ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


மலேசிய செய்திகள்

+5
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
SK
ChitraGanesan
சிவா
9 posters

மலேசிய செய்திகள் - Page 5 Empty மலேசிய செய்திகள்

Post by சிவா Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down


மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Sat Jul 31, 2021 10:23 pm
கோலாலம்பூர்., ஜூலை 31 – திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் செல்லப்போவதாக கூறியுள்ளனர். முஹிடின் யாசினும் அவரது பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கமும் கோழையாக இருப்பதாக டி.ஏ.பியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். டி.ஏ.பியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என அவர் தெரிவித்தார்.


உண்மையில் முஹிடினுக்கு 110 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது உண்மையானால் நாடாளுமன்ற கூட்டம் நடத்துவதை தவிர்ப்பது ஏன் என்றும் லிம் வினவினார். இதனிடையே லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்ஷீல், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் செல்லப்போவதாக கூறியுள்ளனர். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தடுப்பூசிகளை போட்டு விட்டனர் . எனவே கோவிட் தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பது நியாயம் இல்லையென பாமி பாட்ஷீல் கூறினார்.


மக்கள் விவேகமற்றவர்கள் அல்ல. எனக்கும் இதர எம்.பிக்களும் நாடாளுமன்ற பணிகளுக்காக சம்பளம் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை நான் நிச்சயம் நாடாளுமன்றம் செல்வேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என சைட் சாடிக் சவால் விடுத்தார். இதனிடையே நாடாளுமன்றத்தை கைப்பாவையாக அரசாங்கம் பயன்படுத்தி வருவது குறித்து Selangau நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியன் ஏமாற்றம் தெரிவித்தார்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon Aug 02, 2021 9:39 pmகோலாலம்பூர் : நாடு புதியதொரு அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெறவிருக்கிறது.

இதன் காரணமாக, அம்னோ என்ன முடிவெடுக்கும் என்ற பரபரப்பு அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இயங்கலை வழி (ஒன்லைன்) இந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடத்தப்படும்.

இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் அந்த முடிவு பிசுபிசுத்தது. அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதற்காக அம்னோ உச்சமன்றமோ அதன் தலைமைத்துவமோ கண்டனம் தெரிவிக்கவில்லை.

மாறாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியும், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் தனித் தனியாக பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியைச் சந்தித்து விட்டு வந்தனர்.

தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நாளடைவில் அந்த முடிவு மொகிதினுக்கு எதிரான முடிவு மட்டுமே என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆதரவு வழங்குவோம் என்பது போன்று அம்னோ தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்தன.

அதே சமயத்தில் பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்தனர். அம்னோவின் 9 அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதற்கும் இதுவரையில் அம்னோ உச்சமன்றத் தரப்பிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை.

இந்தச் சூழலில்தான் அம்னோவின் உச்சமன்ற அவசரக் கூட்டம் நாளை நடைபெறுவதால், என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon Aug 02, 2021 9:41 pmகோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர்.

எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் அவர்கள் திரண்டனர். அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி நடந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னொரு வகையில் திருப்பம் கண்டிருக்கிறது.

முதன் முறையாக ஜசெக, பிகேஆர், அமானா, சைட் சாதிக் தலைமையிலான மூடா கட்சி, துன் மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சி, வாரிசான், பார்ட்டி சரவாக் பெர்சாத்து, உப்கோ என அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து மொகிதினும், அவரின் அமைச்சரவையும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின.

இந்தப் போராட்டத்தில் துன் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் தங்களின் சொந்த கருத்து முரண்பாடுகளைக் களைந்து களத்தில் ஒன்றாக நின்ற காட்சி அரசியல்வ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon Aug 02, 2021 9:43 pmயாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உத்தரவை ஒதுக்கி வைக்கும் வகையில் அமைந்த, அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரனின் அறிக்கை திமிர்தனம் கொண்டதாகப் பிகேஆர் கருதுகிறது.

விக்னேஸ்வரன் அரசாணை மீதான விவாதத்தைப் பயனற்றது என்று கருதுவது ஏற்புடையதல்ல என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டா அகின் சொன்னார்.

“அகோங்கின் ஆணையை ஆணவத்துடன் மீறும் இந்த விக்னேஸ்வரன் யார்?” என்று அவர் இன்று ஒரு செய்திக்குறிப்பில் கேள்வி எழுப்பினார்.

அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதிக்க வேண்டும் என்று முன்பு தெளிவாக உத்தரவிட்டார் என்று ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான ஷம்சுல் இஸ்கண்டார் விளக்கினார்.

“இந்த அரசாணை மீதான விவாதத்தை வீண் என்று சொல்ல அவருக்கு (விக்னேஸ்வரன்) என்ன தைரியம்?” என்று அவர் மேலும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்க உதவும் வகையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், மக்களவையில் அவசரகாலச் சட்டம் பற்றிய விவாதம் நேர விரயம் என்று நேற்று விக்னேஸ்வரன் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அந்த மேலவை முன்னாள் சபாநாயகரின் கூற்றுப்படி, மக்களவை உறுப்பினர்கள் அவசரகால கட்டளை பற்றி விவாதிப்பது அவசியமற்றது.

ஒரே ஒரு வழிதான் உள்ளது

ஷம்சுல் இஸ்கண்டாரின் கூற்றுப்படி, அனைத்து தேசியக் கூட்டமைப்பின் (பிஎன்) தலைவர்களும், `ஈரமான நூலை நேராக்குவதற்கான` முயற்சிகளை நிறுத்த வேண்டும், ஏனெனில் ஓர் அரசாங்கமாக அவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

“கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, அதோடு மட்டுமின்றி, மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உத்தரவை நிலைநாட்டவும் அது தவறிவிட்டது.

“பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் இன்று ஒரே ஒரு வழிதான் உள்ளது, மரியாதையுடன் அவர்கள் பதவி விலக வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தேசிய முன்னணியில், ம.சீ.ச., மற்றும் அம்னோவுடன் ஓர் அங்கமாக ம.இ.கா. இருக்கிறது.

தற்போதைய பிரதமர் முஹைதீன் யாசினுக்கான எம்.பி.க்களின் ஆதரவைத் திரும்பப் பெற அம்னோ முடிவு செய்துள்ளது.

எனினும், முஹைதீனின் அமைச்சர்களாக இருக்கும் அம்னோ எம்.பி.க்கள் யாரும் தங்கள் உச்சமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காததால், அம்முயற்சி கடினமாக காணப்படுகிறது.

மறுபுறம், ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. அரசாங்கத்திற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதோடு, முஹிதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் ஒருமித்த கருத்தினால் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

ஜூலை 31-ம் தேதி, ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. தகவல் பிரிவு தலைவர்கள், முஹைதீன் யாசினுக்கும்ம் அவரது அமைச்சரவைக்கும் ஆதரவாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். பதிவுக்காக ம.சீ.ச.வும் ம.இ.கா.வும் அமைச்சரவையில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.

நேற்று, பேராக் ம.சீ.ச. இளைஞர் பிரிவுத் தலைவர், கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் வகையில், நாட்டை வழிநடத்த அதிகத் தகுதி வாய்ந்தவர்களை அனுமதிக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் முஹிதீனுக்கு அழைப்பு விடுத்தார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 03, 2021 8:16 am

பி.கே.ஆர் கட்சியின் தலைவருக்கு தான் எப்படியாவது பிரதமர் ஆக வேண்டும் என்னும் பேராசை தலையோங்கி நிற்கிறது. இரண்டு முறை சிறை சென்று வந்தவருக்கு இப்படி ஆசை இருப்பதஉ ஆச்சர்யம் தான். நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது, எல்லாருக்கும் பதவி ஆசை., எனக்கும் பிரதமராகும் ஆசை இருக்கிறது. ஆனால் முடியாதே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4558
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

சிவா likes this post

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

@மாணிக்கம் நடேசன் wrote:எனக்கும் பிரதமராகும் ஆசை இருக்கிறது. ஆனால் முடியாதே.

எந்தன் ஓட்டு உங்களுக்குதான் அய்யா!

@மாணிக்கம் நடேசன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Sat Aug 07, 2021 9:21 pm

ஒட்டுமொத்த மலேசியாவும் ‘குழப்பத்தில்’ – எம் சரவணன்

ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தேசியக் கூட்டணி அரசு மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது, மலேசியர்களைக் குழப்பமடைய செய்துள்ளது என்றார்.

அம்னோ, மசீச உட்பட ம.இ.கா. உறுப்பினர்களின் மிகப்பெரிய கேள்வி, அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் நமது திசை எது?

“நம்மிடம் 41 இடங்கள் உள்ளன. 41 இடங்களுடன், பெர்சத்து, டிஏபியுடன் இருக்க அம்னோ விரும்பவில்லை, பிகேஆருடன் இணைந்து வேலை செய்ய முடியாது. எனவே, 41 இடங்களுடன், நமது திசை எது? இது ஒரு மக்கள் பிரதிநிதியாக என்னிடம் உள்ள கேள்வி, கட்சி உறுப்பினர்களிடம் நான் விளக்க வேண்டும்.

“நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலேசியாவும் குழப்பத்தில் உள்ளது, பிஎன்-இன் நிலைப்பாடு என்ன? அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், புதிய அரசாங்கம் அமைக்க எந்தவொரு கட்சியும் நம்முடன் இல்லை. என்ன நடக்கப் போகிறது?” என்று அவர் இன்று கோலாலம்பூரில், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த தாப்பா எம்.பி. கலந்துகொண்டார்.

இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் வரை, தேசிய முன்னணியின் 31 எம்.பி.க்களும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக இஸ்மாயில் சப்ரி இன்று அறிவித்தார்.

மசீசவைச் சேர்ந்த இருவர், ம.இ.கா. 1 மற்றும் பிபிஆர்எஸ் 1 உட்பட, 31 தேசிய முன்னணி எம்.பி.க்களின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையில், தாப்பா அம்னோ பிரிவுத் தலைவர் இஷாம் ஷாருட்டின், தேசியக் கூட்டணி மற்றும் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் அம்னோ உச்சமன்றக் குழுவின் முடிவை முழுமையாக ஆதரிப்பதாக சொன்னார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed Aug 11, 2021 7:30 pm

முகமட் ஹாசான் துணைப் பிரதமர் பதவியை மறுத்தார்

கோலாலம்பூர் : அம்னோவில் நிகழ்ந்து வரும் பல்வேறு போராட்டங்கள், மாற்றங்களுக்கு இடையில் அனைவருக்கும் பொதுவான – அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக – பாரமான அரசியல் மூட்டைகள் எதையும் சுமந்து கொண்டிருக்காத தலைவராக- பார்க்கப்படுபவர் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹாசான்.

முகமட் ஹாசானுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மொகிதின் யாசின் முன்வந்தார் – என அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஆச்சரியகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

எனினும் இது குறித்து பதலளிக்கவோ, மேலும் தகவல் பகிரவோ முகமட் ஹாசான் மறுத்துள்ளார்.

“நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கட்சியின் முடிவை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் முடிவுகள்” என்று மட்டும் முகமட் ஹாசான் கூறியுள்ளார்.

இவ்வாறாக கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டும், கொள்கைகளுக்கு ஏற்பவும் அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்து வருவதால் அவர் மீதான மதிப்பீடும், அபிமானமும் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களிடையே அதிகரித்து வருவதைக் காண முடிவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

முகமட் ஹாசான் துணைப் பிரதமர் பதவியை மறுத்ததைத் தொடர்ந்தே இஸ்மாயில் சாப்ரியை இறுதிக்கட்ட அரசியல் வியூகமாக மொகிதின் யாசின் துணைப் பிரதமராக ஜூலை 7-ஆம் தேதி நியமித்திருக்கிறார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed Aug 11, 2021 7:31 pm

28.3% மலேசியர்கள் 2 மருந்தளவு தடுப்பூசிகளை நிறைவு செய்துள்ளனர் – ஆடாம்

நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 28.3 விழுக்காடு அல்லது 9,246,295 பேர், நேற்று வரையில் இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை முடித்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

தனது அதிகாரப்பூர்வ கீச்சகத்தில், ஒரு விளக்கப்படத்தைப் பகிர்ந்து, 16,119,916 பேர் முதல் மருந்தளவைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதன்வழி, நேற்றைய நிலவரப்படி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் (பிக்) மூலம் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 25,366,211 மருந்தளவுகளாகப் பதிவு செய்துள்ளது.

“அந்த விழுக்காட்டின் படி, நாட்டில் பெரியவர்களில் 68.9 விழுக்காட்டினர் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 39.5 விழுக்காட்டினர் தங்களின் முழு அளவிலான கோவிட் -19 தடுப்பூசி மருந்தை முடித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தினசரி தடுப்பூசிகள் மொத்தம் 357,891 மருந்தளவைப் பதிவு செய்துள்ளன, 160,320 முதல் மருந்தளவாகவும், 197,661 இரண்டாவது மருந்தளவாகவும் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை வழங்கும் ‘பிக்’ திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டது.

பெர்னாமா


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed Aug 11, 2021 7:32 pm

மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் எரிந்தது, நோயாளி காயமடைந்தார்

தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர் மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில், நேற்று இரவு ஆக்ஸிஜன் எரிவாயு சிலிண்டர் தீ விபத்தில், ஆண் நோயாளி ஒருவர் தீக் காயமடைந்தார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர், இரவு 7.42 மணிக்கு அழைப்பைப் பெற்ற பின்னர், சிலிம் ரீவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.

48 வயது நோயாளியின் கைகளில், ஒன்பது விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

“சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், 15×20 சதுர அடி அளவிலான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறை தீக்குள்ளானதைக் கண்டறிந்தது.

“இருப்பினும், தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

மேலும், அச்செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீயணைப்பு படையினர் அடுத்தடுத்து முழுமையான மதிப்பீடு மற்றும் ஆய்வை மேற்கொண்டனர், சம்பவ இடத்தில் வேறு எந்த ஆபத்துகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியப் பின்னர், இரவு 8.55 மணியளவில் ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்தன.

பெர்னாமா


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed Aug 11, 2021 7:33 pm

முஹைதீனை நிராகரித்து 35 பிகேஆர் எம்.பி.க்கள் அகோங்கிற்குக் கடிதம்

பிரதமர் முஹைதீன் யாசினை நிராகரித்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தனது கட்சி கடிதம் அனுப்பியதைப் பிகேஆர் உறுதிப்படுத்தியது.

பிகேஆர் தொடர்புத்துறை இயக்குநர், ஃபாஹ்மி ஃபாட்சில் இந்தத் தகவலை உறுதி செய்தார்.

“உண்மை. அனைத்து பிகேஆர் எம்.பி.க்களும் மஹியட்டீன் எம்டி யாசினின் தலைமையை ஆதரிக்கவில்லை, நிராகரிக்கிறோம் என்று பிகேஆர் அகோங்கிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-ன் அடிப்படையில், அவர் தாமதிக்கக் கூடாது, ஏனெனில் அவர் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்,” என்று அவர் கூறினார்.

பெஜுவாங், டிஏபி, பிகேஆர், வாரிசான், சரவாக் பெர்சத்து கட்சி, மூடா, அமானா மற்றும் மஸ்லீ மாலிக் (சுயேட்சை) ஆகிய 105 எம்.பி.க்களும் முஹைதீனை நிராகரித்து கடிதங்கள் அனுப்பியதாக ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, மலேசியாகினி வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

பதிவுக்காக, முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்காக, கட்சியின் 13 மக்களவை உறுப்பினர்கள் கடிதங்களைச் சமர்ப்பித்ததாக அம்னோ முன்பு வெளிப்படுத்தியிருந்தது.

இந்த விஷயம், முறையே ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 3 தேதியிட்ட இரண்டு கடிதங்கள் மூலம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதன் வழி, மக்களவையில் முஹைதீனின் ஆதரவு இப்போது 100 உறுப்பினர்களாக குறைந்துள்ளது, இது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 11-க்கும் குறைவாக உள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed Aug 11, 2021 7:36 pm

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான நன்மைகள் : எஸ்.ஓ.பி. வழிகாட்டிமுழுமையாக தடுப்பூசி பெற்ற நபர்களுக்கான, விரிவான செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் (எஸ்.ஓ.பி.) தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.)  வெளியிட்டுள்ளது.

தடுப்பூசியின் முழு அளவைப் பெற்றவர்களுக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் சில சலுகைகளை அறிவித்த பிறகு இந்த எஸ்.ஓ.பி.க்கள் வெளியிடப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களை வீட்டிலேயேத் தனிமைப்படுத்துதலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு மாநில, மாவட்ட எல்லைகளைக் கடந்து பயணிப்பதும், மசூதிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை செய்வதும் இது அடங்கும்.

பின்வருபவை விரிவான எஸ்.ஓ.பி.க்கள் : (தேசிய மீட்புத் திட்டத்தின் [பிபிஎன்] கட்டத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படும்).

மாநில எல்லை கடந்த பயணம்இதற்கு மட்டுமே பொருந்தும் : தொலைதூரத் தம்பதிகள் சந்திக்க விரும்பினால்; பெற்றோர்கள் 18 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளைப் பார்க்க விரும்பினால் கட்டாயமாக் காவல்துறை அனுமதி பெற வேண்டும்.

காவல்துறையிடம் விண்ணப்பிக்கும் போது, பின்வரும் ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்:

திருமணமான தம்பதிகள் :மைகாட்

திருமணச் சான்றிதழ் / அட்டை நகல்

கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழின் நகல்

முகவரி / முதலாளியின் கடித ஆதாரம்

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு (18 வயதுக்குட்பட்டவர்கள்) :மைகாட் (பெற்றோர்)

பிறப்புச் சான்றிதழ் (குழந்தை)

கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழின் நகல்

பள்ளி ஆவணங்கள் (தேவைப்பட்டால்)

சாலைத் தடுப்புகளில் காண்பிக்க, காவல்துறை மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி கடிதத்தை வழங்கும்.


வீட்டில் தனிமைப்படுத்தப்படுதல்மலேசியாவில், வசிப்பிடம் கொண்ட வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு (குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள்) மட்டுமே.

புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், கோவிட் -19 தொற்றுக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை எதிர்மறையாக இருக்க வேண்டும்.

நாட்டில் நுழையும் போது அறிகுறிகள் இருக்கக்கூடாது.

முழுமையான தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தலுக்கு ஏற்ற வீடு இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் காலம் 14 நாட்கள் ஆகும், ஆனால் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் 21 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்.

இருப்பினும், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு, தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக நிர்ணயிக்கப்படும்.

முழுமையான தடுப்பூசி பெறாதவர்கள், தற்போதுள்ள எஸ்.ஓ.பி.க்களின் படி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி வாசல், வழிபாட்டு தளங்கள்முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்கள் மசூதியில் அல்லது முஸ்லீம் அல்லாதவர் அவரவர் வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை செய்யலாம், மாநில மத இலாகாவின் அதிகாரம் அல்லது ஒற்றுமை அமைச்சின் விதிகளைப் பொறுத்து.

கூடுதல் நன்மைகள்பிபிஎன் -இன், 2-ஆம் கட்டத்திலும், அதற்கு மேலும் உள்ள மாநிலங்களுக்கு, முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அம்மாநிலங்களின் பட்டியல் : பேராக், கிளந்தான், திரெங்கானு, பஹாங், பினாங்கு, சபா, சரவாக், பெர்லிஸ் மற்றும் லாபுவான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon Aug 16, 2021 9:16 pm

பதவி விலகினார் மலேசிய பிரதமர் மொகிதின் யாசின்மலேசிய செய்திகள் - Page 5 8xVhZHY

மொகிதின் யாசினின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் இன்று ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொகிதினின் ஒட்டு மொத்த அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளது.

“மலேசியாவை இனி கடவுள் காப்பாற்றட்டும்”

என பதவி விலகியிருக்கும் அமைச்சர்களில் ஒருவரான கைரி ஜமாலுடின் பதிவிட்டிருக்கிறார்.

மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாமன்னரிடம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க கோலாலம்பூரிலுள்ள மாமன்னரின் அரண்மனை நோக்கி நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலிருந்து மொகிதின் புறப்பட்டார்.

அவர் பிற்பகல் 12.30 மணியளவில் மாமன்னரைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்புக்குப் பின்னர் அவரின் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு நேரலையாக தொலைக்காட்சியில் மொகிதின் யாசின் உரையாற்றுவார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon Aug 16, 2021 9:19 pmமுஹைதீன் யாசினின் இராஜினாமாவை நாடு எதிர்பார்த்த நிலையில், அம்னோ உச்சமன்ற செயற்குழு உறுப்பினர் (எம்.கே.டி.) ஜொஹரி அப்துல் கனி போதிய அளவு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், யாருக்கும் பிரதமர் வேட்பாளருக்கும் தகுதி இல்லை என்று கூறினார்.நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்ட அவர், அனைவரும் ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்படும் ஒற்றுமை அரசாங்கத்தை அரசியல் கட்சிகள் அமைக்க பரிந்துரைத்தார்.

“உண்மை என்னவென்றால், எந்த அரசியல் கூட்டணிக்கும் போதுமான பெரும்பான்மை இடங்கள் இல்லை, இந்த நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று யாரும் அறிவிக்க முடியாது.

“எனவே, இந்த நேரத்தில் தெளிவான பிரதமர் வேட்பாளர் இல்லை,” என்று அவர் நேற்று தனது கீச்சகத்தில் வெளியிட்டார்.

முன்னதாக, 15 அம்னோ எம்.பி.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு #முஹைதீன் தனது பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது.

பெரும்பான்மையை மீண்டும் பெறும் முயற்சியில், முஹைதீன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பல்வேறு சீர்திருத்த திட்டங்களை வழங்கினார், ஆனால் அவர் நிராகரிக்கப்பட்டார்.

அவரது சலுகையில் எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர்களுக்கான ஒத்த நிதி மற்றும் நீண்டகாலமாக எதிர்க்கட்சிகளால் பரப்பப்பட்டு வந்த சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும், பிரதமர்களுக்கான கால வரம்புகள், கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்களின் உள்ளடக்கம்.

தனது முன்மொழிவு குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜொஹாரி, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை நிறுவும் காலம் மற்றும் நோக்கங்கள் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றார்.

“விரைவான தடுப்பூசியால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதன் மூலம் கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்பதே முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் தடுப்பூசிகளின் மேலாண்மை மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

“அதே நேரத்தில், தவறான நிர்வாகத்தைத் தொடர்ந்து தொற்றுநோயால் அவதிப்படுகிற மக்களின் நலனுக்கும் புதிய அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பொருளாதார அடிப்படையில், வணிகங்கள் மிகக் கடுமையான வழிகாட்டுதல்களுடன் கூடிய விரைவில் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“கடந்த 17 மாதங்களாக நடந்த தவறுகளை நாம் மீண்டும் செய்ய முடியாது, தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து போட்டித்தன்மையின்மை மற்றும் உறுதியற்ற தன்மையின் விளைவாக நாம் பொருளாதார நன்மைகளை இழந்துள்ளோம்,” என்றார் அவர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon Aug 16, 2021 9:22 pm

ஏன் அன்வார் மலேசியாவுக்குப் பிரதமராக வேண்டும்?


மலேசியாவிற்குப் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் புதியப் பிரதமராகத் தேவைபடுகிறார், கோவிட் -19 தொற்றால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கக்கூடியப் புதியப் படைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு வரவும் மலேசியக் கனவின் உணர்வைத் தூண்டவும் அவர் தேவை.

நம் நாடு 12,500-க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நேர்வுகளைக் காணும் வரையில், தொற்றுநோயை நிர்வகிக்கத் தவறிய அரசாங்கத்தின் பொது முகமாக இருந்த அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் நம் நாட்டுக்குத் தேவையில்லை.

புதியத் தலைமை மற்றும் கொள்கைகள் இல்லாவிட்டால், ஆகஸ்ட் 31 அன்று 64-வது தேசியத் தினத்தைக் கொண்டாடும் வேளையில், மலேசியா தொடர்ந்து 15,000 இறப்புகள் மற்றும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 நேர்வுகளை நோக்கி செல்லும்.

கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை, பொருளாதார மறுமலர்ச்சி அல்லது தேசிய-மாநில மேம்பாட்டு கொள்கைகளை நிர்வகிப்பதில் கொள்கையளவில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், நாடு தோல்வியை நோக்கி பயணிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்களால் கூறப்பட்டது.

இஸ்மாயில் சப்ரி பிரதமராக வந்தால், அரசியல் ஊழல்களால் ஆன கொள்கைகளையே மீண்டும் தொடருவார், இது மலேசியாவைத் தோல்வியடைந்த நாடாக மாற்றும்.

மலேசியாவுக்குப் புதிய பிரதமரும் புதிய தலைமையும் தேவை, அங்கு அனைத்து குடிமக்களும், இனம், மதம் அல்லது அரசியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மலேசியக் கனவை எதிர்பார்க்கலாம், அங்கு நம் நாடு உலகத்தரம் வாய்ந்த நாடாக மாறும், மேலும் மலேசியத் தந்தையின் ஆசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டை “இருண்ட மற்றும் தொந்தரவு நிறைந்த உலகில், ஒளியின் கதிராக” மாற்றுவதற்கு.

1970 முதல், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 90 மடங்கு வளர்ந்துள்ளது, இருப்பினும் இந்தோனேசியா, வியட்நாம், சீனா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்த எண்ணிக்கை முறையே 117, 122, 163, 175 மற்றும் 178 மடங்கு அதிகரித்துள்ளது.

50 வருடங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம்  அதிக ஜிடிபியுடன் மலேசியாவை முந்தியுள்ளன.

அடுத்த 50 ஆண்டுகளில், நாம் மற்ற நாடுகளை விஞ்சிவிடுவோமா அல்லது நம்மை விட அதிகமான நாடுகள் நமக்கு முன்னே இருக்குமா?

2070 ஆம் ஆண்டுக்கான மலேசியாவுக்குத் திட்டமிடக்கூடிய ஒரு பிரதமரும் தலைவரும் எங்களுக்கு வேண்டும், நாடாளுமன்றத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வது பற்றி கவலைப்படும் அல்லது கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் பிரதமர் அல்ல.

அனைத்து மலேசியர்களின் எதிர்காலத்திற்கான ஒரு பிரதமர் – இன்றும் எதிர்காலத்திற்கும்!அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 5 Empty Re: மலேசிய செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை