புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
72 Posts - 77%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
237 Posts - 76%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 7:58 am

மூன்று நிமிடங்களில் முடிவு எடுக்கும் பிரதமர் மோடி

பாட்னா: ''பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு, மூன்று நிமிடங்களில், முடிவுகளை எடுக்கிறார். தன் முடிவுகளால், எவ்வளவு மக்கள் பயனடைவர் என்பதிலேயே, அவர் அதிக அக்கறை காட்டுகிறார்,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான ரவிசங்கர் பிரசாத், மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக பதவியேற்ற பின், முதல் முறையாக, பாட்னா நகர் சென்ற அவருக்கு, பா.ஜ., தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, நரேந்திர மோடி பிரதமரானது மற்றும் அவரின் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்து, உலகில் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த நாடுகளான, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரேசிலும், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் வியப்படைந்துள்ளன.

மோடி பிரதமரான பின், டில்லியில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், புதிய பணி கலாசாரம் துவங்கியுள்ளது. காலை, 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடும் அவர், எப்போது வீடு திரும்புவார் என்பதை, யாரும் சொல்ல முடியாது. அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. எந்த விஷயத்திலும் முடிவெடுக்க, அவருக்கு இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேலாவதில்லை. முடிவு எடுக்கும் போது, அதனால், எவ்வளவு மக்கள் பயன் அடைவர் என்பதை கருத்தில் கொண்டே எடுக்கிறார்.

கடந்த, மே, 26ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, குஜராத் பவனுக்கு வரும்படி கூறிய அவர், 'மாலையில், நாமெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்க வேண்டும்' என, தெரிவித்தார். அப்போது தான், யாரெல்லாம், மத்திய அமைச்சர்கள் ஆகின்றனர் என்ற விவரமே, எனக்கு தெரியவந்தது. முந்தைய காங்கிரஸ் அரசில் எல்லாம், அமைச்சர்கள் தேர்வில், ஆதரவாளர்கள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், இந்த அரசில், ஒவ்வொருவரின் தகுதி அடிப்படையில், அவர்களை, பிரதமர் மோடி அமைச்சராக நியமித்துள்ளார். நான் இப்போது, மத்திய அமைச்சராக இருப்பதால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு பற்றி, தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்ல மாட்டேன். அரசு தான் இதுபற்றி சொல்லும். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார். பீகார் மாநிலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அங்கு ஆளும் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ., 22 இடங்களைப் பிடித்தது. அதனால், மோடியின் எதிர்ப்பாளரான, முதல்வராக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். புதிய முதல்வராக, ஜிதன்ராம் மஞ்சி பதவியேற்றார்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 8:25 am

நரேந்திர மோடியின் பேஷனை பாராட்டும் அமெரிக்க ஊடகங்கள்

அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை இருந்திருந்தாலும், இப்போது அந்நாட்டில் புதிய பேஷன் அவதாரமாக பார்க்கப்படுகிறார் மோடி.

ஆம், நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரது உடை அலங்காரம் அமெரிக்காவின் டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் ஆகிய முன்னணி ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு, 'மோடி குர்தா' மிகவும் பிரபலமாகியுள்ளது.

‘A Leader Who Is What He Wears’ என்ற தலைப்பில் 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில், 'உலக அளவில் மிச்செல் ஒபாமா, பிரான்கோயிஸ் ஹோலண்டே, டில்மா ரூசோப், மண்டேலா உள்ளிட்ட பலரது உடை அலங்காரம் குறித்து தனிப்பட்ட வலைப்பூக்களே உருவாக்கப்பட்டிருந்தாலும், நரேந்திர மோடியின் உடை அலங்காரம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடும்போது இந்திய தலைவர்கள் தங்கள் உடை அலங்காரத்தையே தங்கள் எண்ணங்களை உணர்த்தும் உபகரணமாக பயன்படுத்துவார்கள். ஆனால் மோடி அவர்களையும் விஞ்சிவிட்டார். அவரது உடை நிறையவே உணர்த்துகிறது.' என குறிப்பிட்டுள்ளது.

மோடியின் பேஷன் குறித்து 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, 'மிச்செல் ஒபாமாவே தள்ளியிருங்கள் இந்த உலகிற்கு புதிய பேஷன் நாயகர் கிடைத்துவிட்டார்' என புகழாரம் சூட்டியுள்ளது.

நேற்று, 'டைம்' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், 'இந்திய பேஷன் உலகில் நரேந்திர மோடிக்குத்தான் அடுத்த பெரிய இடம்' என குறிப்பிட்டிருந்தது.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 8:27 am

அவரது உடைகளை வடிவமைக்கும் சகோதர்கள் தங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று மோடி பதவி ஏற்ற அன்றே பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளனர்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Tபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Hபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Iபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Rபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:10 pm

மத்திய அமைச்சர்கள் சொத்து பட்டியல்

புதுடில்லி: மத்தியில், அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை, இந்த மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திரமோடியிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:19 pm

பிரதமர்மோடி - ராணுவ தளபதி சந்திப்பு; எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை

புதுடில்லி: இந்திய - பாக்., எல்லையில் இன்று நடந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங் விளக்கினார். மேலும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடமும் பிரதமர் மோடி எடுத்த, எடுக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இன்று காலையில் இந்திய - பாக்., எல்லையில் ரஜோரி, பூஞ்ச் (காஷ்மீர் ) பகுதியில் பாக்., படையினர் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.


இந்த சந்திப்பில் உள்நாட்டு பாதுகாப்பு நிலை மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங்கிடம் கேட்றிந்தார். 3 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் முதன்முதலாக ராணுவ தளபதியுடன் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி தளபதிக்கு சில யோசனைகளை கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் கடிதம் அனுப்பினார். இதில் தாங்கள் விரும்பியபடி இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:22 pm

இந்திராவை போல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மோடி

புதுடில்லி : தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் பிரதமர் இந்திராவைப் போல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் அனைத்து தரப்பினரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக சுகாஸ் பல்ஷிகர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சுகாஸ் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது : புதிய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தொழில்துறையில் ஒரு புதிய மலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றியின் காரணமாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, சமீப காலங்களில் வேறு எந்த பிரதமரும் பெறாத அளவிற்கு உண்மையான அதிகார பலத்தை பெற்றுள்ளார். அதனாலேயே தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களை தேர்வு செய்தல், அவர்களுக்கான துறையை ஒதுக்குதல் உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் பொறுப்பும் மோடியிடமே விடப்பட்டது. மோடி, அவரது கொள்கை அடிப்படையில் அவரது அரசு எதிர்கொண்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திராவுடன் ஒப்பீடு:

மோடியின் இத்தகைய துடிப்பான செயல்பாடுகள் இந்திராவின் ஜனநாயக வரலாற்றை திரும்பக் கொண்டு வந்துள்ளதால், அவர் இந்திராவுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறார். இவ்வாறான ஒப்பீடு, துடிப்பான ஒரு புதிய தலைமை கிடைத்துள்ளதை புரிந்து கொள்வதற்கு சான்றாக உள்ளது.

முதல் சான்றாக விளங்குவது, நாட்டின் இக்கட்டான சூழ்நிலை, முக்கிய பிரச்னைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் விதமாக அதிகப்படியான மக்கள், தேர்தல் மூலம் ஒரு குறிப்பிட்ட தலைவரை, குறிப்பாக 1971ல் இந்திராவை போன்று மோடியை தேர்வு செய்துள்ளனர். இந்திராவைப் போன்று மோடியும், தேர்தல் சமயத்தில் அரசியல் ரீதியிலான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். இந்திராவைப் போன்றே மோடியும் நாட்டின் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இந்த எதிர்ப்புக்களை மீறியும் தனது கட்சி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததால், எதிர்ப்புக்களை திறமையாக கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பா.ஜ.,விற்குள் மட்டுமின்றி வெளியிலும் பல சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. பொது இடங்களிலும், மீடியாக்களிலும் எதிர்க்கட்சியினர் மோடியை பலவாறு விமர்சித்து கருத்து வெளியிட்டனர்.

எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் மோடியை தாக்கி விமர்சிப்பதில் படு 'பிஸி'யாக இருந்தனர். ஆனால் மோடி தனது பிரச்சாரங்கள் மூலம் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். தாங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் ஏராளான பிரச்னைகளில் இருந்து தங்களை காப்பாற்ற வந்தவர் எனவே மக்கள் மோடியை நினைக்க துவங்கினர்.

மோடி- காங்கிரஸ் முரண்பாடு:

இரண்டாவது, மோடியின் பேச்சுக்களை கவனித்தால் அதில் எந்தவொரு தவறான பேச்சோ, யாரையும் காயப்படுத்தும் விதமான வார்த்தையாகவோ அல்லது தோரணையாகவோ இல்லை. 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டில்லி கல்லூரி மாணவர்களிடம் அவர் உரையாற்றிய போது அதில் குறைவான விவாதமும், அதிகளவில் வேண்டுகோள்களும், கோரிக்கைகளுமே இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ மோடிக்கு எதிராக மிக கடுமையான போக்கையே கையாண்டது. அவர்களின் பேச்சும் மிக கடுமையானதாக இருந்தது. மோடி, சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என்பது போன்ற தோற்றங்களை காங்கிரஸ் பலமான ஏற்படுத்தியது.

மூன்றாவது, இந்திராவைப் போன்று மோடியும் தனது கட்சிக்கு புதியதொரு அடையாளத்தை கொடுத்துள்ளார். காங்கிரசை ஒடுக்க நினைத்தவர்களை எதிர்கொண்டு, தன்னை பிரதமர் பதவியில் அமர்த்திக் கொண்டவர் இந்திரா. அவர் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளாதவர். கடந்த இரண்டு பார்லி., தேர்தல்களிலும் வலுவான தலைமையின் கீழ் பா.ஜ., தேர்தலை எதிர்கொண்டதால், மோடிக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறைவானதாகவே இருந்தது. இதனால் தனக்கும், பா.ஜ.,விற்கும் எதிரான எதிர்ப்புக்களை மோடி எளிதாக தகர்த்தெறிந்துள்ளார். ஆனால் இந்திராவும் சரி, மோடியும் சரி மக்களை நேரடியாக சென்று சந்தித்து, அவர்களுள் ஒருவராக கலந்து பிரசாரம் செய்தனர். 1971 மற்றும் 2014ல், வாக்காளர்களிடம், உங்களின் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு ஓட்டளிக்காமல் தலைவர்களுக்கு ஓட்டளியுங்கள் என்றே கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதியவர் என்பதால் எதிர்ப்புகள்

நான்காவது, இத்தகைய துணிவான செயல்பாடுகளே கட்சிக்குள் மூத்த தலைவர்களை எழுப்பிய எதிர்ப்புக்களையும் முறியத்தது. இந்திராவை பொறுத்த வரை, அவர் பிரதமர் அலுவலகத்திற்கு புதியவர் என்பதால் ஏராளமான கசப்பான போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. மோடியை பொறுத்த வரை, அவர் டில்லி அரசியலுக்கும் புதியவர் என்பதால் அது தொடர்பான போராட்டங்கள் ஏற்பட்டன. மோடிக்கு பெருகிய ஆதரவின் காரணமாக எதிராக இருந்த கட்சியின் மூத்த தலைவர்களும் அடங்கி விட்டனர். இந்திராவும், மோடியும் எதிர்கொண்ட எதிர்ப்புக்களின் அளவுகளில் வித்தியசம் இருந்தாலும், அடிப்படை ஒன்றாகவே உள்ளது. அவர்களின் புதிய கொள்கைகளை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஐந்தாவது, இந்திராவை சர்வாதிகாரி என்றும், அவரை ஒழிப்பதே தங்களின் நோக்கம் எனவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஆனால் நாடுமுழுவதும் இந்திரா மேற்கொண்ட சூறாவளி சுற்றுப் பயணங்களும் அதிரடி நடவடிக்கைகளும், அவருக்கு எதிரான குரல்களையும், அரசியல் தடைகளையும் முறியடித்தது. இத்தகைய செயல்பாடுகள் மக்கள் மனதில் அவர் மீதான எதிர்பார்ப்புக்களையே அதிகரிக்கச் செய்தது. கிட்டதட்ட மோடி விஷயத்திலும் இதே தான் நடந்துள்ளது. வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பை மோடி மீது ஏற்பட செய்துள்ளது.

அதிரடி வளர்ச்சி:


வறுமையை ஒழிப்பது, சமூக சுகாதாரத்தை மேம்படுத்துவது, 1991ம் ஆண்டுக்கு முன்பிருந்த வளர்ச்சிகரமான இந்தியாவை ஏற்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு மோடி செயல்பட்டு வருகிறது. உலக தரத்திலான வளர்ச்சியை இன்றைய புதிய இந்தியாவில் ஏற்படுத்துவது, பொருளாதார ரீதியிலான வளர்ச்சியை ஏற்படுத்துவது இவற்றை ஏற்படுத்தவே மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. 1970களில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சியை மீண்டும் இந்தியாவில் கொண்டு வந்து, உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தை மோடி அரசு கொண்டுள்ளதே, அவர் மீதும் அவரது அரசின் மீதும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தனிமனித அடையாளம் மற்றும் ஜனரஞ்சகமான அரசியல் இவைகளே இரு தலைவர்களுக்கும் இடையிலான வேறுபாடாகும். இந்திராவின் தொகுதியில் முக்கிய பிரச்னையாக இருந்தது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கடந்த 40 ஆண்டுகளில் வளர்ச்சி பெறாமல் இருந்ததே ஆகும். கிட்டதட்ட மோடியின் தொகுதியில் இருப்பதும் இது போன்றதொரு பிரச்னையே ஆகும். அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்வேற்ற வேண்டும் என்றே மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. இந்திராவின் மீது இருந்த நம்பிக்கை, அவர் நேருவின் மகள் என்பதால் வந்தது. ஆனால் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கை, அவர் வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து வந்தவர் என்பதால் சாமானிய மக்களின் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால் வந்ததாகும்.

இந்திராவிடமும், மோடியிடமும் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், அவர்களின் கொள்கையில் அவர்களின் திறமையின் காரணமாக எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:24 pm

இந்தியாவின் பலத்தை உலக நாடுகளுக்கு தெரிவியுங்கள்: ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு மோடி வேண்டுகோள்

புதுடில்லி: ''இந்தியாவின் பலத்தை, உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் ஏஜென்ட்களாக, இந்திய வெளியுறவு சேவையான - ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் செயல்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பயிற்சி நிறைவு:

ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக தேர்ச்சி பெற்ற ஒரு அணியினர், டில்லியில் பயிற்சி பெற்றனர். அவர்களின் பயிற்சி காலம் நிறைவடைந்ததை ஒட்டி, நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் எனில், எந்த விதமான குறைபாடும் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதோடு, அவற்றை நல்ல முறையில், 'பேக்' செய்தும், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியது அவசியம். நம் நாட்டு மூலிகை மருந்துகள் அனைத்தும், உலகத் தரம் வாய்ந்தவை. ஆனால், மோசமான முறையில், 'பேக்' செய்யப்படுவதால், உலக நாடுகள் மத்தியில், அவற்றுக்கு மவுசு இல்லை. இந்த விஷயத்தில், சீனாவை விட, நாம் பின்தங்கி உள்ளோம். அதேபோல், இந்திய கைவினைப் பொருட்களின் சிறப்புகளும், உலக நாடுகள் மத்தியில் பிரபலம் அடையவில்லை. இந்த நிலைமை மாற, ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

பிரதிநிதிகள்:

ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக தேர்ச்சி பெற்ற நீங்கள், உலக நாடுகளில், இந்தியாவின் பிரதிநிதியாக பணியாற்ற உள்ளீர்கள். அப்படி பணியாற்றும் போது, இந்தியாவின் கவுரவத்தையும், பலத்தையும், உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் ஏஜென்ட்களாக செயல்பட வேண்டும். அத்துடன், உலக நாடுகள் உடனான, நம்முடைய வர்த்தகம் விரிவடைவதிலும், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் நிகழ்வதிலும், அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், இந்தியாவும், மற்ற நாடுகளும் பயன் பெறும்.

வரலாறு:

இந்தியாவின் வரலாற்றையும், உலக நாடுகள் உடனான, நம் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகளையும் பற்றி, நன்கு தெரிந்திருப்பதோடு, உலக நாடுகளில் உள்ள இந்தியர்களின் அமைப்புகள், நம் நாட்டுப் பெருமையை பறைசாற்றவும், ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 14, 2014 11:23 pm







பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:07 am

சசிதரூரை தொடர்ந்து நரேந்திர மோடிக்கு மற்றொரு காங்கிரஸ் தலைவர் பாராட்டு

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். அதனால், காங்கிரசில் எதிர்ப்பை சந்தித்தார். இந்நிலையில், மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், நரேந்திர மோடியை பாராட்டி உள்ளார்.

ஒரு பேட்டியில், ‘சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை கையாளும் விதத்தில், இந்தியாவின் ரிச்சர்டு நிக்சனாக (அமெரிக்க அதிபராக இருந்தவர்) உருவெடுக்கும் திறன் படைத்தவர், நரேந்திர மோடி. மன்மோகன்சிங்கிடம் இல்லாத வளைந்து கொடுக்கும் தன்மை அவரிடம் உள்ளது‘ என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:12 am

கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

புதுடில்லி: பிரதமராக பதவியேற்று ஓரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், பொது மக்கள் பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறித்தும் கவனம் செலுத்தவும், ராணுவத்தினருக்கு தேவையான உபகரணங்களை விரைவாக வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தாமதங்களை குறைக்கவும், சிவப்பு நாடா முறையை ஒழிக்கவும், நேர்மையான நிர்வாகம் மற்றும் அரசை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளை பிரதமர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். தற்போது, பொது மக்கள் பிரச்னைகள், முக்கியமாக விமானம், ரயில் டிக்கெட், பயணங்கள், டெலிகாம், வங்கி நிர்வாகம், சுகாதாரம் மற்றும் பென்சன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். மேலும் இந்த பிரச்னைகள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தி, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்துவேன் என தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதன்படி, எந்தஒரு மாநில அரசும், மத்திய அரசின் உதவி மற்றும் கவனம் தேவை என கோரிக்கை விடுத்தால், அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகளை அனைவரையும் ஒவ்வொருவராக சந்திக்க வேண்டும் எனவும், மூன்று மாதத்திற்கு சந்திக்க வேண்டும் என பிரதமர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் விரைவாக கிடைப்பதில்லை என ராணுவத்தினரின் புகார் குறித்து, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் குறித்து வரிசைப்படுத்தி பட்டியல் வழங்கும்படி முப்படைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முப்படைகளை நவீனப்படுத்த, மத்திய அரசு ஒதுக்கும் நதியை எவ்வாறு சிறந்த முறையில் செலவழிப்பது என்பது குறித்தும் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படைதளபதிகளை மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முப்படை தளபதிகளை எப்போதாவது சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,டில்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகம் கட்டவும், ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும் பிரதமர் மோடி விரும்புவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக