புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
111 Posts - 60%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 2 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

First topic message reminder :

1 என்னுடைய பசி இந்தியாவின் பசி


காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.

உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:06 am

11. அவரோ சுதந்திரப் பித்தனாயிற்றே!


1928ம் வருடம் கல்கத்தாவில் தேசிய மகாசபைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தின் தலைவர் திரு மோதிலால் நேரு, கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்களில் ‘காலனி சுயாட்சி’யைக் கோரிப் பெறுவதென்பது இந்தியாவின் லக்ஷியம்என்ற தீர்மானமும் ஒன்று. இந்த மசோதாவைக் காங்கிரஸ் மகாசபை முன் வைத்து அங்கீகாரம் பெறும் சமயம் இளைஞர் கூட்டத்தின் இருதலைவர்களிடமிருந்தும் மசோதாவின் மீது ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ‘பூரணசுதந்திரம் அடைவதே காங்கிரஸின் லட்சியம்’ இதுதான் திருத்த மசோதா. இதைக் கொண்டு வந்த தலைவர்கள், பண்டிட் ஜவஹர்லால் நேருவும் ஸ்ரீ சுபாஷ் சந்திர போசும் ஆவர்.

காந்தியடிகளின் காங்கிரஸில் இருந்து பிரிந்து அப்போது சபர் மதி ஆஸ்மரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நெருக்கடியான சமயங்களில் எப்போதும் அழைப்பு வருவது போல் இச் சமயமும் காந்தியடிகளுக்கு வந்தது. குறித்த நேரத்தில் அவரும் கலகத்தா போய்ச் சேர்ந்தார். காங்கிரஸின் லட்சியத்தைப் பற்றி பேசும் பொழுது முதலில் காலனி சுயாட்சியின் உள்அர்த்தத்தையும் அதன் பலாபலன்களையும் விவரித்தார். கடைசியில் திருத்த மசோதாவைப்பற்றி வியாக்கியானம் செய்தார் மசோதாவைப் பற்றி விளக்கியதைக்காட்டிலும் அதைக்கொண்டு வந்தவர்களைப்பற்றியே அதிகமாகப் பேசினார். ”தனக்குக் காலனி சுயாட்சி மீது பிரியம் இல்லை என்று ஜவஹர்லால் சொல்கிறார். ஏன் அவர் விரும்பமாட்டார்? அவரோ சுதந்திரப் பித்தனாயிற்றே! அவருடைய தந்தையும் சுதந்திரப்பித்தர். ஜவஹரோ சுதந்திரப்பித்து முதிர்ந்தவர். கமலா உடம்பு சௌகரியமில்லாமல் இருக்கிறாளே; அவருக்கு இந்தக்கவலை யெல்லாம் எங்கே? தன்னைப்பற்றியும் கவலைப்படுவதில்லை; நாட்டுப்பற்றிலேயே மூழ்கியிருக்கிறார்….” இப்படி காந்திஜி பேசிக்கொண்டே போனார்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு தன் இடத்திலிருந்து எழுந்து தலைகுனிந்தவாலறே பந்தலைவிட்டு வெளியே போவதை குழுமியிருக்கும் ஜனங்கள் பார்க்கமும் வரைக்கும் காந்திஜி பேசிக்கொண்டே சென்றார். ”கிழவர், ஜவஹர்லாலைப் புகழ்ந்தே ஆளை கீழே தள்ளிவிட்டார்” என்று பலரும் பேசிக்கொண்டனர்.

அவர்கள் சொல்வதும் சரியே திருத்த மசோதாவை முன் மொழியும் போது ஜவஹர்லாலை அங்கு தேடினர். ஆனால் அவர் அங்கில்லை. பாவம், பச்சை நிறக்கதர்நிறத் தொப்பியும் வெள்ளைச் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்த சுபாஷ்பாபு மட்டும் அங்கு தனியே நின்றிருந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:06 am

12. தாய் அன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கற்பிக்காது


திருமதி சாரதா தேவி வர்மா மகளிர் இல்லத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தாள். தன் மகனின் உடம்பைப் பற்றி அவருக்கு மிகுந்த அக்கரை. ஒரு நாள் அவனைக் கூட்டிக்கொண்டு காந்திஜியிடம் சென்றாள். அச்சமயம் அவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நாலாபக்கமும் காகிதங்கள் சிதறிக்கிடந்தன. சிலவற்றின் மேல் துண்டுக்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்திலேயே பனை ஓலை விசிறி ஒன்றும் இருந்தது.

சாரதா தேவியின் மகனைப்பார்த்து காந்திஜி விசிறியை எடுக்குமாறு ஜாடை செய்தார். காந்திஜியின் குறிப்பைப் புரிந்துகொண்ட பையன் விசிறியை எடுத்து விசிற ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழிந்தன. குளிர்ந்த காற்று வீசினவுடன் காந்திஜிக்கு லேசாகத் தூக்கம் வர ஆரம்பித்தது. அப்படியே பின்னாலிருந்த மெத்தையில் சாய்ந்தார். இதைப்பார்த்து சாரதாதேவி பையனிடமிருந்த விசிறியை எடுத்து தானே விசிற ஆரம்பித்தார். இரண்டு மூன்று நிமிடங்கள்தான் கழிந்திருக்கும்; அதற்குள் காந்திஜி விழித்துக்கொண்டார். சாரதாதேவியின் பக்கம் பார்த்தார். ”ஆம், தாயில்லையா! தாய் அன்பு மகன் பணிபுரிவதைத் தடுத்துவிட்டது. சிறுவனாயிற்றே; மேலும் பலவீனமானவனும்கூட; விசிறிவதினால் அவன் களைத்தல்லவா போய் விடுவான்” எனப் புன்முறுவலுடன் சொன்னார். ”இல்லை, பாபு! விசிறிக்கொண்டிருக்கையில் தவறி தங்கள் உடம்பின் மீது பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே அவன் கையிலிருந்து வாங்கி நான் விசிற ஆரம்பித்தேன்” என்று பதிலுரைத்தாள் சாரதாதேவி.

”இல்லை, இது பொய்யான விவாதம். தாயன்பு குழந்தைக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது கற்பிக்காது” என்றார் காந்திஜி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:07 am

13. சத்தியாக்கிரகி கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்


நாக்பூரில் சிலர் தனி நபர் சத்தியாக்கிரகம் செய்தனர். ஆனால் அரசாங்கம் அவர்களைக் கைது செய்யவில்லை. ”கைது ஆகாத சத்யாகிரகி கிராம்ம் கிராம்மாக சென்று பிரசாரம் செய்து கொண்டே டெல்லியை நோக்கி முன்னேறிகொண்டிருக்க வேண்டும்” - இது காந்திஜியின் கட்டளை.

ஆனால் இந்த நாக்பூர்வாசிகள் டெல்லி செல்வதற்குப் பதிலாக சேவாகிராம்ம் போய்ச் சேர்ந்தனர். காந்திஜியிடமிருந்து ஆசீர்வாதமும் டெல்லி செல்வதற்கு திட்டவட்டமான முழு விபரங்களும் கட்டளையும் பெற அவர்கள் விரும்பினர்.

அச்சமயம் காந்திஜி குளிப்பதற்காக்ச் சென்று கொண்டிருந்தார். குழுக்களாக வந்திருந்த இவர்களை சந்தித்தார். அவர்களிடம் ”தாங்கள் எல்லோரும் இப்பக்கம் எப்படி வந்தீர்கள்? தனித்தனியாக, அதுவும் கிராம்ம் கிராம்மாகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டே டெல்லி செல்லவேண்டியவர்களாயிற்றே! நீங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக கிளம்பி இருக்கிறீர்கள். ஆகையால் மக்களின் உதவியையே நம்பியிருக்க வேண்டும். காங்கிரஸ் கமிட்டியில் உள்ள பணமோ சத்தியாக்கிரகிகள் தங்கள் வீட்டுப்பணத்தையும் செலவழிக்கக்கூடாது. கிராமத்தாரிடமிருந்து என்ன கிடைக்கிறதோ, அதை வைத்துக் கொண்டுதான் காலம் தள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறினார்.

‘டல்லிக்குப் போகவேண்டும் என்ற செய்தியை நாமெல்லோரும் கேள்விபட்டோம். இங்கே பூறா விபரமும் தெரிந்து கொள்ளவும் தங்களிடம் ஆசீர்வாதம் பெறவும் தான் வந்தோம்’ என வந்த ஜனங்கள் கூறினர்.

”இன்றைய உணவு நிச்சயமாகி விட்டதா?” - இது காந்திஜியின் கேள்வி.

பதில்: ‘இது வரை ஒன்றும் ஆகவில்லை. ஆனால் எப்படியோ ஆகிவிடும்.”

‘இங்கு உங்கள் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்காது’ என காந்திஜி விளம்பினார்.

இதை சொல்லிவிட்டு அவர் குளிக்கச் சென்றுவிட்டார். உணவருந்தும் நேரமும் ஆகிவிட்டது. வந்தவர்களுக்கோ பசி கிள்ளிக் கொண்டிருந்தது. எப்படியும் காந்திஜியிடம் விடைப்பெற்று செல்ல விரும்பினர். அப்போது காந்திஜி குளித்உதவிட்டு உணவுக்கூடத்திற்குச் செல்வதைப் பார்த்தனர். மணி அடித்ததும் எல்லா ஆசிரமவாசிகளும் சாப்பிடுமிடதிற்குச் சென்றனர். அப்பொழுது காந்திஜியின் கட்டளைப்படி ஒருவர் இக்கூட்டத்தினரை அழைப்பதற்காக வந்தார்.

எல்லோரும் சாப்பிடுமிடத்திற்குச் சென்றனர். மிகுந்த பிரியத்துடன் காந்திஜி அவர்களைத் தம் பக்கத்தில் உட்காச் செய்து சைவ உணவை பரிமாறச் செய்தார். நன்றா வெந்ந காய்கறிகள், தக்காளி, கீரைக்கூட்டு, வெல்லம், தவிடுகலந்த கோதுமை மாவால் செய்த சிறு சிறு சப்பாத்திகள் முதலியவை பரிமாறப்பட்டன.

சாப்பிடும்போது காந்திஜி உண்மை சத்தியாகிரிகியின் லக்ஷணத்தைப்பற்றி விவரித்தார். ”நீங்கள் தனித்தனியாக ஒவ்வொரு கிராம்மாகச் சுற்றிக்கொண்டு டெல்லி செல்லுங்கள் உங்களுடைய வாழ்க்கையை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். கிராமத்தார் உங்களிடமிருந்து பாடம் கற்கட்டும்.” இது காந்தியின் அறிவுரைகள்.

கூட்டத்தில் பெண்களும் சிலர் இருந்தனர். அவர்களில் திருமதி சாந்திதேவி சர்மாவும் ஒருவர். அவள் ”பெண்கள் தனியாக்க் கிராம்ம் கிராம்மாக நடந்து செல்வது கடினம். உடம்பு அசௌகரியமாயிருக்கும் போது அவசியம் துணைக்கு இருக்கவேண்டும்” என்றாள்.

அதற்குக் காந்தியடிகள் சத்தியாகிரகி கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். ஆண்டவன் தான் அவர்களுக்கு உதவுவார். கடவுள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்பார். நீங்கள் ஓர் புனிதமான காரியம் தொடங்கியிருக்கிறீர்கள் என நினைத்து முன்னேறுங்கள். உடம்பையும் பார்த்துக்கொண்டு சிறிது சிறிதாக நடந்து முன்னே செல்லுங்கள்” என அறிவுரை வழங்கினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:07 am

14. மனிதனின் மதிப்பை அவன் ஏற்படுத்திய நிறுவனத்தினால் கணக்கிடவேண்டும்


காந்திஜி ஏர்வாடா சிறையில் இருந்தார். கரீம் நகரைச் சேர்ந்த மிஸ் மேரி பார் காந்தியடிகளை சந்திக்க வந்திருந்தார். அவள் கிராமத்திற்குச் செல்ல விரும்பினாள். இது சம்பந்தமாக அவள் சாந்திநிகேதனைப் பற்றிய ஓர் சந்தேகம் எழுந்தது. காந்தியடிகள் அதற்கு பதில் அளித்தார். ”இந்திய உப கண்டத்தில் சாந்திநிகேதனம் ஓர் தனிப்பட்ட இடம். ஒரு வேளை இது இவ்வுலகத்திலேயநே ஓர் தனிப்பட்ட இடமாகவும் இருக்கலாம். ஆம் அங்குள்ள சில விஷயங்கள் எனக்கு பிடித்தமில்லை. ஆனால் கிராமத்திலுள்ள வேலைகளை பார்க்க விரும்புபவர்களுக்குச் சாந்தி நிகேதனில் நடைபெறும் வேலையையும் பார்க்கவேண்டம் என்ற யோசனையை நான் கட்டாயம் சொல்வேன். அங்குள்ளவர்கள் நேர்மையுடன் முயல்கிறார்கள்”

அதன் பின் ஆஸ்ரமத்தின் உள்ளே சென்று பார்க்க்உம் யோசனையை கூறும்போது காந்திஜி சொன்னார். ஆஸ்ரமத்தைப் பார்க்கும்போது என்னைப்பற்றியும் தாங்கள் எடைபோட வேண்டும். என்னிடம் பொய்யான பணிவு கிடையாது. நான் எப்படி இருக்கிறேனோ, அதற்கு நேர்மாறாக என்னைப்பற்றி விவரிக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் மனிதனுடைய உயர்வையும் பெருமையையும் அவன் ஏற்படுத்திய நிறுவனத்தினால் கணக்கிட வேண்டும். எபடி கவிதாகூரின் பெருமையைப் பற்றி எண்ணும்போது சாந்திநிகேதனைப்பற்றி நினைக்கிறோமோ அதேபோன்று என்னுடைய மதிப்பைக் கணக்கிடும்போது இந்த ஆஸ்ரமும் மனக்கண் முன் வரவேண்டும்.

நொடிப்பொழுதில் தோன்றி மறையும் எண்ணங்கள் கருத்துக்களாகா, சிந்தித்து தெளிந்து நிலையான வகையில் செயல்படுத்திக் காண்பிக்கக்கூடயவையே கருத்துக்களாகும். அகிம்சையைப்பற்றி எழுவதையெல்லாம் நடைமுறையில் நான் செயலாறிறிக் காண்பிக்கவேண்டும்.

ஈனத்தொழிலை நடத்தும் ஜனங்களைப்பற்றி கூறும்போது காந்திஜி சொன்னார், ஆஸ்ரமத்தின் பலவீனத்திற்கு ஒரு விசித்திரக் காரணம் உண்டு. ஈனத்தொழில் நடத்துபவர் திருடித்தான் ஆகவேண்டும். இப்பொழுத் நாம் இவர்கள் மத்தியல் தான் வாழவேண்டும் என்று முதலில் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். போலீஸாரிடம் சென்று புகார் கூறவும் கூடாது. பலாத்கார வழியிலும் செல்லக்கூடாது. அவர்களை நாம் அப்படி அதிகமொன்றும் எதிர்ப்பதில்லை என்பற்காகவே அவர்கள் மிகவும் மரியாதைக் குறைவான செயலைச் செய்கிறார்கள். இதைத்தவிர்க்கவும் ஓர் வழி இருக்கிறது. நாம் எந்தப் பொருளும் வைத்துக்ள்ளக்கூடாது; இருக்கும் பொருட்களை யாராவது எடுத்துக்கொண்டு போக விரும்பினால் அவர்களை அவர்கள் இஷ்டப்படியே எடுத்துக்கொண்டு போக விட்டுவிட வேண்டும். அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் இந்தப் பிரச்சனைக்கு உடனே வழி கண்டுபிடிக்கவேண்டும்.’

”எவ்விதக்கஷ்டமும் இல்லையென்றால் இப்புவியிலேயே சத்தியசாம்ராஜ்யம் தோன்றிவிடுமே” என்றாள் மிஸ் பார்.

”இப்படி சொல்வதற்கில்லை. பாலைவனத்தைச் சோலைவனமாக்க முடிகிறதென்றால், ஆசிரம்ம் அவ்வாறு உருவாகும் என்ற நம்பிக்கை வைத்திருக்கவேண்டும்” என்று பதிலளித்தார் காந்திஜி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:07 am

15. இந்தப் பெண் ஆசிரமத்தின் அழகை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாள்


சபர்மதி ஆஸ்ரமத்தில் ஆனந்தி என்னும் ஒருத்தி இருந்தாள். காந்திஜியை சந்திக்க அவர் ஏர்வாடா ஜெயிலுக்கு வந்தாள். பக்கத்தில் உட்காரவைத்து அவர் அவருடைய க்ஷேமலாபத்ததைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். சில நாட்களாக அவள் உடம்பு சௌகரியமில்லாமலிருந்தாள். அவள் வலது கை வலிக்கின்றது. நேற்றுப் பூறாவும் அது வலித்துக்கொண்டிருந்து. வலியில் களைத்துப்போய் தூங்கிவிட்டேன். சாயந்திரம் வலி குறைந்துத்ம சாப்பிட்டேன்” எனக்கூறினார்.

‘இன்று வலிக்கிறதா’ என்று காந்திஜி வினவினார்.

‘அவ்வளவு வலிக்கவில்லை’ என அவள் பதில் கூறினாள்.

கேலியாக காந்திஜி ‘அப்பெண்டிக்ஸ்’ ஆகியிருந்தால் அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருக்கும். ஒன்றும் செய்யாமலே குணமாகிவிட்டால் கவலையில்லை. இல்லையென்றால் வியாதி முற்றிக்கொண்டு போகும்” என்று சொன்னார்.

காந்திஜி உடனே காகாசாஹேப் காலேலேகரைக் கூப்பிட்டு, இவளை இன்றே பாடக் , கோகலே டாக்டர்களிடம் கொண்டு சென்று பரிசோதனை செய்யச் சொல்லுங்கள். ஆபரேஷன் செய்யவேண்டுமென யோசனை கூறினால் செய்துவிடலாம் என்று என் சார்பில் சொல்லிவாருங்கள்” என்றார்.

டாக்டர் பாடக் அந்தப் பெண்ணைப்பார்த்தார். ‘சிறிது வலி இருக்கிறது, மற்றபடி வேறு ஒன்றுமில்லை, என்றார்.

ஆனால் டாக்டர் கோகலே உடனே ஆபரேஷன் செய்ய வேண்டுமென்ற யோசனை கூறியதோடு தமே அதைச்செய்வதற்கும் தயாராகிவிட்டார். அவர் காந்திஜிக்கு ஆபரேஷன் செய்யும்போது ஒரு முறைப் பார்த்திருக்கிறார். ஒரு பைசா கூட கிடைக்காது என்பதையும் நன்றாக அறிவார். டாக்டர் ‘எனக்கு இங்கிருந்து மாற்றுதலாகியிருக்கிறது. நாளை புறப்படவேண்டியவன். ஆனால் இந்தக்காரியத்தை முடித்து விட்டே போகிறேன். சாயந்திரமே ஆபரேஷனும் செய்கிறேன் என்றனர்.

காகாசாஹேப் காந்திஜியிடம் வந்து விஷயத்தைச்சொன்னார் அவர் டாக்டருடைய யோசனையை ஏற்றுக் கொண்டார். ஆனால், இதை யாரேனும் மறுத்தாலோ அல்லது பெண்ணின் அத்தை இதற்கு பயப்பட்டாலோ என்ன செய்வது என்ற பிரச்னை எழுந்தது. அதற்குக் காந்தியடிகள் ” இந்தப் பெண்ணின் தாய்தகப்பன் எல்லாமே நான்தான் என்னுடைய யோசனையின் பேரில் தான் அறுவைச்சிகிச்சை செய்யபட்டது எனக் கூறிவிடவும்” என்று பதிலளித்தார்.

ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. பெண் மிக தைரியசாலி. இரவிலும் பக்கத்தில் யாருமில்லை. தாதிப் பெண்ணும் இல்லை. தண்ணீர் வேண்டுமானால் எடுத்துக் கொடுப்பதறக்கும் ஆளில்லை. ஆனால் அதற்காகப் பயப்படுகிறவள் அல்ல அவள். காலையில் காகாசஹேபிடம் அவள் அய்யோ! பாவம் தாதிப்பெண் ஒருத்திதானே, வியாதியஸ்தர்களோ அநேகம் பேர் அவள் எத்தனை பேரைத் தான் சமாளிக்க முடியும்? எனக் கூறினார்.

இதைக்கேட்டு காந்தியடிகள் மிகவும் சந்தோஷமடைந்தார். ‘அப்படியென்றால் இந்தப் பெண் ஆஸ்ரமத்தின் அழகை அழகை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறாள்’ய என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:07 am

16. உனக்கு சுயராஜ்யம் கிடைத்தபொழுது….


பிரசித்திபெற்ற தண்டியாத்திரை தொடங்கும் சமயம் சபர்மதி ஆசிரமத்தைவிட்டு காந்தியடிகள் வெளியே வந்து ”இனி நான் சுயராஜ்யம் கிடைத்தப்பின்தான் ஆஸ்ரமத்திற்கு திரும்புவேன்” என்றார். ஆனால் 1935 ஆம் வருடத்தில் கான் அப்துல்கான் அபதுல் கபார்கானை சபர்மதி சிறையில் சந்திக்க சென்றபோது காந்தியடிகள் ஹரிஜன் ஆசிரம்த்திலுள்ள ஹரிஜனக் குழந்தைகளை பார்க்கச்சென்றார். வெகுநேரம் வரை அவர்களுடன் கேலியாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஆசிரியைகளைப்பற்றி பேசும்போது குறிப்பிட்ட ஓர் ஆசிரியை என்ன கற்றுக்கொடுக்கிறாள் என குழந்தைகளிடம் கேட்டார் காந்திஜி.

‘பஞ்சு அடிக்க’ என பதில் வந்தது.

இதே மாதிரி ஒரு நூற்கவும் மற்றொருவர் பாடவும் சொல்லிக்கொடுக்கிறார்கள் என பதிலளித்தனர். ஆனால் மற்றும் ஒரு ஆசிரியைப் பற்றி காந்திஜி கேட்டபோது ”சிற்றுண்டி செய்ய”ச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று பதில் வந்தது.

இதைக்கேட்ட காந்தியடிகள் ”அப்படியென்றால் எல்லாரைக்காட்டிலும் சிற்றுண்டி செய்யக்கற்றுக்கொடுக்கும் ஆசிரியை உங்களுக்கு மிகவும் இனிமையானவளாயிருப்பாளே” என்று கூறினார். ”நிச்சயமாக” என்று மிகுந்த சந்தோஷத்துடன் குழந்தைகள் சொன்னார்கள்.

”நல்லது உங்களிங் யார் போக்கிரிப் பெண்? சொல்லுவீர்களா? எனக்கேட்டார் காந்திஜி.

உடனே அநேகருடைய பெயர்கள் அவர் முன் வந்தன. ‘உங்களில் பொய் பேசுபவர்களும் இருக்கிறார்களா? என காந்திஜி வினவினார்.

”ஆம், ஆம், வேலை செய்யாமல் தட்டிக்கழிக்கும்போது பொய் பேசுவதுதான்” என்றனர் குழந்தைகள்.

”பெயர் சொல்லுங்கள், பார்க்கலாம்” என்றார் காந்திஜி.

சிரித்துக்கொண்டே ‘நான்தான்’ என்று பதில் கூறினாள் ஒரு பெண்.

‘அப்படியானால் இது கெட்ட விஷயம். அல்லவா? எப்பொழுதுமே பொய் பேசாதவாறு செய்துகொள்ள நீங்கள் முயற்சிக்க வேண்டும்’ என்று காந்திஜி கூறினார்.

‘முயற்சிதானே செய்கிறேனே. ஆனால் நான் அதில் எப்பொழுதுமே தவறி விடுகிறேன். பொய்ப்பேச்சு வாயிலிருந்து வந்துவிடுகிறது. என்னுடைய முயற்சியில் எப்படி வெற்றி பெறுவது என்றே எனக்குத் தெரியவில்லை’ என்றாள் அப்பெண்.

‘நான் சொல்லட்டுமா? நல்லது, நீ தினமும் காலையில் எழுந்தவுடன் ராமனை மனதில் நினைத்துக்கொண்டு ”கடவுளே! நான் பொய் பேசாமலிருப்பதற்கு எனக்கு உதவி செய்” என்று முறையிடு. அதே மாதிரி தினமும் படுக்கைக்குப் போகுமுன், ”கடவுளே! நான் இன்று இத்தனை தடவை உண்மை பேசத்தவறிவிட்டேன். என்னுடைய ஒரே வேண்டுகோள் என்ன வென்றால் நான் உண்மை பேச உதவி புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டும். இனிமேல் நீங்கள் தான் சொன்னபடி செய்வீர்களா?” எனக்கேட்டார் காந்திஜி.

எல்லாக் குழந்தைகளும் ஏகோபித்த குரலில் ‘செய்வோம் ஐயா’ என்று முழங்கினர்.

‘மிகவும் நல்லது. உங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுங்கள். சரி, இப்பொழுத் நம் விளையாட்டு முடிந்துவிட்டது. நான் விடை பெறுகிறேன். என்ன, போகட்டுமா இப்போது! என்றார் காந்திஜி.

வேண்டாம், வேண்டாம்’ என அநேக்க்குழந்தைகள் கூறினர்.

‘ஏன்? இன்னும் என்னிடம் ஏதாவது கேட்கவேண்டுமா? அப்படியென்றால் கேளுங்கள்’ என்று சொன்னார் காந்திஜி.

‘தாங்கள் ஏன் எங்களுடன் தங்குவதில்லை? எனக் குழந்தைகள் கேட்டனர்.

‘ஏனென்றால் நீங்கள் எனக்கு அழைப்பு அனுப்பவில்லையே. புத் பாய்தானே அனுப்பினார்.’ என்றார் காந்திஜி.

‘எங்களிடமிருந்து கூடத் தங்களுக்கு அழைப்புக் கிடைக்கும். ஆனாலும் தாங்கள் எங்களுடன் தங்கமாட்டீர்கள். இப்பொழுது சொல்லுங்கள் இதற்கு என்ன காரணம்?’ எனக் குழந்தைகள் கேட்டனர்.

‘நீங்கள் எல்லோரும் எப்போது விடுதலை பெருவீர்களோ அப்போதுதான் நான் உங்களுடன் தங்குவேன்’ என்று பதலளித்தார் காந்திஜி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:07 am

17. இவ்வளவு செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்


1932 ஆம் வருடத்தில் காந்தியடிகள் ஏர்வாடா சிறையில் இருந்தார். அப்பொழுதும் பல மாதிரியான கடிதங்கள் அவருக்கு வந்து கொண்டிருக்கத் தான் செய்தன. இரவெல்லாம் உட்கார்ந்து அவைகளுக்கு பதில் எழுதச் செய்வார். ஒரு ஓய்வுப் பெற்ற அரசாங்க ஊழியர் ஒருவருடைய கடிதம் வந்தது. அவருக்கு வயதோ 70. இளைப்பால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் எழுதியிருந்தார் ‘எத்தனையோ ஆராய்ச்சிகளைச் செய்தும் , இயற்கை முறையிலும் தாங்கள் பலப்பல வியாதிகளைக் குணப்படுத்தியிருக்கிறீர்கள். எனக்கு ஒன்றும் சொல்லமாட்டீர்களா?’

மகாதேவதேசாய் ‘இம்மாதிரி எத்தனைக் கடிதங்களுக்குத் தான் பதில் எழுதுவீர்கள் என்று கேட்டார்.

‘சரி, நிறுத்திக்கொள்கிறேன்’ என்றார் காந்திஜி.

இதைச்சொல்லிவிட்டு காந்திஜி கடித்த்தைக் கிழித்துவிட்டார். ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வல்லபாய் படேல், தேசாயைப் பார்த்துச் சொன்னார், ‘அடே! இப்படி எழுதுவது தானே -உபவாசம் இரு, கீரைகளைச் சாப்பிடு, பூசணிக்காய் சாப்பிடு; சோடா சாப்பிடு.’ காந்திஜி கலகலவென்று சிரித்து, ‘மகாதேவ்! இந்தக் காகிதத்தை எடு, அதற்குப் பதில் எழுத வேண்டும்’ என்று கூறினார்.

உண்மையாகவே அக்கடித்த்திற்கு பதில் எழுதச் செய்தார் அடிகள். அதன் சுருக்கம் இது தான்- ‘தாங்கள் டாக்டர் முத்துவுக்கு எழுத வேண்டும். நம்முடைய அனுபவ யோசனை என்னவென்றால் தாங்கள் மும்முறை உபவாணம் இருக்க வேண்டும். பால், ஆரஞ்சுச்சாறு இவைகளுடம் தான் உண்ணாவிரத்த்தை ஒவ்வொரு முறையும் முடித்தல் வேண்டும். இவ்வளவு செய்து பாருங்கள், வித்தியாசம் தெரியத்தான் செய்யும்.

அதன்பின், தாம் தென்னாப்பிரிக்காவிலிருந்த போது பெற்ற அனுபவங்களைப்பற்றியும், அப்போதுதாம் எவ்வாறு பலருடைய நோய்களை இயற்கை முறையில் குணப்படுத்தினார் என்பதைப்பற்றியும் கூறலானார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:08 am

18. பீடி குடிக்காலிருப்பதில்தான் உனக்கு நன்மை இருக்கிறது


சமய, பொருளாதார, உடல்நலக் கண்ணோட்டத்துடன் உணவுவகையில் பல சீர்த்திருத்தங்கள்மு, ஆராய்ச்சிகளும் செய்வதில் காந்திஜீக்கு அலாதப்பிரியம். இந்த ஆராய்ச்சிகளோடு கூட, மருந்துகளின் உதவியில்லாமல் இயற்கை வைத்திய முறையில் வியாதிகளைக் குணமாக்கும் ஆராய்ச்சிகளையும் காந்திஜி நடத்திவந்தார்.. தென் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் நடத்தும் போத்துதம் கட்சிக்காரம் அனைவருடனும் குடும்ப உறுப்பினர் போன்றே பழகி வந்தார். எல்லா சுகதுக்கங்களிலும் அவர்கள் காந்திஜியை ஒரு தலைவராக மதித்தனர். அடிகள் மேற்கொண்டுவரும் மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றியறிந்தவர்கள் இவரிடம் மருத்துவ ஆலோசனை கேட்டனர். அவ்வப்போது சிலர் டால்ஸ்தாய் பண்ணையிலும் அவரைப் பார்த்து யோசனைக் கேட்க வருவர். வட இந்தியாவிலிருந்து தடாவன் என்ற பெயருள்ள ஓர் கிழவர் ஒப்பந்தக் கூலியாகத் தென்னாப்பிரிக்கா வந்திருந்தார். 70க்கு மேல் வயதிருக்கும். வருடக்கணக்காக அவருக்கு இளைப்பும் இருமலும் இருந்தன. பல மருத்துவர்களைப் பார்த்திருப்பார். ஆனாலும் வியாதி குறையவில்லை. காந்திஜி அவரிடம் தாங்கள் என்னுடைய எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நடப்பதாயருந்தால் நான் என்னுடைய வைத்தியத்தை சொல்லுகிறேன்’ எனக்கூறினார்.

அந்தக் கிழவர் காந்திஜியின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றார். அவருக்கு புகையிலை போட்டு நன்றாகப் பழக்கமாயிருந்தது. அதையும் அவர் விட்டுவிட ஒத்துகொண்டார்.

இப்பொழுது காந்திஜி சிகிச்சைசெய்ய முற்பட்டார். உபவாசம், இடுப்பு ஸ்நானம், வெயிலில் உட்காருதல் முதலியவை நடைப்பெற்றன். அவருக்குத் தட்டில் சிறிது சாதம், கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், தேன், சிற்சில சமயங்களில் கஞ்சி, ருசியான
ஆரஞ்சுப் பழமோ அல்லது திராஷையோ, கோதுமைக் காப்பி இவை கொடுக்கப்பட்டது. உப்பும் மசாலாவும் அறவே ஒதுக்கப்பட்டன.

காந்திஜி தூங்கும் அறையில் ஒருபுறத்தில் லூடாவனுக்கும்படுக்கை விரிக்கப்பட்டது. மருத்தவம் ஒருவாரம் நடைபெற்றது. அவருடைய உடம்பு சிறிது தேறியது. இளைப்பு சிறிது குறைந்தது; இருமலும் சிறிது கட்டுப்பட்டது. ஆனால் இரவில் மட்டும் இவ்விரு நோய்கள் அவரை மிகவும் பாதித்தன. ஒருவேளை தனக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டு அவர் சுருட்டு குடிக்கிறாரோ என்ற சந்தேகம் காந்திஜிக்கு எழுந்தது. இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது ‘இல்லை’ எனக்கூறிவிட்டார்.

ஓரிரு நாட்கள் கழிந்தன. ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இரகசியமாகவே இவருடைய நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டுமென காந்திஜி திட்டமிட்டார். அவரிடம் டார்ச்லைட் இருந்தது. ஓரிரவு பூறாவும் அயராது விழித்துக்கொண்டிருந்தார். திண்ணையில் படுக்கையை விரித்துக் கொண்டார் காந்திஜி. உள்ளே தான் லுடாவனுடைய படுக்கை.

நள்ளிரவில் லூடாவனுக்கு இருமல் வந்தது. தீக்குச்சியால் பற்றவைத்து பீடி குடிக்க ஆரம்பித்தார. காந்திஜிதான் இதையெல்லாம் கவனித்து கொண்டிருக்கிறாரே.மெதுவாக உள்ளே சென்று டார்ச் லைட்டின் பொத்தானை அழுத்தினார். லுடாவன் திடீரென பயந்துவிட்டார். பீடியை அமர்த்தி விட்டு காந்திஜியின் காலை பிடித்துக்கொண்டு ‘நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்’ என்றார். ‘நான் இனி எப்போதும் பீடி குடிக்க மாட்டேன்; தாங்களை நான் ஏமாற்றிவிட்டேன். என்னை மன்னியுங்கள்’ எனவும் கூறினார்.

இப்படி சொல்லும்போதே அவருக்கு அழுகையும் வந்துவிட்டது. காந்திஜி அவருக்கு ஆறுதல் அளித்தார், பீடி குடிக்காமலிருந்தால் தான் தாங்கள் உடம்பு தேறும். என்னுடைய கணக்குப்பிரகாரம் தங்களுக்கு எப்போதோ இந்த நோய் குணமாயிருக்க வேண்டும். எப்பொழுது குணமாகவில்லையோ அப்போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.” என்றார்.

அதன்பிறகு பீடி குடிப்பதையும் லுடாவன் நிறுத்தினார். அத்துடன் அவருடைய நோயும் குணமாகத்தொடங்கியது. ஒரு மாத்திற்குள்ளாகவே அவருடைய இரு வியாதிகளும் குணமாயின. ஆரோக்கியமானவுடன் அவர் காந்திஜியிடமிருந்து விடை பெற்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:08 am

19. நான் பூமாதேவியின் புதல்வன்.


1927ம் வருடம் சேட் ஜம்னாலால் பஜாஜ் சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தார். காந்திஜிக்குத் தேவையான அமைதியும் ஓய்வும் கிடைக்கவில்லை என்பதை அறிந்தார். எனவே அடிகள் அலுவல்களை அமைதியுடன் கவனிக்கவும், நேரந்தவறி வரும் பார்வையாளர்களுடைய தொல்லையிலிருந்து தப்பியிருக்கவும் வேண்டி, ஆசிரமத் திறந்தவெளியில் சிறிய ஒற்றைமாடி வீடொன்றைக்கட்டும் தனது விருப்பத்தை காந்திஜியிடம் தெரிவித்தார் ஜம்னாலால் அவர்கள். காந்திஜியும் இதற்கு தன் சம்மதத்தை அளித்தார். மக்களும் இந்த யோசனையை மிகவும் வரவேற்றனர். ஆனால் மறுநாளே மாலை பிரார்த்தனைக்குப்பின் காந்திஜி, ‘நான் இதைப்பற்றி எண்ணிபாராது என்னுடைய சம்மத்த்தைக்கொடுத்து விட்டேன். அப்போதிருந்து மன அமைதி இழந்திருக்கிறேன்’ என்று சொன்னார். ‘இந்தப் பூமியிலே நானும் ஒரு ஜீவன் தானே பூமாதேவியின் புதல்வன் நான். அது மட்டுமலாமல் ஒரு குடியானவனோ நெசவாளியோ அல்லது மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டனோ மாடி வீட்டில் போய் வசிப்பதும் இவ்வாறு பூமாதேவியிடம் தனக்குள்ள உறவை முறித்துக் கொள்வதும் அழகல்ல. ஆகவே என்னுடைய முந்திய எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன். ஆசிரமத்தில் நான் இதுவரை வசித்து வரும் சிறு அறையிலேயே தங்கி சந்தோஷமாக இருந்து வருவேன் என்றார் காந்திஜி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:08 am

20. யாரிடம் நான் கலந்தாலோசிப்பேன்?


1920 ஆம் வருடம் ஜூலை 31ந்தேதி, அந்த பயங்கர இரவு இன்னும் கழியவில்லை, அதற்குள் சுயராஜ்ய மந்திரத்தைக் கண்டுபிடித்தவரான லோகமான்ய பால கங்காதர திலகர் இறையடி சேர்ந்தார். டெலிபோனில் இந்தச் சோகச் செய்தியைக் கேட்டதும் மிக்க வருத்தமடைந்தார் இரவு முழுவதும் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். விளக்கும் அப்படியே எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கைப் பார்த்தப்படியே யோசனையில் மூழ்கியிருந்தார் காந்தியடிகள். இரவு வெகு நேரம் கழித்து மகாதேவ தேசாய் கண் திறந்து பார்த்த பொழுது காந்திஜி படுக்கையில் வழித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். மகாதேவதேசாய் மெதுவாக காந்திஜியிடம் சென்றார். அவரைப்பார்த்ததும், ‘இனி நான் சிக்கலில் மாட்டிக்கொண்டால் யாரிடம் கலந்தாலோசிப்பேன்? மஹாராஷ்ட்ரம் முழுவதின் உதவி தேவைப்பட்டால் யாரை நாடுவேன்? என்று காந்திஜி நாத்தழுதழுக்கக் கூறினார்.

ஒரு வினாடி கழித்து மறுபடியும் காந்திஜி, ”இன்றைவரை சுயராஜ்யம் என்ற பெயரை முடிந்தவரை மறுத்துவந்தேன். இன்றுமுதல் லோகமான்யருடைய சுயராஜ்ய மந்திரத்தைத் தொடர்ந்து ஓத வேண்டும். இம்மாவீரரின் கரங்களிளலிருந்த சுதந்திரக்கொடி ஒருகண நேரமும் கீழே சாயக்கூடாது” என்று முழங்கினார்.

மறுநாள் அவர் லோகமான்ய திலகரின் இறுதி யாத்திரையில் கலந்துகொண்டார். தம் தோள்களில் சுமந்தார். இப்பேர்பட்ட சந்தர்ப்பங்களில் எவ்வளவு அமைதியும் கம்பீரமும் உள்ள சூழல் உருவாகவேண்டுமோ, அது உருவாகாததைக் கண்டு அடிகளுடைய மனம் புண்பட்டது; அவர் மிகவும் வருத்தமடைந்தார்.

பின்னால் இதே விஷயத்தை அவர் ஓர் புதிய கோணத்தில் எண்ணிப்பார்த்தார். ஆமதாபாத் திரும்பியபின் பிரார்த்தனைக் கூட்டத்தில் இதைப்பற்றி குறிப்பிடுகையில், ”அன்று இரங்கற் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் துக்கம் கொண்டாட வரவில்லை. தம் தேசத்தலைவருக்கு மரியாதை செலுத்தத்தானே அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து நாம் ஏன் துக்கத்தை எதிர்பார்க்கவேண்டும்?” என்று அவரே விளக்கினார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக