான் மீனாட்சிக்கு கொடுத்தார், நாராயணன். மீனாட்சியும் சளைக்கா..............ம, கணவர் சொல்லிக்கொடுக்கிறதை எல்லாம் நல்...........லா கத்துக்கிட்டு, இந்திய சினிமாவிலேயே, முதல்................... பெண் ஒலிப்பதிவாளர் ஆகிட்டார்ல, ஆகிட்டார்ல. மீனாட்சி கர்னாடக சங்கீதமும் நல்லா படிச்சவராம். - தினமலர் 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 7:01 pm

04.01.2018

20. விஸ்வாமித்ரா 1936 


இன்னொண்ணு எழுத மறந்துட்டேன். 

விஸ்வாமித்ரர் தான் செஞ்ச தப்பை fee..........................ல் செஞ்சாராம். அதனால மேனகாவுக்கும், விஸ்வாமித்ரருக்கும் பிறந்த சகுந்தலாவை, பெண் குழந்தைன்னு விஸ்வாமித்ரர் ஏற்றுக்கொள்ள மாட்டேன்னுட்டாராம். 

அந்த காலத்தில கள்ளிப்பால் இல்லியோ? 

இந்த மேனகாவும் என்ன செஞ்சான்னு படிங்க. அவ, தான் பெத்த குழந்தையை, தா.....................................ன் பெத்த குழந்தையை காட்ல விட்டுட்டு, எங்கேயிருந்து வந்தாளோ, அங்கேயே திரும்ப போயிட்டாளாம். எங்க, இந்திரலோகத்துக்கே. 

தேவலோகத்து பொம்பளைங்களுக்கு விருப்பு, வெறுப்புல்லாம் இருக்காதோ. சரி பெத்த பாசமுமா இருக்காது? என்னவோ போங்கப்பா, கதைதானே. 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 05, 2018 1:44 am

05.01.2018

07. கூண்டுக்கிளி 1954 


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 BR6id4nrSrmXotOUUZ3x+Koondukili
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 7 I856zgcSTvG4o1IIqphQ+Koondukkili

நடிகர் திலகம், மக்கள் திலகம் 
சிவாஜி கணேசன், MG ராமச்சந்திரன் 

இவங்க ரெண்டு பேரும் நடிப்பில மட்டுமில்ல, அரசியலிலும் ஏட்டிக்கு போட்டியா  இருந்தவங்க. இப்படிப்பட்ட இந்த ரெண்டு பேரும் சே .............ந்து நடிச்ச ஒரே.................. படம் இந்த கூண்டுக்கிளி. 

நண்பனோட மனைவி மேல ஆசைப்படற ஒரு துரோகியின் கதை. இந்தப் படத்தில யார் ஹீரோன்னே சொல்ல முடியாது போல. ஹீரோ நல்லவனா இருக்கணும்னா, MGR ஹீரோ. படம் முழுக்............. க நடிக்கிறவங்க ஹீரோன்னாக்கா, சிவாஜிதான் ஹீரோ.

ஜீவா  மங்களத்தை பெண் பார்க்க போறான். பார்த்த உடனே அவனுக்கு பொண்ணை புடிச்சு போச்சு. கட்டினா அவளைத்தான் கண்ணாலம் கட்டிக்கிணும்னு முடிவு செய்றான். ஆனா என்ன காரணத்தினாலோ, கல்யாணம் நடக்கல. மங்களத்தை  வேற காணோம். 

ஜீவா  அவளைத்  தேடி தேடி அலைறான். அவள் கிடைக்கல.  அதனால வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை செய்ய முடிவு செய்றான். 

சினிமாவிலயாராவது தற்கொலை செய்யணும்னு நெனச்சாலேகிச்சன்லியோபெட்ரூமிலோ,  'poison' னு எழுதின ஒரு தேன் பாட்டில் ரெடீ..................... யா இருக்குமே. அப்படி எதுவும் கிடைக்கல போல. 

அதனால ஜீவா ரயில்ல விழுந்து தற்கொலை செய்ய போறான். அந்த சமயத்தில அந்தப் பக்கமா வந்த தங்கராஜ்  அவனை  காப்பாத்றான்.

அப்புறம் என்ன, ரெண்டு பேரும் தோஸ்த் ஆய்ட்டாங்களா?  அதுதான் இல்ல. அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசு friends.  தங்கராஜ் ஜீவாவை  தன் வீட்டுக்கு கூப்ட்டு போறான். அங்க போன ஜீவாவுக்கு பயங்...............கரமான ஷாக். 

வீட்டுக்குள்ள போயி பாத்தா ............................ அங்க அவன் காதலி  மங்களம். ஆனா இவன் காதலியாக  இல்ல, தங்கராஜின் மனைவியாக. ஆமாங்க, தங்கராஜுக்கும்,  மங்களத்துக்கும் கல்யாணம் ஆகி இருந்துச்சு. தங்கராஜ், ஜீவாவுக்கு தன் மனைவியை அறிமுகப்படுத்துறான். 
தனக்கு மனைவியாய் வரவேண்டிய ஒருத்தி, தன் நண்பனுடைய மனைவியாய் பார்த்தா,  ஒருத்தனுக்கு  பெரீ ........ ய அதிர்ச்சிதானே. 

ஜெயிலுக்கு போற மாதிரி ஜீவா  ஏதோ தப்பு செஞ்சுர்றான். ஆனா தன் நண்பனுக்காக,  தங்கராஜ் ஜெயிலுக்கு போறான். "உயிர் காப்பான் தோழன்" இல்லியா? போற போக்கில, தன் மனைவியை நல்லபடியா பாத்துக்க சொல்லிட்டு போறான். 

தங்கராஜ்  ஜெயிலுக்கு போயிட்டானா?  ஜீவா மனசுல  வேற மாதிரி  எண்ணம், கெட்...........ட எண்ணம்  ஓட ஆரம்பிச்சுருச்சு. நண்பனுக்கு த்ரோகம் செய்ய நினைக்கிறான். 

த்ரோகம்னா என்ன, நண்பனின் சொத்தையா அபகரிக்க நெனச்சான்? இல்லியே,  அவன் மனைவியை இல்ல அபகரிக்க திட்டம் போட்டிருக்கான். 

நண்பனின் மனைவியை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு ஜீவா யோசிச்சான். ஒரு நாள், தனக்கு தலை வலிக்குதூன்னு, தைலம் தேய்க்க சொல்றான். மங்களம் மனசில ஒண்ணும் நினைக்காம, கள்ளம் கபடம் இல்லாம, ஜீவாவுக்கு தலைவலி தைலம் தடவி விட்றா. 

அவள் கை பட்டதும், ஜீவாவுக்கு அவள் மேல இருந்த ஆசை அதிகமாகி, அவன் மோசமான எண்ணத்தை மங்களத்துகிட்ட சொல்றான். அவள் திகைக்கிறாள். 

"நண்பனின் மனைவி மேல் இப்படி ஆசைப்படறது சரியா?" ன்னு கேட்கிறாள். எப்படியோ அந்த சமயத்தில் மங்களம் ஜீவாட்ட இருந்து தப்பிச்சுட்டா. 

இன்னொருநாள், நல்.............ல மழை. இதை ஜீவா சாதகமாக பயன்படுத்தி, அவன் எண்ணத்தை, ஆசையை, வேட்கையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறான். அவள் பா.............வம் பொம்பள. அதுவும் தனியா, ஒரே வீட்ல வேற. அந்த சமயத்தில திடீர்னு ஜன்னல் வழியா வந்த மின்னல், ஜீவாவின் கண்களை பறித்துக்கொள்ளுது. ஜீவாவுக்கு கண்ணு போச்சு. 

பட்டாதான் திருந்துவாங்கன்னு யாரோ சொல்லியிருக்காங்க. இப்ப ஜீவா அழுறான்.  அவன் செஞ்ச தப்புக்கு, கடவுளா ..................... பாத்து கொடுத்த தண்டனைன்னு நெனச்சு வருந்துறான்.  

கண் கெட்ட பின்னால  எப்படி சூரிய நமஸ்காரம் பண்ண முடியும்? ஜீவா ஊரை விட்டே போயிர்றான். 

தங்கராஜ் ஜெயில்லே இருந்து ரிலீஸ் ஆகி வர்றான்.  நடந்ததை எல்லாம் கேள்விப்பட்றான். நண்பனுக்காக ரெண்டு சொட்டு  கண்ணீர், கொஞ்சம் வருத்தம், அப்புறம் என்ன, அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஜீவாவை, அவன் த்ரோகத்தை  மனசார மன்னிச்சுர்றாங்க.  மங்களமும், தங்கராஜும் பிரச்னை இல்லாம, சந்தோ .................. ஷமா வாழறாங்க.
 
ரெண்டு பெரிய நடிகர்கள் நடிச்சிருக்காங்களே, படம் ஓஹோ .................. னு ஓடும்னு கனவோடு எதிர்பார்த்திருந்து  காத்திருந்தவங்களுக்கு, ஏமாற்றம்தானாம். படுதோல்வி படம்.
ரெண்டு பேர் ரசிகர்களும் சண்டை போட்டுகினாங்களாம். 

பேப்பரிலும், தியேட்டர் ஸ்லைட்களிலும் ரசிகர்கள் அமைதியா இருக்கணும்னு விளம்பரம் செஞ்சாங்களாம். ஆனா அதை யார் கண்டுகிறாங்க. சண்டைதான் போட்டுகிட்டாங்களாம். அதனாலேயே படத்தை தியேட்டர்களில் இருந்து  எடுத்துட்டாங்களாம். 

ஆனா இப்போ பாருங்க, அப்படி சண்டையெல்லாம், போடறதில்ல, அமை ................தியாத்தான் படம் பார்க்கிறாங்க. 

நடிச்சவங்க : BS சரோஜா, குசலகுமாரி, TP முத்துலட்சுமி, அங்கமுத்து, சிவாஜி, MGR, கொட்டாபுளி ஜெயராமன், ER சகாதேவன், TK கல்யாணம் 
திரைக்கதை & வசனம் : விந்தன் 
பாட்டூஸ் : தஞ்சை ராமையாதாஸ்கவி கா.மு.ஷெரிஃப்மருதகாசிவிந்தன்
ம்யூசிக் : KV மகாதேவன் 
டைரக் ஷன் : TR ராமண்ணா 

இந்தப் படத்தின் விளம்பரத்தில, "சிவாஜி MGR என்ற இரு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் முதல் படம்"னு போட்டிருந்துச்சாம். ஆனா என்ன ஆச்சு, இந்த ஒரு படத்துக்கு மேல, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க முடியாமயே போயிருச்சு. 

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 05, 2018 12:10 pm

இந்த படத்தை நான் பாத்ததில்லை



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 05, 2018 12:33 pm

05.01.2018

உங்க எதிரியும்தான்  பார்க்கல. 

இந்தப் படத்தை தவிர, மற்ற எல்லா.............. படத்தையும் பாத்துட்டீங்களா? 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 05, 2018 12:37 pm

heezulia wrote:05.01.2018

உங்க எதிரியும்தான்  பார்க்கல. 

இந்தப் படத்தை தவிர, மற்ற எல்லா.............. படத்தையும் பாத்துட்டீங்களா? 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255909

இந்த படத்தை நான் பாத்ததில்லை னு தானே சொன்னேன் மத்த படத்தை எல்லாம் பாத்துட்டேன்னு சொல்லலையே

சரி அது யாரு எதிரி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 11, 2018 11:27 pm

11.01.2018
 
21. பாலாமணி அல்லது பக்காத் திருடன் 1937

டைரடக்கர் : PV ராவ்
தயாரிப்பு : சண்முகானந்தா பிக்சர்ஸ், TKS சகோதரர்கள்
கதை & வசனம் : வடுவூர் துரைசாமி அய்யங்கார்
பாட்டூஸ் : பாரதிதாசன்

TS ஜெயா – பாலாமணி
TK சண்முகம் – பாலாமணியை கட்டிக்க போனவர்
SV சகஸ்ரநாமம் – துப்பறிவாளர், ரஞ்சித்சிங்  
B சாரதாம்பாள், K. சாந்தாபாய், TK முத்துசாமி, TK பகவதி

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில, துப்பறியும் கதைகள் வர ஆரம்பிச்சுதாம். அப்போ இருந்த மெட்ராஸ், சிங்கப்பூர், மலேசியா, சிலோன் இந்த இடங்களில் இருந்த ஜனங்களுக்கு, துப்பறியும் கதையுள்ள சினிமா புடிச்சி போச்சாம். தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகள்ல கூட இப்படிப்பட்ட சினிமா புடிக்குமாம்.

துப்பறியும் கதைகளை சினிமாவுக்கு எழுத திறமையானவங்க அந்த காலத்தில யாராச்சும் இருந்தாங்களா? இல்லாமயா அப்படிப்பட்ட சினிமால்லாம் வந்துச்சு. இருந்தாங்களே, வடுவூரார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள் இவங்கதானாம். கோதைநாயகி அம்மாள் துப்பறியும் நாவல் எழுதின முதல் தமிழ் பெண்மணியாம்.
 
பாலாமணி படத்துக்கு கதை, வசனம் எழுதிய வடுவூரார் எழுதிய புத்தகங்கள் நல்ல வித்துச்சாம். இவர் எழுதிய கதைகளில் சில கதைகள்தான் படமாக்கப்பட்ட மேனகா, திகம்பர சாமியார் & இந்த பாலாமணி.
 
வடுவூரார் பாலாமணி கதையை ரெண்டு பாகங்களா எழுதினாராம். ஒரு நாவல் பாலாமணி & இன்னொரு பாகம் பக்காத்திருடன்.  அதனாலதான் இந்தப் படத்தின் பேர் பாலாமணி அல்லது பக்காத் திருடன் ஆச்சு.
 
கதை : பாலாமணின்னு ஒரு பணக்கா.............................ர வாலிபி. இவளுக்கு ஒரு செல்வந்தனோட கல்யாணம், ஆகல. நிச்சயம் மட்டும் ஆகியிருந்துச்சு.
இந்தக் காலத்து சினிமா போல, அந்த காலத்து சினிமாவில, ஏழை பொண்ணோ, பையனோ, பணக்கார பொண்ணையோ,  பையனையோ கல்யாணம் பண்ணி, ஒரே பாட்ல பணக்காரனாவதில்ல போல.

ஒருநா............................ள். ராத்திரி நேரம். எல்லா......................ரும் நல்.................ல தூங்கிட்டு இருந்த நேரம். பாலாமணியின் வீட்டுக்குள்ளாற யார்லாமோ........... நுழைறாங்க. கொள்ளைக்காரங்க. சாதாரண வீடா இருந்தா திருடன் நொழஞ்சிருப்பான். பாலாமணி வீடு அரண்மனையாச்சே. கொள்ளைக்காரங்க வந்துட்டாங்க.

சரி, கொள்ளைதான் அடிச்சாங்களே, பேசாம போனாங்களா? பின்ன என்ன, வீட்ல இருந்தவங்களை எழுப்பி பேசினாங்களான்னு கேக்காதீங்க. அதெல்லாம் இல்லீங்க. பாலாமணியையும், அவள் பாதி புருஷனையும் கடத்திட்டு போய்ட்டாங்க. பாதி புர்ஷனா, அவன் யார்னுதானே கேக்குறீங்க. அதெல்லாம் இல்ல, உங்களுக்கு தெரியும், யார்னு.  

அது சரி........................... கல்யாணமாறதுக்கு முன்னால, அந்த பாதி புருஷன் எப்படி பாலாமணி வீட்ல தூங்கிட்டு இருந்தான்? இதுபத்தி ஒண்ணுமே கதையில இல்லியே. அந்த காலத்தில அப்படித்தானோ. இந்த காலத்திலேயே இல்லியே, எப்படி அப்போ?

சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்ப கதைக்கு வரட்டுமா? வர்றேன், வர்றேன். கடத்தின ரெண்டு பேரையும், மயக்கம் செஞ்சு தூக்கிட்டு போனாங்க போல. பாலாமணி முழிச்சு பார்க்கிறா. அவள் ஒரு இருட்................டு குகையில இருக்கிறது தெரியுது. என்ன நடந்துச்சுன்னே............. அவளுக்கு தெரியலயாம்.

கல்யாண மாப்பிள்ளை நல்லவனில்லை போலியே. இவளை விட்டுட்டு, அவன் மட்டும் அங்கிருந்து  தப்பிச்சு பூட்டான். இவன்லாம் அவளை கல்யாணம் முடிச்சு............................., அவள காப்பாத்த. 

சரி, பாலாமணி நிலைமை என்னான்னு பாருங்க. அவளும் எப்படியோ தப்பிச்சுர்ரா. கடத்திட்டு போனவங்க, ரெண்டு பேரும் தப்பிச்சு போற மாதிரி, ஒரு செக்க்யூரிட்டி இல்லாமலா இருட்டு குகைல அடச்சு வச்சாங்க? இருட்டு குகைலதானே இருக்காங்க, அவங்களால தப்பிச்சு போக முடியாதுன்னு நெனச்சுட்டாங்களோ?

சரி, எப்படியோ ரெண்டு பேரும் தப்பிச்சாட்டங்க. அவன் எப்படி போனான்னு தெரியாது. பாலாமணி போற வழியில ஒரு ஆறு வருது. அதை கடக்கும்போது, அவள் ஒரு குழந்தையின் பிணத்தை பார்க்கிறா. என்ன செய்றதுன்னு தெரியாம யோசிக்கிறா. அவள் அந்த பிணத்தை எடுத்துட்டு போய், எங்காவது பொதச்சிறலாம்னு முடிவு செய்றா. ஆனா அவ நெனச்சது நடக்கல.

அங்க போலீஸ்காரங்க வந்துர்றாங்க. அந்தக் குழந்தையை அவள்தான் கொன்னுட்டான்னு சொல்லி அவளை அரெஸ்ட் செஞ்சுர்றாங்க. இவளால ஒண்..................ணும் செய்ய முடியல. ஆயுள் தண்டன வேற கெடச்சுருச்சு.

அவள் குடும்பத்ல உள்ளவங்க அப்பீல் செய்றாங்க. எங்க? ............. சேலம்      மாவட்ட கோர்ட்ல. வக்கீல் யார் தெரிமோ?........................ Eardley Norton னு ஒருத்தர் தான் பாலாமணி குடும்பத்தினர் ஏற்பாடு செஞ்ச வக்கீல். இந்த வக்கீல் யார்னு நெனக்கிறீங்க? நெஜம்......................மாவே இவர் மெட்ராஸ்ல barristerஆம். இந்த Norton, வாதாடி, பாலாமணி கேஸ்ல இருந்து வெளிய வந்துர்றா. இவ எப்படி வெளிய வர முடியும்? வந்துட்டாளே, எப்டீன்னா நெஜமான குற்றவாளீங்க மாட்டிக்கிறாங்க. 

ஐய..................., இது கூட தெரியல உங்களுக்கு. நான் சொன்னதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது, இல்ல............?

பாலாமணி விடுதலை ஆனது ஒரு பக்கம் சந்தோஷம்னா, இன்னொரு சந்தோஷமும் இருக்கு. இதை விட வேற என்ன சந்தோஷம் இருக்குன்னு கேக்குற மா.......................திரி இருக்கு. பாலாமணியும், இவள விட்டுட்டு தனீ.....................தப்பிச்சுட்டு போனானே அவனும் சேர்றாங்க.

ஊங்கொட்டுனது போதும், அம்புட்டுதான் கதை.

இந்தப் படத்தில துப்பறிவாளராக நடிச்சாரே..................... சகஸ்ரநாமம், வடுவூராரின் அனே.................க துப்பறியும் கதைகளில் இவர்தான் துப்பறிவாளராக நடிச்சாராம். 

பாலாமணியாக நடிச்ச TS ஜெயா அழகா இருப்பாராம். ஆனா என்ன பிரயோஜனம்? ஜனங்கள் அவரை accept செய்யல போல. அவருக்கு படத்தில அதிகமா சான்ஸ் கிடைக்கலியாம்.
 
இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது, TKS சகோதரர்கள் அந்த சமயத்தில் இருந்த பிரபல பேப்பர்களில, இந்தப் படத்தை பற்றி இப்படி விளம்பரம் செஞ்சாங்களாம். எப்டீ...........................? இப்டி.

“பாலாமணி அல்லது பக்காத் திருடன் மகத்தான மூன்றாவது வாரம். பாலாமணிக்கு பாடல் சேர்த்தவர் புதுவை பாரதிதாசன். படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு, இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்”
 
பாரதிதாசனை தூ....................க்கி வச்சு ஏன் விளம்பரம் கொடுத்தாங்க? இருந்தாலும் படம் என்னவோ தோல்விப்படமாம்.
 
பாரதிதாசன் முதல் முதலா சினிமாவுக்கு பாட்டு எழுதியது ‘இராமானுஜர் 1938’ படத்துக்காம். ஆனா இந்த பாலாமணி, 1937லிலேயே ரிலீஸ் ஆய்ட்டதனால, இந்தப் படம் பாரதிதாசன் பாட்டு எழுதிய முதல் படமாயிருச்சு.

பாட்டூஸ் :
1. பூஜிதமே புரிந்தோம் புகழ் பெறவே
2. இரவும் பகலும் ரதியுன் னுருவம்
3. கண்டதும் காதல் கொண்டேனே அவன்மீதில்

இது இந்தப் படத்திலுள்ள பாட்டுக்கள்தானான்னு தெரியல.
 
Heezulia


Sponsored content

PostSponsored content



Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக