புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10மலேசிய செய்திகள் - Page 8 Poll_m10மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10 
21 Posts - 66%
heezulia
மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10மலேசிய செய்திகள் - Page 8 Poll_m10மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10மலேசிய செய்திகள் - Page 8 Poll_m10மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10 
63 Posts - 64%
heezulia
மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10மலேசிய செய்திகள் - Page 8 Poll_m10மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10மலேசிய செய்திகள் - Page 8 Poll_m10மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10மலேசிய செய்திகள் - Page 8 Poll_m10மலேசிய செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய செய்திகள்


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 7:33 pm

முஹைதீனை நிராகரித்து 35 பிகேஆர் எம்.பி.க்கள் அகோங்கிற்குக் கடிதம்

பிரதமர் முஹைதீன் யாசினை நிராகரித்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தனது கட்சி கடிதம் அனுப்பியதைப் பிகேஆர் உறுதிப்படுத்தியது.

பிகேஆர் தொடர்புத்துறை இயக்குநர், ஃபாஹ்மி ஃபாட்சில் இந்தத் தகவலை உறுதி செய்தார்.

“உண்மை. அனைத்து பிகேஆர் எம்.பி.க்களும் மஹியட்டீன் எம்டி யாசினின் தலைமையை ஆதரிக்கவில்லை, நிராகரிக்கிறோம் என்று பிகேஆர் அகோங்கிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-ன் அடிப்படையில், அவர் தாமதிக்கக் கூடாது, ஏனெனில் அவர் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்,” என்று அவர் கூறினார்.

பெஜுவாங், டிஏபி, பிகேஆர், வாரிசான், சரவாக் பெர்சத்து கட்சி, மூடா, அமானா மற்றும் மஸ்லீ மாலிக் (சுயேட்சை) ஆகிய 105 எம்.பி.க்களும் முஹைதீனை நிராகரித்து கடிதங்கள் அனுப்பியதாக ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, மலேசியாகினி வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

பதிவுக்காக, முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்காக, கட்சியின் 13 மக்களவை உறுப்பினர்கள் கடிதங்களைச் சமர்ப்பித்ததாக அம்னோ முன்பு வெளிப்படுத்தியிருந்தது.

இந்த விஷயம், முறையே ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 3 தேதியிட்ட இரண்டு கடிதங்கள் மூலம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதன் வழி, மக்களவையில் முஹைதீனின் ஆதரவு இப்போது 100 உறுப்பினர்களாக குறைந்துள்ளது, இது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 11-க்கும் குறைவாக உள்ளது.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 7:36 pm

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான நன்மைகள் : எஸ்.ஓ.பி. வழிகாட்டி



முழுமையாக தடுப்பூசி பெற்ற நபர்களுக்கான, விரிவான செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் (எஸ்.ஓ.பி.) தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.)  வெளியிட்டுள்ளது.

தடுப்பூசியின் முழு அளவைப் பெற்றவர்களுக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் சில சலுகைகளை அறிவித்த பிறகு இந்த எஸ்.ஓ.பி.க்கள் வெளியிடப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களை வீட்டிலேயேத் தனிமைப்படுத்துதலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு மாநில, மாவட்ட எல்லைகளைக் கடந்து பயணிப்பதும், மசூதிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை செய்வதும் இது அடங்கும்.

பின்வருபவை விரிவான எஸ்.ஓ.பி.க்கள் : (தேசிய மீட்புத் திட்டத்தின் [பிபிஎன்] கட்டத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படும்).

மாநில எல்லை கடந்த பயணம்



இதற்கு மட்டுமே பொருந்தும் : தொலைதூரத் தம்பதிகள் சந்திக்க விரும்பினால்; பெற்றோர்கள் 18 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளைப் பார்க்க விரும்பினால் கட்டாயமாக் காவல்துறை அனுமதி பெற வேண்டும்.

காவல்துறையிடம் விண்ணப்பிக்கும் போது, பின்வரும் ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்:

திருமணமான தம்பதிகள் :



மைகாட்

திருமணச் சான்றிதழ் / அட்டை நகல்

கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழின் நகல்

முகவரி / முதலாளியின் கடித ஆதாரம்

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு (18 வயதுக்குட்பட்டவர்கள்) :



மைகாட் (பெற்றோர்)

பிறப்புச் சான்றிதழ் (குழந்தை)

கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழின் நகல்

பள்ளி ஆவணங்கள் (தேவைப்பட்டால்)

சாலைத் தடுப்புகளில் காண்பிக்க, காவல்துறை மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி கடிதத்தை வழங்கும்.


வீட்டில் தனிமைப்படுத்தப்படுதல்



மலேசியாவில், வசிப்பிடம் கொண்ட வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு (குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள்) மட்டுமே.

புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், கோவிட் -19 தொற்றுக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை எதிர்மறையாக இருக்க வேண்டும்.

நாட்டில் நுழையும் போது அறிகுறிகள் இருக்கக்கூடாது.

முழுமையான தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தலுக்கு ஏற்ற வீடு இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் காலம் 14 நாட்கள் ஆகும், ஆனால் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் 21 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்.

இருப்பினும், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு, தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக நிர்ணயிக்கப்படும்.

முழுமையான தடுப்பூசி பெறாதவர்கள், தற்போதுள்ள எஸ்.ஓ.பி.க்களின் படி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி வாசல், வழிபாட்டு தளங்கள்



முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்கள் மசூதியில் அல்லது முஸ்லீம் அல்லாதவர் அவரவர் வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை செய்யலாம், மாநில மத இலாகாவின் அதிகாரம் அல்லது ஒற்றுமை அமைச்சின் விதிகளைப் பொறுத்து.

கூடுதல் நன்மைகள்



பிபிஎன் -இன், 2-ஆம் கட்டத்திலும், அதற்கு மேலும் உள்ள மாநிலங்களுக்கு, முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அம்மாநிலங்களின் பட்டியல் : பேராக், கிளந்தான், திரெங்கானு, பஹாங், பினாங்கு, சபா, சரவாக், பெர்லிஸ் மற்றும் லாபுவான்.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 16, 2021 9:16 pm

பதவி விலகினார் மலேசிய பிரதமர் மொகிதின் யாசின்



மலேசிய செய்திகள் - Page 8 8xVhZHY

மொகிதின் யாசினின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் இன்று ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொகிதினின் ஒட்டு மொத்த அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளது.

“மலேசியாவை இனி கடவுள் காப்பாற்றட்டும்”

என பதவி விலகியிருக்கும் அமைச்சர்களில் ஒருவரான கைரி ஜமாலுடின் பதிவிட்டிருக்கிறார்.

மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாமன்னரிடம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க கோலாலம்பூரிலுள்ள மாமன்னரின் அரண்மனை நோக்கி நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலிருந்து மொகிதின் புறப்பட்டார்.

அவர் பிற்பகல் 12.30 மணியளவில் மாமன்னரைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்புக்குப் பின்னர் அவரின் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு நேரலையாக தொலைக்காட்சியில் மொகிதின் யாசின் உரையாற்றுவார்.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 16, 2021 9:19 pm



முஹைதீன் யாசினின் இராஜினாமாவை நாடு எதிர்பார்த்த நிலையில், அம்னோ உச்சமன்ற செயற்குழு உறுப்பினர் (எம்.கே.டி.) ஜொஹரி அப்துல் கனி போதிய அளவு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், யாருக்கும் பிரதமர் வேட்பாளருக்கும் தகுதி இல்லை என்று கூறினார்.



நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்ட அவர், அனைவரும் ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்படும் ஒற்றுமை அரசாங்கத்தை அரசியல் கட்சிகள் அமைக்க பரிந்துரைத்தார்.

“உண்மை என்னவென்றால், எந்த அரசியல் கூட்டணிக்கும் போதுமான பெரும்பான்மை இடங்கள் இல்லை, இந்த நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று யாரும் அறிவிக்க முடியாது.

“எனவே, இந்த நேரத்தில் தெளிவான பிரதமர் வேட்பாளர் இல்லை,” என்று அவர் நேற்று தனது கீச்சகத்தில் வெளியிட்டார்.

முன்னதாக, 15 அம்னோ எம்.பி.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு #முஹைதீன் தனது பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது.

பெரும்பான்மையை மீண்டும் பெறும் முயற்சியில், முஹைதீன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பல்வேறு சீர்திருத்த திட்டங்களை வழங்கினார், ஆனால் அவர் நிராகரிக்கப்பட்டார்.

அவரது சலுகையில் எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர்களுக்கான ஒத்த நிதி மற்றும் நீண்டகாலமாக எதிர்க்கட்சிகளால் பரப்பப்பட்டு வந்த சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும், பிரதமர்களுக்கான கால வரம்புகள், கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்களின் உள்ளடக்கம்.

தனது முன்மொழிவு குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜொஹாரி, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை நிறுவும் காலம் மற்றும் நோக்கங்கள் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றார்.

“விரைவான தடுப்பூசியால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதன் மூலம் கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்பதே முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் தடுப்பூசிகளின் மேலாண்மை மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

“அதே நேரத்தில், தவறான நிர்வாகத்தைத் தொடர்ந்து தொற்றுநோயால் அவதிப்படுகிற மக்களின் நலனுக்கும் புதிய அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பொருளாதார அடிப்படையில், வணிகங்கள் மிகக் கடுமையான வழிகாட்டுதல்களுடன் கூடிய விரைவில் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“கடந்த 17 மாதங்களாக நடந்த தவறுகளை நாம் மீண்டும் செய்ய முடியாது, தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து போட்டித்தன்மையின்மை மற்றும் உறுதியற்ற தன்மையின் விளைவாக நாம் பொருளாதார நன்மைகளை இழந்துள்ளோம்,” என்றார் அவர்.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 16, 2021 9:22 pm

ஏன் அன்வார் மலேசியாவுக்குப் பிரதமராக வேண்டும்?


மலேசியாவிற்குப் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் புதியப் பிரதமராகத் தேவைபடுகிறார், கோவிட் -19 தொற்றால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கக்கூடியப் புதியப் படைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு வரவும் மலேசியக் கனவின் உணர்வைத் தூண்டவும் அவர் தேவை.

நம் நாடு 12,500-க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நேர்வுகளைக் காணும் வரையில், தொற்றுநோயை நிர்வகிக்கத் தவறிய அரசாங்கத்தின் பொது முகமாக இருந்த அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் நம் நாட்டுக்குத் தேவையில்லை.

புதியத் தலைமை மற்றும் கொள்கைகள் இல்லாவிட்டால், ஆகஸ்ட் 31 அன்று 64-வது தேசியத் தினத்தைக் கொண்டாடும் வேளையில், மலேசியா தொடர்ந்து 15,000 இறப்புகள் மற்றும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 நேர்வுகளை நோக்கி செல்லும்.

கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை, பொருளாதார மறுமலர்ச்சி அல்லது தேசிய-மாநில மேம்பாட்டு கொள்கைகளை நிர்வகிப்பதில் கொள்கையளவில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், நாடு தோல்வியை நோக்கி பயணிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்களால் கூறப்பட்டது.

இஸ்மாயில் சப்ரி பிரதமராக வந்தால், அரசியல் ஊழல்களால் ஆன கொள்கைகளையே மீண்டும் தொடருவார், இது மலேசியாவைத் தோல்வியடைந்த நாடாக மாற்றும்.

மலேசியாவுக்குப் புதிய பிரதமரும் புதிய தலைமையும் தேவை, அங்கு அனைத்து குடிமக்களும், இனம், மதம் அல்லது அரசியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மலேசியக் கனவை எதிர்பார்க்கலாம், அங்கு நம் நாடு உலகத்தரம் வாய்ந்த நாடாக மாறும், மேலும் மலேசியத் தந்தையின் ஆசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டை “இருண்ட மற்றும் தொந்தரவு நிறைந்த உலகில், ஒளியின் கதிராக” மாற்றுவதற்கு.

1970 முதல், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 90 மடங்கு வளர்ந்துள்ளது, இருப்பினும் இந்தோனேசியா, வியட்நாம், சீனா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்த எண்ணிக்கை முறையே 117, 122, 163, 175 மற்றும் 178 மடங்கு அதிகரித்துள்ளது.

50 வருடங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம்  அதிக ஜிடிபியுடன் மலேசியாவை முந்தியுள்ளன.

அடுத்த 50 ஆண்டுகளில், நாம் மற்ற நாடுகளை விஞ்சிவிடுவோமா அல்லது நம்மை விட அதிகமான நாடுகள் நமக்கு முன்னே இருக்குமா?

2070 ஆம் ஆண்டுக்கான மலேசியாவுக்குத் திட்டமிடக்கூடிய ஒரு பிரதமரும் தலைவரும் எங்களுக்கு வேண்டும், நாடாளுமன்றத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வது பற்றி கவலைப்படும் அல்லது கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் பிரதமர் அல்ல.

அனைத்து மலேசியர்களின் எதிர்காலத்திற்கான ஒரு பிரதமர் – இன்றும் எதிர்காலத்திற்கும்!





மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 16, 2021 9:26 pm

பாஸ், அம்னோ, பெர்சத்து – தனி தனியாகப் சிறப்பு கூட்டத்தை நடத்தின


நாட்டின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் இன்று சிறப்பு கூட்டங்களை நடத்தின.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் ஃபட்லி ஷாரி, ​​பாஸ் தங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

“ஆமாம், ஒரு சிறப்பு கூட்டம் நடந்தது,” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

அதேக் கட்சியைச் சேர்ந்த தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர், சே அப்துல்லா மாட் நாவியும் இதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், சுயத் தனிமைப்படுத்தலில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

இதற்கிடையில், அம்னோ அரசியல் பணியகம், இன்று பிற்பகல் புத்ரா உலக வாணிக மையத்தில், கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அதைப் போலவே, பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான், கட்சியின் உயர்மட்டத் தலைமை மன்றமும், இன்று பிற்பகல் இயங்கலையில் கூட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.

“பெர்சத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இயங்கலையில் கூட்டம் நடத்தியது. பெர்சத்து உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தலைமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

“முடிவு கிடைத்தவுடன், துணைத் தலைவர் ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:22 pm

105 எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுபட்டு அன்வாருக்கு ஆதரவு



எதிர்க்கட்சிகளின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அன்வருக்கு இப்போது உள்ள ஒரே பணி, மக்களவையில் பெரும்பான்மை பெற குறைந்தது ஆறு எம்.பி.க்களைப் பெறுவதுதான்.

88 பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்களைத் தவிர, அன்வருக்கு இப்போது வாரிசான், பெஜுவாங், சரவாக் பெர்சத்து கட்சி மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.

முன்னதாக, வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால், தகுதியான ஆதரவைப் பெறத் தவறியதை அடுத்து, அவரது கட்சி அன்வாருக்கு ஆதரவளிக்கும் என்பதை உறுதி செய்தார்.

அன்வாருக்கு ஆதரவாக எஸ்டியில் கையெழுத்திட்டதை வாரிசான் தலைமை வீரா முகமது அஸிஸ் ஜம்மான் உறுதிப்படுத்தினார்.

“பந்து இப்போது அன்வாரின் கைகளில் உள்ளது,” என்றார் அஸிஸ்.

அன்வார் தற்போது முன்னணியில் இருப்பதாக நம்பப்படும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன் போட்டியிடுவார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் (தே.மு.) ஆதரவைத் தவிர, பாஸ் மற்றும் பெர்சத்து ஆகியோரின் ஆதரவையும் இஸ்மாயில் சப்ரி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜிபிஎஸ் -ஐச் சேர்ந்த எம்.பி. ஒருவர், இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்க கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, இது அம்னோ துணைத் தலைவருக்கு அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவை அளிக்கும்.

இருப்பினும், ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜோஹரி ஓபேங், ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கை கேள்விக்குறியை எழுப்பியுள்ளது, அவர்கள் இந்த விஷயத்தை “யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஞானத்திற்கு” விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.

இது பிரதமர் வேட்பாளர் தேர்வில், ஜிபிஎஸ் நடுநிலை வகிப்பதாக சிலரால் கூறப்படுகிறது.

பின்னர், அபாங் ஜோஹாரியும் பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாடிலா யூசோஃப்-உம் ஜிபிஎஸ் எஸ்டியை அரண்மனையில் ஒப்படைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், அக்கூட்டணி யாரை ஆதரித்தது என்பதை வெளிப்படுத்த, அந்த இரண்டு ஜிபிஎஸ் தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக, தங்களுக்கு விருப்பமான பிரதமர் வேட்பாளரைத் தெரிவிக்க வேண்டுமென இஸ்தானா நெகாரா நேற்று அறிவுறுத்தியது.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:23 pm

பிரதமராக இஸ்மாயில் சப்ரி – பாஸ் ஒருமனதாக ஆதரவு



அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமராக ஆதரிக்கவும் பரிந்துரைக்கவும் பாஸ் இன்று ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், கட்சி பிரமாண அறிக்கையுடன் (எஸ்டி) தயாராகி வருவதாகக் கூறினார்.

“பாஸ் ஒருமனதாக இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்கிறது, நாங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே எஸ்டியை முடித்துவிட்டோம்,” என்று இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் சுருக்கமாகக் கூறினார்.

முன்னதாக, மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த முஹைதின் யாசினுக்குப் பதிலாக, பெரா நாடாளுமன்ற உறுப்பினரை அம்னோ ஒருமனதாக ஆதரித்ததாகக் கூறப்பட்டது.

15 அம்னோ எம்.பி.க்கள் முஹைதீனின் தலைமைக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு கவிழ்ந்தது.

பாஸ், கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முவாஃபாகாட் நேஷனல் கூட்டணியை உருவாக்கிய அம்னோவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:24 pm



முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்கு அம்னோ ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறப்படுகிறது.

அம்னோ வட்டாரங்களின்படி, கோலாலம்பூரில் இப்போது நடந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் முகாம் உட்பட, இஸ்மாயில் சப்ரிக்கு அனைத்து, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கும் என்று அம்னோ ஆதாரங்கள் கூறின.

அம்னோவில் பிளவுகளைத் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுப்பினர், அர்மாண்ட் அஸா அபு ஹனிஃபா, முகநூல் பதிவு ஒன்றில், அந்தப் பெரா எம்.பி.க்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அது உண்மையாகிவிட்டால், அம்னோ துணைத் தலைவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற இந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கும்.

இதற்கிடையில், அம்னோவின் ஒப்புதலுடன் முடிவு பற்றி கேட்டபோது, அஸலினா ஓத்மான் “ஆம்” என்றார்.

இதற்கிடையில், செம்புராங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் ஹுசைன், தற்போது தான் முன்னுரிமை அளிக்க விரும்புவது, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை என்றும், யாங் டி-பெர்த்துவான் அகோங் எடுக்கும் முடிவு அச்சூழ்நிலையை உருவாக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும், மிக முக்கியமான பிரச்சினையில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நேற்றிரவு அம்னோ எம்.பி.க்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது, ​​”அரசியல் விளையாட்டுகள் போதும்,” என்றார்.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:26 pm

பிரதமரைத் தேர்வு செய்வதில் மாமன்னரின் வித்தியாச அணுகுமுறை


அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் இந்த முறை மாமன்னர் சில வித்தியாசமான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடுத்த பிரதமராக யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை சத்திய பிரமாணக் கடிதம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பல்வேறு விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் அரண்மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாமன்னரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தாங்கள் பிரதமராகத் தேர்வு செய்தோம் என்ற விவரத்தை வெளியிடக் கூடாது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பை அரண்மனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மலேசிய செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக