புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 7%
Raji@123

kavithasankar
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_m10கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 11:17 pm

சென்னை: கிரானைட் ஊழல் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அதன் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவையாகும்.

கிரானைட் கொள்ளை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கை வெளியானதுமே இது குறித்து நடுவண் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் இப்பிரச்னை தீவிரமடைந்ததையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணையை தொடங்கிய சகாயம் நேற்று இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்,‘‘ விசாரணையில் உதவுவதற்காக நான் கோரிய ஜெயசிங் ஞானதுரை என்ற அதிகாரியை அனுப்பாமல் தமிழக அரசு தாமதம் செய்தது. கடந்த 9ஆம் தேதி தான் அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. விசாரணைக்குழுவின் செலவுக்காக அரசிடமிருந்து பணம் பெறுவதில் பல தடைகள் இருந்தன. இந்த ஊழல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் நான் பல தகவல்களை கோரியிருந்தேன். ஆனால், அவர்கள் இதுவரை அந்த தகவல்களைத் தரவில்லை. இதனால் விசாரணை மிகவும் தாமதம் ஆனது’’ என்று சகாயம் குற்றஞ்சாற்றியிருந்தார்.

கிரானைட் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு தமிழக அரசும், அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘‘மதுரை மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் குவாரி உரிமையாளர்கள் கொள்ளையடித்து விட்டனர். அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. இதுகுறித்து விசாரிக்கும் சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். அவ்வாறு முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். உச்ச நீதிமன்றம் காட்டிய வழியில் தமிழகத்திலுள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்து விடுவோம்’’ என்று எச்சரித்துள்ளார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் தன்மை கொண்ட கிரானைட் ஊழலை மூடி மறைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விடுத்த எச்சரிக்கை சாட்டை அடி ஆகும்.

கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக இருந்தால், இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ, அதை செய்யாமல் இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே தீவிரம் காட்டி வந்தது. ஒரு கட்டத்தில் தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்ததுடன், ரூ.10,000 அபராதமும் விதித்தது. இதையடுத்து தான் வேறு வழியின்றி சகாயம் குழு விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது, மதுரையில் சகாயம் தங்கியிருந்த இடத்தை காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்தது, அதிகாரிகள் மூலம் சகாயத்தை அவமதித்தது என அரசுத் தரப்பில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதற்கு காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கிரானைட் ஊழல் வெளியானபோது அதற்கெல்லாம் காரணமானவர் என்று கூறி கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் இப்போது அரசின் விருந்தினரைப் போன்று கவனித்துக் கொள்ளப்படுவதற்கும், கிரானைட் கொள்ளை தொடர்பாக அண்மையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில் அவரது பினாமிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மட்டும் கைது செய்யப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும் காரணம் என்ன? என்பதை தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும். அவரைக் காப்பாற்றுவதற்காக கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கிடப்பில் போடவும் தமிழக அரசு தயாராகிவிட்டது.

கர்நாடத்தில் 2006 முதல் 2010 வரையிலான 4 ஆண்டுகளில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.16,085 கோடி இழப்பு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா இந்த கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருந்தற்காக பின்னாளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்ட அம்மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கிரானைட் ஊழலுக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆட்சியாளர்களின் செயல் எடியூரப்பா மீதான குற்றச்சாற்றுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. கிரானைட் ஊழல் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும்.

விகடன்

கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 13, 2015 11:53 pm

முட்டுகட்டை போடாம டிராபிக்க கிளியர் பண்ணியா விடுவார்கள் , தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளிலும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து சிறிய / பெரிய கட்சிகளிலும் உள்ள அரசியல் வாதிகள் அனைவருக்குமே இதில் பங்கு இருக்கும் . அதனால் தான் ஊழல் விசாரணை என்றால் உடனே அனைத்து கட்சிகாரங்களும் ஒன்று சேர்ந்து அதை நிப்பாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 15, 2015 12:04 pm

ராஜா wrote:முட்டுகட்டை போடாம டிராபிக்க கிளியர் பண்ணியா விடுவார்கள் , தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளிலும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து சிறிய / பெரிய கட்சிகளிலும் உள்ள அரசியல் வாதிகள் அனைவருக்குமே இதில் பங்கு இருக்கும் . அதனால் தான் ஊழல் விசாரணை  என்றால் உடனே அனைத்து கட்சிகாரங்களும் ஒன்று சேர்ந்து அதை  நிப்பாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1125544

அதச் சொல்லு .
தமிழ் நாட்டுலே எல்லா கட்சிகளும்  ஒரு மனதாக ஒத்துமையாக இந்த விஷயத்துலேதான் இருக்காங்க .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 15, 2015 12:12 pm

மனசாட்சி இருந்தால்... புன்னகை புன்னகை
-
அம்மா சொன்னால்தான்
பதவி விலகல் எல்லாமே...
-

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 15, 2015 12:17 pm

விலகல் அம்மா இஸ்த்திரீல இல்ல - ஒன்லி தூக்கல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக