புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
29 Posts - 62%
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
194 Posts - 73%
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
8 Posts - 3%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 12:57 am

கப்பல் பயணக் கட்டுரையைத் தொடருங்கள் ஐயா! புகைப்படமும் எங்களுக்குக் காட்டுங்கள்! பஹாமாஸை அதிலாவது பார்த்துக் கொள்கிறோம்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



பஹாமாஸ் -கடல் வழிச்செலவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 24, 2014 3:31 am

நன்றி சிவா !
பார்த்து மகிழ்ந்த , ஆச்சர்ய பட வைத்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே ஆசை .
படங்களையும் இணைக்கிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 24, 2014 12:09 pm

தங்கள் கடல் வழி பயணத்தை நாங்களும் காண்கிறோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 25, 2014 6:53 am

24/5, 25/5,& 26/5 long weekend . வாரமுடிவிற்கு பிறகு வேறு ஒரு நாள் விடுமுறை கூட வரும்போது, நீண்ட விடுமுறையில் எதாவது நீண்ட தூர பயணம் மேற்கொள்வது இங்குள்ள நடைமுறை (கார்முறை ) குடும்பம் குடும்பமாக பல கொத்துகளை தேசிய சாலைகளில் பார்க்கலாம் . ஆஸ்டின் அல்லது ஹூஸ்டன் போகலாம் என்று ஒரு ப்ளான்.

23/5 அன்று வெள்ளிகிழமை காலை குளியல் நேரம் .நம் ஊர் மாதிரி பக்கெட் /மக் சிஸ்டம் எல்லாம் இங்கே கிடையாது. பாத் டப் , லிக்விட் சோப்பு , குளிர் நீர் /வெந்நீர் -கலவை ஷவர் . தலையையும் உடலையும் ஷவர் அடியில் நிறுத்தி , குளித்து ,சோப்பு கலவையை கையிலெடுத்து உடல் எல்லாம் தடவி ,கால் ,பாதம் தடவி , நம்மூர் மாதிரி பாதத்தின் மீது மறு பாதம் வைத்து அழுத்தி தேய்---க்--- க-----
வழுக்கி ,நிலை தடுமாறி ,சரிய , கர்டனை பிடிக்க போக கர்டன் ,கர்டன் ராடுடன் இடப்புறமாக சாய ,இட விலாப்புறம் , டப்பின் உள்பக்க வளைவில் ,சப்தத்ததுடன் மோதியது . சப்த்ம் கேட்டு மனைவி ஓடி வந்து கதவை திறந்து (இரு பக்கம் திறக்கும் கதவு ) உள்ளே வருவதற்குள் சமாளித்து எழுந்து , மனம் போன போக்கில் ,காலை போக வைத்த மனதை நொந்து கொண்டு , மீதி குளியலை முடித்தேன் .

குளித்து 10 நிமிடம் தாமதித்தேன் . வலி /வீக்கம்/ ரத்தம் வராததால் சிறிதே ஆறுதல். பெரிதாக கஷ்டம் இருக்காது என்று நினைத்தேன்.இருப்பினும் ஆபீஸ் சென்று இருந்த ஆனந்திற்கு விஷயத்தைக் கூறி ,கவலை படும்படி ஒன்றும் இல்லை , உனக்கு தெரியபடுத்தலாம் என்று கூறுகிறேன் என்றேன் . மீட்டிங் இருக்கு 4 ,4 1/2 மணி சுமாருக்கு வீடு வருகிறேன் என்றான். அவசரம் ஒன்று மில்லை , Take it easy என்று கூறி போனை வைத்துவிட்டேன் . பெரிதாக உடல் உபாதை ஒன்றும் இல்லை . ஆனந்த் வந்த பிறகு , கைகளை மேலே /பக்கவாட்டில் எல்லாம் அசைத்து பார்த்து ,டாக்டரை உடனே பார்க்கவேண்டிய அவசியம் என்று தீர்மானித்தோம். சாதாரணமாகவே மாலை கழிந்தது.
இரவு படுக்க போகலாம் என்று படுக்கையில் உட்கார்ந்து படுக்கப் பார்க்கையில் இடது பக்கத்தில் ஒரே குத்து வலி .காலை தூக்கி கட்டிலில் போடமுடியா வண்ணம் ,தடை செய்யப்பட்ட அசைவுகள்.
கட்டில் வேண்டாம் என்று தீர்மானம் பண்ணி , வாசல் சோபாவில் ஒரு பக்கமாக சாய்ந்து ஒருக்களித்து படுத்தேன் கஷ்டத்துடனே .கையில் கொண்டு வந்து இருந்த IMOL உதவியது.

மறுநாள் எழுந்திருக்கும் போது கஷ்டம் தெரிந்தது .எழுந்து ,குளித்து ,உட்கார்ந்த போதும் சிறிது வலி இருந்தாலும் பொறுத்துக்கொள்ளும்படியாகவே இருந்தது, மதியம் ஒரு குட்டித்தூக்கம் போடா நினைக்கையில் ,பிந்திய இரவின் கஷ்டங்கள் திரும்பின .

சனிக்கிழமை , டாக்டர்கள் யாவரும் விடுமுறை மயக்கத்தில் . நல்ல வேளையாக பக்கத்து ஷாப்பிங் மாலில் ஒரு emergency care ஆஸ்பத்திரி இருந்தது . போன் பண்ணிக் கேட்டதில் வரலாம் என்று கூறவும் , ஆனந்து காரை கொண்டு வந்து , முன்பக்கம் ஏறலாம் என்றால் , காலை தூக்கி வைக்கமுடியவில்லை .பிறகு ,பின் பக்க சீட்டில் உட்கார்ந்து ,கால்களை மெதுவாக தூக்கி உட்கார்ந்தேன். அதே போல் இறங்கும் போதும் கஷ்டம் . நிமிர்ந்து நின்று ,சரி பண்ணிக்கொண்டு ,மெதுவாக நடந்து (அப்படிதான் நடக்க முடிந்தது -fashion parade ம் cat walk ம் நினைவிற்கு வந்தது.) உள்ளே போனோம் . அவர்களுடைய formalities /இன்சூரன்ஸ் /பாஸ்போர்ட் id /பேப்பர்களில் கையெழுத்து /இத்யாதிகள் இத்யாதிகள்.கொள்ளசொன்னார்
பிறகு ஒரு நர்ஸ் என்னுடைய BP /temparature /heartbeats /பதிவு செய்துகொண்டு , எப்படி விழுந்தேன் ,வலி இருக்கிறதா என்று எல்லா கேள்விகளும் கேட்டு விட்டு , டாக்டரிடம் எல்லாவற்றையும் கூறுவதற்கு டாக்டரின் அறையினுள் சென்றாள் . 10 நிமிடம் கழித்து வந்து, மேலாடைகளை களைய சொல்லி ,sterilized front open ஜிப்பா மாதிரி ஒரு ஆடையை போட்டுக்க சொல்லிவிட்டு , பக்கத்தில் உள்ள தனியறையில் உட்கார்த்தி விட்டு சென்றாள் . 5 நிமிடம் கழித்து டாக்டர் வந்து , பக்கங்களை தொட்டு ,சிறிது அழுத்தம் கொடுத்து , அதனால் ஏற்படும் முகக் கோணல்கள் /அனத்தல்களை அளந்து ,

இடது விலாப்புறத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது . அதனால் கிட்னி/குடல்./ மண்ணீரல் சேதங்கள் எதிர்பார்க்கலாம் . xray மூலம் கண்டு பிடிப்பது ஒரு முறை. 100% கண்டுபிடிப்பது இதில் கஷ்டம். xray ஒன்றும் தெரியவில்லை என்றால் scanning திரும்பவும் பண்ண வேண்டி இருக்கும். உங்களுக்கு சம்மதம் என்றால் நேரிடையாகவே scanning போகலாம் என்றார். scanning ஒகே கூறி ,அதற்கு ஆயத்தம் பண்ண நர்ஸ் , scanning நுட்பாளர் வந்து 20 நிமிடத்திற்கு பின் dye உள்ளே செலுத்தி , scanning machine இல் உடல் பகுதியை செலுத்தி , உடல் பகுதி உள்ளே இருக்கும் போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை கூறி , சோதனைகள் 30 நிமிடங்களுக்கு நடந்தன. ரிப்போர்ட் cd யாக ஒன்று கொடுத்தனர். ரிபோர்டை , வல்லுநர் ஒருவரிடம் காண்பித்து ,அவர் கொடுத்த expert அறிவுரையுடன் டாக்டர் எங்களை பார்க்க வந்தார்.
நல்ல செய்தியும் உள்ளது மாறான செய்தியும் உள்ளது எதை முதலில் கூறட்டும் என்றார்.5 நிமிட வித்தியாசத்தில் எதை கூறினாலும் எங்களுக்கு சம்மதமே என்றோம்.

உடனே அவர் ,நல்ல செய்தியே கூறுகிறேன் கிட்னி ,குடல்,மண்ணீரல் சேதம் ஒன்றும் இல்லை என்றார்.
அடுத்ததாக என்றோம்.

விலாவில் 9.10 &11 எலும்புகளில் முறிவு தெரிகிறது .ஆனால் இதற்கு சிகிச்சை எதுவும் கிடையாது.2இல் இருந்து 6 வாரங்களில் அதுவாக வளர்ந்து சரியாகும் .பாண்டேஜ் முன்பெல்லாம் போட்டு இருந்தார்கள்.அதனால் நன்மையை விட கஷ்டங்களே அதிகம் அனுபவிக்கப்பட்டதால் ,அந்த முறையை நாங்கள் தொடர்வதில்லை.படுக்கும் போது மட்டும் வலி இருப்பதால் ஒரு நார்கோடிக் மருந்தும் .ibuprofen மருந்தும் சாப்பிட சொன்னார் .மற்றபடி violent jerk , பளு தூக்குதல் கூடாது. தும்மல், இருமல் வராமல் இருக்கவும் , மூச்சை உள்ளிழுத்து , பிறந்தநாள் மெழுகுவர்த்தி அனைப்பதுபோல் மூச்சை வெளிவிடும் பயிற்சியை மேற்க்கொள்ளசொன்னார்..

பஹாமாஸ் ரெண்டு வாரத்தில் போக உள்ளோம் , போகலாமா? அல்லது தவிர்த்து விடலாமா ? என்று கேட்டப்போது ,ரிபோர்டை பார்த்ததில் 2 இல் இருந்து 6 வாரத்தில் குணமடைய கூடிய சாத்யகூறுகள் தெரிவதாலும் , மேலும் படுக்க போகும்போது மட்டுமே கஷ்டம் தெரிவதால் , இப்போதைக்கு cancel பண்ணவேண்டாம் .10 நாளில் உங்களுக்கே போலாமா வேண்டாமா என்று தெரியும் .கவலை வேண்டாம் .மலம் ,சிறுநீர் கழிக்கையில் ரத்தம் வெளியேறினால் மட்டும் என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள் .என்று கூறி ,
சுட சுட 250ml coffee -starbucks இல் வரவழித்து கொடுத்து நல்வார்த்தை கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு போன் பண்ணி கவலை பட ஒன்றும் இல்லை , வந்து கொண்டு இருக்கிறோம் என தகவல் தெரிவித்து , முன் போல் சிறிது கஷ்டம் பட்டு காரில் அமர்ந்து வீடு வந்து சேர்ந்தோம் .

தினமும் டாக்டர் கூறிய பயிற்சிகள் , டாக்டர் கூறாத ஆரஞ்சு ஜூஸ் இஞ்சி சாறுடன் ,பூண்டு சேர்ந்த சமையல் வீட்டு வைத்யமாக . நல்லது என்று வீட்டில் வாய் திறந்து கூறினால் , நானும் வாய் திறந்து மறு பேச்சு பேசாது உட்கொண்டேன் .
இதன் நடுவே அனுப்பி வைத்த பாஸ்போர்ட் + விசா ஓகே ஆகி வந்துவிட்டது.
மேலும் ரெண்டு நாட்கள் கழித்து பஹாமாஸ் கான்சுலேட் இல் இருந்து 10 பஹாமாஸ் WALLPAPER ,புத்தக குறிப்புகள் , 10 பேனாக்கள் இலவசமாக வந்து சேர்ந்தன .

நடு நடுவே போவோமா என்ற சந்தேகம் துளிர்விட்டாலும் போவோம் என்ற நம்பிக்கையே இருந்ததால் , நானும் நிச்சயமாக போகலாம் சரியாகிவிடும் என்றே கூறிவந்தேன் .

10 நாளில் சோபாவை தவிர்த்து கட்டிலில் படுக்கக் கூடிய முன்னேற்றம் தெரிந்தது .
டாக்டர் கூறியபடியே 2 வாரத்தில் நல்லதொரு முன்னேற்றமும் ஏற்பட , பஹாமாஸ் போக முடிவானது. பாக்கிங் ஆரம்பம் ஆனது .

7ம் தேதி காலை , 6 மணிக்கு வீட்டை பூட்டிக்கொண்டு 6-30 க்கு விமான நிலையம் போனோம். ஆனந்தின் நண்பன் ,அஜீத் --(நாக்பூர் இஞ்சினீரிங் காலேஜ் ,தற்போது இங்குதான் வேலை செய்கிறார் ) எங்களை விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தார். 7.30 கிளம்ப வேண்டிய விமானம் , தொழில் நுட்ப காரணத்தால் எப்போது கிளம்பும் என்று தெரியாது என அறிவிப்பு வந்தது .

ஆனந்தின் முகத்தில் சிறிது கவலை தெரிந்தது. இங்கு 1/2 மணி தாமதம் ஆனால் கப்பலில் ஏறுவதற்கு 2 மணி நேரம் அதிகம் வெளியில் நிற்கவேண்டி இருக்கும் என கவலை பட்டான். முந்தைய அனுபவத்தையும் கூறினான்.
ரமணியன்



(அடுத்து ......விமானம் கிளம்பும் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 10:53 am

மனம் போன போக்கில் கால் போனதால் வந்த வினை நன்றாக தெரிந்தது.. கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் நீங்கள். சரி, இனி கவனம் தேவை, உங்களுக்கும் இதைப் படிக்கும் எங்களுக்கும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 25, 2014 11:22 am

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு 103459460 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 25, 2014 6:28 pm

M.M.SENTHIL wrote:மனம் போன போக்கில் கால் போனதால் வந்த வினை நன்றாக தெரிந்தது.. கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் நீங்கள். சரி, இனி கவனம் தேவை, உங்களுக்கும் இதைப் படிக்கும் எங்களுக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1070733

நல்லதோர் படிப்பினையை
கவிதையாக மாற்றிய கவிஞர்,
அதை இசையாக உருவாக்கிய வித்தகர்
அதை இனிய குரலால் ,மக்களை கவர்ந்த கலைஞர்
இருந்தாலும் ,நாம் தவறு செய்கிறோம் .

நன்றி , செந்தில்!
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 30, 2014 7:26 pm

மியாமி விமானம் தாமதம்

விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பும் ,சிறிதே சஞ்சலம் . இந்த தாமதம் விளைவிக்கப் போகும் கூடுதல் தாமதம் மனதில் பழைய அனுபவத்தை நினைவில் கொண்டு  வந்து பயமூர்த்தியது.

இதற்கு முன்னால் 2007 இல் வேறொரு கப்பல் (கம்பெனி )மூலம் , ஹூஸ்டன் -galvastone துறைமுகத்தில் இருந்து ஹவாய் ,கேமன் தீவு , ஜமைக்கா போகும் போது சுமார் 3000 பேர் கப்பலில் ஏறுவதற்கு 3 மணி நேரம் கடும் வெய்யிலில் நின்ற அனுபவம் ஆனந்தின் நினைவிற்கு வந்தது தான் சஞ்சலத்திற்கு காரணம்

ஒரு வழியாக 8 மணிக்கு விமானம் கிளம்பியது .3 மணி நேர பிரயாணம் .போய் சேரும் போது  பகல் 12 இருக்கும் (லோக்கல் நேரம்)

மியாமி -டெக்சாசில் இருந்து தென் கிழக்கே இருக்கிறது .

இந்தியா   காசுமீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை நேர்வாட்டிலும் கொல்கொத்தவிலிரிந்து கட்ச் வரை அகல வாட்டில் இருக்கிறது . ஒரே ஒரு டைம் zone தான் .   அமெரிக்க அகலவாட்டில் பரந்து  இருக்கிறது . அங்கு 4 டைம் zone கள் .  பாஸ்டன் /ந்யுயார்க்கில் காலை 10 மணி என்றால் , டெக்சாஸ் ,டல்லாசில் காலை 9 மணி , இடஹோ போன்ற இடத்தில் காலை 8 மணி & கலிபோர்னியாவில் காலை 7 மணி . இதை இவர்கள் ,

ஈஸ்டேர்ன் டைம் ( ET ), சென்ட்ரல் டைம் (CT ), மவுண்டன் டைம் ( MT ) & பசிபிக் டைம் ( PT) என்று கூறுவர் .




பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது .1230.

எதிர் பக்கத்தில் நின்றால்  டாக்ஸிகள்  வரும்.  2 ஆபிசர்கள் நின்று கொண்டு தேவைக்கேற்ப சிறிய டாக்ஸி ,பெரிய டாக்ஸி என்று நபர்களின் எண்ணிக்கைக்கு தக்கப் படி சீராக ஒழுங்குபடித்தி அனுப்பி வந்தனர் . எங்களுக்கு 5 நபர் டாக்ஸி வேண்டும் என்பதால் சிறிது தள்ளி நின்று காக்க சொல்லி , 5 நபர் டாக்ஸி வர போன்  பண்ணினார். பெரிய டாக்ஸி வந்து எங்களை தாண்டி நின்றது. நாங்கள் முன்னேறுவதற்கு முன் , அப்போதுதான் வந்த இன்னொரு குடும்பம் அதில் ஏறுவதற்கு ட்ரைவருடன் பேசி முடித்து கார்கதவை திறக்க, அந்த இரு ஆபிசர்களும் ஓடி வந்து , அந்த டாக்ஸி இவர்களுக்காக ஏற்பாடு பண்ணியது , நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கவும் ,இன்னொரு டாக்ஸி  வரவழிப்பதாக கூறினார். அவர்  காலி டாக்ஸி என நினைத்து ஏற முற்பட்டதாக கூறி , ஆபிசர்களிடம் , எங்களிடமும் மன்னிப்புக் கோரினார் .ஆபிசரும் சிரித்துக் கொண்டு , எங்களை ஏற சொல்லிவிட்டு தன்  வேலையை தொடர்ந்தார். டாக்ஸி டிரைவரும் வண்டியில் ஏறியதும் , மற்றவருக்காக என்று தான் தவறாக கருதியதாக கூறினார் .

ஆச்சரியமான விஷயம் , கடமை தவறா ஆபிசர்கள் , விதிமுறைகளை பாரபட்சமின்றி கவனித்து ,முதலில் வந்தவருக்கு முன் உரிமை தருதல் , அதே போல் ரெண்டாவதாக வந்த குடும்பத் தலைவரும் நியாயமாக நடந்தது , டிரைவரும் மன்னிப்பு கோரியது , மனதை கவர்ந்தது .

இந்தியாவில் இது மாதிரி அதிசயம் நடக்க ,காண ஆவல் .

மேலும் போகும்போது டிரைவர் மூலம்  ஒரு விஷயம் தெரிந்து கொண்டோம் . பிரயாணிகளை ஏர் போர்டில் , இறக்கி விட்டுவிட்டு , வரும் பிரயாணிகளுக்கு சவாரியாக போகக்கூடாதாம் . பார்க்கிங் சென்று வண்டியை நிறுத்தி விட்டு ,அவருடைய முறை வரும்போதுதான் வந்து , வரும் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு செல்லமுடியும் . மீறினால் 1000 us டாலர்கள் அபராதம் கட்டவேண்டும். டிரைவிங் லைசென்சில் கரும் புள்ளி விழும். அடுத்த ஆண்டு அதிகப்படியாக  இன்சூரன்ஸ் ப்ரீமியம்

1245 டாக்சி பிடித்து 1315 இக்கு  போர்ட் துறைமுகம் வந்து சேர்ந்தோம் .

பெட்டிகளை இறக்கி , டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பித்தால் , பெரிய டிராளிகளுடன் NCL (நார்வேஜியன் க்ரூஸ் லைனர் )  போர்டர்கள் தயாராக இருந்தனர் . e டிக்கெட்டில், எங்களுக்கு ரெண்டு ரூம் 12435 & 12635 கொடுத்து இருந்தனர் . அதாவது 12 ம் தளத்தில் ரூம் 435 ம் 635ம் . டிக்கெட்டுடன் + லக்கேஜ் tag மின்னஞ்சலில் வந்து இருந்தன .   பெயரையும் ரூம் நம்பரையும் குறித்து tag ஐ அவர்கள் கூறியபடி மடித்து பேட்டியின் கைப்பிடியில் ஓட்டிவிட்டு , போர்டர் வசம் பேட்டிகள் கை மாறின . இனி அவர்கள் கண்ணும் கருத்துமாக நம்முடைய ரூம் வாசலில் சேர்த்து விடுவர்.  

வெய்யிலில் நிற்கவேண்டுமோ என்று பயந்து கொண்டே, செக் இன் பிரிவுக்கு போனோம் . வாசலிலேயே ,4 / 5 பிரிவுகள். வருகின்ற பிரயாணிகளை , பொதுவாக , போர்டிங் பாசும் ,அதற்கு ஏற்றபடி ஆட்களை உள்ளே அனுப்பினர் . நல்ல வேளை .பெரிய ஹால் . குளிரூட்டபட்டது .நாங்கள் போன சமயம்  70/ 80 குடும்பங்கள் இருக்கும் . 10 -12 கவுண்டர்கள் . ஒவ்வொரு குடும்பமாக , காலியாகும் கவுண்டருக்கு அனுப்ப 4/5 ஆபிசர்கள். எங்கள் முறை , 30 நிமிடங்கள் கழித்து வந்தது.  

நாங்கள்  ஐவர் . மகன் , மருமகளுக்கு அவர்களுடைய டிரைவிங் லைசென்சே ID யாகவும் பேத்தி , என் மனைவி ,எனக்கு எங்களுடைய பாஸ்போர்ட் id யை பார்த்து சரி பார்த்து ---பிறகு என் மூஞ்சியை மேலும் கீழும் பார்த்து திரு திரு 4/5 முறை முழித்து , என் பெயரை எப்படி உச்சரிப்பது என்று கேட்டனர். பாஸ்போர்டில் என் first name , திருசெந்துறை (T) நாகராஜா (N ). இவ்வளவு நீளமான பெயரை வைத்துக்கொண்டால் ,எப்படி உங்கள் பெயரை நினைவு படுத்திக் கொள்வது என்று சிறிதே கலாய்த்து ,நட்புரிமையை காண்பித்தனர். மின் டிக்கட்டில் உள்ள பெயரில் எங்களுக்கு 5 மின் அட்டை   அறைச்சாவிகள் தந்தனர் . அந்த அட்டைகளை பத்திரமாக வைத்திருக்கவும் கூறினார். மேலும் நாம் கப்பலில் வாங்கும் பொருளுக்கு அந்த கார்டை காண்பித்து ,கிரெடிட் கார்டு போலவும் உபயோக்கிகலாம். உணவகங்களில் எந்த நேரமும் கால வித்தியாசமின்றி உணவு இலவசமாக உண்ணலாம் / அருந்தலாம் .இரவு 1மணி முதல் காலை 4-30 வரை சிறிது இடைவெளி .  நீச்சல் குளங்களில் , சூரிய குளியல் இடங்களில் உணவு வரவழித்தால் , அதற்கு கார்டில் பதிவாகும் . நேரிடையாக யாரும் யாரிடம் பணம் கேட்க மாட்டார்கள் /கொடுக்கவும் வேண்டாம் . பரிவர்தனை யாவும் கார்டு மூலமே . பயணத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள் என இன்முகம் கூறி , கப்பலை இணைக்கும் பாலத்தை காண்பித்தனர் . விமானத்தில் ஏறும்போது ஏரோ ப்ரிட்ஜை உபயோகிப்போமே அதே போல் .

அந்த பாலம் , உங்களை நாலாம் தளத்தில் எங்களை சேர்த்தது .1-45 PM

வருகின்ற ஒவ்வொரு குடும்பத்தையும், நல்ல முறையில் வரவேற்று ,முகம் துடைத்துக்கொள்ள ,வாசனை மிக்க குளிருட்டப்பட்ட கைதுண்டுகள் கொடுத்து , புத்துணர்ச்சிமூட்டி, 12 தளம் போவதற்கு லிப்ட் / அறை கண்டுபிடிக்கும் முறையை தெளிவு படுத்தினர்.

முக்கியமாக குடும்பம் குடும்பமாக, வந்தவர்களை போட்டோ எடுத்து , ரூம் நம்பரை குறித்துக்கொண்டனர் .

அப்படி வரவேற்று எடுத்தப் போட்டோதான் இது .

இடமிருந்து வலம்

மருமகள் --ஜெயசுதா
பேத்தி -----திவ்யா
மகன் -------ஆனந்த்  
மனைவி --லலிதா
நான்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 30, 2014 7:36 pm

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு S53Rw6JRTpes440BeVck+Form001


இடமிருந்து வலம்

மருமகள் --ஜெயசுதா
பேத்தி -----திவ்யா
மகன் -------ஆனந்த்  
மனைவி --லலிதா
நான்
.

முழு படம் தெரியவில்லை எனில் zoom குறைத்துக்கொள்ளவும்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக