புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
29 Posts - 60%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
194 Posts - 73%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 4:07 pm

அருமையாக உள்ளது சசி புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 17, 2015 6:00 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 6:28 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி ஐயா. நன்றி ஷோபனா
[You must be registered and logged in to see this link.]
Sasiiniyan Sasikaladevi wrote:பாடல். 186 முல்லை _தலைவி கூற்று 

ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த 
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி 
எயிறு என முகையும் நாடற்குத் 
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.

ஓக்கூர் மாசாத்தியார்

கார்மேகம் 
 கருந்திரளாய் 
திரண்டும் 

தங்க கம்பிகளாய் 
மின்னும் 
மின்னல் 
வெளிப்பட! 

தேவர்களுக்குள் 
யுத்தம் ஏற்பட்டால்
வெளிப்படும் 
சத்தம் போல் 
இடிகள் கேட்கும் 
கார்காலமும் 

கார்காலத்தினால் 
ஏற்படும் 
வெள்ளமும்
வந்தது!! 

புன்செய் நிலத்தில் 
மென்மையான 
கொடிகளை 
உடைய 
முல்லை மொட்டுகள் 

பற்களை போல 
அரும்பும் 
அழகாகவும் 
உடைய நாட்டிற்கு 
சொந்தமானவனிடம் 

என் இதயம் 
காதல் கொண்டது! 

அவன் மேல் 
கொண்ட காதலினால் 
என் தூக்கம்
துறந்து 
துன்பத்தில் 
வாடுகிறேன்!

தலைவன் கார்பருவம் வந்தும் தலைவன் வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தோழியிடம் தலைவி கூறியது.
[You must be registered and logged in to see this link.]

எளிய வரிகள் அருமை.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 18, 2015 3:16 pm

தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?

தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?

தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?

தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?

399 – மருதம் – தலைவி கூற்று
**************************************

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .

- பரணர்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:26 pm

M.Jagadeesan wrote:தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?

தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?

தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?

தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?

399 – மருதம் – தலைவி கூற்று
**************************************

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .

- பரணர்
[You must be registered and logged in to see this link.]

பரணர் காலத்தில் ஊரணி நிரம்ப தண்ணீர் பச்சை நிற பாசி படர்த்து இருந்தது.
இன்று தண்ணீரே இல்லை பின் பாசி எஙெகே?

மனைவி கணவர் பாசத்தை பாசத்துடன்(பாசி) ஒப்பிடு அருமை அன்பரே.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 7:58 pm

ஜெகதீசன் ஐயா நன்றி. உரையாடலில் பாடலுக்கான விளக்கம் அருமை

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 22, 2015 7:16 am

நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?

செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !

நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?

செவிலித்தாய் :
அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .

167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************

முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .

-கூடலூர் கிழார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 12:11 pm

முதலில் விளக்கமளித்து பின் பாடல் வருவதால் மிக எளிதாக புரிகிறது ஐயா,நன்றி

[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 22, 2015 1:03 pm

நாம் தற்போது உண்ணும் புளியோதரை மிகவும் பழங்காலத்திய உணவு என்பது தெரிகிறதா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 7:31 pm

முதலில் கற்றுக்கொள்ளும் உணவே எளிய புளியோதரை தான் அன்பரே.அருமை நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக