புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
61 Posts - 46%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
419 Posts - 48%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
28 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 28 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 28 of 81 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 54 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 28 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:33 am

குர்திஷ் அரசியல்வாதியான பெளட் மஸ்சூம் ஈராக் அதிபராகத் தேர்வு

உலகச் செய்திகள்!  - Page 28 298e8ee6-2cae-4477-8869-2aa9ce87bb4c_S_secvpfகுர்திஷ் அரசியல்வாதியான பௌட் மஸ்சூம்(77) பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஈராக்கின் புதிய அதிபராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் தற்போதைய அதிபரான ஜலால் தலபானியின் குர்திஸ்தான் கட்சியின் தேசபக்தி யூனியனை நிறுவியவர்களில் மஸ்சூமும் ஒருவராவார். அரபு நாடுகளின் சன்னி மற்றும் ஷியா பிரிவு அரசியல்வாதிகளுடன் நல்ல உறவுகளை நிர்வகித்துவரும் மென்மையான மிதவாதி என்று இவர் அறியப்படுகின்றார்.

பெரும்பாலும் அலங்காரத் தேர்வாகக் கருதப்படும் இந்த அதிபர் பதவிக்குத் தங்களுடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க குர்திஷ் பிளாக்கிற்கு அதிக நேரம் தேவைப்பட்டதால் அதிபர் வாக்கெடுப்பு ஒரு நாள் தள்ளிப் போடப்பட்டது. மஸ்சூமை தங்கள் வேட்பாளராக அவர்கள் நேற்று இரவுதான் அறிவித்தனர்.

கடந்த 2003ஆம் ஆண்டில் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபோது குர்து இனத்தவர் அதிபராக இருக்க ஷியா பிரிவைச் சேர்ந்தவர் பிரதமராகவும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர் பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:36 am

ஈராக்கில் உள்ள பெண்களின் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள ஜிஹாதிப் போராளிகள்

கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில் வாழும் 11 வயதிலிருந்து 46 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் பெண் உறுப்பு சிதைப்பை சமய அரசாணையாக இந்த இயக்கம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படும் இந்த சம்பவம் ஈராக்கில் அசாதாரணமானதாகக் கருதப்படுகின்றது. நாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளில்தான் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது என்று ஈராக்கில் பணிபுரியும் ஐ.நா.வின் இரண்டாவது மூத்த அதிகாரியான ஜாக்குலின் பட்காக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை தெரிய வந்துள்ள இந்த ஆணையால் நான்கு மில்லியனுக்கும் மேலான பெண்களும், சிறுமிகளும் பாதிக்கப்படுவார்கள். எனினும் இதுகுறித்த துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்று அவர் கூறினார். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தங்களது புதிய இஸ்லாமிய அரசுக்கு தலைநகராக அறிவித்துள்ள மொசுல் நகரில் பண்டைய கிறிஸ்துவ இனத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் மட்டுமே தங்கியுள்ளதாகவும் மற்றவர்கள் குர்திஷ் இனத்தவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வடக்குப் பகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் பட்காக் தெரிவித்தார்.

இவர்களில் சிலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாகவும் அவ்வாறு மாற விருப்பம் இல்லாதவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் முஸ்லிம் அல்லாதோர் மீது விதித்துள்ள ஜிய்சா வரியை செலுத்தும் எண்ணத்தில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:44 am

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: சாலையில் வரிசையாக நிறுத்தி 15 பயணிகளை சுட்டுக்கொன்ற கும்பல்

ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றுள்ள தலிபான் போராளிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் இரண்டு வாகனங்களை வழிமறித்து அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கியுள்ளனர். அவர்களை சாலையோரம் வரிசையாக நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக சுட்டுக்கொன்றுள்ளனர். இவ்வாறு 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் அங்கிருந்து நைசாக தப்பிவிட்டார்.

இந்த படுகொலைக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்படும்போது அந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நேற்று ஹெராத் நகரில் பின்லாந்து தொண்டுநிறுவன பெண் ஊழியர்கள் இரண்டு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 5:40 am

12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காசா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர்.

அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.

இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியை அவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 19 நாட்களாக நீடித்து வரும் இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சி பலனளிக்கவில்லை.

இந்த மோதல்களின் விளைவாக சுமார் 850 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் தரப்பிலும் 36 பேர் பலியாகியுள்ளனர்.

தாக்குதலில் சிக்கி காயமடைந்த பாலஸ்தீனியர்களை ஆஸ்பத்திரிகளுக்கு கூட கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், இது ரமலான் நோன்புக் காலமாக உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ளவும், அவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்கவும் வசதியாக இரு தரப்பினரும் சில மணி நேரங்களுக்காவது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் 12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 5:42 am

சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் 4 மும்பை வாலிபர்கள்

ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி புதிய ஆட்சி அமைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் படையில் மும்பையை சேர்ந்த 4 வாலிபர்கள் இணைந்துள்ள தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் மும்பையில் இருக்கும் தனது தந்தைக்கு போன் செய்து, நானும் எனது நண்பர்கள் 3 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்ந்து விட்டதாகவும், சிரியாவில் உள்ள ரக்கா மாகாணத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் இறுதியில் மும்பையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களுக்கு ‘உம்ரா’ செய்யச் சென்ற 30 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருந்த ஆரிப் மஜீத், சலீம் தன்கி, அமான் தண்டல், பஹாத் ஷேக் ஆகியோர் ஈராக்கில் திடீரென்று காணாமல் போயினர்.

இவர்கள் கார் மூலம் ஈராக்கின் மொசுல் நகருக்கு சென்று அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்ந்து விட்டுள்ளனர். தற்போது சிரியாவின் ரக்கா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்த 4 பேரும் இரு குழுக்களில் இணைந்து போரிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இவர்களை தானேவில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபர் ‘மூளைச் சலவை’ செய்து, நிதி உதவியும் செய்து ஈராக்குக்கு ‘உம்ரா’ என்ற போர்வையில் அனுப்பி வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர்களில் தனது தந்தையுடன் போனில் பேசிய ஆரிப், சிரியாவில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாங்கள் செய்யும் ‘வேலையினால்’ தங்களது ஒட்டு மொத்த குடும்பத்துக்குமே சொர்க்கத்தில் இடம் கிடைத்து விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 5:43 am

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா., அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் ஒருபுறம் வலியுறுத்தினாலும் தாக்குதல் நின்றபாடில்லை.

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வரும் ஹமாஸ் போராளிகளை அழிக்க காசா மீது இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழித் தாக்குதலும் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்ரேல் போலீசாருடன் மோதலில் ஈடுபடுவதால் அவர்களிலும் பலர் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், 18-வது நாளான இன்று இஸ்ரேல் ராணுவம் பல்வேறு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியது. ரபாவில் நடந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் மூத்த தலைவர் சலாஹ் ஹசானென், அவரது 12 வயது மற்றும் 15 வயது மகன்கள் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள டெயிட் அல்-பலாஹ் நகரில் நடந்த தாக்குதலில் 23 வயது கர்ப்பிணி பலியானார். ஆனால், ஆபரேசன் செய்து அவரது வயிற்றில் உள்ள குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர்.

இதன்மூலம் காசாவில் சாவு எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 8-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு 5240 பேர் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதாக போராளிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிக்குழுவின் முக்கிய கமாண்டர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:35 pm

சிரியாவில் ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன

சிரியாவில் கடந்த 3 வருடங்களாக ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில், 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜிகாதிகள் எனப்படும் இஸ்லாமிய போராளிகள் எனப்படுபவர்கள் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களில் ராகா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஜிகாதிகள் எனப்படும் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 85 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில், 50 வீரர்களுடன் வேறு 19 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் 16 பேர் பலியானார்கள். கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான படை வீரர்கள் திரும்ப பெறப்பட்டு பாதுகாப்பான இடங்க­ளுக்கு சென்றனர்.

அவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் கிராமத்தில் ஐ.எஸ். எனப்படும் ஜிகாதிகளுக்கு எதிரானவர்கள் குடியிருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அல்லது படை வீரர்கள் அருகிலுள்ள படை தளத்திற்கு சென்றிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. எனினும், 200 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்று அமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் சிலரது தலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை ராகா நகரில் காட்சிக்காக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜிகாதி போராளிகள் புகைப்படங்களாக எடுத்து அவற்றை டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளனர். யூ டியூபிலும், வீடியோ புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளதுடன், சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் புகைப்படத்தை எரிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:36 pm

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் வழங்கிய இந்திய பெண் டாக்டர் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய பெண் டாக்டரான நிவேதிதா மொகந்தி, கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2013 வரை இங்கிலாந்தின் ஸ்டாபோர்டு மருத்துவமனையில் மருந்துகள் பிரிவுத்தலைவராக பணியாற்றி வந்தார்.

இவர் அமெரிக்காவில், நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்ட 100–க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிகோடோன், பென்டானில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மருந்துவகைகளை வழங்கினார். இந்த மருந்து மாத்திரைகளால் அவரிடம் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி உயிரிழந்தார். மேலும் பலருக்கு உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக டாக்டர் நிவேதிதா மொகந்தி மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு அவரது மருத்துவ உரிமத்தை விர்ஜீனியா மருத்துவ வாரியம் தடை செய்தது. மேலும் அவர் மீது அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்துகள் வினியோகித்தல், நிதி மோசடி, சுகாதார மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என தெரிகிறது.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:41 pm

சீனாவில் வானுயர்ந்த கட்டிடங்களால் விமானங்கள் அடிக்கடி விபத்து; அதிர்ச்சிகர தகவல்

சீனாவில் உள்ள ராணுவ விமான தளங்களில் பெரும்பாலானவை அங்குள்ள வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 100 விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 10-க்கும் மேற்பட்ட ராணுவ விமான தளங்கள் வேறு வழியின்றி மூடப்பட்டுவிட்டன. நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் சீனாவில் பல நகரங்கள் புதிது புதிதாக உருவாகி வருகிறது.

1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி அதிக உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளன. அதனால், விமான ஓடுபாதையில் இருந்து எழுந்து மேலே பறந்து செல்வதிலும், கீழே இறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சீன ராணுவத்தின் விமான படை அதிகாரிகள் அவ்வபோது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளது.

இந்நிலையில், சீன அரசும் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு புதிய சட்ட விதிமுறைக்கு ஒப்புதல் அளித்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால், அண்மையில் சீன அரசு ராணுவ தளங்களின் அருகில் குறைந்த உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:50 pm

நெகாரா-கு பதிவு செய்யப்படமாட்டாது - ஹமிடி

உலகச் செய்திகள்!  - Page 28 ZtbCCGLRQA0uKpWNRiVg+Zahid-Hamidi-Negara-ku-300x180இனவாத எதிர்ப்பு அரச சார்பற்ற நெகாரா-கு என்ற புதிய அமைப்பை தமது அமைச்சு அதன் தற்போதைய பெயரில் பதிவு செய்யாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று அறிவித்தார்.

அம்பிகா மற்றும் சாமாட் சாயிட் ஆகியோரால் வழிநடத்தப்படும் இந்த இயக்கம் பதிவு செய்யப்படுவதற்கு சங்கப் பதிவாளரிடம் இன்னும் மனு செய்யவில்லை.

“அப்படி பதிவு செய்வதற்கு அது சங்கப் பதிவு அதிகாரியிடம் (ரோஸ்) மனு செய்தாலும், நெகாரா-கு என்ற பெயர் பொருத்தமானதாக இல்லை, ஏனென்றால் அது மலேசியாவுக்கு சொந்தமானதாகும்.

“நெகாரா-கு என்பது நெகாராகு என்ற கீதத்தைக் குறிப்பிடுகிறது. அது தேசிய கீதம் சட்டம் 1968 செக்சன் 2 இன் கீழ் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

“அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். சங்கங்கள் சட்டம் 1966 செக்சன் 7(3)(d)(i) மற்றும் (iii) இன்கீழ் அது பதிவு செய்யப்படக்கூடாது”, என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 28 of 81 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 54 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக