புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:05 am

அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்சிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.

முதலில் ஜாதகக் கட்டத்தைப் போடுங்கள். 12-கட்டங்களையும் போட்டு விட்டீர்கள் அல்லவா? சுக்கிரனை மிதுனத்தில் போடுங்கள். புதனை சிம்மத்தில் போடுங்கள். மற்ற கிரகங்களை பஞ்சாங்கத்தில் கொடுத்துள்ள படி போடுங்கள்.ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Ag9DW0opShq5xPGojoba+pic4

எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டீர்களா? ஒன்பது கிரகங்கள் இருக்கின்றனவா? இல்லையே! எட்டு கிரகங்கள் தானே இருக்கின்றன. சந்திரனைக் காணோம். நாம் சந்திரனைப் போடவில்லை. அதை எப்படிப் போடுவது என்று நாம் பிறகு சொல்லிக் கொடுக்கிறோம். அதற்குமுன் வாக்கியரீதியாக ஆடி -30-க்கு ஜாதகம் கணிக்கலாம். வாருங்கள்.பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஆடி மாதத்திற்கு ஜாதகக் கட்டம் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள். 5-ம்தேதி புதன் கடகத்திற்கு வந்துவிட்டு 22-ம் தேதி சிம்மத்திற்குப் பிரவேசம் செய்கிறார். 11-ம் தேதி சுக்கிரன் மிதுனத்திற்கு வருகிறார். செவ்வாய் 22-ம் தேதியே தனுசிற்குப் பெயர்ந்து விட்டார். மேற்கண்ட பெயர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு நாம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 R0T69WtsRMqDnfOpniid+pic5

இப்போது திருகணிதரீதியாகவும், வாக்கியரீதியாகவும் ஜாதகம் கணிக்கக் கற்றுக்கொண்டீர்கள். ஜாதகம் ஒரே மாதிரியாக இருக்கிறதா ? இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தில் செவ்வாய் தனுசில் இருக்கிறார், திருகணிதத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். இதுதான் இப்போதைய வித்தியாசம். மற்ற வித்தியாசங்கள் முழுவதும் போட்ட பின்புதான் தெரியும்.

அடுத்த பாடத்தில் சந்திரனை எப்படிப் போடுவது, ஜனன கால இருப்பு திசை எப்படிக்கண்டு பிடிப்பது போன்ற விஷயங்களைப் பார்ப்போம்.

மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:06 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 5

சென்ற பாடத்தில் ஆடி மாதம்-30-ம் தேதிக்கு கிரக நிலையைப் போட்டோம். சந்திரனைத் தவிர மீதி எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டோம். இப்போது நாம் சந்திரனைப் போடப் போகிறோம். நாம் ஆடி 30-ம் தேதிக்கு என்று கிரகங்களைப் போட்டோமே தவிர எந்த நேரத்திற்கு என்று போடவில்லை. இப்போது மாலை 5.00 மணிக்கு கிரகங்களைப் போடுவோம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆடி 30-ம் தேதி அன்று "நக்ஷ" என்ற கட்டத்திற்கு எதிராக "ரோ 23-11" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது சூரிய உதயத்திலிருந்து 23 நாழிகை 11 வினாழிகை ரோகி ணி நட்சத்திரம் இருக்கிறது. அதாவது பகல் 03-18 முடிய ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. ஆங்கில மணியைப் பக்கத்திலுள்ள கட்டத்தில் கொடுத்து இருக்கிறார்கள். சந்திரன் 23நாழிகை 11 வினாழிகை முடிய மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் எனப் பொருள். அதாவது பகல் 03-மணி 18 நிமிஷங்கள் வரை சந்திரன் ரோகிணியில் இருக்கிறார். அதற்குப்பின் அவர் எங்கு செல்வார்? அடுத்த நட்சத்திரத்திற்குத்தான். அடுத்த நட்சத்திரம் என்ன? மிருகசீரிஷம் தான். மறுநாள் பகல்20-நாழிகை 45 விநாழிகை முடிய (அதாவது பகல் 03மனி 18நிமிஷங்கள் வரை) சந்திரன் மிருகசீரிஷத்தில் இருப்பார். ஆடி 31-ம் தேதியைப் பார்த்தால் இது தெரிய வரும்.

நாம் எடுத்துக் கொண்ட நேரமான மாலை 5.00மணிக்கு சந்திரன் மிருகசீரிஷத்தில் இருக்கிறார் அல்லவா. இப்போது ஒரு சிறு குழப்பம். மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் ரிஷபத்திலும், 3, 4 பாதங்கள் மிதுனத்திலும் இருக்கிறது அல்லவா? சந்திரனை ரிஷபத்தில் போடுவதா அல்லது மிதுனத்தில் போடுவதா? இப்போது சந்திரன் எந்தப்பாதத்தில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்போம். கண்டுபிடித்தால் நமக்குச் சந்திரனை எங்கு போடுவது என்பது விளங்கும்.

ஒரு நாளைக்கு மொதம் 60 நாழிகை எனக் கூறி இருந்தோம். சந்திரன் அன்று 23நாழி கை 11 வினாழிகை ரோகிணியில் சஞ்சாரம் செய்து விட்டார் இல்லையா? மீதிப் பொழுதை மிருகசீரிஷத்தில் அவர் சஞ்சாரம் செய்கிறார்.

ஆடி 30-ம் தேதிக்கு மொத்த நாழிகை 60.00 நாழிகை

ரோகிணியில் சஞ்சாரம் செய்தது 23.11 நாழிகை
----------
மிருகசீரிஷத்தில் சஞ்சாரம் செய்தது 36.49 நாழிகை
----------
சந்திரன் மிருகசீரிஷத்தில் 30-ம் தேதி மட்டும் சஞ்சாரம் செய்யவில்லை. 31-ம் தேதியும் 20நாழிகை 45வினாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் இதுதெரிய வரும். மிருகசீரிஷத்தில் மொத்தம் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார்? இரண்டையும் கூட்டுங்கள். 36.49 + 20.45 =57.34 நாழிகை.இந்த மொத்த நாழிகைக்குப் பெயர் ஆத்தியந்த பரம நாழிகை எனப் பெயர். இப்போது ஆத்தியந்த பரமநாழிகை என்றால் என்ன? எனத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? சந்திரன் ஒரு நட்சத்திரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமே ஆத்தியந்த பரம நாழிகை எனப்படும்.

நாம் எடுத்துக்கொண்ட நேரம் மாலை 5.00 மணி. அன்றைய சூரிய உதயத்தைக் கண்டு பிடுயுங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? பஞ்சாங்கத்தின் கீழ்ப் பகுதியைப் பாருங் கள். ஆடி 30-க்கு, அதாவது ஆகஸ்டு 14-ம் தேதிக்கு "சூரிய உதய காலை" என்ற கட்டத்தின் கீழ் போட்டுள்ளார்கள் பாருங்கள். காலை 6.02 எனப் போட்டுள்ளார்கள். காலை 6.02 முதல் மாலை 5.00மணி முடிய அதாவது 10 மணி 58 நிமிஷத்தை நாழிகை ஆக்குங்கள். 27-நாழிகை 25 வினாழிகை வரும். அதாவது குழந்தை பிறந்து சூரியோ தயத்திலிருந்து 27நாழிகை 25 வினாழிகை ஆகிருக்கிறது. சூரியோதயத்திலிருந்து 23நாழிகை 13 வினாழிகை முடிய ரோகிணி இருக்கிறது. மீதி (27.25-23.13= 04.12) நாழிகை மிருகசீரிஷத்தில் சென்று இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:07 am

மிருகசீரிஷத்தின் ஆத்தியந்த பரமநாழிகை =57.34

அதாவது மிருகசீரிஷத்தின் 4- பாதங்களுக்கு =57.34

ஒரு பாதத்திற்கு =57.34 / 4 =14.24 நாழிகை

சந்திரன் 14.24நாழிகை வரையில் முதல் பாதத்தில் இருக்கிறார். நம்முடைய மானசீகக் குழந்தைக்கு மிருகசீரிஷத்தில் 4 நாழிகை 12 வினாழிகை சென்று இருக்கிறது. ஆகவே சந்திரன் முதல் பாதத்தில் தான் இருக்கிறார். ஆக சந்திரனை ரிஷபத்தில் போடுங்கள். என்ன 9 கிரகங்களையும் போட்டு விட்டீர்களா? இப்போது திருகணித ரீதியாக ஜாதகத் தைப் போட்டோம். வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துப் போடுவோமா?

நாம் கையாண்ட திருகணிதப் பஞ்சாங்கம் காஞ்சீபுரத்தை வைத்துக் கணிக்கப் படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் தஞ்சாவூரை வைத்துக் கணிக்கப்படுகிறது. அதில் சூரியோதயம் காலை 6.06 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது தஞ்சாவூரில் சூரியோதயம் காலை 6.06. நாம் எடுத்துக் கொண்ட மானசீகக் குழந்தை சென்னையில் பிறந்தது எனக்கொள்வோம். திருகணிதத்தில் காஞ்சீபுரத்தில் சூரியோதயம் காலை 06.02 எனப் போட்டுள்ளதால் நாம் அந்த சூரியோதயத்தையே எடுத்துக் கொள்வோம். வாக்கி யப் பஞ்சாங்கத்தில் காலை 12நாழிகை 40 வினாழிகை வரை தான் மிருகசீரிஷம் எனப் போட்டு இருக்கிறார்கள். அதற்குப்பின் திருவாதிரை நட்சத்திரம் தான் வருகிறது. திருவாதரையில் எந்தப் பாதம் வருகிறது எனப் பாருங்கள். திருவாதரையின் ஆத்தியந்த பரம நாழிகையைக் கண்டு பிடியுங்கள். பின்பு குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்து இருக்கிறது எனக் கண்டு பிடியுங்கள். திருவாதரை 2-ம் பாதத்தில் பிறந்து இருக்கிறது. சந்திரனை மிதுனத்தில் போடுங்கள். இரண்டு பஞ்சாங்கத்திலும் ஜாதகம் கணித்தபின் எப்படி இருக்கிறது எனப்பாருங்கள்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Pic6


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Pic7


வித்தியாசம் தெரிகிறது அல்லவா? நட்சத்திரமே மாறி இருக்கிறது அல்லவா? அதற்குத்தான் நாம் திருகணிதத்தையே எல்லோரும் கையாள வேண்டும் எனக் கூறி வருகிறோம். கிரகங்கள் பார்க்கின்றன என ஜோதிடத்தில் கூறுகிறார்கள் அல்லவா? பார்வை என்றால் என்ன? அதை இப்போது பார்ப்போம். எல்லாக் கிரகங்களும் தான் இருக்கும் வீட்டில் இருந்து 7-ம் வீட்டைப் பார்க்கும். உதாரணமாக சந்திரன் ரிஷபத்தில் இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்ப்பார். ரிஷபத்திலிருந்து எண்ணுங்கள். ரிஷபம் 1, மிதுனம் 2, கடகம் 3, சிம்மம் 4, கன்னி 5, துலாம் 6, விருச்சிகம் 7. ஒருகிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டையும் சேர்த்து எண்ண வேண்டும். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டி லிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள்.ஆனால் குரு, சனி, செவ்வாய் ஆகியகிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு. செவ்வாய்:- அவர் தான் இருக்க்கும் இடத்திலிருந்து 4, 7, 8-ம் வீடுகளைப் பார்ப்பார். நம் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். அவர் 4-ம் பார்வையாக கும்பத்தையும், 7-ம் பார்வையாக ரிஷபத்தையும், 8-ம் பார்வையாக மிதுனத்தையும் பார்ப்பார். அவர் ரிஷபத் தைப்பார்க்கும் போது அதில் உள்ள சந்திரன், சனி ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். அதே போல் மிதுனத்தைப் பார்க்கும் போது அதில் உள்ள குரு, ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். பார்வையினால் என்ன பலன் என்பதைப் பின்னால் பார்ப்போம்.

குரு:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 5-ம் வீடு, 7-ம் வீடு, 9-ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பார். குரு மேற்கண்ட ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கிறார். அவர் 5-ம் பார்வை யாக துலாத்தையும், 7-ம் பார்வையாக தனுசையும், 9-ம் பார்வையக கும்பத்தையும் பார்ப்பார். அந்த வீடுகளையல்லாது அந்த வீட்டில் உள்ள கிரகங்களையும் பார்ப்பார்.

சனி:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம் வீடான கடகத்தையும், 7-ம் வீடான விருச்சிகத்தையும் 10-ம் வீடான கும்பத்தையும் பார்ப்பார். அந்த வீட்டிலுள்ள கிரகங்களையும் பார்க்கிறார். மற்ற கிரகங்களுக்கெல்லாம் 7-ம் பார்வை ஒன்று தான். பார்வை என்பது இரண்டு கிரகங்களுக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கும், ஒரு வீட்டிற்கும் உள்ள தூரம் தான். இந்த தூரத்தைத்தான் நாம் பார்வை என்கிறோம்.

ஜாதகத்தில் நாம் ஒன்பது கிரகங்களைப் போட்டு விட்ட்டோம். இனி இலக்கினமும், ஜனனகால இருப்பு தெசையையும் கணித்தோமேயானால் ஜாதகம் முழுமை ஆகிவிடும். இப்போது இலக்கினம் என்றால் என்ன எனப் பார்ப்போம்?



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:08 am

சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு இலக்கினம் எனப்படும். என்ன புரிகிறதுவும் போல் இருக்கிறது; அதே சமயம் புரியாதது போலும் இருக்கிறது. இல்லையா. இன்னும் விளக்கமாகச்சொல்லுகின்றோம். பூமியை மேலிருந்து கீழாகப் 12 பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 12-பகுதிக்கும் மேஷத்திலிருந்து, மீனம் முடிய 12 ராசிகளின் பெயர்களைக் கொடுங்கள். அதாவது பூமியைப் 12 ராசிகளாகப் பிரித்து விட்ட்டோம்.

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்தில் ரிஷபத்தில் உதயமாவர். கீழே சூரியன் எந்ததெந்த மாதத்தில் எந்த ராசியில் உதயம் ஆவார் எனப்பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறோம்.
.
மாதம்சூரியன் உதயமாகும் ராசி
சித்திரைமேஷம்
வைகாசிரிஷபம்
ஆனிமிதுனம்
ஆடிகடகம்
ஆவணிசிம்மம்
புரட்டாசிகன்னி
ஐப்பசிதுலாம்
கார்த்திகைவிருச்சிகம்
மார்கழிதனுசு
தைமகரம்
மாசிகும்பம்
பங்குனிமீனம்


இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார். சூரியன் சித்தரையில் மேஷத்தில் உதயமாவதால் அதற்கு மேஷமாதம் என்று பெயர். வைகாசியில் ரிஷபத்தில் உதயமாவதால் அதற்கு ரிஷப மாதம், என்று பெயர். இவ்வாறே மிதுனமாதம், கடக மாதம், சிம்ம மாதம், கன்னியா மாதம், துலா மாதம், விருச்சிக மாதம், தனுர் மாதம், மகர மாதம், கும்ப மாதம், மீன மாதம் என்று ஒவ்வொரு மதமும் அழைக்கப்படும்.

அடுத்த பாடத்தில் இலக்கினம் எப்படிக் கணிப்பது எனப் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:08 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 6


இப்போது மணி என்னவென்று கேட்டால் உடனே கையில் உள்ள கடிகாரத்தைப் பார்ப்பீர்கள். எந்த ஊராக இருந்தாலும் (இந்தியாவிற்குள்) ஒரே நேரம் தான். இதற்கு இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் எனப் பெயர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. ஊருக்கு ஊர் நேரம் வித்தியாசப் படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஊரின் longtitude, latitude வித்தியாசப் படுகிறது.

இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் என்பது ஆந்திராவிலுள்ள கோல்கொண்டாவின் ரேகாம்சம் 82 1/2 டிகிரிக்கு உள்ள நேரமாகும். இந்த நேரத்தையே இந்தியா முழுவதற்கும் நாம் வைத்துள்ளோம். ஆனால் Longtitude, Latitude க்குத் தகுந்தவாறு நேரம் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. ஊருக்கு ஊர் மாறுபடும் இந்த நேரத்திற்கு சுதேச மணி அல்லது local meantime என்று பெயர். சரி! இந்த சுதேச மணியைக் கண்டு பிடிப்பது எவ்வாறு ? அதற்கு முதலில் ஒவ்வொரு ஊரின் longtitude தெரிய வேண்டும். இதற்குப் புத்தகங்கள் இருக்கின்றன. அவைகள் ஒவ்வொரு ஊரின் Longtitude, Latitude ஆகியவற்றை அளிக்கின்றன. அந்த விபரம் எல்லாம் நாம் பின்னால் எழுதுகிறோம்.

இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியை நாம் கண்டுபிடிப்போம். தஞ்சாவூரின் ரேகாம்சம்கள் என்ன ?

Longtitude 79 Degrees 10 Minutes

Latitude 10 Degrees 47 Minutes.

இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியைக் கண்டு பிடிப்போம்.

இந்தியாவின் Longtitude 82. 30

தஞ்சாவூரின் Longtitude 79. 10

வித்தியாசம் 3. 20


இந்த வித்தியாசமான 3.20 ஐ 4-ல் பெருக்கவும். 13.20 நாம் ஏன் 4-ஆல் பெருக்கினோம் என்றால் பூமி ஒரு DEGREE நகர்வதற்கு 4 நிமிடங்கள் ஆகின்றன. அப்படியானால் 3 டிகிரி 20 நிமிஷம் நகர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனப் பார்த்தோம். விடை 13 நிமிஷம் 20 வினாடி ஆகும். இந்த 13டிகிரி 20நிமிஷத்தை இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம்-ல் யிருந்து கழிக்க வேண்டும். ஏன்? அதாவது இந்தியன் ஸ்டாண்டர்ட் ரேகாம்சத்திற்குக் குறைவாக இருக்கும் ஊர்களுக்கெல்லாம் நாம் கழிக்க வேண்டும். கூடுதலாக இருக்கும்ஊர்களுக்கெல்லாம் நாம் கூட்ட வேண்டும். அதாவது ஒரு ஊரின் ரேகாம்சம் இந்தியன் ஸ்டாண்டர்ட் ரேகாம்சத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தால் அந்த ஊர் இந்தியன் ஸ்டாண்டர்டு ரேகாம்சத்திற்கு மேற்கே இருக்கிறது எனப் பொருள். கூடுதலாக இருந்தால் அந்த ஊர் கிழக்கே இருக்கிறது எனப் பொருள். தஞ்சாவூரின் ரேகாம்சம் குறைவாக இருப்பதால்நாம் கழிக்க வேண்டும். நமது கணக்கு இத்தோடு முடியவில்லை. ரேகாம்சத் திருத்தம் என்று ஒன்று உண்டு. அதையும் கணக்கில்எடுத்துக்கொள்ள வேண்டும். ரேகாம்ச திருத்தம் எப்படிச் செய்யவேண்டும்?

தஞ்சாவூரின் ரேகாம்சத்தை 2-ல் பெருக்குங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:09 am

வந்த விடையை 3-ல் வகுங்கள். = 79.10 x 2 =158.20/3 = 52-46

இந்த 52-ஐ மட்டும் வினாடியாக எடுத்துக் கொண்டு 13 நிமிஷம் 20 வினாடியுடன் கூட்ட நமக்குக் கிடைப்பது 14 நமிஷம் 12 வினாடிகள். இதுதான் இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும் சுதேச நேரத்திற்கும் உள்ள வித்தியாசம். உதாரணமாக இந்தியன் ஸ்டாண்டர்ட் மணி இரவு 9.00 எனக் கொள்வோம். தஞ்சாவூரின் சுதேச மணி 8மணி 45 நிமிஷங்கள் 48 வினாடியாகும். சுதேச மணி தெரியாமல் நாம் இலக்கினம் கணிக்க இயலாது. அதற்காகத்தான் நாம் சுதேசமணியைப் பற்றி விரிவாக எழுதினோம். நாம் தமிழ் நாட்டிலுள்ள முக்கியமான ஊர்களுக்கெல்லாம் Longtitude, Latitude, நேர வித்தியாசங்களைப் பட்டியல் போட்டுக் காட்டி இருக்கிறோம்.

இது ஜாதகம் கணிக்க உதவும்.

ஊர்களின் பெயர்.Longtitude
Deg. Min.
Latitude
Deg. Min.
நேர வித்தியாசம்
நி செ.
1. அம்பா சமுத்திரம்77-2908-43- 20.55
2. ஆனை மலை76-4010-24- 24.11
3. அறந்தாங்கி79-0210-10- 14.44
4. ஆற்காடு79-2412-56- 13.16
5. அரக்கோணம்79-4313-05- 12.01
6. ஆரணி79-1912-40- 13.36
7. அருப்புக்கோட்டை78-0809-31- 18.20
8.போடிநாயக்கனுர்77-2410-01- 21.15
9. சிதம்பரம் 79-4411-24- 11.57
10. கூனூர்76-5011-20- 23.31
11. கடலூர்79-4911-43- 11.37
12. திண்டுக்கல்78-0010.22- 18.52
13. ஈரோடு77.4611.20- 19.47
14. குடியாத்தம்78.5512.57- 15.12
15. ஹோசூர்77-5212.44- 19.24
16. காஞ்சீபுரம்79.4512.50- 11.53
17. காரைக்கால்79.5210.55- 11.25
18. கோயம்புதூர்77.0011.00- 22.51
19. கரூர்79.0710.58- 18.24
20. காயல்பட்டினம்78.0808.34- 18.12
21.கீழக்கரை78.5009.14- 15.32
22.கோடைக்கானல்77.3210.1320.43
23.கிருஷ்ணகிரி78.1612.32- 17.48
24.கும்பகோணம்79.2510.58- 13.13
25.சென்னை80.1713.04- 09.45
26.மதுரை78.1009.58- 18.12
27.மதுராந்தகம்79.5612.30- 11.09
28.மன்னார்குடி79.2910.40- 12.57
29.மேட்டுப்பாளையம்79.5911.18- 22.75
30.மேட்டூர் டேம்77.5011.5219.31
31.நாமக்கல்78.1311.13- 18.00
32.நாங்குனேரி77.4408.09- 19.55
33.நீலகிரி76.4711.24- 23.43
34.உதகமண்டலம்76.0011.24- 26.50
35.பாளையங்கோட்டை77.4608.43- 19.55
36.பழனி77.3310.27- 20.39
37.பண்ருட்டி78.3511.47- 12.33
38.பட்டுக் கோட்டை79.2210.26- 13.28
39.பெரியகுளம்77.3510.07- 20.31
40.ராஜபாளயம்77.3609.26- 20.27
41.ராமனாதபுரம்78.5209.22- 15.24
42.ராமேஸ்வரம்79.2209.17- 13.24
43.சேலம்78.1211.39- 18.04
44.சங்கரன் கோவில்77.3509.10- 20.31
45.சாத்தூர்77.5809.21- 19.00
46.சத்தியமங்கலம்77.1711.30- 21.43
47.செங்கோட்டை77.1808.59- 21.39
48.சிவகங்கை78.3209.51- 16.44
49.திருநெல்வேலி77.4408.44- 19.55
50.திருச்சி78.4610.50- 15.48
51.தொண்டி79.0409.45- 14.36
52.உடுமலைப்பேட்டை77.1710.36- 21.43
53.வேலூர்79.1112.55- 14.08
54.விருதாசலம்79.2411.32- 13.17
55.ஏற்காடு78.3111.48- 18.00




நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:09 am

தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்குண்டான longtitude, மற்றும் latitude, இந்திய நேரத்திற்கும், சுதேச நேரத்திற்கும் உண்டான வித்தியாசத்தையும் மேலே கொடுத்துள்ளோம். ஊங்கள் ஊர் சிறிய ஊறாக இருப்பின் பக்கத்திலுள்ள பெரிய நகரத்தின் longtitude, latitude-ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.

நாம் பூமியை 12 பாகமாக மேலிருந்து கீழாகப் பிரித்து இருக்கிறோம். அவைகள் மேஷம் முதல் மீனம் முடிய 12 ராசிகளாகும். இந்தப் 12 ராசிகளும் தினமும் ஒருமுறை சூரியன் எதிராகச் சுற்றி வரும். அதாவது 12 ராசிகளும் தினமும் ஒருமுறை சூரியன் எதிராகச் சுற்றி வரும். அதாவது 12-ராசிகளும் சூரியன் முன் உதயமாகும். நமக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த ராசி சூரியன் முன் உதயமாகிறதோ அதுவே இலக்கினம் ஆகும்.

இலக்கினம் கணிக்க நமக்குத்தேவையானது latitude. இந்த latitude -ஐ வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சூரியோதயம் கண்டுபிடிக்க முடியும். நாம் பூமியை 12 ராசிகளாகப் பிரித்து இருக்கிறோம் அல்லவா? ஒவ்வொரு ராசியும் சம அளவாக இருக்கிறதாக என்றால் இல்லை என்று தான் நாம் சொல்ல வேண்டும். latitude-க்குத் தக்கவாறு ராசிகளின் அளவும் மாறுகிறது. நாம் கீழே 8 degree முதல் 13 degree வரை ஒவ்வொரு ராசியின் அளவு என்னவென்று பட்டியல் போட்டுக் காட்டியுள்ளோம். தமிழ் நாட்டில் உள்ள ஊர்களெல்லாம் இந்த அளவுக்குள்தான் இருக்கின்றன. கீழேகொடுத்து இருக்கும் அளவுகள் எல்லாம் நாழிகை, வினாழிகையில் தான் இருக்கின்றன.

 LATITUDE
ராசி8
DEG
9
DEG
10
DEG
11
DEG
12
DEG
13
DEG
 நா.விநா.விநா.விநா.விநா.விநா.வி
மேஷம்4.374.364.344.324.304.28
ரிஷபம்5.085.075.065.055.045.03
மிதுனம்5.275.275.285.285.285.29
கடகம்5.165.175.185.205.215.22
சிம்மம்4.585.005.025.045.065.08
கன்னி4.544.564.585.005.025.04
துலாம்5.085.105.125.135.165.17
விருச்சிகம்5.265.275.285.295.305.30
தனுசு5.215.205.205.205.195.19
மகரம்4.524.514.494.484.464.45
கும்பம்4.264.234.224.204.184.16
மீனம்4.214.194.174.144.124.04


மேற்கண்ட விபரங்களெல்லாம் பஞ்சாங்கங்களில் கொடுக்கப் பட்டு இருக்கின்றன. இருப்பினும் வாசகர்களின் சௌகரியத்திற்காக மேலே கொடுத்து இருக்கிறோம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:12 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 7


அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு ஊரின் சூரிய உதயம். இது தெரிந்தால் சூரிய உதயத்திலிருந்து நமக்குத்தேவையான நேரத்த ¢ற்கு இலக்கினம் கணிக்க முடியும். சூரிய உதயம் தெரிய நமக்கு வேண்டியது அந்த ஊரின் latitude. ஒவ்வொரு latitude-க்கும் எப்போது சூரிய உதயம் ஆகும் என்பதைக் கீழே குறிப்பிட்டு உள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தேதிக்கும் எப்போது சூரிய உதயம் ஆகும் என்பதைக் கீழே கொடுத்துள்ளோம். கீழே கொடுத்துள்ளது சுதேச மணியாகும்.


மாதம், தேதி7 & 8 Deg.9 & 10 Deg.11 & 12 Deg.13 & 14 Deg.
-A.M.A.M.A.M.A.M.
Apr 6 - 105.585.565.555.54
Apr 11 - 185.555.535.515.49
Apr 19 - 265.515.495.475.45
Apr 27 - May 45.495.455.445.42
May 5 - 125.475.465.425.39
May 13 - 205.465.435.405.36
May 21 - 285.465.435.405.36
May 29 - Jun 55.475.435.405.36
Jun 6 - 135.485.445.405.37
Jun 14 - 215.495.465.425.39
Jun 22 - 295.515.475.445.40
Jun 30 - Jul 75.535.495.465.42
Jul 8 - 155.545.555.485.45
Jul 16 - 235.565.535.505.47
Jul 24 - 315.575.545.515.48
Aug 1 - 85.575.555.525.50
Aug 9 - 165.575.555.535.51
Aug 17 - 245.575.555.545.52
Aug 25 - Sep 15.565.515.545.52
Sep 2 - 95.555.545.535.52
Sep 10 - 175.535.535.535.52
Sep 18 - 255.525.535.535.53
Sep 26 - Oct 35.515.525.525.53
Oct 4 - 115.505.515.525.53
Oct 12 - 195.505.515.535.54
Oct 20 - 275.505.525.545.56
Oct 28 - Nov 45.505.535.565.58
Nov 5 - 125.535.565.586.01
Nov 13 - 205.565.596.016.04
Nov 21 - 285.596.026.056.08
Nov 29 - Dec 66.016.066.096.13
Dec 7 - 146.066.106.146.17
Dec 15 - 226.106.146.186.21
Dec 23 - 306.146.186.216.25
Dec 31 - Jan 76.176.216.246.28
Jan 8 - 156.206.236.276.30
Jan 16 - 236.226.256.286.31
Jan 24 - 316.226.256.276.30
Feb 1 - 86.226.246.266.29
Feb 9 - 166.206.226.246.26
Feb 17 - 246.186.196.216.22
Feb 25 - Mar 46.156.166.176.18
Mar 5 - 126.126.126.136.13
Mar 13 - 206.086.086.086.08
Mar 21 - 286.046.046.036.03
Mar 29 - Apr 56.046.046.046.04




நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:13 am

நாம் கொடுத்துள்ள எல்லா விபரங்களும் பஞ்சாங்கங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும். இருப்பினும் வாசகர்களின் வசதிக்காக நாம் திரும்பவும் கொடுத்துள்ளோம்.

இப்போது நமக்கு,

1. எல்லா ஊர்களின் சூரியோதயம் கண்டுபிடிக்கத்தெரியும்.

2. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ராசியை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியும்.

3. ஒவ்வொரு ஊருக்கும் சுதேச மணி கண்டு பிடிக்கத்தெரியும்.

இந்த மூன்றும் தெரிந்தால் எந்த ஊருக்கும் சுலபமாக இலக்கினம் கண்டு பிடிக்கலாம். நாம் ஏற்கனவே ஒரு ஜாதகம் கணித்து வைத்துஇருக்கிறோம். அதற்கு இப்போது இலக்கினம் கணிப்போம்.

ஆடி மாதம் 30-ம் தேதி மாலை 5.00 மணிக்கு ஜாதகம் கணித்தோம். ஆனால் எந்த ஊருக்கு என்று கணிக்கவில்லை. இப்போது சென்னையில் அந்த நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தது எனக்கொள்வோம். அதற்கு இப்போது இலக்கினம் கணிப்போம்.

முதலில் அன்று சென்னையில் சூரிய உதயத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 30-ம் தேதிக்கு சரியான ஆங்கிலத்தேதி ஆகஸ்ட் 14. சென்னையின் latitude 13 டிகிரி 04-மினிட்ஸ். இதை 13 டிகிரி என முழுமை ஆக்கிக் கொள்ளுங்கள். இதற்கு என்ன சூரியோதயம் எனப் பாருங்கள். மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். காலை 5மணி 51 நிமிஷம் ஆகும்.

குழந்தை பிறந்த நேரம் (மாலை 5.00 மணி அல்லது) 17.00.00

அன்று சூரியோதயம் 05.51.00

சூரியோதயத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் முடியஆன நேரம் 11.09.00

இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும், சென்னையின் சுதேச நேரத் திற்கும் உண்டான வித்தியாசம் (-)0.09.45 10.58.15

இதை நாழிகை ஆக்குங்கள். கிடைப்பது 27 நாழிகை 25 விநாழிகை வரும். அதாவது சூரியஉதயத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் வரை 27 நாழிகை 25 வினாழிகை ஆகி இருக்கிறது. இந்த 27நாழிகை 25 விநாழிகை எந்த இலக்கினத்தில் வருகிறது எனப் பார்க்க வேண்டும்.

நாம் பார்க்கும் மாதம் ஆடி மாதம். அப்போது சூரியன் கடகத்தில் உதிப்பார். 30-ம் தேதிக்கு கடகத்தின் கடைசியில்தான் உதயமாவார். திருகணிதப் பஞ்சாங்கத்தில் ஆடி 30-க்கு எதிராக உதய இலக்கின முடிவு என்ற கட்டத்தைப் பாருங்கள். அங்கே 0.33 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது அன்று கடகத்தில் 0.33விநாழிகை பாக்கி. இப்போது கணக்குப் போடலாம் வாருங்கள்.

 நா. வி.
அன்று கடகம் இருப்பு0. 33
சிம்மம்5. 08
கன்னி5. 04
துலாம்5. 17
விருச்சிகம்5. 30
தனுசு5. 19
 -------------
 26.51
 -------------
மகரம்4.45
 -------------
 31.36
 -------------




நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:13 am

26 நாழிகை 51 வினாழிகை முதல் 31 நாழிகை 36 வினாழிகை முடிய மகர இலக்கினம் வருகிறது. நமக்குக் குழந்தை பிறந்த நேரம் 27நாழிகை 25 வினாழிகை. ஆகவே மகர இலக்கினம் தான் குழந்தை பிறந்த இலக்கினம். ஆகவே மகரத்தில் "ல" என்று போடுங்கள். "ல" என்பது இலக்கினத்தைக் குறிக்கும். இப்போது ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி 30-ம் தேதிக்கு கடகம் 0.21 நாழிகை தான் இருக்கிறது. அவர்கள் 0.21 நாழிகையை எடுத்துக்கொண்டு கணக்குப் போட வேண்டும்.

இப்போது இலக்கினம் போடக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். இதற்குப் பின் நவாம்சம், ஜனன கால இருப்புதிசை, போட்டால் ஜாதகக் கணிதம் முடிந்து விடும்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Pic8


நாம் தமிழ் நாட்டிலுள்ள ஊர்களுக்குத்தான் Longtitude, Latitude கொடுத்துள்ளோம். இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களுக்குத் தேவை என்றால் "latitude, longtitudes and local meantimes for 5000 places in India" என்ற புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளவும். அதே போல் ஜாதக கணிதம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமாயின் - First Reader (Casting of Horoscopes- by. K.S. Drishnamoorthy- என்ற புத்தகத்தைப் படிக்கவும்.

மற்றவை அடுத்த பாடத்தில்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக