புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
32 Posts - 42%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
2 Posts - 3%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
1 Post - 1%
jothi64
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
398 Posts - 49%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

First topic message reminder :

1 என்னுடைய பசி இந்தியாவின் பசி


காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.

உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:13 am

42. கடமை தவறேல்


அந்த நாட்களில் காந்தியடிகள் தினந்தோறும் தன் மூன்றாவது மகன் ராமதாஸூக்கு ஒரு மணி நேரம் குஜராத்தி சமஸ்கிருதம், ஆங்கிலம முதலியவைகளை சொல்லிக்கொடுப்பது வழக்கம். சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் இந்து சமயத்தின் முதல் புத்தகம், ‘எங் இந்தியாவின்’ கட்டுரைகள், இன்னும் வேறு பொருள்களும் இடம் பெற்றிருந்தன. இம்மாதிரி வகுப்பு நடைபெறும் நாட்களில் ஒரு நாள் தேசிய காங்கிரஸ் மகாசபை கூட்டம் ஆமதாபாத்தில் நகரவையின் புதிய கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. காந்தியடிகள் காலை நான்கு மணிமுதல் இரவு பத்து மணிவரை தலைவர்களுடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பார். ஒரு நாள இரவு ஒன்பது மணிக்கு வந்து ‘பா’விடம் ‘ராமன் எங்கே?’ எனக்கேட்டார்.

‘அவன் களைத்துத் தூங்கி விட்டான. அவனை இப்பொழுது எழுப்ப வேண்டாம்’ என்று ‘பா’ கூறினாள்.

‘ஆனால் தினமும் ஒரு மணி நேரம் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது வழக்கமாயிற்றே. அவன் இன்று படிக்க மறுத்தால் பிறகு நான் தூங்கிவிடுகிறேன்.’ என்றார் அடிகள்.

அன்றும் முறை தவறவில்லை. ராமதாஸை எழுப்பி சிறிது நேரம் அவனைப்படிக்க வைத்த பிறகே அடிகள் தூங்கினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:13 am

43. இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்கு சொந்தமாயிற்றே


காந்தியடிகளின் நெருங்கிய நண்பர் ஒருவருக்குக் கல்யாணம் நடைபெற்றது. பணகார நண்பர் ஒருவர் மணமகனுக்கு விலையுயர்ந்த நகை ஒன்றைப் பரிசளிக்க விரும்பினார். மணமகன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பணக்கார நண்பர் காந்தியடிகளிடம் வந்து ‘இவன் இப்படியே பிடிவாதம் பிடிக்கிறான். பரிசாக்கொடுப்பதை வாங்குவதில்லை’ எனக் குறைபட்டுக்கொண்டார்.

காந்தியடிகள் அந்த நகையைப் பார்த்தார். அதன் சிறப்பைப் கூறிப்பாராட்டினார். ஆனால் மணமகன் விரும்பாதபோது அப்பரிசை அளிக்கக்கூடாது என்ற அவருடைய கருத்தையும் கூறினார்.

பாவம், செல்வந்தர் மிகவும் வருத்தப்பட்டார். என்ன செய்ய முடியும்? கடைசியில், ‘சரி நல்லது, என் நகையைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்றார்.

‘இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்குச் சொந்தமாயிற்றே, திருப்பித் தரமுடியாது’ என்றார் காந்தியடிகள்.

பாவம்! பணக்கார்ர் ஏமாற்றமடைந்தவராய் அடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது, வெளியிலும் சொல்லிக்கொள்ளமுடியாது. அரைமனதுடன் திரும்பினார்.

ஆனால், அடிகள் அவருடைய மனதை நன்றாக அறிந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ‘நகையைக் கொண்டுபோகலாம். அதன் பெறுமானத்ஐப் பணமாக ஹரிஜன் நிதிக்கு அளித்து விட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மறுநாள் நகைக்குப் பதிலாக அதன் பெறுமானத்தைக் காட்டிலும் கூடுதலான தொகைக்கு ஒரு ‘செக்’ கிடைத்துவிட்டது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:13 am

44. சொல், நான் எவ்வளவு கீழ்படிந்துள்ளவனாய் இருக்கிறேன்


1947 - ம் வருடம் பீகாரிலுப் வகுப்புவாத்த் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கு அமைதியை நிலைநாட்ட காந்தியடிகள் சென்றார். ஒருபக்கம் இவ்வேலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் தம் அன்றாட வேலைகளையும் கவனித்து வந்தார். மனுகாந்தியும் அவருடன் தான் இருந்தாள். அவ்வப்போது அவளைப் பரீட்சிப்பதிலும் அடிகள் தவறுவதில்லை. அன்று கீதையின் மூன்றாவது, ஐந்தாவது அத்தியாயங்கள் வாய்மொழியிலும், எழுதுவதிலும் தேர்வு நடத்தினார். இரண்டிலும் அவள் வெற்றிப் பெற்றாள். காந்தியடிகள் மனுவிடம், உன்னைக்காட்டிலும் என்க்குத்தான் அதிக மகிழ்ச்சி; ஏனென்றால் தேர்வில் நான் வெற்றிப்பெற்றேன் என்றார்.

மனு, ‘உழைப்பு என்னுடையது, ஆனால் பெருமையை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களே!’ என்றாள்.

காந்தியடிகள் சிரித்துக் கொண்டே, ‘ஆனால் நான் இழிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் அல்லவா? உனக்கோ அப்படி இல்லை’ என்றார்.

இம்மாதிரி நகைச்சுவையுடன் பேசிக்கொண்டே காந்தியடிகள் உடனே வங்காளப் பாடத்தை எழுத உட்கார்ந்துவிட்டார். அதை சகோதர் நிர்மல் பாபுவிடம் காண்பித்தார். சற்று நேரத்திற்கு முன் தேர்வாளராக இருந்தவர் சிறிது நேரத்திற்குள் மாணவராக மாறிவிட்டார்.

முதல் நாள் இரவு 2.30 மணிக்கு எழுந்த அவர் அதன் பின் தூங்க முடியவில்லை. மக்களுக்குத்தாம் நினைப்பதை எப்படிப் புரியவைப்பது என்பதையே யோசித்துக்கொண்டிருந்தார் அவர். இருந்தபோதிலும் அவர் களைத்துப் போகவில்லை. எல்லா வேலைகளும் முறைப்படி நடந்தன. திருவாளர்கள் ஷா நவாஸ் கான், கான் அப்துல் காபார்கான் முதலியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அன்று விசேஷமாக மனுவைப்பற்றிப் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. குடும்பத்தைப்பற்றிய முழுவரலாறும் கூறிமுடித்தார்.

பின்னர் உடம்பு தேய்த்து விடும்போது, ‘கான் சாஹிபுக்கும், ஷா நவாஸூக்கும் எல்லா விஷயமும் தெரியப்படுத்துவது என்னுடைய கடமை. ஆனால், அவர்களோ மிகுந்த பக்தியுடையவர்கள். என்னிடத்தில் உள்ள கெட்ட குணங்களைக் காண விரும்புவதே இல்லை. நேரம் கிடைத்த போதேல்லாம் நீ அவர்களிடம் பேசினால் உனக்கும் உலக விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். என் மீது நிறைந்த பக்தியுடையவர்கள் காட்டிலும், என் குறைகளைக் காண்பவர்களை நான் பெரிதும் விரும்புகிறேன். இதில் தான் என்னுடைய நன்மை இருக்கிறது. இதனால், நான் வழி தவறிப்போகிறேனோ என்று எண்ணிப்பார்க்க வாய்ப்பு ஏற்படுகிறது’ என்று மனுவிடம் சொன்னார்.

காந்தியடிகள் இரவு 2.30மணியிலிருந்து விழித்துக் கொண்டிருந்தார் என மனுவிற்குத் தெரியும். ‘தாங்கள் இப்பொழுது ஓய்வெடுப்பது நல்லது. 2.30 மணியிலிருந்து விழித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு உலக அறிவைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை வேறு மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்த பாவம் எல்லாம் எனக்கே சாரும்’ என மனு கூறினாள்.

காந்தியடிகள் இதற்கு இசைந்தார். இருபது நிமிடங்கள் வரை தூங்கினார். பிறகு விழித்தவுடன், ”பார், உன் ஆலோசனைப்படி நடந்ததால் இப்பொழுது நான் புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக இருக்கிறேன். சொல், ‘நான் எவ்வளவு கீழ்படிதலுள்ளவனாய் இருக்கிறேன்’ என்று பகர்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:14 am

45. தினைத்துணையாம் குற்றம் வரினும்….


சகன்லால் காந்தியின் பொறுப்பில் உள்ள ஸ்டோர் கணக்கில் ஏதோ தவறுதல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆசிரமத்தின் அப்போதைய செயலாளர் திரு. சகன்லால் ஜோதி ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து அறிவித்தார்.

அன்று மாலைப் பிரார்த்தனையின் போது காந்தியடிகள் மிகுந்த மனவேதனையுடன், ஆசிரமத்தில் ஒரு இழி செயல் நடந்து விட்டது எனக்குறிப்பிட்டார். சகன்லால் காந்தி சத்தியத்திலிருந்து தவறி விட்டிருக்கிறார். சத்தியத்தை வாய்மையைக் கடைபிடித் தொழுகுவதே நம்முடைய ஆசிரமத்தின் குறிக்கோளாகும். எனவே தான் இதற்கு ‘சத்தியாகிரக ஆசிரம்ம்’ என்று பெயிரிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இப்பெயரை சொல்லிக்கொண்டிருக்க நமக்கு உரிமை இல்லை. இன்று முதல் இந்த ஆசிரமத்தை ‘உத்யோக் மந்திர்’(தொழிற்கூடம்) என அழைப்போம். பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடம் மட்டும் ‘சத்தியாக்கிரக ஆசிரம்ம்’ என அழைக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டார்.

அதன்பின் காந்தியடிகள் தம்முடைய இருப்பிடத்திற்கு போய்விட்டார். சகன்லால்பாய் உள்பட எல்லா பழைய நண்பர்களும் காந்தியடிகளின் குடிசையில் வந்து கூடிவிட்டனர். காந்தியடிகள் தீவிரமான ஆத்மயோசனையில் முனைந்திருந்தார். தன் சகோதரியின் மகன் செய்த்த் தவற்றை தானே செய்த்தாக நினைத்து தன்னையே நிந்தித்துக்கொள்ளலானார் அடிகள். எல்லோரும் இதனால் மிகுந்த குழப்பமும் வருத்தமும் அடைந்தனர். இவையனைத்தையும் பற்றிச் சிறிது கேள்விப்பட்ட பின் சகன்லால் காந்தி தன் தவற்றை ஒப்புக்கொண்டார். வருத்தமிகுதியால் அழ ஆரம்பித்தார். கூடியிருந்தவர்கள் இதைப்பார்த்து சகன்லால் காந்தி மீது இரக்கம் கொண்டனர்.

இதே சமயத்தில் காந்தியடிகளிடம் மற்றொரு சிக்கலைக் கிளப்பினார் யாரோ ஒருவர். சில நாட்களுக்கு முன் அறிமுகமில்லாத ஒரு அன்பர் ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் நான்கு ரூபாயைத் தன் அன்பளிப்பாக்க் கஸ்தூரிபாவிடம் கொடுத்திருந்தார். கஸ்தூரிபா அதனைச் சில நாட்களுக்குப்பிறகு ஆசிரம அலுவலகத்தில் சேர்த்திருந்தார். காந்தியடிகள் இதைக் கண்டு திருப்தி கொள்ளவில்லை. அவர் கஸ்தூரிபா மீது குறைப்பட்டுக்கண்டார். மேற்க்கொண்டு இம்மாதிரி தவறுகள் ஏற்பட்டாலோ, அல்லது முன்பு நடந்த தவறுகள் ஏதேனும் இருந்து அவை வெளிப்பட்டாலோ தன்னையும் ஆசிரமத்தைவிட்டே வெளியேறி விடவேண்டுமென்று பாவிடமிஉந்து வாக்குறுதி பெற்றிருந்தார்.

அன்று இரவு மூன்று மணி வரை ஆத்மசோதனை வேள்விநடந்து கொண்டிருந்தது. அதன்பின்னர் நண்பர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு காகிதம் பேனாவுடன் ஒருகட்டுரை எழுத உட்கார்ந்தார். அன்று எழுதி கட்டுரை சரித்திரப் புகழ் பெற்றது. அக்கட்டுரையில் சகன்லால் காந்தியும் கஸ்தூரிபாவும் செய்த தவறுகளை வெளிப்படையாக விவாதித்து, மக்கள் முன் தம் மன உளைச்சலை அப்படியே விளக்கி எழுதியிருந்தார்.

இந்தக் கட்டுரையைப்படித்த இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் திகிலடைந்தனர். சிலருக்குத்துக்கம் தாள முடியவில்லை. மற்றும் சிலருக்குக் காந்தியடிகள் மீது கோபம் ஏற்பட்டது. கஸ்தூரிபாவின் மீது சுமத்தபட்டிருக்கும் குற்றங்களைக் கண்டு திருமதி சரோஜினி நாயுடுவின் மனம் புண்பட்டது. இச் சம்பவம், பாரத நாட்டின் பெண் குலத்திற்கே இழுக்கு என நினைத்தார் சரோஜினி நாயுடு. அவர் உடனே ஹைதராபாத்திலிருந்து சபர்மதிக்கு வந்து நேராக கஸ்தூரிபாவிடம் சென்றார். காந்திஜியைச் சந்திக்கக்கூட நினைக்காத அளவுக்கு அவர்மனதில் அவ்வளவுகசப்பு உண்டாகியிருந்தது. ஆமால் காந்தி, காந்தியாகவே இருந்தார்.
விசயம் அறிந்து அவர் சிரித்துக்கொண்டே சரோஜினியைச் சந்திக்கவந்தார். அடிகளைப் பார்த்ததும் சரோஜினிநாயுடு ஆத்திரத்தில் ஓரிரு வார்த்தைகள் அதகமாகவே பேசி விட்டார். காந்தியடிகள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். சரோஜினி நாயுடு எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு காந்தியடிகள் தம் இயற்கையான சுபாவத்துடன் பேசலானார்: ‘சரோஜினி தேவி, இன்றைய இந்நேரம் கோப்ப்படவேண்டியதல்ல, மகிழ்ச்சி ததும்ப வேண்டிய நேரம், கடவுள் நம் மீது மிகவும் கருணை காட்டியிருக்கிறார் என்பதை அறிந்து கொள் கடவுள் என்னை, இக் கட்டுரையை எழுதச் செய்யாமலிருந்தோலேஓ அல்லது நான் இங்கு நடந்த தவறுகளை மறைத்து வைத்திருந்தோலோ இந்த ஆசிரமம் ஆசிரமமாகவே இருந்திருக்காது. இது நரகமாகத் தான் இருந்திருக்கும். என் மூலமாக இக்கட்டுரையை எழுதச்செய்து கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டார். நம் பளுவைக் குறைத்து பூவபை போன்று ஆக்கிவிட்டார். இப்போது சகன்லாலோ, கஸ்தூரிபாவோ, ஆசிரமத்திலுள்ள மற்ற நண்பர்களோ யாரும் இம்மாதிரித் தவற்றைச் செய்யமாட்டார்கள். ஆகையால் உன் கோபம் இப்போது மகிழ்ச்சியாக மாற வேண்டும். இறைவன் காட்டிய எல்லையற்ற கருணைக்காக அவன் புகழைப்போற்றி பரவுவோம்”.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:14 am

46. டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?


சேவாக் கிராமத்தில் காந்தியடிகளின் குடிசைக்கு முன்னால் கிழக்குப் பக்கம் மற்றொரு குடிசை இருந்தது. அடிகளைக் காணவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அங்கு தங்குவர். அந்நாட்களில் ஆச்சார்ய நரேந்திரதேவ் அதில் தங்கியிருந்தார். அவர் ஒரு பேரறிஞராக மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்டத்தின் பழுத்த தலைவரும் ஆவார். காங்கிரசுக்குள்ளிருந்த சோஷலிசக் கட்சியை நிறுவியவரும் அவரே தான். ஆனால் இளைப்பால் தொல்லைப்பட்டக் கொண்டிருந்தார். காந்தியடிகள் அவரைப் பார்த்த போது தம்முடன் சேவா கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

அந்நாட்களில் தான்பாரத்த்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும்பொருட்டு ‘கிரிப்ஸ் மிஷன்’ இந்தியாவிற்கு வந்திருந்தது. இக்குழுவினருடன் பேச காந்தியடிகளுக்கு அழைப்பு வருவது இயற்கைதானே. அவர் டில்லி சென்று பேசி விட்டு உடனே திரும்பிவிட்டார். ‘தூதுக்குழு டில்லியில் தங்கியிருப்பதலா இன்னும் சில நாட்கள் இங்கு தாங்கள் தங்கிச் செல்லலாமே’ என பத்திரிகை நிருபர்கள் கேட்டனர்.

அதற்குக் காந்தியடிகள் ‘ஒரு டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?’ என்று பதிலளிக்கும் முறையில் மறு கேள்வியை கேட்டார்.

அவர் ஆச்சாரிய நரேந்திர தேவுக்க்உச் சிகிச்சை அளித்துக் கவனிப்பதற்க்காக ஆசிரமத்திற்கு உடனே திரும்பிவிட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:14 am

47. எவ்வளவு நல்ல விஷயம்!


ஒரு நாள் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் காந்தியடிகளைக் காண வந்தார். அடிகளுக்குத் தகவல் தெரிவித்து அவருடைய அனுமதியின்பேரில் அப்பெரியவர் அடிகளிடம் சென்றார். உள்ளே நுழைந்ததும் தூய கதர் உடுத்தியிருந்த அப்பெரியார்பத்து ரூபாய் நோட்டுளை எடுத்து அடிகள் முன் சமர்ப்பித்தவாறே, ‘மிகவும் வறிய ஏழைகளுக்காகவும், நற்குணம்படைத்த தகுதி வாய்ந்தவர்களுக்காகவுமே இந்தச் சிறு காணிக்கை. இவ்வாறான தரித்திர நாராயணர்களைப் பற்றி வேறு யாருக்குத் தங்களைவிட அதிகம் தெரியும்? என்று கூறினார்.

‘நீங்கள் மிக நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்? எத்தனை வருடமாக இந்தத் தொகையைச் சிறுகசிறுக சேமித்தீர்கள் என்று சொல்லமுடியுமா?’ என காந்தியடிகள் கேட்டார்.

‘பல ஆண்டுகளாக; ஆனால் சென்ற ஆண்டு பூகம்ப நிதிக்கு ரூபாய் நூறு அனுப்பினேன், நூறு ரூபாய் அஸ்ஸாம் வெள்ள நிதிக்குக் கொடுத்தேன்.’ அலாகாபாத் குடியானவர்களின் உதவிக்காக ரூபாய் ஐநூறு கொடுத்து நான்கு ஆண்டுகள் இருக்கும். என்றார் அந்தப்பெரியார். இதைக் கேட்டு காந்தியடிகள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். சரி, தங்கள் வருமானம் என்ன? தங்களுக்கு பென்ஷன் எவ்வளவு கிடைக்கிறது? நீங்கள் என்ன வேலை செய்தீர்கள்? என்பவற்றைப்பற்றித் தெரிவிப்பீர்களா? எனக் கேட்டார் காந்தியடிகள்.

‘ நான் ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியனாக இருந்தேன். அநேக வருடங்களுக்குப் பின் வேலையிலிருந்து விலகும்பொது என்க்கு மாதம் 52 ரூபாய் ஊதியம் கிடைத்து வந்தது. என்க்குப்பென்ஷன் கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக ஓய்வு பெற்றபோது இரண்டாயிரத்து எழு நூறு ரூபாய் இனாமாகக் கிடைத்தது.’ என்று பதிலளித்தார் அந்தப் பெரியவர்.

‘ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகி விட்டதா?’ என வினவினார் அடிகள்.

பெரியவர்: ஐந்து ஆண்டுகளாகி விட்டன.’

அடிகள்: மாதம் எத்தனை ரூபாய் செலவு செய்கிறீர்கள்’.

பெரியவர், ‘கொஞ்சம் பருப்பு-ரொட்டி, இவைகளுக்கு என்ன செலவு ஆகிவிடப்போகிறது? பத்து ரூபாயில் நான் காலம் கழிக்க முடியும். இப்போது நான் தனிக்கட்டை தானே! இதர பொறுப் எதுவுமில்லை. முன்பு என்னுடைய சகோதர்ரரின் மைந்தர்கள் இருவரை வளர்க்கும் பொறுப்பு இருந்தது. அவர்களைப் பேணி வளர்த்து படிக்கச் செய்தாகி விட்டது. இப்பொழுது கவலையற்று இருக்கிறேன். ஒரு சமஸ்கிருதப் பள்ளிக்கூடத்தை நடத்துகிறேன். பெரும்பகுதி நேரம் அதில் கழிந்துவிடுகிறது. அது இலவசப்பள்ளிக்கூடம்.”

ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியவராய் காந்தியடிகள் சொன்னார். ”இவ்வளவு குறைந்த வருமானத்தில் இவ்வளவு பணம் சேமித்து வைத்திருக்கிறீர்கள்; சேமித்தவற்றை ஏழை மக்களின் உதவிக்காக செலவிடுகிறீர்கள் இவை எவ்வளவு நல்ல விஷயங்கள்! ஒவ்வொருவரும் தங்களிடமிருந்து இப்பேர்பட்ட பொதுநலத்தொண்டைக் கற்றுக்கொண்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும்!”

”மகாத்மாஜி! எனக்காக நான் செலவு செய்தது மிகக் குறைவே. எனவேதான் அவ்வப்போது ஏழை எளியவர்களுக்கு என்னாலான உதவியும் தொண்டும் செய்ய முடிந்திருக்கிறது” என்றார் பெரியவர்.

அடிகள்! ” இந்த அழகான கதர் எங்கு கிடைத்தது? நல்ல முரட்டுத் துணியாக இருக்கிறதே. போர்வை அல்லது கம்பளியைப் போர்த்திக்கொள்ளும் அவசியமே தங்களுக்கு இருக்காது.”

பெரியவர்: ” இது வீட்டிலேயே நெய்து கொண்டதாகும்”

காந்திஜி: நானும் தங்களைப்போல் முரட்டுக்கதரையே பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!”

‘என்னிடம் இன்னும் கொஞ்சம் பணம் இருக்கிறது மகாத்மாஜி. என்றைக்காவது ஒரு நாள் நான் அதனையும் தங்கள் திருவடிகளில் சமர்பிக்கத்தான் போகிறேன். வேறு யாருக்கு பணத்தைக் கொடுப்பதென்றே என்க்குத்தெரிவில்லை. நான் தங்களைத்தான் அறிவேன். தாங்களோ ஆதரவற்றவர்களையும், உற்றார் உறவினர் அற்ற ஏழைகளையும், திக்கற்றவர்களையும், ஏழைகளையும் அறிவீர்கள். நான் மனப்பூர்வமாக தங்களுக்கு நன்றி செலுத்துகிறேனே” என்று எல்லையில்லா மகிழ்ச்சியுடன் கூறினார் அந்தப் பெரியார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:14 am

48. நீங்கள் சிறிதும் அலட்டிக்கொள்ள வேண்டாம்.


1945ம் ஆண்டில் நடந்தது. சர் புருஷோத்தமாதாஸ் டாகூர்தாஸ் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தார். காந்தியடிகள் பம்பாய்க்குச் சென்றிருந்தபோது, ”இன்று மாலைப் பிரார்த்தனைக்குப்பின் புருஷோத்ததாஸ் டாகூர்தாஸ் அவர்களைச் சந்திக்க விரும்புகிறேன்” எனத் தான் தங்கியிருந்த வீட்டுக்கார் பிர்லாவிடம் கூறினார்.

‘இரவு சுமார் 8.30 மணி ஆகிவிட்டால் அவரைப் பார்க்க இயலாது’ என பிர்லா பதிலுரைத்தார்.

‘அவர் வந்து என்னைச் சந்திக்க இயலாமிருந்தால் நானே அவரைச் சந்திக்கப்போகிறேன்’ என காந்தியடிகள் கூறினார்.

டாக்டர் சுசீலா நய்யாருடனும் மற்றுமோர் நண்பருடனும் அன்றிரவே அடிகள் அவருடைய இல்லத்திற்குச் சென்றார். அவ்வமயம் நர்ஸ் ஒருத்தி அவர் தூங்குவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். பணியாள் மூலம் காந்தியடிகளின் வருகையை அறிந்த அவருடைய மனைவி, நோயாளிக் கணவரிடம் சொல்வதற்கு, மிகவும் சங்கடப்பட்டாள். நோய்வாய்ப்பட்ட கணவரை மாடியிலிருந்து கீழே இறக்கிக் கொண்டுவரவும் முடியாது. முதிர்ந்த வயதில் மகாத்மாஜியை மாடிக்கு அழைத்துப் போவதும் கஷ்டாமாயிருக்கும், இதுவே அந்த மாதரசியின் சங்கடத்திற்கு காரணம். எப்படியானாலும் அடிகளை வரவேற்றுத்தானே ஆக வேண்டும்! உடனே மாடியிலிருந்து இறங்கிக் கீழே சென்றாள், ‘புருஷோத்தமதாஸ் இருக்கிறாரல்லவா?” என்று அவளிடம் காந்திஜி கேட்டார்.

”இருக்கிறார் ஐயா, ஆனால் அவர் கீழே இறங்கி வருவாரா என்பதுதான் சந்தேகம்” என்று தன் ஐயத்தைக் கூறினாள் இல்லத்தரசி. அவருடைய சிந்தனை ஓட்டத்த்ஐ உடனே புரிந்துகொண்ட காந்தியடிகள் அதற்கென்ன? நானே மேலே செல்ல முடியுமே? விரும்பினால் நீங்களும் வரலாம். நான எங்ஙனம் படியேறிச் செல்கிறேன் என்பதை நீங்கள் பார்க்க வேண்டாமா?” என சிரித்துக்கொண்டே அடிகள் கூறினார்.
அவர் மாடிப்படி ஏறி நோயாளி இருந்த அறையின் நுழைவாயிலுக்கு வந்து அவரிடம், ”நீங்கள் சிறிதும் அலட்டிக்கொள்ள வேண்டாம். நானே தங்கள் பக்கத்தில் வந்து அமருகிறேன்” என சிரித்துக்கொண்டே கூறினார். அரவருகில் சென்றமர்ந்து நோய்ப்பற்றி ஒன்றும் பேசாமல், நோயாளியின் மனம் மகிழ்ச்சி அடையும் வண்ணமே உரையாடிக் கொண்டிருந்தார் அடிகள். இருபது நிமிடங்கள் கழித்து அடிகள் அங்கிருந்து விடைப் பெற்றார். அங்கிருந்த நர்ஸ் முதன் முறையாக அடிகளை அன்று தான் பார்த்தாள். ”நோயாளியைப் பார்க்க வருபவர்கள் எல்லோரும் இப்படியே நடந்துகொண்டால் டாக்டர்களைக் காட்டிலும் இவர்களால் நோயாளியின் உடம்பை விரைவில் குணப்படுத்தமுடியும்” என்றாள் அந்த நர்ஸ்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:15 am

49. எனக்கு இது புனித யாத்திரை.


காந்தியடிகளின் புகழ்பெற்ற நவகாளி யாத்திரை சண்டிபூர் கிராமத்திலிருந்து தொடங்கிற்று. புறப்பட்டபோது அடிகளுடைய நெற்றியில் சில பெண்கள் திலகமிட்டு இறை வழிபாடு நடத்தினார்கள். காந்தியடிகளின் விருப்பப்படி அன்று ”சொல்வோம் வைஷணவன் யாரெனக் கேளீர்” என்ற பாடல் பாடப்பட்டது. ஆனால் ஒரு சிறு மாற்றத்துடன் பாடப்பட்டது. ‘வைஷணவன்’ என்ற சொல்வரும் இடங்களிலெல்லாம் முறையாக ‘முஸ்லீம்’ ‘கிறிஸ்துவன்’ ‘சீக்கியன்’ ‘பார்சி’ ‘ஹரிஜன்ன்’ என்று மாற்றிப் பாடப்பட்டது. இடையிடையே காந்தியடிகளும் கலந்து பாடிக்கொண்டிருந்தார்.

இங்கிருந்து அவர் செருப்பு அணிவதை விட்டுவிட்டார். ”தாங்கள் ஏன் செருப்பு அணியவில்லை?” என்று உடனிருந்தோரில் சிலர் கேட்டார்கள்.

அதற்கு அவருடைய பதில்: ”நாம் கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது மாதாகோவிலுக்கோ செல்லுமுன் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைகிறோம். அதாவது புனித இடங்களில் நாம் செருப்பு அணிவதில்லை. நானோ தரித்திர நாராயணர்களைப் பார்க்கச் செல்கிறேன். அவர்களுடை உற்றார் உறவினர்கள் சூரையாடப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள போதிய ஆடையும் அவர்களிடத்தில் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கத்தான் இந்த மண்ணில் நடந்து போக இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு இது புனித யாத்திரையாகும். அப்படியிருக்க இந்த யாத்திரையில் நான் எப்படிக் காலணியை அணிய முடியும்?”

இப்படிச் சொல்லும்போது காந்தியடிகளின் உள்ளம் எவ்வாறேல்லாம் வேலை செய்துது என்பதை அவருடன் அப்போது அருகில் இருந்து பழகிய நண்பர்களுக்குத்தான் தெரியும். அவருடைய பாதங்கள் மிருதுவானவை. அதில் முட்கள் தைத்து சதைகளில் வெடிப்பும், இரத்தக் கொப்பளங்களும் ஏற்பட்டன. ஆனால் அவர் அந்த யாத்திரை முடியும் வரை செருப்பு மட்டும் அணியவில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:16 am

50. காலணி செய்யும் திறமை


1953 - ம் வருடம் உடம்பின் மீது சிறு போர்வையைப் போர்த்துகொண்டு ஒரு கிழவர் சேவாகிராமத்திற்கு வந்தார். அவர் காலையிலிருந்து மாலைவரை வேலையிலேயே திளைத்திருப்பது வழக்கம். குப்பை கூளங்களையும், உபயோகமில்லாத சிறுசிறு வேலைகளைச் செய்வதில் அவருக்கு ஒரு கஷ்டமும் இல்லை. அவருக்கு இன்னும் ஒரு பல்கூட விழவில்லை. நாளைக்கு ஒரு நேரம் தான் உணவு உட்கொண்டார்.

சில நாட்களுக்கு ஆசிரம்த்தைவிட்டுச் சென்றிருந்து மறுபடியும் அவர் திரும்பி ஆசிரமத்திற்கே வந்துவிட்டார். வெயில் மழை ஒன்றும் அவருடைய ஆர்வத்தைக் குறைப்பதில்லை. அவர் எப்போதும் வெற்று உடம்புடன் பழைய கந்தல் ஆடையை உடுத்திக்கொண்டு வேலையில் திளைத்திருப்பதைக் காணலாம். அவர் ஒருநாள் காந்தியடிகளிடம் வந்து, ”எனக்கு ஒரு ஜோடிச் செருப்பு வேண்டும். பகலில் அவற்றுக்கு அவசியமிருப்பதில்லை. ஆனால் இரவில் மழையில் வேலைசெய்யும்போது அணிந்து கொள்ளத்தேவைப்படுகிறது” என்றார்.

ஒரு தடவை சாதாரண அட்டைத் துண்டுகளைக்கொண்டுத செருப்புத் தயார் செய்திருந்தார். ஆனால் அட்டைச் செருப்பு ஒரு நாளுக்கதிகமாகவா தாங்கும்? ஆகையால் காந்தியடிகளிடம் வந்து ”யாராவது பழைய செருப்பு உபயோகிக்காமலிருந்தால் அதை எனக்குக் கொடுக்கச்செய்யுங்கள்’ என்றார்.

‘பழைய செருப்பு ஏன்?’ என வினவினார் அடிகள்.

கிழவன் பதில்: ‘பழைய - கஞ்சி சாப்பிட்டு பழைய செருப்பை உபயோகித்துக் காலத்தை தள்ளுவதே நல்லது.”

காந்தியடிகள்:”நான் புதுச் செருப்பு வரவழைத்துக் கொடுத்தால்…..”

கிழவன்: தாங்கள் கருணையது ஆனால் எனக்கு புதிதாக வந்துள்ள ஆடம்பரமான செருப்பு அல்லது ஸிலிப்பர் பிடிக்காது. பழையகாலத்து செருப்பு இருந்தாலே போதுமானது”

காந்திஜி: ”சரி, உனக்காக நம் தோல் நிலையத்திலிருந்து உன் விருப்பத்திற்கேற்ப ஒரு ஜதை செருப்ப்ஐத் தயாரிக்கச் செய்கிறேன்.”

கிழவன்: ”ஆனால் அளவு எடுக்காமல் சக்கிலியன் எப்படி செருப்பைத் தைப்பான்? தொலு தொழில் நிலையம் இருக்கும் நால்வாடிக்கச்செல்லாமல் செருப்பை எந்த முறையில் தைப்பது என்று சக்கிலியனிடம் சொல்வதெப்பட்டி? இதற்காக ஒரு நாள் வேலையை விட்டுச் செல்வதா?”

காந்திஜி: நீ உன்வேலையை விட்டு அங்கு செல்லவேண்டிய அவசியமோ அல்லது சக்கிலியனை இங்கு வரவழைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இதோ, கொண்டுவா அட்டைத் துண்டை, இதைக்கொண்டு நான் உனக்கு வேண்டிய செருப்பின் மாதிரி ஒன்றைத் தயார் செய்கிறேன். இதைப்பார்த்து நல்ல தோலில் செருப்பு ஜதை ஒன்றை சக்கிலியனிடம் செய்யச் சொல்கிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் காந்தியடிகள், செருப்பின் மாதிரி ஒன்றைத் தயாரித்தார். முப்பது வருடங்களுக்கு முன் தாம் செய்ததை நினைவில் வைத்துக் கொண்டு அட்டையில் தயாரித்த மாதிரி செருப்பைக் கொண்டு எல்லோரும் வியந்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:16 am

51. அந்த ஆற்றல் உன்னிடத்திலும் இருக்கிறதே


சம்பவம் நடந்தது 1935 - ம் வருடம் ஜூன் மாதம் சேவா கிராமத்தில் ஒரு நாள் சில நாடோடி பயில்வான்கள் காந்தியடிகளிடம் வந்து தம்முடைய இரண்டொரு உடற்பயிற்சி விளையாட்டுகளை அடிகள் பார்த்தருள வேண்டுமென வற்புறுத்தினர். காந்தியடிகள் சொன்னார். எனக்கு நேரமில்லை. தவிர நாட்டிற்கு உதவாத எதையும் என் மனம் பார்க்க விரும்பவதில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக உனக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமல்லவா? அதை நான் எங்கிருந்து கொடுப்பேன்?”

வந்தவர்கள் இதையெல்லாம் எங்கு கேட்கப்போகிறார்கள்! அவர்களுக்கு தங்களுடைய பல பராக்கிரமத்தைக் காண்பிக்கத்தான் வேண்டும். அவர்கள் ஒரே அடியில் பெரிய கல்லையே இரண்டாக்ப் பிளப்பார்கள்; ஆனால் கிராமத்திலுள்ள சாலையை பழுதுபார்க்கச் சொன்னால் செய்யமாட்டார்கள். மிகப்பளுவான எந்தப்பொருளையும் எளிதில் தூக்கிவிடமுடியும்; ஆனால் மக்களின் துன்பம் துடைக்கும் பணிகள் ஏதாவதொன்றில் ஈடுபடச் சொன்னால் அவர்கள்மனம் இடம் கொடுக்காது. இவ்வளவு உடல் வலிமை இருந்தும் அவர்களை பிச்சைக்கார்ர்களாகவே அலைந்துதிரிவார்கள் பணம் சம்பாதிப்பதை தவிர, தம்முடைய உடல்வலிமையை வேறூ வழியில் உபயோகப்படுத்திக்கொள்ளத் தெரியாது. வந்திருந்த மல்வீர்ர்களுக்கு கல்கத்தா செல்வதற்காகப் பணம் தேவையாயிருந்தது. ”நாங்கள் எவ்வித உதவியுமின்றிக் கஷ்டப்படுகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

‘நீங்களாவது கஷ்டப்படுவதாவது ஒரே அடியில் கல்லையே உடைக்கும் அளவு உங்களிடத்தில் வலிமை இருக்கிறதே நான் கல்லை உடைக்கமுயற்சித்தால் என் கை தான் முறியும்.’ என காந்தியடிகள் சொன்னார்.

வீர்ர்களல் ஒருவர் தங்கிடமோ யாரிடமும் இல்லாது உயர்ந்த ஆற்றல் இருக்கிறதே’ என் விடையளித்தார்.

‘அந்த ஆற்றல் உன்னிடத்திலும் இருக்கிறதே’ என்றால் அடிகள்.

‘இல்லை ஐயா, அந்த ஆற்றல் எங்களிடம் இருந்தல் நாங்கள் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கமாட்டோம்” என ஒரு மல் வீர்ர் பதிலுரைத்தார். அதற்குக் காந்தியடிகள், ‘அந்த ஆற்றல் என்னிடத்தில் எந்த அளவு இருக்கிறதோ, அதே அளவு உங்களிடமும் இருக்கிறது. வித்தியாசம் இவ்வளவுதான். உங்களிடத்தில் அது தூங்கிக்கொண்டிருக்கிறது. என்னிடம் அது விழித்திருந்து வேலை செய்கிறது. நான் அதை வளர்த்திருக்கிறேன். இது போன்ற ஒவ்வொருவரும் இம்மாதிரி ஆற்றலை வளர்க்க முடியும். ஆனால் எல்லோரும் பயில்வான் ஆக முடியாது’ நானோ, எவ்வளவு முயன்றாலும் அதுமுடியவே முடியாது’ என பதிலுரைத்தார்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக