புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
100 Posts - 48%
heezulia
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
7 Posts - 3%
prajai
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
2 Posts - 1%
cordiac
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
227 Posts - 51%
heezulia
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
18 Posts - 4%
prajai
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடலில் கலக்காத நதி! Poll_c10கடலில் கலக்காத நதி! Poll_m10கடலில் கலக்காத நதி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் கலக்காத நதி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 17, 2013 4:30 pm

உலகில் தோன்றும் நதிகள் பலவும் தனது பயணத்தின் முடிவில் கடலில் கலந்துவிடுகின்றன. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கில் தென்பாண்டி நாட்டை நோக்கி நடைபயிலும் வையை எனும் பொய்யாக் குலக்கொடி மட்டும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள நிலங்களை வளப்படுத்தி, கடலில் சென்று கலக்காமல் தனது பயணத்தை அத்துடன் நிறைவு செய்து கொள்கிறாள்.

தமிழ்ப் புலவர் ஒருவருக்கு வையையின் போக்கு அதிசயமாக இருக்கிறது. இக் கேள்விக்கு விடை கிடைக்காமல் மனம் வாடிய புலவர், முடிவில் வையையிடமே வினாத் தொடுக்கிறார்.

"வையை எனும் பொய்யாக் குலக்கொடியே! மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்குபவளே! நீ ஏன் கடலில் கலக்காமல் கட்டிளம் காளையைக் கண்ட கன்னிப்பெண் போல் நாணம் கொண்டு கடலினின்றும் நெடுந்தூரம் ஒதுங்கி நிற்கிறாய்? உனக்குக் கடலைப் பார்த்து ஏன் இந்த நாணம்! நீ மட்டும் ஏன் தனிப்பாதை கொண்டாய் என்பதை நீ எனக்கு விளக்கமாகச் சொல்?'' என்கிறார்.

புலவரின் கேள்விக்கு வையை பதிலளிக்கிறாள்: ""தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சு கடலில் கலந்தது. உலக உயிர்களை உய்விக்கும் பொருட்டு, சிவன் அந்த நஞ்சை உண்டு நீலகண்டன் என்னும் பெயர் பெற்றார். எல்லாம்வல்ல எம் சிவனுக்கே நஞ்சளித்த பாவியல்லவா இந்தக் கடல். இவளை ஏரெடுத்தும் பார்க்கலாமா? அன்னையை இடப்பாகம் கொண்ட எம் பெருமானுக்கு அக்கடல் நஞ்சு அளித்த பாவியாதலால், எனது பயணத்தை தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டில் முடித்துக் கொள்கிறேன். எனது பயணத்தின் இருபுறமும் உள்ள தமிழ் மக்களையும், அவர்களின் வாழ்வையும் வளப்படுத்துகிறேன். எனவேதான், நான் கடலின் சென்று கலக்கவில்லை''.

÷புலவருக்கு உண்மை புரிந்தது. ""இனி யாரும் உன்னைக் கடலில் கலக்காத வையை எனும் பழியைச் சுமத்த மாட்டார்கள். நீ கடலின் முந்தைய செயலுக்காகப் பழித்து, அங்கு சங்கமிக்காமல் இருப்பது முற்றிலும் சரிதான். உனது உள்ளக் கிடக்கையை நான் உலகுக்கு அறிவிக்கிறேன்'' என்று கூறிய புலவர் ஒரு பாடல் பாடினார். இப்பாடல், அச்சில் வராத தனிப்பாடலாகும்.

nandri-dinamani

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 17, 2013 4:33 pm

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார். ‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Mon Jun 17, 2013 7:55 pm

கொழப்பம இருக்குதே கலகுத இல்லையா?

ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Mon Jun 17, 2013 7:56 pm

கொழப்பம இருக்குதே கலகுத இல்லையா?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jun 17, 2013 8:01 pm

வைகை நதி கடலில் கலக்காது .

[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 17, 2013 11:07 pm

தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக