ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:02 am

அதாவது 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் புதன் உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்து குருவின் பார்வையும் இருக்குமேயாகில் அந்த ஜாதகர் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்குவர். இதுதான் இந்தப் பாடலின் பொருள். ஜோதிடத்தில் தேர்ச்சி பெற என்ன கிரக அமைப்புக்கள் வேண்டும் என்பதைப் பார்த்தீர்கள்.

நாம் இப்போது மற்றொறு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கப் போகிறோம். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லை; தாமதம் ஆகிறது எனக் கொள்ளுங்கள். உடனே அவர் எதாவது பரிகாரம் செய்யலாமா? எனக் கேள்வி கேட்ப்பார். பரிகாரம் செய்தால் அவர் திருமணம் ஆகிவிடும் என்பது அவர் எண்ணம். நாம் இப்போது இந்தப் பரிகாரத்தைப் பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம். பரிகாரம் என்பது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகுமா? பரிகாரம் செய்தால் நாம் விருப்புவது எல்லாம் நடைபெறுமா? இதுதான் இந்தப் பாடத்தின் மிக்கியமான விவாதம் ஆகும்.

நாம் போன ஜென்மத்தில் செய்த காரியங்களின் பலனைத்தான் இப்போது இந்த ஜென்மத்தில் அனுபவித்து வருகிறோம். போன ஜென்மத்தில் நல்லவை செய்தோமேயானால் இந்த ஜென்மத்தில் நன்றாக இருப்போம். பாவங்கள் செய்தோமேயானால் அதற்கேற்ற பலனை அனுபவிப்போம். நாம் நல்லது செய்தோமா அல்லது தீயவை செய்தோமா என்பதை ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும். நாம் செய்யும் பாபங்கள் பலவகைப் படும்.

1. மிகக் கொடூரமான பாபங்கள் செய்தோர்; இத்தகைய பாபங்கள் செய்தோருக்கு என்ன பரிகாரம் செய்தும் பலன் இருக்காது. எவ்வளவுதான் பணம் செலவழித்துப் பரிகாரங்கள் செய்தும் பலனே இருக்காது. கொலை, கொள்ளை செய்தோர், வயதான தாய், தந்தைகளைக் கைவிட்டோர் இம்மாதிரிக் குற்றங்கள் செய்தோர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இவர்கள் செய்த பாபங்களுக்கு "துருத கருமம்" எனப் பெயர். போனஜென்மத்தில் செய்த பாபத்தின் பலனை இந்த ஜென்மத்தில் இவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தப் பாபங்களுக்கு என்ன பரிகாரம் செய்தும் பலனே இருக்காது. ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசா, புக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவன் பார்வையோ இருக்காது. அவர்கள் பார்த்தால்தான் செய்கின்ற பரிகாரங்களுக்குப் பலன்கள் இருக்கும். அதனால்தான் சிலர் என்ன பரிகாரம் செய்தும் பலன்கள் கிடைப்ப தில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:02 am

2. சிலர் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் செய்து இருப்பர். அம்மாதிரிக் குற்றங்கள் செய்திருப்போருக்கு அவர்கள் செய்யக்கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். அவர்களுக்கு இலக்கினத்திற்கோ, சந்திரனுக்கோ அல்லது தசாபுக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டுக்காரரின் பார்வையோ இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். இத்தகைய பாபங்களுக்கு "துருத-அத்ருத கருமம்" எனப்பெயர்.

3. சிலர் மிகச் சிறிதளவு குற்றங்கள் புரிந்திருப்பர். அச்செயல்களால் யாரும் பாதிக்கப்படாதிருந்திருப்பர். அவ்வாறு செய்த தவறுக்கு "அத்ருத கருமம்" எனப் பெயர். அவர்கள் எந்தவிதப் பரிகாரமும் செய்யாமலே அவர்களுக்கு அனுகூலமாகக் காரியங்கள் நடக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு இலக்கினத்திலோ, அல்லது சந்திரனுடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்காரரோ சேர்ந்திருப்பார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்துடனோ அல்லது சந்திரா இலக்கினத்துடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவனோ சேர்ந்திருப்பது அல்லது பார்ப்பது மிக நல்லது என்று தெரிகிறது அல்லவா? இப்போது நீங்கள் ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து அவர் பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று சொல்ல முடியும் அல்லவா? ஆகவே எல்லோருக்கும் பரிகாரங்கள் தேவையில்லை. மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:03 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 19


இந்தப் பாடத்தில் நாம் 4-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம். சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருந் தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்கயோகம் உண்டு என்று கூறலாம்.

4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும். வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு. படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம். 4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது. அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார். சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார். சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எறிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை. 4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது. ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:03 am

சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். 4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான். காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.

நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

முதல் வீட்டில் : மிகுந்த படித்தவராக இருப்பர்.

இரண்டாம் வீட்டில் : தாய் வழிச்சொத்து இவருக்குக் கிடைக்கும். கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பார்.

மூன்றாம் வீட்டில் : நான்காம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல; நான்காம் வீடு குறிக்கின்ற காரகத்துவங்களெல்லாம் சரியாக இருக்காது.

நான்காம் வீட்டில் : தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பார்.

5-ம் வீட்டில் : இவருடைய தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பார். மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பார்.

6-ம் வீட்டில் : முன்கோபியானவர். நல்ல எண்ணங்கள் இல்லாதவர்.

7-ம் வீட்டில் : வீடு, வாசலுடன் இருப்பவர். 7-ம் வீடு சராசியாக இருந்தால் வெளியூரிலும், ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளுரிலும் சம்பாத்தியம் செய்வர்.

8-ம் வீட்டில் : இது துஸ்தானம் அல்லவா? மறைவிடமும் ஆகும். செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம்.

9-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் மன நிறைவு உண்டாகும். தகப்பனாராலும் அனுகூலம்.

10-ம் வீட்டில் : அரசியலில் புகழ் பெறுவர். பலர் மதிக்கும் வண்ணம் வாழ்வர்.

11-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம். தாயாரால் அனுகூலம்.

12-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் துன்பம். இளம் வயதிலேயே தாயார் மரணம்.

இப்போது 4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:03 am

சூரியன் : பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

சந்திரன் : சுற்றத்தாரால் மகிழ்ச்சியுண்டு. சிற்றின்பங்களில் பிரியம் அதிகம். சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு.

செவ்வாய் : வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை. அரசியலில் முன்னேற்றமுண்டு. தாயாருடன் சண்டை போடக் கூடிய நிலை இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ கூட இருக்குமேயாகில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும்.

புதன் : படிப்பில் தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும்.

குரு : படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை.

சுக்கிரன் : வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல்

சனி : சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு, வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை ஆகியவை.

ராகு : முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர்.

கேது: தாயாரால் அனுகூலமில்லை; வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை; வழ்க்கையில் பலதரப் பட்ட அனுபவங்கள்;

4-ம் வீட்டின் மற்ற பலன்களை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:04 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 20


ராசிகளில் சர ராசி; ஸ்திர ராசி; உபய ராசி என்று இருக்கிறது என நாம் எழுதி இருந்தோம். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். இவைகள் எல்லாம் பலன் சொல்ல எப்படிப் பயன்படுகின்றன? உதாரணமாக ஒருகிரகம் ஒருவருக்கு உடல் உபாதையைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது எனக் கொள்ளுவோம். அந்த கிரகம் சர ராசியில் இருந்தால் பரம்பரை நோய் வரக் கூடும். ஸ்திர ராசியில் இருந்தால் குணப்படுத்தாத முடியாத நோயாக வரக் கூடும். உபய ராசியில் இருக்கும் கிரகங்கள் மூலமாக அவ்வப்போது வந்து போகும் நோய் வரக்கூடும். இவ்வாறு இந்த ராசிகளின் தன்மைகள் பலன் சொல்லப் பயன்படுகின்றன. ஒருவர் ஜாதகத்தில் 4-ம் இடம் சர ராசியாக இருந்து அதன் அதிபதியும் சரராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்குப் பல இடத்தில் வீடுகள் இருக்கும். இது வீட்டுயோகம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். வீடுயோகம் இல்லாதவர்களுக்கு 4-ம் வீட்டு அதிபர் சரராசியிலும், 4-ம் வீடு சர ராசியிலும் இருந்தால் அவர் பல வீடுகளில் வசிப்பர் எனக் கொள்ளலாம். ஸ்திர ராசியில் இருந்தால் ஒரே வீட்டில் வசிப்பர் எனக் கொள்ளலாம்.

4-ம் வீட்டு அதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபருடனோ சேர்ந்து இருப்பாரேயாகில் அவருக்கு சகோதரன் மூலமாக ஸ்திர சொத்துக்கள் கிடைக்கும். அதேபோல இலக்கினாதிபதி பலம் பெற்று 4-ம் இடத்திலும், 4-ம் வீட்ட்டதிபர் பலம் பெற்று இலக்கினத்திலும் இருந்தால் அவர் சுய முயற்சியில் வீடு கட்டுவர். சிலருக்கு மனைவி மூலமாக வீடு கிடைக்கிறது அல்லவா? அதற்கு எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்? களத்திர காரகனான சுக்கிரன் 4-ம் இடத்திலும், 4-க்குடையவன் 7-ம் இடத்திலும் இருப்பார்களேயானால் களத்திரம் மூலம் வீட்டு லாபம் உண்டாகும். சத்துருக்கள் மூலம் எப்படி பூமி லாபமுண்டாகுமெனப் பார்ப்போம். 6-ம் இடம் சத்துரு ஸ்தானம் அல்லவா? 6-ம் வீட்டதிபன் 4-ம் வீட்டிலோ அல்லது நாலாம் வீட்டதிபன் 6-ம் வீட்டிலோ இருந்து 4-ம் வீட்டதிபன் 6-ம் வீட்டதிபனை விட பலம் பொருந்தி இருந்தால் அவருக்கு விரோதிகளிடமிருந்து பூமிலாபம் கிடைக்கும்.

ஒருவருக்கு மாடி வீடு எப்படிக் கிடைக்குமெனப் பார்ப்போம்? நவாம்ச இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இவர்களிருந்தால் மாடி வீடு கட்டுவர். அல்லது நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் உச்சமடைந்த கிரகமிருக்குமேயகில் அவருக்கும் மாடி வீட்டு யோகம் உண்டு. நாம் இதுவரையில் வீட்டு யோகத்திப் பற்றிப் பார்த்தோம். காரகத்துவங்களையும் இனிப் பார்ப்போம். தாயாரைக் குறிப்பதும் 4ம் வீடு அல்லவா? 4-ம் வீட்டிற்கதிபதி இலக்கினாதிபதியினால் பார்க்கப் பட்டு கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது சுபகிரகங்களினால் பார்க்கப் பட்டு இருந்தாலும் தாயரிடத்தில் மிக்க அன்புடன் இருப்பர். மாதுர்காரகனான சந்திரன் இரண்டு பாப கிரகங்களின் நடுவில் இருந்தால் அல்லது சேர்ந்து இருந்தால் மாதாவிற்குக் கெடுதல் உண்டாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:04 am

4-ம் வீட்டதிபதி பாவிகள் சம்மந்தமில்லாமல் கேந்திரஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோனைருந்தால் பந்துக்களை விரும்புபவனாக அந்த ஜாதகன் இருப்பான். 4-க் குடையவன் பாபக் கிரகத்துடன் சேர்ந்தாலும், பாபர்கள் வீட்டிலிருந்தாலும் நீச வீடு, சத்துருக்கள் வீட்டிலிருந்தாலும் பந்துக்களோடு சேர்ந்து இருக்க மாட்டான். 4-ம் வீடு படிப்பு ஸ்தானமல்லவா? 4-ம் வீட்டிற்குடையவனும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும், புதன் உச்ச ராசியில் இருந்தாலும் ஜாதகன் படிப்பு மிகுந்தவனாவான். நாம் ஏற்கனவே கூறிருக்கிறோம், நாலாம் இடம் என்பது கல்லூரிவரையிலான படிப்பு வரையிலும்தான். அதற்கு மேற்பட்ட படிப்பை 9-ம் வீட்டைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் புதன் கேந்திரஸ்தானங்களுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அதைத் தவிரவும் சுக்கிரன் 2 அல்லது 5 அல்லது 9-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான் ஜோதிடத்தில் வல்லவராக இருக்க முடியும். சரி! ஒருவர் கணிதத்தில் வல்லவராக இருக்க எந்த கிரகம் நன்றாக இருக்க முடியும். கணிதத்திற்கு அதிபதி புதன். அவர் ஜாதகத்தில் கெடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவர் கணிதத்தில் வல்லவராக இருக்க முடியும். சட்டப் படிப்புப் படிக்க எந்த கிரகம் உதவும்? சட்டத்திற்குக் காரகன் குரு. அவர் ஜாதகத்தில் நல்ல விதமாக அமைந்தால்தான் ஒருவர் வழக்கறிஞ்கராக முடியும். இப்போது எல்லோரும் Engineering படிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்கு எந்த கிரகம் உதவி செய்யும்? Engineering படிப்பவர்களுக்குக் கணிதம் மிக முக்கியம். அவர்கள் Drawing, Plan போடுவதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் அதிபதி புதன். இயந்திரங்களுக்கு அதிபதி செவ்வாய். கட்டிடத் தொழிலுக்கு அதிபதி செவ்வாய். புதனும், செவ்வாயும் படிப்பு சம்மந்தமான நாலாம் வீட்டுடனோ அல்லது 9-ம் வீட்டுடனோ சம்மந்தப் பட்டால் ஒருவர் Civil அல்லது Mechanical Engineer ஆக முடியும். Chemical - க்கு அதிபதிசுக்கிரன். அவரும் புதனும் சேர்ந்து ஒருவரை Chemical Engineer -ஆக ஆக்க முடியும். ஆதாவது படிப்பு ஸ்தானத்துடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் அவர் Chemical Engineer ஆக முடியும். சந்திரன் நீருக்கு அதிபதியல்லவா? அவரும் புதனும் Textile Engineer களை உருவாக்க முடியும். பூமியிலுள்ள கனி வளங்களைக் குறிப்பது சனி. பூமியைக் குறிப்பது செவ்வாய். சனி-செவ்வாய்-புதன் - இந்தச் சேர்க்கை Mines Engineer-ஐக் குறிக்கிறது.

சரி! மருத்துவராக எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும். சூரியனுக்குப் பெயர் தன்வந்திரி. அவர் படிப்பு ஸ்தானத்துடன் சமமந்தப் பட்டால்தான் ஒருவர் மருத்துவராக முடியும். இப்போது எந்தெந்த கிரக சேர்க்கை பெற்றால் ஒருவர் என்ன படிக்க முடியும் என்று தெரிந்து கொண்டீர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:05 am

சரி! ஒருவர் நான் இப்போது பட்டப் படிப்பு முடித்து விட்டேன். மேற்கொண்டு படிக்க முடியுமா? எனக் கேட்க்கிறார் எனக் கொள்ளுங்கள்? எப்படி பதில் சொல்வது? தற்போது நடக்கும் தசா, புக்திகளைப் பாருங்கள். அவை படிப்புக்கு உண்டான 4 அல்லது 9 அல்லது 11-ம் வீடுகளைக் குறித்தால் அவர் மேற்கொண்டு படிப்பார் எனக் கொள்ளலாம். குறிக்க வில்லை என்றால் அவருக்கு மேற்கொண்டு படிப்பு இல்லை எனக் கூறிவிடலாம். 4, 9 தானே படிப்பு ஸ்தானம். 11-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும் எனக் கேட்க்கலாம்? 11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? உங்கள் ஆசைகளை நிறைவேற்றுகின்ற வீடு அல்லவா? ஆகவே 11-ம் வீட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய படிக்க வேண்டுமென்ற ஆசையும் நிறைவேற வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீட்டையும் எடுத்துக் கொண்டு பலன் சொல்லுங்கள்.

7-ம் வீடு என்பது களத்திரஸ்தானம் என்று முன்பே எழுதி இருக்கிறோம். அதைத் தவிர

ஒருவர் வியாபாரம் செய்வாரா அல்லது மாட்டாராஎன்றும் 7-ம் வீட்டைக் கொண்டுதான்

சொல்ல வேண்டும். நாம் வங்கியிடம் கடனுக்கு முயற்சி செய்கிறோம் எனக்

கொள்ளுங்கள். அந்த வங்கியைக் குறிப்பது 7-ம் வீடு. அதாவது நாம் யாருடனாவது

ஏதாவது Transaction வைத்துக் கொண்டால் அந்த நபரைக் குறிப்பது 7-ம் வீடு. ஒருவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் Scholarsship-க்கு முயற்சி செய்கிறார் எனக் கொள்ளுங்கள். Scholarship கொடுப்பது அந்தக் கல்வி நிலையம்தானே. அந்தக் கல்வி நிலையத்தைக் குறிப்பது 7-ம் வீடு. இதையெல்லாம் எதற்கு எழுதுகிறோம் என்றால் ஒருவர் Scholarship-ல் படிப்பாரா? என்ற கேள்வி எழுந்தால் எப்படி பதில் சொல்லுவது என்பதற்காகத்தான். சரி! கல்வி நிலையம் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது எனக்கொள்ளுங்கள். அதாவது அதற்கு வரவேண்டிய பணம் குறைகிறது என்பதுதானே பொருள். அதாவது அந்த அளவிற்கு அந்தக் கல்வி நிலையத்திற்குப் பண நஷ்டம் என்பதுதானே பொருள். அந்தப் பண நஷ்டத்தைக் குறிப்பது எந்த வீடு? 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம் வீடுதான். ஆக 6-ம் வீடு என்பது உங்களுடன் Transaction வைத்து இருப்பவரின் நஷ்டத்தைக் குறிக்கிறது. 11-ம் வீடு உங்களின் லாபத்தைக் குறிக்கிறது. Scholarship கிடைத்தால் உங்களுக்கு லாபம் தானே! ஆக ஒருவர் "எனக்கு படிப்பதற்கு "ஸ்காலர்ஷிப்" கிடைக்குமா? என்று கேள்வி கேட்டால் 4ம் வீடு 6-ம் வீட்டுடனும் 11-ம் வீட்டுடனும் சம்மந்தம் உள்ளதா? எனப் பாருங்கள். அப்படி இருந்தால் அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமெனப் பொருள்

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பாருங்கள். இவருக்கு மேல் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

இலக்கினம் : மீனம், சந்திரன் மீனத்தில்;
3-ம் வீடான ரிஷபத்தில் கேது;
4-ம் வீடான மிதுனத்தில் சனி, சுக்கிரன்;
5-ம் வீடான கடகத்தில் சூரியன், புதன்;
6-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;
9-ம் வீடான விருச்சிகத்தில் ராகு;
12-ம் வீடான கும்பத்தில் குரு.

நவாம்சம்:

விருச்சிகத்தில் இலக்கினம்;

3-ம் வீடான மகரத்தில் ராகு, சூரியன்;
4-ம் வீடான கும்பத்தில் சந்திரன்;
6-ம் வீடான மேஷத்தில் சனி, குரு;
8-ம் வீடான மிதுனத்தில் சுக்கிரன்;
9-ம் வீடான கடகத்தில் கேது;
10-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;
12-ம் வீடான துலாத்தில் புதன்.

இவர் பிறந்தது 08-08-1974. இவர் ஸ்காலர்ஷிபில் மேற்படிப்புப் படித்தார். மேற்படிப்பிற்குண்டான 9-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில்; அந்தச் செவ்வாய் லாபாதிபதியான சனியால் பார்க்கப் படுகிறார். ஆக இவருக்கு மேற்படிப்புப் படிக்க Scholarship கிடைத்தது. இந்த ஜாதகத்தில் இன்னும் ஒரு வேடிக்கை இருக்கிறது. 7-ம் இடம் களத்திரஸ்தானம் அல்லவா? களத்திர ஸ்தானாதிபதி புதன் 5-ம் வீட்டில், 6-ம் வீட்டு அதிபனான சூரியனுடன் இருக்கிறார். கணவன் மனைவிக்குப் பிரிவை உண்டாக்கும் வீடு 6-ம் இடமல்லவா! ஏன்? 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. ஆக7-ம் வீடு திருமணத்தைக் கொடுத்தால் 6-ம் வீடு பிரிவைக் கொடுக்கும். இவர் திருமணமாகி மனைவியைப் பிரிய வேண்டிய நிலை இருந்தது. சூரியன் யார்? அவர் தகப்பனாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? ஆக இந்தப் பிரிவிற்கு அவர் தகப்பனாரே காரணமானார். வேடிக்கையைப் பார்த்தீர்கள? படிப்பிற்கு உதவி செய்த 6-ம் வீடு எப்படித் திருமண வாழ்க்கையில் விளையாடி விட்டது பார்த்தீர்களா?

ஒருகிரகம் சில காரியங்களுக்கு நல்லவராக இருப்பார். அதே சமயத்தில் வேறு சில காரியங்களுக்குத் தொந்தரவு கொடுப்பவராக இருப்பார். இதுதான் கிரகங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. நாம் இத்துடன் 4-ம் வீட்டை முடித்துக் கொள்வோம். அடுத்த பாடத்தில் 5-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:05 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 21


நாம் இப்போது 5-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். 5-ம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? 5-ம் வீட்டைப் பூர்வ பண்ணிய ஸ்தானம் என்று கூறுவர். போன ஜென்மத்தில் ஒருவர் புண்ணியம் செய்தாரா அல்லது பாபம் செய்தாரா என்பதை இந்த வீட்டைக் கொண்டு தீர்மானிக்கலாம். பாப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இவைகள் 5-ம் வீட்டில் இருக்குமேயாகில் அவர் போன ஜென்மத்தில் பாபம் செய்தவர் எனக் கூறலாம். இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தீயரோடு சேராத புதன் ஆகியோர் 5-ம் வீட்டில் இருப்பார்களேயானால் அவர் பாபம் செய்யாதவர் எனக் கூறலாம். ஆக ஒருவர் முற்பிறவியில் பாபம் செய்தவரா அல்லது புண்ணியம் செய்தவரா என்பதை 5-ம் வீட்டைக் கொண்டு மேலே கூறியவற்றிலிருந்து தீர்மானிக்கலாம்.

அடுத்தது 5-ம் வீட்டைப் புத்திர ஸ்தானம் என்றழைப்பர். ஒருவருக்குக் குழந்தை பிறக்குமா அல்லது பிறக்காதா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு தீ£ர்மானம் செய்யலாம். புத்திரஸ்தானத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் ஆகியோர் இருந்தால் புத்திர நாசம் என்று கூறுவர். 5-ம் வீட்டில் சனி இருந்தால் "தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவர். அதாவது அவருக்குக் குழந்தைகள் யோகம் இல்லை என்று பொருள். ஆனால் சிலருக்கு 5-ம் பாவம் கெட்டிருந்தும் குழந்தைகள் யோகம் இருக்கும். அதற்குக் காரணத்தைப் பின்னால் பார்ப்போம். பொதுவாக 5-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் காதல் விவகாரத்தைக் குறிப்பதும் இந்த 5-ம் வீடுதான். 7-ம் வீட்டு அதிபதி 5-ம் வீட்டில் இருந்தாலும், 5-ஆம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தாலும் ஒருவர் காதல் திருமணம் செய்வர் என்று கூறலாம். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கும் வீடு அல்லவா? 5-ம் வீடு காதல் விவகாரத்தைக் குறிப்பதனால் 7-ம் வீடும், 5-ம் வீடும் சம்மந்தப் பட்டால் அது காதல் திருமணத்தில்தான் முடியும்.

கலை சம்மந்தப் பட்ட துறையையும் குறிப்பது இந்த வீடுதான். சினிமா, டிராமா, பாட்டு, நடிப்புப் போன்ற கலைத்துறைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது. 10-ம் வீட்டு அதிபர் சுக்கிரனாக இருந்து அவர் 5-ஆம் வீட்டில் இருந்தால் அவர் கலைத்தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆக 5-ம் வீடு பொழுதுபோக்கு அம்சங்களையும் குறிக்கிறது எனத் தெரிந்து கொண்டீர்கள். 10-ம் வீடும் 5-ம் வீடும் சம்மந்தப் பட்டால் அவர் கலைத்தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:05 am

Speculation - துறையையும் குறிப்பது இந்த வீடுதான். லாட்டரி, ரேஸ், Cross-word Puzzle போன்றவற்றையும் குறிப்பது இந்த வீடுதான். ஒருவருக்கு லாட்டரியில் பரிசு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்றும் இந்த வீட்டைவைத்து அறியலாம். எப்படி? 5-ம் வீட்டதிபர் 2-ம் வீட்டில் இருந்தால் பரிசு கிடைக்கும் எனக் கொள்ளலாம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா? 2-ம் வீட்டதிபர் 5-ம் வீட்டில் இருந்தாலும் இந்த மாதிரிப் பரிசு கிடைக்கும் எனக் கொள்ளலாம். 5-ம் வீடு 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் பெரும் தொகை கிடைக்க வழியுண்டு. 11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? ஆகையால் பெரும்தொகை கிடைக்க வழியுண்டு. 2-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் சிறிய தொகைதான் கிடைக்கும். ஏனெனில் 2-ம் வீடு தனவரவைத்தான் காட்டுகிறது. 11-ம் வீடு லாபத்தைக் காட்டுகிறது. 2-ம் வீட்டிற்கும் 11-ம் வீட்டிற்கும் உண்டான வித்தியாசத்தை இப்போது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?

ஒருவருடைய புத்திகூர்மையையும் குறிப்பது இந்த வீடுதான். கிரகங்களில் புதனும், வீடுகளில் 5-ம் வீடும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது. ஒருவர் என்ன தெய்வத்தைத் தொழவேண்டும் என்பதையும் 5-ம் வீட்டை வைத்துக் கூறிவிடலாம். 5-ம் வீட்டில் என்ன கிரகம் இருக்கிறதோ அதை வைத்து நீங்கள் வழிபடவேண்டிய தெய்வத்தைக் கூறவேண்டும். எந்தெந்த கிரகத்திற்கு யார் அதிதேவதை என்று கீழே கொடுத்து இருக்கிறோம்.

கிரகம்அதிதேவதை
சூரியன்சிவன்
சந்திரன்பார்வதி
செவ்வாய்முருகன்
புதன்விஷ்ணு
குருதக்ஷ¢ணாமூர்த்தி
சுக்கிரன்லக்ஷ்மி
சனிசாஸ்தா
ராகுகாளி, துர்கை, கருமாரியம்மன்
கேதுவினாயகர், சண்டிகேஸ்வரர்


ஒருவருக்கு 5-ம் வீட்டில் கேது இருக்கிறது எனக் கொள்ளுங்கள்;அவர் வினாயகரை உபாசனை செய்ய வேண்டும். செவ்வாய் இருக்குமேயாகில் முருகனை வழிபட வேண்டும். இவ்வாறாக மேற்கூறிய தெய்வங்களை வழிபட வேண்டும். இவ்வாறாக 5-ம் வீட்டைக் கொண்டு ஒருவர் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று கூறலாம். மந்திர உச்சாடனம், வேதங்கள், மதநம்பிக்கை, இவற்றையெல்லாம் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். கேது ஞானகாரகன். 5-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அவருக்கு அவர் மதத்தின்மேல் தீவீர பக்தி இருக்கும். இப்போது 5-ம் வீட்டு அதிபர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால என்ன பலன் என்று அறிவோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:06 am

இலக்கினத்தில் இருந்தால் தெய்வ அனுக்கிரகம் அவருக்குக் கிடைக்கும். Providential Help என்று சொல்வார்களே அது அவர்களுக்குக் கிடைக்கும். இலக்கினத்தில் கெட்ட கிரகம் இருந்து அதனுடன் 5-ம் வீட்டதிபர் இருந்தால் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பார்.

2-ம் வீட்டில் இருந்தால் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைக்கும். சரி1 எப்போது கிடைக்கும்? 5-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும் குறிக்கும் தசா, புக்தி காலங்களில் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து பணவரவு கிட்டும். ஏனெனில் 5-ம் வீடு அரசாங்கத்தையும் குறிக்கிறது. ஒருவருக்கு 5-ம் வீட்டையும் 2-ம் வீட்டையும் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் புத்திரபாக்கியம் உண்டாகும். 5-ம் வீடு புத்திரத்தையும், 2-ம் வீடு குடும்பத்தையும் குறிப்பதனால் அப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். 5-ம் வீட்டதிபதியுடன் பாபகிரகங்களின் சேர்க்கை இருந்து 2-ல் இருந்தால் அப்போது பணவிரயம் ஏற்படும். ரேஸ், ஸ்பெகுலேஷன் துறையில் பணத்தைக் கோட்டை விடுவர். அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர்.

3-ம் வீடு சிறு பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீடு மதம் கோவில்களைக் குறிக்கிறது. ஆக இவர் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர். 3-ம் வீடு என்பது 5-ம் வீட்டிற்குப் 11-வது வீடு அல்லவா? புத்திர பாக்கியம் உண்டென்று கூறலாம். 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் நன்றாக இருக்கும் எனக்கொள்ளலாம். இதுதான் 5-ம் வீட்டதிபர் 3-ல் இருந்தால் பலன்.

5-ம் வீட்டதிபர் 4-ல் இருந்தால் 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். ஏனெனில் 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம் வீடல்லவா! 5-ல் சுபக்கிரகங்கள் இருந்தால்தான் அந்தவீட்டின் காரகத்துவம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இவரின் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பார் எனக்கொள்ளலாம். இவரின் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

5-ம் வீட்டதிபர் 5-ல் இருந்தால் தன் தொழிலில் திறமையுடன் இருப்பார். மந்திர சாஸ்த்திரங்களில் திறமைமிகுந்தவராக இருப்பார். இவரின் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். அரசாங்கத்தின் உதவி இவர்களுக்குக் கிட்டும். புத்திரர்களால் இவருக்கு உதவி கிட்டும்.

5-ம் வீட்டதிபர் 6-ல் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவு எனக் கொள்ளலாம். ஏனெனில் 6-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா! தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.

6-ம் இடம் தாய்மாமனைக் குறிக்கிறது அல்லவா! சிலர் தாய்மாமனின் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வர். புத்திரர்களால் நன்மைகளையோ அல்லது லாபத்தையோ எதிர்பார்க்க முடியாது.

7-ல் இருந்தால் காதல் திருமணம்செய்து கொள்வர். 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிக்கிறது அல்லவா? இந்த சேர்க்கை காதல் திருமணத்தைக் கொடுக்கும்.

8-ம் இடத்தில் இருந்தால் புத்திர சந்தான தோஷம் உண்டு. அதிர்ஷ்டக்குறைவானவர் என்று கூறலாம்.

9-ம் வீட்டில் இருந்தால் இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார். கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும். பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தருமம், நீதி ஆகியவற்றைக் கடைப் பிடித்து வாழ்க்கை நடத்துவார்கள்.

10-ம் வீட்டில் இருந்தால் புத்திர சந்தான விருத்தி ஏற்படும். சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? அங்கு 5-ம் வீட்டு அதிபதி இருப்பின் இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். இவருக்குப் புத்திரர்களால் உதவி கிடைக்கும். மேலே கூறியதுபோல் லாட்டரி, ரேஸ்போன்றவற்றிலிருந்து பணவரவு உண்டாகும். பொதுவாக 5-ம் இடத்தின் காரகத்துவங்கள் சிறந்து விளங்கும்.

12-ம் வீட்டில் இருந்தால் இதுவும் புத்திர தோஷம்தான். மனைவிக்கு அடிக்கடி கர்பச்சிதைவு ஏற்படும். உடல் நிலை பாதிக்கக்கூடும். எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.

நாம் 5-ம் வீட்டிற்குடையவர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். அடுத்த பாடத்தில் 5-ம் வீட்டின் மற்ற பலன்களைப் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:06 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 22


5-ம் வீடு புத்திர ஸ்தானம் என்று தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் பாபகிரகங்கள் இருப்பது நல்லதில்லை எனவும் தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் ராகு இருந்தாலும், 5-ம் வீட்டதிபர் ராகுவுடன் கூடினாலும் அது சார்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். அதாவது சர்பத்தின் சாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. கேது இருந்தால் பிராமணசாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. நாம் இதுவரை மாந்தியைப் பற்றி எழுதவில்லை; கேரள ஜோதிடத்தில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மாந்திக்கு நட்சத்திரங்களோ, தசா புக்திகளோ இல்லாததால் நாம் அவ்வளவு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; நாம் வரும் பாடங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அதைப் பற்றி விரிவாக எழுதுகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு மாந்தி 5-ம் வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். 5-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரனுடன் மாந்தியும் இருந்தால் ஸ்திரிஹத்தி தோஷமும், பசுஹத்தி தோஷமும் ஏற்பட்டு புத்திர உற்பத்தி தடைப்படும். அதே போன்று புத்திர காரகனான குருவுடன் மாந்தி சேர்ந்து இருந்தால் பிராமண சாபத்தால் புத்திர உற்பத்தி தடையுறும். சரி! இவ்வாறு இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? இவ்வாறு தோஷமுள்ளவர்கள் சேது ஸ்னானம், நாகப் பிரதிஷ்டை செய்தல், அரசமரப் பிரதஷ்ஷணம் செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவைகள்தான் இதற்குப் பரிகாரங்கள்.

பெண்ணில் ஜாதகத்தில் 5-ம் இடம்மிக முக்கியமானதாகும். ஏனெனில் குழந்தையைப் பெறப் போகிறவள் அவள்தான். அந்ட்த 5-ம் வீட்டிலே செவ்வாய் இருப்பதோ பார்ப்பதோ அவ்வளவு நல்லது இல்லை; செவ்வாய் ஆயுதங்களுக்கு அதிபதியல்லவா? ஆக குழந்தை பிறக்கும் சமயத்தில் ஆயுதம் உபயோகிக்க வேண்டியது இருக்கும். அதாவது இந்தக் காலத்திலே Scissorian - என்று சொல்லுகின்றார்களே அவ்வாறு குழந்தை பிறப்பு இருக்கும். பித்ருகாரகன் சூரியன். அவன் 5-ம் வீட்டில் நீச்சனாகி பாப கிரகங்களுடன் கூடியிருந்தால் பித்ரு சாபத்தால் குழந்தைகள் இருக்காது என்று "சராவளி" (ஒரு ஜோதிட நூல்). கூறுகிறது. சூரியன் 5-ம் வீட்டிற்குடையவனாகி இரண்டு பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ருசாபமாகும். 5-க் குடையவன் 9-ம் வீட்டிலும், 9-ம் வீட்டிற்குடையவன் 5-ம் வீட்டிலும் இருந்து பாபகிரகங்களின் சேர்க்கை பெற்றால் அதுவும் பித்ருசாபம்தான். 9-ம் வீடு பித்ரு ஸ்தானம் அல்லவா? ஆகவே பித்ருஸ்தானாதிபதி கெடக் கூடாது என்கிறது "சராவளி". இந்தப் பித்ரு சாபத்தைப் போக்க வேண்டுமென்றால் "கயா" வில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டுமென்பது விதி. பொதுவாக புத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்கள் இருப்பது புத்திர உற்பத்தியைக் குறைக்கும்.

நமக்குத் தெரிந்த ஜாதகத்தைக் கொடுக்கின்றோம். குறித்துக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:07 am

இலக்கினம்: மீனம்.

5-ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய 4 கிரகங்கள் இருக்கின்றன. இதில் சூரியன் 6-ம் வீட்டிற்கதிபதியாகி இயற்கையிலேயே ஒரு பாப கிரகம். ராகு மற்றொரு பாப கிரகம். சனியும் ஒரு பாப கிரகம். சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுப கிரகமாக இருந்தாலும் 3, 8-ம் வீடுகளுக்கு அதிபதியான தால் அவரும் ஒரு பாப கிரகமாகின்றார். இவ்வளவு பாப கிரகங்கள் இருப்பதனால் இவருக்குக் குழந்தைகள் இல்லை; இதுவரையில் நாம் 5-ம் வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி நாம் 6-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.

6-ம் வீடு என்றால் மறைவுஸ்தானம் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது மறைவு ஸ்தானம் மட்டும் அல்ல; அதற்குப் பல காரகத்துவங்கள் உண்டு. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். முதலில் அது வியாதிகளைக் குறிக்கும் வீடு. மனிதன் என்று இருந்தால் வியாதி என்றும் ஒன்று உண்டு. வியாதிகளைக் குறிக்கும் வீடு அதுதான். 12-ம் வீடு என்பது மருத்துவமனையைக் குறிக்கும். 6-ம் வீட்டு அதிபதி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். உதாரணமாக புதன் 6-ம் வீட்டு அதிபதியாகி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதனானவர் 6-ம் வீட்டையும், 12-ம் வீட்டையும் குறிக்கிறார். புதன் தசை, அல்லது புக்திகளில் ஒருவர் வியாதியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். சரி! ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்போது குணமடைவார்?

நாம் அதற்கும் பதில் சொல்ல வேண்டுமல்லவா? 11-ம் வீடு என்பது லாபத்தைக் குறிக்கிறது என்று நாம் கூறியிருந்தோம். அது வியாதி குணமடையும் காரகத்துவங்களையும் குறிக்கிறது. 12-ம் வீடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுதலைக் குறிக்கிறது. 12-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 11-ம் வீடு. 12--ம் வீட்டிற்கு எதிர்மறையான பலன்களைக் கொடுக்க வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. அதேபோல் 6-ம் வீடு வியாதியைக் குறிக்கிறது. 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வியாதி குணமாதலைக் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 5-ம் வீடு. ஆக 5-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. ஆக 6, 12-ம் வீடுகள் வியாதியும், அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் குறித்தால் 5-ம் வீடும் 11-ம் வீடும் வியாதி குணமாதலைக் குறிக்கிறது. 5-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அதேபோல் 11-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அடுத்ததாக 6-ம் வீடு என்பது நாம் செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கிறது. வேலைக்குச் செல்பவர் எல்லோரும் அடிமைத்தொழிலாளர்தான். ஆக 6-ம் வீடு நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. 6-ல் ஒரு கிரகம் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அதன் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும். 6-ம் வீட்டில் உள்ள ஒரு கிரகத்தின் தசா, புக்தி காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்குமா அல்லது உடல் நிலை பாதிக்கப் படுமா? எப்படிக் கூறுவது? 6-ம் வீட்டில் உள்ள கிரகம் இலக்கினமாகிய முதல் வீட்டுடன் சம்மந்தப் பட்டால்தான் உடல் நிலை பாதிக்கும். முதல் வீட்டுடன் சம்மந்தப் படவில்லையானால் உடல்நிலை பாதிக்காது. இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டில் உள்ள கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது சேர்ந்து இருக்கலாம். அவ்வாறு 6-ம் வீடும் 1-ம் வீடும் சம்மந்தப் பட்டால்தான் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்படும்.

அடுத்ததாக ஒருவரின் வேலையாட்களைக் குறிப்பதும் இந்த வீடுதான். 6-ம் வீட்டில் சுபர்கள் இருந்தால் வேலையாட்கள் மூலமாக ஒருவர் பயனடைவார். பாப கிரகங்கள் இருந்தால் அவர்களால் செலவுதான். பயன் இருக்காது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:07 am

6-ம் வீடு நமக்குப் பிரியமான சாப்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரின் 6-ம் வீட்டில் சனியிருந்தால் போஷாக்கற்ற உணவுவகைகளை உட்கொள்ளுவார். போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது. சுக்கிரன் இருக்குமேயாகில் வகை, வகையான உணவுவகைகளை உட்க்கொள்ளுவர். ஒரளவிற்கு மதுபானத்திலும் பிரியம் இருக்கும். சந்திரன் ஒரு நீர்க்கிரகம் அல்லவா? நீர்சம்மந்தப்பட்ட உணவுவகைகளை விரும்பி உட்கொள்ளுவார். அதுவும் 6-ம் இடம் நீர்ராசிகளாகிவிட்டால் கேட்க்கவே வேண்டாம். மதுபானப் பிரியராக இருப்பார். அதைத் தவிர பாட்டில்களில்வரும் குளிர்பானங்களையும் விரும்பிச் சாப்பிடுவார். குரு இருக்குமேயாகில் நல்ல உணவுவகைகளை உட்கொள்ளுவார். செவ்வாய் இருந்தால் தேவைக்கு அதிகமாக உட்கொள்வர். இவ்வாறாக கிரகங்களின் குணாதிசயங்களை வைத்துப் பலன் சொல்லவேண்டும்.

6-ம் வீடு கடன் என்றும் கூறுவார்கள். 6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பாரேயானால் ஒருவருக்குக் கடன் தொல்லைகள் அதிகம் இருக்கும். 6-ம் வீட்ட்டின் அதிபதி 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கொடுத்த கடன் திரும்பி வரும். அல்லது உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடிவரும். 6-ம் வீடு 12-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் நாம் வீங்கியகடனைக் கொடுப்போம். அதாவது 6-ம் வீடு கடனைக் குறிக்கிறது. 12-ம் வீடு செலவைக் குறிக்கிறது. 6-ம் 12-ம் சேர்ந்தால் நாம் வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுப்போம்.

சரி! நமக்கு வங்கியிலிருந்து பணம் கடனாகப் பெறவேண்டும். எப்படிப் பதில் சொல்வது? 7-ம் வீடு நாம் ஒருவருடன் செய்யும் Transaction-ஐக் குறிக்கிறது. அதாவது 7-ம் வீடு வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுப்பதென்றால் வங்கியின் பணம் குறைகிறது அல்லவா? நமது பணம் இருப்புக் கூடுகிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வங்கியின் பண இழப்பையும் 11-ம் வீடு அல்லது 2-ம் வீடு நாம் பணம் பெறுதலையும் குறிக்கிறது. 6-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்ட்டிலோ அல்லது 2-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டிலோ இருக்குமேயாகில் ஒருவருக்கு வங்கியிலிருந்து பணம் கிடைக்குமெனக் கூறலாம். நாம் இத்துடன் 6-ம் வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம்.

மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:07 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 23


ஆறாம் வீட்டைப் பற்றி ஓரளவிற்கு போன பாடத்தில் எழுதி இருந்தோம். மீதியை இந்தப் பாடத்தில் எழுதுவோம். 6-ம் வீடு நம்முடைய எதிரிகளைக் குறிக்கிறது அல்லவா? அதில் பாப கிரகங்கள் இருப்பார்களேயாகில் எதிரிகள் ஓரளவிற்குக் குறைவாகவே இருப்பர். நல்ல கிரகங்கள் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பர். 6-ம் வீட்டில் சூரியன் இருந்தால் ஒருவர் அரசியலில் பெயர் வாங்க முடியும். 6-ம் வீடு எதிராளியின் தோல்வியைக் குறிக்கும் வீடல்லவா? சூரியன் அரசியலுக்குண்டான கிரகம். 6-ம் வீட்டிலுள்ள சூரியனை சனி பார்த்தால் இருதய சம்மந்தமான நோய் வரக் கூடும். 6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர். 6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர். 6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும். குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில் ஈடுபடுவர். சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் பிறபெண்களுடன் தொடர்பு இருக்கும். சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். 6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர். ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர். கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.

6-ம் வீட்டிற்கதிபதி இலக்கினத்தில் இலக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால் அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும். 6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும். வரப்போகும் வியாதிகளைப் பற்றி Medical Astrology- என்ற தலைப்பில் பார்ப்போம். இப்போது இத்துடன் 6-ம் வீட்டை முடித்துக் கொள்வோம். அடுத்த வீடான 7-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:08 am

7-ம் வீட்டிற்குப் பல காரகத்துவங்களுண்டு. அதில் தலையானது விவாஹம். அதனால் தான் 7-ம் வீட்டை களத்திரஸ்தானம் என்பார்கள். முதலில் நாம் திருமணத்தைப் பற்றி விவாதிப்போம். திருமணம் என்றால் என்ன? அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். திருமணமென்பது ஒரு சட்டபூர்வமான பிணைப்பு. அதாவது கணவன் - மனைவி என்ற உறவு சட்டபூர்வமாக்கப்படுகிறது. இந்த சட்டபூர்வமான பிணைப்பைக் குறிப்பது 7-ம் வீடு. இந்த திருமணம் என்ற பந்தத்தால் குடும்பத்தில் ஒரு நபர் கூடுகிறார். ஒருவராக இருந்தவர் மனைவியால் இருவராகிறார். இந்த நபர் அதிகரிப்பதைக் குறிப்பது 2-ம் வீடு. அந்த தம்பதியினர் திருமணத்தால் கூடி மகிழ்கின்றனர். அந்த தம்பதியினர் கூடி மகிழ்தலைக் குறிப்பது 11-ம் வீடு. ஆக 2, 7, 11-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்கள் தசா, புக்திக் காலத்தில்தான் ஒருவருக்குத் திருமணம் ஆகிறது. முதலில் நாம் திருமணத்தைப் பற்றி விரிவாக விவாதித்த பின்னர் மற்ற காரகத்துவங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நமது கிரந்தங்கள் ஒருவருக்குத் திருமணம் ஆவதற்கு என்னென்ன கிரக சேர்க்கைகளை கூறுகின்றனவென்று பார்ப்போம்.

1. சந்திரனும், சுக்கிரனும் fruitful signs - என்று சொல்லப் படுகின்ற கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம் ஆகியவற்றில் இருத்தல்.

2. 7-ம் வீட்டின் அதிபதி மேற்கண்ட வீடுகளில் இருத்தல்.

3. குரு அல்லது சுக்கிரன் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.

4. இலக்கினாதிபதியும் 7-க்குடையவனும் சேர்ந்து இருத்தல்.

5. சுப கிரகங்கள் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.

இவ்வாறாகப் பலகிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் சொல்லுகின்றன. அதாவது திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 வீட்டில் நல்ல கிரகங்கள் அல்லது அந்த வீட்டதிபர்கள் நல்லவருடன் சேர்க்கை பெற்றிருப்பின் திருமணம் ஆகுமென்பது உறுதி.

திருமணம் தாமதமாவதற்கான காரணங்கள்

1. சனி 1 அல்லது 5 அல்லது 7-ம் வீட்டில் இருத்தல். சனி இலக்கினத்தில் இருந்தால் 7-ம் பார்வையாக 7-ம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா? அதனால் திருமணம் தாமதம் ஆகும்.

2. 5-ம் வீட்டில் சனி யிருந்தால் அவர் திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 ஆகிய வீடுகளை பார்க்கிறார். ஆகவே திருமணம் தாமதம் ஆகிறது.

3. சனி களத்திரமான 7-ம் வீட்டில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகத்தான் செய்யும்.

4. களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் இருத்தல் திருமணத்தைத் தாமதப் படுத்தும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:08 am

இதைத்தவிர 7-ம் வீடு விட்டு, விட்டுச் செல்லும் பயணத்தைக் குறிக்கிறது. 3-ம் வீடு குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு நீண்ட பயணத்தையும் குறிப்பதுபோல் 7-ம் வீடு விட்டு விட்டுச் செல்லும் பயணத்தையும் குறிக்கிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் ஒருவர் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். இது பயணத்தைக் குறிக்கிறது. இந்த மாதிரிப் பயணம் செய்வதை 3-ம் வீடும் 9-ம் வீடும் குறிக்கும். எப்படி? 3-ம் வீடு சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர்தலைக் குறிக்கிறது. 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது. சரி! ஒருவர் நேராக டெல்லி செல்லாமல் 4 அல்லது 5 இடங்களைப் பார்த்துவிட்டு டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். அப்போது 7-ம் வீடு சம்மந்தப் பட்டு இருக்கும். சிலர் ஊர் ஊராக தெய்வ தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு அப்போது 3, 7, 9-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரங்கள் நடந்து கொண்டிருக்கும். அப்போதுதான் அந்த மாதிரி ஊர், ஊராகப் பயணம் செய்ய முடியும்.

7-ம் வீடு மாரகத்தையும் குறிக்குமென நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். ஒருவருக்கு ஆயுள் முடியும்போது 7-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது 7-ல் உள்ள கிரகங்களின் தசையோ, புக்தியோ நடந்து கொண்டிருந்தால் அவர் மரணத்தைக் கொடுப்பார். இதைப் போன்று பல காரகத்துவங்கள் 7-ம் வீட்டிற்கு இருக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:08 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 24


7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.

* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.

* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.

* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.

* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.

* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?

* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.

* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?

* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.

* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.

* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!

* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:09 am

7-ம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருப்பது விரும்பத்தக்கது அல்ல; ஒருவர் ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் அதற்கு "புனர்ப்பூ" என்று பெயர். இது ஒரு தோஷம் ஆகும். இது கல்யாணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். நிச்சயம் ஆனால்கூட திருமணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். சனியும் புதனும் 7-ம் வீட்டில் இருந்தால் ஒரு விதவையோ அல்லது மனைவி இறந்த ஆண்மகனோ வாழ்க்கைத் துணைவராக அமைவர். 7-ம் வீடு பார்களால் பாதிக்கப்பட்டு அங்கு புதனும் இருப்பாரேயாகில் 2 தாரம் அமையும். பொதுவாக 7-ம் வீட்டில் 6-ம் வீட்டு அதிபதியோ அல்லது 8-ம் வீட்டு அதிபதியோ இருப்பது அமைதியான வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கிறது. அதேபோண்று 6-ம் வீட்டு அதிபதியும் 7-ம் வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அவர்கள் மனத்தாங்கலினால் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. திருமண வாழ்க்கை சோபிப்பது இல்லை.

ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். கன்னியா இலக்கினம். இலக்கினத்தில் சனியும் ராகுவும்; 3-ம் வீடான விருச்சிகத்தில் சூரியன், சுக்கிரன், புதன்; 4-ம் வீட்டில் செவ்வாய்; 7-ம் வீட்டில் குரு; 7-ம் வீட்டில் சந்திரன், ராகு. 7-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டில் இருக்கிறார். 7-ம் வீட்டிற்கு எதிமறையான பலன்களைக் கொடுக்கும் வீடல்லவா? 8-ம் வீட்டில் அதிபதியான் செவ்வாய் தனுசிலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 6-ம் வீட்டின் அதிபதியான சனியும் இலக்கினத்திலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 7--ம் வீட்டிற்கு இவ்வளவு பாதகம் இருப்பதனால் அவர்கள் திருமண வாழ்வு அமைதியாக இல்லை; பிரிய நேரிட்டது.

7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டின் சம்மந்தமில்லையென்றால் திருமணவாழ்க்கை மிக மோசமாக இருப்பதில்லை; 8-ம் வீடு சம்மந்தப் பட்டால் சண்டை பூசலுடன் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.

பெண்கள் ஜாதகத்தில் 7-ம் வீட்டைப் போலவே 8-ம் வீடும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் 8-ம் வீட்டை மாங்கல்ய ஸ்தானம் என்றழைப்பர். 7, 8 வீடுகளில் செவ்வாய், ராகு, சனி ஆகியவை மூன்றும் இருக்குமேயாகில் அப்பெண்விதவையாவாள். செவ்வாய் மட்டும் 7-ல் இருந்து சுபர்களின் பார்வை இல்லையென்றால் அந்தத் தம்பதியினர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

7-ம் வீட்டின் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகமென்று மேலே எழுதியிருந்தோம். 7-ம் வீட்டின் அதிபதி 5-ம் வீட்டில் இருந்தால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையைக் கொடுப்பதில்லை; 7-ம் வீட்டில் அதிபதி 5-ம் வீட்டிலும் 5-ம் வீட்டு அதிபதி 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை யோகமாகும். யோகமென் றால் அதிர்ஷ்டம் என்று அர்த்தமில்லை. மரண யோகத்தையும் யோகமென்றுதான் குறிப்பிடுகிறோம். யோகமென்றால் கிரகச் சேர்க்கை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம். இவர்கள் திருமண நாளிலிருந்து சண்டைதான் போட்டுக் கொள்கிறார்கள். திருமணம் நடந்து 2 - வருஷம்தான் ஆகிறது. அடிதடி - சண்டை; போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் போய்விட்டது. இப்போது இருவரும் Divorce - க்கு மனுச் செய்துள்ளார்கள். ஜாதகத்தைப் பாருங்கள்.

ரிஷபம் இலக்கினம்; 4-ம் வீட்டில் (சிம்மத்தில்) சந்திரன், கேது; 5-ல் செவ்வாய்; 6-ம் வீட்டில் ( துலாத்தில்) குரு, சுக்கிரன் ; 7-ல் சூரியன், புதன்; 10-ல் (கும்பத்தில்) ராகு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:09 am

7-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் புதனுடைய வீட்டிலும் அதாவது கன்னியிலும், 5-ம் வீட்டின் அதிபதி புதன் 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை ஆகி யிருக்கிறார்கள் பார்த்தீர்களா! இந்த தோஷமானது அவர்களை விவாகரத்துவரைக்கும் கொண்டுபோய் விட்டது. இதில் இன்னொன்று கவனிக்க வேண்டிய விஷயம். புதனானவர் 7-ம் வீட்டுடன் நிறைய சம்மநதப் பட்டு விட்டார். 7-ம் வீட்டில் இருப்பதோடு 7-ம் வீட்டின் அதிபதியும் புதன் வீடான கன்னியில் இருக்கிறார். ஆகவே 7-ம் வீடானது புதனுடன் நிறைய சம்மந்தப் பட்டு விட்டது. புதன்தான் இரட்டைக் குணம் உடைய வராயிற்றே. ஆக இரண்டு திருமணத்தைக் கொடுக்கும் யோகத்தை அளிக்கிறார். 7-ல் சூரியன் இருந்தாலும் திருமணவாழ்க்கை சுகப்படாது என்ற கருத்தும் உண்டு. இனி 7-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

சூரியன் : திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும்.

சந்திரன் : காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார்.

செவ்வாய் : திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும்.

புதன் : பாபருடன் இருந்தால் 2-வது திருமணம் உண்டு. வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர்.

குரு : நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சுக்கிரன் : மனதுக்கு இனிமையான வாழ்க்கை அமையும். காமம் மிகுந்தவர்.

சனி : திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.

ராகு : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள். ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.

கேது : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.

இதுவரையில் 7-வது வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி 8-ம் வீட்டைப், பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:09 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 25


இதுவரையில் 7 வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 8-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கலாம். பொதுவாகவே 8-ம் வீடு என்பது துஸ்தானம் என்று கூறுவார்கள். 8-ம் வீட்டை வைத்து ஒருவரின் ஆயுள், தோல்விகள், துன்பங்கள், அகெளரவமான செயல்கள், தடைகள், அபகீர்த்தி ஆகியவற்றைக் கூறலாம். பெண்களுக்கு 8-ம் வீடென்பது மாங்கல்யஸ்தானம் ஆகும். ஒருபெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா அல்லது விதவையாக ஆவாளா என்றும் 8-ம் வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் ஆயுளைக் கூறும்போது 8-ம் வீட்டுடன் இலக்கினத்தையும், 3-ம் வீட்டையும் பார்த்துத்தான் கூறவேண்டும். அப்போதுதான் சரியாக வரும்.

இவைகளைத்தவிர மூதாதையர் சொத்துக்கள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். மற்றும் உயில்கள், இன்ஷ¥ரன்ஸ், பிராவிடண்ட் பண்டு (Provident Fund), Gratuity, ஆகியவைகள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.

ஒருவருக்கு மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் இலக்கினாதிபதி 8-ல் இருந்தாலோ அல்லது 8-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ அவரின் மரணத்திற்கு அவரே காரணமாகிறார். ஒருவர் ஜாதகத்தில் 3-ம் வீட்டு அதிபர் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 3-ம் வீடு என்பது என்ன? 3-ம் வீடு குறுகிய பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே அவர் பயணம் செய்யும் போது மரணம் சம்பவிக்கலாம். 12-ம் வீட்டின் அதிபதி 8-ல் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது அயலூரினையோ அல்லது அயல் நாட்டைனையோ அல்லது மருத்துவமனையையோ குறிக்கிறது அல்லவா? ஆகவே அந்த இடத்தில் மரணம் சம்பவிக்கலாம். 9-ம் வீட்டுக்காரர் 8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட பயணம் செய்யும்போதோ அல்லது அயல் நாட்டிலோ மரணம் சம்பவிக்கலாம்.

மரணத்திப் பற்றிக் கூற முதலில் இவர் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல; இதற்குப் பல கணித முறைகள் இருக்கின்றன. அவைகளை நாம் இப்போது சொல்லிக் கொடுக்க இயலாது. பாடம் முழுவதையும் முடித்தபின் அவைகளைப் பார்ப்போம். 8-ம் வீடு ஜல ராசியில் வருமானால் ஒருவருக்கு நீரால் மரணம் வரக் கூடும். நெருப்பு ராசியாக வருமேயானால் நெருப்பால் அபாயமுண்டு. துர்மரணமும் சம்பவிக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:10 am

பொதுவாக சனியானவர் எதையுமே மெதுவாகக் கொடுக்கக் கூடியவர். அவர் 8-ல் இருந்தால் ஆயுள் தீர்க்கமென்று கூறலாம். மரணமென்று வரும்போது மிகவும் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் கொல்வார். சிலர் வெகு நாட்கள் படுத்த படுக்கையாக இருப்பர். அவர்களுக்கெல்லாம் சனி 8-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருப்பார். குரு 8-ல் இருந்தால் மரணம் இயற்கையானதாக இருக்கும். கஷ்டப் படாமல் இறப்பர். செவ்வாய் இருந்தால் அது துர்மரணமாக இருக்கும். விபத்தில் காலமாகலாம். அதனால்தான் 8-ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று கூறுகிறார்கள். பெரியம்மையால் முன்பெல்லாம் மரணமடைவார்கள் தெரியுமா? 8-ம் வீட்டுடன் செவ்வாய் சம்மந்தப் பட்டால் அம்மை நோயால் மரணம் சம்பவிக்கக் கூடும். ஒருவருக்கு நெருப்பு ராசி 8-ம் வீடாக வருகிறது எனக்கொள்ளுங்கள். அங்கு செவ்வாய் இருந்தால் செருப்பினாலோ அல்லது கலகங்களினாலோ அல்லது வெடிமருந்துகளினாலோ மரணம் சம்பவிக்கும். அதே வீடு ஜலராசியாகி அங்கு செவ்வாய் இருந்தால் நீரில் மூழ்கி மரணம் சம்பவிக்கும். பொதுவாக ஆயுளைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள C.G.ராஜன் அவர்கள் எழுதிய "ஜாதக ராஜ பாவ இருவாஷி - பாகம் நெ. 1 என்னும் ஆயுள் பாவம்" என்ற புத்தகத்தைப் படிக்கவும். நாம் எல்லவற்றையும் இங்கு எழுதிவிட முடியாது. அதில் விரிவாக மரணத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

மரணம் என்பது ஒருவரின் வாழ்வின் முடிவில் வருவது. அதற்குமுன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே 8-ம் வீட்டின் மற்ற காரகத்துவங்களையும் பார்ப்போம். நாம் வியாபாரம் செய்கின்றோம் என்று கொள்ளுங்கள். ஒருவரிடம் வாங்கி மற்றொரு வருவரிடம் விற்பனை செய்கிறோம். நாம் வாங்குபவரையும், நம்மிடம் வாங்குபவரையும் குறிப்பது 7-வது வீடு. அவருடைய தனஸ்தானத்தைக் குறிப்பது 7-க்கு 2-ம் வீடான 8-ம் வீடு. 8-ல் நல்ல கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றும் 8-ல் பாப கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் வளமற்று இருக்குமென்றும் கூறலாம். நீங்கள் ஒருவருடன் கூட்டு வியாபரம் செய்ய விரும்புகிறீர்கள் எனக் கொள்ளுங்கள். உங்கள் பாகஸ்தரைக் குறிப்பது 7-ம் வீடு. அவருடைய தனத்தைக் குறிப்பது 7-க்கு இரண்டாம் வீடாகிய 8-ம் வீடு. 8-ம் சுபக்கிரகங்கள் இருந்தால் அவர் இந்த கூட்டு வியாபாரத்தால் நன்மை பெறுவார் எனக் கொள்ளலாம். கெட்ட கிரகங்கள் இருந்தால் இந்த வியாபாரத்தால் அவருக்கு அனுகூலமில்லை எனக் கூறிவிடலாம்.

8-ம் வீடு என்பது இந்த பிரபஞ்சத்திலுள்ள மறைந்திருக்கும் உண்மைகளைக் குறிக்கிறது. அங்கு குருவோ அல்லது சனியோ ( இரண்டும் வேதாந்தத்தைக் குறிக்கின்ற கிரகங்கள்) இருக்குமேயானல் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உண்மைகளைக் கண்டறிய முற்படுவார். புதனும் அப்படித்தான். புதன் மிகவும் புத்திசாலித்தனமான கிரகம் அல்லவா? 8-ல் புதனிருக்க அவரும் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய முற்படுவார். ஜோதிட சாஸ்த்திரமும் பிரபஞ்ச ரகசியம் தானே. அதில் உள்ள ரகசியங்களையும் கண்டறிய முற்படுவார்.

4-வது வீடென்பது ஒருவரின் பூர்வீக சொத்தைக் குறிக்கிறது. அதில் சுபக்கிரகங்கள் இருந்தால் பூர்வீக சொத்துக் கிடைக்கும். எப்படி? ஒருவர் ஜாதகத்தில் 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 8-ம் வீடென்பது பூர்வீக சொத்தையும் குறிக்குமென்று கூறினோம். 9-ம் வீட்டிற்கு 8-ம் வீடு எது? 4-ம் வீடல்லவா? ஆகவே 4-ம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால் ஒருவருக்கு பூர்வீக சொத்துக் கிடைக்குமென்று கூறலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:10 am

9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? தகப்பனார் தன் பணத்தை Shares, Securities போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது Investments - களைக் குறிக்கிறது. தகப்பனாரின் Investments - களைக் குறிப்பது எந்த வீடு? 9-ம் வீட்டிற்குப் பன்னிரண்டாம் வீடு. அதாவது 8-ம் வீடு. ஆக 8-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால் ஒருவர் தன் தகப்பனார் செய்து வைத்திருந்த Investments அவருக்குக் கிடைக்குமென்று கூறலாமல்லவா? ஆக 8-ம் வீட்டை துஸ்தானமென்று கூறி ஒதுக்குதல் எவ்வாறு பொருந்தும்? 8-ம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தால் அந்த கிரகம் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறது என்று கூறி அந்த கிரகம் அந்த தசாகாலங்களில் நல்லதைச் செய்யாது என்று கூறுவார்கள். அந்த வாதம் சரியல்ல என்பது நமது வாதம். அதேபோல் ஒருவருக்கு 8-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் அவருடைய பிதுராஜித சொத்துக்கள் அழியக் கூடும்.

தாயாரைக் குறிப்பது 4-ம் வீடு. 5-ம் வீடென்பது லாட்டரி, ரேஸ், Speculation துறை ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் முன்பே எழுதி இருக்கிறோம். 4-ம் வீட்டிற்கு 5-ம் வீடு என்பது எது? 8-வது வீடு. ஆக ஒருவர் ஜாதகத்தில் 8-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 8-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது ஒருவரின் தாயாருக்கு லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணம் கிடைக்க வழியுண்டு. ஆக 8-ம் இடம் என்பது துஸ்தானமென்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 8-ம் வீட்டைப் பற்றிய மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:11 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 26


எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.

2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.

3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.

4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.

5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.

6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.

7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.

9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:11 am

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகரின் இலக்கினம்


கன்னி; 4-ம் வீடான தனுசில் சந்திரன், புதன், சுக்கிரன். 5-ம் வீட்டில் கேது, சூரியன். 9-ம் வீடான ரிஷபத்தில் செவ்வாய், சனி. 11-ம் வீடான கடகத்தில் ராகு. 12-ம் வீடான சிம்மத்தில் கேது. தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டில 8-ம் வீட்டிற்குடைய செவ்வாயும், 6-ம் வீட்டிற்குண்டான சனியும், இரண்டு பாபிகள் இருப்பதைப் பாருங்கள். தகப்பனார் இவருக்கு விரோதி என்றே கூறலாம். இவருடைய நலனில் சிறிதும் அக்கரை காட்டாதவர்; தன்னுடய வெறுப்புக்களைத் தவிர வேறெதையுமே தன் மகனுக்குக் காட்டாதவர். இந்த ஜாதகர் முன் ஜென்மத்துப் பாபம் இப்படி ஒரு தகப்பனார் இவருக்கு வாய்த்திட்டார். 9-ம் வீடு மேற்படிப்பைக் குறிக்கிறது அல்லவா? மேற்படிப்பும் பாதிக்கப்படும். 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? நீண்ட பயணத்தின்போது பிரச்சனைகள் உறுவாகும். 9-ம் இடம் தர்மஸ்தானம் அல்லவா? அவர் செய்யும் தர்மங்கள், உதவிகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.

10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.

11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.

12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum