புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
68 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
5 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
4 Posts - 3%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
1 Post - 1%
kargan86
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
9 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
6 Posts - 3%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 33 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 33 of 81 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 33 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:14 pm

ஹிரோஷிமா நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, அங்கு கடந்த புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள மலை அடிவாரப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனே தொடங்கப்பட்டது. இதுவரை அங்கிருந்து 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் 80 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு பலத்த மழை பெய்து வருவதால், அப்பகுதியில் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையை, பிரதமர் ஷின்ஜோ அபே சரியாக கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.




உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:24 pm

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 5 பாலஸ்தீனியர்கள் பலி

காசாவில் 47-வது நாளாக தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி மீண்டும் ஹமாஸ் நிலைகள் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.

இன்று காலை காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் போர்விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் அங்கு ஒரு வீட்டிலிருந்த 5 பேர் கொண்ட பாலஸ்தீனிய குடும்பம் பரிதாபமாக பலியானது. அதில், 3 குழந்தைகளும், அவர்களது பெற்றோரும் பலியாகினர்.

அண்மையில், சேனல் 2 தொலைக்காட்சியில் ஒரு பேட்டியின் போது இஸ்ரேல் வெளியுறவு மந்திரி அவிக்டோர் லைபெர்மேன் ஹமாஸில் வெள்ளைக் கொடி நாட்டப்படும் வரை தாக்குதல் நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதுவரை காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 2098 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். 10,550-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள 3 வரலாற்று சிறப்புமிக்க மசூதிகளும் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரப்பிலிருந்து 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2005-க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மிக கொடூரமான சண்டையாக இஸ்ரேல்- பாலஸ்தீன சண்டை கருதப்படுகிறது.




உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:47 pm

ஜப்பானில் கனமழையால் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா புறநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்தது.

இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன. நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலமாக நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீட்புப்பணிகளில் ஈடுபடுவதற்காக 3000 ராணுவ வீரர்களை ஹிரோஷிமா புறநகர் பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டார். தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இன்று காலை மறுபடியும் மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:48 pm

மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச்சுரங்கம் இடிந்து 25 பேர் பலி

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் அதிகஅளவில் தங்கச்சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள பம்பாரி நகரில் மலைகள் சூழ்ந்த வனப்பகுதியான டேசிமாவில் தங்கச்சுரங்கம் ஒன்று உள்ளது. கனடாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான இந்த சுரங்கத்தை தற்போது சிலிகா கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த தங்கச்சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் மண்ணில் புதைந்தனர். உடனே மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 25 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மாயமான 2 பேரை தேடும்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய ஆப்பிரிக்க நாட்டின் சுரங்க அமைச்சக அதிகாரி கூறுகையில், விபத்து நடந்தது உண்மை தான். தங்கச்சுரங்க நிறுவனங்கள் சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில்லை. மழை ஏற்படும்போது சுரங்கம் இடிந்து விழுந்து விடுகிறது என்று தெரிவித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:14 am

நைஜீரியாவில் மேலும் ஒரு நகரம் போக்கோஹரம் தீவிரவாதிகள் வசமானது

கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.

இவர்களால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நிலை என்னவாயிற்று? என்பது தொடர்பான எவ்வித விபரமும் தெரியாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போக்கோஹரம் தீவிரவாதிகள் தற்போது, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான யோபேவில் உள்ள புனி யாடி என்ற நகரையும் கைப்பற்றி, அங்குள்ள அரசு தலைமை அலுவலகத்தின் மீது தங்களது கொடியை பறக்க விட்டுள்ளனர்.

அங்கு சிகரெட் பிடித்த குற்றத்துக்காக இருவர் உள்பட பலரை சுட்டுக் கொன்று போக்கோஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருவதாக உயிர் பயத்தில் அந்நகரை விட்டு தப்பி, மாநில தலைநகரான டமாட்டுருவை வந்தடைந்த சிலர் தெரிவித்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:15 am

பாகிஸ்தான் உளவாளிக்கு உதவிய இந்திய ராணுவ வீரர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட்டில் உள்ள டெல்லி கேட் பகுதி அருகே பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சில ரகசிய தகவல்களை அனுப்பும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ஆசிப் அலி என்பவனை கடந்த 16-ம் தேதி சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மூலமாக ராணுவ ரகசியங்களை உளவறிந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ‘ஐ.எஸ்.ஐ.’க்கு அனுப்பி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கங்ரா மாவட்டத்தில் சுனிட் குமார் என்ற ராணுவ வீரரை நேற்று கைது செய்த சிறப்புப் படை போலீசார் அவரை மீரட் நகருக்கு அழைத்து வந்து விசாரனை நடத்தினர்.

2012-ம் ஆண்டு ராணுவத்தில் சேருவதற்கு 3 மாதங்கள் முன்னதாக ஒரு வெளிநாட்டு பெண்ணின் தொடர்பு தனக்கு ஏற்பட்டதாகவும், ராணுவப் பணியில் சேர்ந்த பின்னர் அந்தப் பெண்ணிடம் தான் பணியாற்றும் பிரிவு தொடர்பாக சில ரகசியங்களை கூறியதாகவும், அவற்றை அந்தப் பெண் ஆசிப் அலிக்கு தெரிவித்து, அவன் மூலம் அவை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சென்று சேர்ந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட சுனிட் குமாரிடம் இருந்து ஒரு லேப் டாப், ஒரு ஹார்ட் டிஸ்க், 2 கைபேசிகள் மற்றும் ஒரு பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்த சிறப்புப் படை போலீசார் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:15 am

திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா போராளிகள் அறிவிப்பு

லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா பகுதி போராளிகள் அறிவித்துள்ளனர்.

லிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபி கொல்லப்பட்ட பிறகு தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றுவது தொடர்பாக தேசிய படைகளுக்கும், இஸ்லாமிய போராளி குழுக்களுக்கும் இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

இதனையடுத்து, கடந்த ஜூலை 13-ம் தேதி திரிபோலி சர்வதேச விமான நிலையம் இழுத்து மூடப்பட்டது. மட்டிகா விமான நிலையத்தின் மூலம் விமானப் போக்குவரத்து தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், திரிபோலி சர்வதேச விமான நிலையத்தில் காவலுக்கு இருந்த எதிரி குழுவின் படைகளை எதிர்த்து போரிட்டு, அவர்களை ஓடச்செய்து, திரிபோலி சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி, தங்கள் வசமாக்கிக் கொண்டதாக லிபியாவில் உள்ள பல்வேறு போராளிக் குழுக்களில் ஒன்றான மிஸ்ரதா நகரை சேர்ந்த போராளிக் குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

விமான நிலைய கட்டிடம் மற்றும் விமானங்களின் மீது இந்தக் குழுவினர் தங்களது கொடியுடன் ஏறி நிற்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்தையடுத்து, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் திரிபோலியையும் அவர்கள் கைப்பற்றி விடக்கூடும் என்ற கருத்து அங்கு நிலவி வருகின்றது.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:16 am

இங்கிலாந்தின் தலைசிறந்த பள்ளி மாணவராக இந்திய வம்சாவளி அசானிஷ் கல்யாணசுந்தரம் தேர்ச்சி

இங்கிலாந்து நாட்டில் ‘‘ஏ லெவல்’’ என்னும் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது சாதனைக்குரியதாக கருதப்படுகிறது.

இந்த தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் நெருக்கடியான சிந்தனை என்னும் 5 பாடங்கள் உண்டு. அண்மையில் நடந்து முடிந்த தேர்வுகளில் இந்த 5 பிரிவுகளிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது அசானிஷ் கல்யாணசுந்தரம் என்ற மாணவர் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய ‘‘ஏ கிரேடு’’ (100–க்கு 100) மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து இருக்கிறார்.

இதேபோல் விரிவாக்க திட்ட தகுதி என்னும் பாடப் பிரிவிலும் அவர் இதே அந்தஸ்துடன் ‘‘ஏ கிரேடு’’ பெற்றுள்ளார். இந்த தேர்வுகளில் ஒரு மாணவர் எடுக்கக் கூடிய அதிகபட்ச தகுதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் இத்தகைய சாதனையை ஒரு மாணவர் நிகழ்த்துவது சாதாரண விஷயம் அல்ல. இதன் மூலம் இங்கிலாந்தின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவர் என்ற பெயரும் அசானிஷ் கல்யாண சுந்தரத்துக்கு கிடைத்து இருக்கிறது.

இப்படி 5 பாடங்களில் சிறப்புத் தகுதியுடன் சதம் அடித்து இருப்பதன் மூலம் அவருக்கு உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் சேர்ந்து மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது.

அசானிஷ் தனது தாயார் சுஜாதாவுடன் லங்கான்ஷையர் மாகாணத்தில் உள்ள புர்ன்லே நகரில் வசித்து வருகிறார். அங்குள்ள செயின்ட் ஜோசப் பார்க் ஹில் பள்ளி மாணவர் படித்து வந்தார்.

‘‘எனக்கு அறுவை சிகிச்சை நிபுணராக வரும் ஆசை உள்ளது. ஆனால், எந்த துறையில் அப்படி ஆகவேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்கிறார், அசானிஷ்.

இவரது சாதனையை பற்றி செயின்ட் ஜோசப் பார்க் ஹில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆலன் போர்டெயஸ் கூறுகையில், ‘‘சந்தேகத்துக்கு இடமின்றி அசானிஷ் தனிச் சிறப்பு மிக்க, தலைசிறந்த மாணவர்தான். தனது ஏ லெவல் பாடப்பிரிவுகளில் அவர் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்’’ என்றார்.

அசானிஷ், அண்மையில் தனது அறிவியல் சிந்தனைகளுக்காக எடின்பர்க் பிரபுவின் கோல்டன் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:16 am

துபாயில் பறக்கும் இந்தியக் கொடி

லண்டன் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதைப் பற்றிச் சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்திவருவதாகச் சமீபத்தில் வெளியான துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) கூறுகிறது.

பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்கள் இந்தியர்களின் வியர்வையில் எழுந்ததாகச் சொல்லப் படுவதுண்டு. அங்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான். துபாய் அசுர வளர்ச்சியில் இந்திய உழைப்பாளிகளின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் துபாய் நிலத் துறையின் இந்த அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகிறது.

இந்திய முதலீட்டாளர்கள் 2014 முதல் அரையாண்டில் சுமார் 17 ஆயிரம் கோடி இந்திய பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் மொத்தம் 4, 417 நிலப் பரிமாற்றத்தை இந்தியர்கள் நடத்தியுள்ளனர் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்த இரு இடங்களைப் பெறுகின்றனர். ரூ.34 ஆயிரம் கோடி அளவுக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு

செய்துள்ளனர். துபாய் நிலத் துறையின் அறிக்கையின் படி இவர்கள் 9,739 நிலப் பரிமாற்றத்தை நடத்தியுள்ளனர். அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் 2,258 நிலப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.10ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளார்கள். பாகிஸ்தானியர்கள் 3,064 நிலப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.7500 கோடி முதலீடுசெய்துள்ளார்கள்.

ஈரானியர்களும் கனடியர்களும் இதற்கு அடுத்த நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெறுகின்றனர். ஈரானி யர்கள் ரூ.4500 கோடி ரூபாயும் கனடியர்கள் ரூ.3200 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளார்கள். ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் சீனர்களும் அடுத்த ஆறு, ஏழு, எட்டாம் இடங்களைப் பெறுகிறார்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, கனடா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ரூ.50,420 கோடி அளவுக்கு 2014 முதல் அரையாண்டில் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்துள்ளனர். இவர்கள் மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலப் பரிமாற்றத்தை நடத்தியுள்ளனர். இந்த முதலீட்டாளர் களின் இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின் மூலம் துபாயின் ரியல் எஸ்டேட் சிறப்பான வளர்ச்சி கண்டுவருவது நிரூபணமாகியுள்ளது என துபாய் நிலத் துறையின் இயக்குநர் சுல்தான் பட்டி பின் மெஜ்ரென் தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:20 am

சௌதி அரேபியாவில் மரண தண்டனைகள் அதிகரிப்பு

சௌதி அரேபியாவில் இந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.

ஒருவர் பில்லி சூன்யம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சிரச்சேதம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்டு 4ம் தேதியிலிருந்து 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு கூறுகிறது.

போதைப் பொருட்கள் கடத்தியது போன்ற வன்செயல் அல்லாத குற்றங்களுக்காக எட்டு பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர் என்று இந்த அமைப்பு கூறுகிறது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் நால்வர் சௌதி அரேபியாவுக்குள் ஹஷிஷ் என்ற போதைப் பொருளை கடத்தி வர முயன்றதாகக் குற்றம் காணப்பட்டவர்கள் என்று தெரிகிறது.



உலகச் செய்திகள்!  - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 33 of 81 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக