புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
56 Posts - 50%
heezulia
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
12 Posts - 2%
prajai
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
9 Posts - 2%
jairam
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10புதுக்கோட்டை மாவட்டம் Poll_m10புதுக்கோட்டை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 2:22 pm

மாவட்டங்களின் கதைகள் - புதுக்கோட்டை மாவட்டம்( pudukkottai district)
புதுக்கோட்டை மாவட்டம்

மன்னராட்சியின் சுவடுகளைத் தாங்கிய வரலாற்று நகரம்.
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் புதுக்கோட்டை
பரப்பு 4,663 ச.கி.மீ.
மக்கள்தொகை 14,59,601
ஆண்கள் 7,4,300
பெண்கள் 7,35,301
மக்கள் நெருக்கம் 314
ஆண்-பெண் 1,015
எழுத்தறிவு விகிதம் 71.12
இந்துக்கள் 12,94,101
கிருத்தவர்கள் 66,432
இஸ்லாமியர் 97,723



புவியியல் அமைவு

அட்சரேகை: 90.50-100N
தீர்க்கரேகை: 780.25-790.15E

இணையதளம்

http://www.pudukkottai.nic.in/
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrpdk@tn.nic.in
தொலைபேசி: 04322-221663
அமைவிடம்


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக வட்டங்கள்
புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78.25' மற்றும் 79.15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9.50' மற்றும் 10.40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சி மாவட்டமும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன. புதுகை, ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது. நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதே, பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிரக்கம் கொண்டதாக இருக்கும்.அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள நார்த்தாமலை குன்றுகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பிரான்மலை தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை.இம்மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மட்டும் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்வழியாக விவசாயம் செய்யப்படுகின்றது.பலாப்பழம்உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது.குறிப்பாகவடகாடு,மாங்காடு,அனவயல்,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,நெடுவாசல்,புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும்.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்-2: புதுக்கோட்டை அறந்தாங்கி
தாலுகாக்கள்-11: இலுப்பூர், மணம் மேல் குடி, கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆவலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கரம்பக்குடி, பொன்னமராவதி
நகராட்சிகள்-2: புதுக்கோட்டை, அறந்தாங்கி
ஊராட்சி ஒன்றியங்கள்-13: அறந்தாங்கி, கந்தவர்க்கோட்டை, ஆவுடையார் கோவில், கரம்பக்குடி, பொன்னமராவதி, மணல்மேல்குடி, திருவரன் குளம், புதுக்கோட்டை, அரிமனம், குன்னாந்தார் கோவில், திருமயம், விராலிமலை.

எல்லைகள்: இதன் வடக்கு மற்றும் மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், வடகிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: துவக்கத்தில் களப்பிரர் , பாண்டியர் (கடுங்கோன் பாண்டியன்), கொடும்பாளூர் வேளிர், பல்லவர், சோழர் ஆட்சிகளுக்கு உட்பட்டிருந்தது. பிற்பாடு மாலிக்காபூர் படையெடுப்பும், அதையடுத்து உருவான மதுரை சுல்தானியமும், விஜயநகர ஆட்சியும், புதுக்கோட்டையை தமது ஆதிக்கத்திற்குட்படுத்தின.

17-ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஆட்சிக்கு வந்த தொண்டைமான்களின் ஆட்சி, இந்திய சுதந்திரம் வரைத் தொடர்ந்தது.

1948- மார்ச் 4-ம் தேதி புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைப்பட்டது. (திருச்சி மாவட்டத்துடன்).

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முன்னால் புதுக்கோட்டைப் பகுதியும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, 1974, ஜனவர் 14-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.
பிராமிக் கல்வெட்டு
பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.
"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).
சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.
தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின்பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள்மற்றும் ஹய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர்.
சங்ககாலம்
சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.
"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.
சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில்குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில்முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது.
இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.
புதுக்கோட்டையில் ரோமாபுரி
திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,
மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.


குறிப்பிடத்தக்க இடங்கள்

அறந்தாங்கி: புதுக்கோட்டை அடுத்த பெரிய நகர். இங்குள்ள சிதைந்த கோட்டைகள் வரலாற்றச் சிறப்பு வாய்ந்தன.

ஆவுடையார் கோவில்: இங்குள்ள ஆத்மநாத சுவாமி கோவிவின் ஆளுயரச் சிலை புகழ்பெற்றது. கருங்கல் கூரையும், மரவேலைப்பாடுகளும் கலை எழில் மிகுந்தவை.

ஆவூர்: ஜான் வெனான்டியஸ் ப்ச்செட் பாதிரியாரால் 1547-ம் ஆண்டு கட்டப்பட்டபழம்பெரும் தேவாலயம். தமிழறிஞர் வீரமாமுனிவர் இங்கு இறைப்பணி புரிந்துள்ளார்.

காட்டுபாவா பள்ளிவாசல்: புதுக்கோட்டையில் இருந்து முப்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளிவாசல். இஸ்லாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இங்கு தொழுவது தனிச்சிறப்பு. உர்ஸ் திருவிழா பிரபலமானது.

சித்தன்னவாசல்: உலகப்புகழ்பெற்ற ஓவியங்கள் நிறைந்த குகைக்கோவில். இதன் சுற்றுப்பறுத்தில் ஆதிகால இடுகாடுகளும், புதைக்கபடா முதுமக்கள் தாழிகளும் உள்ளன.

அரசு அருங்காட்சி சாலை: புவியியல் விலங்கியல், மானுடவியல், கல்வெட்டிய், வரலாற்று ஆவணங்கள், ஓவியங்கள் என ஏராளமான சேகரிப்புகள் அடங்கிய இது திருக்கோகர்ணத்தில் உள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த அற்புதமான சிலைகளும், வெண்கலப் கலைப்பொருட்களும் காண்போரை வியப்படையச் செய்யும்.

திருமயம்: புதுக்கோட்டையிலிருந்து 19கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலே இந்தியாவில் பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப் பெரிய குகைக்கோயில் என்று சிறப்பைப் பெறுகிறது.

இருப்பிடமும், சிறப்புகளும்:

o சென்னையிலிருந்து 390கி.மீ. தொலைவு
o இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய யூனியனில் இணைந்த முதல் சமஸ்தானம்
o சித்தன்ன வாசல் ஓவியங்கள் புகழ்பெற்றவை.
o குடுமியான் மலைக்கல்கவெட்டுகள் இசைக்கலையை போற்றுகிறது.
o கொடும்பாளூர், விராலிமலை, குடுமியான்மலை, நார்த்தாமலை, புதுக்கோட்டை, ஆவுடையார் கோவில் சிறப்பு மிக்க இடங்கள்.
o திருமயம், ஆவுடையார் கோவில் கலாச்சார செழுமை கொண்ட பகுதிகள்.
o காருகுறிச்சியில் 500-ற்கும் மேற்பட்ட ரோம தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது இந்தோ - ரோம வாணிபத்திற்கான சான்றாக விளங்குகிறது.
o நல்லூர் ஸ்ட்ரக்ச்ரல் ஃபேப்ரிகேஷன், மாத்தூர் சால்வென்ட் எக்ஸ்டாரக்ஷன் யூனிட்.


http://www.thangampalani.com/2011/11/story-of-pudukkottai-district-tamil.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 11, 2012 3:26 pm

சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த ஒளியமங்கலம்` எங்கள் ஊரில் இருந்து வெகு அருகில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக