ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இலக்கணச் சுருக்கம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: இலக்கணச் சுருக்கம்

Post by பிரகாஸ் on Wed Sep 16, 2009 6:16 pm

வாவ் நன்றி சிவா தகவலுக்கு
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:17 pm

முடிக்குஞ் சொன்னிற்கு மிடம்.

366. ஆறனுபொழிந்த வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.

உதாரணம்.


1 வுந்தான் சாத்தன்
வெட்டினான் மரத்தை
வெட்டினான் வாளால்
கொடுத்தானந்தணர்க்கு
நிங்கினானூரின்
சென்றான் சாத்தன் கண்
வா சாத்தா வேற்றுமையுருபு
2 சாத்தன் போயினான் வினைமுற்று
3 போயினான் வந்து வினையெச்சம்
------

தேர்வு வினா
366. வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டோ?


தொகாநிலைத் தொடரியல் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:18 pm

3.3. ஒழியியல்

தொடர்மொழிப் பாகுபாடு


367. தொடர் மொழி,முற்றுத் தொடர் மொழியும் எச்சத்தொடர் மொழியும் என இருவகைப்படும்.

368. முற்றுத் தொடர் மொழியாவது, எழுவாயுஞ் செயப்படுபொருண் முதலிவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும் முடிபு பெற்று நிற்குந் தொடர் மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கிய மென்பார்.

உ-ம்
சர்தன் வந்தான்
சாத்தன் சோற்றையுண்டான்

369. எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர் மொழிக்கு உறுப்பாக வருந் தொடர் மொழியாம்.

உதாரணம்.
யானைக் கோடு
யானையாவது கோடு
-----

தேர்வு வினாக்கள்
367. தொடர்மொழி எத்தனை வகைப்படும்?
368. முற்றுத் தொடர் மொழியாவது யாது?
369. எச்சத் தொடர்மொழியாவது யாது?


வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம்

370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம.

371. அவாய் நிலையாவது, ஒரு சொற் றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றலாம்.

உதாரணம்.
ஆவைக்கொணா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக் கொணாவெண்பது சொல்லாவிடினும், கொணாவெண்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல அறிக.

372. தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம்.

உதாரணம்.
நெருப்பானனை என்னுமிடத்து நனைலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. அவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.

நீலானனை என்னுமிடத்து நனைலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை: ஆகவே தகுதி காரணமக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

373. அண்மையாது, காலம் இடையின்றியும் வாக்கயப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம்.

உதாரணம்.
ஆவைக்கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாக சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

மலையுண்டானெருப்புடையது தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டாக் என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது: உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது: உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின, அண்மை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

374. கருத்துணர்ச்சியாவது, ஒரு சொல் எப்பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம்.

உதாரணம்.
மாவைக் கொண்டுவா என்னுமிடத்து மாவெண்பது பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற் சொல்லப்படிற் றின்னுமாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப்படும். அப்போது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
------

தேர்வு வினாக்கள்
370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற் காரணம் என்ன?
371. அவாய்நிலையாவது யாது?
372. தகுதியாவது யாது? 373.
அண்மையாவது யாது?
374. கருத்துணர்ச்சியாவது யாது?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:20 pm

உருபும் வினையும் அடுக்கி முடிதல்

375. வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைந்தாயினும் ஒன் பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பரவுந் தம்மை முடித்தற் குறிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும்.

உதாரணம்.

சாத்தனையுங் கொற்றனையும்
வாழ்த்தினான். சாத்தனுக்குங் கொற்றனுக்குந் தந்தை.
அருளற முடையன். உருபுகள் விரிந்தும் மறைந்தும் ஒன்று பல வடுக்கல்
அரசன் பகைவனை வாளால் வெட்டினான். அரசன் வாள் கைக் கொண்டான். உருபுகள் விரிந்தும் மறைந்தும் கலந்து பல வடுக்கல்
ஆடினான் பாடினான் சாத்தன் இளையண் வினைமுற்று ஒன்று பல வடுக்கல்
கற்ற கேட்ட பெரியோர்
நெடிய கரிய மனிதன் பெயரெச்சம் ஒன்று பல வடுக்கல்
கற்றுக் கேட்டறிந்தார் விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார். வினையெச்சம் ஒன்று பல வடுக்கல்


376. வேற்றுமையுருபு, ஒன்று பல வடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லா வற்றினுந் தொக்கு வருதலு முண்டு.

உதாரணம்.
பொருளின் பங்களைப் பெற்றான்
சேசோழபாண்டியர்க்கு நண்பன்
தந்தை hகயி னீங்கினான்

377. ஒரு தொடரினுள் ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும், பொருலொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை.

உதாரணம்.
சங்கரனை யென்குணனைச் சம்புவைநால் வேதனொரு
கங்கரனை நெஞ்சே கருது.
------

தேர்வு வினாக்கள்
375. வேற்றுமையுருபுகள் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும், வினைமுற்றம் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவும் எப்படி முடியும்?
376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றப் பெயர்களௌ;லாவற்றிலுந் தொக்க வருதலும் உண்டோ?
377. ஒரு தொடரினுள்ளே ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப் பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?

திணைபாலிட முடிபு


378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது, திணைபால் இடங்களின் மாறு படாது இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து நில்லாதாயின் வழுவாம்.

உதாரணம்.

நம்பி வந்தான்
நங்கை வந்தான்
அந்தனர் வந்தார்
நான்வந்தேன்
நீ வந்தாய் வழாநிழை
நம்பி வந்தது
நங்கை வந்தான்
அவன்வந்தான் தியைவழு
பால்வழு
இடவழு

379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை எழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும். இரணடு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், பலர்பாலின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.

உதாரணம்.
நம்பியு நங்கையும் வந்தார்
யானையுங் குதிரையும் வந்தன

380. முன்னிலையெழுவாயோடு படர்க்கை எழுவாய் அடுக்கிவரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.

உதாரணம்.
நீயு மவனும் போயினீர்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:21 pm

381. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயேனும் படர்க்கை யெழுவாயுமேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.

உதாரணம்.
யானு நீயும் போயினோம்
யானு மவனும் போயினோம்
யானு நீயு மவனும் போயினோம்.

382. திணையைந் தோன்றிய விடத்து உருபு வடிவு என்னும் பொதுச் சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பண்மைச் சொல்லாலும், அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறிணைச் சொல்லாலுங் கூறல் வேண்டும்.

உதாரணம்.

1 குற்றியோ மனுடனோ
அங்கு தோன்றுகிற உரு?
.... திணையையம்
2 ஆண்மகனோ
பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? ... உயர்திணைப்பாலையம்
3 ஒன்றோ பலவோ அங்கு வந்த குதிரை? ... அஃறிணைப்பாலையம்

383. இரு திணையில் உருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒரு பால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுரங்கள் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடையதாம்.

உதாரணம்.

1 (குற்றியெனின்)
(மனுடனெனின்) மனுடனன்று
குற்றியல்லன் எ-ம்.
எ-ம்.
2 (ஆண்மகனெனின்)
(பெண்மகனெனின்) பெண்மகளல்லன்
ஆண்மகனல்லன் எ-ம்.
எ-ம்.
3 (ஒற்றெனின்)
(பலவெனின்) பலவன்று
ஒன்றல்ல எ-ம்.
எ-ம். கூறுக.
-----

தேர்வு வினாக்கள்
378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்?
379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கிவரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
380. முன்னிலையெழுவாயோடு படர்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
381. தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
382. திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்த சொல்லாற் கூறல் வேண்டும்?
383. இருதிணையில் ஒரு திணை துணிந்த விடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும்?


திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி

384. திணை பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்பு விணையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை யுணர்த்தும்.

உதாரணம்.
சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்: சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி உரு திணையை யுணர்த்தின.

ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.

யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம் போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.

வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின.

385. பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும்.

உதாரணம்.
ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப்பட்டது.

பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு துணியப்பட்டது.
----

தேர்வு வினாக்கள்
384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை?
385. பெயர் வினை இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:23 pm

உயர்திணை தொடர்ந்த அஃறிணை

386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.

உ-ம் நம்பி பொன்பெரியன்
நம்பி நாடு பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நம்பி மூக்குக் கூரியன்
நம்பி குடிமை நல்லன்
நம்பி நடை கடியன் இங்கேஉயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக

மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.
-----

தேர்வு வினா
386. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?


கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு

387. இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண், என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு முடிபைப் பெறும்.

உதாரணம்.
’’திங்களுஞ் சான்றோரு மொப்பர்’’ என் இருதிணைப் பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.

’’பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்’’ என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே மிகுதி.

’’மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா’’ என இருதிணைப்பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.

தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.
------

தேர்வு வினா
387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:24 pm

திணை பால் வழுவமைதி

388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ் சொல்லப்படும்.

உதாரணம்.

ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

பசுங்கிளியார் தூது சென்றார் என்ற விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

’’தம்பொருளெம்ப தம்மக்கள்’’ என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

நாங்களுடமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.

தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

‘எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக சொல்லப்பட்டது.

பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.
-----

தேர்வு வினா
388. ஒரு திணைப்பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?


ஒருமை பன்மை மயக்கம்

389. ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச் சொல்லுதலும் உண்டு.

உதாரணம்.
வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து சொல்லப்பட்டது.

இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.
-----

தேர்வு வினா
389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?


இடவழுவமைதி


390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டு.

உதாரணம்.

சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமடத்து, யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப் படர்க்கைச் சொற் சேர்த்து சொல்லப்பட்டது. சாத்தன்றாயாகிய யான் என்பது பொருள்.

’’எம்பியை யீங்கப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்.’’ என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு முன்னிலையிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சோர்த்துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.

யானோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ யானோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யானோ யாரிது செய்தார்;

என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க.
------

தேர்வு வினா
390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டோ?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:25 pm

காலவழுவமைதி

391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறாமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத் தகும்.

உதாரணம்.
மலை நிற்கின்றது
தெய்வமிருக்கின்றது
கடவு ளளிக்கின்றார்

மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.

392. விரைவு, மிகுதி, தெளிவு, என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம் வேறொருகாலமாகச் சொல்லவும் படும்.

உதாரணம்.
உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டு போக அழைப்பவனுக்கு, உண்டேன்

உண்டேன்; வந்தேன் வந்தேன் என்ற விடத்து, விரைவு பற்றி எதிர்காலமும் நஜகழ்காலமும், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன.

களவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்புண்ணல் தவறிறுந் தவறுமாதலால் மிகுதிணெனப்பட்டது.

எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்ற விடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழைபெய்தல் தெளிவாதலால், nதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

யாம் பண்டு விளையாடுவ திச்சோலை; யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லாமலே, இறந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம், சொல்லப்பட்டன.
-----

தேர்வு வினாக்கள்
391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொரள்களின் வினையை எக்காலத்தாற் சொல்லத் தகும்?
392. ஒரு காலம் வேறொரு காலமாகச் சொல்லப்படுமோ?


வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்

393. செயப்படுபொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டு.

உதாரணம்.
இம்மாடியான் கொண்டது - செயப்படுபொருள்
இவ்வெழுத்தாணியானெழுதியது - கருவி
இவ்வீடியானிருநடதது - இடம்
இத்தொழில் யான் செய்தது - செயல்
இந்நாள் யான் பிறந்தது - காலம்
-----

தேர்வு வினா
393. செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும் செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:26 pm

அடைமொழி

394. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.

அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி எனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும் விசேடியமெனினும் பொருந்தும்.

(உதாரணம்)

இனமுள்ளன
நெய்க்குடம்
குளநெல்
கார்த்திகை விளக்கு
பூமரம்
செந்தாமரை
ஆடுபாம்பு இனமில்லா
உப்பளம்
ஊர்மன்று
நாளரும்பு
இலைமரம்
செம்போத்து
தோய்தயிர் பொருள்
இடம்
காலம்
சினை
குணம்
தொழில்
-----

தேர்வு வினா
394. பொருளாதியாறும், இனமுள்ள பொரள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடைமொழிகளாய் வருமோ?


சிறப்புப் பெயர் இயற்பெயர்

395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப்பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற் பெயரினாலும், ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.

உதாரணம்.
சோழியன் கொற்றன்
பாண்டியன் குழசேகரன்
தமிழ்ப்புலவன் கம்பன்

இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.

தேர்வு வினாக்கள் - 395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெணரினாலும் ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், எதை முன்வைத்து எதைப் பின் வைத்தல் சிறப்பாம்? இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?

வினாவிடை

396. வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை அறிவிப்பதாம்.

வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.

397. வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.

உதாரணம்.
உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை
உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை
கறக்கின்ற வெருமை
லோ சினையோ? வினாவழு
தில்லைக்கு வழியாது?
எனின் சிவப்புக்காளை
முப்பது பணம் என்பது விடைவழு

398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.

உதாரணம்.

1 ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? அறியாமை வினா
2 குற்றியோ மகனோ? ஐயவினா
3 மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? அறிவினா
4 பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா
5 தம்பிக்காடையில்லையா? கொடைவினா
6 தம்பீ யுண்டாயா? ஏவல்வினா

399. விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும் பயப்பன.

(உதாரணம்)

வினா விடை

1 தில்லைக்கு வழி யாது? இது சுட்டு
2 இது செய்யவா? செய்யேன் எதிர்மறை
3 இது செய்யவா? செய்வேன் உடன்பாடு
4 இது செய்யவா? நீ செய் ஏவல்
5 இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர் வினாதல்
6 இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல்
7 இது செய்யவா? உடம்பு நோம் உறுவது கூறல்
8 இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி
----

தேர்வு வினாக்கள்
396. வினாவாவது யாது? விடையாவது யாது?
397. வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்?
398. வினா எத்தனை வகைப்படும்?
399. விடை எத்தனை வகைப்படும்?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by பிரகாஸ் on Wed Sep 16, 2009 6:27 pm

தமிழ் தமிழுக்கு நிகர்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:30 pm

சுட்டு

400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின் வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும் வரும்.

உதாரணம்.
(1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக
எருது வந்த் அதற்குப் புல்லிடுக
(2) நம்பியவன்; அவனம்பி
----

தேர்வு வினா
400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?


மரபு

401. மரபாவது, உலக வலக்கிலுஞ் செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற் கூறுதலாம்.

உதாரணம்.
ஆணைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி
ஆடுமேய்ப்பான் இடையன் பசுக்கன்று
ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை
ஆட்டுப்புழுக்கை கோழிக்குஞ்சு
யானைக்குட்டி தென்னம்பிள்ளை
யானைக்கன்று மாங்கன்று
-----

தேர்வு வினா
401. மரபாவது யாது?


முற்றும்மை

402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று வரும்.

உதாரணம்.

(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்
(2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை
-----

தேர்வு வினா
402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?


ஒரு பொருட் பன்மொழி

403. சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டு.

உதாரணம்.
நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு
புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெரு வரை
-----

தேர்வு வினா

403. ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:31 pm

அடுக்குச் சொல்

404.ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.

உதாரணம்.

1 உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு
2 எய்யெய்; எறி எறி எறி கோபம்
3 வருக வருக் பொலிக பொலிக பொலிக உவகை
4 பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம்
5 உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் துன்பம்

அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.

உதாரணம்.

1 அன்றேயன்றே அசைநிலை
2 ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே
நல்குமே நல்குமே நல்குமே நாமகள்
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இசைநிலை

சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.
-----

தேர்வு வினாக்கள்
404. அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்?
இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ?
சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?


சொல்லெச்சம்

405. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.

உதாரணம்.
பிறவிப் பொருங்கட னீந்நுவர் நீத்தா
ரிறைவ னடிசேரா தார்

இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம்.
----

தேர்வு வினா
405. சொல்லெச்சமாவது யாது?


இசையெச்சம்

406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.

உதாரணம்.
’’அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ’’

இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.
-----

தேர்வு வினா
406. இசையெச்சமாவது யாது?


ஒழியியல் முற்றிற்று
தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:32 pm

பகுபத முடிபு

பெயர்ப்பகுபதங்கள்

அவன் என்னுஞ் சுட்டுப்பொருட் பெயர்ப்பகுபதம். ஆ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடையில் வகர மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

தமன் என்னுங் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என்னம் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி குறுகி, இறுகி மகர மெய்யின் ஆமல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

பொன்னன் என்னும் பொருட்பெயர்ப் பகுபதம் பொன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று பகுதியீற்று னகரமெய் இரட்டித்து இரட்டித்த னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், நிலம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்று பகுதியீற்று மகரமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்டு, உகரங்கெட நின்ற மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேஙி முடிந்தது.

பிரபவன் என்னங் காலப்பெயர்ப்பகுபதம், பிரபவம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால், விகுதியும் பெற்று, பகுதியீந்நு அம் குறைந்து வகர மெய்யீராக நின்று, அவ்வகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

திணிதொளன் என்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம்,திணிதோன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று ளகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நல்லன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்ட நல்ல என நின்று, லகர மெய் இரட்டித்து, இரட்டித்த லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

கரியன் என்னுங் குணப்பெயர் பகுபதம், கருமை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை உகரம் இகரமாகத் திரிந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம் மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய்யன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை நின்ற மகர மெய் யகரமெய்யாய் திரிந்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

ஓதுவான் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், ஓது என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே வகரவிடைநிலையும் பெற்று, இடைநிலை மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது. ஓதுலுடையவன் என்பது பொருள்.

ஓதுவான் என்பது எதிர்காலத் தெரிநிலைமுற்றுப் பகுபதமாயின்: ஓது பகுதி: ஆன் விகுதி: வகரமெய் எதிர்காலவிடைநிலை. எதிர்காலவினையெச்சப்பகுபதமாயின், ஓது பகுதி: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

நன்மை என்னும் பண்புப் பெயர் பகுபதம், நல் என்னும் பண்புப் பெயர் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.

வருதல் என்னுந் தொழிற்பெயர் பகுபதம், வா என்னும் பகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, பகுதி முதல் குறுகி ரகரவுகரம் விரிந்து முடிந்தது.

உடுக்கை என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், கை என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, விகுதிக் ககரமிகுந்து, முடிந்தது.

உடுக்கை என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உடு என்னும் பகுதியும், ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதியும், அவைகளுக்கிடையே குச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து. சாரியையீற்றுகரங்கெட்டு, உகரங்கெட நின்ற ககரவொற்றின் மேல் விகுதி ஐகாரவுயிரேறி, முடிந்தது.

எழுத்து என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், எழுது என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படுபொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டுக், கெட்டவிடத்துத் தகரமிரட்டித்து முடிந்தது.

ஊண் என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உண் என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, பகுதி முதல் நீண்டு, முடிந்தது.

காய் என்னும் வினைமுதற்பொருட் பெயர்ப்பகுபதம், காய் என்னும் பகுதியோடு இ என்னும் வினை முதற்பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by பிரகாஸ் on Wed Sep 16, 2009 6:34 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:40 pm

வினைமுற்றுப் பகுபதங்கள்

உண்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் டகரவிடை நிலையும் பெற்று, இடைநிலை டகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.

உண்கின்றான் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும் பெற்று, இடைநிலையீற்று உகலங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.

உண்ணுவான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும்வகரவிடைநிலையும், பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே உகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று ணகரமெய் இரட்டித்து, இரட்டித்த ணகரமெய்யின் மேற் சாரியைஉகரமேறி, இடைநிலை வகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது.

நடந்தனன் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று

• உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபதமாயின், உண் பகுதி: உ சாரியை: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர மெய்யின்மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியை யீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

வருகின்றனன் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றப் பகுபதம், வா என்னும் பகுதியும் அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் சாரியையும் பெற்று, பகுதி முதல் குறுகி, ரகரவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரவொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னம் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் பகர விடைநிலையும் பெற்று, இடைநிலைப் பகரம் மிகுந்து, இடைநிலைப் பகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

நடந்தது என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், து என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங்காட்டுந் தகர விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அகரச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர வல்லொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறி முடிந்தது.

நடப்பித்தான் என்னும் பிறவினைப் பகுபதம், நட என்னும் பகுதியும், பி என்னும் பிறவினைப் விகுதியும் பெற்று விகுதி பகரமிகுந்து, அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இறந்த காலங் காட்டுந் தகர விடைநிலையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, இடைநிலைத் தகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும், அகரச்சாரியையும். பெற்று, சாரியைச் சகரம் மிகுந்து, பகரமிகுந்து, சாரியையீற்று உகலங்கெட்டு உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேலே சாரியை அகரவுயிரேறி, விகுதி பகர மிகுந்து, அடிக்கப்படு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, படு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரருயிரேறி முடிந்தது.

நடவான் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிhமறை ஆகார விடைநிலையும் பெற்று, அவ்விடைநிலை கெட்டு, வகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

நடக்கின்றிலன் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் விகுதியும், கின்று என்னும் நிகழ்கால விடை நிலையும், இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, கின்றிடை நிலையின் ககரம் மிகுந்து, ஈற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற றகர மெய்யின் மேல் எதிர்மறையிடை நிலை இகரமேறி, அவ்விடை நிலையீற்று லகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

எழுந்திட்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், ஏழு என்னும் பகுதியும், இடு என்னும் பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுகடகு இடையே துச்சாரியையும் பெற்று, சாரியைத் தகர மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டுச் சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங் கெட நின்ற தகர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி, எழுந்திடு என அனைத்தும், ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, இடு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய் இரட்டி உகரவுயிர் கெட்டு, உகரங்கெட நின்ற டகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

கழிந்தின்று என்னும் எதிர்மறை இறந்தகாலத் தெரிநலைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும் று என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங் காட்டுந் தகரவிடைநிலையும், அவ்விடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, காலவிடை நிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரவுயிரேறி, இடைநிலையீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது. கழிந்திலது என்பது பொருள்.

கோடும் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமற்றுப் பகுபதம், கொள் என்னும் பகுதியும், தும் எந்நுந் தன்மைப்பன்மை எதிர்கால விகுதியும் பெற்று, பகுதி முதல் நீண்டு, பகுதஜயீற்று ளகரங் கெட்டு, விகுதித் தகரம் டகரமாகத் திரிந்து முடிந்தது.

அற்று என்னுங் குறிப்பு விணைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன் பால் விகுதியும் பெற்று, விகுதி றகரவல்லொற்று மிகுந்து முடிந்தது.

அன்னையர் எனனுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும் அர் என்னும் பலர்பால் விகுதியும், இவைகளுக்கு இடையே னகரச்சாரியையும் ஐகாரச்சாரியையும் பெற்று, சாரியை னகரமெய்யின்மேற் சாரியை ஐகாரவுயிரேறி, யகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரெறி முடிந்தது.

இன்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், இல் என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.

உயர்த்துகிற்பன் என்னும் எதரிகாலத் தெரிநிலைமுற்றுப் பகுபதம், உணர்ந்து என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையு எதிர்காலங் காட்டும் பகரவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைநிலைக்கும் இடையே கில் என்னும் ஆற்றல் இடைநிலையும் பெற்று, ஆற்றலிடைநிலையீற்று லகர மெய், றகரமெய்யாகத் திரிந்து, இடைநிலைப் பகரத்தின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய் என்னும் முன்னிலை யேலொருமை வினைமுற்றுப் பகுபதம், செய் என்னும் பகுதியோடு ஆய் என்னும்

அற்று என்பது இறந்தகால வினையெச்சப் பகுபதமாயின், அறு பகுதி; உகரமூர்த்த றகரமெய் இரட்டித்து முடிந்தது எனக்கொள்க.

முன்னிலையேவல் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:42 pm

பெயரெச்சப் பகுபதங்கள்

அடித்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னம் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் தகரவிடைநிலையும் பெற்று, இடைநிலைத்தகரம் மிகுந்து, இடைநிலைத் தகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

அடிக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னம் நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடைநிலைக் ககரம் மிகுந்து, இடைநிலைறீற்றுகரங் கெட்டு, உகரங்கெட, நின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறிமுடிந்தது.

வினையெச்சப் பகுபதங்கள்

நின்று என்னும் இறந்தகால வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே இறந்தகாலங்காட்டும் றகரவிடைநிலையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் இடைநிலை றகர மெய்க்கு இனமாகிய னகரமெய்யாகத் திரிந்து, இடை நிலை றகரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி முடிந்தது.

நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகர மெய்யாகத் திரிந்து, சாரியையீற்று உகரங்கெட்டு, உகரங் கெட நின்ற அகரமெய்யின் மேல் இகரவுயிரேறி முடிந்தது.

தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று என்னும் பகுதியும், கால் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இன் சாரியையும் அகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று உகரங் கெட்டு, உகலங் கெட நின்ற றகர மெய்யின்மேற் சாரியை இகரவுயிரெறி, சாரியையீற்று னகரமெய் குறைந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேற் சாரியை அகரவுயிரேறி, விகுதிக் ககரமிகுந்து முடிந்தது.

• நிற்க என்பது வியங்கோள் வினைமுற்றுப் பகுபதமாயின், நில் பகுதி, கூ வியங்கோள் விகுதி.

பின்வரும் பொதுப் பகுபதங்களை முடிக்க:-


சாவான்: 1) 2) 3) உடன்பாட்டு தெரிநிலை வினைமுற்று
எதிர்மறை தெரிநிலை வினைமுற்று
எதிர்கால வினையெச்சம்
செய்யாய்: 1) 2) முன்னிலையேவற் பன்மைவினைமுற்று
முன்னிலையொருமை யெதிர்மறை வினைமுற்று
செய்யீர் 1) 2) முன்னிலையேவற் பன்மை வினைமுற்று
முன்னிலைப் பன்மையெதிர்மறை வினைமுற்று
தழைப்ப: 1) 2) 3) பலர்பாற் படர்க்கை வினைமுற்று
பலவின்பாற் படர்க்கை வினைமுற்று
செயவெனெச்சம்
அன்ன: 1) 2) குறிப்பு வினைமுற்று
குறிப்புவினைப்பெயரெச்சம்
செவ்விய: 1) 2) குறிப்பு வினைமுற்று
குறிப்புவினைப்பெயரெச்சம்
வேட்கும்: 1) 2) எதிர்கால வினைமுற்று
எதிர்காலப் பெயரெச்சம்
வந்து: 1) 2) தன்மையொருமை வினைமுற்று
இறந்தகால வினையெச்சம்
உண்டு: 1) 2) 3) தன்மையொருமை வினைமுற்று
இறந்தகால வினையெச்சம்
அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று
தேடிய: 1) 2) 3) 4) இறந்தகால வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
இறந்தகால பெயரெச்சம்
எதிர்கால வினையெச்சம்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:43 pm

சொல்லினங் கூறுதல்

அவன் வந்தான்

அவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்; திரிபின்மையாகிய எழுவாய்யுரு பேற்றது; அது வந்தான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

வந்தான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யயிறந்தகால எடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

கொலை செய்தவன் நரகத்தில் வீழ்ந்து வருந்துவான்

கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கப்படு பொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினை கொண்டது.

செய்தவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை விணையாலணையும் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வருந்துவான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

நரகம், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; பிறிதின்கிழமைப் பொருட்கு இடமிடமாக நிற்கும் இடப்பொருளில் வந்த அல் என்னும் ஏழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.

அத்து, எ-து. சாரியையுருபிடைச் சொல். வீழ்ந்து, எ-து. செய்தென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவிணை வினையெச்சம்; வருந்துவான் என்னும் வினை கொண்டது.

வருந்துவான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யெதிர்கால உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று; செய்தவன் என்னும் எழுவாய்குப் பயனிலையாய் நின்றது.

கொற்றனானவன் தன்னை யெதிர்த்த பகைவரை வாளான்மாய வெட்டினான்.

கொற்றன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர், ஆனவன் என்னும் எழுவாய்ச் சொல்லுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

தான், எ-து. ஒருமைப் படர்க்கைப் பொதுப் பெயர்; அடையப்படுபொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது எதிர்த்த என்னும் வினை கொண்டது.

எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினைமுதற் பெயர் கொண்டது.

பகைவர், எ-து. உயர்திணைப் பலர் பாற் படர்க்கைப் பெயர்; அழிக்கப்படுபொருள் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

வாள், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; கருவிப் பொருளில வந்த ஆல் என்னும் மூன்றனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

மாய, எ-து. செயவென்வாய்ப்பாட்டு முக்காலத்திற்கு முரிய தெரிநிலைவினை வினையெச்சம்; இங்கே காரியப் பொருளில் வந்தமையால் எதிர்காலத்து; வெட்டினான் என்னும் வினை கொண்டது.

வெட்டினான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; கொற்றன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

சொற்றொடரிலக்கணங் கூறுதல்

அவன் வந்தான் - அல் வழிச்சந்தியில் எழுவாய்த் தொடர்.

கொலை செய்தவன் - வேற்றுமைச் சந்தியில் இரண்டாம் வேற்றுமைத் தொகை

செய்தவன் நரகத்தில் - அல்வழிச் சந்தியில் தழாத் தொடராகிய எழுவாய்த்தொடர்.

நரகத்தில் வீழ்ந்து - வேற்றுமைச் சந்தியில் ஏழாம் வேற்றுமை விரி.

வீழ்ந்து வருந்துவான் - அல் வழிச் சந்தியில் வினையெச்சத் தொடர்.

தாழாத்தொடராவது சிலைமொழியானது வருமொழியைப் பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு தொடர்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:51 pm

பகுதி

42. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.
---

43. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன்.
---

44. வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) ஆற்று, இற்று, எற்று
---

45. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க.
உதாரணம்.
அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது.
கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது.
பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.
பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.
குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.
பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது.
வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது.
சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.
---

46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
நட, நடந்தான் வினையடி
வா, வந்தான்
நில், நின்றான்
காண், கண்டான்
சித்திரம், சித்திரித்தான் பெயரடி
கடைக்கண், கடைக்கணித்தான்
போல், பொன்போன்றான் இடையடி
நிகர், புலிநிகர்த்தான்
சால், சான்றான் உரியடி
மாண், மாண்டான்
---

47. தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும்.
உதாரணம்.
1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான்
2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது.
தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது.
தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது.
செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது.
விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது.
கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது.
கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது.
சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.
----

48. தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான்
2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான்
3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்
----

49. பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றை யேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம்.
---

50. நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.2

தேர்வு வினாக்கள்
42. பகுதிகளாவன யாவை?
43. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
44. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
45. விகுதி புணரும் பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ?
46. தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
47. தெரிநிலை வினைப்பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும் பொழுது எப்படி வரும்?
48. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்?
49. பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்;றுப் பகுபதம் குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்ன?
50. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:52 pm

விகுதி
51. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும்.
---

52. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.
----

53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
உதாரணம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.
மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.
துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.
----

54. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.
உதாரணம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;.
---

55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.
---

56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ,
டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.
உதாரணம்.
கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.
---

57. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
செய்த, செய்கின்ற் செய்யும்.
குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வiனைப் பெயரெச்சத்துக்கு வாராது.
உதாரணம். கரிய
---

58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.
உதாரணம்.
நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.
குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.
----

59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.
உதாரணம்.
செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.
---

60. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.
உதாரணம்.
1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.
2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.
3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.
----

61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.
உதாரணம்.
வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.
கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
அடித்துக்கொண்டான்.
படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
கட்டப்பட்டான், கட்டுண்டான்.
மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
பொன்மை, ஆண்மை
இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.
உதாரணம். எழுசந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.

தேர்வு வினாக்கள்
51. விகுதிகளாவன யாவை?
52. பெயர் விகுதிகள் எவை?
53. தொழிற்பெயர் விகுதிகள் எவை?
54. பண்புப்பெயர் விகுதிகள் எவை?
55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை?
56. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை?
57. தெரிநிலை விiனாப் பெயரெச்ச விகுதிகள் எவை?
58. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் எவை?
குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை?
59. பிறவினை விகுதிகள் எவை?
60. வினை முதற்பொருள் செயற்படு பொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை?
61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை?
தற்பொருட்டுப் பொருளுணர்த்தும் விகுதி எது?
செயற்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் விகுதிகள் எவை?
தன்மைப்பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:53 pm

புணர்ந்து கெடும் விகுதி

62. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் ஐ விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும்.

உதாரணம். நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.
கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.
அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.
காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது.
ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.

தேர்வு வினா
62. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?


---

இடைநிலை
63.இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.
---

64. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங்களுக்கு வரும்.
உதாரணம்.
அறிஞன் .. ஜஞஇடைநிலைஸ
ஒதுவான் .. ஜவ இடைநிலைஸ
வலைச்சி .. ஜச இடைநிலைஸ
வண்ணாத்தி .. ஜத இடைநிலைஸ
---

65. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.
அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடைநிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப்படும்.
---

66. இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம்.
உதாரணம்.
செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.
சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.
---

67. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம்.
உதாரணம்.
நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.
---

68. எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
நடப்பான், செய்வான்.

தோர்வு வினாக்கள்
62. இடைநிலைகளாவன யாவை?
63. அவை எடதனை வகைப்படும்?
64. காலங்காட்ட விடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்?
65. காலங்காட்டுமிடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்?
ஆவை எத்தனை வகைப்படும்?
66. இறந்தகால விடைநிலைகள் எவை?
67. நிகழ்கால விடைநிலைகள் எவை?
68. எதிர்கால விடைநிலைகள் எவை?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:57 pm

எதிர்மறையிடைநிலை
69. இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும்.
உதாரணம்.
நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன்.
நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு.

தேர்வு வினாக்கள்
69. எதிர்மறையிடைநிலைகள் எவை?
ஏதிர்மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடதும், எங்கே கெட்டும் வரும்?

----

காலங்காட்டும் விகுதி

70. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-
து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.
உதாரணம்.
வந்து, (-வந்தேன்), வந்தும், (-வந்தேம்) வருது, (-வருவேன்) வருதும், (-வருவேம்) எ-ம்.
சென்று, (-சென்றேன்) சென்றும், (-சென்றேம்) சேறு, (-செல்வேன்) சேறும், (-செல்வேம்) எ-ம். வரும்.
கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.
உதாரணம்.
உண்கு, (-உண்பேன்) உண்கும், (-உண்பேம்) என வரும்
டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.
உதாரணம்.
உண்டு, (-உண்டேன்) உண்டும், (-உண்டேம்) என வரும்.
இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.
உதாரணம்.
(1). சேறி, (-செல்வாய்) (2) நடப்ப, (-நடப்பார்) நடமார், (-நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.
உம்
என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காhலமும் எதிர்காலமுங் காட்டும்.
உதாரணம்.
உண்ணும்
எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.

தேர்வுவினாக்கள
70. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ?
து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்?
டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காhலங் காட்டும்?

------

காலங்காட்டும் பகுதி
71. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.
உதாரணம்.
புக்கான், விட்டான், பெற்றான்.

தேர்வு வினா
71. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?

----

சாரியை
72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.

தேர்வு வினா
72. சாரியைகளென்பன எவை?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Wed Sep 16, 2009 6:59 pm

சந்தி
73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.

தேர்வு வினா
73. சந்திகளாவன எவை?

----

விகாரம்
74. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆம்.

தேர்வு வினா
74. வகாரங்களாவன எவை?

பதவியல் முற்றிற்று


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by பிரகாஸ் on Wed Sep 16, 2009 7:07 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Fri Sep 18, 2009 6:41 am

1. 3. புணரியல்

75. புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்டுபடப்புணர்வதாம்.
---

76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.
---

77. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.
உதாரணம்.
வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி
மரம்வெட்டினான் .. ஜஐஸ மரத்தை வெட்டினான்
கல்லெறிந்தான் .. ஜஆல்ஸ கல்லாலெறிந்தான்
கொற்றன்மகன் .. ஜகுஸ கொற்றனுக்கு மகன்
மலைவீழருவி .. ஜஇன்ஸ மலையின் வீழருவி
சாத்தான்கை .. ஜஅதுஸ சாத்தனதுகை
மலைநெல் .. ஜகண்ஸ மலையின்கணெல்
---

78. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை ..உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்
---

79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.
---

80. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.
உதாரணம்.
பொன்மணி சாத்தன்கை
---

81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.
உதாரணம்.
வாழை + பழம் - வாழைப்பழம் தோன்றல்
மண் + குடம் - மட்குடம் திரிதல்
மரம் + வேர் - மரவேர் கெடுதல்
நிலம் + பனை - நிலப்பனை கெடுதல், தோன்றல்
பனை + காய் - பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்
---

82. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.

தேர்வு வினாக்கள்

75. புணர்ச்சியாவது யாது?
76. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
77. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது?
78 ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது?
அது எத்தனை வகைப்படும்?
79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்?
80. இயல்பு புணர்ச்சியாவது யாது?
81. விகாரப் புணர்ச்சியாவது யாது?
82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா on Fri Sep 18, 2009 6:42 am

மயங்கா எழுத்துக்கள்
83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிரீற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.
உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.
---

84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.
---

85.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-
லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.

தேர்வு வினாக்கள்
83. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்?
உடம்படுமெய்யாவது யாது?
உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ?
84. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்?
85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?

---

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்

86. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.
உதாரணம்.
ஆண் + அழகு - ஆணழகு
மரம் + உண்டு - மரமுண்டு
---

87. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.
உதாரணம்.
கல் + எறிந்தான் - கல்லெறிந்தான்
பொன்; + அழகியது - பொன்னழகியது

தேர்வு வினாக்கள்
86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?
87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?

-----

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
உதாரணம்.
கிளி; + அழகு - கிளியழகு
தீ + எரிந்தது - தீயெரிந்தது
பனை + ஓலை - பனையோலை
---

89. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
உதாரணம்.
பல + அணி - பலவணி
பலா + இலை - பலாவிலை
திரு + அடி - திருவடி
பூ + அரும்பு - பூவரும்பு
நொ + அழகா - நொவ்வழகா
கோ + அழகு - கோவழகு
கௌ + அழகு - கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.
உதாரணம்.
கோ + இல் - கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
---

90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
உதாரணம்.
அவனே + அழகன் - அவனேயழகன்
சே + உழுதது - சேவுழுதது

தேர்வு வினாக்கள்
88. இ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ?
90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கணச் சுருக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum