புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10 
42 Posts - 63%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 27 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 27 of 81 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 27 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:00 pm

ஏமனில் கிளர்ச்சியாளர்கள்-இஸ்லாமியர்கள் மோதல்: 35 பேர் சாவு

ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நடந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 35 பேர் இறந்தனர்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜோப் மாகாணத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், பழமைவாத சன்னி இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நேற்று முதல் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளூர் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதில் இதுவரை 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் ஹாவ்தி கிளர்ச்சியாளக்ள் வடக்குப் பகுதியில் உள்ள அம்ரான் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஏற்கனவே சாடா மாகாணமும் அவர்களின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:05 pm

பாகிஸ்தான் ராணுவ விமான குண்டு வீச்சு தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய விமான குண்டு வீச்சு தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியாகினர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்து வந்தன. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் கராச்சி விமானம் நிலையம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 37 பேர் பலியாகினர். இதையடுத்து கடந்த மாதம் முதல் அந்தப் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள், தலீபான் முகாம்களை குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்து வந்தன. இதில் 400க்கும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், வடக்கு வாஜிரிஸ்தானின் தலைநகராக செயல்பட்டு வந்த மீரான் ஷாவையும் ராணுவம் கைப்பற்றியது.

இதற்கிடையே வடக்கு வசிரிஸ்தானில், மிர் அலி நகருக்கு அருகே அமைந்துள்ள பதே கேல் கிராமத்தில் நேற்று தலீபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 ராணுவத்தினரும் உயிரிழந்தனர். இந்நிலையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடங்கள் மீது இன்று பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் குண்டு வீசின. இந்த தாக்குதலில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 3:45 am

காசாவில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்: இரு தரப்பிலும் ஞாயிறன்று சேதாரம் அதிகம்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் 87 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரே பகுதியை சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ் கூறுகையில், காசாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெஜய்யாவில் பெருமளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். தங்களது தாக்குதல் மேலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தாங்கள் உயிருடன் பிடித்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்தனர். அவர்களது அறிவிப்பை வாழ்த்தும் விதமாக காசா முழுவதும் துப்பாக்கி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆனால் தங்களது வீரர் ஒருவர் பிடிபட்டதை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 3:45 am

ஜப்பானில் நில நடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி காலை 2.32 மணிக்கு பசிபிக் கடலில் உள்ள வட கிழக்கு பகுதியான ஹொக்கைடோ தீவுகளில் 60 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தீவு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு அருகில் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 12:47 am

காசா மீது இஸ்ரேல் ராணுவம் உக்கிர தாக்குதல்: சாவு 535 ஆக அதிகரிப்பு

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் போர் இன்று 14-வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்கள் பலியாவதைத் தடுக்க உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியபோதும், சண்டை நின்றபாடில்லை. உக்கிரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் இப்போது தரைப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருகின்றனர்.

இந்த தொடர் சண்டையில் இதுவரை 535 பாலஸ்தீனியர்களும், 20 இஸ்ரேலியர்களும் இறந்துள்ளனர். மேலும், தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஊடுருவ முயன்ற 10 ஹமாஸ் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுரங்கப்பாதைகள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக வடக்கு காசாவில் இருந்து இரண்டு குழுக்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றபோது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதலில் பல வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காசாவில் வேலை பார்த்த 4 இந்திய தையல் தொழிலாளர்கள் ரமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகத்தின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.




உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 1:27 am

லிபியா விமான நிலையத்தில் போராளிக்குழுவினர் கடும் சண்டை: ஒரே நாளில் 47 பேர் சாவு

லிபியாவில் தலைவர் திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக போராளிகள் குழுவினரிடையே கடந்த ஒரு வார காலமாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

மேற்கு நகரமான ஜின்டானில் உள்ள சக்திவாய்ந்த போராளி குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தை கிழக்கு திரிபோலி மிஸ்ரடா போராளிகள் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். துப்பாக்கி சூடும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஒரு விமானம் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தையடுத்து நேற்று மீண்டும் சண்டை ஆரம்பித்தது. 24 மணி நேரத்தில் மட்டும் 47 பேர் இறந்ததாகவும், 120 பேர் காயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளால் மோசமான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. போராளிக் குழுக்களை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:23 am

ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்

ஆப்கானிஸ்தானில் குண்டுஷ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சமீபத்தில் கற்பழிக்கப்பட்டாள். அவளை அக்கிராமத்தை சேர்ந்த 45 வயது தலைவர் கற்பழித்து விட்டார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். சிகிச்சைக்குப் பின் பெண்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறாள். இதற்கிடையே, கற்பழிக்கப்பட்ட சிறுமியை கருணை கொலை செய்யும்படி அவளது தந்தையை கிராம மக்கள் மிரட்டுகின்றனர். அவளால் அக்கிராமத்துக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக கருதுகின்றனர்

இதற்கிடையே கற்பழித்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கிராம தலைவர் தெரிவித்தார். ஆனால் அவள் சிறுமி என்பதால் திருமணம் செய்து தர பெற்றோர் மறுத்துவிட்டனர்.

[note]இப்படிக் கேவலமான மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களே! இதில் இவன் கிராம தலைவராம்! இவனது பிறப்புறுப்பை வெட்டி எறிய வேண்டும்.[/note]



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:25 am

இஸ்ரேல் தரப்பில் காஸாவில் சண்டையிட்ட 2 அமெரிக்க வீரர்கள் பலி

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைப்படை தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போரில் ஹமாஸ் தரப்பில் நூற்றுக்கணக்கான போராளிகளும், இஸ்ரேல் தரப்பில் 18 ராணுவ வீரர்களும் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து காஸாவுடன் சண்டையிட்ட 2 அமெரிக்க வீரர்கள் ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

பலியானவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த மேக்ஸ் ஸ்டிய்ன்பெர்க்(24) மற்றும் புளோரிடாவை சேர்ந்த நிஸ்ஸிம் சியென் கர்மேலி(21) என்பது தெரிய வந்துள்ளது. காஸா போரில் தனது மகன் பலியானதை மேக்ஸ் ஸ்டிய்ன்பெர்க்-கின் தந்தை ஸ்டுவார்ட் ஸ்டிய்ன்பெர்க் நேற்று உறுதிபடுத்தியுள்ளார்.

[note]அமெரிக்காவும், இஸ்ரேலும் என்றும் அண்ணன் தம்பிகள் தான். வெளியுலகிற்காக சில பொய்யான அறிவுப்புக்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக வெளியிடுமே தவிர அவை உண்மையாக இருக்காது![/note]



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 23, 2014 3:32 pm

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 27 201407231454435945_Bombings-shootings-leave-23-dead-in-Iraq_SECVPFஈராக்கில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷியா அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மொசூல் நகரை கைப்பற்றியதோடு, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் காதிமியா மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் காரை மோதி வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 23 பேர் பலியானார்கள். ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கிடையே பலூஜா மாவட்டத்தில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 328 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் ஈராக் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 23, 2014 4:11 pm

பாலஸ்தீனர்கள் பலி 600–ஐ எட்டுகிறது இஸ்ரேல்–ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே சண்டை நிறுத்தம் வருமா?

உலகச் செய்திகள்!  - Page 27 201407230111547001_Palestinians-killed-600-hitsWill-IsraelHamas-ceasefire_SECVPFஇஸ்ரேல் நாட்டுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான சண்டை நேற்று 15–வது நாளாக நீடித்தது.

காஸா முனையில் நேற்று ஒரு ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயம் அடைந்தனர். பல டாக்டர்களும் காயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியது.

மத்திய காஸாவில், டெயிர் எல் பாலா என்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், இஸ்ரேல் தாக்குதலில் நேற்று உயிரிழந்தனர்.

இவர்களையும் சேர்த்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் அப்பாவி மக்கள்தான். 3 ஆயிரத்து 640 பேர் காயம் அடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இஸ்ரேல் தரப்பில் பலி எண்ணிக்கை 27 ஆகி உள்ளது.

காணாமல் போய் விட்டதாக கூறப்பட்ட இஸ்ரேல் வீரர் ஒருவர் காஸா முனையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சண்டை நிறுத்தத்துக்கான அறிகுறிகள் தெரியாவிட்டாலும் கூட, தற்போது எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 27 of 81 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக