ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 SK

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 SK

கும்பகோணம் கோயிகள் 62.
 ayyasamy ram

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

தில்குஷ் கேக்!
 T.N.Balasubramanian

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - வெஜிடேபிள் ஊத்தப்பம் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

View previous topic View next topic Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:00 am

29 .12 .2017 

அலைகள் ஓய்வதில்ல [1981] படத்தில் 

"ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாட்டு இருக்குல்ல, இந்தப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும் என்ன நடந்துச்சு தெரிமோ? 

இளையராஜா வைரமுத்துவை அப்படியே கட் ............... டி புடிச்சு, அவர் கன்னங்களை தடவினாராம். 

ஃபோட்டோக்ரஃபரை கூப்ட்டாராம். அதே போஸ்ல ஃபோட்டோ எடுக்க சொன்னாராம். 

2017 மார்ச்ல வந்த 'வைகை' என்கிற படத்தில் இந்தப் பாட்டை remix செய்யாம, அப்படியே போட்டிருக்காங்க. இதே மாதிரி "புத்தம் புது காலை" பாட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில படமாக்கப்படலியாம். இந்தப் பாட்டை மேகா [2014] படத்தில் விஷுவல் ஆக்கிடாங்களாம். Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:04 am

29.12.2017

அவர்கள் 1977 

பாலச்சந்தர் மொதல்ல கமல் ரோலுக்கு, ராஜேஷை நடிக்க வைக்க நெனச்சாராம். கமல் அந்த ரோலுக்கு சரியா வருவாரான்னு சந்தேகப்பட்டாராம். 

AVM முருகனுக்கு 'Ventriloquism' என்கிற பொம்மையை வச்சு பேசுற கலை தெரியுமாம். கமல் இந்தக் கலையை அவர்கிட்டே இருந்துதான் கத்து வச்சிருந்தாரம். இது பாலசந்தருக்கு தெரிய வந்துச்சாம். அதுக்கப்புறம்தான் கமலை இந்தப் படத்துக்கு செலெக்ட் செஞ்சாராம். 

இந்தப் படத்திலுள்ள பாட்டுக்கள் எல்லாம் 'Live Stage Show' ல ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். பாலச்சந்தர் MSV ட்டேயும், கண்ணதாசன்டேயும் situation ஐ சொன்னாராம். உடனே ஸ்டேஜ்லேயே கண்ணதாசன் பாட்டு எழுதினாராம், MSV ம்யூசிக் போட்டாராம். பெரீ .....................ய ஆச்சரியம்தான். 

சிறந்த நடிகைக்கான Filmfare Award 1979ல சுஜாவுக்கு கெடச்சுதாம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:06 am

29.12.2017 

அவள் [1972] படத்துக்கு 'A' சர்டிபிகேட் குடுத்திருந்தாங்க. அதனால இளைஞர்கலைக் கவர்ந்த படம். ஏன்னா இப்படிப்பட்ட கதை அப்போ புதுசா இருந்துச்சு. இந்தப் படத்தோட கதையைக் கேட்ட லட்சுமி, உஷா நந்தினி ஓட்டம் பிடிச்சாங்களாம். (இப்போன்னா போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்களோ) ஜெயசித்திரா, ஜெயசுதா, பிரமிளா, ஒய்.விஜயா இவங்கல்லாம் அப்போ ஃபீல்டுக்கு வரல. 

அப்படீன்னு இப்படீன்னு வெண்ணிற ஆடை நிர்மலா ஒத்துக்கிட்டார். ஆனா அதுல ஒரு விஷயம் இருந்துச்சு. இப்படிப்பட்ட ரோல்ல நடிக்கணும்னா ஐம்பதாயிரம் சம்பளம் வேணுமின்னு கேட்டாங்களாம். அப்போ கே.ஆர்.விஜயாவும், ஜே.ஜே.யும் தான் அம்புட்டு சம்பளம் வாங்கிட்டு இருந்தாங்க. வெ.ஆ.நி.வும் அவ்வளவு சம்பளத்தைக் கேட்டதால, ப்ரொட்யூசரும் அழகான நடிகைதானே கெடச்சிருக்காங்கன்னு புக் செஞ்சுட்டார். 

இந்தப் படத்துக்கப்புறம் ஸ்ரீகாந்த்தின் மார்கெட் ஒரு மாதிரி ஆயிருச்சு. "ரேப் சீனா, கூப்பிடுப்பா ஸ்ரீகாந்தை" ன்னு சொல்ற அளவுக்கு. 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:10 am

29.12.2017 

"அன்பு நடமாடும் கலைக்கூடமே" அவன்தான் மனிதன் [1975] 

இந்தப் பாட்டை மே மாசத்ல சிங்கப்பூர், மலேசியா போய் ஷூட் செய்யணும்னு தீர்மானிச்சாங்களாம். ஏன்னா மே மாசத்லதான் அங்க மலர்க்கண்காட்சி நடக்குமாம். 

இந்தப் பாட்டுக்கான மெட்டு ரெடியாம். ஆனா பாட்டு ................... அதுதான் இன்னும் வந்து சேரலியாம். கண்ணதாசனிடம் கேட்டு கேட்டு பார்த்தாங்களாம். "அப்புறமா தர்றேன், அப்புறமா தர்றேன்" ன்னுட்டாராம். கண்ணதாசனுக்கு பாட்டு எழுதவே முடியலியாம். மூடும் இல்லியாம். 

எம்.எஸ்.வி. "மே மாசம் ஷூட்டிங் நடக்க இருக்கு. பாட்டு சீக்கிரமா எழுதிக்கொடுங்க" ன்னாராம். 

ஊஹும் ....................... கண்ணதாசன் அஸ்ஸயலியாம். 

எம்.எஸ்.வி. கோபமா 

"மே மாசம் பக்கத்துல வந்துட்டுதூன்னு சொல்றேன். நீ எழுதி தர்றியா, இல்ல வேற யார்கிட்டேயாவது வாங்கிக்கட்டுமா?" ன்னு கத்தினாராம். 

தயாரிப்பாளர் வேற நச்சரிச்சுட்டு இருந்தாராம். 

கண்ணதாசனும் வந்துச்சே கோவம். "என்னய்யா இது, மே மே ன்னு சொல்லிட்டு இருக்கீங்க" ன்னு சொல்லிட்டு, இந்தப் படத்துக்கான எல்லாப் பாட்டையும் எழுதிக்கொடுத்துட்டு, 

ஒரு பாட்டை மட்டும் தனியா கொடுத்து, "இந்தப் பாட்டை மட்டும் சரியா கவனிச்சுப் பாரு" னு எம்.எஸ்.வி.ட்ட சொன்னாராம். 

மே மாச ஷூட்டிங்க்ல பாட்டின் ஒவ்வொரு வரியிலயும் "மே"ன்னு முடியும் பாட்டு. இந்தப் பாட்டு உருவான கதை நல்லா இருக்குல? 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:15 am

29.12.2017 

சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் - அழைத்தால் வருவேன் 1980

இந்தப் பாட்டு பாடும்போது சுசீலாவின், SPB யம் MSV ட்ட ரொம்ப திட்டு வாங்கினாங்களாம். படாத பாடு பட்டாங்களாம். எப்படீங்க்றீங்களா? 

"டேய் பாலு, தேவைக்கு மேலே ஏன் ஹம்மிங் போட்ற? ஏம்மா சுசீலா, நான் சொல்ற மாதிரி பாட முடியலியா? ஏன் இந்த பாடு படுத்துறீங்க?" ன்னு திட்டினாராம். 

அவர் பக்கத்துல ஹிந்து ரங்கராஜன் நின்னுட்டு இருந்தாராம்.
அவர்ட்ட MSV "ஜாலி ஆப்ரஹாம்னு ஒரு பையன் இருக்கான். அவனுக்கு சங்கீதமே தெரியாது. ஆனாலும் நான் சொல்றத நல்லா கேட்டு, நான் நினைக்கிறதை, நான் சொல்றபடி பாடிருவான். இதுங்க பாருங்க, தலகனம் பிடிச்சு அலையுதுங்க " னு சொன்னாராம். 

சுசீலாவைத்தான் இப்டீ நேரடியா திட்டினாராம். பாவம் சுசீலா, இல்ல? 

அந்த சமயத்தில கன்னட இயக்குனர் பெக்கட்டி சிவராம்னு ஒருத்தர் வந்தாராம். இவரும் MSV யின் தோஸ்த்தாம். MSV , ஹிந்து ரங்கராஜன், இந்த பெக்கட்டி சிவராம் மூணு பேரும் அரட்டை அடிச்சுட்டு இருந்தார்களாம். 

சுசீலாவும், SPB யும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம். 

அப்புறமா அந்தப் பாட்டு லேட்டாதான் ரெக்காட் ஆச்சாம். 

ரெக்கார்டிங் முடிஞ்சு வெளியே வந்த சுசீலா, ரெண்டு காதுகளையும், கண்களையும் மூடிட்டு, "ஐயோ, என் வாழ்க்கைல இந்தப் பாட்டு பாட நான் கஷ்டப்பட்டது போல, வேற எந்தப் பாட்டுக்கும் கஷ்டப்பட்டதில்ல"ன்னு சோர்வா சொன்னாங்களாம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:20 am

29 .12 .2017 

கண்ணதாசன் சும்மா இருக்காமே அப்பப்போ நாட்டு நடப்பை அவரோட பாட்டுல எழுதுவார்ல? அத மாதிரிதான் அனுபவி ராஜா அனுபவி படத்ல “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” ன்னு ஒரு பாட்டு எழுதினார்ல? அதுல “ஊரு கெட்டு போனதுக்கு மூரு மாருகெட்டு அடையாளம்” னு ஒரு வரி வருது. 

சென்னைல அப்போ ‘மூர் மார்கெட்’ ஒரு இடம் இருந்துச்சாம். அந்த இடத்துல போலி சாமான்களை விற்பதா பேசிகிட்டாங்களாம். அதனால கண்ணதாசன் அப்படி ஒரு வரி சேர்த்துகிட்டாராம். படம் ரிலீசாச்சா? ஆச்சு. 

மூர்மார்க்கெட்ல உள்ளவங்க இந்த பாட்டை கேட்டிருக்காங்க. அம்புட்டுதான். சும்மா விட்டாங்களா? பொங்கி எழுந்தாங்களாம். கோர்ட்டுக்கு போயிட்டாங்களாம். கேஸ் போட்டுட்டாங்களாம். ஆனா பாருங்க, இதனால படத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாம போயிருச்சாம். 

“முத்துக்குளிக்க வாரியளா”ன்னு ஒரு பாட்டு இந்தப் படத்துல இருக்குல? ஈஸ்வரியும் ட்டி.எம்.எஸ்சும் பாடியது. அந்தப் பாட்டு கன்னாபின்னான்னு பட்டி தொட்டில எல்லாம் சூப்பரோ சூப்பர் ஹிட்டாச்சாம். ஹிந்தி படத்துல கூட அந்த வரியை மட்டும் யூஸ் பண்ணிகிட்டாங்க. அதுல மஹ்மூத் கூட நம்ம தமிழ்  நடிகை ராமாபிரபா நடிச்சிருந்தார்.


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:28 am

29.12.2017 

எம்.ஜி.ஆருக்கு பட்டங்கள குடுத்தாங்கல்ல? அதையெல்லாம் யார் குடுத்தாங்கன்னு தெரியும்னு நெனக்கிறேன். என்னபோல தெரியாதவங்களுக்கு. 

1. தமிழ்வாணன் 
மக்கள் திலகம் னு  1951 ல குடுத்தாராம். 

2. உறந்தை உலகப்பன்னு ஒருத்தர் 
புரட்சி நடிகர்னு  ஒரு பேர கலைஞர் கருணாநிதிகிட்டே சொன்னாராம். அவர் இந்த பேர பட்டமா 1952 ல அறிவிச்சாராம். 

3. நெல்லை நகராட்சி மன்றம் 1960 ல 
வாத்தியார் னு பட்டம் குடுத்ததாம். 

4. 
பொன்மனச்செம்மல் னு 1963 ல கிருபானந்த வாரியார் குடுத்தாராம். 

5. அறிஞர் அண்ணா 1967 ல 
இதயக்கனி னு குடுத்தாராம். 

6. 1972 ல மெரீனா கடற்கரையில வச்சு கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி 
புரட்சித் தலைவர் னு வழங்கினாராம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:34 am

29.12.2017 

பூம்புகார் - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படம். 

இந்தப் படத்ல கவுந்தியடிகளாக [சமணப் பெண் துறவி] நடிக்க சுந்தராம்பாள்தான் சரியானவர் என்ற எண்ணமாம் கலைஞருக்கு. இளங்கோவடிகளின் கதையையே அங்கங்கே கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தாராம். சுந்தராம்பாளை அந்தப் படத்தில நடிக்க வைக்க பெரும்பாடு பட்டாராம். கேளுங்களேன். 

அப்போ சுந்தராம்பாள் விடுதலை இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த சமயமாம். 

கலைஞர் : பூம்புகார் படத்தில் நீங்கள் கவுந்தியடிகளாக, அதாவது சமண துறவியாக நடிக்க வேண்டுமே! 

சுந்தராம்பாள் : நானா ........................ சமண துறவியாகவா? நெவெர்.............. நானோ பழுத்த முருக பக்தை. நான் எப்படி......................... , அதுவும் உங்கள் வசனத்தில் ? 

கலைஞர் : நீங்கள் நடிப்பது கட்சிக்காகவோ, பகுத்தறிவிற்காகவோ இல்லை. தமிழுக்காக மட்டுமேதானம்மா.

சுந்தராம்பாள் ஒத்துக்கொண்டார். ஆனால் சும்மா இல்லை. 

சுந்தராம்பாள் : என் கணவர் [எஸ்.ஜி.கிட்டப்பாவாமே] மறைந்தபின் நான் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநீற்றினை மேக்கப்புக்காக கூட கலைக்க மாட்டேன். இது உறுதி. 

கலைஞர் : அதெப்படி முடியும் ? நீங்கள் நடிப்பதோ சமண முனிவர் பாத்திரம். அதற்கும், திருநீற்றுக்கும் ஒட்டாதே.

கலைஞர் சுந்தராம்பாளிடம் கெஞ்சியிருக்காராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவர் ஒரு யோசனை சொன்னாராம்.

அந்த ஒருவர் : திருநீற்றை நெற்றியில் பட்டையாகப் போடாமல், ஒற்றை நாமமாகப் போட்டு நடிக்கலாமே. 

சுந்தராம்பாளும் அப்படி நடித்துக்கொடுத்தாராம். 

இது மட்டுமில்லைங்க.

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது 
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இப்படி சிலப்பதிகாரத்தில் வரிகள் வருகின்றதாமே. அவ்வளவுதான். 

"இறைவனைக் கேலி செய்யும் வரிகளைப் பாட மாட்டேன், இறைவனை இல்லை என்று சொல்ல மாட்டேன்"

ன்னு சொல்லிட்டாராம், அம்மையார். கலைஞருக்கு வேற வழியில்லாமல போச்சாம். வார்த்தைகளைக் கொஞ்சம் 
மாத்திட்டாராம். 

"நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" இப்டி மாத்திட்டாராம். 

கலைஞரை எப்படியெல்லாம் மடக்கியிருக்கிறார் என்று இப்போல்ல தெரியுது!! ஐயாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருக்கார் போலியே. 

இது FBல படிச்சது.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 4:44 am

29 .12 .2017 

சிவாஜி உச்ச நடிகராக இருந்த காலத்திலேயே எத்தனையோ சூப்பரான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில, அடுத்த ஹீரோக்களுக்கும், துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இவர் காலத்தில இருந்த மற்ற சில ஹீரோங்க, அவங்க படத்தில எத்தனை டூயட் பாடல் இருந்தாகூட எல்லாத்தையும் அவங்களேதான் பாடுவாங்களாம். மத்தவங்களுக்கு கொடுக்கவே மாட்டாங்களாம். 

உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியாம். பழைய இயக்குனர் ஒருத்தர் ஒரு உண்மையைப் சொல்லிட்டுப் போனாராம். எழுபதுகளில, அவர் இயக்கிய ஒரு குதிரை வண்டிக்காரர் பற்றிய கலர் படம். அதில செகெண்ட் ஹீரோவா நடிச்ச ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடலைத் தெரியாத்தனமா கொடுத்துட்டாராம். அம்புட்டுதாங்க, அதில நடிச்ச பெரிய நடிகர் ஒரே லடாயாம். அப்புறமா அந்த இயக்குனர் "என்னண்ணே நீங்க, விடுங்க, நீங்க தான் எத்தனையோ டூயட் பாடியிருக்கீங்களே. பின்னே என்னண்ணே, ஒரே ஒரு பாட்டுதானேண்ணே, போகட்டும்ண்ணே." ன்னு சொல்லி சமாதானப்படுத்தினாராம். 

பாடல் : கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் 
படம் : என் அண்ணன் 
பெரிய நடிகர் : எம்.ஜி.ஆர்.
செகண்ட் ஹீரோ : முத்துராமன், விஜயநிர்மலாவுடன் 
இயக்குனர் : ப.நீலகண்டன் 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Dec 29, 2017 1:43 pm

அவர்கள் 1977

எனக்கு மிகவும் பிடித்தபடம்

பூம்புகார் - நிகழ்வுகள் சுவாரஸ்யம்

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 02, 2018 6:49 pm

02 .01 .2018 


நன்றி SK. 


பாலசந்தர் படங்கள் எல்லாருக்கும் பிடிக்காது. படம் கொஞ்சம் புரியாது. கதையும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். 


பூம்புகார், சொல்லவா வேணும். அருமையான படம். 


புதுமையான படைப்புகள் தமிழ் சினிமா உலகத்துக்கு கெடச்ச வருஷம் 1954. ஒரு படத்ல கொறஞ்சது 10 பாட்டாவது இருக்குமாம். இந்த சமயத்ல பாட்டே இல்லாம மட்டுமல்ல, சண்டைக்காட்சி, டான்ஸ் கூட இல்லாமல ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆச்சாம், அந்த நாள்.

எஸ்.பாலசந்தர் தன்னோட கதையை ஏ.வி.எம்.செட்டியாரிடம் கொடுத்தார். இந்தப் படத்துக்கு பாட்டே வேணாம்னு பாலசந்தர் சொன்னபோ, ஏ.வி.எம். ஷாக்காயிட்டார். ஏன்னா, அவர் கிராமஃபோன் ரெகார்ட் வியாபாரம் மூலமாத்தான் சினிமாவுக்கே வந்தாராம். தன்னோட படங்கள்ல பாட்டு ஹிட்டாகணும்னு நெனப்பாரா இல்லியா? அவர்கிட்ட போயி, அந்தப் படத்ல பாட்டு வேணாம்னு சொன்னா, எப்டி இருக்கும் ! 

அது மட்டுமில்ல, பாட்டு இல்லாத படங்களை யாரும் விரும்பமாட்டாங்கல்ல. பாலசந்தர், செட்டியாருக்கு தைரியம் சொல்லி, செட்டியாரும் உம் கொட்டிட்டாரு. 

ஹீரோவாக நாடக நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் நடிச்சாராம். ஆனால் அவரது நடிப்பில் திருப்தி இல்லியாம். பாலசந்தர் தான் புதுமையை விரும்புவர் ஆச்சே.

சிவாஜி கணேசன்.

அவர் தான் ஹீரோ ஆனார். பண்டரிபாய், சூரியகலா, ஜாவர் சீதாராமன், டி.கே. பாலசந்தர் இதில் நடிச்சாங்க.

படம் வெளியானபோது, முதல் காட்சியைப் பார்த்ததும் ரசிகர்கள் தெகச்சுட்டாங்களாம். 

காரணம்

படத்தின் ஸ்டார்டிங்லியே சிவாஜி சுடப்பட்டு இறந்து விடுவார். அதுக்கப்புறமா வர்ற ஸீன்கள்ல, படத்ல நடிச்ச ஒவ்வொருத்தரும், சிவாஜியைக் கொன்னது பற்றி ஒவ்வொரு விதமாகக் சொல்வாங்க. அவங்க சொன்னது எல்லாமே flashback காட்சிகளா வரும். இந்த flashback காட்சில எல்லாம் சிவாஜி வருவார். இந்தப் புதுமையான படத்தை ரசிகர்கள் பாராட்டினாலும், அவங்களுக்கு படம் புரியலியாம். அதனால் box officeல படம் வரலியாம். ஆனாலும் இந்தப் படத்துக்கு ஒரு பெருமை இருந்துச்சு. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம். ஒரு முக்கியமான விஷயம். இப்படத்திற்குப் பின்னணி இசை யார் தெரியுமா ?

இயக்குனர் எஸ்.பாலசந்தர் தான்.

ஐந்து வருஷங்களுக்கு பின்னால மறுபடியும் இப்படம் ரிலீஸ் ஆனபோ நல்லா ஓடுச்சாம். 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 02, 2018 7:12 pm

02 .01 .2018 

15 வயசுள்ள ஒரு இளைஞன். ட்டி.கே.எஸ். நாடகக் குழுவின் நாடகங்கள்னா அவனுக்கு ரொம்ப பிடிக்குமாம். அவங்களோட எல்லா மேடை நாடகங்களையும் பார்த்துருவானாம். அவங்களுக்காகவே ஒரு கதை எழுதினானாம். அந்தக் கதையை அவங்ககிட்ட போய் குடுத்து, நான் உங்க ரசிகன்னு சொல்லியிருக்கான். 


ட்டி.கே.சண்முகம் அந்தக் கதையை வாங்கி பார்த்திருக்கார்.    அவருக்கு கதை புடிச்சு போச்சு. சூப்பர் கதையை எழுதியிருக்கிறானேனு ஆச்சரியப்பட்டாராம். உடனே அந்தக் கதையை நாடகமாவும் போட்டுட்டாராம். நாடகத்துக்கு அட்டகாசமான வெற்றி. ஒரே நாடகத்ல புகழின் உச்சிக்கு போயிட்டான் அந்த 15 வயசு இளைஞன்.

இளைஞன் இளைஞன்னா, அவன் யார்னு சொல்லணும்ல. பிற்காலத்ல பிரபலமடைந்த ஒரு இயக்குனர், ஸ்ரீதர்தான் அவர்.

அந்த நாடகத்தைப் படமாக்க ட்டி.கே.எஸ்.சகோதரர்கள் முடிவு செஞ்சு, தமிழ், இந்தி, சிங்களம், கன்னடம்னு இத்தன மொழிகள்ல வெளியிட்டனர். என்ன படம் ? 

ரத்தபாசம் 1954 

படமும் வெற்றி பெற்றது. ட்டி.கே.சண்முகம், வித்யாவதி, எம்.எஸ்.திரௌபதி, பகவதி, அஞ்சலிதேவி நடித்தனர். 

சின்ன வயசிலேயே கலைஞரான ஒரே இயக்குனர் ஸ்ரீதர்.


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 02, 2018 7:21 pm

02 .01 .2018 

சரவணபவ யூனிட்டி நிறுவனங்களுக்குக் கதை எழுதிக் கொடுத்தாராம் ஸ்ரீதர். 

என்ன கதை? 

எதிர்பாராதது 1954 

இதாங்க கதையின் பேரு. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் உமாபதிக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சாம். என்னான்னு நெனக்கிறீங்க? 

இவ்வளவு சின்னப் பையனாக இருக்கிறானே. இவன் எப்டி இப்படிப்பட்ட அனுபவம் நெறஞ்ச வசனங்களா எழுதுறான், அவந்தான் எழுதுறானா இல்லேன்னா யார்கிட்டயாவது எழுதி வாங்கிட்டு வர்றானான்னுதான் அந்தச் சந்தேகம். 

என்ன திருவிளையாடல் தருமி ஞாபகம் வந்துருச்சா ?

சரி, மேலே படீங்க. 

இந்த சந்தேகம் வந்ததுக்கப்புறம், உமாபதி, ஸ்ரீதர் கொடுத்த கதையை வாங்கி வச்சுட்டு, அவரைத் தன் officeக்கு வரச்சொல்லி, அங்கேயே உட்கார்ந்து வசனங்களை எழுதச் சொன்னாராம். எப்டி இருக்குது பாருங்க அவர் நடத்திய சோதனை ? 

Test வைக்கிறாராமா. 

இந்த டெஸ்ட்டில் ஸ்ரீதர் பாஸாயிட்டார். 

அவரது வசனங்களைப் பார்த்து, உமாபதி ஆச்சரியப்பட்டு போனார்னா பாருங்களேன். படம் தயாரிக்கப்பட்டது. சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கி, எடிட்டிங்கும் செஞ்சாராம். அசத்தலாக வெற்றியடைந்த இந்தப் படத்ல சிவாஜி - பத்மினி ஜோடியோட, அசோகன், எஸ்.வரலட்சுமி, சகஸ்ரநாமம், நாகையாவும் நடிச்சிருந்தாங்களாம். இப்படி வெற்றிப் படங்களைக் கொடுத்த ஸ்ரீதர் வெற்றிவாகை சூட கேக்கவா வேணும் !!

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Jan 03, 2018 1:10 am

03.01.2018 

MGR பேர்ல பதிவு தபால் வந்தா வாங்கமாட்டாராம். எதனால தெரியுமா? தெரிஞ்சதுதானேன்னு சொல்லாதீங்க. 

அவருடைய நாடோடி மன்னன் உருவாயிட்டு இருந்த சமயமாம். அவருக்கு ஒரு பதிவுத் தபால் வந்துச்சாம். அவரும் கையெழுத்து போட்டு வாங்கிட்டாராம். வாங்கி பிரிச்சு பார்த்தா ..................... அதுல ஒரு பேப்பர் இருந்துச்சாம். அதுல ஒண்ணுமே எழுதியிருக்கலியாம். வெறும்.................. எம்ப்ட்டி பேப்பர். MGR க்கு ஆச்சரியம், எரிச்சலாம். அதை போட்டுட்டு, நாடோடிமன்னன் வேலையில மூழ்கிட்டாராம். 

நாடோடி மன்னன் ரிலீஸ் ஆயிருச்சு. படம் கன்னா பின்னான்னு ஓடிட்டு இருந்துச்சாம். இந்த சமயத்தில ஒரு பதிவுத் தபால். அதுவும் வக்கீல் நோட்டீஸாம். என்னடா இதூன்னு MGR பிரிச்சு பார்த்தாராம். முந்தி ஒரு ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்துச்சே,அதே ஆள் சார்பா வந்த வக்கீல் நோட்டீஸ். அதுல "நாடோடி மன்னன் கதை என்னோடது. அந்தக் கதையை ரொம்ப மாசங்களுக்கு முன்னால உங்களுக்கு அனுப்பி இருந்தேன். ஆனா இப்போ என்னான்னா, அந்தக் கதையை படமா நீங்க எடுத்துட்டீங்க. ஆனா படத்தில என் பேர் இல்லியே. அதற்கான நஷ்ட ஈடு எனக்கு வேணும்" னு எழுதியிருந்துச்சாம். MGR க்கு பயங்கரமான ஷாக். அவருடைய வக்கீலை வச்சு பதில் அனுப்பிட்டாராம்.

ஆனாலும் "ஜனங்க இப்படீல்லாமா செய்வாங்க?" னு சொல்லிட்டே இருந்தாராம். அதுக்கப்புறமா ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்தா, சந்தேகமா இருந்துச்சுன்னா வாங்றதே இல்லியாம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Wed Jan 03, 2018 11:23 am

அந்த நாள் அருமையான படம் இதை ஒரேயொரு முறை தான் பார்த்திருக்கிறேன் மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்க காத்திருக்கிறேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum