உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 23, 2017 1:38 pm

23.12.2017 


பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே  தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?  


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Dec 23, 2017 2:26 pm

நீங்கள் பதிவை தொடருங்கள் நிஷா

அனைத்தும் அருமைSK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Sat Dec 23, 2017 6:17 pm

@heezulia wrote:23.12.2017 


பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே  தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?  


Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1254487

இணைந்து 15 நாட்களுக்குள் 450 மேல் பார்வையாளர்கள் 60 கு மேல் மறுமொழிகள்.
நீங்கள் சினிமா சம்பந்த கேள்வி கேட்டு அதற்கு மறுமொழி யாரும் தரவில்லையா ?
என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?

நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா ? அதற்கு மறுமொழி இடுகிறீர்களா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Sat Dec 23, 2017 9:55 pm

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். அந்த வகையில் சினிமா ஆர்வம் எனக்கில்லை.ஆனால் பாடல்களில் ஆர்வம் உண்டு,முக்கியமாக கர்நாடக இசைப் பாடல்களில்……

நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்....
என்ற  ஆதங்கத்திற்காக இந்தக் கருத்தும்…..
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..

இது பொன்முடி படத்தில் லலிதா,பத்மினி நடனம்………..இது ஓர் இரவில் ஒரு பாடல்…..

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Dec 24, 2017 1:59 pm

24.12.2017 
நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா ? அதற்கு மறுமொழி இடுகிறீர்களா ?
ரமணியன்
நீங்க சொல்லிட்டீங்களே, அதனால ஈகரைய ஒரு ரவுண்டு அடிச்சேனே.  அரசியல்,   புதுப்பட    துணுக்குகள்,   அந்தக்காலத்து விளம்பரங்கள், சின்ன அறையை பெருசா காட்ட டிப்ஸ் இப்படி என்னவெல்லாமோ இருக்கு. மூர்த்தி சொன்ன மாதிரி, எனக்கு பிடிச்ச மாதிரி எதுவுமே இல்லியே. நான் என்ன செய்றது? 

ஒர்த்தர் தொடர்ந்து ஏழெட்டு பதிவுகள் போட்டாலும், அதை யா ................... ரும் கண்டுக்கல. அநேக தலைப்புகள்ல ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு. அநேக பதிவுகள் நவம்பருக்கு அப்புறமா எதுவுமே இல்ல. டிசம்பர்லேயும் எட்டாம் தேதியோடு நிக்குது.  இப்படி ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து, இப்பதான் ஈகரையை பற்றி நல் ......................லா  தெரிஞ்சுகிட்டேன். 
 
நான் சுற்றி சுற்றி வர்றதோ, சினிமா, சினிமா பற்றிய தகவல்கள், சினிமா சம்பந்தப்பட்டவங்க, அதாவது, டைரக்டர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்கள் [பழசு, புதுசு], பாடல்களை பற்றிய தகவல்கள் இப்படி நிறைய நிறைய எழுதிட்டு இருக்கேன், மொத்தம் பத் ................. து  தலைப்புகள்ல. 

ஆனா ஒரு பெரீ ............................ ய திருப்தி என்னான்னா, நான் எழுதுறத ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்க. குறிப்பா தெரிஞ்சதும், தெரியாததும், சினிமா & பாட்டூஸ் பகுதிகளை ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படிச்சிருக்காங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமாவை பிடிக்காதவங்க இருக்கு முடியுமா என்ன! அதுக்கு காரணம், நான் எழுதுறது ஈகரையில் இருப்பவங்களுக்கு ரொம்ப புதுசா இருக்கு. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு. பதில் போடாதவங்களை பற்றி கவலைப்பட போறதில்ல. ஈகரையை வலம் வந்ததுல, இதை நான் தெரிஞ்சுகிட்டேன். 

மொத்தத்தில் என்னான்னா, ஒரு பத்து பேர் இருந்தாக்கூட, மேடைப் பேச்சாளர்களோ, பாட்டு கச்சேரில பாட்றவங்களோ, தொண்டை கிழிய பேசணும், பாடணும்ங்கிறீங்க. நான் தயார். 
by மூர்த்தி :
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..
தொடர்ந்து எழுதலாம்னு முடிவு செஞ்சுட்டேன் மூர்த்தி. நன்றி. 

அது சரி, உங்களுக்கு வீடியோ பாட்டுதான் பிடிக்குமா, ஆடியோ பற்றி ஒண்ணும் எழுதலியே. பாட்டு என்னன்னாலும் கேளுங்க. ஆடியோவோ, வீடியோவோ, க்ளாஸிகல் மட்டுமில்ல, எந்த வகை பாட்டானாலும் சரி, கேளுங்க. கெடச்சா அனுப்புறேன். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Mon Dec 25, 2017 10:33 am

வீடியோ பாடல்களை விட ஆடியோ பாடல்கள் அமைதியாக கேட்க முடியும். சினிமாப் பாடல்களில் சில கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டவை உண்டு. தற்காலப் பாடல்கள் ஒரு சில தவிர மற்றவை மேற்கத்தய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவதுடன் ஆங்கில சொற்களை சேர்த்து எழுதுவதால் விரும்புவதில்லை. தமிழில் மட்டுமே பாடல்கள் எழுதுவேன் எனச் சொன்ன கவிஞர் தாமரையை ஒதுக்கி விட்டது தமிழ் சினிமா.இன்றைய சினிமா ஒரு சில தவிர அனைத்தும் வியாபார நோக்கம் கொண்டவை.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Mon Dec 25, 2017 1:51 pm

@murthy wrote:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். …

நன்றி மூர்த்தி.
ஈகரை தமிழ் களஞ்சியம், பல்வேறு ரசனைகள் உள்ளவர்கள் ரசனைக்கேற்ப பல பகுதிகளை கொண்டுள்ளது. படிப்பவர்கள் அந்தந்த பகுதிகளை தேர்ந்து எடுத்து படிக்கிறார்கள். சிலர் கருத்தை பதிவு செய்கிறார்கள். பலர் மறுமொழி இடுவதில்லை. கோர்வையாக எழுதமுடியதோ என்ற பயமாகவும் இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவர் முனைவரொருவர் மிகவும் அரிதாக மறுமொழி இடுவார்.95 % அவருடைய மறுமொழிகள் ஸ்மயிலிகள் தான்.
வேறொருவர் இம் என்றால் இருநூறு அம் என்றால் ஆயிரம் என பதிவுக்குள் போடுவார். மறுமொழி அரிது அரிது.
மற்றுமொருவர் தன்னுடைய பதிவுகள் ,மற்றவர்கள் பதிவுகள் படித்து மறுமொழியும் இடுவார். ஆழ்ந்து கவனித்தால் ஆரம்ப பதிவு அவருடையதாக   இருந்தாலும் மற்றவர்கள்  பதிவாக இருந்தாலும் முடிவு பதிவு அவருடையதாகவே இருக்கும்.
பகுதிகள் பலவிதம் -- பதிவர்கள் பலவிதம் --ஒவ்வொருவரும் ஒருவிதம்.

ஏன் நான் ஆரம்பித்த ஒரு கட்டுரை தொடர், போதிய பார்வையாளர்கள் இல்லாததால் நானே அதை நிறுத்திவிட்டேன்.மறுமொழிகள் இல்லை என்று மருகவில்லை.புரிந்துகொண்டேன் நிறுத்திவிட்டேன்.

மறுமொழியை பற்றி கவலை படாத இரு பதிவர்கள் கருமமே கண்ணாயினர் செயல் என்று மூன்று தலைப்புகளில் இப்பவும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்காக யாரும் மறுமொழி இடவேண்டாம் என கூறவில்லை. மறுமொழி இட்டால்தான் பதிந்தவர்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும். அதுவும் புதியவர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.

குதிரையை குளத்தருகே கொண்டுதான் செல்லமுடியும் நீரை குடி என்று கட்டாயப்படுத்தமுடியாது என்ற ஆங்கில சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:20 am

29.12.2017 

சினிமா உலகத்தில MGR க்கு 'சின்னவர்' னு பேராம். அப்போ பெரியவர் யார்னு கேக்குறீங்களா? 'MGR நாடக மன்றம்' னு அப்போ இருந்துச்சாம். இந்த மன்றத்தை பொறுப்பெடுத்து MGR இன் அண்ணன் சக்கரபாணி நடத்தி வந்தாராம். அப்போ அவரை எல்லோரும் 'பெரியவர்' னு கூப்பிட்டதால MGR ஐ சின்னவர்னு கூப்ட்டாங்களாம். 

MGR சூப்பரான ஃபோட்டோகிராஃபராம். எந்த நாட்டுக்கு போனாலும் அவருக்கு புடிச்ச ஜாமான்களை வாங்கும்போது அதுல கண்............டிப்பா கேமரா இருக்குமாம். அவருடைய வீட்ல பலப்பல வகையான கேமரா இருந்துச்சாம். கடைசி நாட்கள்ல அந்த கேமராக்களை, அவருக்கு புடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாராம்.

MGR ஐ ஃபோட்டோ எடுக்கிறது ஈஸியில்லியாம். அவருக்கு தெரியாம யாரும் அவரை போட்டோ எடுக்கவே முடியாதாம். அவரை போட்டோ எடுக்கிறவர் எங்கேயிருந்து எப்படி எடுப்பார், அவர் எடுக்கிற போட்டோவின் ரிஸல்ட் என்னான்னு முதல்லேயே சூப்பரா கணக்கு போட்டுருவாராம். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:23 am

29 .12 .2017 

துளிவிஷம் : 

நரசுஸ் காபி - என்ன காபி ஞாபகமா ? 

இந்த நரசுஸ் காபி உரிமையாளர் பி.எல்.நரசு தயாரிச்ச முதல் படம் தான் துளிவிஷம். 

பிரபலமான ஒரு நாடகம் இந்தப் படமாக மாறுச்சாம். ஏ.எஸ்.ஏ.சாமி இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செஞ்சார். நடனம் மற்றும் இசையமைத்தது கே.என்.தண்டாயுதபாணி.

கிருஷ்ணகுமாரி, பி.கே.சரஸ்வதி, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.ரங்கராவ், டி.வி.நாராயணசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் நடிச்சிருந்தாங்க. தமிழிலும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. 

படம் ஓடல.


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:27 am

29 .12.2017 

சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பேரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம். 

தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளின்னு சொல்லுச்சாம். 

உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்களில முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா? 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:31 am

29.12.2017 

பட்டுக்கோட்டையார் முதல் முதலாக மெட்டுக்கு எழுதிய முதல் பாட்டு – சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் – புதையல் 1957

SSR பாடிய பாட்டு செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு – புதுமைப் பெண் 1959

MGR & ஜெமினி கணேசன் இணைந்த படம் முகராசி 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:35 am

29.12.2017 

உரிமைப்போர் [1998]ங்கற படத்த ராஜ் டிஜிட்டல் பிளஸ் ல பார்த்தேன். ரஞ்சிதா, அருண் பாண்டியன் நடிச்சது. ஒரு கல்யாண ரிசப்ஷன். பாட்டுக் கச்சேரி நடக்குது. பாடகர் சுரேந்தர் பாடுறார். ஆனா ........................ அது அவர் குரல் இல்ல. தேவா பின்னணி பாடியிருக்கார். ஏன்னா இந்தப் படத்துக்கு தேவா ம்யூசிக். ஆக, சுரேந்தருக்கு தேவா பின்னணி பாடியிருக்கார்னு தெரியுது.

காதல் காதல் காதல் படத்தில் ஜாலி ஆப்ரஹாம் ஹீரோவாம். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாட்டு. ஆனா இவருக்காக மலேசியா வாசுதேவன் பாடினாராம். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:38 am

29.12.2017 

ராஜகுமாரி 1947 – ASA சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர். இருந்தாலும் ASA சாமி அப்போ பிரபலமா இருந்தாதால டைட்டில்ல கதை வசனம், சினாரியோ & டைரக் ஷன் ASA சாமி,BA Honsன்னு போட்டு, உதவி ஆசிரியர் மு.கருணாநிதின்னு போட்டிருக்கு.

அடிமைப் பெண் படத்தில் situation பாட்டு ஒண்ணை எழுதி MGR office இல் கொடுத்துட்டாராம், கவிஞர். பாட்டை வாங்கினவர் எங்கோ தவற விட்டுட்டாராம். அது மட்டுமில்லாம, MGR ட்ட கவிஞர் இன்னும் பாட்டு எழுதி குடுக்கலன்னுட்டாராம். MGR கவிஞரை பார்த்தபோ, ஏன் பாட்டு குடுக்கலன்னு கோவிச்சுகிட்டாராம். கவிஞர் பதில் சொல்றதுக்கு சான்ஸ் கொடுக்கலியாம். அதனால ரெண்டு பேருக்குமான connection விட்டு போச்சாம். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:46 am

29.12.2017 

'கவலை இல்லாத மனிதன்' - சங்கர் டைரக்ட் செஞ்சது. படம் முடிஞ்சவுடனே தணிக்கைக்கு போச்சு. இந்தப் படத்ல "கண்ணோடு விண் பேசும் ஜாடை"ன்னு ஒரு பாட்டு இருக்காம். இந்தப் பாட்டில  "மது .......இது மாது ................. மிதம் இது மீதம்" னு வரிகள் வருது. 

கண்ணதாசனோட பாட்டு. தணிக்கை அதிகாரிகள் அந்த பாட்டோட பல்லவியையே வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எல்லோருக்கும் என்ன செய்றதுன்னு தெரியலயாம். கவிஞர் வந்தாராம். நடந்தத கேட்டாராம். 

"இதுல கவலை பட்றதுக்கு என்ன இருக்கு. பல்லவிய வேற மாதிரி மாத்திரலாமே " ன்னு சொல்லி "மனம் இது மாறும், அனுதினம் சுகம் தேடும்' னு வரிகளை உடனே மாத்தி, கொஞ்ச நேரத்தில எல்லோர் மனசிலேயும் ஒரு நிம்மதிய வரவழச்சாராம். எப்பூடீ............................

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 2:02 am

29.12.2017 

மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:

"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்துட்டு புறப்படுங்கோ"

"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"

"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கணும்"

"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"

"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"

"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".

"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"

இந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாததாமே. நாகேஷ் தானா........... சேர்த்துக்கிட்ட வசனமாம்.


என்ன ஒரே குழப்................பமா  இருக்கா? இந்த வசனங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில வருது. சிவாஜியும், நாகேஷும் பேசிகிட்டது. ஏ.பி.என். னாக்கா AP நாகராஜன் இந்தப் படத்தின் டைரடக்கர்.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை