புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
Page 14 of 14 •
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
First topic message reminder :
பாராளுமன்ற கட்சி கூட்டம்
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மோடி, பிரதமராக தேர்வு
அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.
பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.
ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு
அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.
தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.
நன்றி தெரிவித்தார் மோடி
எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.
இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.
ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு
இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
26–ந் தேதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா எங்கே?
பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.
வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக

பிரான்ஸ் சென்றடைந்ததார் பிரதமர் நரேந்திர மோடி: பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எலிசபெத் போர்ன்
பாரிஸில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். |
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் கேம்ரான் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். பாரிஸில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பாஸ்டீல் தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி. அவருக்கு பாரீஸ் விமான நிலையத்தில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிசில் நாளை நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, நம் நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவுக்கு இணையானது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதையடுத்து, இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்கான ஒப்புதல் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பிஎஃப்ஐ அமைப்பிலும் இந்தியா இருந்தது: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்
26 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கி இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் வரை பல அமைப்புகளின் பெயர்களில் இந்தியா இருக்கிறது என்று கூறினார்.
மழைக்கால கூட்டத்தொடரின் போது முதன்முறையாக பாஜக எம்.பி.க்களிடம் உரையாற்றிய மோடி, மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தயாராக இருக்குமாறு கட்சியினரைக் கேட்டு அதன் வியூகத்தை கோடிட்டுக் காட்டினார்.
மேலும், இந்தியா என்ற பெயர் எதிர்க்கட்சிகளின் “மக்களை தவறாக வழிநடத்தும்” முயற்சி என்று பிரதமர் கூறினார். கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியன் முஜாகிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளும் இந்தியா என்ற பெயரை கொண்டிருந்தன” என்றார்.
தொடர்ந்து, “அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் எதிர்க்கட்சியாகவே இருக்கப்போவதை அதன் தலைவர்கள் உணர்ந்ததால் எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளன” என்றார்.
இதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மனமுடைந்து போகவோ, திசைதிருப்பவோ வேண்டாம் என்று எம்.பி.க்களுக்கு மோடி கேட்டுக் கொண்டார்.
மற்ற அனைத்து நாடுகளும் தற்போதைய இந்தியத் தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனால்தான் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருவதாகவும் பிரதமர் தனது கட்சியின் எம்.பி.க்களுக்கு நினைவூட்டினார்.
இதற்கிடையில், “பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் தங்கள் பெயருக்கு முன்னால் இந்தியா என்று சேர்ப்பது ஃபேஷன், எதிர்க்கட்சிகளும் அந்நிய சக்திகளின் உதவியுடன் இந்தியாவை பலவீனப்படுத்த இந்தியா என்ற வார்த்தையை ஆதரிக்கின்றன” என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ட்வீட் செய்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் டாப்-3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும்: பிரதமர் மோடி வாக்குறுதி
டெல்லி பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரகதி மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மையத்திற்கு பாரத மண்டபம் என பெயரிடப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் உள்கட்டமைப்பு மாறுகிறது. உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம், மிக உயரத்தில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை இந்தியாவில் உள்ளது, மிகவும் உயர்ந்த போக்குவரத்து சாலை, மிகப்பெரிய அரங்கம், மிகப்பெரிய சிலை.. இவை அனைத்தும் இந்தியாவில் உள்ளது. அதனுடன் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
எங்களது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இரண்டாவது பதவிக்காலத்தில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இந்த சாதனைகளை அடிப்படையாக வைத்து பார்த்தால், மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். எனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும். இது மோடியின் உத்தரவாதம்.
எங்கள் அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதைகளை மின்மயமாக்கி உள்ளது. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் கடந்த 60 ஆண்டுகளில், 20,000 கிமீ ரெயில் பாதைகளை மட்டுமே மின்மயமாக்க முடிந்தது. இப்போது ஒவ்வொரு மாதமும் 6 கி.மீ. அளவுக்கு மெட்ரோ பாதையை முடிக்கிறோம், 4 லட்சம் கி.மீ. கிராம சாலைப் பணிகளை முடிக்கிறோம். விமான நிலையங்களின் எண்ணிக்கை 150ஐ எட்டியிருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரகதி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வளாகமானது, மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி அரங்கம் போன்ற பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், இப்போது பாரத மண்டபம் என மறுபெயரிடப்பட்டுள்ளது. அத்துடன், இதன் திறப்பு விழாவில் கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியை, சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியிருக்கிறார். இதன்மூலம், வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் களத்தின் தளமாக இந்த பாரத மண்டபம் மாறியிருக்கிறது. |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பல ஆயிரமாண்டு பழங்கால தமிழக சிலைகள் திரும்ப பெற்றோம் " - பிரதமர் பெருமிதம்
ஆயிரம் ஆண்டு பழம்பெரும் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து மீட்டு நமது அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளோம் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இன்றைய ரேடியா ‛ மன் கி பாத் ' என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாவது ;
இயற்கை பேரிடரால் கடந்த 103 நாட்கள் கவலை மற்றும் பிரச்னைகள் ஏற்பட்டது. யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் அவதியடைந்தனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. எந்த ஒரு இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களும் ஆதாரங்களும் பெரும் பங்காற்றுகின்றன.
தண்ணீர் சேமிப்பு அவசியம்
நாடு சுதந்திரம் பெற்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் 60 ஆயிரம் நீர்நிலைகளை கட்டமைத்துள்ளோம். இன்னும் 50 ஆயிரம் நீர்நிலைகளை கட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. தண்ணீரை பாதுகாப்பதில் மக்கள் புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நமது நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வோடு நீர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உ.பி.,யில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஆன்மிக பாத யாத்திரைக்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் பலர் வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து இரண்டு பேர் அமர்நாத் பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்த போது, யோகா கற்றுத்தரும் சார்லோட்டி சோப்பின் என்பவரை சந்தித்தேன். அவருக்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக யோகா கற்று தருகிறார். தனது உடல்நலத்திற்கும், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் யோகா தான் காரணம் என்கிறார்.
இந்தியாவுக்கு சொந்தமான 100 அரிய வகை மற்றும் பழங்கால பொருட்களை, அமெரிக்கா நம்மிடம் திருப்பி தந்துள்ளது. இந்த பொருட்கள் 250 முதல் 2,500 ஆண்டுகள் பழமையானவை. இவை இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்தவை.
சோழர் காலத்தை சேர்ந்த பல சிலைகளும் அதில் அடங்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்துடன் தொடர்புடைய 12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவி சிலைகள் மற்றும் கடவுள் முருகன் திருப்பி கொண்டு வரப்பட்டன. 11ம் நூற்றாண்டை சேர்ந்த, நந்தியில் அமர்ந்தவாறு காணப்படும் உமா மகேஸ்வரி சிலையும், ஜெயின் தீர்த்தங்கராக்கள் சிலையும் இந்தியா திரும்பி உள்ளது.
இந்தியா கொண்டு வரப்பட்ட சூரிய பகவான் சிலையில் உள்ள மரச்சட்டம் 16 -17 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இது தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த விலை மதிப்பு மிக்க சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்த அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 12ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெளியேறு என்று கேட்பவை இவைகளைத்தான்...!!! எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்த பிரதமர் மோடி
மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படும் நாளில், அர்ப்பணித்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், காலனித்துவம் முடிவுக்கு வர இது முக்கிய பங்காற்றியது.
இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது ஊழலே வெளியேறு. வாரிசு அரசியலே வெளியேறு. தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் என்றாலே ஊழல், வாரிசு அரசியல், சமாதானம் என்பதுதான் என பிரதமர் மோடி அடிக்கடி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளையனே வெளியேறு தினத்தில் எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்துள்ளார். |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அது ஊழலே வெளியேறு.
வாரிசு அரசியலே வெளியேறு.
தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்தியாவின் வளா்ச்சியால் ஒட்டுமொத்த உலகமே நன்மையடைந்து வருகிறது - பிரதமா் மோடி
இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவா்கள் பலரும் தில்லிக்கு வரவுள்ள இந்த சூழ்நிலையில் ‘மணிகன்ட்ரோல்’ வா்த்தக செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பிரதமா் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் நாம் ஏற்கெனவே அனைவருக்கான வளா்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்பதை பின்பற்றி வருகிறோம்.
இந்தியா பல்வேறு துறைகளில் எவ்வாறு வளா்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பொருளாதாரம், வங்கித் துறை உள்ளிட்டவற்றில் நாம் மேற்கொள்ளும் சீா்திருத்தங்களை சா்வதேச அமைப்புகள் பாராட்டி வருகின்றன. சா்வதேச முதலீட்டாளா்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா்.
கடந்த 9 ஆண்டுகளாக உலக நாடுகளை பல்வேறு அமைப்புகள் மூலம் ஒருங்கிணைக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது. சா்வதேச சூரிய சக்தி கூட்டணி, சா்வதேச பேரிடா் மீட்பு உள்கட்டமைப்பு அமைப்பு உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இந்தியாவுக்கு அங்கீகாரம்: கரோனா பரவலின்போது கூட இந்தியா அதனை எவ்வாறு எதிா்கொள்ளப்போகிறது என்பதை பல நாடுகள் கவனிக்க முற்பட்டன. பொது முடக்கத்தின்போது ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றினோம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்தினோம். 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதியும் செய்தோம்.
இதன் மூலம் இந்தியாவின் மனிதாபிமான அணுகுமுறைக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்தது. பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவிலும் இந்தியா பொருளாதாரரீதியாகவும் வலுவான நிலையை எட்டி சாதனை படைத்தது என்றாா் மோடி.
பொறுப்பற்ற திட்டங்கள் கூடாது: குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட பல்வேறு நாடுகள் கடனில் சிக்கித் தவிக்கும் நிலை தொடா்பான கேள்விக்கு, ‘கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ உலகளாவிய ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறோம். சா்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவையும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
நமது நாட்டைப் பொறுத்தவரை நிதிசாா்ந்த பொறுப்பற்ற திட்டங்களை (தோ்தல் இலவசத் திட்டங்கள்) அறிவிக்கக் கூடாது என்று நான் ஏற்கெனவே முன்னெச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளேன். இதுபோன்ற திட்டங்கள் நாட்டை மட்டுமின்றி சமுதாயத்தையும் சீரழித்துவிடும். இதற்கு இறுதியாக ஏழை மக்கள்தான் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை வரும். இது தொடா்பாக இப்போது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டு வருவது நல்ல விஷயமாக உள்ளது’ என்றாா் பிரதமா்.
விலைவாசி உயா்வு பிரச்னை: விலைவாசி உயா்வு என்பது சா்வதேச பிரச்னையாக இப்போது உருவெடுத்துள்ளது. முதலில் கரோனா தொற்று காரணமாகவும், இப்போது போா் (உக்ரைன்-ரஷியா) காரணமாகவும் சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் விலைவாசியைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இப்போது கூட சமையல் எரிவாயு விலையை 200 ரூபாய் குறைத்துள்ளோம். இந்தியா இப்போது 5ஆவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
சாதனைகள் தொடா்கின்றன: உறுதியான கொள்கைகள், அனைத்து துறைகளிலும் அடிப்படையில் இருந்து சீா்திருத்தம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றில் அரசு சிறப்பாக செயல்பட்டது. இதன் மூலம் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்தது, ஏற்றுமதி சாதனை அளவாக உயா்ந்தது. இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின. 5 ஆண்டுகளில் 13.5 கோடி போ் வறுமையில் இருந்து மீண்டனா். பெண்களும் நாட்டின் வளா்ச்சியில் பங்கேற்றனா்.
இந்தியாவே முன்னுதாரணம்: இந்தியாவின் வளா்ச்சியால் இந்தியா்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே நன்மை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வளா்ச்சி உறுதியானது. மக்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் வளா்ச்சி அணுகுமுறையை பிற நாடுகள் உதாரணமாக கொள்ளலாம். இந்தியா வளா்வது உலகத்துக்கே நம்பிக்கையை அதிகரிக்கிறது. உலக நாடுகளுக்கு பல்வேறு பொருள்களை விநியோகிக்கும் மையமாக இந்தியா உருவாகி வருகிறது’ என்றாா்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 14
|
|