புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
284 Posts - 42%
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:54 am

First topic message reminder :

நக்கீரன்


தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!


திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்


இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்


என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்


என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:18 am

ஒரு நாள் சங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்கள் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

ஆதி சங்கரர் நம்பூதிரி பிராமணர். பிராமணரைக் கண்டால் மற்றக் கீழ்ச் சாதியார் பத்து முழம் விலகி அவர்களுக்கு வழிவிட வேண்டும். சூத்திரர் நிழல் பட்டாலே தீட்டு என்பது மனு தர்மம்!

அப்போது ஒரு புலையனும் புலைச்சியும் சங்கரர் சென்று கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்தார்கள். புலையனும் புலைச்சியும் விலகி அவருக்கு வழிவிடவில்லை. வழிவிடுவபவர்கள் போலவும் தெரியவில்லை. சங்கரர் அவர்களை விலகிப் போகுமாறு கைகளால் சைகை செய்தார்.

'நம்முடய ஆச்சாரியார் போகிற வழியில் குறுக்கே வந்து விட்டார்கள். போதாக் குறைக்கு கையில் நான்கு நாய்களை புலையன் பிடித்திருக்கிறான்! போ! போ! விலகிப் போ! எட்டிப் போ" என்று சங்கரரின் சீடர்கள் கூவினார்கள்.

புலையன் சிரித்தான்! "அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப் போக சொல்கிறீர்கள்? இது பெரிய முரண்பாடு அல்லவா? எல்லாம் ஒரே சத்தியமான கடவுளின் தோற்றம்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாங்களும் அந்த சத்தியத்தின் தோற்றம்தான.; உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள் இருக்கிற பரமாத்மா ஒன்று தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தை விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆசிரியர் உபதேசிக்கிறார்.

அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தவறு. நாமே நம்மை அடித்துக் கொள்கிறோம் என்பதுதான் சத்தியம். தன்னை விட்டு தான் எப்படி விலக முடியும்?' இப்படி ஆணித்தரமாகக் கேட்டான் அந்தப் புலையன்.

உடனே சங்கரர் இப்பேர்ப்பட்ட ஞான நிலயை அடைந்தவன் புலையனாக இருக்கமுடியாது! காசிவிஸ்வநாதரும் விசாலாட்சி அம்மையாரும் தம்மைப் சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்' என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமான் நின்றார். புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால் வேதமாயின!

'என் மறு உருவம் ஆன சங்கரா! வாய்ப் பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல் வாழ்வியலிலும் நீ நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவைக்க இந்த நாடகம் ஆடினேன்' என்று ஆசி வழங்கி காசி விசுவநாதரும் விசாலாட்சியும் மறைந்தனர் என்று கதை முடிகிறது. (தெய்வத்தின் குரல்)

இந்தக் கதையில் கூட சிவனாரின் மறு அவதாரமான சங்கரர் ஞான நிலை அடைந்தவன் புலையனாக இருக்க முடியாது என்ற முடிவோடு இருந்தார் என்ற உண்மையே சொல்லப்பட்டுள்ளது.

வேதம் இன்றி வர்ண தர்மம் இல்லை. வர்ண தர்மம் இன்றி வேதம் இல்லை. வேதத்திற்கும் வர்ண தர்மத்திற்கும் உட்பட்டதே சங்கரரின் அத்வைதம்.

'ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார்' என்று காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்வது முக்காலும் உண்மை.

அந்த கிருஷ்ண பரமாத்மா வர்ண தர்மம் பற்றி என்ன சொன்னார்?

"சதுர்வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்"

( கீதை அத். 4- சுலோகம் 13)

'நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய (கர்த்தா) என்னால் கூட முடியாது' (Though I am the creator of the four fold caste, know Me to be incapable of action or change).

கீதை சாமானிய நூல் அல்ல. அது நால் வேதங்களையும் பிழிந்து வடிகட்டிய சாறு. தொட்டதற்கு எல்லாம் இந்து மதவாதிகள் கையில் எடுக்கும் போர்வாள்.

இந்து மதத்தையும் அதன் அடிநாதமான சாதி அமைப்பையும் வரலாற்றுப் பின்னணியில் சரிவரப் புரிந்து கொண்டாலே அதற்கெதிரான தமிழ்ச் சித்தர்களது போராட்டத்தின் வலிமை தெரியும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:39 am

சங்கர மடங்கள் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காக்கின்றன!

சென்ற கிழமை 'நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது' என்று கிருஷ்ண பரமாத்மா ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருந்ததைப் பார்த்தோம்.

நான்கு வருணங்களையும் தானே உண்டாக்கியதாக கிருஷ்ண பரமாத்மா கூறுவது அருட் செயல் அல்ல. ஆண்டவன் அவதாரத்துக்கு அழகும் அல்ல.

இந்த உலகத்தில் என்றென்றும் வேற்றுமையை நிலை நிறுத்தவும், ஏற்றத் தாழ்வு என்னும் கொடுமையைத் தொடர்ந்து நடத்த பேருதவி செய்யவுமே கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம் உதவும்.

ஒரு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினர் அடிமைகளாக நெற்றி வெயர்வை சிந்தி உழைக்கவும் அந்த உழைப்பை ஏனைய வருணத்தார் உண்டு களிக்கவும் வழிவகுக்கும் ஒரு ஏற்பாட்டுக்கு தானே கர்த்தா என்று சொல்லும் ஒருவன் கடவுளாகவோ, கடவுள் அவதாரமாகவோ இருக்க முடியாது. அவன் ஒரு ஓரவஞ்சகனாக, நீதி நியாயம் அற்றவனாகவே இருக்க முடியும்.

சூத்திரர்கள், கடைப்பட்டோர், பாவிகள், மூடர் என்று ஒதுக்கி மனித இனத்திலே வேற்றுமை வளர்க்கும் ஒருவன் எப்படி கடவுளாய், கடவுள் அவதாரமாய் இருக்க முடியும்?

இப்படி உழைப்பதற்கு ஒரு பெருங் கூட்டத்தையும் அந்த உழைப்பை உறுஞ்சுவதற்கென்றே ஒரு சிறு கூட்டத்தையும் கடவுள் படைக்கிறார் என்ற வருணதர்ம ஏற்பாடு உலகத்திலேயே மதத்தின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகக் கொடுமையான ஏற்பாடாகும்.

'கடவுளின் சதுர்வர்ணக் கட்டளையை அனுசரிப்பதைக் காட்டிலும், நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை. அவைகளை மீறுவதை விடத் தாழ்ந்தது எதுவுமில்லை' என கீதையில் கிருஷ்ண பரமாத்மா உபதேசிக்கிறார்.

'நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், குணமற்றதெனினும் சுய தர்மமே சிறந்தது. சுய தர்மத்தில் இறந்து விடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கு இடமானது.' ( கீதை 3-35 பாரதியார் உரை)

'சுயதர்மம் பரதர்மம் இவற்றை அறியாதவர்களிடத்தில் அவர்களுடைய கடமைகளைப்பற்றி அறிவுடையோன் எந்தவிதமான குழப்பத்தையும், சந்தேகத்தையும் உண்டாக்கிவிடக் கூடாது. எனவே, நீ சூத்திரர்களைத் தூண்டிவிட்டால் நீ அழிவாய்.'

'ந புத்தி பேதம் ஜனமே-தஜ்ஞானம் கர்மஸங்கினாம்
ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்த: ஸமாசரன்'
( கீதை 3-26)

கீதையில் கர்மம் என்ற சொல் செயல், கடமை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கடமை என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது அது சதுர் வர்ண (நான்கு சாதி) அமைப்பு முறையைக் குறிக்கிறது.

அது போல தர்மம் என்ற சொல்லும் சதுர்வர்ணத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஒழுகும் 'கடமை'யை குறிக்கிறது.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழி;த்தலும் ஆம்' என எழுதி வைத்திருக்கிறார்.

இப்படி எழுதி வைத்திருப்பது 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று சொன்ன வள்ளுவருக்குச் செய்யப்பட்ட இரண்டகமாகும்.

ஏணி வைத்தாலும் கீதை திருக்குறளை எட்ட முடியாது. இரண்டும் இரு துருவங்கள்.

கீதை ஒரு குலத்துக்கு ஒரு தர்மம் கற்பிக்கும் மத நூல்.

குறள் மானிட விழுமியங்களையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் பொது நூல்.

'யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிப்-பவதி பாரத
அப்ப்யுத்தான - மதர் மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம் - யஹம்'
( கீதை 4-7)

'எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போது ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன்.'

அடுத்த சுலோகம் (4-8) எதற்காக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுக்கிறார் என்பதை சொல்கிறது.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை (தர்மத்தை) நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். (பாரதியார் உரை)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:39 am

இதில் தர்மம் என்ற சொல் வர்ண தர்மத்தைக் குறிக்கிறது. அந்த தர்மத்தைக் காப்பாற்றவே கடவுள் அவதாரம் எடுக்கிறாராம். சாதி தர்மத்தைக் காப்பாற்ற எவ்வளவு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பதை மேற்படி சுலோகம் எடுத்துக் காட்டுகிறது.

'சுயதர்மம் என்பது ஒரு வர்ணத்துக்கு அல்லது சாதிக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் அரைகுறையாகச் செய்வது மற்றவர்களுக்குரிய சுயதர்மத்தை முழுமையாகச் செய்வதிலும் பார்க்க நல்லது' என்கிறது கீதை.

'ஒருவன் பிறரது சுயதர்மத்தை செய்து பெருவாழ்வு வாழ்வதைக் காட்டிலும் தனது சாதி தர்மக் கடமைகளைச் செய்து மரணத்தை அடைவது மேலானதாகும்' என்று அதே கீதை நவில்கிறது.

நான்கு வர்ணங்களையும் அவற்றுக்கு உரிய தொழில்களையும் கிருஷ்ண பரமாத்மா தெளிவாகக் கூறியிருக்கிறார்.

'பரந்தபா! பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுக்கப்பற்றனவாம். (கீதை 18-41 பாரதியார் உரை)

அகக் காரணத்தை அடக்குதல், புறக் காரணத்தை அடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் .... இவை இயல்பிலே தோன்றும் பிராமண கர்மங்களாம். (மேற்படி 18-42)

சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை ... இவை இயற்கையிலே தோன்றும் சத்திரிய கர்மங்களாகும். ( மேற்படி 18-43)

உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலேயே பிறக்கும் வைசிய கர்மங்களாம்.

தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையால் ஏற்பட்ட தொழில். (மேற்படி 18-44)

இவ்வாறு உபதேசம் செய்து அருச்சுனன் தனது சுயதர்மமான போரைச் செய்யத் தூண்டுகிறான் கண்ணன். தனது பேச்சைக் கேளாமல், அகங்காரத்தால் அருச்சுனன் மறுப்பானாகில் அவன் பெரிய நாசத்தை அடைவான் எனக் கண்ணன் பயமுறுத்துகிறான்.

குருசேத்திர களத்தில் அருச்சுனன் தனக்கு முன்னால் அவனது சகோதரர்களையும். சுற்றத்தாரையும், மாமன், மைத்துனர்களையும், சித்தப்பன், பெரியப்பன்மார்களையும் அவர்களது பிள்ளைகளையும் பாட்டன்மார்களையும் பார்க்கிறான்.

'அவர்களோடு போரிட்டு அவர்களை அழிப்பதென்றால் எமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். அந்த தவறைச் செய்பவன் நரகத்திற்குத்தான் போவார்கள்' என கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்து தனது கருத்தைச் சொல்கிறான்.

ஆனால் கிருஷ்ண பரமாத்மாவோ 'அவர்களை நீ கொல்வதனால்தான் நரகத்துக்குப் போகமாட்டாய். பண்டைய குலதர்மத்தை (போர்த் தொழிலை) அழித்த பாவத்திற்காக, குலநாசம் என்கிற மாபெரும் குற்றத்திற்காக நரகத்துக்குப் போவாய்' என்கிறான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:39 am

முடிவாக ஒரு கருத்தை கண்ணன் சொல்கிறான். அவனது கடைசி ஆயுதம் அது!

'எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு, எல்லாப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.'
(மேற்படி 18-66)

இதன் பொருள் ஒருவனுக்கு பக்தி இருந்தால் போதும். அவன் அறச் செயல் எதையும் செய்ய வேண்டியதில்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியதில்லை. பக்தி செலுத்தினால் எல்லாப் பாவங்களும் போய்விடும்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்தப் பாவத்தையும் செய்யலாம். கடவுள் மீது பக்தி செலுத்தினால் போதும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவராத்திரி கதையொன்றே இதற்குத் தக்க சான்றாகும்.

கீதைகள், புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள் மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.

ஆதி சங்கரர் போலவே அவரால் தோற்றுவிக்கப்பட்ட சங்கர மடங்களும் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காப்பதில் இற்றைவரை கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன.

வர்ண தர்மம் சேமகரமானது என்றும் இந்து மதம் ஒன்றில் மட்டுமே இந்த வர்ண தருமம் இருக்கிறது என்றும் ஏனைய மதங்களில் இல்லை என்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்! (தெய்வத்தின் குரல்)

'யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்தபிற்பாடுதான் மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடம் இன்றித் தெரிகிறது.

இதில் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. அதாவது ஒரு மதம் சனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால் அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமல் இருக்கும் என நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் சண்டையால் தனக்குள்ளே உளுத்துப்போயவிழுந்து விடும் என்று தோன்றுகிறது.

ஆனால் பலவகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரிந்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று மூச்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறது.

ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? எமது சாஸ்திரங்களை ரஷித்துக் கொண்டிருக்கும் ஸவதர்மம்.....' என்கிறார். (தெய்வத்தின் குரல்)

சித்ர்களும், விவேகானந்தரும், காந்தியும், பாரதியும், வள்ளலாரும் எந்த வர்ண தர்மத்தை இந்து மதத்தின் சாபக்கேடு, கறை, கருப்புப் புள்ளி என்றெல்லாம் சொல்கிறார்களோ அதுவே இந்து மதத்திற்கு ஜீவ களையாக இருக்கிறது என்கிறார்!

நாம் சுண்ணாம்பு என்பதை சங்கராச்சாரியார் வெண்ணெய் என்கிறார்!

நாம் நஞ்சு என்பதை அவர் அமிர்தம் என்கிறார்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:45 am

ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை!

'பகவான் வர்ணாச்சிரம தர்மம் பற்றிக் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே! விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால் 'வருண ஆச்சிரம தர்மம்' என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும் வர்ணாச்சிரமப் பிரிவு சாதிகளில் மேல்தட்டு, கீழ்த்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல. ஒரு சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள்தாம்' என்கிறார் கவிஞர் கண்ணதாசன். கண்ணன் அருளிய பகவத் கீதை என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வர்ண தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்பதை கண்ணன் கீதையில் திரும்பத் திரும்பச் சொல்கிறான்.

பாவிகள் என்னைப் பணிவார் ஆயினும்,
மாதரேனும், வைசியரேனும்
சூத்திரரும் பரகதி பெறுவார்.
அப்படியிருக்க தூய்மை யார்த்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக்கு அன்பராயின், என்னே? ஆதலால்
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய்! (பாரதியார் உரை அத் 9-32)

இனிக் கவிஞர் கண்ணதாசனின் உரையைப் பார்ப்போம்.

'அர்ச்சுனா! தாழ்ந்தவர்கள் என்று கூறப்படுவோரும், மாதர்களும், வணிகர்களும், நாலாம் வருணத்தவரும் (சூத்திரர்) கூட என்னை வணங்கினால் நல்ல கதியை அடைவார்கள். அப்படியிருக்க நற்குடிப்பிறந்த பிராமணர்களும் பக்தி மிக்க ராஜரிஷிகளும் அதே உயர்ந்த கதியை அடைவார்கள் என்பதற்கு வேறு சாட்சியா வேண்டும்? ஆகவே அழியக் கூடிய துன்பம் நிறைந்த இந்த உலகில் நீ இருப்பதால் என்னையே வழிபடுவாயாக. (அத் 9-32)

வேத சாத்திரங்கள் பெண் பாபயோனியில் பிறந்ததாகச் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பரகதி இல்லை. அவர்கள் பரகதி அடைய வேண்டும் என்றால் பூமியில் ஆணாகப் பிறந்து வந்தால்த்தான் உண்டு.

இதன் காரணமாகவே இந்த சுலோகத்தில் பெண்கள், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஒரு பக்கமும் அந்தணர் எதிர்ப் பக்கத்திலும் வைத்துப் பேசப்படுகிறார்கள்.

கண்ணதாசன் நாடோடி திரைப்படத்துக்கு எழுதிய பாடலில் படைத்தவன் பேரில் சாதி வைத்ததை சாடுகிறார். உண்மையில் அவ்வையார் சாதியைச் சாடிப் பாடிய 'சாதியிரண்டொழிய வேறில்லை .............இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்' என்ற பாடல் கருத்தைத் தழுவியே இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

'கொடுப்பவனே மேல் சாதி
கொடுக்காதவனே கீழ் சாதி
படைத்தவன் பேரால் சாதி வைத்தான்
பாழாய்ப் போன இந்தப் பூமியியே'


எனவே கண்ணதாசன் பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரைiயில் கூறியிருப்பது வர்ண தர்மத்துக்கு அவர் உரை என்ற பெயரில் மேற்கொண்ட பூச்சு ஆகும். அப்படிப் பூசி மெழுகாது விட்டால் இந்து மதவாதிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு பக்தி நூலில் கடவுளின் அவதாரமான பரந்தாமனே வர்ண தர்மத்தை தானே உண்டாக்கியதாகவும் ஆனால் தான் நினைத்தால் கூட அதனை மாற்ற முடியாது என்று வெளிப்படையாக உபதேசம் செய்யும் வெட்கக் கேட்டை கண்ணதாசன் ஒத்துக் கொண்டதாக முடிந்துவிடும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கண்ணதாசனின் பகவத் கீதைக்கு அருளுரை வழங்கி இருப்பவர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள்.

பொருத்தமான ஆள்தான் பொருத்தமான நூலுக்கு அருளுரை வழங்கியுள்ளார். பகவத் கீதை பகவானே தனது பக்தனை கொலை செய்யுமாறு உபதேசம் செய்யும் நூல்!

கொலைசெய்தல் சத்திரியனான அர்ச்சுனனது சுயதர்மம் என்று எடுத்துரைக்கும் நூல்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:46 am

'நீ போரில் கொல்லப்பட்டால் சொர்க்கம்! வெற்றி பெற்றால் இராஜயோகம்! ஆகவே போர் செய்யத் துணிந்துவிடு. எழுந்து நில்! (பாரதியார் உரை - அத்.1 - 37) எனப் போர் செய்ய மறுக்கும் அருச்சுனனை போர் செய்ய வைத்த பகவானின் உபதேச நூல்!

பகவத்; கீதைக்கு அருளுரை வழங்கிய அதே சங்கராச்சாரியார்தான் இப்போது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் என்பவரை பட்டப்பகலில் கூலிப்படை வைத்து வெட்டிக் கொலை செய்தது, கொலைக்கு சதி, சாட்சியங்களை அழித்தது மற்றும் சென்னை இராதாகிருஷ்ணன். மற்றும் அவரது மனைவி ஆகியோரை அதே கூலிப்படையை வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் (செப்தெம்பர் 2002) கொலை முயற்சி செய்தது ஆகிய வழக்குகளில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மண், பெண், பொன் என்ற மூவாசையையும் ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களையும் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச் சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

'மக்களனைவரும் தங்களுக்குண்டான கடமைகளைச் செய்து அதன் பலனை பகவானுக்குச் சமர்ப்பித்துவிட்டால் அவர்களுக்கு நல்லருளும், இன்பமான வாழ்க்கையும் அமையும்' எனச் சொல்லி சங்கராச்சாரியார் தனது அருளுரையை முடிக்கிறார்.

இப்போது 'கண்ணன் காட்டிய வழியில் கடமையைச் செய்துவிட்டு' அதன் பலனை பகவானுக்கு சமர்ப்பிக்க முடியாமல் அவரே வேலூர் சிறையில் அதை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்!

போரினால் குல நாசம் ஏற்படும் என்றும், குல நாசத்தால் குல தர்மம் அழியும் என்றும், குல தர்மம் அழிவதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள் என்றும், குல மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது என்றும் அருச்சுனன் கேள்வி எழுப்புகிறான். (அத். 1 -39,40,41)

அருச்சுனன் குறிப்பிடும் வர்ணக் குழப்பம் என்ன? போரின் போது படை வீரர்கள் பகை நாட்டுக்குள் புகுவார்கள். பெண்கள் கற்பழிக்கப் படுவார்கள். பெண்களைக் கற்பழிக்கும் போது சாதி வேற்றுமை பார்த்து கற்பழிக்கப்படுவதில்லை. அதனால் கற்பழிப்பால் கற்பம் அடையும் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளை இன்ன வர்ணம்தான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

இதனைத்தான் அருச்சுனன் வர்ணக் குழப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

எனவே கீதையில் கையாளப்படும் வர்ண தர்மம் என்பது பிறப்பால் ஏற்படும் சாதியேதான் என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. எத்தனை கண்ணதாசர்கள் வந்தாலும் அந்த பச்சை உண்மையை மறைக்க முடியாது.

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவர் அர்த்தத்தோடுதான் கண்ணதாசன் என்ற புனைபெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆயர்பாடி கண்ணனைப் போலவே வாழ்ந்தார்.

கண்ணதாசன் அருமையான கவிஞர். வண்ணத் தமிழும், நல்ல கற்பனையும், வர்ணனையும் கைவரப்பெற்றவர். ஆனால் அவர் ஒரு பக்திவியாபாரி. பக்தியைக் பாடலாகவும் நூல்களாகவும் எழுதி பணம் சம்பாதித்தவர். 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற தலைப்பில் பத்துப் பாகங்கள் எழுதியுள்ளார். பகவத் கீதைக்கும் உரை எழுதியுள்ளார்.

'ஒரு கோப்பையில் என் குடியிருப்பு கோலமயில் என் துணையிருப்பு' என்பது அவர் எழுதிய திரைப்பாடல் மட்டுமல்ல. அவரது சொந்த வாழ்க்கை அனுபவமும் அதுதான். மூன்று மனைவியர்களை மணந்து கொண்டவர். குடி, கூத்தி என்று தலைதெறிக்க ஆடி ஓடி அலைந்து தனது 55 அகவையில் அடங்கியவர்.

அருணகிரிநாதராவது சிவப்பு விளக்கே கதியெனக் கிடந்து பின் திருந்தியவர். கவிஞர் கண்ணதாசன் கடைசிவரை திருந்தவே இல்லை.

கவிஞர் கண்ணதாசனுக்கு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதற்கு என்ன தகுதி உண்டு எனச் சிலர் கேட்கலாம்.

அவருக்கு எல்லாத் தகுதியும் உண்டு. ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

'எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு! எல்லப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன்! துயரப்படாதே!' ( அத் 18 -66)

ஒருவன் கொலைகாரனாக இருக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், கூத்திக்காரனாக இருக்கலாம். அடுத்த வீட்டுக்காரன் மனைவியை கடத்திக் கொண்டு போனவனாக இருக்கலாம், அறம் எதுவும் செய்யாதவனாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கடவுளை சரண் புகுந்தால் போதும்! பக்தி செய்தால் போதும்! அவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:46 am

இதையே கோயில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் நாளும்பொழுதும் நாம் பார்க்கிறோம்!

ஒழுங்கம் கெட்டவர்கள்தான் இந்து மதத்தில் இந்திரன் சந்திரன் எனப் போற்றப்படுகிறார்கள். இந்துமதக் கடவுளர் அதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை வேறுபடுத்தி கூறுபடுத்தி தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன.

பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாவம் செய்தவன் மீண்டும் பாவம் செய்கிறான். இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!

திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் அவனை பக்திமானாகக் காட்டி. நெற்றியில் விபூதிப்பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டிவிடுகிறார்கள்!

சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு இதோபதேசம் செய்து விட்டு இரவில் காமவல்லிகளுடன் சரச சல்லாபம் செய்திருக்கிறார்கள்!

'நான் கண்ணன்! நீ ஆண்டாள்! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்' என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாhமியார் கற்பழித்திருக்கிறார்!

இந்த ஒழுக்கக் கேடு இன்று நேற்றல்ல அடிநாள் தொட்டு வந்து கொண்டிருக்கிறது.

பாரதம் ஐந்தாம் வேதம். கோயில்களில் படிக்கப்படும் புனித நூல். பகவத் கீதை அதில்தான் இருக்கிறது.

பரதன் என்ற அரசன் ஆண்டதால் அந்த நாட்டுக்கு பரதம் என்ற பெயர் வந்தது.

பரதன் பரம்பரையில் வந்த ஒரு அரசனது பெயர் குரு. எனவே அவன் சந்ததி குருகுலம் என அழைக்கப்பட்டது.

இந்தக் குரு குலத்தில் பிறந்த சந்தனு என்ற அரசனது மகனின் பெயர். பீஷ்மன்.

சுந்தனு ஒரு நாள் கங்கை ஆற்றில் குளிக்கப் போனான். போகும் வழியில் மீனவர்களது குடியிருப்பில் இருந்து மீன் நாற்றம் வந்தது. அதே நேரம் அங்கே அழகே வடிவான ஒரு பெண் நிற்பதைப் பார்த்தான். பார்த்தவுடன் மோகம் கொண்டான். பெண்ணின் தந்தையிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்.

மீனவன் படியாதவன் என்றாலும் புத்திசாலி. ‘என் பெண்ணைக் கொடுக்க எனக்குச் சம்மதம். ஆனால் ஒரு நிபந்தனை. எனது மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை அதாவது எனது பேரன் உனக்குப் பின் நாடாளும் அரசன் ஆக முடி சூட்டப் படவேண்டும். இதற்குச் சம்மதம் என்றால் மட்டுமே பெண்ணைத் தருவேன்..’

அரசன் வாட்டத்தோடு அரண்மனை திரும்பினான். அரசனது வாட்டத்துக்கான காரணத்தை அவனது மகன் கேட்டு அறிகிறான். உடனே அவன் மீனவனிடம் போய் ‘எனக்கு அரசு வேண்டாம். அவனது நிபந்தனையின்படி மச்சகந்தியின் (அவளது பெயர்) வயிற்றுப் பிள்ளையே பட்டத்துக்கு வருவான்’ என்றான்.

‘அது சரி. ஆனால் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் அரசுரிமை கேட்டு நாளைக்கு சண்டைக்கு வருவார்களே? அதற்கு என்ன சொல்கிறாய்?’

‘அந்தப் பயம் உனக்கு வேண்டாம்! நான் திருமணம் செய்ய மாட்டேன்.’

தந்தைக்காக தனது அரசுரிமையை ஈகை செய்த பீஷ்மனை தேவர்கள் பாராட்டி வானில் இருந்து பூமாரி பொழிந்து வாழ்த்தினார்கள்.

சுந்தனு மச்சகந்தி இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆதில் ஒருவன் போரில் இறந்தான். மற்றவன் சந்ததி இல்லாமல் இறந்தான். மீனவன் கனவு அவன் பேரர்களோடு முடிந்து விட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:48 am

போரில் இறந்த போன சந்தனு மச்சகந்தி இருவருக்கும் பிறந்த சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய இரண்டு மகன்களுக்கும் பிள்ளைகள் இல்லை. இதனால் குருகுல அரச வம்சம் சந்ததி இல்லாமல் அழியும் அபாயம் தோன்றியது. மீனவப் பெண்ணான மச்சகந்தி சந்ததி தழைக்க ஒரு உயாயம் செய்தாள்.

பீஷ்மரை அழைத்து சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய தம்பிமாரின் மனைவிகளான அம்பிகை அம்பாலிகை (மச்சகந்தியின் மருமக்கள்) இருவருக்கும் பிளை;ளவரம் கொடுக்குப்படி கேட்டுக் கொண்டாள். அதாவது அவர்களைப் புணருமாறு கேட்டாள்.

பீஷ்மன் தான் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என்று உறிதியாகக் கூறிவிட்டான்.

மச்சகந்தி முயற்சியைக் கைவிடவில்லை. சந்தனுவை மணப்பதற்கு முன்னர் பராசரமகரிஷியோடு கூடிப் பிறந்து காட்டில் திரிந்து கொண்டிருந்த தனது மகனை அழைத்து தனது மருமக்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். இவன்தான் இந்து மதம் கொண்டாடும் வியாசன். நால் வேதங்களைத் தொகுத்தவன். ஐந்தாவது வேதம் எனப் போற்றப்படும் பாரதத்தை எழுதியவன். அதில் காணப்படும் பகவத் கீதையை எழுதியவன்.

விபசாரத்தில் பிறந்த வியாசன் பாரதத்தையும் பகவத் கீதையையும் எழுத முடியும் என்றால் கவியர் கண்ணதாசன் ஏன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதக் கூடாது? ஆன காரணத்தால்தான் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதுவதற்கு குடியும் கூத்தியுமாக வாழந்த கண்ணதாசனுக்கு எல்லாத் தகுதியும் உண்டென்று கூறினேன்.

சரி கதையைத் தொடருகிறேன். வியாசன் மச்சகந்தியின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அம்பிகை அம்பாலிகை என்ற இரண்டு பெண்களோடு சேருகிறான்.

இதில் மூத்தவள் அம்பிகை வியாசன் தன்னைப் புணரும்போது பயத்தால் கண்ணை மூடிக் கொண்டாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை குருடாகப் பிறந்தது.

இளையவளான அம்பாலிகையுடன் வியாசன் சேரும் போது அவனது தாடி சடாமுடி இவற்றைக் கண்டு அச்சத்தோடு இருந்தாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை நோயாளியாகப் பிறந்தது.

இன்றைய திரைப்படங்களில் வரும் வில்லன் கதாநாயகியின் கற்பைப் பறிக்கும் போது இயக்குநர் கதாநாயகியின் வேதனையை, வெட்கத்தை, அருவருப்பை, இயலாமையை கை கால், முக மாறுதல்களை அண்மைக் காட்சியில் காட்டுவார்.

இந்தக் கதாநாயகி போலவே அம்பிகை, அம்பாலிகை அந்த இரண்டு பெண்களும் வியாசன் கற்பழித்தபோது அதே வேதனை, வெட்கம், இயலாமை இவற்றால் துடித்திருப்பார்கள். துவண்டு போய் இருப்பார்கள்!

முதல் இரண்டு பிள்ளைகளும் சொட்டையாகப் பிறந்து விட்டன. அரசாள ஒரு ஒழுங்கான பிள்ளை வேண்டும். மச்சகந்தி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.

மச்சகந்தி 'முயற்சி திருவினையாக்கும்' என்பதில் நம்பிக்கை கொண்டவள். அவள் காட்டில் வாழ்ந்த வியாசனை மீண்டும் அழைத்து தனது இளைய மருமகள் அம்பாலிகையோடு புணர்ந்து ஒரு ஒழுங்கான பிள்ளையைப் கொடுக்குமாறு கேட்கிறாள்.

வியாசனோடு இன்னொரு முறை கூட வேண்டும் என்பதைக் கேட்ட அம்பாலிகை அருவருப்புக் காரணமாக அச்சம் கொள்கிறாள். தந்திரமாக தனது வேலைக்காரியை வியாசனோடு புணருமாறு அனுப்பி வைக்கிறாள்!

வேலைக்காரி அரசகுமாரி அல்லவே. அவள் மகிழ்ச்சியோடு வியாசனோடு கூடினாள். அவளுக்குப் பிறந்த குழந்தை எந்தக் குறையும் இல்லாது பிறந்தது.

இப்போது உங்களுக்கு மிகுதிக் கதை விளங்கி இருக்கும்.

வியாசனோடு மூத்த மருமகள் கூடிப்பிறந்த குருட்டுப் பிள்ளைதான் திருதராட்டிரன். வியாசனோடு இரண்டாவது மருமகள் கூடிப் பிறந்த நோயாளிக் குழந்தைதான் பாண்டு.

வியாசனுக்கும் வேலைக்காரிக்கும் பிறந்த பிள்ளைதான் விதுரன்.

குருட்டுப் பிள்ளை அரசாளக் கூடாது என்பதால் திருதராட்டிரன் ஒதுக்கப்படுகிறான்.

விதுரன் குறைவற்றுப் பிறந்தாலும் வேலைக்காரிக்குப் பிறந்ததால் ஆட்சி செய்யும் தகுதியை இழக்கிறான்.

எஞ்சிய பாண்டு நோயாளியாக இருந்தாலும் அரச கட்டில் ஏறுகிறான். வேத சாத்திரங்கள் அதனை அனுமதிக்கிறது.

வேத சாத்திரங்கள் விசித்திரமானவை. அவை நாகரிகம் அடையாத அன்றைய மனிதனது வாழ்க்கை முறையை ஒளித்தெறிக்கின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:48 am

மச்சகந்தி சூத்திர குலம். அவளுக்கும் காட்டில் தவம்செய்து கொண்டிருந்த பராசரமகரிஷிக்கும் பிறந்த வியாசன் சூத்திர குலம். ஆனால் வியாசனுக்கும், சந்தனு-மச்சகந்தி இருவரது மகன்களின் (சித்திராங்கதன், விசித்திரவீரியன்) மனைவியருக்கும் பிறந்த திருதராட்டிரன் சத்திரிய குலம் எனக் கருதப்படுகிறான். குருடன் என்பதால் மட்டும் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது.

அதே போல் விதுரன் அரண்மனை வேலைக்காரிக்குப் பிறந்த பிள்ளை என்பதால் சூத்திர குலம். அதனால் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் திரிதராட்டிரன் போலவே நோயாளியாகப் பிறந்த பாண்டுவுக்கு அரசுரிமை அளிக்கப்படுகிறது.

நோயாளி பாண்டு குந்தியை மணக்கிறான். ஆனால் அவன் குந்தியைக் கூடினால் இறந்து விடுவான் என்பதற்காக அவளும் இன்னொரு மனைவி மாத்திரியும் இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்களோடு கூடி அய்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்கள்தான் பஞ்ச பாண்டவர்கள். பாரதக் கதையின் கதாநாயகர்கள். குந்தி ஆறாவதாக சூரியனைக் காதலித்துப் பெற்ற பிள்ளைதான் கர்ணன்.

பெண்ணுடன் கூடினால் இறக்க நேரிடும் என்று தெரிந்தும் பாண்டு அரண்மனைத தாதி ஒருத்தியுடன் கூடி இறந்து போகிறான்.

பாண்டு இறந்து போனபின் அவனது (?) மக்களில் மூத்தவனான தருமன் பட்டம் ஏற்கிறான்.

தருமன் பட்டம் சூடுவதை திரிதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் எதிர்க்கிறான். ஆட்சி உரிமை தனக்கே என்று வாதிடுகிறான்.

திரிதராட்டிரன் குருடாக இல்லாதிருந்தால் அவன்தான் ஆட்சிக் கட்டில் ஏறியிருப்பான், எனவே அவனுக்குப் பின் முறைப்படி ஆட்சியுரிமை தனக்கே உரித்து என்று துரியோதனன் வாதிட்டான்.

கவுரவர் - பாண்டவர் அரசுரிமைச் சண்டையில் பீஷ்மர் தலையிட்டு துரியோதனர்கள் அஸ்தினாபுரத்திலும் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் தனித்தனி அரசு ஆள அமர்த்தப் படுகிறார்கள்.

பாண்டவர் ஆட்சியை போர் செய்தேனும் கைப்பற்ற துரியோதனன் துடிக்கிறான். அவனது மாமன் சகுனி ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறான்.

வாளின்றி வேலின்றி அரசைப் பிடிக்க வழி இருக்கும் போது வீணாக ஏன் இரத்தம் சிந்துவான்? ஏன் உயிர்கள் போர்க்களத்தில் பலியாக வேண்டும்?

தருமன் சூதில் மோகம் கொண்டவன். சகுனியோ சூதாட்டக் கலையில் வல்லவன்.

தருமன் சூதாடித் தோற்கிறான். அரசை மட்டுமல்ல, தன்னை, தனது மனைவியை, உடன் பிறந்த சகோதரர்களை வைத்து ஆடி இழக்கிறான்.

தோற்றவர்கள் ஆட்சியை துரியோதனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார்கள்.

பதின்மூன்று ஆண்டுகள் காட்டிலே தலைமறைவாகத் திரிந்தபின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்குமாறு பாண்டவர்கள் கேட்கிறார்கள். துரியோதனன் மறுக்கிறான்.

நாடு பிளவுபடுகிறது. கவுரவர் ஒருபுறம். பாண்டவர் மறுபுறம். குருசேத்திர பூமியில் சகோதர யுத்தம் தொடங்குகிறது.

அப்போதுதான் அருச்சுனன் தனது அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா ஆகியோருக்கு எதிராக சண்டை செய்ய மறுக்கிறான்.

அருச்சுனனது எண்ணத்தை மாற்றி அவனை சண்டைக்கு ஆயத்தம் செய்ய கண்ணன் அவனுக்கு குளையடிக்கிறான். அப்படி கொலை செய்யத் தூண்டும் கருத்துரைகள்தான் பகவத் கீதை. அதனை வியாசன் எழுதி;யதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பிற்காலத்தில் யாரோ எழுதி பாரதக் கதையோடு சேர்த்திருக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:49 am

ஒழுக்கக் கேட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மகாபாரதம் விளங்குகிறது. ஆரியர்களுடைய பண்பாட்டுக்கு அது 'அற்புத நூலாக' இருக்கலாம். “புண்ணிய நூலாக” இருக்கலாம் 'எண்ணற்ற முத்துக்களும், ரத்தினங்களும் கிடைக்கும் மகாசமுத்திரத்தைப் போன்றதாக' இருக்கலாம் (இராசாசி எழுதிய மகாபாரதம் - பக்கம் 4). ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் முரணான ஆபாசக் கதை. அதனைத்தான் கோயிலில் தமிழ்ச் சைவர்கள் படிக்கிறார்கள். படித்து முடித்த பின்னர் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்கள்.

தமிழர்களுடைய மூளை பிற பண்பாட்டர்களால் விலங்கிடப்பட்டதற்கு இந்தப் பாரதப் படிப்பு நல்ல எடுத்துக் காட்டு.

பாரதக் கதையை படித்தாலும், அருகிருந்து படிக்கக் கேட்டாலும் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள். மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக ஒழுக்கம் கெடுகிறது.

பாரதத்தை படித்து விட்டு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தன்னை வியாசன் என்று நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை.

இளைய மடாதிபதி விஜேய்ந்திரருக்கு காஞ்சி சங்கர மடத்துக்கு அருகில் இருந்த வீடியோ கடையில் இருந்து நீலப் படங்கள் பூக்கூடைக்குள் மறைத்து அனுப்பப் பட்டதாம். அவர் என்ன செய்வார். கம்பரசத்திலும், கந்தரசத்திலும் வடித்துக் கொடுத்திருந்ததை ஒளி ஒலியில் பார்க்கவும் கேட்கவும் ஆசைப்பட்டிருப்பார்!

கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை குருடாக்கி தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.

பணம் கொடுத்தால், விரதம் இருந்தால், அர்ச்சனை ஆராதனை செய்தால், தேர்த் திருவிழா செய்தால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்துக்கான வாசல் திறக்கப்படும் என்று கூறப்படுவதால் பாவம் செய்தவர்கள் மீண்டும் பாவம் செய்கிறார்கள். ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!

சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, தாடி வளர்த்த பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு உபதேசம் செய்து விட்டு இரவில் தங்கள் மடங்களை காமக் களியாட்டக் கூடங்களாக மாற்றுகிறார்கள்! இந்து மதத்தின் பெயரால் இந்த காமலீலைகள் அரங்கேறுகின்;றன!

'நான் கண்ணன்! நீ ராதை! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்' என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாhமியார் கெடுத்திருக்கிறார்!

இதனால்தான் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் நெற்றியில் விபூதிப் பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டி பக்திமானாகக் காட்டுகிறார்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக