புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
52 Posts - 39%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
5 Posts - 4%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
2 Posts - 2%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
7 Posts - 3%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 1 of 34 1, 2, 3 ... 17 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 9:51 am

காற்பந்து சரியானப் பிரயோகமெனினும், கால் பந்து என்பதுதான் வழக்கு முறையில் உள்ளது .
விளம்பரம் பண்ணுவதும் அப்பிடியேத்தான் பண்ணுகிறார்கள் .

சிறு சந்தேகம்
நாள் + கள் = நாள்களா ? நாட்கள் என்றுதானே கூறுகிறோம்
10 நாள்களில் திரும்பி வருவேன் என்று கூறுவதில்லையே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 10:48 am

ஒரு தவறைப் பலரும் செய்வதால் அது சரி என்று சொல்லமுடியுமா ?

நாட்கள் என்றால் நாட்பட்ட கள் என்று பொருள்படும் .

நாள் + கள் = நாள்கள் என்பதே சரி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:55 am

M.Jagadeesan wrote:ஒரு தவறைப் பலரும் செய்வதால் அது சரி என்று சொல்லமுடியுமா ?

நாட்கள் என்றால் நாட்பட்ட கள் என்று பொருள்படும் .

நாள் + கள் = நாள்கள் என்பதே சரி .

மேற்கோள் செய்த பதிவு: 1211439

நாட்கள் நமக்கு வேண்டாம்
நாள்களே போதும் அய்யா .

நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 17, 2016 12:03 pm

பள்ளியில் 10 வரை தமிழ் மூலம் படித்தவன். அதில் கிடைத்த அறிவின்படி,
நாள்கள் என்பதில் கள் என்பது பன்மை விகுதி முழுச் சொல் இல்லை.நாள் – நிலைமொழி கள் வருமொழி இல்லை.எனவே நாள்கள் தான் சரி,நாட்கள் என்பது தவறாகும்.

நாட்கள் என்பது நாட்பட்ட கள் என்றாகி விடும். இங்கே கள் என்பது பெயர்சொல்லாகும்.

ஆனால் நாள் +காட்டி - நாட்காட்டி என்பதே சரியாகும்.

வாழ்த்துக்கள் என சொல்வது தவறாகும். வாழ்த்து என்ற சொல்லுடன் கள் என்ற பன்மை விகுதி சேர்வதால் வாழ்த்துகள் சரியாகும்.வாழ்த்துக்கள் என்பது தவறாகும்.

தவறென்று தெரிந்து கொள்ளும் போது திருத்திக் கொள்பவன் தான் மனிதன்.எனவே ஜெகதீசன்,ரமணியன் அவர்கள் சொல்வதே சரியென்று எனக்கு தோன்றுகிறது.
// ஒரு தவறைப் பலரும் செய்வதால் அது சரி என்று சொல்லமுடியுமா ? //

எனவே தவறுகளை திருத்திக் கொள்வோம்.தமிழில் மட்டுமல்ல வாழ்விலும் கூட.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 12:43 pm

murthy wrote:பள்ளியில் 10 வரை தமிழ் மூலம் படித்தவன். அதில் கிடைத்த அறிவின்படி,
நாள்கள் என்பதில் கள் என்பது பன்மை விகுதி முழுச் சொல் இல்லை.நாள் – நிலைமொழி கள் வருமொழி இல்லை.எனவே நாள்கள் தான் சரி,நாட்கள் என்பது தவறாகும்.

மகிழ்ச்சியாக உள்ளது .
வி பொ உ ( விருப்ப பொத்தானை உபயோகித்தேன் .)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2016 3:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 5:52 pm

'இயக்குநர்', 'இயக்குனர்' எது சரி?

'இயக்குநர்' என்பதே சரி, 'இயக்கு' என்னும் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல் ஆக்குவதற்கு 'நர்’ விகுதி சேர்க்க வேண்டும்.

ஓட்டு=ஓட்டுநர்

ஆளு(ள்+உ)+நர்= ஆளுநர்

பெறு+நர்=பெறுநர்

அனுப்புநர்= அனுப்பு+நர்

பயிற்று+நர்=பயிற்றுநர்

வல்லு(ல்+உ)+நர்=வல்லுநர்.

வந்தனர், ஆடினர், பாடினர்,அழைத்தனர் ஆகிய சொற்களில் வரும் 'ன' பன்மையைக் குறிக்கும்.

அஃறிணையாக இருந்தால் வந்தன, ஆடின, பாடின,அழைத்தன என வரும். இங்கே 'ஆடிநர்', 'ஆடிந' என்று எழுதுவது தவறு.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 17, 2016 6:07 pm

T.N.Balasubramanian wrote:
நாட்கள் நமக்கு வேண்டாம்
நாள்களே போதும் அய்யா .

நன்றி

ரமணியன்

நாட்பட்ட கள்ளை விட
இளம் காலையில் இரக்கும்
கள்ளே நன்று என சொல்ல கேட்டிருக்கிறேன்

அய்யா அதான் நாட்கள் வேண்டாம்ன்னு சொல்றார் போலிருக்கு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 6:32 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
நாட்கள் நமக்கு வேண்டாம்
நாள்களே போதும் அய்யா .

நன்றி

ரமணியன்

நாட்பட்ட கள்ளை விட
இளம் காலையில் இரக்கும்
கள்ளே நன்று என சொல்ல கேட்டிருக்கிறேன்

அய்யா அதான் நாட்கள் வேண்டாம்ன்னு சொல்றார் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211480

இறக்கும் கள்ளும் வேண்டேன்
இரக்க கள்ளும் தீண்டேன் .
ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 34 1, 2, 3 ... 17 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக