புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
251 Posts - 52%
heezulia
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
18 Posts - 4%
prajai
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
2 Posts - 0%
Barushree
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_m10கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி.பி.1800 களில் நாஞ்சில் நாடு


   
   
சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
http://www.thasaku.blogspot.in

Postசசிதங்கசாமி Thu Oct 25, 2012 11:48 pm

கி.பி.1800களில் ஒரு நாட்டில் பெண்கள் மேலாடை அணியாமலேயே வாழ்ந்தார்கள் என்றால், அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நாடு, எங்கோ எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ இல்லை. நம் தமிழ்நாட்டில்தான் இருந்தது. அதுதான் நாஞ்சில் நாடு.
வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்… என்று கேரளத்தின் ‘அக்மார்க்’ அடையாளங்கள் நிறைய.இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது.
இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதியும் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.
‘நாங்கள் தோளில் சீலை அணிய உரிமை வேண்டும்…’ என்று அவர்கள் போராடத் துவங்க… பல ஆண்டுகளுக்கு பிறகு அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றிக்காக ரத்தம் சிந்திய, மானத்தை தியாகம் செய்த உயிர்கள் ஏராளம்… ஏராளம்…!
தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த கொடுமைகளை அனுபவித்தனர் – தாங்கிக்கொண்டனர்.இவர்கள் எங்கு சென்றாலும், ஆதிக்க ஜாதியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக தங்கள் மேலாடையை அணியக்கூடாது என்பது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி ஆட்சி செய்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கண்டிப்பான உத்தரவு.
‘சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பை திறந்து காட்டுவது என்பது, அந்த நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது’ என்கிறார், ‘திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை’ என்ற நூலை எழுதிய ஆங்கிலேயரான சாமுவேல் மேட்டீர். அதை மீறி மேலாடை அணிந்தால் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதற்கு பயந்தே, மேலாடை இன்றி நடமாடினர், ஒடுக்கப்பட்ட ஜாதியினர்.
ஆனாலும், எத்தனை நாட்களுக்குத்தான் மேலாடை அணியாமல் இருப்பது? என்று மனம் புழுங்கிய அவர்களில் சிலர் போராடத் துவங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அய்யா வைகுண்டர் போன்றோர் குரல் கொடுத்தனர். அந்த தெம்பில் ஆங்காங்கே கலகங்களும் எழுந்து அடங்கின.தோளுக்குச் சீலை உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த சமஸ்தான மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ‘அவர்கள் அப்படித்தான் ஆடை அணியாமல் இருக்க வேண்டும்; மீறி அணிந்தால், அவர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன்… கொலை கூட செய்யலாம்…’ என்று அரக்கத்தனமாக வாய்மொழியாக உத்தரவிட்டான் மன்னன்.
அதன்விளைவு… மார்பை மறைக்க முயன்ற பெண்கள் ஆடை கிழித்து அவமானப்படுத்தப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாஞ்சில் நாட்டில் உள்ள நெய்யாற்றின்கரை, நெய்யூர், கல்குளம், கோட்டாறு, இரணியல் போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது.
அய்யா வைகுண்டரும் இந்த போராட்டத்தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தன்னை காண வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் ஆணையிட்டார்.
 அன்றைய காலக்கட்டத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பு பெண்கள், தோளுக்கு சீலை அணியக்கூடாது என்று இருந்த வழக்கம் பற்றி தனது அகிலத்திரட்டிலும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
“பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்போடாதே என்றடித்தானே சிவனே அய்யா…” என்று குறிப்பிடும் அய்யா,
“என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா….” என்று,
நாடார் குல பெண்கள் இடுப்பில் குடம் வைத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் கூறியதையும் பதிவு செய்கிறார்.
இதற்கிடையில், மேலை நாட்டில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ பரப்பாளர்கள், நாஞ்சில் நாட்டில் நிலவிய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.
கி.பி.1780களிலேயே அவர்கள் நாஞ்சில் நாட்டிற்குள் நுழைந்துவிட்டாலும், தோளுக்கு சீலை போராட்டம் தீவிரம் அடைந்தபோது, அதற்காக போராடியவர்களுக்காக தங்கள் சுயநல குரலை எழுப்பினர்.
சமஸ்தான உத்தரவை எதிர்த்து தோளுக்கு சீலை அணிந்த பெண்கள்...‘தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும். திறந்த மார்போடு திரியாமல் தோளுக்கு சீலை அணிந்து கொள்ளலாம்.
மேலும், உங்களது பொருளாதார – கல்வி வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். உண்பதற்கு சுகாதாரமான – ஆரோக்கியமான உணவும் எங்கள் நிறுவனங்கள் சார்பில் தருகிறோம்…’ என்று கூறிய அவர்களது ஆசை வார்த்தைகள், தாழ்த்தப்பட்டோர் பலரது மனதை மாற்றியது.
ஏராளமானபேர் தங்களை கிறிஸ்தவர்களாக்கிக் கொண்டார்கள். தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்தும் கொண்டனர். அவர்களை பின்பற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்த பிற பெண்களும் தோளுக்கு சீலை அணிய ஆரம்பித்தனர்.
இது, ஆதிக்க ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. ‘நீங்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்…’ என்று கூறி, அவர்களை பொது இடங்களில் அவமானப்படுத்தினர். மதம் மாறிய பெண்கள் அணிந்த மேலாடையை கிழித்து எறிந்தனர்.
இந்த பிரச்சினை சென்னை மாகாண நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் என்பதால் ஒரு சார்பாகவே தீர்ப்பு கூறப்பட்டது.
1847 மார்ச் 19-ம் தேதி ஒரு தீர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என்று தீர்ப்பு கூறியது சென்னையில் உள்ள ஆங்கிலேயே நீதிமன்றம். இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் கிளர்த்து எழச் செய்தது. ஆங்காங்கே கலகங்கள் நடந்தன.
சான்றோர் என்கிற நாடார் இனத்தில் உயர் வகுப்பினர் இருந்தனர். இவர்கள் நல்ல வசதியோடு வாழ்ந்ததால், இவர்களது பெண்கள் தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்துக் கொண்டனர்.
அதேநேரம், அந்த இனத்தில் மேலும் சில உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவில் உள்ளவர்களே பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டனர் (இன்றும்கூட இந்த பாகுபாடு இந்த சமூகத்தில் உள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், சம அந்தஸ்தில் உள்ள குடும்பங்களில்தான் பெண் கொடுப்பதும், எடுப்பதுமாக உள்ளனர்). இந்த சமூகத்தில் அவர்களே சமஸ்தான கொடுமைகளுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டனர். இவர்களைப் போன்று, தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர்.
‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் மட்டும்தான் எங்கள் மானம் காக்கப்படுமா?’ என்று பொங்கியெழுந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நாடார் இன உயர் வகுப்பினரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இவர்கள் மெஜாரிட்டியாக இருந்த பகுதிகளில் ஆதிக்க ஜாதியினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
நிலைமை மோசமானதால் சென்னை மாகாண கவர்னர் இந்த பிரச்சினையில் தலையிட்டார். அதைத்தொடர்ந்து, 1859 ஜூலை 26-ந் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘தோளுக்கு சீலை அணியாத பெண்கள் இனி அதை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், மேல் ஜாதிப் பெண்களைப் போன்று ஆடை அணியக்கூடாது…’ என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதைத்தொடர்ந்து தோளுக்கு சீலை போராட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனாலும், இந்த சுதந்திர உரிமையைப் பெற நாஞ்சில் நாட்டு வரலாற்றில் படிந்த ரத்தக்கறையை மட்டும் யாராலும் அகற்ற முடியாது.

நன்றி:- நெல்லை விவேகநந்தா
( மற்றும்)
ஆந்தை ரிப்போட்டர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2013 10:28 pm

சசிதங்கசாமியின் பகிர்வு தேவையானதே ! தோள்சீலைப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் எதிரானதல்ல ! மொத்தத் தமிழினத்திற்கும் எதிரானதுதான் ! போராட்டம் முடிந்துவிட்டாலும் இந்த நினைப்பு நம்மிடம் இருப்பது நல்ல தமிழ்ச் சுமுதாயத்தை உருவாக்கும் ! -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக