ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Today at 22:55

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Today at 22:55

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Today at 18:22

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Today at 18:11

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Today at 18:06

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Today at 13:11

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Today at 12:00

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 11:57

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:51

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 23:24

» tamil law books
by T.N.Balasubramanian Yesterday at 22:24

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Yesterday at 22:16

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:11

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:09

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 19:41

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 19:33

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 19:31

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Yesterday at 19:22

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Yesterday at 19:21

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Yesterday at 19:11

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by durfult Yesterday at 18:09

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Yesterday at 16:59

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 16:57

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Yesterday at 16:56

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» தொற்று - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:20

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Yesterday at 10:19

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 10:16

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Yesterday at 10:15

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Yesterday at 10:14

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Yesterday at 10:12

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Yesterday at 0:23

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 23:45

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 23:41

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat 23 Oct 2021 - 21:26

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat 23 Oct 2021 - 20:35

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat 23 Oct 2021 - 20:23

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by T.N.Balasubramanian Sat 23 Oct 2021 - 20:15

» கட்டம் சொல்லுது – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )
by T.N.Balasubramanian Sat 23 Oct 2021 - 20:06

» மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
by T.N.Balasubramanian Sat 23 Oct 2021 - 18:29

» ஒன்பது ஓட்டைகள் இருந்தும்…
by T.N.Balasubramanian Sat 23 Oct 2021 - 18:17

» உலக கோப்பை போட்டி அட்டவணை
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 17:51

» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 17:50

» அம்மா வேடத்தில் சீதா
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 17:49

» சவுதியில் பிரபலமாகும் சீனமொழி
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 17:46

» தேநீர் கோப்பை கட்டிடம்
by ayyasamy ram Sat 23 Oct 2021 - 17:45

நிகழ்நிலை நிர்வாகிகள்


மலேசிய செய்திகள்

+5
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
SK
ChitraGanesan
சிவா
9 posters

மலேசிய செய்திகள் - Page 6 Empty மலேசிய செய்திகள்

Post by சிவா Tue 16 Aug 2016 - 21:12

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down


மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Mon 16 Aug 2021 - 22:56

பாஸ், அம்னோ, பெர்சத்து – தனி தனியாகப் சிறப்பு கூட்டத்தை நடத்தின


நாட்டின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் இன்று சிறப்பு கூட்டங்களை நடத்தின.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் ஃபட்லி ஷாரி, ​​பாஸ் தங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

“ஆமாம், ஒரு சிறப்பு கூட்டம் நடந்தது,” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

அதேக் கட்சியைச் சேர்ந்த தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர், சே அப்துல்லா மாட் நாவியும் இதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், சுயத் தனிமைப்படுத்தலில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

இதற்கிடையில், அம்னோ அரசியல் பணியகம், இன்று பிற்பகல் புத்ரா உலக வாணிக மையத்தில், கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அதைப் போலவே, பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான், கட்சியின் உயர்மட்டத் தலைமை மன்றமும், இன்று பிற்பகல் இயங்கலையில் கூட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.

“பெர்சத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இயங்கலையில் கூட்டம் நடத்தியது. பெர்சத்து உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தலைமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

“முடிவு கிடைத்தவுடன், துணைத் தலைவர் ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed 18 Aug 2021 - 23:52

105 எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுபட்டு அன்வாருக்கு ஆதரவுஎதிர்க்கட்சிகளின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அன்வருக்கு இப்போது உள்ள ஒரே பணி, மக்களவையில் பெரும்பான்மை பெற குறைந்தது ஆறு எம்.பி.க்களைப் பெறுவதுதான்.

88 பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்களைத் தவிர, அன்வருக்கு இப்போது வாரிசான், பெஜுவாங், சரவாக் பெர்சத்து கட்சி மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.

முன்னதாக, வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால், தகுதியான ஆதரவைப் பெறத் தவறியதை அடுத்து, அவரது கட்சி அன்வாருக்கு ஆதரவளிக்கும் என்பதை உறுதி செய்தார்.

அன்வாருக்கு ஆதரவாக எஸ்டியில் கையெழுத்திட்டதை வாரிசான் தலைமை வீரா முகமது அஸிஸ் ஜம்மான் உறுதிப்படுத்தினார்.

“பந்து இப்போது அன்வாரின் கைகளில் உள்ளது,” என்றார் அஸிஸ்.

அன்வார் தற்போது முன்னணியில் இருப்பதாக நம்பப்படும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன் போட்டியிடுவார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் (தே.மு.) ஆதரவைத் தவிர, பாஸ் மற்றும் பெர்சத்து ஆகியோரின் ஆதரவையும் இஸ்மாயில் சப்ரி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜிபிஎஸ் -ஐச் சேர்ந்த எம்.பி. ஒருவர், இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்க கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, இது அம்னோ துணைத் தலைவருக்கு அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவை அளிக்கும்.

இருப்பினும், ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜோஹரி ஓபேங், ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கை கேள்விக்குறியை எழுப்பியுள்ளது, அவர்கள் இந்த விஷயத்தை “யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஞானத்திற்கு” விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.

இது பிரதமர் வேட்பாளர் தேர்வில், ஜிபிஎஸ் நடுநிலை வகிப்பதாக சிலரால் கூறப்படுகிறது.

பின்னர், அபாங் ஜோஹாரியும் பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாடிலா யூசோஃப்-உம் ஜிபிஎஸ் எஸ்டியை அரண்மனையில் ஒப்படைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், அக்கூட்டணி யாரை ஆதரித்தது என்பதை வெளிப்படுத்த, அந்த இரண்டு ஜிபிஎஸ் தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக, தங்களுக்கு விருப்பமான பிரதமர் வேட்பாளரைத் தெரிவிக்க வேண்டுமென இஸ்தானா நெகாரா நேற்று அறிவுறுத்தியது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed 18 Aug 2021 - 23:53

பிரதமராக இஸ்மாயில் சப்ரி – பாஸ் ஒருமனதாக ஆதரவுஅம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமராக ஆதரிக்கவும் பரிந்துரைக்கவும் பாஸ் இன்று ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், கட்சி பிரமாண அறிக்கையுடன் (எஸ்டி) தயாராகி வருவதாகக் கூறினார்.

“பாஸ் ஒருமனதாக இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்கிறது, நாங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே எஸ்டியை முடித்துவிட்டோம்,” என்று இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் சுருக்கமாகக் கூறினார்.

முன்னதாக, மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த முஹைதின் யாசினுக்குப் பதிலாக, பெரா நாடாளுமன்ற உறுப்பினரை அம்னோ ஒருமனதாக ஆதரித்ததாகக் கூறப்பட்டது.

15 அம்னோ எம்.பி.க்கள் முஹைதீனின் தலைமைக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு கவிழ்ந்தது.

பாஸ், கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முவாஃபாகாட் நேஷனல் கூட்டணியை உருவாக்கிய அம்னோவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed 18 Aug 2021 - 23:54முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்கு அம்னோ ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறப்படுகிறது.

அம்னோ வட்டாரங்களின்படி, கோலாலம்பூரில் இப்போது நடந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் முகாம் உட்பட, இஸ்மாயில் சப்ரிக்கு அனைத்து, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கும் என்று அம்னோ ஆதாரங்கள் கூறின.

அம்னோவில் பிளவுகளைத் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுப்பினர், அர்மாண்ட் அஸா அபு ஹனிஃபா, முகநூல் பதிவு ஒன்றில், அந்தப் பெரா எம்.பி.க்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அது உண்மையாகிவிட்டால், அம்னோ துணைத் தலைவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற இந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கும்.

இதற்கிடையில், அம்னோவின் ஒப்புதலுடன் முடிவு பற்றி கேட்டபோது, அஸலினா ஓத்மான் “ஆம்” என்றார்.

இதற்கிடையில், செம்புராங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் ஹுசைன், தற்போது தான் முன்னுரிமை அளிக்க விரும்புவது, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை என்றும், யாங் டி-பெர்த்துவான் அகோங் எடுக்கும் முடிவு அச்சூழ்நிலையை உருவாக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும், மிக முக்கியமான பிரச்சினையில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நேற்றிரவு அம்னோ எம்.பி.க்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது, ​​”அரசியல் விளையாட்டுகள் போதும்,” என்றார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Wed 18 Aug 2021 - 23:56

பிரதமரைத் தேர்வு செய்வதில் மாமன்னரின் வித்தியாச அணுகுமுறை


அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் இந்த முறை மாமன்னர் சில வித்தியாசமான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடுத்த பிரதமராக யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை சத்திய பிரமாணக் கடிதம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பல்வேறு விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் அரண்மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாமன்னரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தாங்கள் பிரதமராகத் தேர்வு செய்தோம் என்ற விவரத்தை வெளியிடக் கூடாது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பை அரண்மனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா Fri 20 Aug 2021 - 21:39

இஸ்மாயில் சாப்ரி : நாட்டின் 9-வது பிரதமர்!


மலேசிய செய்திகள் - Page 6 UTGPUeM

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் நியமித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி பிரதமராக மான்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் பிற்பகல் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.

சுமார் 2 மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் சுல்தான்களின் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரண்மனையிலிருந்து வெளியேறின.

நாட்டின் 9-வது பிரதமர் குறித்த முடிவை விவாதிக்க மலாய் ஆட்சியாளர்கள் இன்று கோலாலம்பூரில் மாமன்னரின் தலைமையில் ஒன்று கூடினர்.

பெர்லிஸ், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சுல்தான்கள் இன்றைய ஆட்சியாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by T.N.Balasubramanian Fri 20 Aug 2021 - 23:34

இஸ்மாயில் சாப்பிரி அவர்களுக்கு  அன்பு மலர் அன்பு மலர்


(மாணிக்கம் நடேசன் அய்யா அவர்களும் இந்த பதவிக்கு போட்டிப்போட போவதாக சொன்னாரே.
நான் கூட அவருக்குதான் எந்தன் ஒட்டு என வேறு கூறி இருந்தேன்.என்னாயிற்று?)

@சிவா

  @மாணிக்கம் நடேசன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30191
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10864

சிவா likes this post

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 6 Empty Re: மலேசிய செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை