புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
சிவா
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
bala_t
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
297 Posts - 42%
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:54 am

First topic message reminder :

நக்கீரன்

தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!

திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்

இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்

என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்

என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:05 am

திராவிடர் நாகரிகம் வேறு ஆரியர் நாகரிகம் வேறு!

திருக்குறள் ஆரியத்தை, ஆரிய தர்மத்தை மறுத்து எழுதப்பட்ட நூல். கடவுள் வாழ்த்தில் கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும் பற்றற்ற தன்மையையும் அறிவையும் தான் கடவுள் மேல் ஏற்றிக் கூறியுள்ளார். கடவுளை அவர் ஒழுக்கம் கெட்டவனாகவோ, காமுகனாகவோ, வஞ்சகனாகவோ படைக்கவில்லை.

திருக்குறள் ஆரிய நாகரிகம், பண்பாடு, சலாச்சாரத்தை மறுத்து தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை எடுத்து இயம்பும் ஒழுக்க நூலாகும்.

கீதை போற்றும் கண்ணன் ஒழுக்கம் கெட்டவனாக படைக்கப்பட்டுள்ளான். பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு காமுகனாய் காதலனாய் படைக்கப்பட்டுள்ளான். பிறந்தது முதற் கொண்டு இறக்கும் வரை கண்ணன் ஒழுக்கம் உடையவனாகக் காட்டப்படவில்லை. ஒழுக்கக் கேடனாகவே காட்டப்பட்டுள்ளான். அவனது ஒழுக்கக் கேடுகளுக்கு புராணிகர்கள் 'லீலைகள்' என தெய்வீக முலாம் பூசியுள்ளனர்!

குழந்தைப் பருவத்தில் பரதன் சகடாசூரன் திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்!

கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்!

கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான்!

மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்!

மாட்டுருக் கொண்டு வந்த அரிஷ்டனின் கொம்பைப் பிடுங்கிக்; கொன்றான்!

குதிரை உருக்கொண்டு வந்த கேசியைக் கொன்றான்!

வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்!

கம்சன் வீட்டு வண்ணானைக் கொன்றான்!

கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்!

மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்!

சுபலன் கோசன் ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்!

தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளிக் கொன்றான்!

பஞ்சகன் என்பவனை கடலில் சென்று கொன்றான்!

சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்!

முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்!

நரகாசுரனைக் கொன்றான்!

இரணியனைக் கொன்றான்!

வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணனையும் கொன்றான்!

சாளுவனைக் கொன்றான்!

சிசுபாலனைக் கொன்றான்!

துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!

இவ்வளவுதான் இவனது படுகொலைகள் என்று எண்ண வேண்டாம்! இன்னும் பலவுண்டு! இங்கு எழுத இடமில்லை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:06 am

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவன் நாண நன்னயஞ் செய்து விடல்' என்ற உயர் கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைகாரக் கிருஷ்ணன் கதையை தமிழகத்தை ஊடுருவிய ஆரியர் புகுத்தி விட்டார்கள். நரகாசுசூரனைக் கொன்ற விஷ்ணுவை தீபாவளி எனக் கொண்டாடும் அளவிற்கு தமிழர்கள் மதி இழந்து விட்டனர்.

கிருஷ்ணன் கொலைகாரன் மட்டுமல்ல ஒழுக்கம் கெட்டவன் கூட. ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் சட்டைகளையும் களவாடிக் கொண்டு மரதின்மேல் ஏறிக் கொண்டு அம்மணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்து கண் குளிரப் பார்த்தான்!

இராதை, உருக்மணி, சத்தியபாமை, சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, இலட்சுமணை, நப்பின்னை, சோபை, பிரமை, சாந்தி ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.

மேலும் நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த 16,000 பெண்களையும் மணந்து கொண்டான்.

இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக் கன்னிகைகளையும் மணந்து கொண்டான்.

இவர்களைத்தவிர பல்லாயிரக்கணக்கான கோபிகா பெண்களுடன் லீலைகள் புரிந்தான்.

கொலையும் விபசாரமும் மட்டுமல்ல! கொலை செய்யவும் தூண்டினான் கீதையின் மூலமாக!

கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம். அப்படியானால் ஆரியர்கள் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா? கொண்டாடலாமா?

இவை கற்பனைக் கதைகள்தான். ஆனால் அவை கடவுள் தன்மைக்குப் பொருந்துமா? தன்மானம் உள்ளவர்கள் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்ளலாமா?

இராமாயணம் போற்றும் இராமனும் யாருக்கோ பிறந்தவனாகத்தான் காட்டப்பட்டுள்ளான். அவன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து கொண்ட தசரதனுக்குப் பிறந்ததாகக் கூறப்படவில்லை. இராமனது நாமத்தை இடையறாது நாதோபாசகம் செய்தால் எல்லாம் சரிவந்து விடும் எனச் சொல்லும் கம்பதாசர்கள் இராமனின் குறைபாடுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுகிறார்கள்.

விருத்திராசூரன் மனைவி விருதையின் கற்பை விஷ்ணு கெடுத்த சாபத்தினால் இராமாயணம் உருவாயிற்றென்றும் விஷ்ணுவும் இலெட்சுமியும் வைகுண்டத்தில் தங்கள் மாளிகைப் படுக்கை அறையில் தனிமையில் இருக்கும் போது அதனுள் செல்ல நினைத்த ஜனகாதி ரிஷிகளை விஜயன் ஜெயன் என்ற அரண்மனைக் காவற்காரர்கள் தடுத்ததனால் பிராமண உத்தமர்களான முனிவர்களால் கொடுக்கப்பட்ட சாபத்தினால் இராமாயணம் உருவாயிற்று என்று சைவ வைணவ புராணங்கள் கூறுகின்றன.

இராமாயணம் தேவர்கள் என்பவர்களுக்கும் அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட் டமாகும். அதாவது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடிப்படையாக வைத்து கற்பிக்கப்பட்ட இதிகாசமாகும்.

இராமாயணம் தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும் அசுரர்கள், இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த்தியும் இழித்தும் எழுதப்பட்டதாகும்.

இராமாயணம் பற்றிச் சொன்னது கந்தபுராணத்துக்கும் பொருந்தும். இரண்டுக்கும் பல ஒற்றுமை காணப்படுகின்றன. கந்தபுராணம் சைவர்களால் வைணவ இதிகாசமான இராமாயணத்துக்குப் போட்டியாக எழுதப்பட்டது.

இராமாயாணத்தின் கதாநாயகன் இராமனை எடுத்துக் கொண்டால் அவன்-

(1) இராவணனை அழித்ததெல்லாம் "உன்னை மீட்கும் பொருட்டு அன்று. எனக்கு நேர்ந்த பழியைத் நீக்கிக் கொள்ளும் பொருட்டே ஆகும். நீ இறந்து படு. இன்றேல் எங்கேயாவது போய்விடு" என்று சொன்னதால் சீதை தீக்குளித்து தன் கற்பை எண்பிக்கிறாள். கட்டிய மனைவி மீது அய்யப்பட்டதால் தீக்குளித்து வா என்று சொன்னவனை அவதாரம் என்று சொல்ல முடியுமா?

(2) இராமன் விசுவாமித்திரன் நடத்தும் யாகத்தை கலைத்த சம்புகனை ( திராவிடனை) எந்த முகாந்திரமும் இன்றி அம்பு எய்திக் கொல்கிறான். இது "சத்திரிய தர்மமா"?

3) வாலியைப் பேடி போல மாமரத்தின் பின் மறைந்திருந்து கெரில்லா பாணியில் அம்பு எய்திக் கொல்கிறான். அவதாரம் (அன்றைய) யுத்த தர்மத்தை மீறலாமா?

(4) அயோத்திக்கு சீதையுடன் திரும்பிய இராமன் மீண்டும் ஒரு சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு அவள் மீது அய்யம் கொண்டு காட்டுக்கு அனுப்புகிறான். அதுவும் சீதை கர்ப்பமாக இருக்கும் போது! ஒரு சராசரி மனிதனே அப்படிச் செய்ய மாட்டான் என்னும் போது ஒரு அவதாரம் செய்யலாமா?

(4) சீதையிடம் இராமன் 'இந்த லவனும் குசனும் எனக்குப் பிறந்தவர்கள்தான் என்பதற்கு என்ன சான்று' என்று கேட்கிறான். சீதை மனம் நொந்து கதற, "பூமா தேவி" பிளந்து சீதையை இழுத்துக் கொள்கிறாள்.

இப்படித்தான் வால்மீகி எழுதியிருக்கிறார்.

இவ்வாறு இராமனைப் போன்ற ஒரு அயோக்கியனைத் தொழுதால் அல்லது அவனது பெயரை இடையறாது "நாதோபாசகம்" செய்தால் பாவம் வருமா அல்லது தொலையுமா? அமைதி வருமா? அல்லது கெடுமா?

ஆரிய மதத்தை தமிழர்கள் தழுவியதாலேயே பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டது. தொல்காப்பியரின் காலத்துக்கு முன்னரே ஆரியரது அரசியல் பண்பாட்டுப் படையெடுப்பு தொடங்கி விட்டது. அது முற்சங்க காலத்தில் மேலும் சிறிது ஊடுவி பிற்சங்க காலத்தில் வேரூன்றி வளர்ந்தது. சங்க இலக்கியங்களில் இராமாயண பாரதக் கதைகள் பற்றிய சில குறிப்புக்கள் இருக்கின்றன.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:06 am

சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நான்மறை அந்தணர் செல்வாக்கையும் வேத மதத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது. திருமால், பெரியோன், காமன், இந்திரன், பலராமன் ஆகியோருக்கு கோட்டங்கள் இருந்ததையும், இந்திர விழா கொண்டாடியதையும், கடற்கரைச் சோலையில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்ற இரண்டு புண்ணிய தடாகங்கள் இருந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. சமணக் கடவுளான அருகதேவனுக்கு பள்ளிகளும் பவுத்தர் வழிபடும் புத்தருக்கு விகாரைகளும் இருந்ததையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

திருவள்ளுவர் எழுதியுள்ள குறள்களுக்குப் பொருள் காணும் போது அவர் ஆளுமை பற்றியும் அவர் வாழ்ந்த காலத்து சமூகம், பண்பாடு, கலாச்சாரம் பற்றியும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரது கண்கள் ஊடாக குறளின் பொருளை உள்ளவாறு நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

திருவள்ளுவர் காலத்திற்கும் நமது காலத்திற்கும் இடைவெளி பெரியது. அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே அவர் தனது கருத்துக்களை ஆராய்ந்து கூறியிருக்க முடியும். அவரது காலத்து அரசியல் அமைப்பு 'மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்' எனக் கருதிய காலம். குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது அவரது கால சமூக அமைப்பு. அதாவது குலத் தொழில் கற்காமல் தானாக வந்து சேரும் என்பதாகும்.

இன்று அரசியல் அமைப்பு, சமூக அமைப்பு மாறிவிட்டன. தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்திவிட்ட அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி' என்று அவ்வையாரால் பாடவே முடிந்தது. ஆனால் இன்று அணுவை உண்மையாகப் பிளந்து அதன் ஆற்றலை அழிவுக்கும் ஆக்கத்திற்கும் பயன் படுத்துகிறோம்.

புலவர்கள் நிலாவினை பெண்களின் முகத்துக்கு உவமை கூறிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். இன்று நாம் மனிதன் நிலாவில் இறங்கி நடந்த காலத்தில் வாழ்கிறோம். அடுத்து செவ்வாயில் மனிதனை தரையிறக்க முயற்சிகள் நடக்கின்றன.

வள்ளுவர் காலத்தில் உழவுத் தொழில்தான் சிறந்ததாக எண்ணப்பட்டது. ஏனைய தொழில் செய்தவர்கள் தொழுதுண்டு பின் செல்பவர்கள் என வள்ளுவர் கூறுகிறார்.

இன்று இயந்திரத் தொழில் வளர்ச்சியும் மின்னணு வளர்ச்சியும் (நடநஉவசழniஉள) இயற்பியல் வளர்ச்சியும் வானியல் வளர்ச்சியும் அசுர வேகத்தில் வளர்ந்து விட்டன. உடல் வலிமையை விட மூளை வலிமை பெரிதாகப் போற்றப்படுகிறது. விமானப் போக்கு வரத்தால் உலகம் சுருங்கி விட்டது. உலகம் ஒரு ஊர் (படழடியட எடைடயபந) என்ற புது மொழி பிறந்து விட்டது.

எனவே வள்ளுவர் காலத்தையும் இன்றைய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒற்றுமைகளையம் காணலாம் வேற்றுமைகளையும் பார்க்கலாம்.

இருந்தும் வள்ளுவர் செய் திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்தும் எனச் சொல்கிறோமே? அது சரியா?

உலக இலக்கியங்கள் மனிதன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்புற்று இருப்பதற்கு உரிய அறிவுரைகளை, கருத்துக்களை, நெறிகளை சொல்கின்றன. இந்த விழுமியங்கள் கால ஓட்டத்தில் பேரளவு மாறுவதில்லை. சிறிதளவே மாறுகிறது. இன்றுள்ள சிக்கல்களை, குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் நூற்றுக்கு நூறு விழுக்காடு வழிகாட்டியாக இருப்பார் என்று எண்ணுவது தவறாகும்.

குறிப்பாக அவர் காலத்தில் அவர் பெண்களைப் பற்றிச் சொன்ன கருத்துக்கள் புரட்சிகரமானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பெண்களைப் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துக்கள் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை.

இந்தக் கோலை வைத்துக் கொண்டுதான் நாம் வள்ளுவரை அளக்க வேண்டும். அப்போதுதான் உண்மையை அறிய முடியும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:46 am

சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நான்மறை அந்தணர் செல்வாக்கையும் வேத மதத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது. திருமால்இ பெரியோன்இ காமன்இ இந்திரன்இ பலராமன் ஆகியோருக்கு கோட்டங்கள் இருந்ததையும்இ இந்திர விழா கொண்டாடியதையும்இ கடற்கரைச் சோலையில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்ற இரண்டு புண்ணிய தடாகங்கள் இருந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. சமணக் கடவுளான அருகதேவனுக்கு பள்ளிகளும் பவுத்தர் வழிபடும் புத்தருக்கு விகாரைகளும் இருந்ததையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

திருவள்ளுவர் எழுதியுள்ள குறள்களுக்குப் பொருள் காணும் போது அவர் ஆளுமை பற்றியும் அவர் வாழ்ந்த காலத்து சமூகம்இ பண்பாடுஇ கலாச்சாரம் பற்றியும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரது கண்கள் ஊடாக குறளின் பொருளை உள்ளவாறு நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

திருவள்ளுவர் காலத்திற்கும் நமது காலத்திற்கும் இடைவெளி பெரியது. அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே அவர் தனது கருத்துக்களை ஆராய்ந்து கூறியிருக்க முடியும். அவரது காலத்து அரசியல் அமைப்பு 'மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்' எனக் கருதிய காலம். குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது அவரது கால சமூக அமைப்பு. அதாவது குலத் தொழில் கற்காமல் தானாக வந்து சேரும் என்பதாகும்.

இன்று அரசியல் அமைப்புஇ சமூக அமைப்பு மாறிவிட்டன. தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்திவிட்ட அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி' என்று அவ்வையாரால் பாடவே முடிந்தது. ஆனால் இன்று அணுவை உண்மையாகப் பிளந்து அதன் ஆற்றலை அழிவுக்கும் ஆக்கத்திற்கும் பயன் படுத்துகிறோம்.

புலவர்கள் நிலாவினை பெண்களின் முகத்துக்கு உவமை கூறிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். இன்று நாம் மனிதன் நிலாவில் இறங்கி நடந்த காலத்தில் வாழ்கிறோம். அடுத்து செவ்வாயில் மனிதனை தரையிறக்க முயற்சிகள் நடக்கின்றன.

வள்ளுவர் காலத்தில் உழவுத் தொழில்தான் சிறந்ததாக எண்ணப்பட்டது. ஏனைய தொழில் செய்தவர்கள் தொழுதுண்டு பின் செல்பவர்கள் என வள்ளுவர் கூறுகிறார்.

இன்று இயந்திரத் தொழில் வளர்ச்சியும் மின்னணு வளர்ச்சியும் (நடநஉவசழniஉள) இயற்பியல் வளர்ச்சியும் வானியல் வளர்ச்சியும் அசுர வேகத்தில் வளர்ந்து விட்டன. உடல் வலிமையை விட மூளை வலிமை பெரிதாகப் போற்றப்படுகிறது. விமானப் போக்கு வரத்தால் உலகம் சுருங்கி விட்டது. உலகம் ஒரு ஊர் (படழடியட எடைடயபந) என்ற புது மொழி பிறந்து விட்டது.

எனவே வள்ளுவர் காலத்தையும் இன்றைய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒற்றுமைகளையம் காணலாம் வேற்றுமைகளையும் பார்க்கலாம்.

இருந்தும் வள்ளுவர் செய் திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்தும் எனச் சொல்கிறோமே? அது சரியா?

உலக இலக்கியங்கள் மனிதன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்புற்று இருப்பதற்கு உரிய அறிவுரைகளைஇ கருத்துக்களைஇ நெறிகளை சொல்கின்றன. இந்த விழுமியங்கள் கால ஓட்டத்தில் பேரளவு மாறுவதில்லை. சிறிதளவே மாறுகிறது. இன்றுள்ள சிக்கல்களைஇ குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் நூற்றுக்கு நூறு விழுக்காடு வழிகாட்டியாக இருப்பார் என்று எண்ணுவது தவறாகும்.

குறிப்பாக அவர் காலத்தில் அவர் பெண்களைப் பற்றிச் சொன்ன கருத்துக்கள் புரட்சிகரமானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பெண்களைப் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துக்கள் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை.

இந்தக் கோலை வைத்துக் கொண்டுதான் நாம் வள்ளுவரை அளக்க வேண்டும். அப்போதுதான் உண்மையை அறிய முடியும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:47 am

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

திருவள்ளுவர் பற்றிய வாழ்க்கை வரலாறு இன்றும் ஒரு இருண்ட இரவாகவே இருக்கிறது. அவர் காலத்தவரோ அவருக்குப் பின்னர் வந்தவர்களோ அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் எழுதி வைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருக்கவில்லை என்பதே. மீறி எழுதி வைத்த கர்ண பரம்பரைக் கதைகள் அவருக்கு மாசு கற்பிப்பதாகவே உள்ளன.

திருக்குறளைப் படிக்கும் போது தனி ஒரு மனிதருக்கு இத்தனை பொருள்கள் பற்றி இவ்வளவு ஆழமான அறிவு இருந்திக்கிறதா என்ற மலைப்புத் தோன்றும். அதனால் சில மேலை நாட்டு அறிஞர்கள் திருக்குறளை தனி ஒருவர் மட்டும் எழுதியிருக்க முடியாது என நினைக்கிறார்கள்.

வள்ளுவர் ஏனைய சங்க காலப் புலவர்களைப் போலவே இலக்கிய இலக்கணங்களை துறையறக் கற்றவர். வேத மதம், சமணம், பவுத்தம் போன்ற அறு சமயங்களை நன்கு உரைத்துப் பார்த்தவர். இவற்றோடு உலகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்த பட்டறிவு அவரது பரந்து பட்ட அறிவுக்குத் துணை நின்றிருக்கிறது.

திருக்குறளுக்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் வள்ளுவர் கருத்துக்களோ, சொற்களோ, சொற்றொடர்களோ ஏறாத இனிய நூல்கள் இல்லை என்றே கூறலாம். எல்லாச் சிறந்த நூல்களிலும் வள்ளுவத்தின் தாக்கத்தைக் காணலாம். குறிப்பாக தமிழில் எழுந்த நீதி நூல்கள் திருக்குறளைப் பின்பற்றியே நீதிகளைக் கூறிச் செல்கின்றன.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
செய்வம் தொழும் தகைமை திண்ணிதால்...........

என சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.

தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற
அப்பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய்............

என ஆசிரியர் சாத்தனார் தனது மணிமேகலை காப்பியத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி வள்ளுவரை 'பொய்யில் புலவன்' எனப் போற்றியுள்ளார்.

இளங்கோ அடிகள் மற்றும் சாத்தனார் மேற்கோள் காட்டிய குறள்

தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுது எழுவாள்
'பெய்' எனப் பெய்யும் மழை

என்ற குறளாகும். இந்தக் குறள் (55) வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் (6) இடம்பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம் மணிமேகலை இந்த இரண்டு காப்பியங்களும் சங்கம் மருவிய காலத்தவை ( கிபி 2 ஆம் நூற்றாண்டு) எனக் கொள்ளப்படுகிறது.

எனவே வள்ளுவர் மணிமேகலை சிலப்பதிகாரம் இரண்டுக்கும் முந்திய காலத்தவர் என்பது தெளிவாகிறது.

சங்க இலக்கியங்களில் திருவள்ளுவர் பற்றிய குறிப்பே இல்லை. மொத்தம் 500 கும் மேற்பட்ட சங்கப் புலவர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை பத்துப் பாட்டு நூல்களில் வள்ளுவர் பாடிய பாடல் ஒன்றேனும் இடம் பெறவில்லை.

ஆனால் திருக்குறளில் காணப்படும் கருத்துக்கள் சில சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
நஞ்சும் உண்பர் நனிநாகரிக
ர்

என நற்றிணையில் (355) ஒரு பாடல் வருகிறது. 'பழைமையான நட்புள்ளவர்கள் நஞ்சைக் கொடுப்பாராயினும் கண்ணோட்டம் உள்ளவர்கள் அதை உண்பார்கள்' என்பது இந்தப் பாடல் வரிகளின் பொருளாகும். இந்த நற்றிணைப் பாடல் கருத்தை திருவள்ளுவர் குறள் ஒன்றில் கையாண்டுள்ளார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:49 am

பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(அதிகாரம் கண்ணோட்டம் - குறள் 580)

கண்ணோட்டம் என்றால் நாகரிகம். அஃதாவது தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை.

இவ்வாறே 'பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்தி நீ ஆகன் மாறே' என்ற பதிற்றுப்பத்து பாடல் வரிக் கருத்து (38) வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
(அதிகாரம் கொல்லாமை - குறள் 322)

சங்க இலக்கியங்களை எட்டுத் தொகை பத்துப் பாட்டு பதிணெண் கீழ்க் கணக்கு என்ற வரிசையில் சொல்லப்படுவதுதான் மரபு. திருக்குறள் பதிணெண் கீழ்க் கணக்கை சேர்ந்த நூல். இதுவும் திருவள்ளுவர் சங்க காலத்துக்குப் பிந்தியவர் என்பதற்கு சான்றாகும். மேலும் சங்க காலத்தில் தமிழர் பண்பாட்டின் கூறுகளாக இருந்த கள்குடித்தல், புலால் உண்ணல், பரத்தையர் உறவு திருக்குறளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன. இவையும் திருவள்ளுவர் சங்க காலத்துக்குப் பிற்காலத்தவர் என்பதை பேரளவு உறுதிப்படுத்துகிறது.

திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். இதில் இடைக் காலத்தில் வாழ்ந்த பரிமேலழகர் செய்த உரையே சிறந்தது என அண்மைக் காலம்வரை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இது உண்மையன்று. பரிமேலழகர் திருவள்ளுவரின் கருத்துக்களை தனது காலத்துக்கும் சமய நம்பிக்கைக்கும் ஒப்ப திரித்துவிட்டார் என்பதே சரியாகும்.

அறத்துக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்.'

வேத மதத்தின் 18 ஸ்மிருகள் அல்லது தர்ம சாத்திரங்களை எழுதியவர்களில் மனு மிகவும் உயர்வாகப் போற்றப்படுகிறார். பெரிய சட்டவாதியாகப் (Law giver) புகழப்படுகிறார்.

பிற்கால சேர சோழ பாண்டியர் மனு, மிடாக்சாரி, ஹேமாத்ரி, ஜுமுக வாதனர் எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே (அத்தியாயம் 3) கூறியிருக்கிறேன்.

மனுவின் பெருமையை பறைசாற்ற 'மனு நீதி கண்ட சோழன்' என்ற கதை புனையப்பட்டது. இந்தப் புனைகதையைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழர்களது மூளை பலமாக சலவை செய்யப் பட்டதையே இந்தக் கதை காட்டுகிறது.

வரலாற்றில் மனு நீதியைக் கண்டித்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்த பெருமை மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை ( கிபி 1855-1897) அவர்களுக்கு உரியது. அவர் சங்க இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் புலமை வாய்ந்த இவர் திருவனந்தபுரம் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் இருந்தவர்.

மனோன்மணியம் என்ற நாடக நூலை 1891 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். லிட்டன் பிரபு எழுதிய 'The Lost Tale of Mietus' என்ற நூலைத் தழுவி மனோன்மணியம் எழுதப்பட்டது.

அதில் 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில் ... ' எனத் தொடங்கும் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில்-

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

என மனுவைக் காட்டமாகக் கண்டிக்கிறார். 'ஒரு குலத்துக்கு ஒரு நீதி' இதுதான் மனுதர்மத்தின் தர்மம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:50 am

திருவள்ளுவர் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார். தமிழினத்தை அரித்து அழித்துக் கொண்டிருக்கும் சாதி நோயை நாகரிகமான முறையில் மறுத்துரைக்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(அதிகாரம் 98 பெருமை - குறள் 972)

திருவள்ளுவர் காலத்து பார்ப்பனர்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையில் தாங்கள் உயர்ந்தவர்கள் என சொல்லித் திரிந்தனர். அதை வள்ளுவர் மறுத்துரைக்கிறார். மக்களிடையே பிறப்பினால் வேற்றுமை இல்லை. பிறப்பு ஒரு தன்மையானது. ஆனால் அவரவர் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் ஏற்படும் நிலைமைகள் ஒரே நிகரானவை அல்ல என்கிறார்.

இந்தக் குறளுக்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கொடுத்திருக்கும் தொழில் வேறுபாடுகளுக்கான விளக்கம் வள்ளுவரின் உள்ளக் கிடக்கையை நன்கு வெளிப்படுத்துகிறது.

தொழில் வேறுபாடுகள்: அதிகாரமுள்ளது அதிகாரம் இல்லாதது. வருமானம் மிக்கது வருமானம் குறைந்தது. தற்சார்பானது மற்சார்பானது. நிழலில் செய்வது வெய்யிலில் செய்வது. மனவுழைப்புள்ளது உடலுழப்புள்ளது. துப்பரவானது துப்பரவற்றது. ஒழுக்கக் கேட்டிற்கு இடமுள்ளது ஒழுக்கக் கேட்டிற்கு இடம் இல்லாதது. இன்றியமையாதது இன்றியமையாத தல்லாதது. பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது. நல்லது தீயது என்பன.

இவற்றுள் ஒவ்வோர் இணைக்கும் இடைப்பட்ட நிலைமையும் உண்டு. தொழில் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன. (திருக்குறள் மரபுரை - பக்கம் 336)

பரிமேலழகர் ஒரு பார்ப்பனர் என்பதால் இந்தக் குறளுக்கு வலிந்து பொருள் கொள்கிறார்.

'வினை வயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுகைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோதும் யாக்கை தோறும் வேறுபடுதலில் 'சிறப்பொவ்வா' வென்றும் (வள்ளுவர்) கூறினார் என்பது பரிமேலழகரின் ஆரியச் சார்புடைய உரையாகும்.

இந்த ஒரு குறள் மூலம் மட்டும் அல்லாது பெருமை அதிகாரத்தில் வரும் ஏனைய குறள்கள் வாயிலாகவும் மக்கள் அடிப்படையில் சமமானவர்கள் அவர்களிடையே மனு கற்பிக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை தெளிவாக வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
(அதிகாரம் 98 பெருமை - குறள் 973)

பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப் பிரிவினையால் ஏற்பட்ட குமுதாய படிமுறை ஒழுங்கில் பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர் உச்சியில் இருந்தும் ஒழுக்கம் கெட்டவர்களாயின் உயர்ந்தோர் அல்லர். உண்மையாகத் தாழ்ந்தவர் அல்லாத தென்னாட்டுத் தொல்குடித் தமிழர் பிராமணரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவர் அல்லர். (மேற்படி மரபுரை - பக்கம் 337)

மறப்பினும் ஒத்துக் கொளலாகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
(அதிகாரம் 14 ஒழுக்கம் உடைமை - குறள் 134)

என்ற குறளிலும் ஒருவனது பிறப்பல்ல ஒழுக்கமே அவனை உயர்ந்த குடிப்பிறப்பு உள்ளவனா அல்லவனா என்பதை நிறுவுகிறது என வள்ளுவர் கூறுகிறார். ஒழுக்கம் குன்றினால் ஒருவனது குடிப் பிறப்புக் கெடும்.

இக்குறள்கள் மூலம் பிறப்பால் சிறப்பில்லை என்பதை வள்ளுவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 4:06 am

வேள்வி செய்து வெறுமையுற்ற தமிழ் வேந்தர்கள்!

திருக்குறள் ஒரு அற நூல். சமயக்கணக்கர் வழிசெல்லாது அதற்குப் புறத்தே இருந்து திருவள்ளுவர் திருக்குறளை யாத்திருக்கிறார். இதன் காரணமாகவே ஒவ்வொரு சமயத்தவரும் திருவள்ளுவர் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர் என நிறுவ முயற்சிக்கிறார்கள். இந்திய நாட்டில் தோன்றிய வைதீகம் சமணம் பவுத்தம், புகுந்த கிறித்தவம் இஸ்லாம் திருக்குறளில் தம் தம் சமயக் கொள்கைகள் உண்டெனச் சொல்கின்றன. இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. ஒவ்வொரு சமயமும் சொல்லும் நெறிகள் திருக்குறளில் முழுமையாகக் காணப்படுகிறது.

உலக விழுமியங்கள் (values) பொதுவானவை. அது எந்தக் காலத்துக்கும் பொருந்தி வருபவை. ஒழுக்கம் விழுப்பம் தரும் ஆதலால் அது உயிரினும் ஓம்பப்படும் என்பது அவ்வாறான ஒரு விழுமியம்,

பொய் சொல்லக் கூடாது, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என வற்புறுத்தாத சமயம் உலகத்திலேயே இல்லை.

பொருளை நேர் வழியில் திரட்ட வேண்டும் பிறர் பொருளை கவரக் கூடாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், உயிர்களுக்கு உறுகண் செய்தல் கூடாது, அழுக்காறு (பொறாமை) அவா (ஆசை) வெகுளி (கோபம்) இன்னாச்சொல் (கடும்சொல்) இவை நான்கினையும் கடிந்து (தவிர்த்து) வாழ்வதே அறம். மற்றும் புறஞ்சொல்லல் கூடாது என்ற பொது விழுமியங்களை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

சமய நூல்கள் உலக நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை முதலிய கருத்துக்களை அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகின்றன. சமணம் கலைவெறுப்பைபும் பெண்வெறுப்பையும் கொண்டது. இல்லறத்தை விட துறவறம் சிறந்தது எனச் சொல்கிறது. பவுத்தம் நிலையாமை தத்துவதை வற்புறுத்துகிறது. வைதீக மதம் உலகம் மாயை என்கிறது. சிற்றின்பத்தைவிட பேரின்பம் உயர்ந்தது என்கிறது.

ஆனால் திருவள்ளுவர் மனிதன் இந்த உலகத்திலேயே வாழ்வாங்கு வாழவேண்டும் என்கிறார். அப்படி வாழ்பவன் இந்தப் பூவுலகத்தில் இருக்கும் போதே வானுறையும் தெய்வத்தின் நிலையை அடைந்து விடுகிறான் என்கிறார். அத் தெய்வத்தோடு ஒப்ப வைக்கப்படுவான் என்கிறார்.

ஒருவன் இல்லற வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின் அவன் துறவறத்தில் போய்ப் பெறும் பயன் என்ன? பயன் எதுவும் இல்லை என திருவள்ளுவர் பதில் இறுக்கிறார். அறத்தாறு என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்புடைமையும் என்கிறார்.

மனைவியை வாழ்க்கைத் துணை நலம் என அழைக்கிறார். துணைநலம் என்ற சொல்லாட்சி திருவள்ளுவரே புதிதாகக் கண்டுபிடித்த கலைச் சொல்லாகும்.

சமய நூல்கள் கூறுவது போல் சிற்றின்பத்தை திருவள்ளுவர் இழித்துரைக்கவில்லை. தலைவனும் தலைவியும் அதாவது ஆணும் பெண்ணும் கூடிக் களிக்கும் இன்பத்தை திருவள்ளுவர் காமத்துப் பாலில் 25 அதிகாரங்களில் கூறியுள்ளார். காமத்துப் பாலில் கம்பரசத்தையோ கந்தரசத்தையோ காண முடியாது. காமத்தை திருவள்ளுவர் மிக நளினமாகக் கையாண்டுள்ளார்.

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் மதிக்கச் செய்ய வல்ல பொருளே அன்றி, ஒருவனுக்கு வேறு சிறந்த பொருள் கிடையாது என்றும் திருவள்ளுவர் சொல்கிறார்.

இவ்வாறெல்லாம் வள்ளுவர் அறவழி நின்று மனிதன் உலக இன்பங்கள் அனைத்தையும் வெறுத்தொதுக்காது அவற்றைத் துய்க்க வேண்டும் என விரும்புகிறார்.

அறத்துப் பாலில் ஊழின் வலிமை பற்றி சொல்லும் வள்ளுவர் பொருட்பாலில் ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் முயற்சி திருவினையாக்கும், இடைவிடாது முயற்சி செய்தால் ஊழையும் வெற்றி கொள்ளலாம் என்கிறார்.

எனவே திருவள்ளுவரது உண்மையான உள்ளக்கிடக்கையை அறிய திருக்குறளை முழுவதாகப் பார்க்க வேண்டும். திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப் பால், இல்லற இயல், துறவற இயல், ஊழ் இயல், அரசியல், அங்க இயல், ஒழிபு இயல், களவியல், கற்பியல் என்ற எட்டு இயல், 133 அதிகாரங்கள் கொண்டது தெரிந்ததே.

நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளில் உலக வாழ்க்கை பற்றிப் பேசும் பொருட்பாலுக்கு 70 அதிகாரங்களையும் உலக இன்பத்தைப் பற்றிப் பேசும் காமத்துப் பாலுக்கு 25 அதிகாரங்களையும், இல்லறத்துக்கு 20 அதிகாரங்களையும் ஒதுக்கிய வள்ளுவர் துறவறத்துக்கு 14 அதிகாரங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளார். மேலும் முதலில் இல்லறத்தின் சிறப்பைக் கூறிப் பின்னரே துறவறம் பற்றிக் கூறுகிறார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 4:06 am

ஒவ்வொரு இயலில் சொல்லப்பட்டவை அந்த இயலுக்கு சிறப்பாகவும் ஏனையவற்றுக்கு பொதுவாகவும் கூறப்பட்டவையாகும். எடுத்துக் காட்டாக துறவறத்தில் துறவோர்க்கு சிறப்பாகச் சொல்லப்பட்ட கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, மெய் உணர்தல், அவா அறுத்தல் இல்லறத்தாருக்கும் பொருந்தி வரும்.

திருக்குறளில் சில முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றும். எடுத்துக் காட்டாக அறத்துப் பால் இல்லற இயல் புகழ் அதிகாரத்தில் 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்று சொல்லிவிட்டு 'ஆவிற்கு நீர் என்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளிவந்தது இல்' என பொருட்பால் ஒழிபு இயல் இரவு அச்சம் அதிகாரத்தில் சொல்வது மேலெழுந்து பார்ப்பவர்களுக்கு முரண்பாடு போல் தெரியும்.

ஆனால் ஈதல் இல்லறத்தாருக்குச் சொன்னது, இரவச்சம் இரப்போர்க்குச் சொன்னது என்று கருத்தில் கொண்டால் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போய:;விடும்.

தமிழ் மகள் அவ்வை தாம் அருளிய ஆத்திசூடியில் ஈவது விலக்கேல் என்று சொல்லி விட்டு அடுத்து ஏற்பது இகழ்ச்சி என்கிறார். முன்னது பிச்சைக்காரனுக்குச் சொல்லியது பின்னது பொருளுடைய செல்வந்தர்களுக்குச் சொன்னது. எனவே அவ்வை வாக்கில் முரண்பாடு இல்லை.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒவ்வொரு தமிழனது வீட்டிலும் இருக்க வேண்டும். உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் வேண்டிய அறிவுரைகளை திருவள்ளுவர் வாரி வழங்குகிறார்.

மனத்தின்கண் மாசில்லாமையே அனைத்து அறம் என்கிறார் வள்ளுவர். மேலுலகம் ஒன்று இருக்கும் பட்சத்தில் இறக்கும் பொழுது துணையாக வரக் கூடியது அறம் மட்டுமே என்கிறார். புற வேடங்களும் வெறும் ஆரவார ஆசாரங்களாலும் பயன் இல்லை என்பது அவர் கருத்தாகும்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பல சமயங்கள் இருந்தன. அவற்றுக்கிடையே வேறுபாடு இருந்தன. பூசல்கள் இருந்தன. மணிமேகலை ஆறு வகை சமயத்துக்கும் இடையில் நிலவிய போட்டியையும் பூசல்களையும் எடுத்துக் காட்டுகிறது.

இப்படியான சூழலில்தான் திருவள்ளுவர் திருக்குறளை எழுதியிருக்க வேண்டும். திருக்குறள் சங்கத்தில் அரங்கேறிய போது அதற்கு எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய சிந்தனை வரலாற்றிலும் தமிழ்நாட்டுச் சிந்தனைப் போக்கிலும் பல புதுமைகளைப் புகுத்தி சிந்தனைப் புரட்சி செய்தவர் வள்ளுவர். திருக்குறள் மறைக்கப்பட்டதற்கும் மன்னர்களால் போற்றப்படாது போனதற்கும் இதுவே காரணியாகும்.

திருவள்ளுவர் காலத்தில் பார்ப்பனர்கள் பலவிதமான வேள்விகள் (யாகம்) செய்தார்கள். அவற்றில் விலங்குகள் பலியிடப்பட்டன. இந்த வேள்விகளில் அசுவமேத யாகம் புருசமேத யாகம் முக்கியமானவை. பார்ப்பனர்களது நிறத்துக்கும் மந்திர ஒலிக்கும் மயக்கும் பேச்சுக்கும் பலியான தமிழ் அரசர்கள் வேள்விகள் செய்து நாட்டின் கருவூலத்தை வெறுமை ஆக்கினார்கள்.

பண்டைய கால ஆரிய மன்னர்கள் அசுவமேத யாகம் செய்வதை பெருமையாகக் கருதினர். மன்னர்கள் மத்தியில் தம்மை மாமன்னர்களாக (சக்கரவர்த்தி) காட்டிக் கொள்ள விரும்பிய மன்னர்கள் பெரிய பொருட் செலவில் அசுவமேத யாகத்தை நடத்தினார்கள்.

ஒரு குதிரையை அலங்கரித்து அது இன்ன மன்னனுடையது என அடையாளம் தெரியும் வகையில் அவனது கொடி, சின்னம் போன்றவற்றை வைத்து அண்டைய நாடுகளில் திரிய விடுவார்கள். நட்பு நாடாக இருந்தாலு சரி பகை நாடாக இருந்தாலு சரி குதிரை திரியும். அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒற்றர்கள் பின் தொடருவார்கள். மன்னனின் குதிரை என்பதால் மன்னனுக்குரிய மரியாதை அதற்கும் கிடைக்கும். ஆனால் எந்த நாட்டிலாவது அந்தக் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டால் ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த மன்னன் அசுவமேதக் குதிரையைக் கட்டிய நாட்டின் மீது படையெடுப்பான். அந்த அரசனைப் போரில் வென்று நாட்டை அடிமை கொள்வான்.

பின்னர் தன் வெற்றியைக் கொண்டாட பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து யாகம் செய்வான். அந்த யாகத்துக்கு அசுவமேத யாகம் என்று பெயர். இந்த யாகத்தில் குதிரையை வெட்டி அக்கினிக்குப் பலி கொடுத்து பின் அதன் மாமிசத்தைத் தேவர்களும் முனிவர்களும் பார்ப்பனர்களும் அரசபிரதானிகளும் உண்டு மகிழ்வார்கள். (சப்தபத பிராமணம்)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 4:06 am

குதிரை வெட்டப்பட்ட பின்னர் மன்னனின் பட்டத்தரசி உட்பட மன்னனின் நான்கு மனைவியர், நானூறு பணிப் பெண்கள் குதிரையின் கால்களை தண்ணீர் கொண்டு கழுவுவார்கள். பின்னர் பட்டத்தரசி குதிரையின் பக்கத்தில் படுத்துக் கொள்ள பணிப் பெண்கள் ஒரு துணியால் மூடுவார்கள். அடுத்து குதிரையின் குறியை எடுத்து பட்டத்தரசியின் மறைவிடத்தில் வைப்பார்கள். மறு பக்கம் விடிய விடிய புரோகிதர்கள் மந்திரங்களைச் செபிப்பார்கள்.

புருசமேதயாகம் இது போன்றதே. குதிரைக்குப் பதில் மனிதனை அலங்கரித்து ஓர் ஆண்டு காலம் அண்டை நாடுகள் முழுதும் சுற்றித் திரிய வைப்பார்கள். பின்னர் குதிரையை வெட்டுவது போன்று அந்த மனிதனும் வெட்டப்படுவான். குதிரையின் உடலுக்குப் பதில் மனிதனது உடலோடு பட்டத்தரசி படுத்திருப்பாள். இப்படியான ஒரு யாகத்தின் மூலமாகத்தான் தசரதராமன் பிறந்தான்!

சங்க காலத்தில் தென்னாடு புகுந்த ஆரியப் பார்ப்பனர் இந்த காட்டுமிராண்டித்தனத்தை புத்தியில்லாத தமிழ் மன்னர்களிடமும் விற்றனர்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத தமிழ்மன்னர்கள் வேள்வி (யாகம்) செய்வதைப் பெருமையாகக் கருதிப் பொன்னையும் பொருளையும் மானத்தையும் இழந்தார்கள்.

முதுகுடுமிப் பெருவழுதி (கிமு 250-225) என்ற சங்க காலப் பாண்டிய அரசன் கொலைவேள்வி பல நடத்தியதால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என அழைக்கப்பட்டான். பெருவழுதிக்கு எதிராக அணி திரண்டு வந்து பொருதி வசையுற்ற அரசர்கள் பலர். நால்வேதத்தில் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட தூண்களும் (யூபங்களும்) பல. இதனால் உன்னோடு பொருது வசையுற்ற வேந்தர்கள் தொகை பெரிதோ? அல்லது வேள்விச்சாலையில் நட்ட தூண்களின் தொகை பெரிதோ? இவற்றுள் மிக்க தொகை எது? என வியந்து கேட்கிறார் நெட்டிமையார் என்ற புலவர். (புறம் - 15)

நான்மறை முனிவர் கைகுவித்து வாழ்த்துங்கால் நின் முடி (சென்னி) தாழ்க என முதுடுமிப் பெருவழுதிக்கு அறிவுரை கூறுகிறார் காரிகிழார் என்ற புலவர். (புறம் -6)

சங்கப் புலவர் மாங்குடி மருதனார் பல்யாகசாலை முதுடுமிப் பெருவழுதியைப் பின்பற்றுமாறு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை கேட்டுக் கொண்டார். (புறம் -26)

இராசசூயம் என்ற வேள்வி இயற்றியதால் சோழன் பெருநற்கிளி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். (புறம் -16)

கரிகால் பெருவளத்தான், பெருநற்கிள்ளி போன்ற சோழ மன்னர்களும் பல்யானைச் செல்கெழு குட்டுவன், சேரன் செங்குட்டுவன் முதலிய சேர வேந்தர்களும் முதுகுடுமி போன்றே வேள்விகள் பல இயற்றி அரச கருவூலத்தை வெறுமையாக்கினர்.

கவுணியன் பிண்ணந்தாயன் என்பவன் சோணாட்டுப் பூஞ்சாறூர்ப் பார்ப்பான். கவுண்டின்னிய கோத்திரத்துப் பார்ப்பனர் கவுணியர் எனப்படுகின்றனர். சீர்காழி திருஞான சம்பந்தரும் கவுணியராவர். கவுணியர் வேள்வி பல செய்தனர். திருஞானசம்பந்தரும் தாம் பாடிய பதிகங்களில் வேள்வி செய்தலை வற்புறுத்துகிறார்.

கவுணியன் விண்ணந்தாயன் ஒருக்கால் வேள்வி வாயிலாகப் பெரு விருந்து செய்தான். வேள்வியில் நெய் நீரைப்போல இறைக்கப்பட்டது. இந்த வேள்விக்கு ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் என்ற சங்கப் புலவர் போயிருந்தார். கவுணியன் பிண்ணந்தாயன் அவருக்கு விருந்தும் கொடுத்து பரிசில்களும் அளித்தான். பரிசைப் பெற்றுக் கொண்ட புலவர் இருபத்தொரு வேள்விகளைச் செய்த நீ மூங்கில் வளரும் இமயமலை போல உலகில் நிலைபெறுவாயாக! என வாழ்த்தினார். ( புறம் -166)

சங்க காலத்தில் கவுணியன் விண்ணந்தாயன் போன்ற வேள்விப் பார்ப்பனர்கள் செல்வச் செருக்கோடு வாழ்ந்ததையும் அவர்களிடம் ஆவூர் மூலங்கிளார் போன்ற தமிழ்ப் புலவர்கள் பாடி பரிசில் பெற்று வாழ்ந்த இழிநிலையையும் இந்தப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியக்கிடக்கிறது.

பாண்டியனும் சோழனும் தன்னை இகழந்தாரென்று செங்குட்டு;வன் வெகுண்டபோது மாடல வேதியன் அவனைப் புகழ்ந்து சினந் தணிவித்து வேள்வி இயற்றியது சங்கம் மருவிய காலத்திலும் தமிழ் மன்னர்கள் வேள்வி செய்ததைக் காட்டுகின்றது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக