புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
62 Posts - 57%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
104 Posts - 59%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 7 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

First topic message reminder :

1 என்னுடைய பசி இந்தியாவின் பசி


காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.

உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:18 am

62. பெரிதாக காணப்படும் பொருள் எனக்கு பெரிதல்ல


1932 ஆம் வருடம் காந்தியடிகள் எரவாடா சிறையில் இருந்தபொழுது லார்டு ‘ஷேங்கி’ற்கு எதையோ பற்றி ஒரு கடிதம் எழுதினார். அநேக நாட்கள் கழித்து மகாதேசாய் காந்தியடிகளிடம், ‘பாபு’ ‘ஷேங்’கின் கடித்த்திற்கு இப்பொழுது பதில் வரவேண்டும்.’என்றார்.

‘எந்தக்கடிதம்?” எனக் கேட்டார் அடிகள்.

அதுதான், தாங்கள் அந்தக்கட்டுரையை பற்றி எழுதினீர்களே” என்று நினைவூட்டினார் மாகதேவ தேசாய்.

”காந்தியடிகளுக்கு இப்பொழுதும் நிறைவு வரவில்லை. ”அவருக்குக் கடிதம் எழுதினோமா? எப்போது?” என்றார்.

வல்லபாய் சொன்னார், ”ஐயோ, பாபு! நீங்கள் இப்படி மறந்தால் வேலை எப்படி நடக்கும்? நாம் விடிதலை பெற வேண்டியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.”

மகாதேவ தேசாய் மிகவும் விரிவாக எடுத்துரைத்த பிறகு காந்தியடிகளுக்கு அதைப்பற்றி ஒருவாறாக ஞாபகம் வந்தது. ”ஏதோ கொஞ்சம் நினைவு வருகிறது” என்றார் அடிகள்.

அடிகளின் நினைவாற்றல் மிகவும் அதிகம் என்றுசொல்வர் எல்லோரும் ஆனால் இந்தக்கடித்தைப் பற்றி மறந்து போனது மிகவும் ஆச்சரியமாயிருந்தது. ஆகையால் இரவில் தூங்கச் செல்லும்போது மகாதேவ தேசாய் கேட்டார். ”பாபு, தங்களுக்கு எத்தனையோ சின்னஞிசிறு விஷயங்களும் நினைவில் இருக்கின்றனவே என நான் வியப்படைவேன். நீண்ட விவாத்த்திற்குப் பிறகு யோசித்து எழுதின இக்கடித்த்தை எப்படி மறந்தீர்கள்? யாரோ தாவூத் என்பவருக்கு எழுதின கடிதம் அந்தக் குறிப்பிட்ட ஆளிடம் இருக்கிறது என்று இன்று கூடச் சொன்னீர்களே; மிகச்சிறிய இதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் ஷேங்கின் கடித்த்தை மட்டும் மறந்திருக்கிறீர்கள். இது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

காந்தியடிகளின் பதில்: ”என்னைப்பொறுத்தவரையில் இவ்விரு கடிதங்களின் விஷயங்கள் தனித்தனியாகும்? எந்த ஒரு விஷயத்திலாவது ஒருவனுடைய நலன் இருந்தால் எளிதில் அதை நான் மறப்பதில்லை.”

மகாதேவ தேசாய்: ”ஆம்; நினைவாற்றல் என்பதற்கு விளக்கமே, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை நினைவில் நிறுத்தியும் மற்றவைகளை மறந்து விடுவதும்தான்!

காந்தியடிகள், ‘ஆம், ஷேங்கின் கடிதத்திற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதை எழுதச் சொல்லிவிட்டு மறந்து விட்டேன். ஆனால் ஒரு மனிதரின் பெருத்த நன்மையைப் பற்றி எழுதியிருந்ததால் தாவூதின் கடிதம் நினைவில் இருக்கிறது. உண்மை என்னவென்றால் பெரிதாகக் காணப்படும் பொருள் எனக்குப் பெரியாதாய்த் தோன்றுவதில்லை. ஆனால் பலசிறு விஷயங்கள் நன்மை பயப்பதால் பெரிதாகப்படுகின்றன. மாகபாரதமாகவே தோன்றுவதில்லை. சம்ரானிலிருந்து தொடங்கி இதுநாள் வரை எந்தப் பணியையும் நானாகத் தேடிச்சென்றதில்லை. அவ்வேலைகள் அனைத்தும் தாமாகவே என் மடியில் வந்து விழுந்தன. அதே போன்று எல்லாப் பணிகளும் தொடர்ந்து இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி வைக்கிறார்.

63. மணமகள் எங்கே?


ஒரு முறை காந்தியடிகள் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் சாந்தி நிகேதனத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்காகச் சென்றார். கவியரசர் ரவீந்திரநாத் தாகூரும் பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவருமாக காந்தியடிகளை வரவேற்க மிகச்சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார்கள். காண்போர் வியப்படைந்து உதட்டில் கை வைத்துக் கொள்ளும் அளவிற்கு கலையழகு துதும்பும் வண்ணம் காந்தியடிகள் தங்குமிடத்ஐக் கண்கொள்ளாக் காட்சியாக அழுகுப்படுத்தினார்கள்.

காந்தியடிகள் வந்தார். ஜவஹர்லால், மாகதேவ தேசாய் கல்கத்தா காதி சங்கத்தைச் சேர்ந்த சதிஷ்பாபு ஆகியோர் உடன் வந்திருந்தனர். குருதேவர் தானே காந்தியடிகளின் நெற்றியில் குங்குமத் திலகமிட்டு, அடிகளை நங்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றார். காந்தியடிகள் தான் தங்கும் இடத்தின் வனப்பைக் காண்ணோட்டமிட்டார்; பின்னர் வயா விட்டு உரக்கச் சிரித்தார். ”இது எல்லாம் என்ன? கடைசியில் என்னை இந்த மணமக்களின் அறைக்கு ஏன் அழைத்து வந்தீர்கள்?” எனக் கேட்டார்.

குருதேவரும் நகைச்சுவையாகப் பேசுவதில் சளைத்தவர் அல்ல. ”இந்த இடம் ஓர் கவியினுடையது என்பதைத் தாங்கள் மறவாதீர்கள்” என்றார்.

‘நல்லது, அப்படியென்றால் மணமகள் எங்கே?’
என்று கேட்டார் காந்தியடிகள்.

கவி: ”நம் இதயங்களில் குடிகொண்டிருக்கும் எழிற் கன்னி சாந்தி நிகேதன் தங்களை மனமார வரவேற்கிறாள்.”

காந்தியடிகள்: ”உண்மையைச் சொல்லப் போனால், இந்தப் பொக்கைவாய் கிழவனை இந்தப் பிச்சைக்காரனை அவள்மற்றுமொருமுறை கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள்”

குருதேவ்: ”இல்லை, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எங்களுடைய இளவரசி என்றும் சத்தியத்தையே காதலித்து வந்திருக்கிறாள். கடந்த பல ஆண்டுகளாக அதையே வணங்கிப் பூசித்தும் வந்திருக்கிறாள்.”

காந்தியடிகள்: ”அப்படியென்றால் இந்தப் பொக்கைவாய்க்கிழவனுக்கும் இங்கு ஏதோ கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.”

நெடுநேரம்வரை இம்மாதிரி நகைச்சுவைப் பேச்சு நடந்து கொண்டிருந்தது; நாளும் கழிந்தது. மறுநாள் காலை குருதேவர் விருந்தாளிகளின் வசதி, தேவைகளை மேற்பார்வையிட்டுக்கொண்டே விருந்தினர் விடுதிக்குச் சென்றார். அவர்கள் எல்லோரும் எப்போதோ எழுந்து த்த்தம் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதைப்பார்த்தார். விபாடு நடந்து முடிந்திருந்தது. சதீஷ்பாபு, சிறுவர் - சிறுமியர்கள் அடங்கிய ஒரு குழுவினருக்கு கை வில்லில் பஞ்சடிக்க சொல்லிலக் கொடுத்துக் கொண்டிருந்தார் பஞ்சடிக்கும் சத்தம் இன்னிசையைப் போன்றிருந்தது. இந்த இனிமையான இசை குருதேவருக்குப் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அடுத்து காந்தியடிகள் தங்கியிருந்த அறைக்குச் சென்றவுடன் திகைப்படைந்து விட்டார். அறையில் செய்யப்பட்டிருந்த ஒப்பனைகளை முற்றிலும் கலைக்கப்பட்டிருந்தன. காந்தியடிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஊஞ்சல் வெளியே வெயிலில் கிடத்தியிருந்தது நாலாபக்கமும் பைல் காகிதங்களும் இராட்டைகளும் இருந்தன. ‘ஹரேராம் ஹரேராம்! இந்த அழகு கொழித்த மணமக்களின் அறைக்கு என்ன வந்துவிட்டது? மணமகள் எங்கு இருக்கவேண்டுமோ அங்குதானே இருக்கிறாள் ஆனால் மணமகன் ஓடிவிட்டார் போலும் என்று நகைச்சுவைத் துதும்ப குருதேவர் கேட்டார்.

குருதேவரின் வரவுக்காக்க காத்திருந்த காந்தியடிகள் உரக்கச் சிரித்துவிட்டு ”பல்லில்லாத இக்கிழவனை மணமகள் விரும்பமாட்டாள் என்று நான் முதலிலேயே தங்களுக்கு எச்சரித்தேன்!” என்றார்.

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக