புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
74 Posts - 44%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
6 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
6 Posts - 4%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
10 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
8 Posts - 4%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 57 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 57 of 81 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 69 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 57 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:04 pm

எல்லைப்பிரச்சினையை ஒருநாள் இரவில் தீர்த்து விட முடியாது: சீனா சொல்கிறது

பிரதமர் நரேந்திர மோடி நாளை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினையை ஒருநாள் இரவில் தீர்த்து விட முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக வியாழக்கிழமை சீனா செல்கிறார். அங்குள்ள மிகவும் பழமையான நகரமும், அதிபர் ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சான்சியின் தலைநகருமான சியான் நகரை அவர் சென்றடைகிறார்.அங்கு மோடியை வரவேற்கும் ஜின்பிங், அவருடன் சாதாரண முறையில் பேச்சு நடத்துகிறார். அப்போது எல்லைப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகிறார்கள்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். எல்லை தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள் குறித்து பேச்சுவார்த்தையில் போது விவாதிக்கப்படும். இரு தரப்பும் எல்லைப்பிரச்சினையை விரைவாகவே தீர்க்க தயாராக இருக்கிறது. இதை தீர்க்க நாம் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். எல்லை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விரைவான தீர்வு காணப்படவேண்டும் என்பதுதான் இரு தரப்புக்குமான விருப்பம். எனினும் எல்லைப்பிரச்சினை என்பது வரலாறுகளில் எஞ்சியுள்ள கேள்வியாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் ஒருநாள் இரவில் தீர்க்கப்படக்கூடியது அல்ல” என்றார்.




உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 5:00 pm

ஆப்கான் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு, தலிபான் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் ‘பார்க் பேலஸ்’ என்ற விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு நேற்றுஇரவு, பிரபல இசைக்கலைஞர் அல்டாப் உசேன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு துருக்கி, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விருந்தினர்களுடன், உள்நாட்டினரும் வந்திருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 4 இந்தியர்கள், ஒரு அமெரிக்கர் உள்பட 11 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரும், சிறப்பு படையினரும் அங்கு விரைந்தனர். அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது.

7 மணி நேர சண்டைக்கு பின்னர் அதிகாலைதான் இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இறுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆனது. விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமர் சின்கா வந்திருப்பார் என்ற எண்ணத்தில் அவரைக் குறிவைத்துத்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று கூறுகிறது.

தாக்குதல் தொடர்பாக இந்திய தூதர் அமர் சின்கா, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘துரதிர்ஷ்டவசமாக காபூல் விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் மற்றவர்களுடன் இந்தியர்கள் சிலரும் பலியாகி விட்டனர்’ என குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் பலியானதை ஆப்கான் அரசு வட்டாரங்கள் உறுதி செய்தன. அவர்களில் 2 பேர் ஆடிட்டர்கள் என்றும், ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டதை அந்த நாட்டின் தூதரக செய்தி தொடர்பாளர் மோனிகா கன்னிங்ஸ் உறுதி செய்தார்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ‘காபூலில் அதிபர் அஷரப் கனியின் அரசுக்கு அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் ஆதரவு அளித்து வருவதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள வெளிநாட்டு படையினர், எந்த இடத்திலும் எங்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருந்து விட முடியாது என்பதை உணர வேண்டும்’ என தலிபான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 3:43 am

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் 55 பேர் பலி

இரண்டு கிராமங்கள் மீது போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 அப்பாவி போது மக்கள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு நைஜீரிய அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வெடி குண்டு மற்றும் அப்பாவி மக்களை சுட்டு கொல்வது என பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைதுகுரி நகரின் அருகே இருக்கும் பேல் மற்றும் காயாமலா என்ற இரு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பேல் கிராமத்தை சேர்ந்த 30 பேரும் காயாமலா கிராமத்தில் 25 பேரையும் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 4:33 am

இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!

இந்தோனேசிய ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது கொடூரமான, மனிதத்தன்மையற்ற, தரம் தாழ்ந்த செயல் என மனித உரிமைகள் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

எனினும் நல்ல நடத்தையற்றவர்களால் ராணுவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்று தெரிவித்துள்ள இந்தோனேசிய ராணுவம், அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் இத்தகைய பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.

இந்நிலையில் அனைத்துலக மனித உரிமை சட்டத்தின்படி, இவ்வாறு பரிசோதனை நடத்துவது தவறு என்றும் இந்த நடவடிக்கையை இந்தோனேசிய ராணுவம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் என்ற குழு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கையானது பாலியல் ரீதியான வன்முறை என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கன்னித்தன்மை பரிசோதனைக்காக இந்தோனேசிய ராணுவம் பின்பற்றும் முறை அறிவியல் அடிப்படையற்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிலரை பேட்டி கண்டுள்ள இந்த அமைப்பு, இந்த பரிசோதனை மிகவும் வலி மிகுந்ததாகவும், மன உளைச்சல் தருவதாகவும் இருந்தது என சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஒழுக்கமற்ற பெண்கள் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க இத்தகைய பரிசோதனை அவசியம் என இந்தோனேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபட் பஸ்யா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தான் இந்நாடு இன்னும் முன்னேறாமல் உள்ளது என நினைக்கிறேன்!



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 6:56 am

செய்திகளுக்கு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 12:46 am

நேபாளில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைக்க வாய்ப்பு

கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மீண்டும் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா அங்கு ஆளுங்கட்சியை மாற்றம் செய்து எதிர்கட்சிகள் என்ற பாகுபாடின்றி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே தேசிய அரசாக அமைக்க தயாராக இருப்பதாக தகவல்தொடர்பு துறை மந்திரி மைனேந்திர ரிஜால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற கொய்ராலா தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் இதுவரை எவ்விதமான முன்னேற்ற நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அங்குள்ள பல அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளில் பிரிந்து கிடக்கின்றன. குறிப்பாக, ஆட்சி செய்யும் முறை, தேர்தல் முறை, நீதி மற்றும் அரசியல் கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிளவுபட்டு கிடக்கின்றன.

நிலநடுக்க பேரழிவும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், அரசின் நடவடிக்கைகளின் மேல் சந்தேகப்பட்டு எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதை விட அனைவரும் ஒன்றிணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீ்ட்டுவதே சிறந்தது என ரிஜால் தெரிவித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 12:46 am

மாப்பிள்ளையின் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும்: சவுதி இளம்பெண்கள் போர்க்கொடி

திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதற்கு சவுதி அரசு அனுமதி அளித்து விட்டால் அரபு நாடுகளில் பெண்களுக்கு இவ்வகை உரிமையை அளித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

பெண்களுக்கான திருமணத்தை நிச்சயிக்கும் குடும்ப தலைவரான தந்தை, மணமகன் வசதியானவராக இருக்கிறாரா? மத ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில் எப்படி உள்ளார்? என்பதை மட்டுமே அளவுக்கோலாக வைத்து மாப்பிள்ளை தேடுவதால் அவரது கடந்தகால வாழ்க்கையை பின்னாளில் அறியவரும் பெண்கள் விவாகரத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்படி, 70 சதவீதம் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.

இதை தவிர்க்கும் வகையில் சவுதி பெண்களுக்கு வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வழங்கப்பட வேண்டும் என கருத்து கூறும் குடும்பநல பெண் வழக்கறிஞரான நஜ்வா சலா, அதே வேளையில், திருமணத்துக்கு முன்னர் சற்று முரண்பாடான முறையில் வாழ்ந்துள்ளார் என்பதை வைத்து, ஒரு ஆணை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. முன்னர் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி, திருந்தி, திருமணத்துக்கு பின்னர் ஒழுக்கசீலர்களாக வாழும் ஆண்களும் உண்டு என்பதை நாம் மறுத்துவிட முடியாது எனவும் இவர் குறிப்பிடுகிறார்.

சவுதி அரசின் சட்ட ஆலோசகரான மருத்துவர் அஹமது அல்-முஆபி, இந்த கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து ரகசியங்களுக்கும் போர்வையாக நானே இருக்கிறேன் என்று இறைவன் கூறியுள்ளான். இந்த கோரிக்கை அந்த காரணத்தை அர்த்தமற்றதாக்கி விடும். திருமணம் என்பது ஒரு ஆணின் அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்தும் நிர்ப்பந்த நிகழ்ச்சி அல்ல. இப்படி அனைத்து விஷயங்களையும் மணமகளுடன் பகிர்ந்து கொண்டால் கணவர்கள் மீது மனைவியரின் பிடி இறுகிவிடும்.

ஒரு ஆணின் ரகசியம் அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அதை வெளிப்படுத்த வேண்டும் என யாரையும் வற்புறுத்த கூடாது. குறைகளோ, பிரச்சனைகளோ இல்லாத ஒரு ஆண்மகனை இந்த உலகில் பார்ப்பது மிகவும் மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 19, 2015 9:37 am

சிவா wrote:இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1136885

உலகில் பல நாடுகளிலும் நடப்பது தானே..!! சில நாடுகளில் ஆண்களுக்கும் கூட



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:08 pm

SajeevJino wrote:
சிவா wrote:இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1136885

உலகில் பல நாடுகளிலும் நடப்பது தானே..!! சில நாடுகளில் ஆண்களுக்கும் கூட

நம் நாட்டில் இல்லைதானே! அதுவரை மகிழ்ச்சி!



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:14 pm

55 ஆண்டுகளில் முதல்முறையாக பணவாட்டத்தை சந்தித்த பிரிட்டன்

பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள், மூலதனப் பொருட்கள் என எல்லாவற்றின் விலைகளும் குறைந்திருக்கும். வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் '0' சதவீதத்தை விட குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது. ஆனால், பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கும்.

நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரையில் அங்கு கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் 0 சதவீதமாக இருந்தது. கடந்த 1960-க்கு பிறகு முதல்முறையாக கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் நெகட்டிவ்வாக வந்துள்ளது. குறிப்பாக, விமானம் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தில் கட்டணங்கள் குறைந்துள்ளன. தொடர்ந்து பணவாட்டத்தின் விகிதம் பிரிட்டனில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறு பணவாட்டம் அதிகரிப்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 57 of 81 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 69 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக