புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 12:50 pm

அன்று காலை 9.00 மணி

திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..

திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.

இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.

ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.

அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....

அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..

ரேவதி ........................

விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...

இன்று????





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 16, 2014 12:53 pm

சொந்தக் கதையா செந்தில் தொடருங்க ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 1:02 pm

மற்றவர் துயர் துடைக்க விண்ணப்பங்கள் எழுதிக் கொடுத்து தன் வயிற்றுப் பசியை ஆற்றி வருகிறாள்.. ஆம், வட்டாச்சியர் அலுவலகம் வரும் வெகு சிலர் படிப்பறிவற்றவர்களாகவும், படித்திருந்தாலும் விண்ணப்பங்கள் எழுதத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.. அவர்களுக்கு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து அதில் வரும் வருமானம்தான் இவள் பிழைப்பிர்கான ஆதாரம். இதுபோல் அங்கு பத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள், இதில் ரேவதி பத்தோடு பதினொன்று கணக்குத்தான்.

படிக்க வேண்டிய வயதில் நன்கு படித்ததால், தன் மகளை விலங்கியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற வைத்து அழகு பார்த்தார் அவளது அப்பா. அப்போது அவள் ஆண் வாசனையை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்தும் "மகளிர் மட்டும்"தான்.. அவளைப் பொறுத்தவரை, அவளது ஆண் உலகம் அவளது அப்பா, அண்ணன்கள், தம்பி மற்றும் உறவினரில் சிலர் மட்டுமே.. இப்படி இருக்கும் நிலையில் முதுநிலை படிப்பின் இரண்டாம் வருடத்தில் விதி அவளை வேறு ஒரு ஆணிடம் சென்று சேர வைத்தது.

"ப்ராஜக்ட்" - இந்த விசயத்துக்காக அவள் ஒரு கம்பியூட்டர் சென்டர் நோக்கி சென்றால், அப்போதுதான் அவளது முதல் விதி தனது விளையாட்டை விளையாட ஆரம்பித்தது.

மனுஷனுக்கு ஏழரை சனி மட்டும் மூன்று சுற்று அல்ல, நமது விதியும் சில சமயம் மூன்று சுற்றுகளை கொண்டிருக்கும் என்பதை அவள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கம்பியூட்டர் சென்டரில் பணி புரிந்தவன் செந்தில். மிகவும் திறமைசாலி, பழகுவதற்கு இனிமையானவன். பெண்களிடத்தில் அதிகம் பேசினாலும் கண்ணியம் காத்து வருபவன்.. அதுவரை வெளியுலக ஆண்வாசனை இல்லாத ரேவதியும் அவனிடத்தில் ஈர்ப்பு கொண்டதில் வியப்பேதும் இல்லை.

முதலில் ப்ராஜெக்ட் என்று ஆரம்பித்தாலும் நாளடைவில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவானது. அவளின் படிப்பு முடிய ஆறு மாத காலமே இருந்தபோது அறிமுகமாகி கல்லூரியை விட்டு அவள் வீடு திரும்பும் வரை இருவரிடையே நெருக்கம் அதிகமானது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 1:03 pm

ஜாஹீதாபானு wrote:சொந்தக் கதையா செந்தில் தொடருங்க ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1096623

சொந்த விசயங்களை சேர்த்த கற்பனை கதை.. முழுதும் படிங்க புரியும்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 1:13 pm

'வாங்க" என்று ஆரம்பித்த வார்த்தை "வாடி" என்று மாறும் அளவில் இருவருக்குள்ளும் புரிந்துணர்தல் இருந்ததே அதற்கு காரணமோ?

வட்டமலை முருகன் கோவில் - இவர்கள் இருவரும் சென்ற ஒரே ஒரு சுற்றுலாத்தளம், அதுவும் கல்லூரியின் அருகிலேயே உள்ள கோவில்.

என்னங்க இன்னைக்கு தமிழ் புத்தாண்டு, இதே எங்க வீடா இருந்தா எங்க அப்பா என் கையில் பணம் கொடுப்பாரு, என்கிட்டே கொடுத்து அத வாங்கினா அந்த வருஷம் பூராவும் கையில் காசு தங்குமாம்.
அப்படியா, இந்தா புடி - பணம் தங்குதோ, இல்லையோ உன்ன தினமும் பாக்கணும் ரேவதி. இந்த வார்த்தையை அவன் சாதாரணமாக சொன்னாலும், காதல் என்ற ஒற்றை வார்த்தை அவன் இதயத்தில் மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டுதான் இருந்தது.

தற்போதைய நட்பைக் காதலாக்குவதில் மிக முக்கியப் பங்கு செல்போன்களுக்கு உண்டு.. இருவரும் பேச ஆரம்பித்தால் அதிகாலை சேவல் கூவும் வரை பேசுவார்கள்.. அந்த கல்லூரி விடுதியில் செல்போன்களுக்கு தடை என்றாலும் அனைவருமே பயன்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள், இதில் எனது கதாநாயகியும் விதிவிலக்கில்லை... காதல் இருவர் மனதிலும் துளிர் விட்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

கல்லூரி முடிந்து வீடு திரும்பும் நாள், அந்த நாளில் செந்திலின் மனதினுள் வந்ததே ஒரு வலி, அந்த வலி எப்படித் தெரியுமா? மூன்றாவதாய் ஹார்ட் அட்டாக் வந்திருந்தாள் கூட அப்படி அவன் துடித்திருக்க மாட்டான். அவ்வளவு வலி....

இருவரும் காகிதங்களில் எழுத்து நடையில் நிறைய பேசிக் கொள்வார்கள். ஆனால் அது காதல் கடிதங்கள் அல்ல, காதலோடு எழுதப்பட்ட நட்புக் கடிதங்கள். ஆம், காதல் இழையோடும் வரிகள் இருக்காது, நட்பு என்ற ஒரு கோட்டினை இருவரிடையிலும் போட்டுக் கொண்டு ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள், பிரியும் தருணம் நட்பு உடைந்து, காதல் என்றும் மெய் அலையாய் மனதில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

சொல்லி விடலாம் என பேருந்து நிறுத்தம் போனால், அங்கு அவளருகில் அவளது தம்பி. அடப் பாவமே கடைசி நாளில் கூட காதலை சொல்ல முடியவில்லையே.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 16, 2014 1:29 pm

செல்களின் கோளாறு - செல்லுக்கு அவப்பெயரா? புன்னகை

நல்லாருக்கு செந்தில் - அந்த கதைல வர செந்திலா நீங்க?




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 1:34 pm

அதன் பின் வந்த நாட்களில்....

ரேவதி அவளது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து போன் செய்வாள்.  இப்படியே சில மாதங்கள் உருண்டோடின. காலத்திற்கு என்ன தெரியும், அது அதன் வேலையை சரியாகத்தான் செய்கிறது. முதல் சுற்று விதிப்படி அவள் வேறொரு ஆணிடம் ஆழமாய் பழகினால், அவன் அவளின் மனதில் என்றும் மறக்க முடியாத மனிதனாகி விட்டான்.. ஆனாலும் இரு உள்ளங்களுக்கிடையே காதலைச் சொல்லக் கூட விடாமல் செய்தது காலத்தின் கட்டாய சதிதான் என்றால், அந்த காலத்திற்கு ஒரு சாபம் இடுகிறேன்.

தேர்வு முடிவு வந்தது, நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றதால் மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன் என்றாள்.. ஆம், திருமணப் பேச்சு அடிபடுகிறதே அதிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க வேண்டாமா? அடுத்து ஒரு வருடம் மலைக்கோட்டை ஊர் திருச்சியில் கல்லூரி வாழ்க்கை.. சொந்த ஊர் சேலத்துக்கு பக்கம் என்பதால் அங்கும் விடுதி வாழ்க்கை.

போனில் அடிக்கடி பேசினாலும் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள ஆசை. அதற்கும் காலம் அடித்தளமிட்டது செந்திலின் பிறந்த நாளின் பொது, அவனைப் பார்க்க அவள் வந்தால்.  இங்குதான் விதி தனது இரண்டாவது சுற்றை விளையாட ஆரம்பித்தது.

அன்றுதான் மனம் திறந்தார்கள் இருவரும்.  உள்ளுக்குள் உறங்கிக் கிடந்த காதல் உணர்வுகள் உதடு வழி வந்து விழுந்தன வார்த்தைகளாய். அதன் பின் அடிக்கடி அவளைக் காண திருச்சி சென்றான் செந்தில். ஒரு முறை அவர்கள் இருவரையும் ஜோடியாய் பார்த்தன உறவுக்கார கண்கள், கண்களால் கண்டதை வார்த்தைகளாய் விவரித்தது அவர்களது உதடுகள் அவளது பெற்றோரிடத்தில்.

ம்... நானும்தான் பொண்ணப் பெத்தேன், ஆனா அததுக்கு காலா காலத்துல கண்ணாலத்த செஞ்சிபுடனும் ராசேந்திரா.. இப்ப பாரு... அந்த பய யாரு, என்ன சாதி சனம்னே தெரியல, சோடி போட்டு சுத்தறாங்கல்ல சோடி.. என்னமோப்பா நான் சொல்றத சொல்லிட்டேன். கழுத்துல தாலியோடயும், வவுத்துல புள்ளயோடயும் வந்து தொலச்சிற போறா.. பாத்து சட்டு புட்டுன்னு ஒரு கண்ணாலத்த முடிச்சிரு..

ரேவதியின் அத்தைக்காரி அருமையாய் செய்து முடித்து விட்டாள் தான் வந்த வேலையை. ஆனால், அவள் அப்படி செய்தது ரேவதியின் இரண்டாவது சுற்று விதியின் இறுதி விளையாட்டாக இருக்குமோ??




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 1:36 pm

யினியவன் wrote:செல்களின் கோளாறு - செல்லுக்கு அவப்பெயரா? புன்னகை

நல்லாருக்கு செந்தில் - அந்த கதைல வர செந்திலா நீங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1096630


செல்களின் கோளாறு என்றாலும் அந்த கோளாறை அதிகமாக்குவது செல்தான்..

செந்தில் நானே.. ஆனாலும் ஒரு கதை எழுதுவோம் என்று நினைத்தபோது நமது காதல் கதையை கொஞ்சம் கலந்து எழுதி விடலாம் என்று தோன்றியது..

கதைக்கான கரு உண்மை - கதை கற்பனை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 1:50 pm

தனது அக்கா ஓதியது ராசேந்திரன் காதுகளில் மீண்டும், மீண்டும் கணீரென்று எதிரொலித்தது கோயில் மணியின் ஓசை போல்.

அந்த பய யாரு, என்ன சாதி சனம்னே தெரியல, சோடி போட்டு சுத்தறாங்கல்ல சோடி.. என்னமோப்பா நான் சொல்றத சொல்லிட்டேன். கழுத்துல தாலியோடயும், வவுத்துல புள்ளயோடயும் வந்து தொலச்சிற போறா.. பாத்து சட்டு புட்டுன்னு ஒரு கண்ணாலத்த முடிச்சிரு..

கழுதைய தொலச்சிப்புடறேன் தொலச்சி - கொதித்தார் ராசேந்திரன்

வேண்டாங்க, முள்ளு மேல போட்ட சேலை மாதிரி ஆயிடப் போகுது, நான் பக்குவமாய் பேசி அவளை சரிக் கட்டிக்கிறேன் - இடையில் புகுந்தால் ரேவதியின் அம்மா கல்யாணி.

ஒரு வழியாய் படிப்பை முடித்தால் ரேவதி. வேக, வேகமாய் திருமணம் நடந்தது. நடப்பது கனவா? நனவா என்று நிதானிக்கும் முன் அனைத்தும் முடிந்திருந்தது. அப்பாவை எதிர்த்துப் பேச திராணியில்லை அவளிடத்தில், வீட்டிற்கு தெரியாமல் செந்திலுடன் ஓடிப்போகவும் மனமில்லை. அவளின் வாழ்க்கையில் விதியின் கடைசி சுற்று விளையாட ஆரம்பித்தது, அதுவும் மிகவும் உக்கிரமாய்.
இருக்காதா பின்னே கடைசி ரவுண்ட் ஆச்சே.

செந்திலின் நினைவாய் இதுவரை அவளிடம் இருப்பது, அவன் கொடுத்த பிறந்த நாள் பரிசும், முருகன் கோவிலில் அவன் கொடுத்த அந்த நூறு ரூபாயும்தான். உள்ளுக்குள் உறங்கிக் கிடந்த காதலை வெளியில் சொல்லாமலேயே விட்டிருந்தால் இவ்வளவு தூரம் மனம் பாரத்தை தாங்க வேண்டியதில்லை. சனியன் சொல்லித் தொலைத்து விட்டார்களே. இனி அவள் என்ன செய்வாள். மனதிற்குள் வெந்து புழுங்கி மாண்டு போகும் வரை வருமே இந்த ஞாபக அலைகள்.

மறு வீடு சென்றாள். வசதியான குடும்பம். வேலைக்கு போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை. படித்த படிப்பும், இதயம் பறித்த காதலும் இனி எதற்கும் உதவப்போவது இல்லை.

மாதங்கள் உருண்டோடி ஆண்டுகள் ஆகின. இதோ அவள் கையில் ஒரு ஆண் குழந்தை.

பையன் வளர்ந்தான், கூடவே கெட்ட பழக்கங்களும் அவனை விட வேகமாய் வளர்ந்தது. இருந்த சொத்துக்கள் எல்லாம் கரைந்தது, ரேவதியின் இதயம் கொஞ்சம், கொஞ்சமாய் செந்திலின் ஞாபகத்தில் கரைவதைப் போலவே. ஆமாம், இப்போது என் செந்தில் என்ன செய்து கொண்டிருப்பான், அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா, அல்லது என் ஞாபகத்தில் திருமணம் செய்யாமலேயே?? ஐயோ, கடவுளே உனக்கேனடா இவ்வளவு கல் மனசு, ஆமா நீ கல்தானே.

இடையில் ஒருநாள் அவளைக்காண செந்தில் அவள் வீட்டிற்கு வந்த போது, அவளது அப்பா அடித்து கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் விட்டு விட்டதாக சொன்னார்கள். அதன் பின் அவனது செல்போனும் ஸ்விட்ச் ஆப்.. எப்பாடு பட்டும் அவனை காணவும் முடியவில்லை, தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 2:02 pm

காலம் உருண்டோட ரேவதியின் கணவர் சாலை விபத்தில் அடிபட்டு இறந்து விட, ரேவதியின் வாழ்க்கை வெறும் இருட்டு மட்டுமே என்றானது. ஒரு வருடம் கழித்து, குல தெய்வ கோவில் சென்று வரும் வழியில், இதே போல் வேறொரு விபத்தில் அப்பா, அம்மாவும் இறந்து விட அவளுக்கு அடுத்த இழப்பு..
அண்ணன், தம்பிமார்கள் கண்டு கொள்ளவே இல்லை இந்த உடன் பிறந்த பாசப் பிறப்பை. பணம், அதுதான் பாசத்துக்கு நடுவே நிற்கும் தடுப்புச் சுவர்.

தனது ஆசை மகனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாமனாரின் வீட்டிற்கு சம்பலமில்லாய் வேலைக்காரனாய் சென்று விட்டான், "வீட்டோடு மாப்பிள்ளை" என்ற பெயரில். இனி அவனை நம்பி பிரயோசனம் இல்லை.

எல்லாப் பக்கங்களிலும் வெளிச்சம் பரவிக் கிடக்க, தன்னை சுற்றி மட்டும் இருள் சூழ்ந்திருப்தைப் போல உணர்ந்தாள், வாலாமலேயே பட்டுப்போன இந்த பாவப்பட்ட பெண்மணி.

படித்த படிப்பு சோறு போடும் என்றாலும், இத்தனை வருடம் இடைவெளி விட்டாயிற்றே, மேலும் வயதும் ஏறி விட்டதே வேலை கிடைக்க வாய்ப்பில்லை.

பின்னொரு நாள் ....

ஒரு வேலையாக வட்டாச்சியர் அலுவலகம் சென்றவள், அங்கு விண்ணப்பம் எழுதத் தடுமாறியவர்களைக் கண்டாள், அவர்களுக்கு எழுதிக் கொடுத்து காசு பார்போரையும் கண்டாள், பிறகு தானும் "எழுத்தாளினி" ஆனாள்.

இப்போது நிஜத்துக்கு வருவோம்...

தன்னிடம் வந்த பார்வதியிடம் என்ன, ஏதென்று விசாரித்த பின் - சரிம்மா, நாளைக்கு ரேசன் கார்டு கொண்டு வாங்க அத வச்சுத்தான் வயசெல்லாம் சரியா போட்டு எழுதணும் என்றாள்.

பார்வதியும் சரி என்று புறப்பட்டு போனாள்......

மறுநாள் காலை..

இவளுக்கு முன்பே அங்கிருந்தால் பார்வதி, ரேசன் கார்டை வாங்கிப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்தாள். இதயம் சுக்கு நூறாக வெடித்தது..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக