உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 04, 2018 7:20 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை


அன்/றறி/வா     மென்/னா  தறஞ்/செய்/க    மற்/றது
நேர்/நிரை/நேர்   நேர்/நேர்   நிரை/நேர்/நேர்   நேர்/நிரை
கூவிளங்காய்    தேமா     புளிமாங்காய்    கூவிளம்
வெண்சீர்-        இயற்சீர்-   வெண்சீர்        இயற்சீர்-  
-வெண்டளை  -வெண்டளை -வெண்டளை   -வெண்டளை


பொன்/றுங்/காற்  பொன்/றாத்  துணை
நேர்/நேர்/நேர்    நேர்/நேர்     நிரை
தேமாங்காய்     தேமா       மலர்
வெண்சீர்-        இயற்சீர்
-வெண்டளை   -வெண்டளை


7.ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

தெளிவுரை

இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே
அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும்.


1. குற்றொற்று / குறிலினை/ நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-ன்றறிவா  - மென்னா  - பொன்றுங்காற்  - பொன்றாத்  , தஞ்செய்க  மற்றது
மோனை- பொன்றுங்காற்  பொன்றாத்  , றஞ்செய்க  - துணை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 05, 2018 8:01 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-37

அறத்தா   றிதுவென  வேண்டா சிவிகை
பொறுத்தானோ  டூர்ந்தா  னிடை


தெளிவுரை

அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும்
பல்லக்கினைச்  சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம்


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தா   றிது/வென   வேண்/டா  சிவி/கை
நிரை/நேர்   நிரை/நிரை   நேர்/நேர்   நிரை/நேர்  
புளிமா கருவிளம் தேமா புளிமா
இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளைபொறுத்/தா/னோ   டூர்ந்/தா   னிடை
நிரை/நேர்/நேர்   நேர்/நேர்   நிரை
புளிமாங்காய் தேமா மலர்
வெண்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னிடை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெடில்
2.குறிலினை/ குறிலினை
3.நெற்றொற்று / நெடில்
4. குறிலினை/ குறில்
5. குறிலினையொற்று/ நெடில் / நெடில்
6. நெற்றொற்று / நெடில்
7. குறிலினை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 05, 2018 8:23 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்


தெளிவுரை

ஒரு நாளும் வீணாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே
அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

வீழ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர்
தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ---------------இயற்சீர் -----------------வெண்சீர் ---------------வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை

வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல்
நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர்
தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள்
இயற்சீர் ----------------வெண்சீர் -
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்

1.நெற்றொற்று / நெற்றொற்று
2. குறினெடில்/ குறிலினை
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
5. நெற்றொற்று / நெற்றொற்று
6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- வீழ்நாள்- வாழ்நாள்
மோனை- வாழ்நாள் ழியடைக்குங்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 06, 2018 6:45 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில


தெளிவுரை

அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்;
அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


புறத்/த-------------புக/ழு------------- மில
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை


1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறினெடில்
3. குற்றொற்று / குறிலினையொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில்
6. குறிலினை/ குறில்
7. குறிலினை


எதுகை-த்தான்- புத்த
மோனை- புறத்த புகழு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 08, 2018 8:21 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-40

செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி


தெளிவுரை

இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே;
நீக்கவேண்டுவது தீவினையே.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்------------ இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்--------தேமா-------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று/ நெடில் / குறில்
2. நெடில் / குறில்
3. குறிலினை/ நெடில்
4. குறிலினை/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை

எதுகை-செற்பால-குற்பால ,தோரு-தோரும்
மோனை-தோரு-தோரும்


>>>>>>>>>>>>>>பாயிரவியல் முற்றும்<<<<<<<<<<<<<<<<<<
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 08, 2018 8:41 pm

>>>>>>>>>>>>>>>>>>>இல்லறவியல் ஆரம்பம்<<<<<<<<<<<<<<

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41

இல்வாழ்வா னென்பா இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை


தெளிவுரை

சிறந்த இல்லறத்தான் ஒருவன் தன் உதவியை இயல்பாக நாடிநிற்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவரையும் நெறிதவறாமல் காக்கும் நிலையான துணையாவான்.

குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

இல்/வாழ்/வா----------- னென்/பா-------- இயல்/புடை/ய------ மூ/வர்க்/கு
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா---------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
-வெண்டளை----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை


நல்/லாற்/றி--------------- னின்/ற----------- துணை
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா
வெண்சீர்-----------------இயற்சீர்
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
4. நெடில் / குறிலினையொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்ற/ குறில்
6. குற்றொற்று/ குறில்
7. குறிலினை

எதுகை-ல்வாழ்வா- நல்லாற்றி , னென்பா- னின்
மோனை- ல்வாழ்வா- யல்புடைய , னென்பா- னின்ற
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan on Fri Feb 09, 2018 9:19 am

" மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 10, 2018 11:30 am

[You must be registered and logged in to see this link.] wrote: " மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
[You must be registered and logged in to see this link.]
ஈற்றுச்சீரில்--துணை-- நிரை---- மலர் என்று பதிந்துவிட்டேன்
சரி செய்து கொள்கிறேன்.
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 10, 2018 11:44 am

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-42

குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை


தெளிவுரை

துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி
இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு
நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர் --------- இயற்சீர் -------வெண்சீர்
-வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்------------தேமா------------மலர்
வெண்சீர்------------- --இயற்சீர்
-வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>றுணை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- துந்தார்க்கும்- மிந்தார்க்கு , துவ்வா- தர்க்கு
மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan on Sat Feb 10, 2018 11:50 am

முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .

யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 10, 2018 11:55 am

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-43

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தென்புலத்தார்   தெய்வம்  விருந்தொக்க  றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப  றலை

தெளிவுரை

தன்முன்னோர் ,தெய்வம் ,விருந்தினர் ,உறவினர் ,தான் என்ற ஐவர்க்கும் தான் செய்யும் கடமைகளைத் தவறாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறந்த அறமாகும்

குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

தென்/புலத்/தார்---------தெய்/வம்---------விருந்/தொக்/க------  றா/னென்/றாங்
நேர்/நிரை/நேர்----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்------------தேமா-------------புளிமாங்காய்----------தேமாங்காய்
வெண்சீர்----------------இயற்சீர் ---------- வெண்சீர்--------------வெண்சீர்
-வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை


கைம்/புலத்/தா--------- றோம்/ப------றலை
நேர்/நிரை/நேர்----------நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்-----------தேமா---------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
-வெண்டளை---------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றலை>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குற்றொற்று / குற்றொற்று
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. நெடில் / குற்றொற்று /நெற்றொற்று
5. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெடில்
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை

எதுகை- கைம்புலத்தா றோம்ப  
மோனை- தென்புலத்தார்   தெய்வம்  
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 10, 2018 12:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .

யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஒவ்வொரு தகவலும் நீங்கள் குறளை எந்த அளவு நேசித்து ஆழ்ந்து படித்து
தெளிபடுத்துகிறீர்கள். அருமை
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan on Sun Feb 11, 2018 10:02 am

வெண்பா என்றால் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பது இலக்கணம் . திருக்குறளில்

நாள் என்னும் வாய்ப்பாட்டில் 174 குறட்பாக்களும்
மலர் என்னும் வாய்ப்பாட்டில் 665 குறட்பாக்களும்
காசு என்னும் வாய்ப்பாட்டில் 200 குறட்பாக்களும்
பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் 291 குறட்பாக்களும்

உள்ளன என்று ஆய்ந்துள்ளார்கள் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 11, 2018 10:38 am

[You must be registered and logged in to see this link.] wrote:வெண்பா என்றால் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பது இலக்கணம் . திருக்குறளில்

நாள் என்னும் வாய்ப்பாட்டில் 174  குறட்பாக்களும்
மலர் என்னும் வாய்ப்பாட்டில் 665  குறட்பாக்களும்
காசு என்னும் வாய்ப்பாட்டில் 200 குறட்பாக்களும்
பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் 291 குறட்பாக்களும்

உள்ளன என்று ஆய்ந்துள்ளார்கள் .
[You must be registered and logged in to see this link.]

உங்கள் மூலம் பல. அரிய திருக்குறள்  நெறி
தெரிந்து கொள்ளமுடியும்
நன்றி
ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan on Sun Feb 11, 2018 3:12 pm

நன்றி ஐயா !

எனக்குப் பிடித்த நூல் திருக்குறள்தான் . தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் திருக்குறள் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை