புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
Baarushree
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
prajai
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
Rutu
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
சிவா
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
manikavi
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 6%
viyasan
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%
Rutu
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%
manikavi
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 15 matches for அண்ணாமலை

Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் En-mann-en-makkal

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற கருப்பொருளில் மாநிலம் தழுவிய பாதயாத்திரையை தொடர உள்ளார். இந்தப் பாதயாத்திரை நிகழ்வானது இராமநாதபுரத்தில் தொடங்கி, மதுரை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக முதல்கட்டமாக கன்னியாகுமரி வந்தடைகிறது.

இந்தப் பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் இன்று வடசேரி, கோட்டார், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்டத் தலைவர் தர்ம ராஜ், பொருளாளர் முத்து ராமன், மீனா தேவ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும் யாத்திரை பொறுப்பாளர்கள் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் நரேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அண்ணாமலை தனது பாத யாத்திரையின் ஒருபகுதியாக ஆகஸ்ட் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இவர் ராதாபுரம் தாலுகா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய உள்ளார். அப்போது கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

#என்_மண்_என்_மக்கள்
#அண்ணாமலை

ஆளுநர் குறித்து கடிதம் எழுதும் முன் ஸ்டாலின் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; அண்ணாமலை



கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் #அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது.

தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. தி.மு.க செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர்.

ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அந்த விஷயத்தை விவாதிக்க நேரம் இருக்கிறது. அதே வேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்?

செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகாராகும் விதமாக அந்த கடிதம் அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்பொழுது ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. ஆளுநர் அப்படி படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கின்றார். தி.மு.க சொல்லுவதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது.

இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்ன சொன்னார்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பா.ஜ.க 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது.

சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்கு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை என்று கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பதுதான் விவாதமே தவிர ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்.

ஆளுநருக்கு ஜி.யு போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால் ஜி.யு.போப் குறித்து் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். கலாச்சாரத்தைப் பற்றி, பண்பாட்டை பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது.

முதல்வர் எழுதிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தைக் காட்டும் விதமாகவே அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பி்திபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை. இவ்வாறு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை திரும்பிய பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலை, சிதம்பரம் கோயில் சர்ச்சை குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை பராமரித்து வரும் தமிழக அரசு, அதற்குரிய வருவாயை கோயில்களில் செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

சிதம்பரம் கோயிலுக்கு செந்தமான 3500 ஏக்கர் நிலத்தை பராமரித்து வரும் தமிழக அரசு, கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிலங்களின் மூலமாக கிடைத்த வருவாயை கோயிலில் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் கணக்கு பற்றிய விபரங்களையாவது கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற நிலையில் இதுவரை அரசு தரப்பில் இருந்து விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில்லை என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் #அண்ணாமலை, சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாய் கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். சிதம்பரம் கோயில் மட்டுமல்ல இன்னும் பல கோயில்களின் வரவு செலவு கணக்குகள் கூட கோயில் நிர்வாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதில்லை என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வீரசோழபுரம் திருக்கோயில் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பா.ஜ.க வட்டாரங்கள் மேற்கொள் காட்டுகிறார்கள். நிலுவையில் உள்ள வாடகைத் தொகையான ரூபாய் 57 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஏன் செலுத்தவில்லை என்று விளக்கம் தருமாறு தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

வீரசோழபுரம் கோயில், கள்ளக்குறிச்சியிலிருந்து 9 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு கரையோரம் அமைந்துள்ளது. அனுபாம்பிகை உடனான அர்த்தநாரீஸ்வரர் கோயில், 12வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது முற்றிலும் சிதிலமடைந்துள்ள கோயில், இன்றும் வழிபாட்டில் உள்ளது. சோழர் காலத்தில் தானமாக தரப்பட்ட ஏராளமான நிலங்கள், கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் தமிழக அரசு, கோயில் நிர்வாகத்திற்கு வாடகை பணம் எதுவும் கட்டுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் சொந்தமான இடத்தில் ஆட்சியர் அலுவலகமும், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

இது குறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியான உத்தரவில் மாதந்தோறும் 1.6 லட்சம் ரூபாய் வாடகைத்தொகையாக கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இரண்டு மாதத்தில் பணத்தை செலுத்திவிடுவதாக தமிழக அரசு உறுதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கோயில் சிதலமைடைந்த நிலையில் இருப்பதால் புனருத்தருணம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இது குறித்து அறநிலையத்துறை சார்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோயில் நிலங்களை அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக கையகப்படுத்தும் அரசு. குறைந்தபட்சம் ஏன் கோயில்கள் பராமரிக்கக்கூடாது என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதை முன்வைத்து பா.ஜ.க களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் திறனற்ற திமுக அரசு” - அண்ணாமலை



தமிழக பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை, இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ``திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகத்தில் சிதிலமடைந்த சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும், இன்னும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளிகளுக்கான தரமான கட்டடங்கள் இல்லாமல், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திறனற்ற திமுக அரசு.

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும், அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஆசிரியர்களின் பணி நியமனம் எப்போது மேற்கொள்ளப்படும் என்று இன்னும் அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழகப் பள்ளிகள் அணி தேர்வு செய்து அனுப்பப்படவில்லை. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் என்பது, ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவு. பள்ளி அளவிலான தேசியப் போட்டிகள், மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும், அவர்களுக்கான அடுத்த கட்ட பயிற்சிக்கும், நல் வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், தமிழகம் சார்பாக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தாமல், மாணவர்களை வஞ்சித்துவிட்டு, துறைகள் மீது மாற்றி மாற்றி பழி போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

இப்படி, ஏழை எளிய மாணவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்புகளையும், தங்கள் மெத்தனப் போக்கினால் கோட்டை விட்ட தமிழக அரசு, இதன் உச்சகட்டமாக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின் வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் கல்விக் கட்டணத்தைக் குறைத்திருக்கிறது திறனற்ற திமுக அரசு. 2021 ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு 3767.55 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவில் குறைத்திருக்கிறது திமுக அரசு. இதனால், மீதக் கட்டணத்தை, பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க, பள்ளிகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. திமுகவின் இத்தகைய ஏழை எளிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அனைவருக்கும் கல்வி உரிமைத் திட்டம் என்ற நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்காக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல், தொடர்ந்து, கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பது, காலதாமதமாக வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளால், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது திமுக. திறனற்ற திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள், திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் பயனடைவதற்காக, ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர வாய்ப்புகளைச் சிதைக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறதோ என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்திருக்கிறது. உடனடியாக, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கும்படியான எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் O85f3Ip

அப்புறம் #அண்ணாமலை...

, "ஊழலுக்கு எதிரான போர் ஆரம்பம்" அப்படின்னு நாலு அறிக்கை விடுங்கய்யா, அப்பதான ஜனங்க நம்ப ஆரம்பிப்பாங்க‌.

அப்படியே இங்கிலீஷ் மீடியாவுல போய், அந்த ஆள இப்படி வளர்த்துவிட்டதே அந்த அம்மாதான்னு ஒரு போடு போடுங்கய்யா அவனுக கதறிட்டே கிடக்கட்டும்.

ஆனா ஒண்ணுய்யா, இன்னும் கொஞ்ச நாளையில டீ கடையில பேசுவாங்க, தெருமுனையில பேசுவாங்க, பார்க்குற இடமெல்லாம் பேசுவாங்கண்ணு சொன்னீங்களே, அப்ப யாரும் நம்பல, இப்ப நம்புறோம்...

சொன்ன மாதிரியே பேச வச்சிட்டய்யா,...

இந்த உக்ரைன் விவகாரமா நம்பள கூப்பிட்டிருக்காக, போய் பேசிட்டு வந்துர்றேன் , மறக்காம அறிக்கைய அனுப்பிருங்கய்யா, வரட்டுமா...

#பிரம்ம_ரிஷியார்

ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்- அண்ணாமலை



சமீபத்தில் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று கூறியதாக தகவல் வெளியானது.

இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. நேற்று அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், பாஜக – அதிமுக இடையேயாப கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் #அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''நான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் உள்ளது. ன்ஒரு குறிப்பிட்ட ஆட்சியைக் கடந்து ஊழல் பிரச்சனையாக உள்ளது. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று கூறியதாக தகவல் வெளியானது.

இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. நேற்று அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், பாஜக – அதிமுக இடையேயாப கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''நான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் உள்ளது. ன்ஒரு குறிப்பிட்ட ஆட்சியைக் கடந்து ஊழல் பிரச்சனையாக உள்ளது. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''ஜெயலலிதாவின் பெயரை நான் எங்குமே குறிப்பிடவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.'' என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படியே நடவடிக்கை; காழ்ப்புணர்ச்சி இல்லை: அண்ணாமலை



சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது என்றும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை எனவும் தமிழக பா.ஜ., தலைவர் #அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் செந்தில் பாலாஜி. பணம் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட அருள்மணி என்பவர் 2018ல் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.

இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் #செந்தில்_பாலாஜி. 2019ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2022ல் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்ட விரோத பணம் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை நடவடிக்கை துவங்கியது.

இதில் எந்த வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்? அதனை முதல்வர் விளக்குவாரா? அமலாக்கத்துறையிடம் ஆதாரங்கள் இருந்ததால் தான் தலைமை செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடத்தப்பட்டது.

மற்ற மாநில வழக்குகளில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு வித்தியாசமானது. அமலாக்கத்துறை மத்திய அரசின்கீழ் வந்தாலும், அது தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது; அதனை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்த்தது கண்டிக்கத்தக்கது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முதல்வரும், அமைச்சர்களும் உணர வேண்டும். விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறை சட்டப்படி அறிவிப்பார்கள். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிற்காது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் அனுபவமில்லா குழந்தை அண்ணாமலை: சசிகலா



பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என சசிகலா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதா. அம்மா உணவகம் தந்து , அன்ன லட்சுமியாய் விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். அவருக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவையில்லை.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரின் சாதனைகளை முறியடிக்க முடியாது. அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் எதுவும் தெரியவில்லை.

அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால் #அண்ணாமலை அவர் சார்ந்து இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம்: அண்ணாமலை



கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம் என்றும், கூட்டணி தர்மத்தை தான் நன்கு உணர்ந்தவன் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள #அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

மோடியின் அரசியல் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். எனது மனசாட்சிப்படி தமிழகத்தில் நான் அரசியல் செய்து வந்துள்ளேன். தமிழகத்தில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காகவும் அரசியலை முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறேன்.

தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவு கொள்கைகளை அடமானம் வைக்க விரும்பவில்லை.

கூட்டணிக் கட்சியையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் வழிநடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் கூற முடியாது.

கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதை நாங்களும் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. தலைமை செயலகத்தில் புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி வருவது இது முதல்முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் #அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று தூத்துக்குடி வருகை தந்தார். இதன் ஒரு பகுதியாக #பா.ஜ.க ஓ.பி.சி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் இல்ல திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், ‘கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார் கர்நாடகாவில் #மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு வரும் எதிர்ப்புகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அதிகாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் #மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

ஜப்பானிலிருந்து திரும்பி வந்த முதலமைச்சர் முதலீடு குறித்து பேசி இருக்கக் கூடாது. கர்நாடகா மேகதாது அணை பற்றிதான் பேசி இருக்க வேண்டும். கர்நாடக மாநில அரசையும் அதற்கு துணைபோகும் தமிழக காங்கிரஸ் கட்சியையும் அவர் கண்டித்து இருக்க வேண்டும்.

ஆனால் பா.ஜ.க இந்த விவகாரத்தை விடாது. அதைத் தடுத்து நிறுத்தும் வித்தை எங்களுக்கு தெரியும். தேவைப்பட்டால் கர்நாடகாவை நோக்கி நடைபயணம் செல்வோம்.

கவர்னர் நடத்தும் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கல்வி அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமைச்சர் பொன்முடியை பொறுத்தவரை அவர் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு பேசுவது எல்லாமே தேவையில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

ஏற்கனவே, தமிழகத்தில் 36 ஆயிரம் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதை செய்ய அமைச்சருக்கு வழி தெரியவில்லை. ஆனால், எல்லோரையும் மிரட்டி உருட்டி காலம் கடத்தலாம் என்று நினைக்கிறார்.

வெளிநாட்டுக்கு போய் தொழில் முதலீடுகள் கொண்டு வர நினைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை 5 வருட காலமாக மூடிக்கிடக்கிறது.

அதனால், ஏற்படப்போகும் பாதிப்பு இப்போது தெரியாது விரைவில் தெரியவரும். ஏற்கனவே, காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாம் தற்போது இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். எனவே, தென்மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தி.மு.க அரசாங்கம் உழைக்க வேண்டும்.

தி.மு.க அமைச்சர்களை பொறுத்தவரை பில்டப் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் பயந்தவர்கள். என்னை பொறுத்தவரை #தி.மு.க அமைச்சர்களை ஒரு புளுவுக்கு சமமாககூட நான் மதிப்பதில்லை.

நான் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதாக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். சந்தேகம் இருப்பவர்கள் கரூருக்கு செல்லுங்கள். என் தோட்டத்திற்கு செல்லுங்கள். அங்கே நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேனா? என்பதை பார்த்து செய்தி போடுங்கள்.

நான் தவறு செய்திருந்தால் அதை தி.மு.க அரசாங்கத்தால் எளிதாக கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் காவல்துறை, உளவுத்துறை எல்லாமே இருக்கிறது.

எனவே தி.மு.க அமைச்சர்களின் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே தீர வேண்டும். கர்மா அவர்களை சும்மா விடாது.

தமிழக பா.ஜ.க-வில் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுவதாக நடிகர் எஸ்.வி.சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கிறீர்கள். நான் யாருக்காகவும் என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன்.

நான் 40 வருடம் கட்சியில் இருக்கேன் என்று சொல்லி தப்ப முடியாது. என் மீது புகார் கொடுக்க நினைத்தால் டெல்லிக்கு செல்லட்டும். 6,000 ரூபாய் தான் விமான டிக்கெட்.

பணம் இல்லையென்றால் நானே டிக்கெட் எடுத்து கொடுக்கிறேன். அதேபோல புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் சைவ ஆதீன மடாதிபதிகளை அழைத்துச் சென்றதில் எந்த தவறும் இல்லை. ஜூலை 9-ம் தேதி தி.மு.க அரசின் 2 வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என்றார்.

Back to top

Page 1 of 2 1, 2  Next