புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
417 Posts - 48%

290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for கோஹினூர்_வைரம்

Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் F94a4c30-c4a4-11ed-a1d6-1187ddf8eadd

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த #கோஹினூர் வைரம், லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் வெற்றியின் சின்னமாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில் லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள் இடம்பெறவுள்ளன.

ஜூவல் ஹவுஸ் கண்காட்சியில் முதன்முறையாக சர்ச்சைக்குரிய #கோஹினூர்_வைரம் உட்பட சில விலையுயர்ந்த பொருட்களின் தோற்றத்தைப் பற்றிய வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்காட்சியில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது. லண்டன் டவரின் குடியுரிமை ஆளுநரான ஆண்ட்ரூ ஜாக்சன், "இந்த அற்புதமான சேகரிப்பைப் பற்றிய சிறந்த புரிதலை இந்த முயற்சி வழங்கும்" என்று நம்புவதாகக் கூறினார்.

கோஹினூர் வைரம்

கண்காட்சியில் கோஹினூர் வைரத்தின் வரலாறு `வெற்றியின் சின்னம்` என்ற பெயரில் பொருட்கள் மற்றும் காட்சி திரையிடல் வாயிலாக விளக்கப்படவுள்ளது.

பிரிட்டன் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தின் மணிமுடியை இந்த வைரம் அலங்கரிக்கிறது. அதற்கு முன்பாக முகலாய பேரரசர்கள், ஈரான் `ஷா`க்கள், ஆப்கானிஸ்தான் மன்னர்கள், சீக்கிய மகாராஜாக்கள் ஆகியோர் வசம் இந்த வைரம் இருந்தது.

1849ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது ஆங்கிலோ-சீக்கிய போரில் வெற்றிபெற்ற பின்னர் கிழக்கு இந்திய கம்பெனி கோஹினூர் வைரத்தைக் கைப்பற்றியது. பின்னர் விக்டோரியா மகாராணியிடம் இந்த வைரம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் கிரீடத்திலேயே இந்த வைரம் உள்ளது.

105.6 காரட் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கோஹினூர். பிரிட்டனின் அரச கிரீடத்தை அலங்கரிக்கும் இந்த வைரம் மிகவும் சர்ச்சைக்குரிய நகையாகும்.

இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் எழுதப்பட்ட பதிவுகள் 1628ஆம் ஆண்டு முதல் கிடைக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் இது பதிக்கப்பட்டது.

1739ஆம் ஆண்டு இரானின் பேரரசர் நாதிர் ஷா டெல்லிக்கு படையெடுத்து வந்து முகலாயர்களை தோற்கடித்தார். இதன் பிறகு கோஹினூர் நாதிர்ஷாவின் கைக்கு சென்றது. நாதிர்ஷா அதை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றார்.

இந்த விலைமதிப்பற்ற கல் ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு அரச குடும்பங்களிடம் சென்றன என்றும் பின்னர் இறுதியாக 1813ஆம் ஆண்டில் அது மகாராஜா ரஞ்சித் சிங்கின் கைகளுக்கு வந்தது என்றும் ஸ்மித்சோனியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

மே மாதம் நடைபெறவுள்ள முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை கமீலா அணியமாட்டார் என்றும் மாறாக ராணி மேரியின் கிரீடத்தை அணிவார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கிரீடத்தில் உள்ள இந்த வைரத்தைத் தங்களிடம் அளிக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான், இரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன.

பிற ஆபரணங்கள்

Black Prince's Ruby உட்பட வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நகைகள் கிரீடத்தில் இருந்து கிரீடங்களுக்கு எவ்வாறு இடம்பெயர்ந்தன என்றும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Black Prince's Ruby மறைந்த 2ம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த நகைகளில் ஒன்றாகும். இம்பிரியல் ஸ்டேட் கிரீடத்தில் இது இடம்பெற்றுள்ளது. தென்னாப்ரிக்காவில் 1905இல் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் வைரமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

எலிசபேத் மகாராணியின் இறப்புக்குப் பின்னர் இந்த வைரத்தை ஆப்ரிக்காவிடமே திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் அந்நாட்டைச் சேர்ந்த பலரால் வைக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் சின்னம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அரச அரண்மனைகளில் முடியாட்சியின் வரலாற்றின் பொது வரலாற்றாசிரியர் சார்லஸ் ஃபாரிஸ் கிரீட ஆபரணங்கள் குறித்துப் பேசுகையில், பிரிட்டிஷ் முடியாட்சியின் மிகவும் சக்திவாய்ந்த சின்னங்கள் என்றும் ஆழமான மத, வரலாற்று, கலாசார முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கோபுரத்தைப் பராமரிக்கும் சுயாதீன தொண்டு நிறுவனமான ஹிஸ்டாரிக் ராயல் பேலஸ்ஸால் கடந்த நான்கு ஆண்டுகளாக மறு விளக்கக் காட்சி தயாரிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி பார்வையாளர்களுக்காக மே 26 அன்று திறக்கப்படுகிறது.

பிபிசி தமிழ்:
சிவா
Fri Aug 08, 2014 1:44 am

Search in: பொதுஅறிவு
Topic: கோஹினூர் வைரம்
Replies: 7
Views: 2065
Topics tagged under கோஹினூர்_வைரம் on ஈகரை தமிழ் களஞ்சியம் ZJCr7Qj

மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோஹினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் #கோஹினூர்_வைரம் மட்டும்தான்.

கோஹினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது. அதனை இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உரிமை கேட்கின்றன. பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்கள் ஏகபோகச் சொந்தம்  கொண்டாடுகின்றன. எங்க பாட்டன் சொத்து எங்க பாட்டிச்  சொத்து என்று சிலர் கட்சி கட்டுகிறார்கள். அருமையான சீரியல் நாடகம். இந்த நாடகத்தைப் பதினெட்டுப் பட்டி உலக நாடுகளும், டிக்கெட் வாங்காமல் முன் வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றன.

மகா அலெக்ஸாண்டர், கஜ்னி முகமது, ஜெங்கிஸ் கான், நாடிர் ஷா, பாபர் போன்ற மாபெரும் மண்ணாசைப் பிரியர்கள் எல்லாம் இந்தியா மீது படையெடுத்ததற்கு மூலகாரணம் இந்தக் கோஹினூர் வைரம்தான். அழுத்தமாகச் சொன்னால், கொலை வாசம் வீசிய கோஹினூர் வைரம். சும்மா அள்ளி விடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையைத் தவிர வேறொன்றும்தெரியாது. முதலில் படியுங்கள். அப்புறம்  சொல்லுங்கள்.

கோஹினூர் வைரம் யாருக்குச் சொந்தம் ஆகிறதோ அவர் உலகத்தை ஆள்வார் எனும் அய்தீகம் இன்றும் புரையோடிக் கிடக்கிறது. என்ன அப்பேர்ப்பட்ட பெரிய அய்தீகம். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். இந்த வைரம் கிடைத்த பிறகுதானே ஆங்கிலேயர்கள் முக்கால்வாசி உலகத்தைத் தங்கள் பக்கம் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இதற்கு ஒரு சாபக்கேடும் இருப்பதாகக் கதை சொல்கிறார்கள். இதை வைத்திருக்கும் ஆண்கள் மௌனமாக இறந்து போவார்கள் அல்லது கண் குருடாகிப் போவார்கள். அவ்வளவுதான்!   பெண்களாக இருந்தால் அவர்களுடைய உறவுகள் சிதைந்தும் போகலாம். இதுதான் அந்தச் சாபம். இணையத்தில் இந்த மாதிரி கதை சொல்ல ஆள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. அப்புறம் என்ன! அதையும் கேட்டுப் பார்ப்போம்.

இதற்கு இங்கிலாந்து எலிசபெத் மகாராணியாரின் குடும்பத்தைச் சொல்லலாம். இப்போது கோஹினூர் வைரம் அவர் தலையில்தானே இருக்கிறது. இளவரசி டயானா இறந்து போனார். இளவரசர் சார்ல்ஸ்-கமிலா காதல் விவகாரம். அவருடைய அக்காவின் விவாகரத்து. எலிசபெத் அரசியாரின் பெரியப்பா ஒர் அமெரிக்க நடிகையை மணந்து இங்கிலாந்து அரச முடியைத் தூக்கி வீசியது. விக்டோரியா மகாராணியாரின் காமக் களிபோகங்கள் வெளி யுலகத்திற்குத் தெரிய வந்தது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெரிந்தும் ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி. ஆசை யாரை விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் விக்டோரியா மகாராணியார் சூட்டிக் கொண்ட கிரீடத்தின் தலையாய வைரம், இந்தக் கோஹினூர் வைரம். வழிவழியாக வருகிறது. நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது.

#கோஹினூர்_வைரம் உலகப் புகழ் பெற்ற உன்னதமான வைரம். இந்த வைரத்திற்காகப் பல பயங்கரமான போர்கள்நடந்துள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. பல கோட்டைகள் இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் வாயில்லா ஜ“வன்கள் அழிந்துள்ளன. பல்லாயிரம் அந்தப்புர பெண்கள், போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்க்கும் தீவனங்களாகத் தூக்கி வீசி இறைக்கப் பட்டனர். கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் தூக்கிப் பசியால் வாடித் திரியும் தெருநாய்களுக்குப் போட்ட கதைதான் அந்தப்புரத்து அழகிகளின் கதையும்! எல்லாம் கோஹினூர் வைரத்தை அடைய வேண்டும் எனும் ஆதங்கத்தில் வந்தவை.

இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தப் போர் அட்டூழியங்களுக்கும் கோஹினூர் வைரத்திற்கும் நேரடியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. மண்ணாசைப் பிடித்தவர்கள் செய்த கொடூரங்களுக்கு பாவம் கோஹினூர் வைரம் என்ன செய்யும். அதைத்தான் நானும் கேட்கிறேன்.  பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

#கோஹினூர் வைரத்தின் அருமை பெருமைகளைப்பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால், அதன் வேதனையான பின்னணியைப் பற்றி கண்டிப்பாகக் கேள்விப் பட்டிருக்க முடியாது.பல கோடி ஆண்டுகள் பூமிக்குள்ளே புதைந்து கிடந்த கலைச் செல்வம் கோஹினூர் வைரம். ஏறக்குறைய 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த கோல்கொன்டா நிலப்பகுதியில் கிடைக்கப் பெற்றது. வெகு காலமாக அதற்கு முகவரி இல்லை. அப்படிப்பட்ட ஒரு வைரம் இருப்பதாக யாருக்கும் தெரியாது. இருந்தாலும் பாருங்கள் வெளிநாட்டவர்   தெரிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காலத்து ஒற்றர்களைச் சும்மா சொல்லக்கூடாது.

கோல்கொன்டா என்ற பெயர் ஞாபகத்திற்கு வரலாம். 1950-60களில் ரேடியோ மலாயாவில் வாரத்திற்கு ஒருமுறை நேயர் விருப்பம் வரும். அதைக் கேட்க தோட்டமே திரண்டு நிற்கும். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அது ஒரு கனாக்காலம். அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும். அந்தக் கோல்கொன்டா தோட்டத்திற்கு இந்தியாவின் கோல்கொன்டா சாம்ராஜ்யத்தின் பெயர் அப்போது வைக்கப் பெற்றது. நான் பிறந்து வளர்ந்த டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும்.

இப்போது அந்தக் கோல்கொன்டா தோட்டம் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அந்த அளவுக்கு பல தோட்டங்கள் அத்திம்மேடுகளாகி விட்டன.

Back to top