புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
61 Posts - 80%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
397 Posts - 79%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 58 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 58 of 81 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 69 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 58 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:39 pm

கணவரை பழிவாங்க சாலை விதிகளை மீறிய சவுதி புதுமை பெண்

கணவரின் 2வது திருமணத்துக்கு பழிவாங்க, சவுதி அரேபிய பெண் ஒருவர் சாலை விதிகளை மீறி கணவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்துள்ளார்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அண்மையில் 2வது திருமணம் செய்தார். இதனால் அவரது முதல் மனைவி கடும் அதிருப்தி அடைந்தார். ஆனால் அவரால் நேரிடையாக எதிர்ப்பை தெரிவிக்க முடியவில்லை.

திருமண நாள் அன்று கணவரின் காரை, தனது சகோதரரின் உதவி யுடன் வெளியே ஒட்டிச் சென்றார். அந்த கார் நகரின் அனைத்து சந்திப்புகளிலும் சிவப்பு விளக்கு சிக்னலை மீறி சென்றது.

சவுதி அரேபியாவின் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. அதன்மூலம் சிவப்பு சிக்னலை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து ரூ.8000 முதல் ரூ.15000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கணவரை பழிவாங்க நினைத்த சவுதி பெண்ணும் அவரது சகோதரரும் அந்த நாள் முழுவதும் சிவப்பு சிக்னலை தாண்டி காரை ஓட்டி கொண்டே இருந்தனர். அந்த வகையில் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சந்திப்பில் சிவப்பு சிக்னலை மீறி கார் முன்னும் பின்னும் நகரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2015 7:14 am

உலகச் செய்திகள்!  - Page 58 103459460 உலகச் செய்திகள்!  - Page 58 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 9:46 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் அடித்து உதைத்து உடலில் தீவைத்து எரித்த மர்ம கும்பல்

மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ அருகில் குவாடெமலா என்ற பகுதியில் 16 வயதுடைய இளம்பெண்ணை மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டில் அடித்து உதைத்து தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். மக்கள் நடமாடும் இந்த பகுதியில் மர்ம கும்பல் பெண்ணை தீவைத்து எரித்து விட்டு சென்றது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை தீயில் எரித்து கொன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சியில் அந்த பெண் வெளியே இழுத்து வரப்பட்டு முகம் முழுவதும் ரத்தகாயங்களுடன் காணப்படுகிறது. ஒருவர் தலைமுடியை இழுத்து அந்த பெண்ணை அடிக்கிறார். மற்றொருவர் அந்த பெண் மீது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றுகிறார். தீ வைத்து எரிப்பதை ஒருவர் படம்பிடிக்கிறார் வலியால் அலறி துடித்த பெண் தீயில் கருகி பரிதாபமாக பலியாகிறார். இந்த வீடியோவை பார்த்து சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ அருகில் ரியோ பிரவா என்ற நகரில் 16 வயதுடைய அந்த இளம்பெண் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் வசித்து வரும் டாக்சிடிரைவரை (வயது 61) கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த காட்சியை கண்டு பொதுமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரித்துகொல்லபட்ட பெண் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருவதாக தெரிவித்தனர்.

காணொளி ஈகரை முகநூல் பக்கத்தில் உள்ளது!



உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 25, 2015 9:58 pm

நமது இந்தியாவை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டதே இந்த குவாடெமலா என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 1:50 am

அமெரிக்காவில் அலாஸ்கா கடற்பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் தென்மேற்கு கடற்கரையோரத்தின் உகாசிக் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவில் 7 புள்ளியாக பதிவானது.

கடற்கரையோரத்தில் இருந்து 104 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 61.7 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி உருவாக வாய்ப்பில்லை என்று அமெரிக்க நில அமைப்பியல் ஆய்வு மையம் தெரிவித்தது. தவிர, நில நடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் குறைந்த அளவில் மக்கள் வசிக்கும் ஆன்கரேஜ் என்ற நகரம் மட்டுமே இருப்பதால் பெரிய பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க நில அமைப்பியல் ஆய்வு மையம் தெரிவித்தது




உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 1:52 am

கடலில் தத்தளிக்கும் ஆசிய அகதிகளை மீட்க அமெரிக்கா நடவடிக்கை; கண்காணிப்பு விமானங்கள் மூலம் தேடும் பணியை தொடங்கியது

கடல் பகுதியில் தத்தளிக்கும் ஆசிய அகதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

தத்தளிக்கும் அகதிகள்

சமீபகாலமாக வங்காளதேசம், மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளின் கடற்கரையோர எல்லைக்குள் புகுந்துள்ளனர். இவர்களில் 2,600க்கும் மேற்பட்டோர் இன்னும் கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் மலேசியாவின் வடக்கு எல்லைப்பகுதி புதை குழிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்களும், தாய்லாந்து எல்லையோர புதை குழிகளில் 36 பிணங்களும் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவை அகதிகளின் உடல்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இது, உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தங்களுடைய கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகதிகள் நுழைவதை தடுக்க தாய்லாந்தும், மலேசியாவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெளியுறவு மந்திரிகள் கூட்டம்

இந்த நிலையில் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஆசியாவைச் சேர்ந்த 17 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தது.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை கமிஷன், ஐ.நா. அகதிகள் முகமை உள்ளிட்ட அமைப்புகளும் இதில் பங்கேற்றன. மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா நாடுகளின் சார்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாய்லாந்து துணை பிரதமர் தனாசக் பத்திமபிரகார்ன் பேசியதாவது:-

தீர்வு காணவேண்டும்

அகதிகள் பிரச்சினை பற்றி நாம் கவலைப்படுவதைவிட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு தீர்வு காண்பதுதான் மிக முக்கியமானது.

முதலில் அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வது, பின்பு மனிதர்களை இன்னொரு நாட்டுக்கு கடத்துவதை முறியடிப்பது, பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிந்து அதற்கு முழுமையான தீர்வு காண்பது ஆகிய மூன்றையும் செய்தாகவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி அன்னே ரிச்சர்டு, “தெற்காசிய கடல் பகுதியில் இன்னும் ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உயிரை உடனடியாக காப்பாற்றுவது அவசியம். இதற்கு உதவிட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

அவருடைய கோரிக்கையை தாய்லாந்து துணை பிரதமர் தனாசக் உடனடியாக ஏற்றுக் கொண்டார். ‘அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள் எங்கள் கடல் பகுதியில் அகதிகளை கண்டுபிடித்து மீட்கலாம். அதற்கு அனுமதிக்கிறோம்‘ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தாய்லாந்து கடல் பகுதியில் தத்தளிக்கும்

600-க்கும் மேலான அகதிகளை கண்டறிந்து மீட்கும் முயற்சியில் உடனடியாக இறங்கின.




உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:02 pm

2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தாலான பங்கி கிண்ணங்கள் ரஷ்யாவில் கண்டெடுப்பு

உலகச் செய்திகள்!  - Page 58 02feccc9-755c-4c57-98af-2b4947577ad2_S_secvpfரஷ்யாவில் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திவந்த 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்திலான ’பங்கி’ (கஞ்சா மற்றும் அபின் கலந்து தயாரிக்கப்படும் ஒருவித போதை பானம்) கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடோட்டஸ், இயேசு கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் ரஷ்யாவை ஆண்ட அரசர்கள் தங்கக் கிண்ணத்தில் பங்கி தயாரித்து அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த மதுவின் போதையானது, வீராவேசமாக போர்க்களத்தில் சண்டையிடும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில், முந்தைய ரஷ்ய மன்னர்களும், தளபதிகளும் பயன்படுத்தியதாக நம்பப்படும் பங்கி கிண்ணங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வளையல்கள் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.



உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:09 pm

சிரியாவில் மீண்டும் பீப்பாய் குண்டுவீச்சு: அப்பாவி பொதுமக்களில் 71 பேர் பலி

ஆயில் பீப்பாய்கள், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் வெடிப்பொருட்களுடன் பழையை இரும்புத் துகள்களை சேர்த்து ’பேரல் பாம்ப்’ எனப்படும் பீப்பாய் குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையிலான குண்டுகளை போர்க்களங்களில் பயன்படுத்த சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளன.

ஆனால், இந்த தடையை மீறி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பீப்பாய் குண்டுகளையும், கொடிய ரசாயன ஆயுதங்களையும் சிரியா அரசு பயன்படுத்தி வருவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சிரியாவில் இட்லிப் நகரை கைப்பற்றியுள்ள போராளிகளை ஒடுக்கும் முயற்சியாக இன்று அந்நாட்டின் விமானப்படை பீப்பாய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பொதுமக்களில் 71 பேர் பலியாகியுள்ளதாகவும் அங்குள்ள ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அல்ஷார் பகுதியில் இன்று நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும், அல்பாப் பகுதியில் உள்ள அல்ஹைல் வாரச்சந்தை பகுதியில் நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 10:10 pm

சிவா wrote: 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தாலான பங்கி கிண்ணங்கள் ரஷ்யாவில் கண்டெடுப்பு

உலகச் செய்திகள்!  - Page 58 02feccc9-755c-4c57-98af-2b4947577ad2_S_secvpfரஷ்யாவில் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திவந்த 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்திலான ’பங்கி’ (கஞ்சா மற்றும் அபின் கலந்து தயாரிக்கப்படும் ஒருவித போதை பானம்) கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடோட்டஸ், இயேசு கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் ரஷ்யாவை ஆண்ட அரசர்கள் தங்கக் கிண்ணத்தில் பங்கி தயாரித்து அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த மதுவின் போதையானது, வீராவேசமாக போர்க்களத்தில் சண்டையிடும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில், முந்தைய ரஷ்ய மன்னர்களும், தளபதிகளும் பயன்படுத்தியதாக நம்பப்படும் பங்கி கிண்ணங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வளையல்கள் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள் செய்த பதிவு: 1139916சென்னையில் ஒரு பகுதியில் கிடைக்கும் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:05 am

பாகிஸ்தானில் மீண்டும் பேருந்தின் மீது தாக்குதல் – 21 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தின் மீது பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 21 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்ற 2 பயணிகள் பேருந்தை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். பேருந்திற்குள் வந்த அவர்கள், திடீரென பயணிகளை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின்னர் பலியான பயணிகளின் உடல்களை தீவிரவாதிகள் அங்குள்ள மலைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்க வில்லை என்றாலும், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். படுகாயமடைந்த பலர் மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பும் கராச்சியில் பயணிகள் பேருந்தின் மீது இருசக்கரவாகனத்தில் வந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி கொடூரமான முறையில் நடத்திய தாக்குதலில் 43 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அதனால் இந்த சம்பவத்திற்கும் ஐஎஸ் இயக்கம் காரணமாக இருக்கலாம் என விசாரிக்கப்பட்டு வருகிறது.



உலகச் செய்திகள்!  - Page 58 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 58 of 81 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 69 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக