புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
73 Posts - 77%
heezulia
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
238 Posts - 76%
heezulia
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_m10திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

Page 1 of 3 1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Mar 04, 2013 9:02 am

http://www.muthukamalam.com/images/picture/marriagefunction.jpg
இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம்பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத்திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?
-
1. தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.
-
2. கணப் பொருத்தம்
தேவ கணம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
மனித கணம்
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி
ராட்சஷ கணம்
கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.
-
3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)
பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.
-
4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.
-
5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை
- இவற்றில்
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.
-
6. ராசிப் பொருத்தம்
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.
அனுகூல சஷ்டாஷ்டகம்
பெண் ராசி ---> பிள்ளை ராசி
மேஷம் ---> கன்னி
தனுசு ---> ரிஷபம்
துலாம் ---> மீனம்
கும்பம் ---> கடகம்
சிம்மம் ---> மகரம்
மிதுனம் --->விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.
-
7. ராசி அதிபதி
ஒன்பது கிரகங்களுக்கும் பிறகிரகங்களுக்கிடையிலான நட்பு, சமம், பகை போன்றவை உள்ளன.
சூரியன் - சந்திரன், செவ்வாய், குரு (நட்பு) - புதன் (சமம்) - சுக்கிரன், சனி, ராகு, கேது (பகை)
சந்திரன் - சூரியன், புதன் (நட்பு) - செவ்வாய், குரு, சுக்கிரன், சனி (சமம்) - ராகு, கேது (பகை)
செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு (நட்பு) - சுக்கிரன், சனி (சமம்) - புதன், ராகு, கேது (பகை)
புதன் - சூரியன், சுக்கிரன் (நட்பு) - செவ்வாய், குரு, சனி, ராகு, கேது (சமம்) - சந்திரன் (பகை)
குரு - சூரியன், சந்திரன், செவ்வாய் (நட்பு) - சனி, ராகு, கேது (சமம்) - புதன், சுக்கிரன் (பகை)
சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது (நட்பு) - செவ்வாய், குரு (சமம்) - சூரியன், சந்திரன் (பகை)
சனி - புதன், சுக்கிரன், ராகு, கேது (நட்பு) - குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ராகு, கேது - சனி, சுக்கிரன் (நட்பு) - புதன், குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகை, ஒருவருக்குநட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.
-
8. வசியப் பொருத்தம்
பெண் ராசி --->பையன் ராசி
மேஷம் ---> சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் ---> கடகம், துலாம்
மிதுனம் ---> கன்னி
கடகம் ---> விருச்சிகம், தனுசு
சிம்மம் ---> மகரம்
கன்னி ---> ரிஷபம், மீனம்
துலாம் ---> மகரம்
விருச்சிகம் ---> கடகம், கன்னி
தனுசு ---> மீனம்
மகரம்---> கும்பம்
கும்பம் ---> மீனம்
மீனம் ---> மகரம்
- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Mar 04, 2013 9:15 am

9. ரஜ்ஜீப் பொருத்தம் (மிக முக்கியமானது)
ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.
சிரோ ரஜ்ஜீ
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரஜ்ஜீ
ரோகிணி, அஸ்தம், திருவோணம் -ஆரோஹனம்
திருவாதிரை, சுவாதி, சதயம் -அவரோஹனம்
உதார ரஜ்ஜீ
கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்
ஊரு ரஜ்ஜீ
பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்
பாத ரஜ்ஜீ
அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்
பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.
ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண்,பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்.
-
10. வேதைப் பொருத்தம்
அசுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் - சதயம்
-
11. நாடிப் பொருத்தம்
பெண் நாடியும் ஆண் நாடியும்வெவ்வேறாக இருக்க வேண்டும்.
பார்சுவநாடி (அ) வாத நாடி
அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி
சமான நாடி (அ) சிலேத்தும நாடி
கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி
ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம்இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.
-
12. விருக்ஷம்
ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.
பால் இல்லாதது
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் உள்ளது
அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு
பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.
-
இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.
சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில் பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர்.
-
முத்துக்கமலம்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 04, 2013 5:20 pm

இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Mar 04, 2013 5:23 pm

சிவா wrote:இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!

சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Mar 04, 2013 8:33 pm

சிவா wrote:இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!

தலைவரே தங்களுக்கு பொருத்தம் பார்ப்பதில் விருப்பம் இல்லையா அல்லது ஜாதகம் பார்ப்பதே விருப்பம் இல்லையா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 04, 2013 8:45 pm

சிவா wrote:இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!

எனக்கும் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Mதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Uதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Tதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Hதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Uதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Mதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Oதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Hதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Aதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Mதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Eதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 05, 2013 3:39 am

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!

தலைவரே தங்களுக்கு பொருத்தம் பார்ப்பதில் விருப்பம் இல்லையா அல்லது ஜாதகம் பார்ப்பதே விருப்பம் இல்லையா

இரண்டிலுமே விருப்பம் இல்லை சகோ. இவைகளால் நமக்கு நன்மை ஏதும் ஏற்பட போவதில்லை.

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 05, 2013 10:47 am

சிவா wrote:இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!
சூப்பருங்க நன்றி

penamunaibharathy
penamunaibharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013

Postpenamunaibharathy Tue Mar 05, 2013 11:50 am

ராஜா wrote:
சிவா wrote:இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கும் இந்தப் பொருத்தங்கள் இல்லை என்று திருமணம் செய்யக் கூடாது எனக் கூறினார்கள், ஆனால் எங்களின் மனப்பொருத்தம் நன்றாக இருந்தது, அதனால் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்!
சூப்பருங்க நன்றி
மகிழ்ச்சி

முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Antgதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Presentation1zw
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Mar 05, 2013 12:14 pm

என்னை பொருத்தவரை ஜாதகம் பார்ப்பது என்பது ஒரு மூடநம்பிக்கையோ மந்திரமோ தந்திரமோ இல்லை. அது ஒரு வகையான கணக்கு என கூறலாம்.

உதாரணமாக. ஒருவருடைய நட்சத்திரம் ராசி வைத்து அவருடைய சராசரி குணம் , பழக்கவழக்கம்,விருப்பு,வெருப்பு ஆகியவற்றை அறிந்து கொல்லலாம். இதை தான் திருமண பொருத்தம் பார்க்கும் போது கடைபிடிக்கப்படுகிறது. மணமகணின் பழக்கவழக்கம்,குணம்,விருப்பம் போன்றவை மணமகளின் பழக்கவழக்கம்,குணம்,விருப்பத்துடன் ஒத்து போனால் அது நல்ல பொருத்தம் எனவும் ஒத்துபோகவில்லை என்றால் பொருத தம் இல்லை என அழைக்கப்படுகிறது.

குறைந்தது 6 பொது பண்புகள்(பொருத்தம்)இருந்தால் அவர்களின் திருமண வாழ்கையில் பிரச்சணைகள் பெரிதாக வர வாய்பில்லை. 6 பொருத்தங்களுக்கு குறைவாக திருமணம் செய்யும் வாழ்கையில் தான் பெரிய அளவில் பிரச்சணைகள் வருவது.

மேலும் இதை பற்றி கூற தனி பதிவு வேண்டும். இவை எல்லாம் நமது முன்னோர்கள் வாழ்கை சிறக்க வகுத்து வைத்த நெறிமுறைகள் , அவற றை பின்பற்றினால் வாழ்கை மேலும் சிறக்கும்.

ஆனால் தற்காலத்தில் மன்னிக்கவும் , பழமை என்பதை எதிர்ப்பது நம்ப மறுப்பது தான் படித்தவருக்கு அழகு என்றாகி விட்டது

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக