புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை உத்திகள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
சிறுகதை உத்திகள்
இந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.
சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.
குழந்தைக்கு ஜுரம்
தி.ஜானகிராமன்
*****

தி.ஜா.வின் இந்த இரண்டு கதைகளிலும் சிறுகதையின் மூலக்கூறுகளை இப்படி அடியாளம் கண்டுகொள்ளலாம்:
’குழந்தைக்கு ஜுரம்’
முரண்பாடு கதைத் தலைப்பிலேயே சுட்டப்பட்டு முதல் பத்தியில் சின்ன வாக்கியங்களில் வினைச்சொற்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது:
"மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது."
"இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!" என்று சூளுரைத்துவிட்டு வந்த புத்தகம் பிரசுரிக்கும் பஞ்சாபகேசனை குழந்தையின் வைத்தியச் செலவுக்குப் பணம்தேடி நாட வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, அப்படிச் சூளுரைத்த நிகழ்ச்சியில் பஞ்சுவின் பித்தலாட்டம் ஞாபகம் வர வாத்தியார் தயங்குவதில் உச்ச நெருக்கடி அறிமுகப்படுத்தப் பட்டு, மனைவியின் பரிந்துரையில் பஞ்சு இன்னும் பிரசுரிக்க வேண்டிய வாத்தியாரின் ஒரு புத்தகத்தைத் திருப்பி வாங்கும் சாக்கில் அவர் ஏதேனும் ’அட்வான்ஸ்’ பணம் தருவாரா என்று ’பஸ்’ பிடித்துச் செல்லும்போது நெருக்கடி விரிக்கப்பட்டு, பஞ்சுவின் வீட்டில் அவர் மனைவியே வியாதியில் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று அறியும் போது, சிறுகதையின் முக்கிய அம்சமான அந்தத் திருப்பம் நிகழ்கிறது.
தன் குழந்தையை மறந்துவிட்டு வாத்தியார் பஞ்சுவின் மனைவியை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல முனையும் நிகழ்ச்சிகளில் கதையின் இறுதித் தீர்வு அறிமுகப் படுத்தப்பட்டு அதன்பின் தனக்குத் தெரிந்த ஒரு வைத்தியரிடம் குழந்தையின் ஜுரம்போக்கும் மாத்திரைகளைக் கடனில் வாங்கிக்கொண்டு பின்னிரவில் தன் வீட்டை நோக்கி நடந்தே செல்லும்போது வாத்தியார் மனதில் எழும் உணர்வுகளில் அவருக்கு எழும் புரிதல் உணர்வு விவரிக்கப்படுகிறது.
*****
’சிலிர்ப்பு’
கதையின் முரண்பாடு மறைமுகமாக முதல் பத்தியின் கடைசி வாக்கியத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறது:
"ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது."
கதையின் கரு இது:
தாயை விடுமுறையில் பிரிந்த குழந்தையொன்று தந்தையின் அரவணைப்பில் தன் தாயிடம் மீண்டும் செல்கிறது. இன்னோரு ஏழைக் குழந்தை தன் தாயைப் பிரிந்து வேறோர் பணக்காரக் குடும்பத்தின் குழந்தைக்குத் தாய்மை சேவை செய்யச் செல்கிறது. இந்த இரண்டு குழந்தைகளுடனும் தொடர்பு கொண்ட பெரிய மனித உள்ளங்களின் கயமை, கையாலாகாத்தனம்... வறுமையின் கௌரவம், மனிதாபிமானம்...
தன் குழந்தையை வீட்டுக்கு ரயிலில் அழைத்துச் செல்லும் தந்தையின் பார்வையில், ’தன்மை இடத்தில்’ (first person) கதை நகரும் போது வறுமையில் வாடும், வயதில் இளைய, அனுபவத்தில் முதிர்ந்த அந்த இரண்டாவது குழந்தையைத் தந்தை ரயிலில் சந்திக்கும்போது கதை உச்ச நெருக்கடியை நோக்கிச் செல்கிறது.
கதையின் இறுதித் தீர்வாக ஏதும் சுட்டப் படாததே இந்தக் கதையின் சிறப்பு. வறுமையின் கௌரவமும் மனிதாபிமானமும் திறமையும் கயமை நிறைந்த பணக்காரப் பெரிய மனிதர்களைப் பிழைப்புக்கு நம்பியிருக்கும் போது வறுமைக்கு என்ன தீர்வு கிடைக்க முடியும்? தன் வாழ்வில் வறுமையை இன்னும் போதிய அளவு தாண்டாத தந்தைக்கு இந்த ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதனால் அவருக்குத் தன் குழந்தை மீது பீறிடும் பாச உணர்வில் கதையின் புரிதல் உணர்வு விவரிக்கப் படுகிறது.
தந்தையுடன் வாசகன் தன்னை முழுவதும் ஐக்கியப் படுத்திக்கொண்டு கதையைப் படிக்க வைத்ததால் தந்தைக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு வாசகனுக்கும் ஏற்படுகிறது.

சிறுகதை எழுத விரும்பும் ஆர்வலர்கள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை:
[b]சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
ஜெயமோகன்
இந்தக் கட்டுரையில் உள்ள பரிந்துரைகளைவிடச் சொல்வதற்கு அதிகம் இல்லை யென்று தோன்றுகிறது. பல கதைகளை அலசுவதன் மூலம் ஆர்வலர்கள் இந்த உத்திகளைத் திறம்படக் கையாளாலாம்.
[b]சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
ஜெயமோகன்
இந்தக் கட்டுரையில் உள்ள பரிந்துரைகளைவிடச் சொல்வதற்கு அதிகம் இல்லை யென்று தோன்றுகிறது. பல கதைகளை அலசுவதன் மூலம் ஆர்வலர்கள் இந்த உத்திகளைத் திறம்படக் கையாளாலாம்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வணக்கம்.
பல கருத்துகள் இதற்கு உதவும் என்பதால் நான் இந்தக் கட்டுரையைப் பிற மன்றங்களிலும் பதிவுசெய்து வருகிறேன். சில வினாக்களுக்கு பதிலாகச் சில உத்திகளைப் பற்றி என் கருத்தை ஆங்காங்கே சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால், இந்த மன்றத்தில் அந்தச் சுட்டியைக் கொடுப்பது பயன்தரும் என்று தோன்றுகிறது. இவ்வகையில் இதுவரை பேசப்பட்ட உரிப்பொருள்களும் சுட்டிகளும் கீழே:
01. சிறுகதையில் திருப்பம், நகைச்சுவை
02. சிறுகதையின் அளவு
03. சிறுகதையில் ஓர் செய்தியைத் தருவது பற்றி
04. பத்திரிகையில் ஒரு புதுமுக எழுத்தாளனின் கதை பிரசுரமாவது பற்றி
05. கதைக்கூற்றின் நோக்கு narrative perspective பற்றி

காக்கா-நரி சிறுகதை (அசரவைக்கும் திருப்பங்களுடன்!)
ஜெயமோகன் திரித்த காக்கா-நரிக் கதையை நாம் மேலும் திரித்து எண்ணையிட்டுச் சிறுகதை விளக்கில் ஏற்றிக் கதையைத் திருப்பங்களுடன் மூன்று வித நோக்குகளில் சொல்வோமா?
தன்மை ஒருமை (first person singular)
எனக்கு அந்தப் பாட்டி சுடும் வடைகளின் மேல் ரொம்ப நாளாக ஒரு கண். ஒரு நாள் அவள் அசந்த சமயம் பார்த்து ’டைவ்’ அடித்து ஒரு வடையைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து வசதியாக ஒரு மரக்கிளையின் மேல் அமர்ந்துகொண்டேன்.
அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு தந்திரக் குள்ளநரி வந்தது. என்னை அன்புடன் பார்த்து, "ஓ காக்கையே! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்! உன் குரல்தான் என்ன இனிமை! எனக்கு வெகுநாட்களாக உன் பாட்டைக் கேட்க ஆசை. எங்கே ஒரு பாட்டுப் பாடேன் பார்க்கலாம்."
நரியின் வார்த்தைகள் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தன. என் உருவையும் குரலையும் பாராட்டும் முதல் உயிரினம் இந்த நரிதான் என்று தோன்றியது. கூடவே நரியின் தந்திர புத்தி ஞாபகம் வர, அதன் நோக்கம் புரிந்தது. இந்த விளையாட்டை ஆடித்தான் பார்ப்போமே என்று வடையை ஒரு காலடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு என்னால் இயன்ற இன்குரலில் பாடினேன்.
நரியின் கண்கள் சிவந்து முகம் கருத்தது. சமாளித்துக்கொண்டு முகத்தை முன்போல் அன்பாக வைத்துக்கொண்டு, "உன் இனிய குரலில் நீ பாடியது கேட்டு மகிழ்ந்தேன். உனக்கு நாட்டியம் கூட நன்றாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது உன் கால்களைத் தூக்கிக் கொஞ்சம் ஆடிக் காட்டினால் அக மகிழ்வேன்", என்றது.
விளையாட்டுப் போதும் என்று தோன்றிவிட, நரியிடம் தீர்மானமாகக் கூறினேன்: "குள்ளநரியே! என்னை மடையன் என்றா நினைத்தாய்? முன்பொரு முறை எனக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு நான் சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா? நிச்சயம் உனக்கு நான் ஆடிக் காட்டுவேன். கொஞ்சம் பொறு, அதற்குமுன் சுவையான இந்த வடையை இளஞ்சூடாக உள்ளபோதே தின்றுவிடுகிறேன்."
என் அலகினால் அந்த மொறுமொறு வடையைக் கரகரவென்று கொத்தித் தலையை உயர்த்தி விழுங்கினேன். இரண்டொரு துண்டுகளாவது கீழே விழும் என்று காத்திருந்து பார்த்துவிட்டு, "சீசீ! இந்த வடை கசக்கும்" என்று சொல்லியபடியே குள்ளநரி ஓடிப்போனது.
*****
முன்னிலை ஒருமை (second person singular)
போன ஜன்மத்தில் நீ ஒரு காக்கையாகப் பிறந்தது உனக்கு ஞாபகம் இருக்காது. நீ என்ன செய்தாய் தெரியுமா? ஒரு ஏழைப் பாட்டி தன் பிழைப்புக்காகச் சுட்டு விற்ற வடைகளில் ஒன்றைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து, இதோ, இந்த மரத்தின் முதல் கிளையில்தான் உட்கார்ந்தாய்.
அப்போது நான் உன்னைச் சோதிப்பதற்காக ஒரு குள்ளநரி வடிவில் உன்முன் தோன்றினேன். ஏன் உன்னைச் சோதிக்க நினைத்தேன் தெரியுமா? எனக்கும் என் நண்பனாகிய இன்னொரு தேவனுக்கும் போட்டி. காக்கைக்கு மூளையே கிடையாது என்பது என் கட்சி. "தவறு, ஒரு காக்கை குள்ளநரியைக் கூட ஏமாற்றும் அளவுக்கு புத்திசாலி. முன்பொரு முறை காக்கைக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு அது சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா?" என்றான் அவன். எங்களுக்குள் பந்தயம். ஜெயிப்பவர் இந்திரன் அரண்மனையில் சேவகம் செய்யலாம்.
நீ மரக்கிளையில் அமர்ந்ததும் உன்னிடமிருந்து வடையைப் பறிப்பதற்காக உன்னை ஒரு பாட்டுப் பாடுமாறு நரி கேட்டதை இப்போது நீ ஒரு நீதிக் கதையில் படிக்கிறாய். ஆனால் கதையில் வருவது போல் அல்லாமல் உன் இனத்தில் இல்லாத அதிசயமாக அன்று நீ என்ன செய்தாய் தெரியுமா? பாவி, வடையைக் காலடியில் வைத்துக்கொண்டு உன் கரகர குரலில் என் இனத்தைச் சேர்ந்த நரியொன்று நீலச் சாயத் தொட்டியில் விழுந்த கதையைப் பாடி என்னைக் கேலி செய்தாய்.
நான் பந்தயத்தில் தோற்று இந்திர சேவக பதவியை இழந்ததாலும், நான் உருவெடுத்த நரியினத்தை நீ கேலி செய்ததாலும் நான் உன்னைச் சபித்தேன். என்ன சாபம் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய்: "நீ மனிதனாகப் பிறந்தாலும் காக்கா பிடிக்காமல் எந்தக் காரியமும் நடக்காதிருக்கக் கடவாய்" என்ற சாபம் உன் இந்த ஜன்ம மனித வாழ்வில் எவ்வளவு உண்மையாகி விட்டது பார்த்தாயா? அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் நீ காக்கா பிடித்தாலும் மனிதரிடையே உள்ள குள்ளநரிகள் உன்னைத் தொடர்ந்து ஏமாற்றுவது உனக்கு இந்த ஜன்மத்தில் எங்கே புரியப்போகிறது?
உன் கதையைப் பொறுமையாகக் கேட்டு உண்மை அறிந்ததற்கு நன்றி. போய்வருகிறேன், நீ உடல்நீத்து உயிராகும் போது மீண்டும் சந்திப்போம்.
*****
படர்க்கை தற்சாரா ஒருமை (third person singular objective)
தன் தாத்தா-பாட்டி சொல்லி அப்பா-அம்மா கேட்ட காக்கை-நரிக் கதையைத் தந்தை தன் ஆறு வயது செல்ல மகனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவும் எப்படி?
தந்தையின் தாத்தா-பாட்டி கதையைக் காதால் மட்டுமே கேட்டனர். தந்தையின் அப்பா-அம்மாவோ புத்தகத்தில் படித்தனர். தந்தை கேட்டும் படித்தும் அறிந்ததுடன் தன் கல்லூரி நாட்களில் ’எங்க பாப்பா’ திரைப்படத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்பாடலாகவும் அதைப் பார்த்தார்.
கணிணி மென்பொருள் விறப்பன்னரான தந்தை காலத்துக் கேற்றவாறு ஒரு கணிணிப் பல்லூடக கேலிச்சித்திரத் தொடராக (computer multimedia caroon sequence) இந்தக் கதையைத் தயாரித்து மகனுக்குக் காட்டினார். அதனால் பெரிதும் கவரப் பட்ட மகன் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளி செல்லும் ஷேர்-ஆட்டோ வாசலில் கொம்பொலிக்கும் வரை கதையைக் கணினியில் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியதும் முதல் காரியமாக இந்தக் கதைதான்.
கதையில் மகன் ரசித்ததோ கேலிச் சித்திரங்களின் நகைச்சுவை பாவங்களும், படங்களின் இயற்கை வண்ணச் சூழல்களும் ஒலிகளும் அதனுடன் விரவிய அந்தத் திரைப்பாட்டும்தான். மற்றபடி கதையோ அதன் கருத்தோ அவனுக்கு இந்த வயதிலேயே அபத்தமாகப் பட்டது. தான் காக்கையாக இருந்தால் அவ்வளவு எளிதில் அந்தக் குள்ளநரியிடம் தோற்க மாட்டோம் என்று அவனுக்குத் தோன்றியது.
மகனுக்கு காக்கை செய்திருக்க வல்லதாகப் பலவிதமான சாத்தியங்கள் மனதில் தோன்றின. காலிடுக்கில் வடையை வைத்துக்கொண்டு காக்கை பாடியிருக்கலாம். அதன்பின் நரி தந்திரமாகத் தன்னைக் காலைத் தூக்கி ஆடச் சொன்னால் வடையைக் கிளையில் ஒரு குச்சியில் தொங்க வைத்துவிட்டு ஆடியிருக்கலாம். அல்லது நரியின் முதுகிலேயே உட்கார்ந்து ஆடியிருக்கலாம்! நரி நகத்தால் பிராண்டினால் தனக்குத்தான் கூர்மையான மூக்கு இருக்கிறதே? எப்படி யிருந்தாலும் இன்னொரு காக்காவிடமோ அல்லது வேறு பறவையிடமோ வடையைத் தப்பித் தவறிக்கூட வைத்துக்கொள்ளுமாறு சொல்லிவிடக் கூடாது. மறுபடியும் பாட்டியின் கடைக்குச் சென்றால் கல்லெறிதான் கிடைக்கும்.
ஒரு வார இறுதி விடுமுறை நாட்களில் மகன் ஆவலுடன் தந்தையிடம் தந்தியடித்தான்: "அப்பா, அப்பா! இந்தக் காக்கா-நரிக் கதை தினமும் அதே மாதிரி பாத்துப் பாத்து எனக்கு ரொம்ப போர் அடித்து விட்டதுப்பா. கதையை நான் காக்கா ரோல்லயோ நரி ரோல்லயோ விளையாட முடியற மாதிரி உங்க ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் கேம்-ஆக டெவலப் பண்ணிக் கொடுத்தால் நல்லா இருக்குமேப்பா! ப்ளீஸ்ப்பா, இந்தப் பத்து நாள்ல என் எக்ஸாம்லாம் முடியறதுக்குள்ள சீக்கிரம் எழுதிக்குடுப்பா! லீவுல நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நரி ரோல் குடுத்து அவங்களை நான் தண்ணி காட்டுவேன்!"
*****
சிறுகதையின் அமைப்பும் உத்திகளும் தாக்கமும் இப்போது ஓரளவுக்குப் பிடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்று குறுகதைகள் பலவகைகளில் உத்திகளில் எழுதிப் பயிற்சி செய்வது உங்கள் ஆர்வத்தைச் செயல்படுத்த ஏதுவாகும்.

- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரமணி wrote:வணக்கம் திரு.சதாசிவம்.
தி.ஜா.வின் இரு கதைகளையும் நீங்கள் அலசிய விதம் அருமை. இறுதியாக.
> ஒரு சாராரின் மொழிநடையும், பல வடமொழிச் சொற்களும் இரு கதைகளிலும் வழிந்தோடுகிறது.
என்று எழுதியிருக்கிறீர்கள். தி.ஜா. அந்த ’ஒரு சாரார்’ வகையைச் சேர்ந்தவர் என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே. கதைமாந்தர்களையும் கதையின் சூழலையும் பார்க்கும் போது இந்த நடையும் ஒரு வட்டாரத் தமிழாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து.
அன்புடன்,
ரமணி
*****
தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்..
என் ஆதங்கம் பல கருப்பு வெள்ளை காலத்து திரைப்படங்களில் வரும் வசனங்கள் அவசியமின்றியும் வடமொழிக் கலப்புடன் வெளிப்பட்டுள்ளது. அந்தக் காலத்து சிறுகதைகளிலும் இச்சொல்லாச்சி இயல்பாய் அமைக்கப்பட்டுள்ளது.. கதை மாந்தருடன் ஒத்துப்போகும் வேளையில் இது சரி.
கரிசல்காட்டு கதைகள், அவை சார்ந்த எழுத்துகள் சமீப கால இலக்கியங்களில் அதிகம் வெளிப்படுவதாக நான் கருதுகிறேன்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிறுகதை உக்திகள் பலவற்றை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி...
சிறுகதை குறித்து என் கருத்துகள்.
1. கதையில் ஒரு சில மாந்தர்களே வெளிப்படவேண்டும்,,வாய்ப்பமைந்தால் வளர்ப்பு விலங்குகள், பொருளையும் கதை மாந்தர்களுடன் சேர்க்கலாம்.
2. கருத்தை நோக்கி கதையை செலுத்துவதை நான் ஏற்கவில்லை, அப்படி கூற விழையும் பொழுது அது இயல்பாய் அமைய வேண்டும்.
3. சில கதைகள் கட்டுரைகள் போல் தொகுக்கப்படுகிறது. அதாவது தொடக்கம், அறிமுகம், திருப்பம், கருத்து என்று வரிசைப்பட இப்படி அமையாமல் நிகழ்வுகள் நேரடிக்காட்சி போல் எழுதப்பட வேண்டும்.
4. அனைவரும் ஏற்கும் கருத்தை ஆமோதித்து எழுதுவதையோ, வழக்கமான பின்புலங்களையோ வைத்தொழுதாமல் மாற்றுச் சிந்தனை கதையை மிளிரச் செய்யும்.
5. கதாசிரியர் ஒரு கதையை எழுதுகிறோம் என்று பார்க்காமல், ஒரு நிகழ்வையும், மனித உணர்வையும், சமூக கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு ஏதோ அக்கம் பக்கம் பார்த்த கேட்ட செய்தி போல் இயல்பாய் அமைப்பது சிறப்பு.
6. சிறுகதையை ரசித்து படிப்பதற்கு ஒரு கூட்டம் உண்டு, அது இலக்கியச் சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும். வெகுஜன கவர்ச்சி அவசியமில்லையெனில் தவிர்க்கலாம்.
இறுதியாக ஜெயமோகன், s.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்த 100 கதைகள் இணையத்தில் கிடைக்கிறது...இவற்றை படிப்பது வளரும் எழுதாளர்களுக்கு மிகவும் பயன் தரும்.

சிறுகதை உத்திகள்: தலைப்பு, முதல் வாக்கியம், பத்தி/பாரா
ஒரு சிறுகதை எழுதி முடித்தபின், உங்கள் கதையின் தலைப்பு, முதல் வாக்கியம், முதல் பத்தி இவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். அதேபோல் சிறுகதையையும் உடனே அனுப்பாமல்/பதிவு செய்யாமல் சில நாட்கள் இடைவெளி கொடுத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். மாறுதல்கள் ஏதும் மனதில் பட்டாமல் பழைய கதையைப் பிரதி எடுத்துக்கொண்டு தயங்காமல் செய்து பாருங்கள்.
* சிறுகதைத் தலைப்பு கதைக்குப் பொருத்தமாக, கதை விஷயத்தைச் சுட்டுவதாக, அதே சமயம் புதுமையாக, வசீகரமாக இருக்கிறதா? வாசகனுக்கு எளிதில் நினைவுக்கு வருவதாக இருக்கிறதா? அயர்ச்சி தருவதாக இல்லாமல் இருக்கிறதா? தேய்ந்த சொற்றொடராக (cliche) இல்லாமல் இருக்கிறதா?
* கதைத் தலைப்புகள் மக்களிடம் பிரபலமான ஒன்றாக இருக்கலாம். (’ஊழல் பிரதிநிதி’) வார்த்தை ஜாலத்துடன் இருக்கலாம். (’கல்வி முயலும் கேள்வி முயல்’) உள்ளுறை பொருளுடன் இருக்கலாம். (’முள்ளும் மலரும்’) மனிதர், ஊர் அல்லது இடப் பெயராக இருக்கலாம். ஒரு செயலைச் சுட்டுவதாக இருக்கலாம். (’கழுதைமேல் சவாரி’) கதையில் வரும் ஒரு சொற்றொடராக இருக்கலாம். (’இந்தக் கதை ஒரு மாயச் சுழல்’) ஓர் எளிய சொல்லாக இருக்கலாம். (’சலனம்’).
* கதையின் முதல் வாக்கியமும் பத்தியும் வாசகனைக் கவர்வதாக இருக்கவேண்டும். கதையின் மனநிலையையும் (mood, குரலையும் (tone) ஆரம்பித்து வைப்பதாக இருக்கவேண்டும். அதே சமயம் அதீத கெட்டிக்காரத் தனமாகவோ, வெளிப்படையாகவோ இல்லாமல் கதையின் மறைவிஷயத்தைக் கோடிகாட்டுவதாக இருக்கவேண்டும்.
சில சான்றுகள் (இவை எந்த வகையிலும் முழுமையான சான்றுகள் அல்ல).
சில சிறுகதைத் தொகுப்பு வலைதளங்கள்
*****
அசோகமித்திரன்
காலமும் ஐந்து குழந்தைகளும்
அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.
*****
ஆதவன்
சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்
சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.
ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்
டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.
*****
அம்பை
காட்டிலே ஒரு மான்
அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள்.
*****
கு.அழகிரிசாமி
இருவர் கண்ட ஒரே கனவு
வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான்.
*****
இந்திரா பார்த்தசாரதி
ஒரு கப் காப்பி
ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம்.
*****
ரெ.கார்த்திகேசு
பாக்கியம் பிறந்திருக்கிறாள்
பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது.
*****
சுஜாதா
நகரம்
பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ’மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ’மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ’மெதோரா’ என்று குறிக்கப்படுவதும் இத்தமிழ் மதுரையேயாம்.
-கால்டுவெல் ஒப்பிலக்கணம்
*****
சுந்தர ராமசாமி
விகாசம்
அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக்கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை.
*****
ஜெயகாந்தன்
பூ உதிரும்
பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
குரு பீடம்
அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.
*****
புதுமைப்பித்தன்
கடவுளும் கந்தசமிப் பிள்ளையும்
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ’பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ’டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ’கப்’ காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...’
இரண்டு உலகங்கள்
ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.
*****
மாலன்
கல்கி
இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.
*****
இரா.முருகன்
ஆதம்பூர்க்காரர்கள்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ‘ என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது.
*****
லா.ச.ரமாமிர்தம்
பாற்கடல்
நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும்.
*****
கி.ராஜநாராயணன்
ஒரு வாய்மொழிக் கதை
கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன்.
எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா ‘ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும்.

வணக்கம் சதாசிவம் அவர்களே.
இது உங்கள் கருத்துகளுக்கு மறுதலிப்பு அல்ல.
ஓர் இலக்கண வடிவம் என்பது எல்லா இலக்கிய வடிவத்திற்கும் உண்டு. அந்த இலக்கணம் அந்த இலக்கிய வடிவத்தை முயல்வோர்க்காக. இலக்கணத்தை மீறிய படைப்பு என்பது எழுதுவோர் தனிப்பட்ட விஷயம். படைப்பின் ஜனரஞ்சக வெற்றியும் (இலக்கிய வட்டத்தில்) அதனை ஏற்றிக்கொள்வதும் ஒரு படைப்பின் நிலைப்பை நிர்ணயிக்கும்.
’இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்’ என்பது உண்மையே. இது மேற்சொன்ன வெற்றிகரமான இலக்கியப் படைப்புகளைக் குறித்துச் சொன்னது. எழுதும் எல்லோரும் தனி இலக்கணம் உருவாக்க முடியும் என்பது கொள்கயளவில் உண்மையாயினும் அந்த இலக்கணம் நிலைப்பது படைப்பின் வெற்றியிலேயே அமையும்.
உதாரணமாக, வெண்பாவை ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீரும் ஈற்றடியில் நான்கு சீரும் வந்து மற்றபடி வெண்பாவின் பொது இலக்கணத்துக்குட்பட்டதாக நான் எழுதி அதை நெடிலடி வெண்பா எனப் பெயரிட்டால் அதை வெண்பா என்றல்லாமல் ’என்பா’ மரபுக் கவிதை உலகம் ஏற்றுக்கொள்ளலாம்.
பொதுவாக மரபுகளை மீற நினைப்பவர்கள் மரபை அறிந்தபின் அதைச் செய்வது பயன்தரும். அதுபோல் அறிந்தபின் அதை மீற முடியாமல் போனவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சதாசிவம் wrote:சிறுகதை உக்திகள் பலவற்றை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி...
சிறுகதை குறித்து என் கருத்துகள்.
1. கதையில் ஒரு சில மாந்தர்களே வெளிப்படவேண்டும்,,வாய்ப்பமைந்தால் வளர்ப்பு விலங்குகள், பொருளையும் கதை மாந்தர்களுடன் சேர்க்கலாம்.
2. கருத்தை நோக்கி கதையை செலுத்துவதை நான் ஏற்கவில்லை, அப்படி கூற விழையும் பொழுது அது இயல்பாய் அமைய வேண்டும்.
3. சில கதைகள் கட்டுரைகள் போல் தொகுக்கப்படுகிறது. அதாவது தொடக்கம், அறிமுகம், திருப்பம், கருத்து என்று வரிசைப்பட இப்படி அமையாமல் நிகழ்வுகள் நேரடிக்காட்சி போல் எழுதப்பட வேண்டும்.
4. அனைவரும் ஏற்கும் கருத்தை ஆமோதித்து எழுதுவதையோ, வழக்கமான பின்புலங்களையோ வைத்தொழுதாமல் மாற்றுச் சிந்தனை கதையை மிளிரச் செய்யும்.
5. கதாசிரியர் ஒரு கதையை எழுதுகிறோம் என்று பார்க்காமல், ஒரு நிகழ்வையும், மனித உணர்வையும், சமூக கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு ஏதோ அக்கம் பக்கம் பார்த்த கேட்ட செய்தி போல் இயல்பாய் அமைப்பது சிறப்பு.
6. சிறுகதையை ரசித்து படிப்பதற்கு ஒரு கூட்டம் உண்டு, அது இலக்கியச் சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும். வெகுஜன கவர்ச்சி அவசியமில்லையெனில் தவிர்க்கலாம்.
இறுதியாக ஜெயமோகன், s.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்த 100 கதைகள் இணையத்தில் கிடைக்கிறது...இவற்றை படிப்பது வளரும் எழுதாளர்களுக்கு மிகவும் பயன் தரும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி...
படைப்பின் வெற்றியும், இலக்கியமும் சிலநேரங்களில் கைகோர்த்து நடந்தாலும், பெரும்பாலும் இவை தனி தனியே இருப்பது போல் தான் எனக்கு தோன்றுகிறது....
சென்ற தலைமுறை திரைப்படங்களில் அவார்ட் வாங்கும் பல படங்கள் நல்ல இலக்கணங்கள் இருந்தும், வெகு ஜன கவர்ச்சி அதில் வெகு அரிதாகவே அமைந்திருந்தது. சுஜாதாவின் வெகுஜனக் கதைகள் அடைந்த வெற்றியை ஜெயகாந்தனின் கதைகள் அடைந்ததா என்பது கேள்விக்குறியே, ஆயினும் இலக்கிய வட்டத்தில் அவருக்கு இருந்த இடமும் சுஜாதாவும் இருந்த இடமும் நாம் அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து சுவை மிகுந்த எழுத்துகளை கொடுக்கும் ஒருவரே மெல்ல மெல்ல மேலே நகர்கின்றனர். ஜனரஞ்சனமாக கதைகளை எழுதுவோரின் வளர்ச்சி கேள்விக்குறியே, ஒருவர் இலக்கியத் தரம் வாய்ந்த கதைகள் எழுதி பின்பு சராசரிக் கதைகள் எழுதலாம். ஆனால் சராசரிக் கதைகளில் ஆரம்பித்தவர் இலக்கியச் சுவையை உணர்ந்து கொள்கிறாரா என்பது சந்தேகமே.
சராசரி வாசகன், தேர்ந்த வாசகன் இவர்கள் இருவருக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. இன்றைக்கு கதை எழுத முயலும் பலரும் இது போன்ற வெகு ஜன கவர்ச்சி நிறைந்த கதைகளை நோக்கி சென்று, பாதியிலே நின்று விடுகின்றனர். அல்லது இவையே கதையின் இலக்கணங்கள் என்று முடிவு செய்கின்றனர். இப்படி வெற்றியை நோக்கி ஓடும் கதைகள் பலநேரங்களில் கதவைத் தாண்டுவதில்லை. ஆனால் இலக்கியச் சுவை மிகுந்த எழுத்துகள் முதலில் சிற்றிதழ்களில் வெளிவந்து ஒரு சிலரால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. பின்னாளில் இது போன்ற எழுத்துகளே சிகரத்தில் ஏறுகிறது.
இது என் தாழ்மையான கருத்து.
படைப்பின் வெற்றியும், இலக்கியமும் சிலநேரங்களில் கைகோர்த்து நடந்தாலும், பெரும்பாலும் இவை தனி தனியே இருப்பது போல் தான் எனக்கு தோன்றுகிறது....
சென்ற தலைமுறை திரைப்படங்களில் அவார்ட் வாங்கும் பல படங்கள் நல்ல இலக்கணங்கள் இருந்தும், வெகு ஜன கவர்ச்சி அதில் வெகு அரிதாகவே அமைந்திருந்தது. சுஜாதாவின் வெகுஜனக் கதைகள் அடைந்த வெற்றியை ஜெயகாந்தனின் கதைகள் அடைந்ததா என்பது கேள்விக்குறியே, ஆயினும் இலக்கிய வட்டத்தில் அவருக்கு இருந்த இடமும் சுஜாதாவும் இருந்த இடமும் நாம் அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து சுவை மிகுந்த எழுத்துகளை கொடுக்கும் ஒருவரே மெல்ல மெல்ல மேலே நகர்கின்றனர். ஜனரஞ்சனமாக கதைகளை எழுதுவோரின் வளர்ச்சி கேள்விக்குறியே, ஒருவர் இலக்கியத் தரம் வாய்ந்த கதைகள் எழுதி பின்பு சராசரிக் கதைகள் எழுதலாம். ஆனால் சராசரிக் கதைகளில் ஆரம்பித்தவர் இலக்கியச் சுவையை உணர்ந்து கொள்கிறாரா என்பது சந்தேகமே.
சராசரி வாசகன், தேர்ந்த வாசகன் இவர்கள் இருவருக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. இன்றைக்கு கதை எழுத முயலும் பலரும் இது போன்ற வெகு ஜன கவர்ச்சி நிறைந்த கதைகளை நோக்கி சென்று, பாதியிலே நின்று விடுகின்றனர். அல்லது இவையே கதையின் இலக்கணங்கள் என்று முடிவு செய்கின்றனர். இப்படி வெற்றியை நோக்கி ஓடும் கதைகள் பலநேரங்களில் கதவைத் தாண்டுவதில்லை. ஆனால் இலக்கியச் சுவை மிகுந்த எழுத்துகள் முதலில் சிற்றிதழ்களில் வெளிவந்து ஒரு சிலரால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. பின்னாளில் இது போன்ற எழுத்துகளே சிகரத்தில் ஏறுகிறது.
இது என் தாழ்மையான கருத்து.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நன்கு ஆராய்ந்துள்ளீர்கள்... பயனுள்ள குறிப்புகள் தகவல்கள் இருவரிடம் இருந்தும்... நன்றிகள் தங்களுக்கு.. நானும் சில நாட்களாக சிறுகதைகள் எழுதும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு வருகிறேன்... அதில் ஒன்று இங்கே http://www.eegarai.net/t97717-topic#946326 .... இரண்டு பாக்காகங்களாக எழுதினேன்.. எனக்கு சிறுகதையின் இலக்கணம் தெரியாது.. அதிகம் சிறுகதைகள் படித்ததும் இல்லை.. ஆனால் எனது குறிக்கோள், சிறுகதையை வாசிப்போருக்கு அதன் கதாப்பாத்திரமும், காட்சியும் கண்முன் தெரிய வேண்டும் அதை கதையாக இல்லாமல் உண்மைச் சம்பவமாக அனுபவித்து அவர்கள் உணரவேண்டும்... கதையை வாசிக்கும்போது அதன் கருவும் மக்களை சரியான முறையில், உணர்வுகளோடு கொண்டு சேர்த்தால், அதில் சிறுகதையின் இலக்கணம்அடங்கிவிடும் என்று கருதுகிறேன்...
எனது கதையை தாங்கள் இருவரும் முடிந்தால் படித்து விட்டு கருத்துக் கூற வேண்டுகிறேன்... நிறைகள் குறைகள்(நிறைய இருக்கலாம்) கூறினால் மகிழ்வேன்....

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4