உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» சமையல் குறிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 8:05 pm

» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Yesterday at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Yesterday at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Yesterday at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Yesterday at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Yesterday at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Yesterday at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Mon May 20, 2019 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon May 20, 2019 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Mon May 20, 2019 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Mon May 20, 2019 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon May 20, 2019 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Mon May 20, 2019 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Mon May 20, 2019 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Mon May 20, 2019 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Mon May 20, 2019 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Mon May 20, 2019 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Mon May 20, 2019 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Mon May 20, 2019 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Mon May 20, 2019 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Mon May 20, 2019 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Mon May 20, 2019 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Mon May 20, 2019 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Mon May 20, 2019 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Mon May 20, 2019 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Mon May 20, 2019 2:25 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 11, 2018 5:51 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி ஐயா !

எனக்குப் பிடித்த நூல் திருக்குறள்தான் . தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் திருக்குறள் .
[You must be registered and logged in to see this link.]
நான்  பள்ளி கூடத்தில் படித்ததை வைத்து
தற்போது இந்த பதிவை செய்கிறேன்.
என்னை  புதுப்பிப்பு கொண்டிருக்கிறேன்
நன்றி

ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 12:27 pm

நான் நாளொன்றிற்கு ஒரு குறள் வீதம் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்

1330 குறளுக்கு
நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் பதிந்தால் குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகலாம்
நாள் ஒன்றுக்கு இரண்டு வீதம் பதிந்தால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்
எனவே முடிந்த மட்டும் அதிகமாக பதிவுகள் செய்ய முடிவு செய்துள்ளேன்.
மன்னிக்கவும்.
இது கஷ்டமான காரியம் தான், எப்படியும் செய்ய வேண்டும் உத்வேகம் இருக்கும்
போதே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.
பிழை பொறுத்தருள வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 12:43 pm

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-44

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பழியஞ்சிப்  பாத்தூ  ணுடைத்தாயின்  வாழ்க்கை
வழியெஞ்ச  லெஞ்ஞான்று  மில்


தெளிவுரை

பழிக்குப் பயந்து சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும்
இல்லறத்தானது வாழ்க்கைநெறி என்றும் குலைவதில்லை.


குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

பழி/யஞ்/சிப்---------- பாத்/தூ ---------ணுடைத்/தா/யின் ---------- வாழ்க்/கை
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---------------நேர்/நேர்
புளிமாங்காய்--------- தேமா------------புளிமாங்காய்-----------------தேமா
வெண்சீர் -------------இயற்சீர்--------- வெண்சீர்---------------------இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை------ வெண்டளை---------------- வெண்டளை

வழி/யெஞ்/ச-------- லெஞ்/ஞான்/று----மில்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்--------நாள்
வெண்சீர்-------------வெண்சீர்
-வெண்டளை-------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்

1.குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2. நெற்றொற்று/ நெடில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
4. நெற்றொற்று / குறில்
5. குறிலினை/ குற்றொற்று / குறில்
6. குற்றொற்று

எதுகை-ழியஞ்சிப்- வழியெஞ்ச , வாழ்க்கை- வழியெஞ்ச
மோனை- ழியஞ்சிப் - பாத்தூ  , வாழ்க்கை- ழியெஞ்ச
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 3:30 pm

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-45

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது


தெளிவுரை

இல்லற வாழ்க்கையின் பண்பு அன்பாகும்;அதன் பயன் நல்லறம் செய்தலாகும்.

குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

அன்/பு------------ -மற/னு------------முடைத்/தா/யி------னில்/வாழ்க்/கை
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
தேமா--------------புளிமா-------------புளிமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் --------- -இயற்சீர்------------வெண்சீர் -----------வெண்சீர்
-வெண்டளை—-----வெண்டளை------- வெண்டளை---------வெண்டளை


பண்/பும்--------- பய/னு-------- மது
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை--- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மது>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று / குறில்
2. குறிலினை/ குறில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குறில்
4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
5. குற்றொற்று / குற்றொற்று
6. குறிலினை/ குறில்
7. குறிலினை

எதுகை
மோனை-
ண்பும் –யனு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 3:59 pm

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-46

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்


தெளிவுரை

ஒருவன் அறநெறி தவறாது இல்லறம் நடத்துவானாயின் ,அவன் பிற
அறங்களைச் செய்து அடையத் தக்கது யாது?


குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

அறத்/தாற்/றி----------னில்/வாழ்க்/கை-----யாற்/றிற்---------- புறத்/தாற்/றிற்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------- நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் --------------வெண்சீர்------------இயற்சீர் -----------வெண்சீர்
-வெண்டளை---------- வெண்டளை---------வெண்டளை--------வெண்டளை


போ/ஒய்ப் --------------பெறு/வ----------- தெவன்
நேர்/நேர்----------------நிரை/நேர்----------நிரை
தேமா-------------------புளிமா--------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
-வெண்டளை------- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று குறில்
3. நெற்றொற்று / குற்றொற்று
4. குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினை/ குறில்
7. குறிலினையொற்று

எதுகை-த்தாற்றி- யாற்றிற் –புத்தாற்றிற்
மோனை- புறத்தாற்றிற்- போஒய்ப்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 09, 2018 12:42 pm

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-47

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை

தெளிவுரை

முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்;
பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

இயல்/பினா------னில்/வாழ்க்/கை----- வாழ்/பவ------னென்/பான்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர்-----------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை--------வெண்டளை---வெண்டளை


முயல்/வா/ரு----- ளெல்/லாந்------------ தலை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/குறினெடில்
2.குற்றொற்று/நெற்றொற்று/குறில்
3.நெற்றொற்று/குறிலினை
4.குற்றொற்று/நெற்றொற்று
5.குறிலினையொற்று/நெடில்/குறில்
6.குற்றொற்று/நெற்றொற்று
7.குறிலினை

எதுகை-ல்பினா-முல்வாரு ,னில்வாழ்க்கை-ளெல்லாந்
மோனை-னில்வாழ்க்கை-னென்பான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 15, 2018 12:22 pm

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-48

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து


தெளிவுரை

பிறர்க்கு நல்வழிகாட்டித் தானும் அறநெறி தவறாது ஒழுகுவானது இல்லறம்
நோன்பு செய்வோரின் வலிமையினும் மிக்க வலியதாம்

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

ஆற்/றி--------- னொழுக்/கி---- யற/னிழுக்/கா------வில்/வாழ்க்/கை
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா------------புளிமா---------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர்----------இயற்சீர்--------வெண்சீர்- --------வெண்சீர்
-வெண்டளை—---வெண்டளை--- வெண்டளை-------வெண்டளை

நோற்/பா/ரி---- னோன்/மை------- யுடைத்து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரைபு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்---------- இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யுடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1. நெற்றொற்று/ நெடில்
2. குறிலினையொற்று / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று/ நெடில்
4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
5.நெற்றொற்று / நெடில் / குறில்
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினையொற்று/ குறில்

எதுகை-ற்றி- நோற்பாரி
மோனை- னொழுக்கி- னோன்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 15, 2018 12:33 pm

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-49

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று


தெளிவுரை

அறம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இல்லறமேயாம்;
பிறர் பழிக்காதபடி அமையின் துறவும் அறமெனவேபடும்

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

அற/னெனப்------ பட்/டதே -------யில்/வாழ்க்/கை ---யஃ/தும்
நிரை/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்--------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்---------வெண்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை--- -வெண்டளை-------வெண்டளை

பிறன்/பழிப்/ப----- தில்/லா/யி-----னன்று
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்பு
கருவிளங்காய்-----தேமாங்காய்-----காசு
வெண்சீர்----------வெண்சீர்
-வெண்டளை----- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>னன்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை/ குறிலினையொற்று
2. குற்றொற்று / குறினெடில்
3. குற்றொற்று / நெற்றொற்று/ குறில்
4. குற்றொற்று / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குறில்
6. குற்றொற்று / நெடில் / குறில்
7. குற்றொற்று / குறில்

எதுகை-னெனப்- பின்பழிப்ப , யில்வாழ்க்கை- தில்லாயி
மோனை- யில்வாழ்க்கை- தில்லாயி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 15, 2018 12:42 pm

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-50

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்


தெளிவுரை

இவ்வுலகில் நெறிதவறாது வாழ்க்கை நடத்துபவன் தெய்வத்தோடு ஒப்பவைத்து மதிக்கப்படுவான்

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

வை/யத்/துள்------வாழ்/வாங்/கு----- வாழ்/பவன் ----- வா/னுறை/யுந்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளம்----------கூவிளங்காய்
வெண்சீர்----------வெண்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
-வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை

தெய்/வத்/துள்---- வைக்/கப்------- படும்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்----------- இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
2. நெற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று
4. நெடில்/ குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
6. குற்றொற்று / குற்றொற்று
7.குறிலினையொற்று


எதுகை- வாழ்வாங்கு - வாழ்பவன் , வைத்துள்- தெய்வத்துள்
மோனை- வையத்துள்- வைக்கப் , வாழ்வாங்கு - வாழ்பவன் - வானுறையுந்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 15, 2018 12:54 pm

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மனைத்தக்க  மாண்புடைய  ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்  துணை


தெளிவுரை

நல்ல குணங்களும், செயல்களும் அமையப் பெற்றுத் தன் கணவனது வருவாய்க்கு
ஏற்ப வாழ்க்கை  நடத்துபவளே  சிறந்த மனைவியாவாள்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மனைத்/தக்/க-----மாண்/புடை/ய-----ளா/கித்/தற்------கொண்/டான்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளங்காய்-------தேமாங்காய்-----தேமா
வெண்சீர்--------- வெண்சீர்-----------வெண்சீர்---------இயற்சீர்-
-வெண்டளை----- வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை

வளத்/தக்/காள்---- வாழ்க்/கைத்-----  துணை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்-
-வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று/ குறிலினை / குறில்
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5.குறிலினையொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று
7. குறிலினை

எதுகை- மாண்புடைய- கொண்டான்- துணை
மோனை-னைத்தக்க - மாண்புடைய  , ளத்தக்காள் -வாழ்க்கைத்  

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 17, 2018 10:39 am

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-52

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்


தெளிவுரை

மனைவியிடம் நற்குணநற்செய்கைகள் அமையாது போனால் செல்வம்
முதலிய பல வளங்கள் இருந்தாலும் இல்வாழ்க்கை சிறப்படையாது.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மனை/மாட்/சி------ யில்/லாள்/க----- ணில்/லா/யின் --வாழ்க்/கை
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்------------வெண்சீர்---------வெண்சீர்--------- இயற்சீர்-
-வெண்டளை------ வெண்டளை------வெண்டளை------ வெண்டளை

யெனை/மாட்/சித்---- தா/யினு ------மில்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்-
-வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்

1. குறிலினை/ நெற்றொற்று / குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
3. குற்றொற்று / நெடில் / குற்றொற்று
4. நெற்றொற்று / குறில்
5. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
6. நெடில் / குறிலினை
7. குற்றொற்று

எதுகை-னைமாட்சி- யெனைமாட்சித் , யில்லாள்க -ணில்லாயின் – மில்
மோனை- னைமாட்சி- மில் , யில்லாள்க- யெனைமாட்சித்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 17, 2018 11:09 am

1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-53

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இல்லாதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை


தெளிவுரை

மனைவி குணத்தாலும் செயலாலும் நல்லவளாய் இருப்பின் , அக்குடும்பத்தில் இல்லாதது ஒன்றுமில்லை; அவள் மாறாக இருப்பின் ஆங்கு உள்ளது ஒன்றுமில்லை.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

இல்/லா/தெ------ னில்/லவள் ------ மாண்/பா/னா----- லுள்/ளதெ
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்
வெண்சீர்--------- இயற்சீர்------------வெண்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை-------வெண்டளை

னில்/லவள்------- மா/ணாக் -------கடை
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்---------- இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று / நெடில் / குறில்
2. குற்றொற்று / குறிலினையொற்று
3. நெற்றொற்று/ நெடில்/ நெடில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குறிலினையொற்று
6. நெடில் / நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-ல்லாதெ - னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்
மோனை- னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 04, 2018 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-54

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்


தெளிவுரை

மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

பெண்/ணிற்---- பெருந்/தக்/க---- யா/வுள----------- கற்/பென்/னுந்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
தேமா-------------புளிமாங்காய்-------கூவிளம்--------தேமாங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை--வெண்டளை ----வெண்டளை---- வெண்டளை

திண்/மை/யுண்--- டா/கப்--------- பெறின்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்--------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று/ குற்றொற்று  
2. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
3. நெடில்/ குறிலினை
4. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
5. குற்றொற்று /குறில்/குற்றொற்று
6. நெடில்/குற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை-  பெண்ணிற்- திண்மையுண்- கற்பென்னுந்- பெறின்
மோனை- பெண்ணிற் –பெருந்தக்க- பெறின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Tue Sep 04, 2018 1:59 pm

தெளிவுரை

மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை

ஆம் இந்த வார செய்திகளில் இது மிகவும் அடிபட்டது.
இரு குழந்தைகளின் உயிர் போனது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24329
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 04, 2018 3:55 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
தெளிவுரை

மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை

ஆம் இந்த வார செய்திகளில் இது மிகவும் அடிபட்டது.
இரு குழந்தைகளின் உயிர் போனது.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த குறள் பதிவு மிகுந்த வேதனை அளிக்கின்றது ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை