புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 3%
prajai
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
kargan86
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 4%
prajai
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 4 matches for பாஜக

Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் F3iz7Nh


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – நேற்று இரவு முதல் இப்போதுவரை நடந்தது என்ன?


தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் நேற்று இரவிலிருந்து பரபரப்பான பல காட்சிகள் அரங்கேறின. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.


ஜூன் 13, செவ்வாய்க்கிழமை காலை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல இருந்த நிலையில் காரில் இருந்த செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாகக் கூறி, கதறி அழுது துடித்ததால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

ஜூன் 14, புதன்கிழமை காலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். இதன்பிறகு, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார்: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? … சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

ஜூன் 14, புதன்கிழமை காலை: சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தநாளப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும் ஒரு அறிக்கையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டது. மேலும் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தது.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அளித்த அறிக்கையில் “இது விசாரணை அல்ல; பழிவாங்கும் நடவடிக்கை,” என்று கூறினர்.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: அமலாகத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு உட்பட, மூன்று மனுக்களின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. இவற்றின்மீதான தீர்ப்பை நீதிமன்றம் நாளைக்கு (ஜூன் 15, வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

குறிச்சொற்கள் #செந்தில்_பாலாஜி #திமுக. #ஸ்டாலின் #பாஜக
Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் Annamalai-eegarai

டெல்லி சென்றுவிட்டு வந்த வேகத்தில் தமிழக மாகாணம் தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கும் விஷயம் பல விஷயங்களை உறுதிபடுத்துகின்றது,

முதலாவது தமிழக பாஜகவின் தலைவராக அவர்தான் இனி நீடிப்பார், அவரின் பதவிகாலம் முடிந்தபின்பும் சிறப்பு அந்தஸ்து கொண்ட தலைவராக் நீடிப்பார் அதனில் மாற்றமில்லை

இரண்டாவது அண்ணாமலை அரசியல் செய்ய வரவில்லை, வழமையான கூட்டணி தொகுதி நிலவரம், தந்திர அரசிய என எதற்கும் அனுப்பபடவில்லை, அவர் ஒரு புல்டோசர் போல அனுப்பபட்டிருக்கின்றார் அதை சரியாக செய்ய டெல்லி முழு ஒத்துழைப்பு வழங்கும்

மூன்றாவது என்னதான் 2026 சட்டசபை தேர்தல் இலக்கு என அவர் சொன்னாலும் நிஜத்தில் கட்சியின் வெற்றி தோல்வியினை பற்றி கொஞ்சமும் கவலைபடாது அடித்து ஆடும் அரசியல் , இது தமிழகத்திற்கு புதிது

இப்படி பல விஷயங்களை சொல்லி அண்ணாமலை மேல் பாயும் எல்லா பாஜகவினருக்கும் தலையில் மெல்ல தட்டி வாயை அடக்க வைத்து உட்கர வைத்திருக்கின்றது டெல்லி

வந்த வேகத்தில் திமுகவின் 27 பேருக்கு 2 லட்சத்து 20 ஆயிர்ம கோடி சொத்து என அவர் அறிவித்திருப்பது டெல்லியின் அதிரடி அரசியல் தொடங்கிவிட்டது, பாஜக பெரும் முடிவோடு தமிழகத்தை முற்றுகை இட்டுவிட்டது என்பதை சொல்கின்றது

என்னதான் மக்களாட்சி என்றாலும் இங்கு நடப்பது மன்னர்கால அரசியல், அரசியல் அப்படித்தான் உருவம் மாறுமே தவிர அடிப்படை மாறாது

பாஜக எனும் பெரும் அரசனுக்கு கப்பம் கட்ட திமுக ரெடி, அதிமுகவும் தயார்

இங்கு கூடுதல் கப்பம் அதாவது எம்பிக்கள் தர அதிமுக தயார்

ஆனால் இரண்டும் வேண்டாம் நேரடியாக இனி என் ஆட்சி என பாஜக களமிறங்குகின்றது, அதன் தளபதி அண்ணாமலை

அவர் ஏப்ரல் 14ம் தேதி சொல்லபோகும் பட்டியல்தான் முதலில் வீசபடும் பெரும் குண்டு, அதை தொடர்ந்துதான் கோட்டை சுவர் வீழ்ந்து யுத்தம் தொடங்கும்

நிச்சயம் அவர் தென்காசியில் சொன்ன வார்த்தைகள் பெரும் பரபரப்பை சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்

கவனியுங்கள், திமுக தரப்பு பெரும் அமைதி கனத்த அமைதி

ஒருவரவாது அண்ணாமலை முடிந்தால் நிருபிக்கட்டும் எங்கள் கட்சியில் அப்படி யாரும் இல்லை என்பதால் அச்சமில்லை என சொல்லவே இல்லை

இந்த அமைதிதான் மிகபெரிய எதிர்பார்ப்பை அண்ணாமலை மேல் ஏற்படுத்துகின்றது

வழமையாக எதிர்குரல் கொடுக்கும் திமுக இம்முறை கனத்த அமைதி

இதுதான் தமிழகத்துக்கு தேவையான அரசியல், அதை செய்யும் தகுதி வானதிக்கு இல்லை, நயினாருக்க்கு இல்லை, பொன்னாருக்கு இல்லை, கேஸ் விநாயகயத்துக்குமில்லை

மாரிதாசருக்குமில்லை

இது மிகபெரிய முதலை அகழி, அதை தாண்டி விஷ நாகம், சிங்கம் திமிங்கலம் பாதாளம் மாயலோகம் என என்னவெல்லாமோ உண்டு

அக்கா வானதியின் "அண்ணன் ஸ்டாலின் அவர்களே" போன்ற அரசியலும் பொன்னாரின் "மரியாதைக்குரிய அய்யா ஸ்டாலின்" வச்னங்களும் இங்கு எடுபடாது

இங்கு அடிக்கவேண்டும் ஓங்கி அடிக்க வேண்டும் அதற்கு திமுகவின் ஆணிவேர் வரை தோண்டிபார்க்கும் பலமும் தைரியமும் பன்னாட்டு தொடர்பும் பெரும் பின்புலமும் வேண்டும்

அது அண்ணாமலைக்குக்குத்தான் இருக்கின்றது

இந்த நிர்மல் குமாரோ, காயத்திரியோ, எஸ் வி சேகரோ இதையெல்லாம் செய்யமுடியுமா என்றால் முடியாது, பல தகவல்களை திரட்டும் மாரிதாசராலும் இதனை செய்யமுடியாது

அதை செய்யும் பலமும் வாய்ப்பும் தகுதியும் அண்ணாமலையிடம் மட்டும்தான் இருக்கின்றது, ஏபரல் 17ல் அவர் சொல்லபோகும் பட்டியல் சுமார் 100 ஆண்டு கால தமிழக அரசியலை நிச்சயம் அசைக்கும்

இதனால் தமிழக பாஜகவினரும் வோட்டு கணக்கிட்டு கூட்டணி அவசியம் என புலம்புவோரும், எல்லோரையும் அணைப்பவனே தலைவன் என அறிவுரை சொல்வோரும் அமைதியாக இருத்தல் நலம்

கூண்டைவிட்டு வெளிவரபோவது கிளி அல்ல, அது டைனோசர்

இங்கு நடக்கபோவது அரசியல் அல்ல, இது யுத்தம் மாபெரும் யுத்தம், அதை நடத்த அண்ணாமலையினை தவிர யாருக்கும் சக்தி இல்லை

வழமையான ஒரு தொகுதி இரண்டு தொகுதி விளையாட்டு அல்ல, மெல்லமாக விளையாடும் சதுரங்கம்,கேரம்போர்டு ஆட்டம் அல்ல‌

இது இனி போர், இறங்கி அடிக்கும் போர், காலகாலமான கோட்டைகளை தகர்த்தெறியும் உக்கிரமான போர்

இரு எதிர்களில் ஒரு எதிரி பலவீனமான நேரம் அவனோடு கூட்டணி அது இது என பேசமால் உன் இடம் எனக்கு என அடித்து மோதும் போர்

எமது ஆச்சரியமெல்லாம் அண்ணாமலையின் பேட்டியினை தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி எப்படி அமைதியாய் இருக்கின்றார் என்பதுதான், "இது மோசமான கட்சி டோவ்" என அடிக்கடி சொல்லும் அவர் என்னென்ன திட்டம் வைத்திருப்பார் என்பதை நினைத்தாலே பகீரென்கின்றது

ஆர்.எஸ் பாரதியினை அண்ணாமலை எப்படி எதிர்கொள்ள போகின்றார் என்பதுதான் முதல்கட்ட எதிர்பார்ப்பு

குறிச்சொற்கள் #அண்ணாமலை #பாஜக #திராவிடம்


இந்த பாஜக அதிமுக முறுகலை மாநில அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சரியாக புரியாது, அதை காண தேசிய அரசியல் பார்வை அவசியம்

இப்பொழுது பழனிச்சாமி தமிழகத்தில் தன்னை ஒரு சக்தியாக காட்டி பாஜகவினை தன் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு கட்சியாக திமுகவுக்கு காங்கிரஸ் போல் ஆக்க நினைக்கின்றார் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது

தமிழகத்தில் நாங்கள்தான் எல்லாம் எங்களுக்கு பணிந்து நின்றால் சில இடங்களில் வெல்ல உங்களுக்கு உதவுவோம் அதே நேரம் நாடளாவிய பிரச்சினையில் உங்களை ஆதரிப்போம், நாடு உங்கள் பாடு தமிழகம் எங்கள் காடு, உங்களுக்கு நாட்டுபற்று இருந்தால் எங்களை ஆதரித்தே தீரவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு

அப்படி ஆதரிக்காவிட்டால் உங்களை கழற்றிவிடுவோம் ஒரு சீட்டும் ஒரு தேர்தலிலும் கிடைக்காது எனும் ரகசிய மிரட்டல் வேறு

இப்படியெல்லாம் அதிமுக நம்ப காரணம் அதனை பழைய பாஜகவாக நினைத்து அது பல சமரசங்களை செய்யும் என எதிர்பார்ப்பதுதான்

பாஜக அப்படியான சமரசங்களை முன்பு செய்த கட்சி, சந்தேகமில்லை ஆனால் அந்த காலம் வேறானது

பாஜகவின் முதல் எதிரி காங்கிரஸ், அது ஒன்றுதான் பரம வைரி முதல் எதிரி

அந்த காங்கிரஸை வீழ்த்த எல்லா மாகாண கட்சியுடனும் தயக்கமின்றி கூட்டணி வைத்தார்கள், ஒவ்வொரு மாகாண கட்சிசொன்ன நிபந்தனைக்கெல்லாம் கட்டுபட்டார்கள்

அப்படித்தான் ஊழல் கட்சி என அறியபட்ட ஜெயலலிதாவுடனெல்லாம் கூட்டணி கண்டார்கள் , 1996ல் மிக மோசமான நிலையில் இருந்த அதிமுகவினை பாஜக கூட்டணிதான் தூக்கி நிறுத்திற்று

ஆனால் பாஜகவின் பலவீனத்தை பயன்படுத்தி தன் இஷ்டத்துக்கு அதனை ஜெயா ஆட்டுவிக்க முயல பாஜக திமுக பக்கமே சாய்ந்தது

இதெல்லாம் காங்கிரஸை ஒழிக்க அவர்கள் செய்த ராஜதந்திரம், அந்த இலக்குக்காக எந்த கூட்டணி என்றாலும் ஏற்றுகொண்டார்கள்

ஆனால் இப்பொழுது காங்கிரஸ் களத்தில் இல்லை, இனி மீளவாய்ப்பு இல்லை எனும் வகையில் பாஜகவின் பார்வையும் ஆட்டமும் மாறிவிட்டது

இன்னும் மாகாண கட்சிகளை விட்டுவைத்தால் அல்லது அங்கு நாம் ஆதிக்கம் செலுத்த தயங்கினால் எதிர்காலத்தில் அது கட்சிக்கு சிக்கலாகும் என கருதுகின்றார்கள்

இப்பொழுதெல்லாம் அவர்கள் ஆட்டமே அதிரடியானது, பழனிச்சாமி போல தப்புகணக்கிட்ட சிவசேனா இன்று அடையாளமேமாறி நிற்கின்றது

பழைய பாஜக இது இல்லை, மாகாண கட்சிகள் ஆட்டிவைக்கும் அந்த பாஜக இது இல்லை

அதுவும் தமிழகத்தில் அவர்களின் எம்பி கணக்கு பூஜ்ஜியம் எனும் வகையில் இந்த காலி மைதானம் அவர்களுக்கு கவலையே இல்லாதது

சிக்கல் இங்கு பழனிச்சாமிக்கே அன்றி பாஜகவுக்கு அல்ல‌

எங்களுடன் சேராவிட்டால் என பாஜகவினை அதிமுக மிரட்ட முடியாது, அதே நேரம் தங்கள் பக்கம் வராவிட்டால் பழனிச்சாமியினை எப்படி பந்தாட முடியும் என்பது பாஜகவுக்கு தெரியும்

இப்பொழுது ஜெயா இருந்திருந்தாலே பாஜக இந்த ஆட்டம்தான் ஆடும், அதுதான் நிஜம் இங்கே பழனிச்சாமியெலலம் வெறும் தூசு

இந்த புதிய பாஜகவின் சீற்றமான முடிவினைத்தான் அண்ணாமலை அடித்து சொன்னார் "இனி இதுதான் அரசியல், எங்கள் முடிவுதான் முடிவு, எங்களை யாரும் கட்டுபடுத்த முடியாது" என்பது ஆயிரம் அர்த்தம் கொண்ட பேச்சு

பெரும் முடிவோடுதான் பாஜக நிற்கின்றது, இல்லையேல் இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து இப்படி அவரை மோதவிடமாட்டார்கள்

பழனிச்சாமி தன்னால் முடிந்தவரை பம்மாத்து காட்டலாம், கூட்டணி இல்லை என குழப்பலாம் இன்னும் சில பின்னடைவுகளை பாஜகவுக்கு கொடுக்கலாம்

அனால் பின்வாங்கிவிட்டு பின் சீறிவரும் சுனாமி போல பாஜக அதன் பின் மிக பலமான அடிகளை அடிக்கும் அதனில் பழனியார் தப்பமுடியாது என்பது நிஜம்

ஆக எல்லா வகையிலும் நெருக்கடியும் பலவீனமும் அதிமுகவிற்குத்தான் உண்டே தவிர பாஜகவுக்கு அல்ல, அதனால் பழனிச்சாமி தரப்பு எல்லா வகை அஸ்திரத்தையும் தன் பலம் முழுவதையும் பயன்படுத்திபார்க்கும்

ஆனால் அவர்களால் வெல்லமுடியுமா என்றால் இல்லை, கங்கையின் பெரும்வெள்ளம் முன்னே கொங்கு நாட்டு ஓடைகள் நின்றுவிட முடியாது

காலம் அதை காட்டும், அண்ணாமலையின் குரல் டெல்லி பாஜகவின் குரலாக அதைத்தான் சொல்கின்றது

தமிழக காங்கிரஸ் எப்படி நாசமானதோ அப்படி தமிழக பாஜகவினையும் உருவாக்க அவர்கள் நினைக்கவில்லை, தமிழக அரசியலின் வழமையான கோஷ்டி அரசியலை முளையிலே அகற்றுகின்றார்கள்

தமிழிசை முதல் எல்லோரும் கவுரமாக வெளியேற்றபட்டது , தனக்கென கோஷ்டி உருவாக்க நினைப்போர்களை தட்டி வைப்பது இல்லை ஓட வைப்பது என ஒரு தலமையின் கீழ் கட்டுகோப்பாக செயல்படும் கட்சியாக அதனை உருவாக்குகின்றார்கள்

அகில இந்திய பாஜகவில் கோஷ்டிகள் இல்லை, ஒரே நோக்கம் ஒரே தலமை ஒரே இலக்கு என தெளிவாக கட்டுப்பாடோடு இருக்கின்றார்கள்

அந்த கட்டுபாட்டைத்தான் தமிழக பாஜகவிலும் கொண்டுவர முயல்கின்றார்கள் அதுதான் அவசியமும் கூட, அவ்வகையில் இங்கு நடப்பதெல்லாம் மிக சரியானது

அதுதான் நல்லது அதுதான் சரியானது

இங்கு நடப்பது அண்ணாமலையின் சர்வாதிகாரம் அல்ல மாறாக காங்கிரஸ் போல் குழம்ப கமலாலயம் தயாராக இல்லை, கோஷ்டி சேர்த்து சண்டையிட இது சத்யமூர்த்தி பவன் இல்லை

"மோடி தலமையில் அண்ணாமலையும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான், முடிந்தால் அமைதியாக வேலை செய்யுங்கள் இல்லை வெளியேறுங்கள் சிக்கல் இல்லை, அண்ணாமலையினை எதற்கு அனுப்பினோம் என எங்களுக்குத்தான் தெரியும், அவர் தன் வேலையினை செய்யட்டும் நீங்கள் உங்கள் வேலையினை செய்யுங்கள்

இல்லாவிட்டால் அகலுங்கள்" என்பதுதான் இப்போது பாஜகவின் நிலைப்பாடு

இதை புரிந்தவன் அமைதியாகின்றான், புரியாதவன் தவளை போல் தன்னை பாம்புகளுக்கு காட்டி கொடுக்கின்றான் அவை ஓடிவந்து விழுங்குகின்றன

குறிச்சொற்கள் #பிரம்ம_ரிஷியார் #பாஜக #அதிமுக #தேசிய_அரசியல்



Topics tagged under பாஜக on ஈகரை தமிழ் களஞ்சியம் 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு

பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக

Back to top