புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 36%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
jairam
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 5%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 53 matches for பிரம்ம_ரிஷியார்

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Mpp8tkT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அமைக்கும் சாலை, சியாச்சினை ஒட்டி செல்லும் அந்த சாலை இப்போது உலக விவகாரமாகின்றது

அந்த காரகோர மலைதொடர்தான் உலகின் உயரமான இடம், அவ்வகையில் சியாச்சினில் இருக்கும் இந்திய ராணுவமுகாமே உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ராணுவ முகாம்

அந்த முகாம் அருகே செல்லும்படி சீனா சாலை அமைக்கின்றது, இது இந்திய நிலம் சட்டபடி இந்தியாவுக்கு சொந்தமான அந்த இடத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதும் அங்கே சீனா இப்போது சாலை அமைப்பதும் பெரும் விவாதமும் சர்ச்சையுமாகின்றது, பதற்றமும் அதிகரிக்கின்றது

இங்கே முழுமையாக சிக்கியிருக்கும் நாடு பாகிஸ்தான்

அதாவது 1947ல் பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியினை ஆக்கிரமித்தபோது சொன்ன வார்த்தை பாகிஸ்தான் காஷ்மிரை ஆக்க்கிரமிக்கவில்லை "ஆசாத் காஷ்மீர்" என சுதந்திர காஷ்மீராக அறிவித்திருக்கின்றோம், நாங்கள் அவர்களுக்கு உதவுகின்றோம் என்பதே

இப்படி உலகுக்கு சொனாலும் அங்கே தேர்தல் ஜனநாயகம் என எதுவுமில்லை, தன் ரகசிய கொல்லைபுறமாக அதை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது

அங்கிருந்தே இந்தியாவுக்கு தொல்லை கொடுத்தும் வந்தது

இப்போது சீனா அங்கே கால்வைக்கும் போது பல உண்மைகள் தெரியவருகின்றன அதாவது 1963ம் ஆண்டே இப்பகுதிகள் சிலவற்றை சீனாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்திருக்கின்றது, அந்த அனுமதி பேரில்தான் இப்போது சீனா பாதை அமைக்கின்றது

இப்படி சீனா பழைய ஒப்பந்தம் ஒன்றை சொல்லிவிட விவகாரம் பற்றி எரிகின்றது

அதாவது இந்தியாவுக்கு சொந்தமான இடத்தை பாகிஸ்தான் ரகசியமாக ஆக்கிரமித்து சீனாவுக்கு கொடுத்துவிட்டது என்பது

இந்த 1963ம் ஆண்டு ஓப்பந்தம் அதாவது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமான ஒப்பந்தம் பற்றி இப்போதுதான் விஷயம் கசிகின்றது, மோடி அரசு தீவிர நடவடிக்கைக்கு தயாராகின்றது

இப்போது தேர்தல் காலம், மோடி அரசு காபந்து அரசு அதாவது முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரமில்லா அரசு என்பதால் ஜூன் வரை அது அமைதி காக்கத்தான் வேண்டும்

முக்கிய முடிவு என்றால் ஜனாதிபதிதான் எடுக்கவேண்டும் தேர்தல் என்பதால் அவரும் பல விஷயங்களை யோசிக்க வேண்டும்

இந்திய ராணுவ தலமை தளபதி இது இந்திய அரசு முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணம் என்கின்றார், ஆனால் அரசு தேர்தல் காலத்தில் சிக்கி கொண்டது

சரி, விவகாரத்தை கவனியுங்கள்

1962ல் காஷ்மீரின் அக்சாய் சின் பிராந்தியத்தை சீனா ஆக்கிரமித்தபோது அது ஆட்கள் இல்லா பாலைவனம் என்ற நேருவுக்கு இந்த ஒப்பந்தம் தெரியுமா என்றால் தெரிந்திருக்கும் அவரும் அமைதி

சாஸ்திரி ஏன் மர்மமாக கொல்லபட்டார் என்பதன் விடை இப்போது தெரியலாம்

அதாவது 1965 போரில் காஷ்மீரை முழுமையாக மீட்போம் என முழங்கிய சாஸ்திரி எப்படி சோவியத்தில் மரணமாக மறைந்தா என்பதன் மர்மம் புரியலாம்

ஆம், சீனாவின் ரகசிய கோர கரங்கள் சோவியத் சதியோடு இருந்திருக்க வாய்ப்பு உண்டு

1971ல் முழு பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியாவின் இந்திரா ஏன் காஷ்மீரை கைபற்ற தயங்கினார், அதுவும் மானெக்சா எவ்வளவோ முயன்றும் இந்திரா காஷ்மீரை ஏன் தொடவில்லை என்பது இப்போது புரியலாம்

ஆம், காங்கிரசுக்கும் சீனாவுக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருந்திருக்கின்றது பல விஷயங்கள் மறைக்கபட்டிருக்கின்றன‌

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த
காஷ்மீரை பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் விட்டுகொடுக்கும் ரகசிய முடிவில் இருந்திருக்கின்றது, இதனை சீனாவின் ஆதரவு பெற்ற கட்சிகளெல்லாம் ஆதரித்திருக்கின்றன‌

இப்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றது

1963ல் மிகபெரிய துரோகத்தை காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் செய்தது, அவர்களுக்கும் இந்தியர்களுக்குமான பெரிய துரோகத்தை காங்கிரஸ் செய்திருக்கின்றது

காஷ்மீரின் முழு சிக்கலுக்கும் காரணம் பாகிஸ்தான் அல்ல, அது ஒரு முகமூடி பின்னால் இருப்பதெல்லாம் சீனா என்பது இப்போது தெரிகின்றது

இந்த சீனாவினைத்தான் நட்பு நாடு என சமீபத்தில் கனிமொழி அம்மையார் சொன்னது கவனிக்கதக்கது

எல்லையில் ஒரு மோதல் நடக்கும் நேரம் நெருங்கிவிட்டது, சியாச்சினை ஒட்டி ஒரு சாலை செல்வதை இந்தியா அனுமதிக்காது, இது அதிகாரமில்லா காலம் எனினும் சில எச்சரிப்புகள் அல்லது நடவடிக்கைகளை இந்தியா செய்யும்

ஜூன்மாதம் மிகபெரிய அதிர்வுகளை காஷ்மீர் காணும், அது ஒரு மோதலாக கூட மாறும் அதன் பின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடிவம் மாறலாம்

இந்தியாவின் ஒரு அங்கமான அந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் சேந்து எப்படியெலலம் காங்கிரஸ் விட்டுகொடுத்திருக்கின்றது, எவ்வளவு அழிவுகள் வந்திருக்கின்றன, 1963ம் ஆண்டு அந்த பாகிஸ்தானும் சீனாவும் செய்த ரகசிய ஒப்பந்தம் பற்றி ஏன் காங்கிரஸ் இன்றுவரை வாயே திறக்கவில்லை என்பதெல்லாம் கேள்விகளாக எழுகின்ற்ன‌

தேசத்துக்கு எதிராக அக்கட்சி செய்த ஒவ்வொரு கொடுமையும் வெளிவருகின்றது, அதை கேட்க கேட்க தேசாபிமானிகளின் கொபமும் வருத்தமும் அதிகமாகின்றது

மோதல் இல்லாமல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் முடியவேண்டும் என்பதுதான் தேசாபிமானிகள் விருப்பம்,

ஆனால் நாள்பட்ட முள்மரம் வெட்டி எடுக்காமல் தீராது, ஒரு மோதல் அப்பக்கம் வராமல் இனி நல்லது நடக்காது

அப்பகுதி மக்கள் போராட தொடங்கியிருக்கின்றார்கள், இதை எப்படி தேசம் வெற்றியாக்கும் மக்கள் போராட்டமாக மாற்றி ஆக்கிரமிப்பை அகற்றும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு

துரோகத்தின் மறுபெயர் காங்கிரஸ் என்பது பட்டவர்த்தனமாக தெரியும் நேரமிது

#பிரம்ம_ரிஷியார்
ஜெகத்ரட்சகன் ஆவணங்களை ஆய்வு செய்ய 10 சிறப்பு குழு : செய்தி

நாட்டின் வரலாற்றிலே ஒருவர் மேல் பொருளாதார குற்றங்களுக்காக மிகபெரிய நடவடிக்கை எடுக்கபட்டிருப்பது இதுதான் முதல்தடவை,

இப்படி 10 குழுக்கள் வைத்து ஆராயும் அளவு மாபெரும் குற்றசாட்டுக்கள் வருவது நிச்சயம் அதிர்ச்சி அளிக்கும் செய்தி

அந்த அளவு காலம் காலமாக இவர்களின் முறைகேடு நடந்திருக்கின்றது என பொருள்

இது தேசத்தையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் செய்தி, 10 குழுக்கள் கொண்டு ஆராயும் அளவு சொத்துக்களும் முறைகேடுகளும் நடந்தது என்பது திகைக்க வைக்கும் செய்தி

திமுகவுக்கு இது சாதாரணமாக கடக்கு விஷயம் அல்ல, இனி கருணாநிதி காலத்தில் இருந்து தோண்டுவார்கள், இது ஜெஜத்ரட்சகனோடு மட்டும் நின்றுவிடுவது அல்ல‌

எமது ஊகம் சரியாக இருந்தால் அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் இருக்கும் அனைவருக்கும் சிக்கல் வரலாம்

அண்ணாமலை வீடியோவில் என்ன சொல்லவந்தார், டிம்கே பைல்ஸ் என வெளியிடும் போது என்ன கோடிட்டு காட்டினார் என்பது இப்போதுதான் தெரிகின்றது

அவை சிலநாளில் வெறும் செய்தியாக அடங்கிவிடும் என திமுக நினைத்திருக்கலாம், ஆனால் இப்படியெல்லாம் சிக்குவோம் என எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை

டெல்லி பெரும் முடிவோடு இறங்கிவிட்டது, காட்சிகள் இன்னும் வேகமெடுக்கலாம்

காங்கிரஸ் எப்படியெல்லாம் திமுகவினை வளர்த்திருகின்றது, அய்யா கருணாநிதி என்னென்ன சமூக புரட்சி செய்தார், அவரின் பேனா எப்படியெல்லாம் சமூகநீதி காத்தது என்பதை அறிந்துகொள்ளும் நேரமிது

சாதி ஒழித்து, இந்தி எதிர்த்து, சனாதனம் ஒழித்து இன்னும் பெரும் புரட்சியெல்லாம் செய்து சமூநீதி காத்தவர்கள் கடைசியில் எப்படி சிக்குகின்றார்கள் என்றால் இப்படித்தான்

செந்தில் பாலாஜிக்கு ஒரு துணை சேர்ந்துவிடும் போல் தெரிகின்றது, சட்டவிரோத பணபரிமாற்றம் என்பது சிக்கல் மிகுந்தது,செந்தில் பாலாஜியும் அதில்தான் சிக்கினார்

ஆக.. அய்யா மட்டும் இல்லண்ணா...

#பிரம்ம_ரிஷியார்
சீனாவிடம் இருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு நியூஸ்க்ளிக் நிறுவனர் கைது :செய்தி.

தேசத்தில் முற்போக்கு, சமத்துவம் எனும் பெயரில் மிகபெரும் குழப்பம் விளைவித்த இணையதள பத்திரிகை இது, இதன் பின்னணியில் சீனா இருந்ததாக இப்போது நடவடிக்கை எடுக்கபட்டிருக்கின்றது.

இந்தியாவில் எல்லா விதமான் சுதந்திரங்களும் மிக மிக அதிகம், நேரு உருவாக்கி சென்ற பெரும் தவறு இது.

அங்கு யாரும் பத்திரிகை தொடங்கலாம் யாரும் எதுவும் பேசலாம் எந்த கட்டுபாடுமில்லை எனும் அளவில் எல்லோரும் எல்லாமும் செய்ய தேச சட்டம் அனுமதிக்கின்றது.

இந்த பெரும் ஓட்டையில் அந்நிய நாட்டின் கரங்கள் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள் என 1950களில் இருந்தே உருவாயின‌.

இவற்றின் நோக்கம் இந்திய அமைதி, இந்திய பலம் எல்லாவற்றையும் குழப்பி பெரும் பலவீனமான தேசமாக இந்தியாவினை வைத்திருப்பது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உளவு அமைப்புகள் இந்தியாவில் பத்திரிகை நடத்துகின்றன, அரசியல் இயக்கங்கள் நடத்துகின்றன என்பது நீண்டகாலமாக உள்ள குற்றசாட்டு.

அதன் மேல் இப்போதுதான் ஆதாரபூர்வமாக் நடவடிக்கை எடுக்கபடுகின்றது,இந்த நடவடிக்கை நாடெல்லாம் தொடரவேண்டும் என்பதுதான் தேசாபிமானிகளின் எதிர்பார்ப்பு.

கட்டுபாடு இல்லா மனிதனும் குடும்பமும் நிறுவணமும் உருப்படாது, அப்படியாக கடும் சட்டதிட்டம் இல்லா நாடும் சிறக்காது, இந்தியா பெரும் இடம் அடைய கடும் சட்டவிதிகள் அவசியம்

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Maxresdefault

கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள் இருந்தது நிஜம், அதனாலே அவர் சரியான நேரத்தில் பங்கேற்க முடியவில்லை, மாநாடு முடிந்தும் அவர் கிளம்பி செல்ல இரு நாட்களானதற்கு இதுதான் காரணம் என பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இந்திய ராஜதந்திரி தீபக் வோரா.

இந்த தீபக் ஓரா முன்னாள் தூதரக அதிகாரி என்பது குறிப்பிடதக்கது.

இதனால் உலக ராஜதந்திர மொழியில் அறியபடும் விஷயம் யாதெனில் கனடா பிரதமரின் பதவிக்கும் அவரின் அரசியல் வாழ்வுக்கும் யாரோ பெரிதாக வெடி வைத்துவிட்டார்கள் என்பது.

இது இனி சாதாரணமாக ஓயாது, கனடிய பிரதமரின் அரசியல் வாழ்வில் பெரும் புயலடித்து அவரின் அரசியல் வாழ்வோடு ஓயலாம்.

விஷயம் மெல்ல கசிகின்றது இதன் விளைவுகள் என்னாகும் என்பது விரைவில் தெரியும்.

பெரிய இடத்தில் இருப்போர் சுய ஒழுக்கத்தில் சரியாக இல்லாவிட்டால் இப்படியான சிக்கலில் சந்திக்க நேரிடும், அவரின் ரகசிய பக்கங்களை அறிந்த யாரோ சரியான நேரத்தில் சரியாக போட்டு கொடுத்துவிட்டார்கள்.

இந்திய அதிகாரியின் பேட்டி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கனடிய தரப்பு இன்னும் வாயே திறக்கவில்லை.

#பிரம்ம_ரிஷியார்

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் 2moAwGS

அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டது இனி கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

இது உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்தாது, இந்திய பங்கு சந்தைகளை பாதிக்காது, சீன எல்லையில் பரபரப்பை உண்டு செய்யாது அப்படியே அகில இந்திய தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

1967ல் இருந்து ஏகபட்ட கூட்டணிகளை கண்ட தமிழகம் இது, ஆளாளுக்கு கூட்டணிகளை மாற்றிகொண்டே இருப்பார்கள்.

பிராமண எதிர்ப்பை காட்டிய திமுக ராஜாஜியோடு கூட்டு சேர்ந்தது, இந்திராவும் கருணாநிதியும்  கூட்டணி அமைத்தார்கள், இந்திரா எம்ஜிஆர், ராஜிவ் ஜெயலலிதா, வாஜ்பாய் கருணாநிதி பின் சோனியா கருணாநிதி என எவ்வளவோ கூட்டணிகள் கண்ட தமிழகம் இது.

அதனால் இதெல்லாம் வழமை ஆச்சரியபட ஒன்றுமில்லை.

பொதுவாக கூட்டணிகள் அமையும் போது கால சூழலை அவசியம் காணவேண்டும், அதுதான் கூட்டணிகளின் பலனை நிர்ணயிக்கும்.

முன்பு வலுவான தேசிய தலமை வலுவான கட்சி தலமை டெல்லியில் இல்லா காலங்களில், தமிழக எம்பிக்கள் பலம் ஆட்சி அமைக்க அவசியம் என ஒரு காலம் இருந்த காலங்களில் இந்த கூட்டணிகள் முக்கியத்துவம் பெற்றன‌.

இப்போது அப்படி அல்ல, இன்றைய பெரும் சக்தி பாஜகவுக்கு தமிழக எம்பிக்கள் அதாவது திமுக, அதிமுக எம்பிக்கள் அவசியமே இல்லை எனும் வகையில் அவர்கள் பெரும் பலமாக நிற்கின்றார்கள்.

இப்போது அதிமுக வேண்டாம் என சொல்லும் நிலையில் பாஜகதான் பலமாக இருக்கின்றது, ஆனால் அதிமுக வாயால் சொல்ல வைத்துவிட்டார்கள்.

இதனால் யாருக்கு லாபம் என்றால் அது பின்னர்தான் தெரியும் முதல் நஷ்ட கணக்கு திமுகவிற்கு, அதுதான் இங்கே சரியான கணக்கு.

சுமார் 20 ஆண்டுகாலம் காங்கிரஸோடு வலுவான கூட்டணி வைத்த கட்சி திமுக, அதோடு கம்யூனிஸ்டுகள் உதிரி கட்சிகள் என அதன் பலம் அதிகம்.

மிக முக்கியமாக கடந்த  சில ஆண்டுகளாக சிறுபான்மை வாக்குகளை தனியே அள்ளி சென்ற கட்சி திமுக‌.

இப்போது அதற்குத்தான்  வெடி விழுந்திருக்கின்றது.

எப்போதுமே காங்கிரஸின் விருப்பமான கட்சி அதிமுகதான், திமுக அளவு இந்து வெறுப்பு தேசிய வெறுப்பு இல்லா கட்சி அது, இன்னொன்று கொஞ்சம் சம்பாதிக்கவும் விடுவார்கள் பெரிய கடிவாளமெல்லாம் இடமாட்டார்கள்.

இப்போது வேறுவழியில்லாமலே காங்கிரசும் இதர கட்சிகளும் பெரும் அவமானத்துகிடையில் திமுகவில் நீடிக்கின்றன, உதயநிதி சபரீசன் என பல கோஷ்டிகள், செந்தில்பாலாஜி விவகாரம் என அவை எல்லாம் பெரு ம் கடுப்பில் இருக்கின்றன‌.

இதுகாலம் பாஜக இருந்ததால் அதிமுக பக்கம் அவை தாவ முடியவில்லை அந்த விலங்கு இப்போது உடைந்திருக்கின்றது.

அப்படியே சிறுபான்மை கோஷ்டிகளுக்கும் திமுக முழு விருப்பம் அல்ல, திமுகவினரின் ஊழல்,சுரண்டல், அடாவடி லீலைகள் அப்படி.

இதனால் இனி அவைகளும் கணகளை திருப்பும்.

இப்படி பல விதங்களில் திமுக பலமிழக்கும், கூட்டணி இழப்பு சிறுபான்மை வாக்கு இழப்பு என பலத்த சேதம் அங்கே விழும்.

இப்படி இருபக்கமும் வாக்குகளை பிரிக்கும் போது பாஜகவுக்கு சில அனுகூலங்களை கொடுக்கும்.

காங்கிரஸ் பலவீனபட்டிருந்தாலும் அதற்கு ஒரு குறிப்பிடதக்க வாக்குவங்கி இன்றும் தமிழகத்தில் உண்டு, திமுக காங்கிரஸ் இல்லாத காலங்களில் பெருவெற்றி எதையும் பெற்றதில்லை என்பது வரலாறு.

காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் இது அரசியல் காங்கிரசுக்கும் அதன் கட்சி முக்கியம் வளர்ச்சியும் நிலைப்பும் முக்கியம்.

அங்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் உண்டு, கிடைத்த வாய்ப்பில் பழைய அதிமுக காங்கிரஸ் உறவை மிக இறுக்கமாக்க அவர்கள் முயற்சிக்கலாம்.

காங்கிரஸுக்கு அதிமுகதான் விருப்ப கட்சி, அதன் கடந்தகால தரவுகள்படி நீண்டகால கூட்டணி அதுதான், ஜெயாவுக்கும் சோனியாவுக்கும் முறுகல் வந்த காலங்களில்தான் திமுக பக்கம் வந்தார்கள் மற்றபடி திமுக அவர்களின் மனமார்ந்த கூட்டணி அல்ல‌


இதனால் திமுக இனி கொஞ்சம் நெருக்கடிக்குள்ளாகும். காங்கிரஸ் நகர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கூட்டணிக்கு மதிமுக, சிறுத்தை, கமலஹாசனார் செல்ல வாய்ப்பு உண்டு.

அதிமுக வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கின்றது, ஒரு வெற்றியினை காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள், பாஜகவும் இல்லா இடத்தில் பழிசொல்லவும் யாருமில்லை, இனி வெல்லாவிட்டால் கட்சி எழமுடியாதவாறு சரிந்தே விடும்.

இதனால் சீட்டுக்களை அள்ளி கொடுப்பார்கள், பெரும் கூட்டணி அமைப்பார்கள் எல்லா பலமும் காட்டுவார்கள் அது இயல்பு.

பாஜகவினை பொறுத்த்வரை அது புன்னகைக்கின்றது, அவர்களின் பெரும் எதிரி காங்கிரஸ், அந்த அகில இந்திய கூட்டணியில் இருந்து திமுகவினை விலக்குவது அவர்களுக்கு  வெற்றி.

தேசிய அளவில் காங்கிரஸை பலவீனபடுத்துவதில் வெற்றியினை நெருங்கிவிட்டார்கள்.

இனி பாஜக தமிழகத்தில் சில நாட்கள் அமைதிகாக்கும், பசும்பொன் தேவரை பற்றி அண்ணாமலை பேசியதெல்லாம் மிக திட்டமிட்டபட்ட துல்லியமான அரசியல்.

எல்லாம் கணித்து சரியாக அரசியல் செய்துவிட்டார், இனி சில கூட்டணிகளை அமைத்தால் பொதும் தெற்கே அதிமுக வரவே முடியாது, பாஜகவுக்கு ஒரு பலம் கிடைக்கும்.

ஆக எப்படிபார்த்தாலும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பெரும் காரியத்தை பாஜக செய்திருக்கின்றது.

இதனாலே திமுக தரப்பு பெரும் மவுனத்தில் இருக்கின்றது, பாஜக இல்லாத அதிமுக பக்கம் செல்லும் தன் கூட்டணிகளை தடுப்பது எளிதாக அவர்களுக்கு இராது.

இப்போதைக்கு பாஜகவுக்கு அனுகூலம், திமுகவுக்கு கொஞ்சம் பதற்றம், அதிமுகவுக்கு வாழ்வா சாவா போராட்டம் என்பதை தாண்டி எதுவும் சொல்லமுடியாது, சில நாட்கள் கழிந்து தேர்ந்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும்.

அதுவரை தமிழக ஊடகங்கள், யூ டியூபர்களுக்கு பொழுது போகும், ஏதாவது பேசி சிரித்து பரபரப்பு என சம்பாதிப்பார்கள் அதை தாண்டி ஒன்றும் நடக்காது.

ஆனால் அண்ணாமலை என்பவரின் கரங்களை, வார்த்த வீச்சுக்களை இனி அதிமுக பகிரங்கமாக எதிர்கொள்ள வேண்டும் , சில அதிமுக பிம்பங்கள் சுக்குநூறாக உடைக்கபடலாம்
மத்தியில் பலம் கொண்ட அரசு பாஜக என்பதால் பழனிச்சாமிக்கு  ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு நிலைவருமா என்பதை இப்போதே சொல்லமுடியாது ஆனால் வாய்ப்பு உண்டு அதுதான் அரசியல்.

ஆக சில விஷயங்களை காலம்தான் சொல்லவேண்டும் என்றாலும் இப்பொது தெரியும் விஷயம் இதுதான்.

இனி சிறுபான்மை வாக்குகள் சிதறும், அதுவும் பாஜகவுக்கு அனுகூலம்.

திமுக கூட்டணி அசையும், திமுகவின் பலம் குறையும் அதுவும் பாஜ்கவுக்கே சாதகம்.

இதுவரை காணாத பல அதிரடி காட்சிகளை தமிழக மாகாணம் இனி காணும், இதுகாலம் கட்டமைக்கபட்ட பொய்பிம்பமெல்லாம் இனி சிதறும்.

சுமார் 50 ஆண்டுகள் இருந்த ஒரு சமநிலை தமிழகத்தில் உடைகின்றது, முதன் முறையாக உடைகின்றது, எப்போதுமே ஒரு சமநிலை உடையும் போது கட்சிகளும் உடைவது இயல்பு, அதனால் எக்கட்சி உடையும் யார் யாரோடு சேரும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

புதிய திருப்பத்துக்குள் தமிழக அரசியல் திரும்புகின்றது, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற அளவில் காட்சிள் நடக்கின்றன‌.

திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லாருமே குழம்பி நிற்கும் நேரம், பாஜக தன் ஜல்லிகட்டு காளையின் மூங்கணாங்கயிற்றை அவிழ்த்து கட்டவிழ்த்து களத்தில் இறக்க தயாராகின்றது.

மறைக்க ஒன்றுமில்லை, பகிரங்கமாகவே சொல்லலாம். திமுக அதிமுக இரண்டுமே சிறுபான்மையினர் பிடியில் உள்ள கட்சிகள், அவர்களின் நலனுக்காக அவர்களால் மிரட்டி ஒடுக்கி நடத்தபடும் கட்சிகள்.

எம்ஜிஆர் காலத்துக்கு பின் ஜெயா அப்படித்தான் சிக்கினார், அவரால் அவர்களை மீறமுடியவில்லை அதனாலே பாஜகவினை ஒதுக்கிவைத்தார்.

கருணாநிதி சிறுபான்மையினரை ஒருமாதிரி கையாண்டார், இப்போது ஸ்டாலினால் அவர்களை மீற முடியவில்லை அது பல இடங்களில் தெரிகின்றது.

ஆக திமுக அதிமுக என அவர்கள் போட்ட முகமூடி கிழியும் நேரமிது, பாஜகவுக்கு மிகபெரிய சாதகமான விஷயம் இதுதான், இனி அவர்கள் அடித்து ஆடமுடியும், தங்களுக்கு வராத சிறுபான்மை வாக்குகள் பிரிந்துபோகும் என்பதில் அவர்கள் உற்சாகமாக ஆடுவார்கள்.

இனி வரும் காலங்கலில் இந்திய தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, உலககொப்பை கிரிக்கெட் நடக்கும் போது ஓரமாக ஒரு கூட்டம் விளையாடுவதை போல அகில இந்திய தேர்தல் பரபரப்பில் இங்கே தனி ஜல்லிகட்டே நடக்கும்,  அங்கே பாஜகவின் கைதான் ஓங்கி இருக்கும், காலம் அவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பை கொடுக்கும்.

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் Ebrjhvj

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் நகர மாநகராட்சி திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கே பரபரப்பு நிகழ்கின்றது

பிரிட்டனின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவது எல்லோரும் அறிந்தது, எனினும் இந்த மாநகராட்சியின் நிலைக்கு அது மூல காரணமல்ல.... மிக முக்கிய காரணம் தவறான நிர்வாகம்.

முன்பு உலகைச் சுரண்டி செழிப்பாக இருந்த காலத்தில் பிரிட்டனில் செல்வம் அதிகம், இதனால் அரச ஊழியர் பணியாளர் என அள்ளி அள்ளி கொடுத்தார்கள், ஏகப்பட்ட பணம் மக்களுக்கு கிடைத்தது

இந்தியா போன்ற நாடுகளில் சுரண்டபட்ட பணத்தில் அப்படி வாழ்ந்தார்கள்

இப்போது அப்படி அல்ல... சிறிய தீவாக சுருங்கிவிட்ட பிரிட்டனின் பொருளாதாரம் முன்புபோல் இல்லை ஆனால் சட்டங்கள் அதே பெரிய பணக்காரனுகுரிய வகையில் இழப்பீடும் உரிமையும் அதிகம் கொண்டவை

இதனால் சில விவகாரங்களில் பலத்த செலவு ஏற்பட இப்போது திவால் நிலைக்கு சென்றுவிட்டார்கள், பிரிட்டன் அரசிடமும் போதிய நிதி இல்லை.

இது முழுக்க நிர்வாக தவறு, எனினும் பழைய பிரிட்டன் என்றால் அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பார்கள் , வீழ்ந்துவிட்ட சிங்கத்தால் அது முடியவில்லை.

இனி பழைய பணக்கார் வாழ்வு அவர்களுக்கு இல்லை, ப்ரெக்ஸிட் என ஐரொப்பிய யூனியனில் இருந்து பிரிந்தாலும் நிலமை முன்பை விட மோசம்.

இது அவர்கள் வீழ்ச்சியின் முதல் அறிகுறி. போகப் போக நிலமைகள் இன்னும் மோசமாகலாம்.

உலகையே ஆண்ட அந்த சாம்ராஜ்யம் இப்போது அதன் நகரங்கள் திவால் இனி அங்கே குப்பை அள்ளக் கூட பணமில்லை எனும் அளவு சென்றுவிட்டது.

அவர்களிடம் அடிமையாக இருந்த இந்த பாரதம் உலகம் வியக்கும் அளவு பெரும் இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

எவ்வளவோ குழப்பம் பிரிவினை ஓயா சர்ச்சை, தலைவலி காங்கிரஸ் நாட்டை குழப்ப கம்யூனிஸ்டுகள், சாதி , திராவிடம் , தலித்தியம், சிறுபான்மை மத உரிமை என எவ்வளவோ குழப்பங்களை பிரிட்டிசார் விதைத்து சென்றாலும் தேசம் அதை தாண்டி சாதிக்கின்றது.

வஞ்சகமும், சுரண்டலும், ஆதிக்கமும் இன்னும் எவ்வளவோ கயமைகளை செய்து வாழ்ந்துவிடலாம் என கருதிய தேசம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது.

காலம் அதன் கடமையினை சரியாக செய்கின்றது.

ஒரு சிறிய தீவ் இவ்வளவு பெரிய நாட்டை எப்படி ஏமாற்றி சுரண்டி குழப்பி அடித்து வாழ்வது சாமர்த்தியம் என கருதினாலும், அது அறிவு தந்திரம் என சொல்லிக் கொண்டாலும் காலம் அதற்கான தண்டனையினை கொடுக்காமல் விடாது, இதோ தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் சரிந்தால் பாகிஸ்தான் சரியும், , சீனா அலறும் என்பது ஆச்சரியமல்ல, பிரிட்டனும் ஆடுகின்றதல்லவா அங்கேதான் இருக்கின்றது விஷயம், காங்கிரஸ் அமைக்கப்பட்ட வரலாறும் அதுவே...

அங்கே அன்னியர் ஆதிக்கம் செலுத்தும் ரகசியமும் அதுதான்.


#பிரம்ம_ரிஷியார்
திமுகவின் அமைச்சர் உதயநிதி பேசிய சனாதான தர்ம ஒழிப்பு பற்றி அமித்ஷா மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கின்றார்.

அமித்ஷாவின் பேச்சு என்பது தமிழக அரசியல்வாதிகளை போல கடந்து செல்லமுடியாதது அதன் தாக்கம் அதிகம்.

இது இனி இந்திய அளவில் எதிரொலிக்கும், அப்போது புள்ளிவைத்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும், காரணம் "மக்களே இந்துவிரோதிகளுடன் உங்கள் கட்சி கூட்டணி பாரீர், இந்துமதத்தை ஒழிக்கும் திமுகவோடு உங்கள் கட்சிக்கு கூட்டணியா" என அகில இந்திய அளவில் பாஜக கேட்டால் கூட்டணி நிலை சிக்கலே...

ஆக புள்ளிவைத்த கூட்டணியில் இருந்து திமுக விரட்டப்படும் பெரும் காரியத்தை செய்கின்றார் உதயநிதியார், விரைவவில் ஒரு புள்ளி அழிக்கபடலாம் அல்லது திமுகவின் தேசிய அரசியலுக்கு முற்றுபுள்ளி இடப்படலாம்..

"மகன் தந்தைக்காற்றும் உதவி" என்பது இதுதான்

திமுக இப்போதுதான் தன் வரலாற்றிலே சரியான எதிரியினை காண்கின்றது, காட்சிகள் இனி சுவாரஸ்யமாக அமையும்

#பிரம்ம_ரிஷியார்
ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு.

இப்படி ஒரு குழுவை அமைத்திருக்கின்றார்கள், இக்குழுதான் நாடுமுழுக்க பாராளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் நடத்த சாத்தியமா என ஆலோசித்து அறிக்க்கை கொடுக்குமாம்.

நாடுமுழுக்க பாராளுமன்ற தேர்தலை நடத்தும்போதே சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் மக்கள் இரு வாக்குகளை செலுத்துவார்கள் அவ்வளவுதான் விஷயம் என்பது குழந்தைக்கும் தெரியும்.

ஆனால் எல்லாவற்றையும் முறைபடி செய்யும் மோடி அரசு ஒரு குழு அமைத்து எல்லா கட்சிகளுடனும் அல்லது தேர்தல் கமிஷனுடன் ஆலோசித்து அறிக்கை கொடுக்கும்.

அறிக்கையின் முடிவினை இப்போதே ஊகிக்கலாம்.

ஆக செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்ற தொடரில் இதுவும் எதிரொலிக்கலாம், நிச்சயம் காங்கிரஸும் அதன் திமுக உள்ளிட்ட கட்சியின் கூட்டணியும் இதனை ஏற்காது.

ஆனால் அவர்கள் ஏற்காவிட்டாலும் சிக்கல் இல்லை.

இனி என்னாகும் என்பதை ஊகிக்க முடிந்தாலும் இதெல்லாம் நடக்கும் போது பார்த்துகொள்ளலாம் நல்லதே நடக்கும் என நம்புவோம்.

தேசாபிமானிகள் இதனை வரவேற்பார்கள், காரணம் அடிக்கடி தேர்தலை நடத்துவதால் பெரும் பணம் செலவாகின்றது, தேர்தல் கமிஷனின் நேரமும் மக்களின் வரிபணமும் பாழாகின்றது.

ஒரு தேர்தலிலே எல்லா வகை தேர்தலையும் நடத்திவிடும் வழி இருந்தாலும், அடிக்கடி தேர்தல் நடத்தி மக்களின் வரிபணத்தை பாழடிப்பது சரியல்ல‌
அதனை வேறு நல்ல பணிகளுக்கு பயன்படுத்தலாம்,

இது மக்களுக்கான தேசமே தவிர அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்குமான தேசம் அல்ல‌.

அரசியல் கட்சிகளுக்கும் அவர்கள் இஷ்டபடி ஆடவும் சுருட்டவும் உருவான தேசமல்ல, இங்கு மக்களுக்கும் நாட்டுக்கும் எது நல்லதோ அதைத்தான் செய்யவேண்டும்.

இதனால் ஒரே தேர்தலில் நாடாளுமன்றம் சட்டமன்ற தேர்தலை நடத்துவதுதான் எல்லா வகையிலும் சரி என்றாலும் உரிய முடிவு வரும் வரை எதிர்பார்ப்போம்
இங்கே உபிக்களின் கோரிக்கை என்னவாக இருக்குமென்றால் இந்த பஞ்சாயத்து தேர்தல்களையும் இதோடு வைத்துவிடலாம் என்பதாக மட்டுமே இருக்கும், அவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு , அய்யா கண்ட கொள்கை எல்லாமே அதுதான்.

அவர்கள் அந்த கோரிக்கை மட்டும்தான் வைப்பார்கள்.

இனி ராம்நாத் கோவிந்த் எனும் அந்த முன்னாள் குடியரசு தலைவர் தலமையில் ஆலோசனை தொடங்கும், இதனால் தேசம் அடுத்தகட்ட பரபரப்புக்கு செல்லும் என்றாலும் முடிவு நலமாகவே அமைபும்.

#பிரம்ம_ரிஷியார்
ரஷ்யா நிலாவுக்கு தன் லூனா 25 எனும் விண்வெளி கலனை அனுப்பியிருக்கின்றது

இந்த விவகாரம் கொஞ்சம் ஆழமானது, ரஷ்யா வான்வெளி பலமிக்க நாடு முதன் முதலாக விண்வெளிக்குள் நுழைந்த நாடு என்றாலும் 1976க்கு பின் எந்த விண்கலத்தையும் நிலாவுக்கு அனுப்பவில்லை

அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் விண்வெளி பலத்தை காட்ட நிலாவினைத்தான் தேர்ந்தெடுத்தன, என்னவெல்லாமோ செய்தது இருபக்கமும் மர்மங்கள் அதிகம்

யாரும் சென்றுபார்க்கமுடியா இடம் என்பதால் இருவர் சொன்னதையும் உலகம் நம்பிற்று, அப்படியே அவர்களுக்குள்ளும் ஒரு ரகசிய இழை இருந்தது

1975க்கு பின் ரஷ்யாவின் பொருளாதாரம் சரிய விண்வெளி ஆய்வுகளை குறைத்தது அது குறைத்ததால் அமெரிக்காவும் குறைத்தது

பின் ரஷ்யா உடைந்துபோக இந்த போட்டி நின்றே போனது அல்லது தொழில்நுட்பத்தால் என்ன முடியுமோ அந்த எல்லையினை அடைந்தார்கள் ஒரு கட்டத்தை தாண்டமுடியவில்லை

இந்நிலையில் அமெரிக்காவும் விண்வெளி ஆய்வுகளை குறைத்தது புதிய ஓடமெல்லாம் இல்லை

அப்படியான காலகட்டத்தில் சீனா மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தியது அதன் வான்பலம் விண்வெளி பலம் அதிகரித்தது அமெரிக்கா மெல்ல உடலை முறுக்கியபடி காட்சிக்குள் வந்து அவதானித்தது

சீனா என்னவெல்லாமோ செய்து இப்போது மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என சொல்லிகொண்டிருக்கின்றது அதன் கலன்கள் நிலாவில் இறங்கின‌

இப்போது இந்தியாவும் சந்திராயனை அனுப்பியிருக்கின்றது

இங்கேதான் துள்ளி குதித்தது ரஷ்யா உக்ரைன் போர் என பெரும் களபேரம் பொருளாதார தடை இருக்கும் நிலையிலும் நிலாவுக்கு ஒரு கலனை அவசரமாக அனுப்பி இந்தியா தங்களுக்கு கீழேதான் என காட்ட விரும்பிற்று

அப்படியே அவசரமாக ஏவபட்ட அந்த கலம் சந்திராயனுக்கு முன்பு நிலாவில் இறங்கும், அதே தென் துருவ பக்கம் இறங்கும்

இங்கு எழும் கேள்வி ஒன்றுதான்

சீனா எவ்வளவோ விஷயங்களை நிலாவில் செய்தபோது அமைதியாக இருந்த ரஷ்யா, இந்தியா நிலாவினை தொடும்போது மட்டும் இவ்வளவு வேகத்தை ஏன் காட்டவேண்டும்?

இந்தியாவினை விட நாங்கள் மேலானவர்கள் என காட்ட விரும்பும் ரஷ்யா , சீனாவினை ஏன் கண்டுகொள்ளவில்லை

விஷயம் அதேதான்

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் அடிப்படை உறவு அதிகம், இந்தியா இருவருக்குமே உவப்பான நாடு அல்ல‌

சீனா அதை பகிரங்கமாக சொல்லி நிற்கும், ரஷ்யா தன் வியாபரங்களுக்காக வெளியே சொல்லாது முடிந்தவரை சுரண்டபார்க்கும்

இப்போது இந்தியா விழித்துகொண்டதால் அதன் கோபம் அதிகரிக்கின்றது இந்தியா பெரும் பலம் பெறுவதை அல்லது அப்படி ஒரு பெயர் பெறுவதை அது விரும்பவில்லை விரும்பவும் விருமாது

அதற்கு தேவை அவர்கள் காலை பிடித்து தொங்கும் அடிமை இந்தியா

அது இனி நடக்காது என்பதால் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ரஷ்யா எக்காலமும் இந்திய வளர்ச்சியினை விரும்பும் நாடு அல்ல, குழப்பமும் ஏழ்மையும் நிரம்பிய இந்தியாதான் அவர்களுக்கு வேண்டும் இல்லாவிட்டால் வம்பு செய்வார்கள்

இவ்வளவு அவசரம் கூடாதுதான், இந்திய சந்திரயான் செல்லும் நேரம் இவர்களும் புகுந்தால் சமிக்கைகளில் சில சர்ச்சைகள் வர வாய்ப்பும் உண்டு

ஆனாலும் செய்யத்தான் செய்வார்கள், இந்தியா இதை செய்யுமுன் தாங்கள் செய்துவிடவேண்டும் எனும் அந்த வன்மம் அதிகமிருக்கின்றது

ரஷ்யாவின் இந்த குபீர் பய்ச்சலை பார்த்து வெண்ணிற ஆடை மூர்த்தி கச்சேரியினை ரசிக்கும் வடிவேலு போல புன்னகை பூத்து தலையாட்டி கொண்டிருக்கின்றது சீனா

#பிரம்ம_ரிஷியார்
தமிழகத்தில் நீண்ட நாள் தெரியாமல் இருந்த விஷயம் ஜெயா தாக்கபட்ட அன்று அய்யா கலைஞர் என்ன சொன்னார் என்பது..

அதை ஜெயாவும் சொல்லவில்லை திமுக தரப்பிலும் சொல்லவில்லை, பத்திரிகைகளெல்லாம் அவர்கள் கட்டுப்பாடு என்பதால் யாரும் சொல்லவில்லை.

கடைசிவரை அவர் "ஏதோ" சொன்னார் என செய்தி வந்ததே தவிர அந்த மர்ம வார்த்தை யாருக்கும் தெரியாது.

அப்படியே அது மறைக்கபட்டிருந்தது...

இப்போது நிர்மலா அம்மையாரின் தயவில் பொங்கிய அலையில் திமுகவினர் உதவியோடு எல்லாம் எல்லாருக்கும் தெரியவருகின்றது.

திமுகவினரும் அவர்கள் கூட்டாளிகளும் அமைதியாக இருந்திருந்தால் கூட விஷயம் வெளிவந்திருக்காது, ஆனால் அவர்கள் அவசரமாக மறுத்ததால் அதனை கண்ட சாட்சிகள் அய்யா சொன்னது இதுதான் என பக்கம் பக்கமாக சொல்ல தொடங்கிவிட்டார்கள்.

எப்படிபட்ட உதவியெல்லாம் திமுகவினர் செய்கின்றார்கள்.

இப்பொழுதெல்லாம் திமுகவினர் மிக மாறிவிட்டார்கள்.

ராமன் படத்தை செருப்பால் அடித்தது நாங்களில்லை என்கின்றார்கள், இப்போது ஜெயாவினை தாக்கவில்லை என்கின்றார்கள்.

ஆக 2035ல் அவர்கள் சொல்ல போகும் விஷயம், இந்தியினை நாங்கள் எதிர்க்கவில்லை, இந்துமதத்தை பழிக்கவே இல்லை அப்படியே தாடி வைத்த அந்த முதியவர் யாரென எங்களுக்கு தெரியாது அவர் ஒரு சன்னியாசியாக இருக்கலாம், கங்கை கரையில் இருந்து வந்திருக்கலாம் அதனால்தான் கோவில் முன் சிலை வைத்திருக்கின்றார்கள் அதனை பற்றி எங்களுக்கு தெரியாது...

சரி, ஜெயாவிடம் அய்யா அப்படி என்ன சொன்னார்? அதையெல்லாம் பொதுவெளியில் சொல்ல கூடாது, ஒரு பெண்ணின் தோற்றத்தை ஒருகாலமும் பழிக்கும் செயல்களை செய்ய கூடாது என்பது இந்து மரபு.

#பிரம்ம_ரிஷியார்

Back to top

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next